அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், நாம் முன் செல்ல வேண்டும். அரசு மற்றும் புலியுடன் இருக்க கூடிய அனைத்து விதமான அரசியல் உறவுகளுக்கும், அதை பிரதிநிதித்துவம் செய்யும் நபர்களுடனான அரசியல் உறவுகளுக்கும் முதலில் முடிவு கட்டவேண்டும்.
அவர்கள் மேல் விமர்சனம், அம்பலப்படுத்தல், மக்களின் எதிரிகளை அடையாளம் காட்டுதல் மூலம், எம் அரசியல் தனித்துவத்துடன் நாம் முன்செல்லவேண்டும். ஒரு சமுதாயப் புரட்சிக்காக, எதிர்ப்புரட்சி சக்திகளை தனிமைப்படுத்தி, நாம் தனித்துவமாக செயல்படவேண்டும்.
ஓடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலனையும், தமிழ்மக்களின் நலனையும், இன்று நாம் மட்டும் தான் பிரதிநிதித்துவம் செய்கின்றோம்;. இதற்கு நாம் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க, தனித்து போராட வேண்டியுள்ளது. அதாவது அரசு சார்பு 'ஜனநாயகம்" மற்றும் புலி சார்பு 'தேசியம்" பேசும் சக்திகளுக்கு வெளியில், நாம் தனித்து தனித்தன்மையுடன் போராட வேண்டும். எம்மருகில் அக்கம் பக்கமாக இயங்கும் இவ்விரண்டுமே, எதிர்ப்புரட்சிக் கூறுகளாகிவிட்டது. தேசியம், ஜனநாயகம் என்பது மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கையை தவறாக கையாண்டு, தனக்கேற்ற எதிர்ப்புரட்சி கூறாகியுள்ளது. இதி.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment