தமிழ் அரங்கம்

Wednesday, August 12, 2009

அமெரிக்கா: மாயை கலைந்தது உண்மை சுடுகிறது

பசி, பட்டினி ஏதுமில்லாத செல்வச் செழிப்பு மிக்க நாடு என்றும், குடிசைகளே இல்லாத நாடு என்றும் அமெரிக்காவைச் சொல்வார்கள். இங்கிருக்கும் படித்த நடுத்தரவர்க்க இளைஞர் களைக் கேளுங்கள்; ""அந்த சொர்க்க பூமிக்கு வேலைக்குச் செல்வதுதான் தங்கள் வாழ்வின் லட்சியம்'' என்பார்கள்.

இந்தக் கனவு தேசத்தின் மாகாணங்களில் ஒன்று கலிபோர்னியா. எண்ணிலடங்காத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து கிடக்கும் இம்மாகாணந்தான் தமிழ்நாட்டுக் கணிப்பொறியாளர்கள் பலருக்கும் புனிதத்தலம். அமெரிக்காவின் செல்வச் செழிப்புக்கு இம்மாகாணத்தையே சான்றாகக் கூறுவர். ஆனால் இன்று அமெரிக்காவை மட்டுமல்ல; உலக முதலாளித்துவத்தையே பிடித்தாட்டும் பொருளாதார நெருக்கடி, சொகுசான அமெரிக்கக் கனவைக் கலைத்துப் போட்ட பிறகு; அமெரிக்க மக்களின் அவல நிலைக்குச் சாட்சியமாக இருப்பதும் இதே கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரான சாக்ரமண்டோதான்.

சென்ற ஆண்டு செப்டம்பரில் ஆரம்பித்த, பொருளாதார வீழ்ச்சியால் வேலை இழந்த அமெரிக்கர்கள் பலரால் வீட்டுக் கடன்களைக் கட்ட முடியவில்லை. வாங்கிய கடனுக்கு, வங்கியிடம் வீட்டைப் பறிகொடுத்த இவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர்......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: