தமிழ் அரங்கம்

Thursday, August 20, 2009

இலக்கிய வியாபாரம் செய்யும் காலச்சுவடும், விபச்சார அரசியல் செய்யும் சேரன் அன்ட் கோக்களும்

வன்னி மக்கள் பெயரில் வியாபாரமும்;, அரசியல் விபச்சாரமும், இந்தியாவின் பிழைப்புவாத இலக்கிய உலகு ஊடாகவும் கூட நுழைகின்றது. "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. சந்தர்ப்பவாத ஈழத்து புத்திஜீவிகள் சிலர் தங்கள் பிழைப்புவாத அரசியல் இருப்பு சார்ந்து புனைவு ஒன்றுடன், காலச்சுவட்டின் கைவண்ணத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதில் சேரன் அன் கோவும், சிவத்தம்பியும் புலிக்கு பின் நின்று துதிபாடி அரோகரா போட்டத்தை, இன்று மறைக்க வேண்டிய அரசியல் அவலம். காலச்சுவடு கண்ணனுக்கு கல்லாப் பெட்டியை மேலும் நிரப்பும் இலக்கிய கவலை.

ஜீனியர்விகடன் பத்திரிகை விற்பனை அதிகரிக்க பிரபாகரன் இருப்பதாக காட்ட, படத்தில் ஒரு மோசடி செய்தனர். இதுபோல் காலச்சுவடு ஈழத்து மக்களின் பெயரில் பணம் சம்பாதிக்க, அகதிகளின் பெயரில் தாமே ஒரு புனைவை எழுதி வெளியிட்டுள்ளனர். இது இலங்கையரால் எழுதப்படவில்லை. அதற்கு சில எடுத்துக்காட்டை நாம் எடுத்துக் காட்டிவிட்டு மற்றைய பிழைப்புவாத மோசடிக்குள் செல்வோம்.

இந்தப் புனைவு வன்னியில் இல்லாத ஒன்றையும், வழக்கில் இல்லாத சொற்களும் கொண்டது. இந்தியாவில் உள்ளதை, வன்னியில் இருப்பதாக எமக்கு காட்ட முனைகின்றனர். வன்னியில் ஆறில்லை. காலனியில்லை. பட்டினங்கள் இல்........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: