தமிழ் அரங்கம்

Wednesday, June 24, 2009

சி.பி.எம்மின் தேர்தல் தோல்வி: தேய்கிறது கழுதை !


“டெல்லியின் அதிகார மையங்களை ஆட்டிப் படைக்கும் சக்தி”, “இடதுசாரிகளின் ஆதரவில்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது”, “காங்கிரசு பா.ஜ.க. அல்லாத இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணி தேசிய அரசியலில் தீர்மானகரமான சக்தியாகத் திகழும்”, “2009இல் காங்கிரசு அல்லாத ஆட்சியே டெல்லியில் அமையும்” என்றெல்லாம் சவடால் அடித்துவந்த சி.பி.எம். கட்சியின் கனவுகளும் நப்பாசைகளும் சுயதம்பட்டங்களும் இன்று புஸ்வாணமாகி விட்டன. கடந்த நாடாளுமன்றத்தில் 3வது பெரிய ஓட்டுக் கட்சியாக இருந்த சி.பி.எம். இப்போது 8வது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, சி.பி.எம்.இன் கோட்டையாகக் கருதப்படும் மே.வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் அக்கட்சி 35 தொகுதிகளை இழந்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான படுதோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது.

No comments: