தமிழ் அரங்கம்

Saturday, June 21, 2008

தமிழ்நாடு சி.பி.எம் பாசிசக் குண்டர்கள் (ம.க.இ.க ஆதரவு அமைப்பு தோழரைக் கொன்றதுடன், வேறு சில தோழர்கள் உயிர் ஆபத்தான் நிலையில்) நடத்திய படுகொலை

"இந்தியாவுக்கான புரட்சிப் பாதை ஆயுதம் தாங்கியதாக ஒருபோதும் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவில், மக்களுக்கான ஜனநாயகம் தழைத்தோங்குகின்ற நமது தேசத்தில் சமாதான முறையிலேயே அரசியலை வழிநடத்தி புரட்சியை வென்றெடுக்க முடியும்" என்று அடிப்படையான மார்க்சிய லெனினியத்துக்கே கொள்ளிவைத்தனர் சிபிஐ/சிபிஎம் போலி கம்யூனிஸ்டுகள்.

ஆயுதமேந்திய புரட்சியை வலியுறுத்துவதாலேயே நக்சல்பாரிகளை இழிவுபடுத்திப் பேசுவதோடு; அவ்வப்போது நக்சல்பாரிகளுக்கு எதிராக ஆளும்வர்க்கத்துக்கு அன்னிய/இந்திய முதலாளிகளுக்கு கைக்கூலிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். சட்டீஸ்கர் மாநில அரசால் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக திட்டமிட்டே உருவாக்கப் பட்டுள்ள 'சல்வாஜூடும்' போன்ற கூலிப்படை அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இப்போலிகள் நடந்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்டால், "ஆயுத கலாச்சாரம்" இருவருக்குமே ஆபத்தானது" என்கிற உபதேசம் வேறு. இப்படிப்பட்ட 'சைவ பூணைகள்' இப்போது ஆயுதமில்லாமல் அரசியலே நடத்துவது கிடையாது. இதுபற்றிகூட நாம் விரிவாக எதையும் எழுதவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. .. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

3 comments:

சுகுணாதிவாகர் said...

சி.பி.எம்மின் பாசிச வன்முறையைக் கண்டிக்கிறேன்.

PROLETARIAN said...

CPM இன் இந்த பாசிச அடக்கு முறையை கண்டிப்பதுடன் , அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதலை நடத்த வேன்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதன் போலி முகத்திரையை மக்கள் மத்தியில் கிழித்தெறிய வேன்டும்.


Pasi

அசுரன் said...

//அதில் தோழர் இராசேந்திரன் என்ற எமது அமைப்பின் ஆதரவாளர் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று தோழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.



பாஜக பயங்கரவாதிகள் தமது தில்லி தலைமை அலுவலகத்தைத் தாக்கியதை எதிர்த்து அதற்கு பதிலாக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநில அலுவலகங்கலால் சூழப்பட்டிருக்கின்���, பாஜக வின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு அடையாள ஆர்ப்பாட்டம் கூட நடத்த முடியாத அந்த சொரனையற்ற சிபிஎம் தொடைநடுங்கிக் கும்பல், நிராயுதபானிகளாகக் களத்தில் பணியாற்றும் எமது பாட்டாளி வர்க்கத் தோழர்களை தனது வர்க்க எதிரியாகக் கொண்டு இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்துகிறார்கள்.



இத்தாக்குதலுக்கு தக்க எதிர்விணையாற்றுவதோ பதிலடி கொடுப்பதோ நமக்கொன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால், இந்த நிமிடம் வரை சிபிஎம் என்ற கடைந்தெடுத்த போலிக்கும்பலை கம்யூனிஸ்டுகளாகப் பார்க்கிற அக்கட்சியின் உண்மையான தோழர்கள், இப்படிப்பட்ட ஒரு இழிவான செயல் அம்பலமான பிறகும் அக்கட்சியை ஒரு கம்யூனிஸ்டு கட்சி என்று நம்புவார்களா? ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளாக எம்மைத் தொடர்ந்து சித்தரித்துவரும் சிபிஎம் தலைமையின் கோரமான கொலைமுகத்தை இனியேனும் அறிவார்களா??
//


அசுரன்