தமிழ் அரங்கம்

Sunday, July 19, 2009

கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்

நாஜிகள் நடத்திய யூதப் படுகொலைக்கு அடுத்து மிகக்கொடிய இனப்படுகொலை 1994இல் ருவாண்டாவில் நடைபெற்ற துட்சி இனப்படுகொலை. ஹூட்டு இனவெறி அரசு மற்றும் இராணுவத்தின் துணையோடு சிறுபான்மையினரான துட்சி இன மக்கள் சுமார் 10 இலட்சம் பேர் படுகொலை செய்யப்படுவதை உலகம் அன்று கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. ஹூட்டு இனவெறி இராணுவத்துக்கு பிரான்சும், துட்சி கிளர்ச்சிப் படைக்கு அமெரிக்காவும் ஆதரவாக நின்றன.

பின்னர் துட்சி இனக் கிளர்ச்சிப் படை வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டது. இன்று பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் அருகாமை நாடான காங்கோவின் அகதி முகாம்களில் உழல்கிறார்கள். அமெரிக்காவின் ஆசி பெற்ற ருவாண்டாவின் துட்சி இன அரசு இன்று ஆப்பிரிக்காவின் இஸ்ரேலாக மாறிவருகிறது. அமெரிக்க ஆசியுடன், காங்கோ முதலான அண்டை நாடுகளை மிரட்டும் அமெரிக்க அடியாளாக வளர்ந்து வருகிறது.

ஏகாதிபத்திய எதிர்ப்பில்லாத தேசியமும், ஏகாதிபத்தியத்தால் தூண்டி வளர்க்கப்படும் இனவுணர்வும், இனப் பகைமை எனும் மீள முடியா....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: