தமிழ் அரங்கம்

Friday, August 21, 2009

அணுசக்தி (123) ஒப்பந்தம்: பெயரளவிலான சுயசார்புக்கும் குழிபறித்தது அமெரிக்கா!

இத்தாலி நாட்டில் சமீபத்தில் நடந்த பெரும் எட்டு நாடுகள் (ஜி 8) மாநாட்டில், "அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு அணுசக்தி மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் தேவைப்படும் தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் வழங்கப் போவதில்லை'' என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

ஜி 8 மாநாடு இந்த முடிவை எடுப்பதற்கு அமெரிக்காதான் காரணம் என்பதோடு, இம்முடிவு இந்தியாவைக் குறிவைத்துத்தான் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் இப்பொழுது அம்பலமாகிவிட்டது.

இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் (123 ஒப்பந்தம்) தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியபொழுது, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தைச் செறிவூட்டவும், மறுசுழற்சி செய்யவும் தனக்கு உரிமைகள் வழங்க வேண்டும் என்பதோடு, அதற்கான தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் வழங்க வேண்டும் என வாதாடியது. இதற்குச் சில நிபந்தனைகளோடு சம்மதித்த அமெரிக்கா, அணு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகளின் குழுமத்தோடு (என்.எஸ்.ஜி.) இந்தியா பேச்சுவார்த்தைகள் நடத்தியபொழுது, செறிவூட்டும் மறுசுழற்சி செய்யும் உரிமைகளை இந்தியாவிற்கு அக்குழுமம் வழங்கக் கூடாது என நிர்பந்தம் கொடுத்தது. எனினும், அக்குழுமத்தின் தற்போதைய விதிகளுக்கு....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: