கடந்தகாலத்தில் எம்மக்களுக்கு எதிரான வரலாற்றை இருட்டில் வைத்திருப்பதே, இன்று பலரின் "இடதுசாரிய" பம்மாத்து அரசியலாக உள்ளது. மக்களை அவர்களின் சொந்த விடுதலைக்கு முன்னின்று வழி நடத்த முனையாது செயல்பட்டவர்கள், அதை மூடிமறைப்பதே இன்றைய புரட்சிகர அரசியல் என்கின்றனர். இதை நாகரிகமான பண்பான அரசியல் நடைமுறையுடன் கூடிய தோழமை என்கின்றனர்.
மக்களுக்கு எதிரான கடந்த வரலாற்றைப் பற்றியும், அதற்கு எதிரான போராட்டம் பற்றியும், எந்த அபிப்பிராயமுமற்ற சிலர் "மார்க்சிய" ஆய்வாளர்களாக நீடிக்கின்றனர். பொதுவில் இறுகக் கண்ணை மூடிக்கொண்டு இருக்க பலர் முனைகின்றனர். மறுபக்கத்தில் "இடதுசாரியம";, "மார்க்சியம்" என்று, அரசியல் வித்தை காட்ட முனைகின்றனர்.
சமூகத்தை இருட்டில் நிறுத்தி வைத்து, மார்க்சிய போதனை பற்றி ஆருடம் கூறுகின்றனர். இதற்கமைய மார்க்சிய வித்தை காட்ட கோஸ்;டி சேருகின்றனர். கடந்தகாலத்தில் நாம் எதை செய்தோம், அதை எப்படிச் செய்தோம் என்பதை கேள்விக்குள்ளாக்காத "மார்க்சியம்" பற்றி மட்டும், எம்மையும் பேசக் கோருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில், இதை அம்பலப்படுத்துவது அவசியமானது. மக்களை வரலாற்று அறிவற்றவராக வைத்திருக்கவே திடீர் மார்க்சிய.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment