புலிகள் தமக்குள் சாதி பார்க்கவில்லை, ஆணாதிக்கத்தை கையாள்வதில்லை, முதலாளித்துவ உறவைப் பேணுவதில்லை, பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிப்பதில்லை, எனவே அதை அவர்கள் மேல் குற்றம்சாட்ட முடியாது. "யாழ் மேட்டுக்குடி வெள்ளாளரின் செயல்களுக்கு விடுதலைப் புலிகளைக் குற்றம் சுமத்த முடியாது." இதுதான் யமுனாவின் "மார்க்சிய" ஆய்வு.
இதை நியாயப்படுத்த, இவரைப்போல் அரசியல் ஒழுக்கக்கேட்டையே அரசியலாகக் கொண்ட பச்சோந்தியான "ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி' யை துணைக்கு அழைக்கின்றார். சமூக எதார்த்தம் மீதான விமர்சன நடைமுறையில், மார்க்சியமல்லாத புலிப் பாசிச தேசியத்தை தொழுத ஒரு மார்க்சிய விரோதியான சிவத்தம்பியின் துணையுடன், தன் முற்போக்கு கட்டுரையைத் தொடங்குகின்றார். இப்படி அண்ணன் தம்பியாக சேர்ந்து புலியை முற்போக்காகக் காட்டி பாதுகாக்க, கா.சிவத்தம்பியை கூட்டுக்கு அழைக்கின்றார். பாவம் கா.சிவத்தம்பி, "மாமனிதன்" பட்டத்தை எதிர்பார்த்து, கடைசிகாலத்தை புலி உச்சாடணம் செய்துகொண்டு கிடந்தவர். இதற்கு மேல் அவரின் "மார்க்சிய", எதார்த்தம், இயங்கிய சமூகம் மீது எந்த சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியது கிடையாது. இவர்களுடன் காலச்சுவடும், சேரனும் கூட்டுச் சேர்ந்தால், புலியின் மனிதவிரோத வரலாற்றை முற்போக்காக காட்டிவிடலாம். இந்தியாவின் முதுகு சொறிந்து கிடக்கும் இலக்கிய பிழைப்புவாதிகள் மூலம்,.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment