தமிழ் அரங்கம்

Thursday, March 22, 2007

உலகமயத்தின் கீழ் தரகு முதலாளிகளின் புதிய பரிமாணம்

டாடா-கோரஸ் இணைவு:
உலகமயத்தின் கீழ் தரகு முதலாளிகளின் புதிய பரிமாணம்



""இந்தியா உண்மையில் ஒளிர்கிறது; உறங்கிக் கிடந்த இந்தியா என்ற புலி கம்பீரமாக எழுந்து நின்று பீடுநடை போடத் தொடங்கி விட்டது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும் கௌரவமும் மேலும் ஒருபடி முன்னேறியுள்ளது. வெள்ளைக்கார காலனியாதிக்கக் கம்பெனிகளிடம் அடிமைப்பட்டிருந்த இந்திய நாடு, அந்த அடிமைத்தளைகளை விலக்கி, வெள்ளைக்கார நிறுவனத்தையே விலைக்கு வாங்கி பதிலடி கொடுத்துள்ளது!''


கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்தியத் தரகு பெருமுதலாளித்துவ நிறுவனமான டாடா நிறுவனம், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ""கோரஸ்'' என்ற எஃகு உற்பத்தி நிறுவனத்தை 54,000 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, இந்திய ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் இப்படி ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.


""இது மகத்தான சாதனை; நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இந்தியத் தொழிலதிபர்களின் தன்னம்பிக்கை தைரியத்தையும் இந்த நிகழ்ச்சி உலக அரங்கில் நிரூபித்துக் காட்டியுள்ளது. இது தொடக்கம்; இது தொடரும்'' என்று முதலாளித்துவப் பத்திரிகைகள் அட்டைப்படக் கட்டுரைகளை வெளியிட்டு ஆரவாரத்துடன் குதூகலிக்கின்றன.

கோரஸ் நிறுவனம், ஆண்டொன்றுக்கு 180 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஐரோப்பா கண்டத்தின் மிகப் பெரும் ஏகபோக நிறுவனம். இந்நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் டாடா எஃகு நிறுவனமானது, உலகில் அதிகமாக எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம், ஏறத்தாழ 40,000 தொழிலாளர்கள் என பிரம்மாண்டம்; அதைவிட ஏழைநாட்டின் எஃகு நிறுவனம் ஏகாதிபத்திய நிறுவனத்தைக் கைப்பற்றிய அதிசயம் என பூரித்துப் புளகாங்கிதமடைகின்றன, முதலாளித்துவப் பத்திரிகைகள்.


இங்கிலாந்து நாட்டின் அரசுத்துறை நிறுவனமான ""பிரிட்டிஷ் ஸ்டீல்'' நிறுவனமும் டச்சு நாட்டு எஃகு நிறுவனமும் இணைந்து 1991ஆம் ஆண்டில் கோரஸ் எஃகு நிறுவனம் உருவாகியது. இது ஏகாதிபத்திய உலகிற்கே உரித்தான சர்வதேச தொழில் கூட்டின் ஓர் அங்கமாகும். கடந்த 15 ஆண்டுகளில் இதுபோல பல ஏகபோக நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து மூலதனத்தையும் உற்பத்தியையும் ஒன்று குவித்துப் பன்னாட்டு ஏகபோக தொழிற்கழகங்களாக வளர்ந்து உலகச் சந்தையைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.


மிகப் பிரம்மாண்டமான அளவில் மூலதனத்தை ஒன்று குவித்து உலகச் சந்தையில் போட்டியிடும் இத்தகைய ஏகபோக நிறுவனங்கள், பொதுமக்களிடம் பங்குகளை விற்று மூலதனத்தைத் திரட்டுகின்றன. இதனாலேயே பல தொழில் நிறுவனங்களில் சிறு முதலீட்டாளர்களின் பங்குகள் மிக அதிகமாகவும், அந்நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் முதலாளிகளின் பங்குகள் குறைவாகவும் இருக்கின்றன. இத்தகைய நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை யார் வேண்டுமானாலும், அப்பங்குகளை வைத்துள்ளோரிடமிருந்து ஏலத்துக்கு வாங்க முடியும். ஒரு நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ஒருவர் வாங்கி, அதன்பிறகு மொத்த நிறுவனத்தையே வாங்கி விடலாம்.

இப்படித்தான் கோரஸ் நிறுவனத்தை டாடா நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. கோரஸ் நிறுவனத்தில், அதை நிர்வகிக்கும் ஏகபோக முதலாளிகளின் பங்கு 1 சதவீதத்துக்கும் கீழானதாக இருந்தது. இதனால் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவன நிர்வாகத்தின் பங்குகளையும் இதர பங்குதாரர்களின் பங்குகளையும் ஏலத்தில் வாங்க முயற்சித்தது. ஏறத்தாழ 5 மாதங்களுக்கு முன்பு, கோரஸ் நிறுவனப் பங்குதாரர்களிடமிருந்து ஏலத்தில் பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பமும் கொடுத்தது.


ஏலத்தில், டாடா அறிவித்த விலைக்கு மேலாக அதிகம் கொடுப்பதாக தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள ஏழை நாடான பிரேசிலைச் சேர்ந்த சி.எஸ்.என் என்ற எஃகு நிறுவனம், சில ஏகாதிபத்திய வங்கிகளோடு கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டது. டாடா மற்றும் சி.எஸ்.என். நிறுவனங்களின் போட்டா போட்டியில் கோரஸ் நிறுவனப் பங்குகளின் விலைகள் உயர்ந்து கொண்டே போயின. இறுதியில், இங்கிலாந்து அரசின் கம்பெனி ஏல அமைப்புச் சட்டப்படி ஒரே நாளில் 9 சுற்று ஏல முறைப்படி கடைசிச் சுற்றில் யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கே கம்பெனி உடைமையாகும் என முடிவாகியது. அதன்படி, சி.எஸ்.என் நிறுவனத்தைவிட, அதிக விலை கொடுத்து கடைசிச் சுற்றில் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்க டாடா நிறுவனத்துக்குப் போதிய நிதியில்லாத நிலையில், சர்வதேச நிதிமூலதன வங்கிகளான ஏ.பி.என். அம்ரோ வங்கி மற்றும் ஜெர்மானிய வங்கி ஆகியவற்றோடு கூட்டுச் சேர்ந்து டாடா நிறுவனம் இந்தக் கைப்பற்றுதலைச் சாதிக்க முடிந்துள்ளது. இல்லையேல் கோரஸ் நிறுவனத்தை பிரேசில் நாட்டின் சி.எஸ்.என் நிறுவனம் கைப்பற்றியிருக்கும்.


மூலதனம் உலகமயமாகியிருப்பதும், மூலதன ஒன்று குவிப்பை அடிப்படையாகக் கொண்ட தேசங் கடந்த தொழில் கழகங்களும் நிதி மூலதன வங்கிகளும் புதிய ஏகபோகங்களாக வளர்ந்திருப்பதும் ஏகாதிபத்திய சகாப்தத்தின் புதிய கட்டத்தை உணர்த்துகின்றன. இதன்படியே, பல்வேறு நாடுகளில் தொழிற்கூட்டுகளும், கைப்பற்றுதல்களும் மறுகூட்டுகளும் போட்டா போட்டிகளும் வேகமாக நடக்கின்றன. இவையெல்லாம் ஏகாதிபத்திய நாடுகளில்தான் நடக்கும்; ஏழை நாடுகளின் தரகுப் பெருமுதலாளிகள் அத்தகைய போட்டா போட்டிகளில் ஈடுபடவே மாட்டார்கள் என்பதல்ல. இந்தியாவின் டாடாவும் பிர்லாவும் ரிலையன்சும் இத்தகைய போட்டா போட்டிகளில் ஏற்கெனவே இறங்கியுள்ளதோடு, வெளிநாடுகளில் முதலீடு செய்தும் அந்நாடுகளது பெருந்தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றவும் செய்துள்ளனர். அதேபோல, ஏழை நாடான பிரேசிலின் சி.எஸ்.என்; தென்கொரியாவின் சாம்சங், ஹூண்டாய், இந்தோனேஷியாவின் சலீம் குழுமம் எனப் பல தேசங்கடந்த தொழிற்கழகங்கள் நிதி மூலதன வங்கிகளின் துணையோடு வெளிநாடுகளில் முதலீடு செய்தும் பெருந்தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றவும் செய்கின்றன.


இதற்கு முன்பு, இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் தமது மொத்த சொத்து மதிப்பில் 50% அளவுக்கு மட்டுமே வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்றும் 10 கோடி டாலருக்கு மேல் முதலீடு செய்யக்கூடாது என்றும் இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தன. கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து, இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்றும், அந்நியச் செலாவணியை ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி பிற உள்நாட்டு வெளிநாட்டு நிதி மூலதன வங்கிகளிடமிருந்து திரட்டிக் கொள்ளலாம் என்றும் எல்லா கட்டுப்பாடுகளையும் இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள ஒரு பெருந்தொழில் நிறுவனம், தாம் செய்துவரும் தொழிலுக்குத் தொடர்பேயில்லாத வேறு பிற தொழில்களில், வெளிநாட்டில் முதலீடு செய்யவும், அத்தகைய தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றிக் கொள்ளவும் இந்திய அரசு தாராள அனுமதி கொடுத்துள்ளது. இந்திய அரசே உலகமயமாக்கலுக்கு ஏற்ப தனது சட்டங்களையும் விதிகளையும் மாற்றித் தகவமைத்துக் கொண்டுள்ள நிலையில், டாடா நிறுவனம் உலகளாவிய போட்டியில் இறங்கி, கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இத்தகைய நிகழ்வினால் தரகுப் பெருமுதலாளிகளின் அடிப்படைத் தன்மையில் மாற்றங்களும் நிகழ்ந்துவிடவில்லை.


கோரஸ் நிறுவனத்தை டாடா கைப்பற்றியது மட்டுமல்ல; கடந்த ஐந்தாண்டுகளில் டாடா நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றைக் கைப்பற்றியுள்ளது. பிரிட்டனின் டெட்லி டீ நிறுவனம், அமெரிக்காவின் எனர்ஜி பிராண்ட்ஸ், சிங்கப்பூரின் நாட்ஸ்டீல், தாய்லாந்தின் மில்லினியம் ஸ்டீல், தென்கொரிய டேவூ மோட்டார் நிறுவனத்தின் கனரக வாகனப் பிரிவு என அடுத்தடுத்து பல்லாயிரம் கோடி மதிப்பில் பல கைப்பற்றுதல்களை டாடா நிறுவனம் செய்துள்ளது. அதேபோல பிர்லாவின் ஹிண்டால்கோ எனும் அலுமினிய உற்பத்தி நிறுவனம் நோவலிஸ் நிறுவனத்தையும், சுஸ்லான் நிறுவனம் ஆர்.இ.பவர்சிஸ்டத்தையும், வீடியோகான் நிறுவனம் தென்கொரியாவின் டேவூ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தையும் கைப்பற்றுவதற்கான பேரங்கள் முடிந்துள்ளன. டாடா கன்சல்டன்சி, இன்ஃபோசிஸ், விப்ரோ, சுஸ்லான், ரான்பாக்சி, ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், பாரத் ஃபோர்ஜ், மகிந்திரா முதலான 21 இந்தியத் தரகு பெருமுதலாளித்துவ நிறுவனங்கள், அமெரிக்கஐரோப்பிய நிறுவனங்களைக் கைப்பற்ற பேரங்கள் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன.


சிறிய மீன் பெரிய மீனை விழுங்க முடியுமா? இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் ஏகாதிபத்திய நாடுகளது பெருந்தொழில் நிறுவனங்களைக் கைப்பற்ற முடியுமா? இது எப்படி சாத்தியமாயிற்று? ""இன்றைய உலகமய சூழலில் மூலதனமானது உலக நாடுகளிடையே குறுக்கும் நெடுக்குமாக தாறுமாறாகப் பாய்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு எந்தவொரு சிறிய நிறுவனமும் பெரிய நிறுவனத்தைக் கைப்பற்ற முடியும். மேலும், மூலதன அழுத்தம் கொண்ட பல பெருந்தொழில் நிறுவனங்களில் ஒப்பீட்டளவில் லாபம் குறைவாகவும் அதிக செலவு பிடிப்பதாகவும் உள்ளதால், மேற்கத்திய நாடுகள் இத்தகைய நிறுவனங்களைக் கைப்பற்ற பொதுவில் போட்டி போடுவதில்லை. அந்நாடுகள் கணினி, செயற்கை இழை உள்ளிட்ட இரசாயனத்துறை மற்றும் நிதிமூலதனம், தகவல்தொழில்நுட்ப சேவைத் துறைகளிலேயே கவனம் செலுத்துகின்றன. அனைத்துலக வங்கிகள் மூலம் மூலதன வாய்ப்பும், குறைந்த செலவில் மனித ஆற்றலும் மூலாதாரங்களும் கிடைப்பதால் இந்திய நிறுவனங்கள் பிற வெளிநாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்துவதில் போட்டி போட முடிகிறது'' என்கிறார் சுஸ்லான் நிறுவனத் தலைவரான துளசி டாண்டி.


அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியினால் ஏற்பட்டுள்ள பலன்களை அறுவடை செய்து ஆதிக்கம் செலுத்தும் நோக்கில், கொள்ளை இலாபம் தரக்கூடிய சேவைத்துறைகளில் ஏகாதிபத்தியங்கள் மூலதனத்தைக் குவிக்கின்றன. அதேசமயம், ஒப்பீட்டு ரீதியில் சற்றே குறைவான லாபம் தரக்கூடியதும் அதிக அளவில் மனித ஆற்றலைக் கொண்டதுமான கனரகத் தொழில்களை ஏழைநாடுகளது தரகுப் பெருமுதலாளிகள் கைப்பற்றிக் கொள்ள ஏகாதிபத்தியங்கள் தடையோ கட்டுப்பாடோ விதிப்பதில்லை. இதேபோல சுற்றுலாஓட்டல்கள், மருத்துவமனைகள், அடிக்கட்டுமான துறை முதலானவற்றில் மூலதனத்தைக் குவித்து தரகுப் பெருமுதலாளிகள் விரிவடையவும், வெளிநாடுகளில் இத்தகைய தொழில்களைத் தொடங்கவும் ஏகாதிபத்தியங்கள் தடையாக நிற்பதில்லை. இந்தியாவின் ஓபராய் நிறுவனம் ஆஸ்திரேலியா வரை ஓட்டல் தொழிலில் விரிவடைந்திருப்பதும், டாக்டர் ரெட்டி குழுமமும் ரான்பாக்சி நிறுவனமும் ஏகாதிபத்திய மருத்துவ நிறுவனங்களைக் கையகப்படுத்தியிருப்பதும், லண்டன் மற்றும் நியூயார்க் பங்குச் சந்தைகளில் பல இந்திய தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் இதை நிரூபித்துக் காட்டுகின்றன.


இந்தியாவின் டாடா மட்டுமல்ல; சீனாவின் கணினி தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ""லெனோவோ'' நிறுவனம் உலகின் மிகப்பெரிய ""ஐ.பி.எம்.'' கணினி நிறுவனத்தையும், ஜெர்மானிய ஏகபோக நிறுவமான சீமென்ஸ்இன் செல்பேசி தயாரிப்பு நிறுவனத்தை தைவானின் ""பென்கியூ'' நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. இதன்மூலம் அந்தந்தத் தொழில்துறைகளில் உற்பத்தியை மையப்படுத்திக் குவித்து சந்தையைக் கைப்பற்ற இந்நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதேபோலத்தான், டாடா நிறுவனமும் இந்தியாவின் இரும்புத்தாது சுரங்கங்களை ஐரோப்பிய சந்தையுடன் இணைத்து, "மலிவான' விலையில் எஃகு உற்பத்தி செய்து, தனக்குப் போட்டியாக உள்ள ""அர்சலர்மிட்டல்'' எஃகு நிறுவனத்தையும், தென்கொரியாவின் ""போஸ்கோ'' நிறுவனத்தையும், பின்னுக்குத் தள்ளிவிடும் நோக்கத்துடன் கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்காகவே ஒரிசா, ஜார்கண்ட், சட்டிஸ்கர் மாநிலங்களின் இரும்புத்தாது சுரங்கங்களை ஒருங்கிணைக்கவும் மலிவான கச்சாப் பொருளையும் "மலிவான' மனித ஆற்றலையும் ஒன்று குவித்து மலிவான விலைக்கு எஃகு உற்பத்தி செய்து ஐரோப்பிய சந்தையைக் கைப்பற்றத் துடிக்கிறது.


இதே உத்தியோடு, தொழிலாளர்களை அற்பக் கூலிக்குக் கசக்கிப் பிழிந்து நுகர்பொருட்களை மலிவான விலைக்கு உற்பத்தி செய்து, அமெரிக்க நுகர்பொருள் சந்தையில் பாதிக்கு மேல் சீனா கைப்பற்றியுள்ளது. இதர ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் அது கால் பதித்து வருகிறது. உற்பத்தியையும் மூலதனத்தையும் ஒன்று குவித்து சீனப் பெருமுதலாளிகள் உலகச் சந்தையில் போட்டி போட்டு முன்னேறுவதைக் காட்டி ""இது மாபெரும் பாய்ச்சல்; சீனா வல்லரசாகிவிட்டது'' என்று ஏகாதிபத்தியவாதிகள் துதிபாடினர். அதேபோலத்தான் இப்போது டாடா நிறுவனம், கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றி உலகச் சந்தையில் போட்டி போடுவதைக் காட்டி இந்தியா உண்மையிலேயே ஒளிர்கிறது என்றும் காலனியாதிக்கவாதிகளுக்குக் கொடுத்த பதிலடி என்றும் இந்திய ஆளும் வர்க்கமும் பத்திரிகைகளும் கூத்தாடுகின்றன. உலகமயமாக்கலின் கீழ் நடக்கும் இந்தப் போட்டாபோட்டியில் நாளை டாடா நிறுவனத்தை வேறொரு நிறுவனம் கைப்பற்றிக் கொண்டு கவிழ்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுதான் ஏகாதிபத்திய உலகயமாக்க அராஜகத்தின் தவிர்க்கவியலாத விளைவு!


இவற்றையெல்லாம் பூசிமெழுகிவிட்டு டாடா நிறுவனம், ஏகாதிபத்திய நிறுவனத்தையே விலைபேசும் அளவுக்கு உயர்ந்து விட்டது என்றும் இது தாராளமய உலகமய கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றும் பிரமையூட்டி ஆட்சியாளர்களும் பத்திரிகைகளும் நம்பச் சொல்கின்றனர். ஆளும் வர்க்கத்தினர்தான் இப்படி ஆனந்தக் கூத்தாடுகிறார்கள் என்றால், "புரட்சி' பேசும் போலி கம்யூனிஸ்டுகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டு கூத்தாடுகின்றனர். சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ வங்கமொழி நாளேடான ""ஜனசக்தி'', கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றிய டாடாவுக்கு உச்சிமுகர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து தலையங்கமே தீட்டியுள்ளது. உள்நாட்டில் தொழிலை விரிவுபடுத்துவதோடு, உலக அளவில் விரிவடைந்து டாடா நிறுவனம் வெற்றியைச் சாதிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து, இதற்காக இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் என்கிறது.


ஆளும் வர்க்க அடியாட்களாகச் சீரழிந்துவிட்ட போலி கம்யூனிஸ்டுகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழினப் பிழைப்புவாத தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளதைக் கண்டு பூரித்துப் போகிறது. ""இந்தியப் பெருமுதலாளிகள் உலகமய முதலாளிகளாக மாறிவிட்டதற்கு இன்னுமொரு சான்று இது. ஐரோப்பா உள்ளிட்டு உலகச் சந்தைக்குப் போட்டியிடும் அனைத்திந்திய பெருமுதலாளிகளை இதற்குப் பிறகும் தரகு முதலாளிகள் என்று வரையறுப்பது அறியாமை என்பதையும் டாடாகோரஸ் இணைவு தெளிவுபடுத்தும்'' என்று அக்கட்சியின் இதழான ""தமிழர் கண்ணோட்ட''த்தில் அக்கட்சியின் "தானைத் தலைவர்'களுள் ஒருவரான கி.வெங்கட்ராமன் தனது அடிமுட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி குதூகலித்துள்ளார். (தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 2006)


ஏகாதிபத்தியம், மேல்நிலை வல்லரசு, மறுகாலனியாக்கம், உலகமயமாக்கம் என்பனவற்றைப் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாத திருவாளர் கி.வெ., ""உலகமயத்திற்கு எதிராக இந்திய சுதேசியம் பேசுவதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்நிலையில் இந்தியத்தை வைப்பதும் போலியானவை போகாத ஊருக்கு வழிகாட்ட முயல்பவை'' என்று வேறு உபதேசமும் செய்கிறார்.


இந்தியப் பெருமுதலாளிகள் தரகு முதலாளிகளாக இல்லாமல், "உலகமய' முதலாளிகளாகிவிட்டதால், தமது கட்சித் திட்டம் மற்றும் நடைமுறை வேலைகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் பற்றி இவர் விளக்க முன்வரவில்லை. மாறாக, மார்க்சிய லெனினியப் புரட்சியாளர்கள் இந்தியப் பெருமுதலாளிகளை தரகு முதலாளிகள் என்று வரையறுத்திருப்பது தவறாகி விட்டது என்று நிரூபிக்க முயற்சித்து, அதற்கு டாடா கோரஸ் இணைவைச் சான்றாகக் காட்டி குதியாட்டம் போடுகிறார்.


""தரகு முதலாளிகள் எனப்படுவோர் அன்னிய வர்த்தக நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரி அல்லது நிர்வாகியாவர்; இவர்கள் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளாவர்'' என்று சீனப் புரட்சியின் தொடக்கக் காலத்தில் இருந்த தரகு முதலாளிகளின் தன்மைகள், செயல்பாடுகளைத் தோழர்கள் ஸ்டாலினும் மாவோவும் வரையறுத்திருந்தனர். அதை அப்படியே இந்தியப் பெருமுதலாளிகளுக்கு ஒப்பீடு செய்து ""பார்த்தீர்களா, இவர்கள் தரகு முதலாளிகளே இல்லை'' என்பதுதான் இந்த கிணற்றுத்தவளை அறிஞரது வாதம். ஆனால், தரகு முதலாளிகளின் தன்மையிலும் செயல்பாடுகளிலும் தொடர்ந்து நடந்து வந்த பரிணாம வளர்ச்சிக்கேற்ப தோழர்கள் ஸ்டாலினும் மாவோவும் புதிய வரையறுப்புகளை முன்வைத்துள்ளனர். இதை ஹோகான்சியின் ""நவசீனப் புரட்சியின் வரலாறு'' என்ற நூல் தெளிவாகவே விளக்குகிறது.


உலகமயமாக்கத்தின் கீழ் தரகு முதலாளிகளின் தன்மையிலும் செயல்பாட்டில் பரிணாம மாற்றங்களே இருக்காது; அவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யவோ ஏகாதிபத்திய நிறுவனங்களைக் கையகப்படுத்தவோ மாட்டார்கள்; அப்படிச் செய்தால் அவர்கள் தரகு முதலாளிகளே அல்ல என்பதுதான் இந்த அறிஞரின் குதர்க்கவாதம். ஏகாதிபத்தியங்கள்தான் ஏழை நாடுகளில் முதலீடு செய்யும்; நிறுவனங்களை இணைக்கும்; அதுபோல இந்தியப் பெருமுதலாளிகளும் செயல்படுவதால் இவர்களும் ஏகாதிபத்தியஉலகமய முதலாளிகள்தான் என்று அரிய கண்டுபிடிப்பை அவிழ்த்துவிட்டுள்ளார் இந்த அறிஞர். கட்டபொம்மனுக்கு வல்லிய மீசை இருந்தது என்றால், மீசை வைத்தவனெல்லாம் கட்டபொம்மன்தான் என்கிறார் இவர். இவரது வாதப்படி இந்தியத் தரகு முதலாளிகள் மட்டுமல்ல; பிரேசில், தென்கொரியா, தைவான், இந்தோனேஷியா முதலான பல ஏழை நாடுகளின் பெருமுதலாளிகளும் இனி தரகு முதலாளிகள் அல்ல; அந்நாடுகளிலும் உலகமயத்துக்கு எதிரான தேச விடுதலைப் புரட்சிகள் சாத்தியமே இல்லை என்பதுதான். இதைக் கேட்டால், இந்த ஏழைநாடுகளின் புரட்சியாளர்களும் போராளிகளும் வாயால் சிரிக்க மாட்டார்கள்.

பொருளாதாரப் புள்ளி விவரங்களைக் காட்டி தரகுப் பெருமுதலாளிகளின் அரசியல் தன்மையை மூடி மறைக்கக் கிளம்பியிருக்கிறார், திருவாளர் கி.வெ. உலகிலேயே மிகப் பெரிய கடன்கார நாடு அமெரிக்காதான் என்று பொருளாதாரப் புள்ளி விவரங்கள் காட்டுவதால், அமெரிக்காவை ஏழை நாடு என்று வரையறுக்க முடியுமா? அரசியலும் பொருளாதாரமும் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், தரகு முதலாளிகளின் பொருளாதார அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அம்முதலாளிகளின் அடிப்படைத் தன்மையை வரையறுக்கக் கிளம்புவது அபத்தமான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும். தரகு முதலாளிகள் ஏகாதிபத்தியத்தோடு எத்தகைய அரசியல் உறவைக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்காமல், தரகு முதலாளிகள் பொருளாதார ரீதியில் வீங்கி விரிவடைவதைக் காட்டி, இவர்கள் தரகு முதலாளிகளே அல்ல என்று வரையறுப்பதும், அரசியல் வரையறையே இல்லாமல் பொதுவில் ""உலகமய முதலாளிகள்'' என்று குறிப்பிடுவதும் அடிமுட்டாள்தனமானது என்பது சொல்லாமலேயே விளங்கும்.


தரகுப் பெருமுதலாளிகளின் தன்மையிலும் செயல்பாட்டிலும் உலகமயமாக்கம் புதிய மாற்றங்களை ஏற்பத்தியிருப்பதோடு, அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டங்களுக்கும் புதிய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. தேசங்கடந்த முதலீடுகளாலும் கூட்டிணைவு கையகப்படுத்தல்களாலும் உற்பத்தியும் உழைப்புப் பிரிவினையும் சர்வதேசியமயமாகியுள்ளதால், தென்கொரிய ஹூண்டாய் தொழிலாளர்களின் போராட்டம் தமிழக ஹூண்டாய் தொழிலாளர்களின் போராட்டமாக விரிவடையும். டாடாகோரஸ் நிறுவனத்தின் டச்சு நாட்டுத் தொழிலாளர்களின் போராட்டம் இங்கே ஜாம்ஷெட்பூரில் எதிரொலிக்கும். இப்புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு உலகமயத்திற்கு எதிராகவும், தரகுப் பெருமுதலாளிகளுக்கு எதிராகவும் அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்திப் போராடுவதும், போலி கம்யூனிசப் புரட்டல்வாதிகளோடு பல வண்ண குதர்க்கவாதிகள் சீர்குலைவுவாதிகளை அரசியல்சித்தாந்த ரீதியில் முறியடிப்பதுமே புரட்சிகரஜனநாயக சக்திகளின் இன்றைய கடமையாக உள்ளது.

· பாலன்

Wednesday, March 21, 2007

Indian security forces and police rape women

Indian security forces and police rape women if they protest,
Indian Parliament rocks

Wed, 2007-03-21 03:32

By Subash Mohapatra (www.asiantribune.com)

In Nandigram the massacre of farmers and rape of women by security forces and police stalled proceedings in Indian Parliament for the fifth consecutive day on Tuesday, forcing adjournment of both Houses.

At least 14 people were killed and 71 injured in Nandigram in East Midnapore, about 150km southwest of Kolkata on March 14 as police opened fire to quell mobs protesting acquisition of farmland for a special economic zone (SEZ).

Two women, who are under treatment at the Tamluk hospital, had filed a formal complaint with police. In a statement, the victims, both housewives aged 27 years and 25 years, alleged that police personnel cornered them during the melee after the firing at Sonachura village on March 14 and raped them.

Indian security forces and police are charged with many allegations of rape and torture, and mostly the incidents are denied without any investigation. This is not an isolated case or an exception. It exposes the inhuman and barbaric face of Indian law enforcement officials.
On March 9, the National Commission for Women in India received a petition stating that 8 tribal women were raped in Sirisguda village of Chhattisgarh including a student in the 10th standard on Feb 26. The victims were dragged out of their home in the morning and gang raped by police personnel, some in uniform. These women victims were opposing the land acquisition by the government for the TATA Steel Company. A rape victim was able to read the nameplate of one of the men who raped her and his surname is Sahu. The Superintendent of Police refused to register the complaint in a first information report.

On February 3rd 2007, while returning from the market at 5 P.M., a young tribal woman was dragged into the forest and gang raped by 4 members of the Mizo Security forces deployed in Dantewada. The men of the Mizo Security force gagged her to prevent her from shouting and she lost consciousness. When she regained consciousness, she was alone and naked in the woods. Her back was badly injured and her arms and legs were scratched and bruised from rocks and branches in the forest and now she can hardly move.

The officer-in-charge of Nakulnar police station denied her the right to register the case. With help from two other women, the victim submitted a written statement of the incident seeking justice but the Superintendent of Police of Dantewada refused to accept it and denied her case without investigation. However, she asked for help from the media, and finally, one week after the incident the complaint was registered against the un-identified persons. So far, no arrest has been made.

On November 28th, the UT Chandigarh Head Constable Ramkumar and three others brought Santosh Kumar from Karnal to Chandigarh and kept her in police lock-up on charges of illegal sale of alcohol despite claims by her husband and neighbors that she was innocent. She was sexually harassed and raped in the police station by Ram Kumar and an unidentified policeman. She was then moved to the Burail jail, where she was kept for 14 days until she was granted bail by the court.

“I was sexually exploited in the police station lock-up by two police personnel on the night of November 28,” Santosh Kumar alleged. She added “I kept telling the police that I had never even seen a police station in my entire life and that they were wrongly arresting me. My neighbors, too, stood by me, but the police refused to listen to anybody and sent me to jail here.”
On 27 December 2006, after the guilty party – another woman from the village named Santosh Singh - confessed in court, a fact-finding inquiry was marked to the Sub-Divisional Police Officer (South) DSP K I P Singh. Instead of expediting the matter and providing justice to the innocent Ms. Kumar, who had endured the mental agony, trauma and humiliation of being in jail for 14 days through no fault of her own, the inquiry officer took her fingerprints and sent these to the Fingerprints Bureau.

The inquiry report, which was received in the court of Chief Judicial Magistrate on 19 January 2007, clarified that Santosh Singh was found guilty and Santosh Kumar was innocent of the charges.

Despite the fact that the victim Santosh Kumar has been repeatedly raising serious allegations of sexual harassment she experienced while inside the police lock-up, the Chandigarh Police denied her allegations without any investigation.

In an alleged murder case 3 tribal women were arrested and taken to Sundarpahar police station on January 9. The women were allegedly physically assaulted, and witnesses confirm that there were marks of police brutality on their bodies. The three female victims (all aged between 28 and 31) claimed that they were illegally detained, and that during that detention they were subjected to torture, raped, stripped and paraded naked around the police station.
They also claim that the police stole Rs.120 from them. The victims have identified the perpetrators as the officer-in-charge Dipnarayan Mandel and another officer, Mahadev Oraon. Rajmahal Member of Indian Parliament Hemlal Murmu claims to have visited the ladies at the jail where they are being detained. He alleges to have seen marks of violence on the women’s bodies. A doctor from Godda sadar hospital who examined the women also confirmed (on condition of anonymity) that the bleeding of one of the victims had not yet stopped.

According to Indian National Human Rights Commission, there were 1,039 cases of human rights violations by the security forces from 1990-1999, an average of 109 per year. The National Human Rights Commission reported a marked decline since that period, with 16 cases reported in 2003, and 4 in the current year. The NHRC reported that it registered 756 cases against the military, 172 against paramilitary forces and 109,902 against the police since 2001.
The National Crime Record Bureau records report that the courts tried 132 policemen for custodial rape in 2002 but only 4 were convicted. The Ministry of Defence reported that it filed 17 rape cases against army personnel from 2003-2004. To date only one rape case ended in a guilty verdict. In the remaining cases, the investigations are still in process.

நந்திக்கிராமமும் டாடாயிஸ்ட் சி.பி.ஐ.(எம்) குண்டர்களும்

நந்திக்கிராமமும் டாடாயிஸ்ட் சி.பி.ஐ.(எம்) குண்டர்களும்
"சந்திப்பு" என்ற நபரும்

பி.இரயாகரன்
21.03.2006

ந்திப்புக்கு தன்னைத்தவிர ஊரில் உள்ளவன் எல்லாம் கேனயன் என்ற நினைப்பு. நந்திக்கிராம மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தி சொச்சைப்படுத்த, சி.பி.ஐ.(எம்) இது போன்ற நிகழ்சிகளை செய்வதில்லை என்று கதை சொல்ல முனைகின்றார். மூலதனத்தின் அரசியல் குண்டர்களான சி.பி.ஐ.(எம்) இன் வக்கிரத்தை, அறிவும் நேர்மையும் தர்க்கம் எதுவுமின்றி போராடும் மக்கள் மீது காறித் துப்புகின்றனர்.

சி.பி.ஐ.(எம்) டாடாயிஸ்டடுகள் சிறப்பு பொருளாதார சட்ட விதிக்கு மாறாக விளை நிலங்களை கையகப்படுத்தவில்லையா? சிங்கூரில் டாடா கார் தொழிற சலைக்கு 997,1 ஏக்கர் நிலத்தை மக்களிடம் இருந்து திருடவில்லையா? இதை எதிர்த்து போராடிய விவசாயிகள் ஒடுக்கப்படவில்லையா? அந்த நிலத்தில் உழைத்த 1320 குத்தகை விவசாயிகள், 3000 நிலமற்ற கூலிகள், இதை அண்டி தொழில் செய்த 10000 பேரின் கதி என்ன? சி.பி.ஐ.(எம்) காரன் மக்கள் வரிப்பணத்தில் மூலதனத்துக்காக திருடிய 120 கோடியில் வாங்கிய நிலத்தை, வெறும் 20 கோடிக்கு டாடாவிடம் கொடுத்த மாமாக்களின் மர்மம் என்ன? இப்படி நிலத்தை சலுகை விலையில் கொடுக்கவில்லையா? இந்த நிலத்துக்கு இதை விட சலுகைகள் பல. ஆட்சியில் உள்ள சி.பி.ஐ.(எம்) காரன், தனது புரட்சியில் அந்த மண்ணில் வாழும் மக்களுக்கு என்ன தான் செய்துள்ளான். மற்றைய மாநிலங்களை விட எதைத்தான் சிறப்பாக செய்துள்ளான்? தான் கொழுத்ததைத் தவிர வேறு எதையுமல்ல. 250 ஏக்கர் மட்டும் தேவைப்பட, ஏன் 1000 ஏக்கரை சி.பி.ஐ.(எம்) இடமிருந்து பறித்து கொடுத்தது? சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் மக்களிடம் திருடி கொழுப்பதே புரட்சியாகிவிட்டது.

அடுத்து அதேவழியில் நந்திக்கிராமமும். இச்சிறப்புப் பொருளாதார மண்டலம் 14,500 ஏக்கர் பரப்பளவில் சி.பி.ஐ.(எம்) உருவாக்கியது. இதில் 10,000 ஏக்கர் நிலம் இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்கும், 4,500 ஏக்கர் நிலம் ருயா குழுமத்துக்குமாக தாரை வார்க்கப்பட இருந்தது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களைப் பறிகொடுக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம். மக்களின் போராட்டமே இதை தடுத்து நிறுத்தியுள்ளது.

சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் கூறுவது போல் 'இது தவிர, நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்பது உண்மையல்ல. மக்கள் போராடி தமது சொந்த உயிரை இழந்து அதைத் தடுத்துள்ளனர். இது தான் புரட்சி. இதற்கு எதிரான வகையில் சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் புலம்புவது எதிர் புரட்சி.

மக்கள் நடத்திய இந்த நில கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிரான போராட்டத்தை சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் தமது எதிர்புரட்சிகர வழியில் எப்படி வருணிக்கினறனர். 'நந்திகிராமத்தையே கடந்த மூன்று வாரங்களாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, அங்குள்ள சி.பி.ஐ.(எம்) ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு, அபாயகரமான ஆயுதங்களை வைத்துக் கொண்டு, மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்குதான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்கின்றனர். நல்ல வேடிக்கை. 'இது தவிர, நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்று கூறும் இந்த முட்டாள்கள் தான் இதையும் சொல்லுகின்றனர். சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் கூறுவது போல், மக்கள் எல்லாம் கேனயன் என்ற நினைப்பு.

'..மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்குதான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்றால் அது படுகொலை மூலம் தான . இது சரி என்றால், 'நந்திகிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்காக சி.பி.ஐ.(எம்) வருந்துகிறது." இது என்ன புளுடாவா! இதில் எது சரி? எதிர்புரட்சிகர சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் மக்களின் புரட்சிகர போராட்டத தின் முன்னால் தோற்ற போது, இப்படி அங்குமிங்குமாக சாக்கடை புழுககள் போல் நெளிகின்றனர். இதை அப்படியும் இப்படியும் நெளியவைப்பத்து சந்திப்பின் திருகுதாளமாகும்.
'சி.பி.ஐ.(எம்) ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு" என்றால் சி.பி.ஐ.(எம்) காரனின் தேவைக்காக நடந்த துப்பாக்கி சூடு அல்லவா! அதைத்தானே இது வெளிப்படுத்துகின்றது. சரி மக்கள் விரோத சி.பி.ஐ.(எம்) காரன் ஏன் அங்கிருந்து ஓடினான்? அதற்கு ஏன் துப்பாக்கி சூட்டை நடத்த வேண்டும்?

இதற்கு சற்று முன்னால் அங்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்
சோனாசுரா கிராமத்தில் 'நந்திகிராம நிலப பாதுகாப்பு கமிட்டி" கூட்டம் நடத்துவதை அறிந்து, சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் ஜனவரி 6ஆம் தேதியன்று அதிகாலையில் அக்கிராமத்தை தாக்கினர். சோனாசுரா கிராமத்துக்கு 250 பேருக்கும் மேலாகத் வெளியில் இருந்து திரண்டு வந்த சி.பி.எம். குண்டர்களே இத்தாக்குதலை நடத்தினர். அக்கிராம விவசாயிகளது வீடுகளின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு, அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய மக்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்துக்கு எதிராக ஜனவரி 8ஆம் நாளன்று எதிர்க்கட்சிகள் நடத்திய மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்தின்போதும் போலீசு தடியடி நடத்தியதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்குமுறை வெறியாட்டம் போட்டது. இப்படி சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் ரவுடிகளாக அந்த மக்களை தாக்கி கொன்றனர். இந்த மக்கள் விரோத ரவுடிகள் மக்கள் எதிர்ப்பதும , அதில் இருந்த தப்பி ஒடுவதும் இயல்பு.

ஒருவரல்ல, இருவரல்ல, ஆறு பேர் கொலை. அந்த மண்ணில் 15 முறை போலீசு துப்பாக்கிச் சூடு தடியடி, கண்ணீர் புகை வீச்சு, 144 தடையுத்தரவு. எல்லாம் எதற்கு? சி.பி.ஐ.(எம்) குண்டர்களால் கையகப்படுத்த முடியாத அந்த நிலத்துக்காக. அதாவது '.. நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்ற உண்மையை பொய்யாக்குவதற்காகத்தான் 'மார்க்சிஸ்ட்" எம்.பி.யான லக்ஷ்மண் சேத், ஏக்கருக்கு ரூ. 4.3 லட்சம் வரை கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும், நந்தி கிராமத்தில் பகுதியளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். ஒருபுறம் வன்முறை, மறுபுறம் பணத்தைக் காட்டி விலை பேசுவது என்று மூலதனத்தக்காக புரட்சி செய்கினறனர். சி.பி.ஐ.(எம்) குண்டர்களும் அவர்களின் எடுபிடிகளும். இவவனைததையும செய்துவிட்டு ஊரையும் உலகத்தையும ஏமாற்ற நக்சலைட் அவதூறுகள்.

மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் தான் எதிர் வன்முறையாகின்றது. பின் அந்த குண்டர்படைகளினதும் பொலிசாரினதும் மனிதாபிமானப் பிரச்சனை பற்றி ஒப்பாரி வைப்பது தொழிலாகிவிட்டது.

அந்த மக்களின் நிலத்தை அபகரிக்க சி.பி.ஐ.(எம்) குண்டர்களுக்கு துணையாக பொலிசாரும் கூட்டாகவே களமிறங்கினர். இங்கு ஒரு கேள்வி. 'மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்கு" பதில் தான் இந்த படுகொலை என்கின்றார் சந்திப்பு. நல்ல அரசியல் வேடிக்கை. சரி எதிர்க கட்சி போராடக் கூடாதோ! போராடாமல் இருத்தல் தான் ஜனநாயகமோ! சரி எதிர் கட்சிகள் எங்கு இருந்து உருவாகின்றது. அதே மக்களில் இருந்து தானே. அந்த மக்கள் ஆளும் மூலதனத்தின் எடுபிடிகளுக்கு எதிராக போராடக் கூடாது. மேற்கு வங்கத்தில் கம்யூனிச ஆட்சியா நிலவுகின்றது. அப்பட்டமான மூலதனத்தின் கெடுபிடியான பாசிச ஆட்சியே அங்கு நிலவுகின்றது.

யார் பயங்கரவாதி? யார் எதிர்வினையையும் அது சார்ந்த வன்முறையையும் உற்பத்தி செய்கின்றனர். சி.பி.ஐ.(எம்) காரன் மூலதனத்துக்காக சேவை செய்யும் போது, மக்களின் போராட்டத்தைக் கண்டு மூலதனத்தின் எடுபிடிகள் ஒடுகின்றனர். மக்கள் புரட்சி இப்படித்தான் நடக்கும். மக்களை படுகொலை செய்வதே மூலதனத்தின் ஜனநாயகமாக இருக்கின்றது.

மக்கள் போராடுவதே தவறு என்பதே சந்திப்பின் மைய விளக்கம். மக்களை கொள்ளை அடிப்பதை அனுமதிப்பது தான் சி.பி.ஐ.(எம்) காரனின் புரட்சி. ஜனவரி 6ஆம் திகதி சி.பி.ஐ.(எம்) காரனினால் கொல்லப பட்டவர்கள் யார்? அந்த ஊரில் வாழும் உழைக்கும் மக்கள். சி.பி.ஐ.(எம்)காரன் பொலிசார் மூலம் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களும் மக்கள் தான். ஆயிர ஆயிரமாக திரண்ட மக்கள், எதிர்கட்சியோ, நக்சலைட்டுகளோ அல்ல. சி.பி.ஐ.(எம்) குண்டர்களால் வாழ்வு இழக்கப்பட்ட சாதாரணமான உழைக்கும் மக்கள். இப்படி கொல்லப படுவது தான், சி.பி.ஐ.(எம்) காரனின் புரட்சி என்பதே சந்திப்பின் தர்க்கம்.

அதை அவரின் கட்சியைச் சோந்த மூலதனத்தின் எடுபிடி குண்டர்கள் 'சில அரசியல் கட்சிகளும் அங்கே ஆத்திரமூட்டும் செயல்களில் இறங்கியுள்ளன. இவர்கள் யாரும் அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் அல்ல. இவர்களது நடவடிக்கைகளை அக்கிராம மக்கள் எதிர்த்தார்கள்." என்கின்றனர்.

காயமடைந்த, கொல்லபட்டவர்கள் யார் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் சி.பி.ஐ.(எம்) குண்டர்களுக்கும் அதன் எடுபிடிகளுக்கும் அது தெரிவதில்லை. வெளியார் என்கின்றனர்.பார்ப்பனிய எடுபிடிகள் வழமையாக கூறுவது போல், பாகிஸ்தானிய முஸ்லீம் கைக் கூலிகளோ!

இதே அளவைக கொண்டே ம.க.இ.க நடத்திய கோக்கோலா எதிர்ப்பு போராட்டம் முதல் அனைத்தையும் துப்பாக்கிச் சூட்டை நடத்தி ஒடுக்கமுடியும் என்பதே, சந்திப்பின் அரசியல் தர்க்கம். சி.பி.ஐ.(எம்) துப்பாக்கி சூட்டை நடத்தலாம் என்றால், ஏன் மற்றவர்கள் அதே காரணத்தை கூறி நடத்த முடியாது?

குஜராத்தில் பார்ப்பனிய மோடி நடத்திய வெறியாட்டமும் இதே காரணத்தைச் சொல்லி நடந்தது, அதை பார்ப்பனிய பாதம் நக்கிகள் நியாயப்படுத்தினர். போராடிய மக்களை, புரட்சிகர மக்களை கொன்று போட்டுவிட்டு, பாசிச கோயபலஸ் பாணியில் விளக்கம் சொல்வதிலும் இந்த குண்டர்கள் மூலதனத் திமிர் வெளிப்படுகின்றது.

'நந்திகிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்காக சி.பி.ஐ.(எம்) வருந்துகிறது." என்ன வேடிக்கை. நியாயப்படுத்தப்படும் போது, அன்னியர், அது நக்சலைட்டுகளின் சதி என்று புலம்பல். 'தற்போது, தொழில் வளர்ச்சியை திட்டமிட்டு முடக்க பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று அக்கட்சி மூலதனத்துகாக விளக்கம் தருகின்றனர். அக்கட்சியின் எம்.பி.யாகிய லக்ஷ்மண் சேத், நந்திகிராமத்தில் நிலம் கையகப்படுத்த எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்று கோயபல்சையே விஞ்சும் வகையில் அண்டப்புளுகை அவிழ்த்துவிடுகின்றார். சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான எச்சூரியும், கட்சியின் அதிகாரபூர்வ நாளேடுகளும் இதுதான் உண்மை என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுத்தன. இப்படி ஒன்றுக்கொன று முரணாக புலம்பும் இந்த மூலதனத்துக்கு வாலாட்டும் நாய்களுக்கு சூடுசுரணை இருப்பதில்லை.

ஆனால், இது அண்டப்புளுகை விஞ்சும் ஆகாசப்புளுகு என்பதை மே.வங்க நாளேடுகள், லக்ஷ்மண் சேத் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையையும், ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் படத்தோடு செய்தியாக வெளியிட்டு நாறடித்தன. அதன் பிறகே மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதை உடனே ரத்து செய்யுமாறு ஆணையிட்டுள்ளதாகவும் துப்பாக்கி சூடு நடக்க முன்னம் புலம்பினார். 'நந்தி கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலப் பணிகள் அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டு விட்டன." என்கின்றனர். என்ன முரண்பாடு. இவர்கள் செய்வது என்ன?

1. மக்களை ஒடுக்கி அவர்களின் மேல் நடத்துகின்ற வெறியாட்டம்

2. மறுபக்கம் அதை தாம் செய்யவில்லை என்று ஊரையும் உலகத்தையும ஏமாற்றும் வக்கிரம்.

3. செய்ததை நியாயப்படுத்த, அதை மற்றவர்களின் குற்றமாக காட்டும் சூழ்ச்சிகளும், சதிகளும்

4. மூலதனத்துக்காக நாயாக நக்கி உழைப்பதே புரட்சி என்பது இவர்களின் வாழ்க்கை நெறி

மக்களின் எதிரிகளை, எதிர்புரட்சிகர சக்திகளை எந்தவகையில் மக்கள் தண்டிக்க விரும்புகின்றனரோ, அந்த வகையில் சி.பி.ஐ.(எம்) கட்சியை தண்டிப்பார்கள். சந்திப்பின் (5) கேள்விகள் எல்லாம் பிரச்சனையை திசை திருப்புகினற பார்ப்பனிய அரசியல் வித்தைகள்.

குறிப்பு.:

1.அரவிந்தன் நீலகண்டன் என்ற நபர் இந்திய மக்களின் கடைந்தெடுத்த எதிரி. உள்ளடக்க ரீதியாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம கடடமைத்துள்ள அனைத்து மக்கள் விரோத செயற்பாட்டுக்கும் துணை நிற்கும் ஒரு பூணூல். பார்ப்பனிய வழியாக கட்டிப பாதுகாக்கும் மூலதனத்தின் அசலான அடிவருடி. இந்த பூணூல் மார்க்சியமும் அறிவியலும் என்ற தலைப்பில், தனது பூணூல் வழியாக ஒரு பதிவைப் போட்டுள்ளது.

பார்ப்பனிய மூலதன அரசியல் அமைப்புக்கு பூணூல் அணிந்த குலைக்கும் ஒருவன் அறிவாளியாக, அறிவியலாக இருக்கவே முடியாது. அதுவும் பார்ப்பனியத்தை ஆதரிப்பவனாக இருந்தால், அதன் அறிவு என்பது சதியும் சூழ்ச்சியும் தான் அதன் மூலதனமாகும். விரைவில் தனிப்பதிவு மூலம் அதைப் பார்ப்போம்.

2 .புரட்சிகர வன்முறை குறித்தும், புரட்சிகர மனிதாபிமானம் குறித்தும தனிப்பதிவாக பார்க்கவுள்ளோம். வன்முறையை வாழ்க்கையாக, மனிதாபிமானத்துக்கு எதிராக வாழ்வதையே நாகரிகமாக கொண்ட சமூகவிரோத ஓட்டூண்ணிகளை தோலுரிப்பது அவசியமல்லலா!

Tuesday, March 20, 2007

வர்க்க அமைப்பில் ஜனநாயகம்

வர்க்க அமைப்பில் ஜனநாயகம்

மார்க்சியம் என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கின்றது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான ஒரு நீடித்த இயக்கமாகும். வர்க்கங்கள் நீடிக்கும் வரை வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பும் பின்புமாக தொடரும் ஒரு வர்க்க அடிப்படையாகும். இந்த வர்க்கப் போராட்டம் அமைதியாகவும் வன்முறை சார்ந்தும் நீடித்த ஒரு தொடர் நிகழ்ச்சியாகும். இங்கு ஜனநாயகம் அனைத்து வர்க்கத்துக்கும் கிடையாது. பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டும் தான் ஜனநாயகம் உண்டு. எந்த தனிமனிதனுக்கு விதிவிலக்கல்லாதது. சமூக எல்லைக்கு வெளியில் தனிமனிதனுக்கு ஜனநாயகம் கிடையாது. அப்படி இருப்பதாக கூறுவது சமூகத்தை விட அதிகமாக கோருவதைக் கடந்து விளக்கம் பெறாது. புரட்சியின் ஏற்ற இறக்கத்துக்கு இணங்க இடைப்பட்ட வர்க்க பிரிவுகளுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவது உண்டு. அது பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவாக மட்டும் தான். இது பாட்டாளி வாக்கப் போராட்டத்தை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் தான் வழங்கப்படுகின்றது. ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்கும் இல்லை என்கின்ற போதே, அது மற்றைய வர்க்கங்கள் மேலான சர்வாதிகார அமைப்பாக கட்டமைக்கப்படுகின்றது. இவை மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இதை ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போல் டிரொட்ஸ்கிய வாதிகளும் சரி, அனைத்து வகை பினாமிகளும் கூட ஏற்றுக் கொள்வதில்லை. கோட்பாட்டு ரீதியில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை இதில் கையாளுகின்றனர். அனைத்து வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடகத்தில் இருந்தே, அவதூறுகள் கட்டப்படுகின்றன. அவதூறுகள் தேடப்பட்டு முன்வைக்கப்படுகின்றன


ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். இதற்கு வெளியில் ஜனநாயகம் இருப்பதில்லை. மற்றைய வர்க்கம் ஜனநாயத்தின் ஒரு கூறைப் பயன்படுத்துகின்றது எனின், அது வெறுமனே ஒரு சலுகை மட்டும் தான். நிலவும் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், சர்வாதிகாரத்தை நீடித்து பாதுகாக்கவும் வழங்கும் ஒரு இடைநிலை வடிவம் தான். இது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்துக்கும் பொருந்தும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக ஒன்றுக்கு மறுக்கப்படுகின்ற வரை தான், மற்றது உயிர் வாழ்கின்றது. இது அடிப்படையான மார்க்சிய விதியும் கூட. அனைவருக்கும் ஜனநாயகம் உள்ள போது, ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் சமுதாயத்தில் இருந்தே இல்லாமல் போய்விடுகின்றது. இது வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தில் மட்டும் தான் சாத்தியம். மறுக்கப்படும் ஜனநாயகம் உள்ளவரை, ஜனநாயகம் எப்போதும் எங்கும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றது. இந்த அடிப்படை உள்ளடகத்தை ஏகாதிபத்தியம் மூடிமறைக்கின்றது.


ஜனநாயகத்தின் உட்கூறுகளையும், அதன் பண்புகளையும் தெளிவாகவே, எதிர் எதிரான இரண்டு சமுதாயப் போக்கிலும் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் ஜனநாயகம் சுரண்டல் வர்க்கத்துக்கு மறுக்கப்படுகின்றது. முதலாளித்துவமும், அதிலிருந்து உருவாகும் பாசிசமும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு ஜனநாயகத்தை மறுக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும் அதன் பண்பியல் கூறுகளை எதார்த்தத்தில் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்து, சுரண்டும் வர்க்க பாசிசம் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி சுரண்ட முடியும் என்கின்ற ஒரு நிலை கொண்டிராத எல்லா நிலையிலும், சுரண்டும் சர்வாதிகார ஜனநாயகம் எப்போதும் நிர்வாணமாக இருப்பதில்லை. தன்னை மூடிமறைத்துக் கொள்கின்றது. அது சுரண்டலை தொடர்ந்தும் அமைதியாக நடத்துவதற்காக மற்றய வர்க்கத்துக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை அழகு படுத்துகின்றது. இந்த ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரமாக இருப்பதை இலகுவாக கண்டு கொள்ளமுடியாது, மூடிமறைக்கின்றது. சமுதாயத்தில் இந்த போலித்தனத்தை யார் யாரெல்லாம் அடையாளம் காணவில்லையோ, அவர்கள் தான் தனிமனித உரிமை பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக கூச்சல் எழுப்புகின்றனர். தன்னை மூடிமறைத்து அழகுபடுத்தி நிற்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் கூர்மையாகின்ற போதே, சுரண்டலை தொடர்வதற்காக பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகாரமாக தன்னை நிர்வாணப்படுத்துகின்றது. பாட்டாளி வர்க்கம் ஒட்டு மொத்தமாகவே இந்தக் கபடத்தை அம்பலம் செய்தே வர்க்கப் போராட்டத்துக்கு தயார் செய்கின்றது.


மனிதனைச் சுரண்டுவது சுதந்திரமான ஜனநாயக உரிமையாகிய போது, ஜனநாயகத்துடன் ஒட்டிப் பிறந்த தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம் கூட, இந்த வர்க்க அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை இருக்குமாயின், இது விவாதத்துக்குரிய பொருளாகவே இருப்பதில்லை. இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் இருந்தே மறைந்து விடுகின்றது. தனிமனித உரிமை என்பதும், தனிமனித சுதந்திரம் என்பதும் வர்க்க சமுதாயத்தில் மறுக்கப்படும் போதே, அது நீடிக்கின்றது. இது எப்போதும் வர்க்க சமுதாயத்தில் ஒருவருக்கு இல்லாத போது மட்டும் தான், மற்றொருவருக்கு இருக்கின்றது. இதை புரிந்து கொள்ளாத வரை புரிந்து கொள்ள மறுக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக வைக்கும் கூச்சல்கள், பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த உரிமைகள் இருக்க கூடாது என்பதைத் தாண்டி விளக்கம் பெறாது. தனிமனித உரிமை, தனிமனித ஜனநாயகம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும், முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிலும் ஒரேவிதமாகவே எதிர்தரப்புக்கு மறுப்பதாகவே உள்ளது. ஆனால் வௌவேறு வர்க்கங்கள் இந்த உரிமையை பெறுகின்றது. இதனால் இது சர்வாதிகார அமைப்பாக உள்ளது.


ஜனநாயகம், சுதந்திரம், தனிமனித உரிமைகள் என அனைத்தும் வர்க்க எல்லைக்கு அப்பால் நீடிக்க முடியாது. இதை ஏற்க மறுப்பவர்கள் தனிமனித நிகழ்வுகளை காட்டி அதை அரசியலாக்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடைக் கோடியில் நின்று கோசம் போட்டு சோரம் போவதைத் தாண்டிவிடுவதில்லை. சுரண்டும் ஜனநாயகத்தின் மூலதனத்தின் அதிகாரத்தை தகர்க்க போராடும் போது அதை எதிர்க்கும் முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம், தனிமனித உரிமை பற்றிய பேச்சு என்பதை அனுமதிப்பதில்லை. இது போல் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுரண்டலைக் கோரும் ஜனநாயகம் மற்றும் மக்களை பிளவு படுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் எதையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அனுமதிப்பதில்லை. மார்க்சிய அடிப்படைக்குள் தவறுகள் நிகழும் போது, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி அதை திருத்துவதில் மார்க்சியவாதிகளாகிய நாங்கள் அவற்றை என்றும் புறம் தள்ளியது கிடையாது.


Sunday, March 18, 2007

எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது

எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது

மது முற்போக்குவாதிகளும் மார்க்சியர்களும் இப்படியொரு சம்பவத்தை மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இது 1918 யூலை 17இல் இடம்பெற்ற சம்பவம். ஆன்று சோவியத் யூனியனில் உள்ள எக்காரெறின்பெரி என்னும் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு வேளையில், பதினொருபேர் லெனினது உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொடுங்கோலனாக கருதப்பட்ட சார்மன்னன் இரண்டாம் நிக்களஸ், அவரது மனைவி அலெக்சாந்திரா, பிள்ளைகளான அலெக்சேய்தாத்யானா, ஓல்கா, அனஸ்தாசியா, மரியர் அவர்களது வீட்டுப் பணியாளர்களான ஒரு மருத்துவர், ஒரு சமையற்காரர், ஒரு வேலைக்காரன், ஒரு தாதி, ஆகியோரே அவ்வாறு கொல்லப்பட்டவர்கள். இதன்போது சாரின் வீட்டு நாயும் கொல்லப்பட்டது.


இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் நிக்ளஸ் என்று ஒரு திரைப்படமும் இருக்கிறது. அமெரிக்கத் தயாரிப்பான அந்த திரைப்படம் சார் மன்னனுக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விளையாட்டுத்தனமானவர்களாக சித்தரிக்கப்படும் அவனது, அழகான பெண் பிள்ளைகளுக்காக பார்க்கும் எவரும் கண்ணீர் சிந்துவர். மார்க்சியர்கள் குறிப்பாக ரஸ்ய போல்ஷவிக் அமைப்பினர் மிகக் கொடுரமானவர்கள், ஈவிரக்கமற்றவர்கள் என்பதாக ஒரு பார்வையாளர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த திரைப்பட இயக்குனரின் அரசியலும் கூட.


ஆனால் இந்த சம்பவம் ஒரு வரலாற்று பின்புலத்தில் வைத்து புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்தது. அந்த நேரத்தில் ரஸ்ய அரசியல் சூழலில் முக்கிய விடயமாக உரையாடப்பட்ட மேற்படி கொலைகள் ஒரு புரட்சிகர அரசியல், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் பின்னனியிலேயே மார்க்சியர்களால் விளக்கப்பட்டது. உண்மையில் மனித உரிமை, ஜனநாயகம் என்ற சொல்கொண்டு மேற்படி சம்பவத்தை நாம் அளவிட்டால் லெனின் ஒரு மோசமான கொலைகாரராகத்தான் தெரிவார்.


ஆனால் ஒரு போராட்டச் சூழலில் அதுவும் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் ஜனநாயகம், மனித உரிமை என்ற சொற்களின் அர்த்தம் வேறு. சாதாரணமான சூழலில் உரையாடப்படும் இவ்வாறான சொற்கள் வழியான அரசியலை ஓர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட சூழலில் பயன்படுத்த முயன்றால் அது தவறான அரசியல் விளைவுகளையே ஏற்படுத்தும். நமது சூழலில் உள்ள சிலருக்கு இன்றும் விளங்காமல் இருக்கும் விடயமும் இதுதான். மனிதநேயம் பற்றி மாவோ கூறியிருப்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்கின்றேன். “மனித நேயம் பற்றி மக்கள் என்னதான் பேசிக் கொண்டாலும் வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் சமூதாயத்தில் உண்மையில் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பது யாராலும் இயலாத காரியம்” (வர்க்கம் என்ற இடத்தில் நமது இனத்துவ அடையாளத்தை குறித்துக் கொள்ளுங்கள்) இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு மாவோவை ஈவிரக்கமற்றவர், கொலைகளை ஆதரிப்பவர் என்று சொல்லிவிட முடியுமா?


மார்க்ஸ் முன்னிறுத்திய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தின் நீட்சிதான் லெனின், மாவோ போன்றவர்களின் அனுகுமுறையும் கருத்துக்களும். பாட்டாளிகள் புரட்சியின்போது எதிரிகளான முதலாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்பதன் உள்ளடக்கம்தான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். உண்மையில் மனிதநேய நோக்கில் எதிரியான சாருக்கு பதிலாக சாரின் மனைவி பிள்ளைகள் மீதான கொலை வேதனைக்குரிய ஒன்றுதான். ஆனால் ஓர் அரசியல் பின்புலத்தில் அதற்கான வலுவான நியாயமுண்டு.


எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது. என்னைப் பொருத்தவரையில் லெனின் செய்தது சரி நான் அதனுடன் முழுமையாக உடன்படுகின்றேன். அதற்காக எல்லாவற்றுக்கும் வன்முறைதான் ஒரேயொரு தீர்வு என நான் விவாதிக்க வரவில்லை வன்முறையற்ற அரசியல் செயற்பாடுகளுடாவும் சாதிக்கக் கூடிய பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் நான் இங்கு முன்னிறுத்தும் வாதமோ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் போது இடம்பெறும் சில சம்பவங்களுக்கு தத்துவார்த்த விளக்கம் சொல்ல முற்படும்போதும் நமது புலமைச் செருக்கை விடுதலைப் போராட்டத்துடன் உரசிப்பார்க்கும் போதுமே நாம் தவறுகளை நோக்கி பயணிக்கின்றோம். நாம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களின் அக்கறை கொள்வோமாயின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை ஈவிரக்கமற்ற முறையில் ஆதரிப்பதை தவிர வேறு ஒன்றையும் எம்மால் பெரிதாக செய்துவிட முடியுமென நான் நம்பவில்லை.


கடந்த பத்துவருடங்களாக சில நிலைமைகளை அவதானித்து வந்தவன் என்ற வகையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் பிழை பிடிப்பதில் தமது பண்டிததனங்களை செலவிட்ட எந்தவொரு மாற்றுக் கருத்தாளரும் தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் எதையும் சாதித்ததாக நான் கருதவில்லை. சில அரை வேக்காட்டு கூட்டத்தினரை உருவாக்கியதும் எதிரிகளுக்கு இடைவெளிகளை இனங்காட்டியதையும் தவிர. ஏதாவது சாதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் என்னை நான் திருத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.


- யதீந்திரா

பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை

பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை


பி.இரயாகரன்
18.03.2007



வை அனைத்தும் மக்கள் விரோதக் கோட்பாடுகள். மனித குலத்துக்கு எதிரான ஒரு வர்க்கம் என்ற வகையில், பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை இணையத்தில், அறிவு நேர்மையின்றியும் தர்க்க அடிப்படையின்றியும் தெரு நாய்கள் போல் குலைப்பது இயல்பாகிப்போயுள்ளது. அது ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், மனிதாபிமானம், தனிமனித ஒழுக்கம் என்ற பல வண்ணத்தில், தனது தலையை இதற்குள் மறைத்துக் கொண்டுதான் இணைய தளங்களில் வலம் வருகின்றது. நிஜமான வாழ்வியல் உலகத்தில், மனித குலத்தின் பரம எதிரிகள் இவர்கள். இவர்கள் போற்றி வழிபடும் நிஜமான உலகம் எது?



1. மற்றவன் உழைப்பை சுரண்டி வாழ்கின்ற அற்பர்களை அவர்களின் எடுபிடிகளையும் கொண்டது.



2. மற்றவனை விட தன்னை ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தவனாக பீற்றிக்கொண்டு வாழ்கின்ற, வாழ முனைகின்ற மனித விரோதிகளை அடிப்படையாக கொண்டது. சாதியால், பாலால், நிறத்தால், இனத்தால், மதத்தால், இது போன்ற சமூக இழிவுகளை கற்பித்து, மனிதர்களை ஒடுக்கி வாழும் அற்பர்களின் வாழ்க்கையை நியாயப்படுத்துவது. இவர்கள் இணையத்தில் ஜனநாயகத்தின் வள்ளல்களாக வேடம் போடும் பொறுக்கிகள்.



3. சக மனிதனை தன்னை போல் நேசிக்கத் தெரியாத, நேசிக்க கற்றுக் கொடுக்கத் தெரியாத காட்டுமிராண்டிகள்.



இவர்கள் தம்மை அறிவுஜீவிகளாக, விவாதம் செய்வதாக காட்டிக்கொண்டு, இணையத்தில் தமது இழிந்த வர்க்க அரிப்பை வெளிப்படுத்துவார்கள். அரிப்பு தாங்க முடியாது, சொறிவதையே வாழ்க்கையாக கொண்ட தெரு நாய்கள். இந்த நாய்கள் ஆங்காங்கே கடித்து குதறுவதையே இணையத்தில் தொழிலாகக் கொண்டவர்கள்.



நிஜவுலகில் ரவுடிசமாக, பார்ப்பனியமாக, அரசியல்வாதிகளாக, மனிதனைப் பிளந்து அதில் வாழும் அற்பர்களாக, அதிகார வர்க்கமாக, மற்றவனை ஒடுக்கி பொறுக்கித் தின்னும் குண்டர் படையாக வாழும் அற்பர்கள் இவாகள். மனித உழைப்பு எனறால் என்னவென்று தெரியாதவர்கள். அதை தட்டி தின்பது, இவர்களின் ஜனநாயகமாகும்.



கோடானு கோடி மக்களின் வாழ்வை அழித்து அதில் வாழ்பவர்கள். அவர்களின் மரணம் தான், இவர்களின் ஜனநாயக சிம்மாசனம். இந்தக் கும்பல் சக மனிதனுக்கு மறுக்கும் சுதந்திரத்தில் தான், தனது சுதந்திரம் பற்றி பீற்றிக் கொள்ளுவார்கள். இந்தக் கயவாளிகள் கும்பல் தான், மூக்குமுட்ட மற்றவனின் உழைப்பை திருடித் தின்றுவிட்டு ஜனநாயகம், சுதந்திரம் என்கின்றது. அப்படி கூறும் போதே மற்றவனுக்கு அதை மறுப்பதில் தான், அது அவர்களது உரிமையாகின்றது. அதனால் அதற்காக கூச்சலிடுகின்னர். உண்மையில் அனைவருக்கும் ஜனநாயகமும், சுதந்திரமும் இருந்தால், இந்த சொல்லே அர்த்தமிழந்துவிடும். ஆகவே அதை மற்றவனுக்கு மறுப்பதைத்தான், ஜனநாயகம் சுதந்திரம் என்கின்றனர்.



நிஜ உலகில் மக்கள் இந்த சமூக விரோத பொறுக்கிகளை இனம் கண்டு வாழ்கின்றனர். சமூகத்தின் அனைத்து தெரிவையும், நுகர்வை இந்தப் பொறுக்கித்தனமான அரசியல் எல்லைக்குள் வரையறுத்து, அதை சுதந்திரம் ஜனநாயகம் என்று ஒப்பாரி வைப்பது தான், இவர்களின் உயர்ந்தபட்ச சமூக கட்டமைப்பாகும். இப்படி சமூகத்தை நலமடித்து திரியும் கும்பல், நிஜ உலகில் மட்டுமல்ல இணையத்திலும் நலமடிக்க முனைவது இயல்பு. இதற்கு வெளியில் இந்தக் கும்பல் சமூகத்தை வேறு எந்த வகையிலும் வழிகாட்ட வக்கற்றது.



நிஜவுலகில் இவர்கள் தம்மைத்தாம் பாதுகாக்க கட்டமைத்துள்ள வன்முறை அமைப்பை எதிர்த்து, மக்கள் சொந்த வாழ்வியல் அனுபவமூடாக அதை ஒழித்துக்கட்ட கற்றுக் கொண்டு போராடுகின்றனர். மக்களின் எதிரி எந்தவகையில் எந்த அரசியல் வழியில் பதிலடி தருகின்றானோ, அதை எதிர்கொண்டு மக்கள் அதே வழியில் பதிலடி கொடுப்பதை எதிரியே கற்றுக் கொடுக்கின்றான். மக்கள் எதிரியின் தொடர்ச்சியான வன்முறையை எதிர்கொண்டு, அதே பாணியில் அதற்கு பதிலடி கொடுக்கும் போது, இந்தக் கும்பல் மனிதாபிமானம், ஜனநாயகம் பயங்கரவாதம் என்று அலட்டத் தொடங்குகின்றது. இவர்கள் கூக்குரலிடும் ஜனநாயகம், மனிதாபிமானம், பயங்கரவாதம் என எவையும், மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனையைத் தீர்த்துவிடுவதில்லை. மாறாக மக்கள் தமக்கு தெரிந்த வழியில் விடை காண்கின்றனர்.



மக்களின் எதிரிகளை இணையத்தில் எப்படி எதிர்கொள்வது என்பதே எம்முன்னுள்ள கேள்வி. இந்த அற்பர்கள் அறிவால் தமது கருத்தை நியாயப்படுத்தி மனித இனத்தை வெல்லமுடிவதில்லை. தம்மை தமது சமூக ஒழுக்கக் கேட்டை நியாயப்படுத்த, இவர்கள் நம்பி ப+சிக்கும் எந்த சமூக நெறியும் அவர்களுக்கே உதவுவதில்லை. அது தனிச்சொத்துரிமை கோட்பாடாக இருக்கலாம், ஆணாதிக்கமாக இருக்கலாம், சாதியமாக இருக்கலாம், பார்ப்பனீயமாக இருக்கலாம், எதுவும் இவர்களின் அறிவிலித்தனத்துக்கு ஏற்ப, அந்தக் கோட்பாடுகளும் உள்ளடக்கத்தில் ஒழுக்கக் கேடாகவே உள்ளது. மாறாக சூதால், சூழ்ச்சியால், நேர்மையற்ற வழிகளால், குறுக்கு புத்தியால், அவதூறை அள்ளித் தெளிப்பதால், தமது சமூக ஓழுக்கக்கேடான அமைப்பையும், அது சார்ந்த கோட்பாட்டையும் பாதுகாக்க முடியும் என்று நம்பி இணையத்தில் வலம் வருபவர்கள்.



மூலதனத்தின் எடுபிடிகளாக, பார்ப்பனிய நக்கித்தின்னிகளாக, நுகர்வு கலாச்சாரத்தின் ஓட்டுண்ணிகளாக விதம்விதமாக வலம்வருபவர்கள். யாரும் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்வின் துயரங்களுடன் வாழ்பவர்களாக இருப்பதில்லை. மூன்று வேளைக்கு விதம்விதமாக பாலும் பாயசமுமாக முண்டிவிழுங்கி விட்டு, தின்ற சோர்வை போக்க இணையத்தில் சொறிபவர்கள் இவர்கள்.



மக்கள் நலனை முன்வைக்கும் கோட்பாடுகள் மீதான அறிவோ, அதை விவாதிக்க நேர்மையோ இன்றி குதறுபவர்கள். இது பெரியாரியம், அம்பேத்காரியம் முதல் மார்க்சியம் என எதுவாக இருந்தாலும், மக்கள் நலன் அனைத்தும் தமக்கு எதிரானதாக கருதுபவர்கள். இது தான் இவர்களின் அரசியல் அடிப்படை. இவர்களின் ஜனநாயகம் என்றாலும், மனிதாபிமானம் என்றாலும் இதற்குள் தான் அனைத்தும் அடங்கும்.



இந்த வகையில் பாராளுமன்ற சாக்கடை மார்க்சியம் பேசும் சந்திப்பு முதல் பா.ஜ.க பார்ப்பனியத்தை பேசும் நிலகண்டம், ஆர்.எஸ்.எஸ் சாதிய பார்ப்பனியத்தை பேசும் டோண்டு வரை அடங்கும். அனைத்து வேடங்களும் எப்படி மக்களை சுரண்டுவது, அவர்களை பிளந்து அடக்கியாள்வது என்ற உள்ளடக்கத்தில் தத்தம் வழிகளில் கூச்சலிடுகின்றனர்.



மனித அவலத்தை அடிப்படையாக கொண்ட இந்த சமூக அமைப்பில், புரையோடிக் கிடக்கும் சாதிய இந்துத்துவ சுரண்டல் அமைப்பை பாதுகாக்க தலைகீழாக நிற்பவர்கள். ஒரு விவாதத்தை அறிவியல் ப+ர்வமாக நடத்த முடியாதவர்கள். நீ உன்னுடைய அப்பனுக்குத் தான் பிறந்தாயா என்று கேட்பது தான், இவர்களின் வழிமுறை. இதற்கு வெளியில் விவாதிக்க துப்பு கிடையாது. சாதாரணமாக இவர்கள் சொறிவது மக்களின் பிரச்சனைகள் மீதான வழிகள் மீதுதான். உண்மையில் இதை விவாதிக்க எந்த தார்மீக நேர்மையும் கிடையாது.



1. நக்சல்பாரிகளின் போராட்ட வழிமுறை தவறு என்றால் அதை கோட்பாட்டு ரீதியாக விவாதிக்க வேண்டும்.



2. சமூகத்தின் பிரச்சனைகளை எப்படி எந்த வழியில் தீர்க்க முடியும் என்று பதிலளிக்க வேண்டும.



3. வன்முறைகள் என்பது மக்களின் புரட்சிக்கு எதிரானது என்றால், அதை தத்துவார்த்த ரீதியாக விளக்க வேண்டும்.



4. தாக்கிவிட்டு பின்வாங்குவது (சந்திப்பு அதை காட்டுக்குள் தப்பி ஒடுவது என்கின்றார்) தவறு என்றால், அதை கோட்பாட்டு ரீதியாக அணுக வேண்டும்.



5. பாராளுமன்ற சாக்கடை மூலம் மக்கள் பிரச்சனையை தீர்க்கும் புரட்சியைக் கொண்டு வரமுடியும் என்றால், அதை எப்படி எந்த வகையில் என்று விவாதியுங்கள். அதை விடுத்து லெனின் கோட்பாட்டை வெட்டியெடுத்து, மூலதன சாக்கடைகளில் மூழ்கி எழும் பன்றிகளுக்கு கோமணமாக கட்டிவிடுவது விவாதமல்ல.



6. சாதிய இந்துத்துவத்தை அதன் சாரமாக உள்ள பார்ப்பனீயத்தை எப்படி ஒழிப்பது என்று கோட்பாட்டு ரீதியாக, அதன் நடைமுறை சார்ந்த வழிகளில் விவாதிக்கவும் நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.



இப்படி ஒவ்வொரு பிரச்சனை மீதும் அறிவியல் பூர்வமாக விவாதிக்க துப்பில்லை. மாறாக இணையத்தில் புலம்புலது , சேற்றை அள்ளி வீசுவது மூலம் தமது வர்க்க குரோதத்தை சொறிந்து காட்டுகின்றனர்.



சமூகத்தின் எதிரிகள் மக்களின் முன் தெளிவானவர்கள். பார்ப்பனியம், ரவுடிஸ்ம் முதல் டாடாயிஸ்ம் வரை அதன் மொத்த முகமும் தெளிவானது. இங்கு இதை எதிர்கொள்ளும் அனுபவம் சார்ந்த நடைமுறை, மக்களை மண்டியிட வைப்பதில்லை. மக்களின் எதிரி, எதிரிதான்.



இணையத்தில் மக்களின் எதிரியை எதிர்கொள்வது என்பது, அவர்களின் சொறிவுக்கு பதிலளிப்பது என்பது தவறானது. அது நேரத்தையும் குறிக்கோளையும் முடக்கும். மாறாக அதன் கோட்பாட்டையும், அதன் சாரத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இவை தனிப்பதிவுகளாக, கட்டுரைகளாக அமைய வேண்டும். பரந்துபட்ட வாசகர்கள் முதல் எழுதுபவர்களை அடிப்படையாக கொண்டே இவை செய்யப்பட வேண்டும்.



அவர்கள் சொறிந்து சமூக சாரத்தை உறிஞ்சி விடுவதன் மூலம், சமூக அறியாமையை புகுத்துவதே அவர்களின் நோக்கமாகவுள்ளது. ஒன்றை புதிதாக தெரிந்து கொள்வது, கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, ஏன் விவாதிப்பது கூட, அவர்களின் நோக்கமல்ல. இந்த மாதிரியான மனித விரோத ஜென்மங்களுக்கு பதில் சொல்வது, கருத்துச் சுதந்திரம் வழங்குவது அர்த்தமற்றது. இந்த மாதிரியான சமூக விரோதிகள், எப்படி சமூக விரோதிகளாக இருக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்தி, சமூக பொதுத் தளத்தில் பேசவேண்டும்.



மக்களின் அன்றாட வாழ்வியல் உரிமைகளை, எப்படி எந்தத்தளத்தில் மறுதலிக்கின்றனர் என்பதை பொது தளத்தில் தெளிவுபடுத்த வேண்டும். இவர்கள் உரிமை என்று கூச்சல் போடுவதை, எப்படி இவர்களே சமூக தளத்தில் மறுத்து நிற்கின்றனர் என்ற உண்மையை விளக்குவதன் மூலம், போலியான பகட்டுத்தனமான அருவருக்கத்தக்க மூஞ்சையை பொதுத்தளத்தில் தனிமைப்படுத்த வேண்டும். நிஜ உலகில் ஒரு பாhப்பனியம், ரவுடிஸ்சம் முதல் டாடாயிஸ்ம் வரையிலான சமூக விரோதிகள், மக்களின் உரிமைக்காக விவாதிப்பதில்லை. அதே போல் இந்த பொறுக்கிகளுடன் மக்களும் விவாதிப்பதில்லை. இது போல் இணைய பொது தளத்திலும் அம்பலப்படுத்தி, எதிரியை தனிமைப்படுத்துவது அவசியமானது.



Saturday, March 17, 2007

காஷ்மீர்:இந்திய இராணுவத்தின் கொலைக்களம்!

காஷ்மீர்:

இந்திய இராணுவத்தின் கொலைக்களம்!


""ஜம்முகாசுமீர் போலீசு சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையும், மத்திய ரிசர்வ் போலீசு படையும் இணைந்து பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனைச் சுட்டுக் கொன்றதோடு, அத்தீவிரவாதியிடமிருந்து ஆயுதமொன்றையும் கைப்பற்றினர்'' இப்படியொரு முதல் தகவல் அறிக்கை டிச.9, 2006 அன்று, ஜம்முகாசுமீர் மாநிலத்தில் உள்ள கந்தேர்பால் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கையே, மறுநாள் பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளிவந்தது.


இந்தச் சம்பவம் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, இந்த "மோதல் கொலை'யின் பின்னே உள்ள உண்மை, அந்தத் "தீவிரவாதி'யின் கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையாலும், துணை இராணுவப் படையாலும் சுட்டுக் கொல்லப்பட்டவர் பாக். தீவிரவாதி இல்லை என்பதும்; அவர், ஜம்முகாசுமீர் மாநிலத்தில் உள்ள லர்னூ கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் பத்தர் என்ற தச்சுத் தொழிலாளி என்பதும் தற்பொழுது அம்பலமாகியிருப்பதோடு, இப்போலி மோதல் கொலை காசுமீர் பள்ளத் தாக்கில் பெரும் போராட்டப் புயலையே உருவாக்கி விட்டது.


அப்துல் ரஹ்மான் பத்தர், தனது நண்பனும், சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையில் தலைமைக் காவலராக வேலை பார்த்துவரும் ஃபரூக் அகமது பத்தரிடம், காசுமீர் மாநில போலீசு துறையில் தனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தருவதற்காக, 75,000/ ரூபாய் இலஞ்சம் கொடுத்திருந்தார். நாட்கள் நகர்ந்ததேயொழிய, அப்துல் ரஹ்மான் பத்தருக்கு போலீசு துறையில் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அப்துல் ரஹ்மான் பத்தர், தான் இலஞ்சமாகக் கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி போலீசுக்காரன் ஃபரூக் அகமதுவிடம் கேட்கத் தொடங்கினார். இதனையடுத்து, ஃபரூக் அகமது, தன்னை டிச.8, 2006 அன்று சிறீநகரில் வந்து சந்திக்கும்படி அகமது ரஹ்மானுக்குத் தகவல் கொடுக்க, அவரும் ஃபரூக் அகமதுவைச் சந்திக்கக் கிளம்பிச் சென்றார். அந்தப் பயணமே, அப்துல் ரஹ்மான் பத்தரின் இறுதிப் பயணமாகி விட்டது.


சிறீநகருக்குக் கிளம்பிச் சென்ற அப்துல் ரஹ்மான் பத்தர் ஆறு நாட்கள் கழிந்த பிறகும் வீடு திரும்பாததையடுத்து, அவரது உறவினர்கள் சிறீநகர் தெற்கு மண்டல போலீசு கண்காணிப்பாளரிடம் புகார் செய்தனர். அப்துல் ரஹ்மான் பத்தர் காணாமல் போனது பற்றிய விசாரணை ஒரு பெரும் பூதத்தைக் கிளப்பிவிடப் போவதை அறியாமலேயே, போலீசாரும் விசாரணையை நடத்தினர்.


அப்துல் ரஹ்மானின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபொழுது, அது செயல்படாமல் முடங்கிப் போயிருப்பது தெரிய வந்தது. எனினும், பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர், அப்துல் ரஹ்மானின் செல்போன் எண் முடங்கிப் போய்விட்ட பிறகும், அவரது செல்போன், வேறொரு எண்ணில் இயங்கி வருவதைக் கண்டுபிடித்து, போலீசுக்குத் தகவல் கொடுத்தார். அப்துல் ரஹ்மானின் செல்போனை வைத்திருந்த அப்துல் ரஷீத் வாகே என்பவரை போலீசார் விசாரித்தபொழுது, அவர், தான் அந்த செல்போனை, கந்தேர்பால் நகரில் தீவிரவாத எதிர்ப்பு போலீசு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் ஃபரூக் அகமது குட்டுவிடமிருந்து வாங்கியதாக கூறினார். தீவிரவாத எதிர்ப்பு போலீசு உதவி ஆய்வாளர் குட்டு விசாரிக்கப்பட்ட பொழுது, பூதம் வெளியே வந்தது.


""அப்துல் ரஹ்மான் பத்தர், ஃபரூக் அகமது பத்தர் கூறியபடி, டிச.8, 2006 அன்று ஃபரூக்கைப் பார்க்க சிறீநகருக்கு வந்து, ஃபரூக்கின் வீட்டில் தங்கியிருந்ததாகவும்; அன்று மதியம் தனது தலைமையில் ஒரு போலீசு படை

ஃபரூக்கின் வீட்டிற்குச் சென்று, அப்துல் ரஹ்மான் பத்தரை அங்கிருந்து கந்தேர்பாலுக்குக் கடத்திச் சென்று மறுநாள் சுட்டுக் கொன்றுவிட்டு, கையோடு சடலத்தைப் புதைத்து விட்டதாகவும்; அதன்பிறகு பாக். தீவிரவாதியைச் சுட்டுக் கொன்றதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும்'' தீவிரவாத எதிர்ப்பு உதவி ஆய்வாளர் ஃபரூக் அகமது குட்டு, போலீசிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.


இலஞ்சப் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காக, அப்துல் ரஹ்மான் பத்தர் சுட்டுக் கொல்லப்படவில்லை. காசுமீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக இறக்கி விடப்பட்டிருக்கும் இராணுவம் துணை இராணுவப் படைகள் சிறப்பு அதிரடிப் படைகள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டு, அப்பாவிகளை இரகசியமாகக் கடத்திக் கொண்டு போய் போலி மோதலில் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை பாக். தீவிரவாதிகள் என்றோ, அடையாளம் தெரியாத தீவிரவாதி என்றோ முத்திரை குத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டு, இந்தக் கொலைக்கு கிடைக்கும் பரிசுப் பணத்தையும், பதவி உயர்வையும் பங்கு போட்டுக் கொள்ளும் கொலை திட்டத்தை வெகு காலமாகவே நடத்தி வருகின்றன. அப்துல் ரஹ்மான் பத்தரைப் போலி மோதலில் சுட்டுக் கொன்றதன் மூலம், சிறப்பு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த அரசு பயங்கரவாதிகள் பங்கு போட்டுக் கொண்ட பரிசுத் தொகை ரூ. 1,30,000/


ஒவ்வொரு மாதமும் இத்தனை தீவிரவாதிகளை "மோதலில்' சுட்டுக் கொன்றிருக்கிறோம் எனக் கணக்குக் காட்டுவதற்காகவே, இராணுவமும் போலீசும் அப்பாவி முசுலீம்களை போலி மோதலில் சுட்டுக் கொல்வதை சர்வ சாதாரணமாக நடத்தி வருகின்றன. போலீசாரால் புதைக்கப்பட்டு, இப்பொழுது மறு பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டி எடுக்கப்படும் "தீவிரவாதிகளின்' பிணங்கள் இந்த உண்மையை மீண்டும் நாறடித்து விட்டன.


· 13ஆவது தேசிய துப்பாக்கிப் படை பிரிவைச் சேர்ந்த சிப்பாய்களும், போலீசாரும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்இமுகம்மது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜாஹித் அலி என்ற பாக். பயங்கரவாதி இறந்து போனதாக அக்.5, 2006 அன்று சும்பல் போலீசு நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. "மோதலில்' கொல்லப்பட்ட அந்த பாகிஸ்தான் பயங்கரவாதி, தோடா மாவட்டத்தில் உள்ள பனிஹல் கிராமத்தைச் சேர்ந்த ஷெளகத் கான் என்பது தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது.


· 5ஆவது தேசிய துப்பாக்கி படைப்பிரிவு சிப்பாய்களும், போலீசும் இணைந்து அடையாளம் தெரியாத தீவிரவாதியைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்; அந்தத் தீவிரவாதியிடமிருந்து ஒரு ""ஏ.கே.'' இரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் வெடி மருந்து பொருட்களைக் கைப்பற்றியதாகவும் பிப்.17, 2006 அன்று கந்தேர்பால் போலீசு நிலையத்தில் முதல் தகவல் பதிவாகி இருக்கிறது.


அடையாளம் தெரியாத அந்தத் தீவிரவாதி சிறீநகர் தெருக்களில் நறுமணத் திரவியங்களை விற்கும் நஸிர் அகமது தேகா என்ற நடைபாதை வியாபாரி என்றும்; அவர் கோகேர்நாக் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தற்பொழுது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவர் நறுமணத் திரவியங்களைத் தெருத்தெருவாக எடுத்துச் சென்று விற்பதற்காகப் பயன்படுத்தி வந்த பெட்டி, துணை ஆய்வாளர் ஃபரூக் அகமது குட்டுவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.


· மார்ச் 14, 2006 அன்று 24ஆவது தேசிய துப்பாக்கிப் படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அடையாளம் தீவிரவாதி, துணி வியாபாரியான குலாம் நபி வானி என்பதும்; மார்ச் 8, 2006 அன்று 24ஆவது தேசிய துப்பாக்கிப் படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத தீவிரவாதி, ஜம்முகாசுமீர் மாநில அரசில் கடைநிலை ஊழியர் அலி முகம்மது பத்தர் என்பதும் தற்பொழுது நிரூபணமாகியிருக்கிறது.


···


""போலி மோதல் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; ஜம்முகாசுமீர் மாநில போலீசு துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைகள் அதிரடிப் படையை முழுமையாகக் கலைக்க வேண்டும்; ஜம்மு காசுமீரில் இருந்து இராணுவமும் துணை இராணுவமும் வெளியேற வேண்டும்'' எனப் போராடிக் கொண்டிருக்கும் அம்மாநில மக்களின் ஆத்திரத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, இந்த ஐந்து போலி மோதல் கொலைகள் பற்றி நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது, காங். கூட்டணி ஆட்சி. சிறப்பு நடவடிக்கைகள் அதிரடிப் படையைச் சேர்ந்த முதுநிலை போலீசு கண்காணிப்பாளர், துணை போலீசு கண்காணிப்பாளர் உள்ளிட்டு ஐந்து காக்கிச் சட்டை கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைகள் பற்றி இராணுவத்திற்குள் விசாரணை நடத்தப்படும் என்று இராணுவ அமைச்சரும், இராணுவ அதிகாரிகளும் அறிவித்துள்ளனர். அரசாங்கம் இப்படி முண்டா தட்டுவதை வைத்துக் கொண்டு அரச பயங்கரவாதக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என நம்பிவிட முடியுமா?


பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள தெலினா என்ற ஊரைச் சேர்ந்த மன்சூர் அகமது மிர், செப்.7, 2003 அன்று, தேசிய துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த கேப்டன் ஷர்மாவால், அவரது வீட்டில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு மன்சூர் அகமது மிர் ""காணாமல்'' போய்விட்டார். மூன்று ஆண்டுகள் கழித்து, தெலினாவில் ஒரு மருத்துவமனை கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட பொழுது, அந்த இடத்தில் மிர் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. மிர்ரின் படுகொலைக்கு நீதி கேட்டு காசுமீர் மக்கள் 15 நாட்கள் போராடிய பிறகு, காங். கூட்டணி ஆட்சி நீதிமன்ற விசாரணைக் கமிசனை அமைத்தது. இந்த கமிசன் அமைக்கப்பட்டு எட்டு மாதங்கள் கழிந்து விட்டாலும், விசாரணை ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை.


""இராணுவம் விசாரணை நடத்த ஒத்துழைக்க மறுக்கிறது; குறைந்த பட்சம், கேப்டன் ஷர்மா இப்பொழுது எங்கு இருக்கிறார் என்ற தகவலைக் கூடச் சொல்ல மறுக்கிறது'' என ஜம்மு காசுமீர் மாநில தலைமை போலீசு அதிகாரியே குற்றஞ் சுமத்தியிருக்கிறார்.


2002ஆம் ஆண்டு சிட்டிசிங்புரா என்ற கிராமத்தில், ஐந்து அப்பாவி முசுலீம்களை, பாக். பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இந்திய இராணுவம் கொன்றொழித்தது. இந்தப் படுகொலை அம்பலமாகி மக்கள் போராடிய பிறகு, மையப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இராணுவத்தின் இழுத்தடிப்பால், சி.பி.ஐ. விசாரணையை முடிக்கவே நான்கு ஆண்டுகளாகி விட்டது. கடந்த ஆண்டு மே மாதம், இப்படுகொலை தொடர்பாக, சி.பி.ஐ. ஐந்து இராணுவ அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்துவிட்டாலும், கடந்த ஒரு ஆண்டில், அந்த ஐந்து அதிகாரிகள் ஒருமுறை கூட நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்கவில்லை.


ஜம்முகாசுமீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் போலி மோதல்களை நடத்தியிருக்கும் அரசு பயங்கரவாதிகளை விசாரித்துத் தண்டிப்பதில், இந்திய ஆளுங் கும்பல் காட்டி வரும் "அக்கறைக்கு' இவை போல ஆயிரத்தெட்டு வழக்குகளை உதாரணமாக எடுத்துக் காட்டலாம். அம்மாநில மனித உரிமை கமிசனின் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி அலி முகம்மது மிர், ""இந்த கமிசன் சர்வதேச சமூகத்தை முட்டாளாக்குவதற்கான கண்துடைப்பு நடவடிக்கை தவிர, வேறொன்றுமில்லை'' எனக் குறிப்பிட்டுப் பதவி விலகியதை, மனித உரிமை மீறல் பற்றிய ஆளும் கும்பல்களின் பசப்பல்களுக்கு முத்தாய்ப்பாகக் குறிப்பிடலாம்.


தற்பொழுது அம்பலமாகியுள்ள இந்த ஐந்து படுகொலை நடவடிக்கைகளிலும், தேசிய துப்பாக்கிப் படையைச் சேர்ந்த மூன்று படைப் பிரிவுகள் பங்கெடுத்துக் கொண்டிருப்பது நிரூபணமாகியிருக்கிறது. இப்படிப்பட்ட போலி மோதல் கொலைகளை, ""தாளிப்பு நடவடிக்கை'' எனப் பெயரிட்டு அழைக்கிறது, இராணுவம். ""1989ஆம் தொடங்கி இன்று வரை, ஏறத்தாழ 10,000 அப்பாவிகள் பாதுகாப்பு படைகளால் இழுத்துச் செல்லப்பட்ட பின் காணாமல் போய்விட்டதாக''க் குறிப்பிடுகிறது. ""காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பு.'' காசுமீரில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு 60 பேர் மட்டுமே காணாமல் போயிருப்பதாகக் கூறி வந்த காங்.கூட்டணி ஆட்சி, இப்பொழுது 1,017 அப்பாவிகள் காணாமல் போய் விட்டதாகக் கணக்குக் காட்டுகிறது.


ஜம்முகாசுமீர் போலீசு துறையைச் சேர்ந்த ""சிறப்பு நடவடிக்கைகள் குழு'' என்ற அதிரடி படைப் பிரிவு, இரகசிய கொலைக் குழுவாகவே செயல்பட்டு வருகிறது. இராணுவமும், துணை இராணுவமும் ஆள் காட்டி வேலை செய்வதற்காகவே சரணடைந்த போராளிகளைப் பயன்படுத்தி வருகின்றன. தீவிரவாதி என முத்திரை குத்திவிடுவோம் என மிரட்டியே அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதை, ஒரு தொழிலாகவே இராணுவமும், துணை இராணுவமும் நடத்தி வருகின்றன. ஜம்முகாசுமீர் மாநிலத்தில் மட்டுமின்றி, பனி படர்ந்த சியாச்சின் மலைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினர் கூட, பரிசு பணத்திற்காகவும், பதவி உயர்வுக்காகவும் போலி மோதல் நடவடிக்கைகளை நடத்தி வருவதும் ஏற்கெனவே அம்பலமாகி நாறியிருக்கிறது.

···

""அடையாளம் தெரியாத தீவிரவாதி'' என பாதுகாப்பு படைகள் முத்திரை குத்துகின்றனவே, அதைவிட அயோக்கியத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. ஒருவரின் அடையாளமே தெரியாத பொழுது, அவரை எப்படி தீவிரவாதியாக முத்திரை குத்த முடியும்? இந்தக் கேள்வியை எழுப்பும் பொழுது, இராணுவம் போலீசின் கட்டுக்கதையும், மோதல் நாடகமும் உடனடியாக அம்பலத்துக்கு வந்து விடும். ஆனால், பத்திரிகைகள் தொடங்கி நீதிமான்கள் வரை ஒருவரும் இந்தச் சாதாரண கேள்வியை எழுப்ப மறுக்கிறார்கள்.


மாறாக, ""பாதுகாப்புப் படைகள் கடுமையான சூழ்நிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன; இந்தக் கொலைகளுக்காக பாதுகாப்புப் படையினரை விசாரித்தால் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் அவர்களின் முனைப்பு மழுங்கிவிடும்'' என ""சோ'' முதலான பாசிஸ்டுகள் இராணுவத்தின் இந்தக் கொலைவெறியைப் பொது மக்களிடம் நியாயப்படுத்துகிறார்கள். அரசாங்கமோ, பரிசுப் பணம், பதவி உயர்வு என்ற தீனியைப் போட்டு, இந்தக் கொலைவெறியை வளர்த்து விடுகிறது. மேலும், இப்படிப்பட்ட கொலைகளில் ஈடுபடும் இராணுவத்தினரை விசாரணை தண்டனையில் இருந்து பாதுகாக்க ""ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை'' நடைமுறைப்படுத்தி வருகிறது.

சட்டபூர்வமாகவே கிடைக்கும் இந்தப் பாதுகாப்புதான், ஜம்முகாசுமீர் மாநிலத்தில் யாரையும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் குருவி சுடுவது போல சுட்டுக் கொல்லலாம் என்ற பாசிசத் திமிரை இராணுவத்திற்கும் போலீசிற்கும் வழங்கியிருக்கிறது.


""ஜம்முகாசுமீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படைகள் நடத்திவரும் அட்டூழியங்களை, பிற மாநில மக்கள் ஏன் கண்டிப்பதில்லை?'' என்ற கேள்வியை முன்வைக்கிறார், பெர்வேஸ் இம்ரோஸ் என்ற வழக்கறிஞர். நேர்மையான மனசாட்சி கொண்ட ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி இது. ஆனால், இதற்குப் பதில் சொல்ல வேண்டிய நடுத்தர வர்க்கமோ குருட்டு தேசபக்தியில் மூழ்கிப் போய் கிடக்கிறது. கூலிக்குக் கொலை செய்யும் கிரிமினல் மாஃபியா கும்பலைப் போலச் சீரழிந்துவிட்ட இந்திய இராணுவத்தை, இந்த குருட்டு தேசபக்திதான் புனிதப்படுத்தித் தண்டனையில் இருந்து பாதுகாக்கிறது. ஜம்முகாசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை, பயங்கரவாதம் என நாக்கூசாமல் அவதூறு செய்கிறது.

· செல்வம்

Thursday, March 15, 2007

அரசியல் அமைப்பு முழுவதும் புரையோடிப் போனது!


இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் பற்றி பி.பி.சி யின் ஒலி பரப்பு




அரசியல் அமைப்பு முழுவதும் புரையோடிப் போனது!



டுத்தர வர்க்கத்தினர், எப்போதுமே மற்ற வர்க்கத்தினரை விட அறிவாளிகளாகத் தங்களை எண்ணி சுயதிருப்தியில் மிதக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் அற்பவாதிகள். அவர்கள் அறிவோ மிகவும் மேலோட்டமானதுதான்; ஆழமானதல்ல. சமீபத்தில் வெளியான சில வழக்குமன்றத் தீர்ப்புகளைக் கண்டதும், தமது அரசியலற்ற பார்வையுடன் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். ""பார்த்தீர்களா, எல்லாம் அரசியல்வாதிகளால்தான் நாடே கெட்டுப் போகிறது. இதை நீதிமன்றம் மீண்டும் நிரூபித்து விட்டது'' என்று கூச்சல் போடுகின்றனர்.





பிரியதர்சினி மட்டூ, மற்றும் ஜெசிகாலால் கொலை வழக்குகளில் அரசியல் தலையீடு காரணமாக குற்றவாளிகள் முதலில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் செய்தி ஊடகம் மற்றும் சமூக அமைப்புகளின் முயற்சிகள் காரணமாக நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். இவ்வளவு காலமும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொலைக்குற்ற வழக்கிலிருந்த தப்பிவந்த மத்திய நிலக்கரி அமைச்சரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபு சோரன், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத்சிங் சித்து ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை பெற்றுள்ளார்.





""மேற்கண்ட வழக்குகளில் தாமதமாகத் தீர்ப்புகள் வந்தாலும் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது. நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை, உறுதியாகி விட்டது'' என்கிறார்கள் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள். ""இவை அரசியல்வாதிகள் மீது நீதித்துறை அடைந்த வெற்றி'' என்கின்றனர். இதற்குத் துணையாக இன்னொரு சான்றையும் எடுத்துக் காட்டுகிறார்கள். ""ஓட்டுவங்கியை நோக்கமாகக் கொண்டு இடஒதுக்கீடு அதிகரிப்பு, இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் மேற்கொள்வதை எதிர்த்து நீதிமன்றங்கள் தீர்ப்புகள் கூறுகின்றன. நாடாளுமன்ற முடிவுகளை நீதிமன்றப் பரிசீலனைக்குட்படுத்துவதைத் தடுக்கும் ஒன்பதாவது பிரிவின் கீழ் சட்டங்கள் இயற்றுவதை உச்சநீதி மன்றம் எதிர்த்துள்ளது. ஆகவே, அரசியல்வாதிகள் ரொம்பவும் ஆட்டம் போட முடியாதவாறு மூக்கணாங்கயிறு போடுகிறது, உச்சநீதி மன்றம்'' என்று நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் குதூகலிக்கின்றனர்.





இவர்கள் படித்த அறிவுஜீவிகள்தாம்; ஆனால், இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. படிக்காத பாமரர்களைப் போன்றே இந்த விசயத்தில் சிந்திக்கிறார்கள். உள்ளூராட்சி முதல் நாடாளுமன்றம் வரை நடக்கும் பல்வேறு வகைத் தேர்தல்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மட்டும்தான் அரசியல்; அவற்றில் பங்கேற்கும் கட்சிகள், அமைப்புகள் தாம் அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள்; அவற்றின் பிரமுகர்கள், தலைவர்கள்தாம் அரசியல்வாதிகள் என்று நினைக்கிறார்கள்.





அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், சிறைச்சாலை, நீதிமன்றம் மற்றும் இவை சார்ந்த அனைத்துத் துணை நிறுவனங்களும் அரசு அமைப்புதான். இப்போது புதிதாக ""அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்'' என்ற பெயரில் அவதாரம் எடுத்துள்ள அமைப்புகளும் உண்மையில் அரசியல் அமைப்புகள்தாம். இந்த நிறுவனங்கள் அமைப்புகள் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களும், நடவடிக்கைகளும் அரசியல்தான். இவற்றில் பங்கேற்கும் எல்லா நபர்களும் அரசியல்வாதிகள்தாம். ஆனால், இவையெல்லாம் நிர்வாக அமைப்புகள், நேர்மையாகவும், தூய்மையாகவும் இயங்கக் கூடியனவென்றும், மக்களின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அதாவது மற்ற யாரும் இவற்றின் மீது குறைகூறக் கூடாது என்றும், தேர்தல் அரசியல்வாதிகள்தாம் கேடானவர்கள்; எல்லாவிதமான அரசியல் தவறுகளுக்கும் காரணமானவர்கள் என்றும் படித்த அறிவுஜீவிகள் கருதுகின்றனர். இந்த வாதத்துக்கு ஆதாரமாக சிபு சோரன், சித்து போன்றவர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டதைக் காட்டுகிறார்கள்.





ஆனால், உண்மையோ வேறுவிதமாக உள்ளது. இராணுவ அமைப்புதான் நாட்டிலேயே மிகப்பெரிய மக்கள் விரோத ஊழல் அமைப்பு; நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் எல்லாம் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் பாதுகாப்பான சொர்க்க புரிகளாக உள்ளன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் போலீசு அமைப்பான சி.பி.ஐ.யும், உச்சநீதி மன்றமும் நாடறிந்த குற்றவாளிகளுக்குத் துணை செய்யும் அமைப்புகளாகவே உள்ளன. இதற்கான ஆதாரங்களை வேறு எங்கும் தேட வேண்டியதில்லை. சிபு சோரன், சித்து விவகாரங்களிலேயே புதைந்துள்ள உண்மை இதுதான்.





சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த குற்றம் நடந்தது 1994ஆம் ஆண்டு. நவஜோத் சிங் சித்துவுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்குவதற்குக் காரணமாக இருந்த குற்றம் நடந்தது 1988ஆம் ஆண்டு. இதற்கிடையே சிபு 12 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், சில ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். சித்துவோ, இந்தியக் கிரிக்கெட் அணி வீரராகவும், வானொளியில் விமர்சகராகவும், பின்னர் எம்.பி. ஆக சில ஆண்டுகளும் இருந்து கோடிகோடியாக சம்பாதித்து சுதந்திரமாக வாழ்ந்துள்ளார். ""தாமதமாக வழங்கப்படும் நீதி, உண்மையில நீதி மறுக்கப்படுவதாகும்'' என்று படித்த அறிவுஜீவிகள் அடிக்கடி பிதற்றும் வசனம் இந்த வழக்குகளுக்குப் பொருந்தாதா? போலீசும் நீதித்துறையும் தானே இதற்குக் காரணம்! ""அரசியல்'' தலையீடுதான் தாமதத்திற்குக் காரணமென்றால் முதுகெலும்பில்லாத போலீசுக்கும், நீதித்துறைக்கும் படித்த அறிவுஜீவிகள் ஏன் வக்காலத்து வாங்கவேண்டும்?





1994ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.யாக இருந்த சிபுசோரனும் மற்றும் நான்கு பேரும் சேர்ந்து அவரது தனிச்செயலாளராக இருந்த சசிநாத் ஜா என்பவரை புதுதில்லியிலிருந்து கடத்தி ராஞ்சி நகரின் ஒரு குடியிருப்புக்குக் கொண்டுபோய் கொன்றுவிட்டனர். கொல்லப்பட்டவரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரிலும் அவரது தாயார் தொடுத்த வழக்கில் தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின்படியும், வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குப் போனது. நான்காண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1998இல் குற்றப் பத்திரிக்கை தாக்கலாகியது; கொலை நடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2006 டிசம்பரில் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது, சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றம்.





இந்த விவகாரத்தில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கொலைக்கான காரணம், பின்னனி என்னவென்பதுதான். 1993ஆம் ஆண்டு, நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரசின் சிறுபான்மை அரசுக்கு எதிராக வலதுசாரி பா.ஜ.க. மற்றும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரிகள் ஆகியோர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அரசு நிச்சயம் கவிழ்ந்துவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால், பல கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்டு சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபு, மகத்தோ உட்பட ஐந்து எம்.பி.க்கள் நரசிம்மராவ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. காங்கிரசுக்கும் ஜா.மு.மோ.வுக்கும் இடையிலான இரகசிய பேரம் பற்றிய உண்மைகளை அறிந்திருந்த சிபு சோரனின் தனிச் செயலர் சசிநாத் ஜா, இலஞ்சத் தொகையில் பங்கு கேட்டிருக்கிறார். அப்போது தான் இலஞ்சம் வாங்கியது எங்கே அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சிய சிபுசோரன் தனது தனிச் செயலாளரை தில்லியிலிருந்து கடத்திக் கொண்டு போய் ராஞ்சியில் வைத்துக் கொன்றுவிட்டார்.





இந்தக் கொலைக்கு மூலகாரணமாக இருந்த இலஞ்ச விவகாரம் பின்னர் அம்பலமாகியது. நரசிம்மராவின் ஆட்சிக் காலமும் முடிந்துவிட்ட பிறகு நரசிம்மராவ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜித் சிங் மீது கிரிமினல் இலஞ்ச ஊழல் வழக்குப் போட்டது, பின்னர்வந்த ஐக்கிய முன்னணி அரசு. சி.பி.ஐ. நடத்திய இந்த வழக்கில், இலஞ்சம் வாங்கியதை மறுக்க முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரிமை மற்றும் வாக்குரிமை மீது கிரிமினல் வழக்குப் போடமுடியாது என்று வாதிட்டனர். சி.பி.ஐ. நீதிமன்றமும், தில்லி உயர்நீதி மன்றமும் இந்த வாதத்தை நிராகரித்தன.





ஆனால், நரசிம்மராவுக்கு எதிராக சி.பி.ஐ. நடத்திய வழக்கில் இலஞ்சம் வாங்கியவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அங்கு பேசியதற்கும் ஓட்டளித்ததற்கும் வழக்குப் போட முடியாது; அது அவரது சிறப்புரிமை என்றும் இலஞ்சம் கொடுத்தவர் மீது மட்டும் வழக்குப் போடலம் என்றும் உச்சநீதி மன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சிபு சோரன் மற்றும் அவரது கட்சி எம்.பி.க்கள் மீதான வழக்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், தனது தீர்ப்பின்படியேகூட, இலஞ்சம் கொடுத்த நரசிம்மராவின் மீது எந்த நடவடிக்கையும், தண்டனையும் விதிக்கவில்லை. மேலும் பல இலஞ்ச ஊழல் தில்லுமுல்லு மோசடி வழக்குகளில் இருந்து நரசிம்ம ராவை விடுதலை செய்தது.





இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் மேலும் கோமாளித்தனமான தீர்ப்பு வழங்கியது. இலஞ்சம் பெற்றவர்கள் குற்றவாளிகள் அல்லவென்று விடுவிக்க வகை செய்த உச்சநீதி மன்றம், இலஞ்சம் வாங்கியதற்காக அஜித் சிங் மீது குற்ற விசாரணை நடத்தலாம் என்று அனுமதித்தது. இலஞ்சம் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதில் இருந்து அவர் விலகி இருந்தார் என்று காரணம் கூறியது, உச்சநீதி மன்றம்; அவர் ஓட்டுப் போடவில்லை; ஆதலால் வாங்கிய இலஞ்சம் அவரது ஓட்டைப் பாதிக்கவில்லை என்று வினோதமான விளக்கம் வேறு கொடுக்கப்பட்டது. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி அஜீத்சிங் கோரியதையும் உச்சநீதி மன்றம் நிராகரித்தது. இதே வாதத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும் அஜித் சிங் மீதான குற்றவிசாரணையிலிருந்து அவரை விடுவிக்க மறுத்துவிட்டது.





ஆனால், உச்சநீதி மன்றத்தின் அடிமுட்டாள்தனத்தை, அறிவுநேர்மையற்ற செயலை அஜித் சிங் விவகாரம் மேலும் நிரூபித்து விட்டது. அதாவது நரசிம்மராவிடம் இலஞ்சம் வாங்கிய அஜித் சிங் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தபோது உச்சநீதி மன்றம் கூறியதைப்போல வாக்களிக்காமல் இருந்து விடவில்லை. அத்தீர்மானத்தை ஆதரித்து, இலஞ்சம் கொடுத்த நரசிம்மராவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார். இந்த உண்மையைச் சொல்லி தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரியபோதும் உச்சநீதி மன்றம் நிராகரித்து விட்டது. அதாவது இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தப்படி வாக்களித்தவர்கள்மீது குற்றவிசாரணை நடத்த முடியாது; இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தப்படி வாக்களிக்காமலோ எதிர்த்து வாக்களித்தாலோ அவர்மீது குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் சாரம். மொத்தத்தில், இலஞ்சம் கொடுத்தவருக்கு இலஞ்சம் வாங்கியவர் விசுவாசமாக இருக்கவேண்டும்; வேறுவிதமாக நடக்கக் கூடாது என்பது உச்சநீதி மன்றம் போட்டுள்ள புதிய சட்டம்!





நாடாளுமன்ற விவாதங்களில் பயமின்றி அதன் உறுப்பினர்கள் பேசவும், வாக்களிக்கவும் அதற்காக அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடுக்க முடியாது என்று தடைவிதிக்கிறது 105 (2)வது சட்டப் பிரிவு. ஆனால், இதை 1998ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய இத்தீர்ப்பு கையுங்களவுமாகப் பிடிபட்ட இலஞ்ச ஊழல் பேர்வழிகளைத் தப்புவிப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டது, உச்சநீதி மன்றம். அதே உச்சநீதி மன்றம்தான் 2006ஆம் ஆண்டு இறுதியில் வழங்கிய ஒரு தீர்ப்பில் இதையே புரட்டிப் போட்டுப் பேசுகிறது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கியதற்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பதினொரு எம்.பி.க்கள் அதற்கு எதிராக வழக்குப் போட்டனர். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு கேள்வி கேட்ட எம்.பி.க்களைப் பதவி நீக்கம் செய்தது சரிதான் என்று தீர்ப்புக் கூறியது. அதன்பிறகு வேறொரு வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு அப்பால் வைக்கும் சட்டப்பிரிவு ஒன்பதின் கீழ் வைக்குமாறு நிறைவேற்றப்படும் சட்டங்களையும் நீதிமன்றம் விசாரிக்க உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறியுள்ளது.





அப்போது, இலஞ்ச ஊழல் பேர்வழிகளான நரசிம்ம ராவ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குச் சாதகமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு உரிமைகளை வளைத்துத் தீர்ப்புச் சொன்ன உச்சநீதி மன்றம், இப்போது அந்த சிறப்பு உரிமைகளை ஏற்க முடியாது, தலையீடு செய்வோம் என்கிறது. ஏனென்றால் இப்போது, நாடாளுமன்றம் கொண்டு வரும் இடஒதுக்கீடு போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சில்லரை சீர்திருத்தங்களைக் கூட சகித்துக் கொள்ளாது நாடாளுமன்றத்துக்குள்ள சிறப்பு உரிமைகளையும் மறுப்போம் என்கிறது உச்சநீதி மன்றம்.





நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளில் மிகமிகப் பெரும்பான்மையினர் காங்கிரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை (இடது சாரி கூட்டணியும் இதில் அங்கும்) ஆதரிப்பவர்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. மற்றும் அதன் கட்டணி கட்சிகளை ஆதரிப்பவர்கள். நரசிம்மராவ், இந்திரா, ராஜீவ் உட்பட காங்கிரசுத் தலைவர்கள் பலரின் இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளில் உச்சநீதி மன்றம் துணை போயிருக்கின்றது.





சிபு சோரன் அவரது கூட்டாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பெருங்கூச்சல் போடும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கட்சியோ சிபு சோரனுடன் சேர்ந்து இலஞ்சம் வாங்கிய மகத்தோ என்ற ஜா.மு.மோ.வின் இன்னொரு எம்.பி.யை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கியது. அவர் பேரங்கள் படியாமல் ஒரு சில மாதங்களிலேயே பா.ஜ. கட்சியை விட்டு வெளியேறினார். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்று சிபு சோரன் உட்பட எதிர்த்தரப்பினர் விவகாரங்களில் கூச்சல் போட்டு நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் முடக்கி வைக்கும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ""யோக்கியவான்கள்'' நவஜோத் சிங் சித்து விவகாரத்தில் பொது இடத்தில் கார் நிறுத்தும் தகராறில் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கு 1988இல் இருந்து நடந்தபோதும் அவரை எம்.பி. ஆக்கினர். இப்போது கொலைவழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்ற சித்து, பெயருக்குப் பதவி விலகி, உச்சநீதி மன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு பெற்றவுடன், மீண்டும் பா.ஜ.க.வால் எம்.பி. தேர்தலில் நிறுத்தப்படுகிறார்.





பா.ஜ.க. ஆளும் இராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஜெர்மானியப் பெண்ணைக் கற்பழித்துவிட்டான், அதன் கூட்டணி கட்சி ஆளும் ஒரிசா மாநில போலீசு பொது இயக்குநர் (டி.ஜி.பி.) மகன். அதற்காக ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தன் மகனை சொந்த ஜாமீனில் பரோலில் அழைத்து வந்த ஒரிசா டி.ஜி.பி அவனை தலைமறைவாக வைத்துக் கொண்டிருக்கிறார். சுமார் இரண்டு மாதங்களாகியும் டி.ஜி.பி.யையும் பதவி நீக்கம் செய்யாமல், குற்றவாளியையும் பிடிக்காமல் இரு மாநில அரசுகளும் ஆட்டங்காட்டி வருகின்றன. புத்தாண்டு கேளிக்கையில் கலந்து கொண்டு, பெண்களிடம் தகாத முறையில் நடந்த இரண்டு இராணுவ அதிகாரிகளைக் கடந்தமாதம் கைது செய்தது கொல்கத்தா போலீசு. உடனே இராணுவப் படையொன்று போலீசு நிலையத்துக்குள் நுழைந்து சூறையாடி, போலீசுக்காரன்களையும், அடித்து நொறுக்கிவிட்டு குற்றவாளிகளான இராணுவ அதிகாரிகளை மீட்டுச் சென்றது இப்போது மத்திய மாநில அரசுகள் (சி.பி.எம். அரசுதான்) சமரசம் செய்து விவகாரத்தை மூடி மறைக்க எத்தணிக்கின்றன.





இதுவரை பார்த்த விவரங்கள் காட்டுவது என்னவென்றால், தேர்தல் கட்சிகளும், அதன் பிரமுகர்கள் தலைவர்கள் மட்டுமல்ல உச்சநீதி மன்றம் உட்பட நீதிதுறையும் போலீசும், இராணுவமும் மொத்தத்தில் ஒட்டு மொத்த அரசு எந்திரமே செல்லரித்துப் போயிருக்கின்றன. இதில் ""அரசியல்வாதிகளை'' மட்டும் குறைகூறி, ஒட்டு மொத்த அரசு அமைப்பைப் பாதுகாக்க எத்தணிப்பது பச்சையான மோசடியும் பித்தலாட்டமும் ஆகும்.





· மாணிக்கவாசகம்

Wednesday, March 14, 2007

கொலைகார பாபாவை வள்ளலாக்கும் நரித்தனம்

மு.க-சாய்பாபா சந்திப்பு

கொலைகார பாபாவை வள்ளலாக்கும் நரித்தனம்


சென்னைக்கு ஆந்திரமாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் கால்வாயைப் பலப்படுத்த 200 கோடி ரூபாயை வழங்கிய மர்மச் சாமியார் சாய்பாபாவுக்குப் பாராட்டு விழா சென்னையில் இவ்வாண்டு ஜனவரியில் நடந்துள்ளது. இதை முன்னிட்டு சென்னை வந்த சாய்பாபா கோபாலபுரம் சென்று "பகுத்தறிவு'ப் பாரம்பரியத்தில் வந்த கருணாநிதியைச் சந்தித்தார்.



அங்கே, பகுத்தறிவு திராவிடத்துக்குத் திவசம் நடத்திவிட்ட கருணாநிதியின் முன்பாகவே, அவரின் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்து வணங்கினார். இதனை இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் வரவேற்றுள்ளார்.



சாய்பாபா தனது ஆன்மீக சக்தியால் தங்களுக்கு மோதிரம் வரவழைத்துத் தந்தார் என்று துரைமுருகனும், தயாநிதி மாறனும் சாய்பாபாவைப் பாராட்டி நடத்தப்பட்ட கூட்டத்தில் கூறியுள்ளனர். அந்த மோதிரத் தங்கத்துக்கு வரி கட்டப்பட்டுள்ளதா? இல்லை கடத்தல் தங்கமா என்று தெரியவில்லை.



தனது அமைச்சர் ஒருவர் தீக்குழி இறங்கியபோது, அதனைக் காட்டுமிராண்டித்தனம் எனச் சரியாக விமர்சித்த கருணாநிதி, இப்போதோ மவுனம் சாதிக்கிறார்.



""பகுத்தறிவு என்பதே மோசடிதான்'' என்றும், ""பகுத்தறிவால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காரணம் ஜாதகம், ராசி, விதி என எல்லாமே உண்டு'' என்று சொல்கிறார், பெண்ணடிமைத்தனத்தையும் பார்ப்பனீயத்தையும் தமிழ் நாடெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும் ""சோ'' ராமசாமி என்கிற உலக மகா அறிவாளி!



தயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்த மூடத்தனத்தையோ, துரைமுருகன், தயாநிதி மாறனின் "ஆன்மீக அற்புத' உளறல்களையோ கருணாநிதி கண்டிக்காமல் இருந்தது அவரின் கொள்கை சமரசத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் ""சோ'' போன்ற காட்டுமிராண்டிகளும், பகுத்தறிவு என்பதை மோசடி எனச் சொல்லி முற்போக்காளர்கள் அத்தனை பேரையும் அவதூறு செய்ய வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.



உண்மையிலே கருணாநிதி நேர்மையான பகுத்தறிவாளர்தானா? பெரியாரின் இயக்கமும், தாங்களும் இரட்டைகுழல் துப்பாக்கிகள் என்று சொல்லிக் கொண்டே "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்று கொள்கைக் கோவணத்தைக் காற்றில் பறக்கவிட்டவர்கள்தான் கருணாநிதியும், அவரின் வழிகாட்டி அண்ணாதுரையும்.



"பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கமாட்டோம்' என்று வெட்கமின்றிப் பேசிய பாரம்பரியத்தை சேர்ந்த கருணாநிதியோ, தனது மணிவிழாவில் அன்பழகன் முன்னிலையில் தனது துணைவியார் ராஜாத்திக்கு தாலியை இரண்டாம் முறையாகக் கட்டி, ஆயுளைக் கூட்டும் மூடநம்பிக்கை சடங்கை செய்தவர்தான்.



மனைவியார் தயாளு சாயிபாபாவின் காலில் விழுகிறார் என்றால், துணைவியார் ராஜாத்தியோ மயிலை முண்டகக்கன்னி அம்மன் கோவிலில் அதிகாலைப் பனியில் உருகி நிற்கிறார்.



""குங்குமம்'' என்று "மங்களகரமான' பெயரை தன் குடும்பம் நடத்தும் பத்திரிகைக்கு வைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் பத்திரிகை அலுவலகத்தில் ஆயுதபூசை நடத்துவதும், மூடத்தனங்களை பிரச்சாரம் செய்யும் ஆபாச தொலைக்காட்சித் தொடர்களை தன் குடும்ப தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதும்தான் கருணாநிதியின் குடும்பம் செய்யும் பகுத்தறிவுப்பணி!



பராசக்தி போன்ற திரைப்படங்கள் மூலம் போலிச் சாமியார்களின் முகத்திரையை அன்று கிழித்தெறிந்த கருணாநிதி, இன்று மாடிவீட்டு ஏழையாகி தென்னகமெங்கும் வியாபார சாம்ராஜ்யம் கட்டி, மத்தியிலும், மாநிலத்திலும் பதவி ருசியை அனுபவிக்கும்போது அதே போலிச் சாமியார்களை ""ஆண்டவனுக்கே ஒப்பானவர்கள்'' என்றும் புகழ ஆரம்பித்துள்ளார்.



பகுத்தறிவாளர்கள் பலரும் கருணாநிதியின் இச்செயலைக் கண்டிக்கத் தொடங்கியதும் மெல்ல முடியாமலும், விழுங்க முடியாமலும் கருணாநிதி தவித்தபோது, சங்கராச்சாரிக்கு வரவேற்புக் கொடுத்து மார்க்சியத்தை அடகு வைத்த போலி கம்யூனிஸ்டுகளின் ""தீக்கதிர்'' நாளேடு அவரின் செயலை நியாயப்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டது. வேலிக்கு ஓணான் சாட்சி. கருணாநிதிக்கு சி.பி.எம். சாட்சி. போலிகளின் சித்தாந்த குருவாகிய இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, தனது மனைவியுடன் கோவிலுக்குப் போன முற்போக்கு ஜனநாயகத்தை உதாரணம் காட்டி, கருணாநிதி தன் குடும்பத்துடன் ஜனநாயக உறவு வைத்திருப்பதாய்க் கண்டுபிடித்துக் கட்டுரை தீட்டியுள்ளது, அந்நாளேடு. இப்படியெல்லாம் ""தீக்கதிர்'' தனது "பகுத்தறிவை'ப் பறைசாற்றி அரசியல் உணர்வூட்டி வருவதால்தான், சி.பி.எம்.மின் தொண்டர்கள் கொத்துக் கொத்தாய் "மாபெரும் புரட்சிக் கலைஞரின்' கட்சியான தே.மு.தி.க.வில் போய்ச் சேருகின்றனர்.



ஜால்ராவை ஓங்கி ஒலிக்கும் கி.வீரமணியின் ""விடுதலை''யும் ""சாய்பாபா கருணாநிதி வீடு தேடி வந்தது பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி'' எனப் பெரியாரின் பகுத்தறிவையும் பலி கொடுத்தது. உடனே கருணாநிதிக்கு தெம்பு வந்துவிட்டது. ""மரியாதையின் பேரில் பெரியவர்கள் காலில் விழுவது தவறில்லை. என் மனைவி சாய்பாபாவின் காலில் விழுந்ததும் அவ்வாறே'' என்று இந்த மானங்கெட்ட செயலை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். "இனமானப் பேராசிரியர்' கருணாநிதியை விட வயதில் மூத்தவர்தானே! பேராசிரியரின் பிறந்தநாளில் என்றைக்காவது கருணாநிதியோ அல்லது அவரின் குடும்பமோ காலில் விழுந்து வணங்கியது உண்டா என்று கேட்டால், இந்தப் போலி பகுத்தறிவுவாதியிடம் பதில் இருக்காது.



கருணாநிதியின் குடும்பத்தினராலும் துரைமுருகனாலும் நற்சான்றிதழ் வழங்கப்படும் சாய்பாபாவின் யோக்கியதைதான் என்ன?



தந்திரங்கள் பலவற்றைக் கற்றுக் கொண்டு, வாயில் இருந்து லிங்கம் வரவழைப்பது, வெறும் கைகளில் இருந்து மோதிரம், விபூதி வரவழைப்பது போன்றவற்றைச் செய்து, இவற்றை எல்லாம் ஆன்மீக சக்தி என்று மோசடி செய்யும் கோடீசுவர கருப்புப் பணப் பேர்வழிதான் சாய்பாபா. பகுத்தறிவுச் சிந்தனையாளரான டாக்டர் கோவூர் இந்த விளையாட்டுகளை எல்லாம் சாய்பாபா முன்னிலையில் தன்னாலும் செய்து காட்ட முடியும் என்று சவால் விட்டு பாபாவை பொதுமேடைக்கு வருமாறு சவால் விட்டு பல ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. மோசடி பாபா, இந்தச் சவாலுக்கு இன்று வரை முகம் கொடுத்ததில்லை.



பாபா, மோதிரங்கள் போன்றவற்றை எவ்வாறு வரவழைக்கிறார் என்பதை ""ரீவைண்டு'' செய்து பார்த்த அவரின் வீடியோ படங்கள் தெளிவுபடுத்தி விட்டன. மக்கள் பாடகரான கத்தார் கூட ""சிவலிங்கம் வரவழைக்கும் பாபா! திண்ண, பூசணிக்காய் வரவச்சு தாதா!'' என்று தனது பாடலில் கேட்கிறார். பி.பி.சி. ஒளிபரப்பின் தமிழாக்க குறுந்தகட்டின் மூலம் மேட்டூர் அணையைச் சேர்ந்த பெரியார் படிப்பகத்தினர் பாபாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி வருகின்றனர்.



இந்த மோசடி மன்னனுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பலர் சீடர்களாகி அன்னாரின் ஆசிரமத்தில் வந்து தங்கி இருந்தார்கள். அப்படிப்பட்ட சீடர்களில் ஒருவர் பாபாவின் ஓரினப்புணர்ச்சி அசிங்கங்களை பி.பி.சி. தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்தி இருக்கிறார்.



அவரின் மர்ம ரகசியங்களை அம்பலப்படுத்த முயன்ற ஆறு மாணவர்களை பாபாவின் ஆசிரமத்தில் 1993ஆம் ஆண்டு சுட்டுக் கொன்று விட்டு "பாபாவைக் கொல்ல முயன்ற அறுவர் சுட்டுக் கொலை' என்று அக்கொலைகளை மூடி மறைத்தனர்.



கிரிமினல் பின்னணி, மோசடித்தனம், ஓரினப்புணர்ச்சி எனும் கழிசடைத்தனம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையான சாய்பாபாவை ஏன் கருணாநிதி, பகுத்தறிவுவாதத்தை எல்லாம் கை கழுவி விட்டு ஆதரிக்கிறார்?



திடீர்ப் பணக்காரர்களின் கருப்புப் பணத்தை மடைமாற்றி விடுவதற்கென்றே அமிர்தானந்தமாயி, சாய்பாபா போன்ற ஆன்மீகப் பித்தலாட்டக்காரர்கள் உருவாகி உள்ளனர். உண்மையிலேயே சாய்பாபா 200 கோடி நிதி உதவி செய்தார் என்றால், தமிழக அரசே விழா எடுத்திருக்கலாமே? பொதுவாகவே நன்றி சொல்பவர்கள், நன்றிக்கு உரியவர்களைத் தேடிச் சென்று நன்றி சொல்வதுதானே உலக வழக்கம். நன்றிக்குரியவராய் சித்தரிக்கப்படும் பாபாவே நன்றியைப் பெற்றுக் கொள்ள கோபாலபுரம் ஏன் போனார்? ஏன் அந்தச் சந்திப்பின் போது அரசு அதிகாரிகள் உடன் இருக்கவில்லை? என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் அரசிடம் இல்லை.



மேலும் மக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டிய தன்னுடைய அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு, அதனைச் செய்யச் சொல்லி இம்மோசடிச் சாமியாரிடம் மண்டியிடுகிறார் கருணாநிதி. அரசின் கடமைகளில் ஒன்றுதான் குடிநீர் விநியோகம் எனும் அடிப்படையைப் பற்றி மக்களைச் சிந்திக்க விடாமல், "மந்திரத்தில் மோதிரம் வரவழைத்த' விசயத்தைப் பேச வைத்துப் பிரச்சினையைத் திசை திருப்புகிறார்.



பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமையா? கிரிமினல் சாயிபாபாவின் கடமையா? என்று ""தீக்கதிருக்கும்'' சிந்திக்கத் தெரியவில்லை. ""ஒரு மாநிலத்தின் குடிநீர்த் திட்டத்துக்கு உதவிய ஒருவரை அவர் சந்நியாசியாக இருப்பினும் பாராட்டுவது அரசின் கடமை; அதைத்தான் முதலமைச்சர் கலைஞர் செய்துள்ளார்'' என்று கலைஞருக்கு அது முதுகு சொறிந்துள்ளது.



உலகவங்கி, கோக், பெக்டல் போன்ற பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளும் நம் மக்களின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதாகக் கூறிக் கொண்டுதான் இங்கு சுத்திகரிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றில் நுழைகின்றன. இதற்காக "மார்க்சிஸ்டு' கட்சி உலக வங்கியையும், பன்னாட்டு நிறுவனங்களையும் இனிப் பாராட்டிக் கூட்டம் நடத்தினாலும் ஆச்சரியம் இல்லை.



பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்ளாமல் தன் வாழ்வுவசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியாது எனும் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட கருணாநிதி போன்ற பிழைப்புவாதிகள், தனக்கு லாபம் கிடைக்கும்போது அடிப்படைக் கொள்கைகளைக் கூட நீர்த்துப் போகச் செய்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பெரியார், சுயமரியாதை எனும் வார்த்தைகள் எல்லாம், பதவிக்கு வரும் ஏணிகள் மாதிரிதான்.



வீரமணி, தீக்கதிர், பார்ப்பனப் பத்திரிக்கைகள் என எல்லோருமே சாய்பாபா விசயத்தின் பின்னால் இருக்கும் குடிநீர் அரசியலைப் பற்றிப் பேசாமல் அதை ஆத்திகநாத்திகப் பிரச்சினையாக மாற்றி ஒட்டு மொத்த தமிழகத்தையே ஏமாளிகளாக்குகின்றனர். இயற்கையின் கொடையான குடிநீரை விற்பனைப் பண்டமாக்கும் உலகமயமாக்கலின் சதியில் நம்மை வீழ்த்துகினறனர். நம்மிடம் வரியை மட்டும் வசூலித்துக் கொண்டு நம் தாகத்தைத் தீர்க்கவும், சென்னையில் நாறும் கூவத்தைச் சுத்தம் செய்யவும் சாய்பாபாவிடம் மண்டியிடச் சொல்கிறது மு.க. அரசு.



வரி வசூலிப்பதும், போலீசுக்கு தீனிபோடுவதும் மட்டும்தான் அரசின் வேலை என்றால், அந்த அரசு நீடிக்கத்தான் வேண்டுமா?



· கவி

ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டபூர்வ அடியாள்! போலீசு

போலீசு:

ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டபூர்வ அடியாள்! போலீசு


ர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மங்களூர் நகரிலும்; அதன் புறநகர்ப் பகுதிகளிலும்; அந்நகரையொட்டி அமைந்துள்ள உல்லால், கோனாஜே ஆகிய ஊர்களிலும் கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களில் கூட, அப்பகுதிகளில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தது.


மங்களூர் நகரம் அமைந்துள்ள தெற்கு கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில், அக்.4ந் தேதி தொடங்கி 6ந் தேதி முடிய பஜ்ரங்தள், ராமா சேனை ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் நடத்திய முசுலீம் எதிர்ப்புக் கலவரங்கள்தான் இதற்குக் காரணம். அந்தக் கலவரத்தில் இரண்டு முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்; முசுலீம்களுக்குச் சொந்தமான கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் குறி வைத்துத் தாக்கப்பட்டன; கொள்ளையடிக்கப்பட்டன. கலவரத்தை அடக்குவது என்ற பெயரில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.


அரசோ, போலீசோ எதிர்பாராமல், திடீரென்று நடந்துவிட்ட தாக்குதல் அல்ல இது. 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்து மதவெறி அமைப்புகள் சிறிதும், பெரிதுமாக பல கலவரங்களை கர்நாடக மாநிலத்தில் நடத்தி வந்துள்ளன. இதன் மூலம் தங்களின் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ள இந்து மதவெறி அமைப்புகள், 2004 சட்டமன்றத் தேர்தலில் தெற்கு கன்னட மாவட்டத்தில் மட்டும் 11 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டன.


""பசு வதையைத் தடுத்து நிறுத்துவது; மதமாற்றம் நடைபெறுவதைக் கண்காணித்துத் தடுப்பது; முசுலீம் இளைஞர்கள், இந்துப் பெண்களுடன் பேசுவதைக் கூடத் தடை செய்வது'' ஆகிய மூன்று சனாதனக் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதில், இந்து மதவெறி அமைப்புகள், இம்மாவட்டத்தில் இணையான அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன. முசுலீம்களின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பாபா பூதான்கிரி மலையை, ""இந்து'' வழிபாட்டுத் தலமாக மாற்ற முயற்சித்து வரும் இந்து மதவெறி அமைப்புகள், இதனை, ""தெற்கு அயோத்தி'' என அறிவித்துள்ளன. இந்தப் பின்னணியில் வைத்துதான், இந்து மதவெறி அமைப்புகள் அக்டோபரில் நடத்திய தாக்குதலைப் பார்க்க வேண்டும்.


மங்களூர் நகரின் புறநகர் பகுதியான பாஜ்பே எனுமிடத்தில், இந்துமதவெறி அமைப்புகள், அக். 3ந் தேதியன்று துர்க்கை அம்மன் ஊர்வலத்தை, பாஜ்பே மசூதி அமைந்துள்ள வீதி வழியாக நடத்தத் திட்டமிட்டன. இந்த ""மத'' ஊர்வலம், மசூதி வழியாக செல்வதற்கு முசுலீம்களிடமிருந்து எதிர்ப்பு வரவில்லை. எனினும், அவர்கள் இந்த ஊர்வலத்தில் பப்பா பேரி என்ற பெயர் கொண்ட முசுலீம், துர்க்கையை வணங்குவது போன்ற படத்தை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசிடம் புகார் மனு கொடுத்தனர்.


நெடுங்காலத்திற்கு முன்பு, மங்களூர் வட்டாரத்தில் பேரி மொழி பேசும் பப்பா என்ற முசுலீம் வணிகர் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ஒருநாள் ஆற்றில் படகில் சென்று கொண்டிருக்கையில், அந்த ஆறு இரத்தமாக மாறி, அவரது படகு மேலே செல்ல முடியாமல் நின்று விட்டதாகவும்; அவரது கனவில் துர்க்கை அம்மன் தோன்றியதையடுத்து, அவர் துர்க்கை அம்மனின் பக்தராக மாறி விட்டதாகவும் ஐதீகக் கதையொன்று இப்பகுதியில் வாழும் இந்துமுசுலீம் மக்களிடையே நிலவி வருகிறது. மதச்சகிப்புத்தன்மை, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்துவரும் இந்தக் கதையை, இந்து மதவெறியர்கள் இப்பொழுது முசுலீம்களை நக்கல் செய்யப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, துர்க்கை ஊர்வலத்தில், பப்பா பேரி என்ற பெயரில், ஒரு ஏழை முசுலீம் மதகுரு துர்க்கையிடம் இறைஞ்சுவது போன்று வரைந்து, முசுலீம்களை மதரீதியாகப் புண்படுத்த முயன்றனர்.


இந்தப் படத்தை ஊர்வலத்தில் எடுத்து செல்வோம் என இந்து மதவெறிக் கும்பல் பிடிவாதமாக இருந்ததால், ""குறைந்தபட்சம் ஊர்வலம் மசூதிக்கு அருகே வரும் பொழுதாவது, அந்தப் படத்தை காட்சிக்கு வைக்கக்கூடாது'' என முசுலீம்கள் வேண்டுகோள் வைத்தனர். இந்து மதவெறியர்கள் இந்தச் சமரசத்திற்கு ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டனர்.

""இந்தப் பிடிவாதம் ஒரு கலவரத்திற்குத் தூபம் போடும் சதிச் செயல்'' என நன்கு தெரிந்திருந்தும் கூட, அதிகாரவர்க்கம் ஊர்வலத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், பப்பா பேரி படத்தோடு ஊர்வலம் மசூதி வழியாகச் செல்ல அனுமதித்தது.


போலீசு அதிகாரிகளின் இந்த ஒத்துழைப்பு, கள் குடித்த (இந்து மதவெறி) குரங்குகளுக்கு, தேள் கடித்த நிலையை உருவாக்கிவிட்டது. ஊர்வலத்தின்பொழுதே, 1,000 பேர் கொண்ட இந்து மதவெறிக் கும்பலொன்று, கைகளில் வாள், குண்டாந்தடி, சோடா பாட்டில்களைத் தூக்கிக் கொண்டு, ஏழு முசுலீம் கடைகளுக்குள்ளும், இரண்டு இந்து கடைகளுக்குள்ளும் புகுந்து கொள்ளையடித்தது. (கொள்ளையடிக்கும் பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ்.க்கு மதச்சார்பின்மை நினைவுக்கு வரும் போலும்) முகம்மது ஹனிஃப் என்பவருக்குச் சொந்தமான துணிக் கடையில் மட்டும் 15 இலட்ச ரூபாய் பணம் ரொக்கமாக இந்தக் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டது.


ஆறு துணை ஆய்வாளர்கள், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், மாவட்ட போலீசு கமிசனர் ஆகிய அதிகாரிகள் அடங்கிய 200 பேர் கொண்ட போலீசுப் பட்டாளமே இக்கொள்ளைக்குச் சாட்சியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தனர். நடந்தது மத ஊர்வலம் அல்ல; இந்து மதவெறியர்கள் நடத்திய பகற்கொள்ளை என்பதற்கு ஒளிப்பேழை பட ஆதாரங்கள் இருந்தபோதும், முதலாளித்துவப் பத்திரிகைகளோ, தமிழ்நாட்டு தினமலர் பாணியில், ""மத நல்லிணக்கத்தின் குறியீடான, பப்பா பேரி துர்க்கை அம்மனை வணங்கும் படத்திற்கு முசுலீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத ஊர்வலத்தையும் தடுத்து நிறுத்திவிட்டதாக'' அவதூறையே, செய்தியாக வெளியிட்டன.


அக்.3 அன்று பாஜ்பேயில் நடத்தப்பட்ட கலவரத்தை, பல பகுதிகளுக்கும் விரிவாக்கும் நோக்கத்தோடு, ராமசேனை என்ற இந்து மதவெறி அமைப்பு அக்.6 அன்று கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியது. அன்று மங்களூர் நகருக்கு அருகில் உள்ள உல்லால் பகுதியில், மூன்று "இந்து'க் கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் பற்றி முறையான விசாரணை நடத்தாமல், முசுலீம்கள் மீது குற்றம் சுமத்திய போலீசார், இதற்குத் தண்டனையாக உல்லால் முசுலீம்கள் அனைவரின் மீதும் அரசு பயங்கரவாதத்தை ஏவிவிட்டனர்.


அன்று மாலை, ரமலான் நோன்பை முன்னிட்டு ஆண்கள் மசூதிக்குச் சென்றிருந்த நேரமாகப் பார்த்து, முசுலீம்களின் வீடுகளுக்குள் அத்து மீறி, அதிரடியாக, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போலீசார், வீட்டில் இருந்த பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். ""தீவிரவாதிகளை''ப் போல முகத்தை மூடிக் கொண்டு வீடுகளுக்குள் நுழைந்த போலீசு கும்பல், கையில் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்கள் செல்ஃபோன்கள், தங்கநகைகள், ரொக்கப்பணம் அனைத்தையும் கொள்ளையடித்தனர். கமுக்கமாக எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி அடித்து நொறுக்கினர்.


இந்தச் சட்டவிரோதத் தாக்குதலையும், திருட்டையும் ""தேடுதல் வேட்டை'' என்ற பெயரில் மூடி மறைக்கும் முகமாக, 70 பேரை அவர்களுள் பெரும்பாலோர் சிறுவர்கள் கைது செய்து, பொய் வழக்கு போட்டு, மங்களூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பெல்லாரி சிறையில் அடைத்தனர். ""கைது'' செய்யப்பட்ட முசுலீம்களை ஏற்றிச் செல்வதற்கு கொண்டு வரப்பட்ட பேருந்தில் இருந்த காலியிடங்களை நிரப்புவதற்காகவே மீண்டும் ""தேடுதல் வேட்டை'' நடத்தப்பட்டு, ஆறு முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர். போலீசிடம் நிரம்பி வழியும் முசுலீம் வெறுப்புக்கு இதுவொரு சான்று.


முசுலீம்களின் காலனியாகக் கருதப்படும் பந்தரில், தாக்குதலோ, எதிர்த்தாக்குதலோ நடக்காதபொழுதும், அக்.8 அன்று நள்ளிரவில் பந்தர் பகுதியில் வசிக்கும் பேரி மொழி பேசும் முசுலீம்களின் வீடுகளுக்குள் நுழைந்த போலீசார், வீட்டில் இருந்த ஆண்கள் அனைவரையும் சட்டவிரோதமாகக் கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்ட முசுலீம்களுள், அப்துல் ரஷீத், முகம்மது இம்ரான் என்ற இரு இளைஞர்களை பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்றால், ""அவர்கள் இருவரும், மங்களூர் நகரின் பல இடங்களில் நடந்த கலவரங்களை அந்நகர மேயர் அஷ்ரஃப்தான் தூண்டிவிட்டதாக எழுதித்தர வேண்டும்'' என போலீசாரே பேரம் நடத்தினர்.


மங்களூர் நகரின் புறநகர் பகுதியான ஃபைசல் நகரில், அப்துல் காதர் நடத்தி வரும் ""ஏ.கே.ஸ்டோர்ஸ்'' என்ற மளிகைக் கடை, அக்.6 அன்று, இந்து மதவெறியர்களால் சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. இது பற்றி அப்துல்காதர் கொள்ளையடித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் கொடுத்த பிறகும், போலீசார் குற்றவாளிகளுள் ஒருவரையும் கைது செய்யவில்லை.


மாறாக, அன்று மாலை அப்துல்காதரின் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்த போலீசார், அவரின் இரண்டாவது மகன் பர்வேஷைக் கைது செய்தனர். அப்துல்காதரின் இரண்டாவது மருமகள் போலீசாரின் அத்துமீறலை எதிர்த்து நின்று கேள்வி கேட்ட பொழுது, அதற்கு போலீசார், ""உங்க வீட்டு வாலிப பசங்களுக்குக் கொள்ளையடிக்கவும், பொதுச் சொத்தை நாசப்படுத்தவும் ஏன் கற்றுக் கொடுக்கிறீர்கள்?'' என ஆர்.எஸ்.எஸ். பாணியில் அவதூறு செய்து அவமானப்படுத்தினர்.


ஃபைசல் நகரில் வசித்து வரும் இந்துக்களில் சிலரது வீடுகள் அக்.6 அன்று முசுலீம் இளைஞர்களால் தாக்கப்பட்டன. போலீசார், இந்தத் தாக்குதலைக் காட்டி, இந்துக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து நெருங்கி விட்டதாகப் பீதியூட்டி, அந்நகரைச் சேர்ந்த 30 இந்து குடும்பத்தினரை, வீராநகருக்கு இடம் பெறச் செய்தனர்.


கர்நாடகா மத நல்லிணக்க மன்றம் என்ற அமைப்பு, இந்த இடப்பெயர்ச்சி குறித்து விசாரித்தபொழுது, அந்த "இந்து'க்கள் ""போலீசின் அச்சுறுத்தல், நிர்பந்தத்தினால் தான் தாங்கள் வீரா நகருக்கு இடம் பெயர்ந்திருப்பதாக''த் தெரிவித்தனர். ஆனால், பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த உண்மையை மூடி மறைத்து விட்டு, ""இடம் பெயர்ந்த இந்துக்களை அடிக்கடி காட்டி'' ஆர்.எஸ்.எஸ்.இன் சமூக விரோதக் கலவரத்திற்குத் தூபம் போட்டன.


இந்து மதவெறிக் கும்பல் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மறுநிமிடமே, பஜ்ரங் தள்ஐச் சேர்ந்த 100 குண்டர்கள், கூதினாபாலி என்ற இடத்தில் மூடப்பட்டிருந்த 11 முசுலீம் கடைகளின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அக்கடைகளைச் சூறையாடினர். கூதினாபாலி போலீசு நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பட்டப்பகலில் பலர் கண் முன்னால் இந்தக் கொள்ளை நடந்த போதிலும் போலீசார் இதனைத் தடுத்து நிறுத்த முயலவில்லை.


மாறாக, அக்.13 அன்று கூதினாபாலியில் உள்ள ""பி.சி.சாலை பேருந்து நிலையம்'' அருகே ஒரு குண்டு வெடித்தவுடன், அன்று மாலையே முசுலீம் குடியிருப்புக்குள் புகுந்து, பெண்கள், குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் தாக்கியதோடு, பீடி சுற்றி பிழைக்கும் 20 முசுலீம் தொழிலாளர்களைக் கைது செய்தனர்.


கூதினாபாலியில் பஜ்ரங்தள் நடத்திய பகற்கொள்ளையை மதக் கலவரமாகப் பூசி மெழுகி எழுதிய பத்திரிகைகள், அங்கு நடந்த குண்டு வெடிப்பை ""முசுலீம் தீவிரவாதம்'' எனப் பீதியூட்டி எழுதின.


ஆர்.எஸ்.எஸ். நடத்திய இந்தக் கலவரத்தில், அதற்குத் துணையாக போலீசார் நடந்து கொண்டு, முசுலீம்களைத் தாக்கியதை வெறும் மனித உரிமை மீறல் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.இன் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி பாசிச அரசியல், போலீசு துறை முழுவதும் வேரோடி போயிருப்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது. 1992இல் நடந்த மும்பய் கலவரத்திலும்; 2002இல் நடந்த குஜராத் இனப்படுகொலையிலும்; 1987இல் நடந்த மீரட் கலவரத்திலும் இந்த உண்மை ஏற்கெனவே அம்பலமாகியிருக்கிறது. இராணுவம், நீதித்துறை, போலீசுத் துறை என அரசின் முக்கிய உறுப்புகள் அனைத்தும் காவிமயமாகி வரும் வேளையில், இந்திய அரசை மதச்சார்பற்ற அரசாகக் கருத வாய்ப்பே இல்லை. ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து மதவெறி அரசியலை நடைமுறைப்படுத்த, அக்கட்சிதான் ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை!


·கவி


Monday, March 12, 2007

ஆங்கிலேய காலனியாதிக்கம் தந்த அவமானச் சின்னம்

சென்னை மாநகர போலீசு

ஆங்கிலேய காலனியாதிக்கம் தந்த அவமானச் சின்னம்


சென்னை போலீசு துறை ஆரம்பிக்கப்பட்டு 150ஆவது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி ஜனவரி 5ஆம் நாளன்று சென்னையில் கோலாகலமான விழாவைத் தமிழக அரசு கொண்டாடியது. அரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் வந்திருந்து சிறப்பித்து, போலீசாரை ஒன்பது உறுதிமொழிகள் ஏற்க வைத்தார். சாகச நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் போலீசுக்கு பதக்கங்கள், புது வீடுகள் என மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்தது போலீசு. இக்கொண்டாட்டங்களுக்கெல்லாம் தகுதியானதுதானா தமிழக போலீசுதுறை?



சென்னை போலீசு துறையின் வரலாறே, அன்னிய ஆட்சிக்கு எடுபிடி வேலை செய்வதில் இருந்து தொடங்குகிறது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கிந்திய கம்பெனி, சென்னப் பட்டணக் கோட்டையின் பின்புறம் ஒரு மார்க்கெட்டை நடத்தி வந்தது. அம்மார்க்கெட்டைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட "போலீசு' எனும் அமைப்பே பின்னாளில் ஆங்கிலேய அதிகாரிகளின் தலைமையில் "சென்னை போலீசு துறை'யாகப் பரிணமித்தது. காலனி ஆட்சியாளர்களின் நலனைக் காக்கவும், விடுதலைக்காகக் குரல் எழுப்பிய சொந்த நாட்டு மக்களின் குரல்வளையை நெறிக்கவும் பாசிச முறையில் பயிற்றுவிக்கப்பட்ட அத்துறை இன்னமும் காலனியத்தின் நீட்சியாகவே திகழ்கின்றது.



சொந்த நாட்டு மக்களைச் சந்தேக வட்டத்துக்குள்ளே வைத்திருக்கவும், அவர்களைத் தேவைப்படும்போது ஒடுக்கி வதைக்கவும் தயாரிக்கப்பட்ட இப்பாசிசப் படை, 1947க்குப் பிறகும், மாற்றம் ஏதுமின்றி ஆட்சியாளர்களால் மேலும் கொம்பு சீவி விடப்பட்டு, நம் நாட்டு மக்களின் வெறுக்கத்தக்க எதிரியாகவே இன்றும் திகழ்கிறது. ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக மக்கள் திரளும்போதெல்லாம், அரசின் உறுப்பான இராணுவத்துக்கு நிகராய் போலீசும், போராடும் மக்களை மிருகத்தனமாகச் சித்திரவதை செய்து ஒடுக்குகிறது. போலி மோதல்கள் மூலம் கம்யூனிசப் புரட்சியாளர்களையும், தேசிய இனங்களின் விடுதலைக்காகப் போராடுபவர்களையும் கொன்றொழிப்பதில் முன்னிலையில் இருக்கின்றது.



அரசு பணத்திலிருந்து இவர்களுக்குத் தீனி போடவென்றே மது விலக்குப் பிரிவு, கியூ பிரிவு, வரதட்சணைக் கொடுமைப் பிரிவு, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு, திருட்டு விசிடி பிரிவு என ஆயிரத்தெட்டு பிரிவுகளாகப் பிரித்து, நூற்றுக்கணக்கான பதவிகளை ஏற்படுத்தியும், மேலும் பலருக்குப் பதவி தருவதற்கென்றே மாவட்டங்களைப் பல துண்டுகளாகப் பிரித்தும், ஆட்சியாளர்கள் இந்த மிருகத்தை செல்லப் பிள்ளையாக வளர்த்து விடுகின்றனர்.



இவ்வாறு வளர்க்கப்பட்ட மிருகம், அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் தனது முழு அதிகாரத்தை மக்கள் மீது ஏவி வெறியாட்டம் போட்டது. ஓட்டுக் கட்சித் தலைவர்களும் இதில் இருந்து தப்ப இயலவில்லை. நெருக்கடி நிலைக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பாசிச எம்.ஜி.ஆரோ, தேவாரம் போன்ற கொலைகார போலீசு கும்பலுக்கு அளவு கடந்த அதிகாரமும், சுதந்திரமும் தந்து, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொல்வது, நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்களைக் கூட விட்டு வைக்காமல் கடத்திச் சென்று கொல்வது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நிரந்தரமாக்கினார்.



அதன் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த கருணாநிதியும், ஜெ.வும் போலீசுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கியும், அவர்கள் மேலும் சம்பாதித்துக் கொள்வதற்கு என்றே கந்துவட்டித் தடை சட்டம் போன்ற புதுப்புதுச் சட்டங்களையும் உருவாக்கித் தருகின்றனர்.



நாளடைவில், சமூக விரோதச் செயல்களைச் செய்ய, தனியாகக் கும்பல் ஒன்று இயங்கி வந்த நிலைமை மாறிப் போய், போலீசே அதன் பாத்திரத்தை ஏற்பதுதான் அதிகரித்துள்ளது. தணிக்கைக்கு உட்படாத பெருந்தொகையைக் கொண்டு பொதுமக்களிடையே ஆட்காட்டிகளை உருவாக்குவதும், இருவேறு ரவுடிகளிடையே உள்ள பகையை வளர்த்து விடுவதும், அவர்களில் ஒரு பிரிவை தனக்கும், ஆட்சியாளர்களுக்கும் பயன்படுத்திக் கொண்டு, தேவை நிறைவேறியதும் "போலி மோதல்' மூலம் ஆளைத் தீர்த்துக் கட்டுவது என்பதுமாக நவீன கிரிமினலாக தமிழகப் போலீசு சீரழிந்துள்ளது.



150ஆவது ஆண்டு விழாவின்போது அப்துல்கலாம், ""பொது மக்களின் நண்பனாக இருப்பேன்'' என உறுதிமொழி ஏற்கச் சொன்ன அதே போலீசுதான், "வீரப்பனைத் தேடுகிறோம்' என்ற பேரால் மலைவாழ் மக்களில் நூற்றுக்கணக்கானோரைச் சித்திரவதை செய்து பலரை ஊனமாக்கியது. பலரைக் கொன்று எரித்துத் தடயமே இல்லாமல் சாம்பலாக்கியது. பல பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் வக்கிரம் உச்சத்துக்குப் போய், பெற்ற தாயையும், மகனையும் அம்மணமாக்கி, அவர்களைப் பலர் முன்னால் உறவு கொள்ளச் செய்து ரசித்தது.



அந்தியூர் விஜயா, அண்ணாமலை நகர் பத்மினி என நூற்றுக்கணக்கான அபலைப் பெண்களைக் கொடூர முறையில் வன்புணர்ச்சி செய்து வக்கிர விளையாட்டு ஆடிய போலீசு துறையிடம் போய் ""பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்'' என்று உரையாற்றுகிறார் அரசவைக் கோமாளி கலாம்.



ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், கால் சென்டரில் பணிபுரியும் பெண்ணைக் கடத்திப் பாலியல் வன்முறை செய்ய முயல்வதாகவும் அவ்வோட்டுநர்களை "என்கவுண்டர்' செய்து கொன்று, பெண்ணின் கற்பைக் காப்பாற்றுவதாகச் சித்தரித்து, உழைக்கும் ஆட்டோ தொழிலாளரை இழிவுபடுத்திடும் வகையில் ""காவலர் உங்கள் சேவகர்'' என்ற சினிமாவைத் தயாரித்த போலீசுதான், சமீபகாலமாக ""கள்ளத் தொடர்பு காரணமாக, மதுரை இன்ஸ்பெக்டர் மனைவியிடம் விளக்குமாத்துப் பூசை வாங்கிய பெண் எஸ்.ஐ.', "ஜெயலட்சுமியுடன் குடும்பம் நடத்திய டஜன் கணக்கான போலீசார்'' என வணிகப் பத்திரிகைகளிலேயே தலைப்புச் செய்தியாகிப் பல்லை இளித்து நிற்கிறது.



"மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக' இருக்கவும், "லஞ்ச லாவண்யம் இல்லாமல்' செயல்படவும் போலீசிடம் வேண்டுகோள் வைத்த அப்துல்கலாமுக்கு, ஆதம்பாக்கத்தில் பொதுஜனம் ஒருவரிடம் 1000 ரூபாய் பறிக்க ஒரு போலீசு முயன்றபோது, அங்கே வந்த மற்றொரு போலீசு "என் ஏரியாவில் வந்து எப்படி வாங்கலாம்' என்று பணத்தைப் பங்கிடப் போய், நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டதும், எழும்பூர் அல்சாமாலில் நிறுவன அதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்ற போலீசு இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடமிருந்து தப்பித்துத் தெருவில் ஓடியதும் தெரிந்திருக்குமா?

கோவை நகைக்கடை ஊழியர்களிடம் தங்கக் கட்டியைக் கொள்ளையிட்ட சென்னை போலீசு, சென்னைக்கு வந்து நகைகளைக் கொள்ளையிட்ட மதுரை போலீசு, பெசண்ட்நகர் கடற்கரையில் நாலாயிரம் ரூபாயை வழிப்பறி செய்த சென்னை போலீசு, ஓடும் பேருந்தில் பெண்ணைக் கேலி செய்து பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய சென்னை போலீசு, குற்றாலத்தில் குடிபோதையுடன் வெறும் ஜட்டியுடன் குளிக்க முயன்று தகராறு செய்த நெல்லை போலீசு, பொதுமக்களின் புகார்களை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதி மன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள போலீசு, வடசென்னையிலுள்ள கழிப்பறைகளை பினாமிகளை வைத்து கைப்பற்றி, ரௌடிகளைக் கொண்டு அடாவடி கட்டணக் கொள்ளையடிக்கும் போலீசு எனப் பல அவதாரங்களை எடுத்து வருகிறது தமிழ்நாடு போலீசு. இவர்களின் கேடுகெட்ட இத்தகைய செயல்களை முழுமையாகச் சொல்ல வேண்டுமானால், இதற்கென்றே தனியாக சிறப்பு மலர்தான் வெளியிட வேண்டும்.

பாசிச முறையில் பயிற்றுவிக்கப்பட்ட தமிழகப் போலீசு மிருகம் 1995இல் கொடியங்குளத்தில், தலித் மக்களின் உடைமைகளைச் சூறையாடியும், குழந்தைகள், வயோதிகர்களை வன்மமாய்த் தாக்கியும், அவர்களின் குடிநீர்க் கிணற்றில் மலத்தைப் போட்டு நிரப்பியும் தனது கோரமான சாதிவெறியைக் காட்டியது. நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரை, 1999இல் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு இணையாக ஆதிக்க சாதிவெறியுடன் தாக்கிக் கொன்று தாமிரபரணி ஆற்றில் வீசி எறிந்தது. குண்டுபட்டி கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்தபோது அந்த ஊரையே தாக்கிச் சூறையாடியது.



கோயம்புத்தூரில் 1997 நவம்பரில் இந்து முன்னணிக் குண்டர்களுடன் கை கோர்த்துக் கொண்டு, 19 முஸ்லிம்களைக் கொன்றும், அவர்களின் உடைமைகளைக் கொளுத்தியும், தனது இந்துவெறிப் பாசிசத்தை உலகுக்குக் காட்டியது, தமிழக போலீசு. பாபர் மசூதி தகர்க்கப்பட்ட 1992ஆம் ஆண்டு தொடங்கி, முஸ்லிம்கள் பெருவாரியாய் வாழும் கோவை கோட்டைமேடு பகுதியை "அறிவிக்கப்படாத திறந்தவெளிச் சிறைக் கொட்டடி' யாக்கி தடுப்பரண்கள், சோதனைச் சாவடிகள் அமைத்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தினமும் வாட்டி வதைத்து வருகிறது.



அன்னிய செலாவணி மீது கட்டுப்பாடுகள் பல விதித்து வந்த காபிபோசா, ஃபெரா போன்ற சட்டங்கள், உலகமயப் பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வண்ணம், 1990க்குப் பின்வந்த ஆட்சியாளர்களால் திருத்தப்பட்டன. சில சட்டங்கள் விட்டொழிக்கப்பட்டன. தனியார்மய, தாராளமய நோக்கங்களுக்கேற்றவாறு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டன. ஆனால் 150 ஆண்டுகளாக ஒரே மாதிரியான வேலையைச் செய்து வரும் போலீசுக்கு என்று போலீசு சட்டங்களில் எந்தவிதத் திருத்தமும் அரசுக்கு தேவையாய் இருக்கவில்லை.



அன்னியன் அஞ்சி நடுங்கிடக் கப்பல் விட்ட சிதம்பரனாரை "ராஜதுரோகி'யாகப் பார்த்த போலீசு துறைதான், இன்று அந்நிய "கோக்'கை எதிர்த்திடும் தேசபக்தர்களையும் தேசத்துரோகிகளாகப் பார்க்கிறது. "கோக்'கிற்கு எதிராகப் போராடுபவர்களை "பயங்கரவாதிகள்' என மக்களிடம் போலீசே பிரச்சாரம் செய்கிறது.



பிரிட்டிஷாரை எதிர்த்துக் கூடிய ஆயிரக்கணக்கானோரை ஜாலியன் வாலாபாக்கில் சுட்டு வீழ்த்திய பிரிட்டிஷ் இந்திய போலீசுக்கும், குர்கானில் ஜப்பான் நாட்டு ஹோண்டா நிறுவனத்தில் வேலை நிறுத்தம் செய்த தன் சொந்த நாட்டுத் தொழிலாளர்களின் மண்டையைப் பிளந்த இந்திய போலீசுக்கும் "ஏகாதிபத்திய நலன் காக்கும்' செயலில்தான் எவ்வளவு ஒற்றுமை!



நாளை, தமிழ்நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற ஏகாதிபத்திய நலன்காக்கும் திட்டங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினால், அவர்களை அடித்து நொறுக்கத்தான், இன்றே தமிழக போலீசுக்கு 100 சொகுசு கார்களை ஹூண்டாய் நிறுவனம் "எலும்புத் துண்டாக'க் கொடுத்துள்ளது.



வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு, இந்திய சிப்பாய்கள் மாண்ட முதல் சுதந்திரப் போரின் 150வது ஆண்டையும் கொண்டாடுகிறது, அரசு. அதேநேரத்தில் இந்த நாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியம் தொடங்கி வைத்து இன்னமும் ஏகாதிபத்திய நலன் காத்து வரும் அடியாள் படையான போலீசுக்கும் 150வது ஆண்டையும் அதே அரசுதான் கொண்டாடுகிறது. இதுதான் வேற்றுமையில் ஒற்றுமைபோலும்! இதைவிட பித்தலாட்டம் எதுவும் இருக்க முடியாது; ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் புரட்சியை முன்னெடுக்காமல், ஏகாதிபத்திய நலன் காக்கும் அடியாள் படையான தமிழகப் போலீசு எனும் வக்கிர மிருகத்தைத் தாக்கி அழிக்கவும் முடியாது.

· இரணியன்