தமிழ் அரங்கம்

Sunday, June 21, 2009

"தமிழ்த் தேசியவாதத்தை அழிக்க வர்க்க கண்ணோட்டமாம்"!?

தேசியத்தில் வர்க்கமில்லை என்று, தமிழ் தேசியத்தை அழித்தவர்கள், இப்படி சன்னி கண்டு புலம்புகின்றனர். வேடிக்கையான குதர்க்கம். தமிழ்மக்களை தமிழ்தேசியத்தின் பெயரில் அழித்தவர்கள், தமது புலித் தமிழ் தேசியத்தை வர்க்கக் கண்ணோட்டம் அழிக்கப் போவதாக குமுறுகின்றனர். வேல் தர்மா என்ற இணைய பதிவாளர் "ஈழப் பிரச்சனையும் வர்க்கக் கண்ணோட்டமும்" என்ற தலைப்பில், தமிழ்மக்களை அழித்த புலித்தேசியத்தைப் பாதுகாக்க பொங்கி எழுகின்றார்.

அதை அவர் 'ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் அடிவருடிகள் தமிழ்த் தேசியவாதத்தை அழிப்பதற்கு வர்கக் கண்ணோட்டம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து வைத்திருக்கின்றனர்" என்று, எம்மைப் பார்த்து குமுறிய வண்ணம் கூச்சல் எழுப்புகின்றார். வர்க்கம் என்ற சொல்லை கண்டு, அதை ஆரியவாதம் என்று பகுதறிவற்ற அரைவேட்காட்டுடன் புலிப்பாசிசம் புலம்புகின்றது. வர்க்கம் தமிழனைப் பிளக்கின்றதாம். புலித் தமிழ்த்தேசியத்தின் பெயரில், வர்க்கமில்லை என்று கூறி, தமிழனையே பிளந்து போடாத பிளவையா வர்க்கம் பிளந்தது!?

தமிழனை நிர்வாணமாக்கி, அவர்களைக் கொத்திப் பிளந்தவர்கள் யார்? இப்படி தமிழனைப் பிளந்து, அவனையே துரோகியாக்கியவர்கள் யார்? தமிழனை நாயிலும் கீழாக ஒடுக்கியவர்கள் யார்? நீங்கள் தான். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் உரிமைகளை மறுத்தும்,.........
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: