தமிழ் அரங்கம்

Wednesday, June 24, 2009

நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள் என்று குமுறிய பெண் - பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடனான சிறிய உரையாடல் மேலான தொகுப்பு

வன்னிமுகாமில் உள்ள இளம் பெண் ஒருவருடனான உரையாடலின் போது, அள்ளிக் கொட்டிய குமுறல் தான் "நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள்" என்று திட்ட வைத்தது. அடக்கி ஒடுங்கிக் கிடக்கும் கோபங்கள், போராட்டங்கள், இப்படித்தான் குமுறி வெடித்தெழுகின்றது. சமாதான காலத்தில் இதே பெண், தமிழீழம் மிக விரைவில் மலரும் என்றவர். அப்படியா என்ற போது, எம்மை எள்ளி நகையாடிக் கதைத்தவர்.

அந்தளவுக்கு நம்ப வைக்கப்பட்ட ஒரு பிரமையில் வாழ்ந்தவர்கள். புலிகளோ தங்கள் பாசிச சுய ரூபங்களை மூடிமறைத்து, தம்மைப் பற்றி ஏற்படுத்திய பிரமிப்பை யுத்தத்தின் போது தகர்த்தெறிந்தனர். எப்படிப்பட்ட பாசிட்டுக்கள் தாங்கள் என்பதை, மக்கள் முன் நிர்வாணமாகவே நிறுவினர்.

இன்று அதே பெண் இந்தக் காட்டுமிராண்டிகளின் இனவழிப்பு யுத்தத்தினால் சொந்த வடுவுடன் குமுறி எழுந்தாள். அரச நாசி முகாமில் உணவுக்காக நெரிபட்டு கீழே வீழ்ந்ததால், தனக்கு கிடைக்க இருந்த ஒரு குழந்தை வயிற்றில் வைத்தே அழிந்து போனது. அதற்கு சரியான மருத்துவமின்றி, மீண்டும் கடுமையான உடல் நிலைக்கு சென்றார். இன்று இப்படி அவரின் கதையுள்ளது. அவரின் சொந்த தமக்கை ஒரு கண் பறிபோன நிலையில், உடலில் பல காயங்கள் நோய்கள் உடன், தனது நான்கு சிறு......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: