தமிழ் அரங்கம்

Thursday, June 25, 2009

கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?


இந்த ஆலை தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையாகும். தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுள் 9 பேர் தப்பி வர வழியில்லாமல் தீக்குள்ளேயே சிக்கி எரிந்து கரிக்கட்டையாகிப் போனார்கள். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுள் 8 பேர் சிகிச்சைப் பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து இறந்து போனார்கள். அநியாயமாக இறந்து போன இத்தொழிலாளர்களுள் சண்முகம் என்பவர் மட்டும்தான் நாமக்கல்லுக்கு அருகிலுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர். மீதமுள்ள அனைவரும் பீகார் மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடித் தமிழகத்திற்கு வந்த அயல் மாநிலத் தொழிலாளர்கள்.

இவ்வாலையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்த சண்முகத்திற்கு ஒன்பது வயதில் மகள் இருப்பதோடு, அவரது மனைவி வளர்மதி தற்பொழுது கருவுற்றிருக்கிறார். இறந்து போன பீகார் தொழிலாளர்கள் அனைவரும் அவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் சுமைக்கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அத்தொழிலாளர்களுள் ஒருவரின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: