தமிழ் அரங்கம்

Saturday, July 18, 2009

பேரினவாதத்தை எதிர்கொள்வதாக இருந்தால் தமிழ்ப் பாசிச சிந்தனை முறை தகர்க்கப்பட வேண்டும்

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் பாசிச சிந்தனை முறை தன்வழியில் பேரினவாதத்தை ஒழித்துகட்டுவதாக கூறி அந்த பேரினவாதத்துக்கே அது இரையானது. அதேநேரம் அது தமிழ் பாசிசமல்லாத அனைத்து சமூக அரசியல் அடித்தளங்களையும் அழித்தது. இதன் மூலம் இன்று பேரினவாதம் தமிழினத்தின் வாழ்வுசார் கூறுகள் அனைத்தையும் சிதைத்தும் அழித்தும் வருகின்றது.

இந்த நிலையில் இதை எதிர்கொள்வது என்பது எம்முன்னுள்ள மிகப்பெரிய இன்றைய அரசியல் சவால். இதை எப்படி எதிர்கொள்வது?

இன்றைய நிலையில் கடந்தகாலத்தில் தமிழ்மக்கள் கொண்டிருந்த தவறான தமிழ் பாசிச சிந்தனை முறையில் இருந்து வெளிவராமல் மாற்று சிந்தனை முறை ஒன்றை தமக்குள் உள்வாங்காமல் சிங்களப் பேரினவாத பாசிசத்தை இனி ஒருநாளும் எதிர்கொள்ள முடியாது.

கடந்தகால தமிழ் பாசிசம்
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: