தமிழ் அரங்கம்

Sunday, December 18, 2005

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 4

ஆணாதிக்க சமூக பொருளாதார பண்பாடே ஒழுக்கக்கேடான பாலியலாகின்றது.

ஆணின் பாலியல் தேவைகளின் வரையறுகளே, பெண்ணின் மீதான பாலியல் கோட்பாடுகளாக இருந்தன, இருக்கின்றன. இதில் இருந்தே பெண்ணின் பாலியல் என்பது வரையறுக்கப்பட்டது. இந்த வகையில் பாலியல் என்பது, நிலபிரபுத்துவ அமைப்பின் பெண்ணின் ஒழுக்கமாகவும், பெண்ணின் கற்பாகவும் கூட மாறியது. ஆண் இதில் இருந்து விதிவிலக்கு பெற்றவனாக, அதுவே சமூக அங்கீகாரம் பெற்ற ஒரு பண்பாடாகவும் மாறியது.
ஆனால் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் தகர்வு இதையும் மாற்றி அமைக்கின்றது. பெண்ணை ஆண் விரும்பியவாறு நுகரும் வகையில் சமூகத்தை மாற்றிவருகின்றது. இங்கு கடந்தகாலத்தில் நிலவிய சமூக கூட்டுறவாக்கம் அவசியமற்ற ஒன்றாகிவிட்டது. பெண்ணை சந்தையில் வாங்கும் ஒரு சரக்காக கருதும் வண்ணம், சமூகப் பொருளாதார கூறு ஆண் பெண் உறவையே சிதைத்துள்ளது. முதலாளித்துவம் ஒரு சமூக பொருளாதார உறவாக மாறிய போது, கூலிகளை சந்தையில் பெற்ற போது சமூக உறவுகள் எப்படிச் சிதைந்ததோ, அதே போன்ற ஆண்கள் பெண்களை சந்தையில் பெற்று நுகரும் நிலைக்கு உலகமயமாதல் பெண்களை இட்டுச் செல்லுகின்றது. பெண் மேலும் பாலியல் பண்டமாகவே அடிமையாகின்றாள். இதையே சிலர் பெண் விடுதலை என்கின்றனர்.

இந்த நிலையில் நிலப்பிரபுத்துவ பெண்ணை அப்படியே நுகர்வது என்பது முரண்பாடாகின்றது. பெண் சுயேட்சையாக பாலியல் நுகர்வுக்கு தானாக இணங்கிப் போகும் பெண்ணின் உலகக் கண்ணோட்டம் மட்டும் தான், ஆணின் இன்றைய தேவையை பூர்த்திசெய்யும். இதைத்தான் ஆதிக்கம் பெற்றுவரும் உலகமயமாதல் ஆணாதிக்கம், பெண்ணுக்குரிய பெண் விடுதலை என்கின்றது. இதற்கு எடுபட்டுப் போகும் பெண், இதை பெண் விடுதலையாக கருதும் போக்கையே தீவிர பெண்ணியமாக பிதற்றுகின்றனர். சமூகம பற்றிய புரிதல் இன்றி இது கொலுவேறுகின்றது. இயல்பாக உலகமயமாதல் சமூக பொருளாதார அமைப்பு உருவாக்கிவரும் நவீன ஆணாதிக்கத்தை, சமூக இயக்கத்துடன் தொடர்பற்ற அறிவுயீவிகள் தான் பெண்ணியமாக தத்துவார்த்த அடிப்படையை திணிக்கின்றனர்.

உண்மையில் இது பெண் தானாக கண்டுபிடித்தவையல்ல. மாறாக ஆணாதிக்க உலகமயமாதல் பெண்ணின் மீது திணித்தவை. இதற்கு சமூகத்தில் மாறிவரும் சமூக பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கும் நுகர்வு வெறி, பெண்ணை விபச்சார நிலையில் வழி காட்டுகின்றது. ஒழுக்கக்கேடான இந்த பண்பாடின் கட்டமைப்பே, உலகமயமாதல் தான். உலகமயமாதல் சந்தையில் பொருட்களை குவித்து அதை வரைமுறையற்ற வகையில் எப்படி நுகரத் தூண்டுகின்தோ, அப்படித் தான் பெண்ணையும் நுகரத் தூண்டுகின்றது. பெண் உலகச் சந்தையின் கூண்டில் விடப்பட்ட விளம்பரப் பொம்மை போல், கவர்ச்சியான பாலியல் பொருள் தான். இது உடல் சார்ந்தது.

ஆனால் ஒரு மாற்றம். சந்தையில் எப்படி ஆண் நுகர முடியுமோ, அப்படி பெண்ணும் நுகர முடியும். இரண்டு உயிரிகள் என்ற வகையில், நுகர்வு பரஸ்பர நுகர்வின்றி சாத்தியமில்லை. சந்தையில் கூலியை வாங்கும் மூலதனம் போன்று, பெண்ணை நுகரும் ஆணாதிக்கம் செயல்படுகின்றது. இந்த ஆணாதிக்க நுகர்வு ஒழுக்கத்தையே, பெண் விடுதலை என்கின்றனர். இன்று பெண்ணியம் பேசும் பலரும், இதன் தீவிரமான ஆதரவாளர்கள். இவர்கள் எடுத்துக் கொள்ளும் பல்வேறு கருத்துகளின் நடத்தைகளில், இந்தக் கூறுகளை சரியாகவே இனம் காணமுடியும்.

இதை நாம் சமூக வெறுப்பூட்டல்களில் சரியாகவே இனம் காணமுடியும்;. நிலப்பிரபுத்துவம் ஆணாதிக்க பெண்ணின் கடமையாக வரையறுக்கப்பட்ட அனைத்தையும், பெண் வெறுக்க வேண்டும் என்று இந்த பெண்ணியம் புகட்டுகின்றது. மாறாக ஒரு ஆண் எப்படி சமூக மறுப்பாளனாக வாழ்கின்றானோ, அப்படி பெணணும் வாழ்வதே பெண்ணியம் என்கின்றது. இது எப்படி பெண்ணியமாகும். இது நிச்சயமாக இந்த ஆணாதிக்க அமைப்பில், ஆணாதிக்கமயமாதல் தான். சந்தை நிலப்பிரபுத்துவ பெண்ணின் கடமைகளை சிதைக்கும் போது, சந்தைக்கு அது அதிக லாபம் தருகின்றது. உதாரணமாக பெண் சமைக்க மறுத்தால் மிகப் பெரிய பன்னாட்டு உணவுவிடுதிகள் அதிக லாபம் அடைகின்றது. குழந்தைக்கு சொந்த பாலைக் கொடுக்க மறுத்தால், பன்னாட்டு குழந்தை உணவு விநியோகஸ்தர்கள் அதிக லாபம் அடைகின்றனர். இப்படி பற்பல. உண்மையில் பெண் தான் தக்கவைத்திருந்த பல அறிவியலை ஆணாதிக்க அமைப்பிடம் இழந்து போகின்றாள். அதை ஆணாதிக்க சந்தை கைப்பற்றுகின்றது. சமூகத்தில் சிறியளவில் பண்பாடு சார்ந்து மரபாக பாதுகாத்த பலவிதமான உணவு சார்ந்த பழக்கவழக்கங்கள் பெண்ணுக்கு நுகர்வுச் சுதந்திரத்தை பரிசளித்து விட்டு, அவளிடம் இருந்து அறிவியல் உண்மைகள் பறிக்கப்படுகின்றது அல்லது அழிக்கப்படுகின்றது. உலகமயமாதல் குறிப்பாக இதில் கவனம் எடுத்துச் செய்கின்றது. இப்படி பற்பல.

இதன் சமூக விளைவு என்ன. பன்னாட்டு நிறுவனங்கள் சுதந்திரமான தேர்வை மறுத்து தரும் ஒரு சிலவற்றை, மக்கள் மந்தையைப் போல் உண்ணப் பழக்கப்படுகின்றனர். இங்கு பெண் சுதந்திரமாக பல தேர்வுகளை கொண்டிருந்தாள் என்ற அரசியல் உண்மையைக் கூட, பெண்ணியத்தால் கண்டுகொள்ள முடியாத அவலம் எற்படுகின்றது. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் பன்மையான சமூகத் தேவையை மறுத்து, பெரும்பாலானவற்றை அழித்து மிகுதியை தனது கண்டுபிடிப்பாக்குகின்றது. உண்மையில் பெண் இவற்றை இழந்து போகின்றாள்.

மறுபக்கத்தில் பெண் தன்னிடம் இருந்த அறிவியல் கூறை இழக்க, ஆண்களே மிகச் சிறந்த சமையல்காரனாக மாறுகின்றான். இன்று உணவு சார்ந்த கலை, படிப்படியாக ஆணின் ஆதிக்கத்துக்கு வந்துள்ளது. இப்படி பெண் தான் கண்டுபிடித்த பல அறிவியல் உண்மைகளை இழந்தாளோ, அப்படி தன்னிடம் எஞ்சி இருக்கும் அறிவியல் கூறுகளை இழப்பது உலகமயமாதலில் வேகம் பெற்றுள்ளது. இதையே தீவிர பெண்ணியம் பெண்ணியம் என்கின்றது.
நிலப்பிரபுத்துவ அமைப்பில் பெண் ஆணின் கருவியாகி, ஆணாதிக்கத்தை எப்படி பாதுகாக்கின்றாளோ, அப்படித்தான் உலகமயமாதல் சமூக அமைப்பில் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கும் கருவியாகின்றாள்.

நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்கக் கூறுகளை மறுத்து, ஏகாதிபத்திய பாலியல் நுகர்வுப் பெண்ணாக மாறுவது பெண்விடுதலையல்ல.

உதாரணமாக
1.தீவிரவாதப் பெண்கள் என்று தம்மைத்தாம் கூறிக் கொள்ளும் உலகமயமாதல் பண்பாட்டின் கும்மியடிகள், பெரும்பாலானோர் குழந்தை வளர்ப்பை வெறுக்கின்றனர். குழந்தை வளர்ப்பு என்பதை நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூகம் பெண்ணின் கடமையாக வரையறுத்தது என்பது உண்மை. ஆணால் அதை மறுதலித்து குழந்தை வளர்ப்பை நிராகரிக்கும் உலகமயமாதல் ஒழுங்கு பெண்ணியமல்ல. இதில் சனத்தொகை குறைப்பு என்ற உலகமயமாதல் சதியும், இந்த பெண்ணிய கும்மியடிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சமூக நடவடிக்கை. பெண்ணிடம் அது காணப்பட்ட போது, சமூக நோக்கில் மிக உயர்ந்த, ஆணாதிக்கத்திடம் இல்லாத ஒரு பண்பாகும். சமூக நோக்கங்களையும், சமூகக் கூறுகளை மறுத்து உருவான ஆணாதிக்க சமூக அமைப்பில், பெண் கடந்து வந்த சமூகக் கூறுகளை தன்னிடம் எச்சமாக வைத்திருந்தாள். இதை ஆணாதிக்கத்தின் இழிவான சமூகக் கூறுகளில் இருந்து அகற்றி, அதை சமூகத்தின் பெருமைக்குரியதாக மாற்றிப் போராட வேண்டிய பெண்ணியம், அதற்கு எதிராக ஆணாதிக்கத்தை நோக்கி தன்னைச் சிதைப்பதையே பெண்ணியமாக காட்டுகின்றனர். உண்மையில் இதன் சமூகக் கூறுகள், தனிமனித சமூகவிரோத ஆணாதிக்க கூறுகளாக சிதைந்துவிடுகின்றது.

2.கர்ப்பப்பையை வெட்டியெறிவோம் என்று பெண்ணியப் புலம்பல்கள், எதைத்தான் சொல்ல முனைகின்றது. பெண்ணின் பெருமைகளை சிறுமைப்படுத்துவதில் முடிகின்றது. ஆணாதிக்க சமூகத்துக்கு முந்தைய பெண்ணின் பெருமைகள், இந்த கருப்பையில் குழந்தையை சுமப்பதில் காணப்பட்டது. தனிச்சொத்துரிமை ஆணாதிக்கம் இதைச் சிறுமைப்படுத்தியது. இதன் வழியில் பெண் தனது சொந்தக் கருப்பையையே சிறுமைப்படுத்துவது அதைவிடக் கேவலமானது. ஆணாதிக்கத்தின் வழியில் அதை மேலும் இழிவாக்குகின்றது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் கருப்பையை சிறுமைப்படுத்தி, அதை தனது வாரிசுக்குள் சிறைப்படுத்தியது. உலகமயமாதல் ஆணாதிக்கம் கருப்பையை நுகருவதற்கு இடைஞ்சலாகவே கருதுகின்றது. கருவைத் தாங்கும் ஒரு பெண் தனது நுகர்வுக்கு தடையாக இருக்கின்றாள் என்பதை, நுகர்வு ஆணாதிக்கம் புகட்டுகின்றது. இதையே கவ்விக் கொண்டு, கருப்பையை அறுத்தெறிவோம் என்கின்றனர். இப்படி புலம்புவோர் தமது நுகர்வு வெறியை தக்கவைப்பதில் மட்டும் கவனமாக உள்ளனர். நுட்பமாக பார்த்தால், ஆணுடன் பாலியல் உறவை கொள்வதை மட்டும் இது மறுதலிக்கவில்லை. இங்கு உடல் சார்ந்த பாலியல் நுகர்வு முதன்மை பெறுகின்றது. இதனால் தான் பெண் உறுப்பை அழிப்பதைப் பற்றி இவர்கள் யாரும் பேசுவதில்லை.

3.வரைமுறையற்ற பாலியல் சுதந்திரத்தை கோருவதே பெண்ணியம் என்கின்றனர். இது பழைய காட்டுமிராண்டி சமூகத்தின் நிலைக்கு சரிந்து செல்வதை குறிக்கின்றது. பழைய காட்டுமிராண்டிச் சமூகத்தில் இருந்த பாலியல் என்பது, பெண்ணை பாலியல் சார்ந்த ஒரு உடல் பண்டமாக கருதி ஒரு நுகர்வு வெறியுடன் இருக்கவில்லை. விரும்பி இணையும் ஒரு இயற்கையான ஒரு சமூக நிகழ்வாக இருந்தது. அந்த வகையில் இன்று இருப்பதில்லை. சந்தையில் உள்ள ஒரு பொருளை அடங்காவெறியுடன், தேவையைக் கடந்து நுகரும் வெறியுடன் தான் மேட்டுக்குடிகள் நுகருகின்றனர். அதே உள்ளடகத்தில் தான் ஆணாதிக்க உலகமயமாதல் பெண்ணை பாலியல் ரீதியாகவும் நுகருகின்றது. இதையே பெண்ணையும் நுகரக் கோருவதால், இதைப் பெண்ணியம் என்கின்றனர்.

மனிதன் தான் இயல்பாக விரும்பிய இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த போது அங்கு பாலியலில் வக்கிரம் இருக்கவில்லை. தனியுடமை சமூகம் உருவான போது, தனிப்பட்ட ஆண்களின் சொத்துடமை ஆதிக்கம் வளர்ச்சியுற்ற போது, பாலியல் கூறும் திரிபடைந்தது. ஆண் பெண்ணை தனது தனிமனித சொத்துடமை கண்ணோட்டத்தில் நோக்கி, தான் மட்டும் நுகரும் சமூக அமைப்பை படைத்தபோது, பெண்ணை அவன் ஒரு பாலியல் கருவியாக கருதத் தொடங்கினான். தனிமனித சமூக அமைப்புக்கு ஏற்ப அனைத்து செல்வத்தையும் தனதாக்கும் குறிக்கோளுடன் சமூகத்தைச் சுரண்டியதைப் போல், பெண்ணையும் தனது பாலியல் நுகர்வுக்குள் உள்ளடக்கி வரைமுறையற்ற வகையில் சுரண்டத் தொடங்கினான்.

பெண்ணின் சுயேட்சையான தேர்வு என்பது, ஆணின் தனிமனித சொத்துரிமைக்கு முன்னால் மறுதலிக்கப்படத் தொடங்கியது. பெண் மீதான ஆண்களின் வரைமுறையற்ற பாலியல் நுகர்வுச் சுதந்திரம், காட்டுமிராண்டித்தனமானதாக மாறியது.

இதில் இருந்து பெண் தப்பிக்கவேண்டிய ஒரு நிலை பெண்ணுக்கு ஏற்பட்டது. பெண் ஒரு பலமான ஆணின் துணையை நாட நிர்ப்பந்திக்கப்பட்டாள். இதன் மூலம் தனது சொந்தத் தெரிவை பாதுகாக்க முடிந்தது.

இதுவே தனிச்சொத்துரிமை அமைப்பில் பெண் படிப்படியாக தான் தேர்ந்தெடுத்த ஒரு கற்பு நெறியாகியது. தான் விரும்பும் ஆணுடன் வாழும் உரிமையை இது பாதுகாக்கும் அடிப்படையில், பெண் இந்த வழியை தேர்ந்தெடுக்க முடிந்தது. இது உருவாகி வந்த தனிமனித சொத்துடைமை சமூக அமைப்புக்கு ஏற்றதாகவும் மாறியது.

ஆனால் இதுவும் பின்னால் திரிபடைந்தது. பெண் தான் தேர்ந்தெடுத்து வாழும் கற்பு என்ற சுயம் சார்ந்த உள்ளடகத்தை, தனிச் சொத்துரிமை வாரிசு ஆண் தனக்கு இசைவாக்கி தன்னுடன் மட்டும் வாழும் ஒழுக்கமாக்கினான். இதுவே பல கட்டங்களை கடந்தும், வாழ்க்கை பூராவும் குறித்த பெண் கற்புடன் குறித்த ஆணுடன் வாழ நிர்ப்பந்திக்கும் வகையில் கற்பு திரிபடைந்தது.

இன்று தீவிர பெண்ணியல்வாதிகள் கற்பு என்பதை நிராகரிப்பதாக பிரகடனம் செய்கின்றனர். இதன் மூலம் பெண்ணின் தேர்வு இந்த ஆணாதிக்க அமைப்பில் மீண்டும் மறுக்கப்படுகின்றது. மாறாக நுகர்வு என்ற உலகமயாதலின் கோட்பாட்டில், பெண் உடல் சார்ந்த ஒரு பண்டமாக மாற்றப்பட்டு விபச்சாரியாக்கப்படுகின்றாள். உலகமயமாதலில் பெண் ஆண்களின் தேவையை ப+ர்த்தி செய்யும், நுகர்வு பண்டமாகவே மாற்றப்படுகின்றாள். இப்படி விரிவாக நாம் பலவற்றை ஆராய முடியும்.

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 3

ஏகாதிபத்திய பாலியல் சுதந்திரத்தை முன்வைத்த குஷ்பு விவகாரம்

குஷ்பு போன்ற ஏகாதிபத்திய அன்னக்காவடிகளே, சமூகத்தின் உயர்குடிகளாக உள்ளனர். இவர்களின் அலட்டல் அலட்டலாகவே அப்படியே ஒரு வழமையான சினிமா வசனம் போல் போய் இருக்க வேண்டியது. ஆனால் அதை நிலப்பிரபுத்துவ பார்ப்பனிய அரசியலுக்கும், தலித்துக்களின் சாதி அரசியலுக்கும், குறுந்தேசிய பாசிசக் கூறுக்கும் இசைவாக பயன்படுத்திய போது சர்ச்சைக்குள்ளாகியது. இதற்கு கோட்பாட்டு ரீதியாக வழக்கறிஞர் ரஜனி, அ.மார்க்ஸ்… போன்றோர் தமது உலகமயமாதல் கோட்பாட்டுக்கு இணங்க விளக்கி அதை முற்போக்காக காட்டமுனைந்தனர்.

முதலில் குஷ்பு என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம். ~~பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். என்றார். இதை ~~தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா? என்ற கருணாநிதியின் தமிழ்முரசு இதை அரசியலாக்கிய போது, மீண்டும் குஷ்பு தினத்தந்தியில் ~~திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? என்றார்.

இப்படி சர்ச்சை உருவானது. பார்ப்பனியமயமாகும் தலித் சாதி அரசியல் இதை ஒருபுறம் காலில் கீழ் போட்டு உடைக்க, மறுதளத்தில் இதை பெண்ணியமாக சித்தரித்து தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடினர். மற்றொரு பிரிவு குஷ்புவை ஆதரிக்கும் அதேநேரம், பார்ப்பனியத்துடன் பகைக்க விரும்பாத மற்றொரு கும்பல் ஒன்று, கருத்துச் சுதந்திரம் பற்றி கேள்வி கேட்டு குஷ்புக்கு சாமரை வீசினர்.

இங்கு குஷ்பு கூறியதே தமது பெண்ணியம் என்பதே இலக்கியச் சந்திப்பு மற்றும் பெண்கள் சந்திப்பின் தீர்மானகரமான முடிவாகும்;. இந்த குஷ்பு வகையறாக்களின் பெண்ணியம் தான், தமது பெண்ணியம் என்ற நிலைப்பாட்டை தீர்மானமாக்கினர். முன்பு எந்த முடிவுகளையும் எடுக்காது கூடி குடித்து கும்மாளம் அடித்து கலையும் இலக்கியச் சந்திப்பு, முதன்முதலாக ஏகாதிபத்திய சார்பு முடிவுகளை உள்ளடக்கிய வகையில் சில முடிவுகளை எடுத்துள்ளது.

குஷ்பு வைத்தது பெண்ணியமா? இல்லை. மாறாக ஏகாதிபத்திய ஆணாதிக்க உலகமயமாதல் அமைப்பில் வெம்பிப் போகும் பெண்ணின், சொந்த சுயபுராணம். இதை சமூகத்துக்கும் பொருத்திக் காட்ட முனைந்தார். இன்றைய உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய ஆணாதிக்க சமூக அமைப்பில் நுகரும் பெண்ணின் நிலையில் இருந்து, நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு விடுத்த வக்கிரம் தான் குஷ்புவின் கூற்று.

இந்த சமூக முரண்பாடு இந்தியாவில் ஆழமாக ஊடுரூவி வரும் ஏகாதிபத்திய உலகமயமாதல் என்ற நுகர்வுப் பண்பாட்டில் இருந்து, நிலப்பிரபுத்துவ கட்டுக்கோப்பான பொருளாதார சமூக அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் இது. இது பொருளாதார துறையில் மட்டுமல்ல பாலியல் துறையிலும் கூட, ஏன் பண்பாட்டு கலாச்சாரத் துறையிலும் கூட ஏற்படுகின்றது. உலகமயமாதல் என்ற பண்பாட்டு சமூக அமைப்புக்கும், கடும்போக்கான பண்பாட்டு நிலப்பிரத்துவ அமைப்புக்கும் இடையில் எங்கும் எதிலும் முரண்பாடு உள்ளது. இதன் எதிர்நிலைத் தன்மை சார்ந்த முரண்பாட்டின் மீது ஆதரவு அல்லது எதிர்ப்புகள் தான் குஷ்பு விவகாரத்திலும் ஆளுமை பெற்ற ஒன்றாக உள்ளது. இந்த பொருளாதார அமைப்பு இரண்டும் மக்களுக்கு எதிரானது என்ற அடிப்படையிலும், இந்த பொருளாதார அமைப்பு இரண்டும் ஆணாதிக்கம் சார்ந்தது என்ற அடிப்படையிலும், இந்த விவகாரத்தில் மக்கள் நலன் சார்ந்த கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

குஷ்பு போன்ற மேட்டுக்குடி பணக்கார நடிகைகளின் சொந்த வாழ்க்கை சார்ந்த உலக கண்ணோட்டத்தை தான், இந்த சமூகம் பின்பற்ற வேண்டும் என்ற திமிரில் இருந்தே குஷ்புவின் கருத்து கொப்பளிக்கின்றது. திமிர் பிடித்த பணக்கார நடிகைகளாக உள்ள இவர்கள், அடிமட்ட சமூகங்களையே இழிவாக எப்போதும் காண்பவர்கள். சினிமாவில் மட்டும் அதையே தமக்கு ஏற்ப திரித்து நடிப்பவர்கள். இவர்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பது வக்கிரமும் பாசிசமும் தான். சமூகத்தின் அடிமட்ட மக்களுடன் தொடர்பற்றவர்கள் தான் இவர்கள். மனித வாழ்க்கையே புரிந்து கொள்ளாதவர்கள். இன்று ஏகாதிபத்திய நுகர்வை மட்டுமே, வாழ்க்கையின் அடிப்படையாக கொள்பவர்கள். இது வெறுமனே நடிகைகள் மட்டுமல்ல, பணக்காரக் கும்பலின் பொது வக்கிரமாகும். இவர்களின் வாழ்க்கைக்குள் பூதக் கண்ணாடி கொண்டு மனிதத்துவத்தை தேடவே முடியாது. ஆனால் தேட முடியும் என்று தேடி தீர்மானங்களையும்;, அறிக்கைளையும், கோட்பாடுகளையும் வெளியிடுகின்றனர்.
மக்களை ஏமாற்றிச் சுரண்டிய இந்தப் பணக்காரக் கும்பல் உலகமயமாதலை விசுவாசமாக வாலாட்டி ஆதரிப்பவர்கள். உலகமயமாதலின் நுகர்வுப்பண்பாட்டை, அந்தக் கலாச்சாரத்தை விரும்பி வலிந்து தேர்ந்து எடுப்பவர்கள்தான்;. இவர்களுக்கு என்று தனியான ஒரு கருத்தற்றவர்கள். ஏகாதிபத்திய உலகமயமாதல் நடைமுறை வாழ்வு சார்ந்த கோட்பாட்டை, கிளிப்பிள்ளை போல் மீள ஒப்புவிப்பவர்கள். அப்படியே வாழ்ந்து காட்ட முற்படுபவர்கள்.

வரைமுறையற்ற நுகர்வே இவர்களின் மையமான கோட்பாடு. பாலியலைக் கூட இந்த வகையில் தான் இவர்களால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உறவை வெறும் பாலியலாக மட்டும் உடல் சார்ந்ததாக குறுக்கி நுகர்பவர்கள். உறவு ஒரு சமூக உயிரிக்கு இடையிலானது என்பதையே மறுக்கின்றனர். இதனடிப்படையில் பாலியலை நுகர்வு என்ற விபச்சாரம் வரை புரிந்து, அதை உள்வாங்கிக் கொள்ளுகின்றனர். இந்த வகையில் குஷ்பு போன்றவர்கள் கருத்துரைக்கின்றனர். பாலியலை வெறும் சந்தைக்குரிய ஒரு நுகர்வாக மட்டும் சிறுமைப்படுத்தி, அதைக் கொப்பளித்து துப்பியுள்ளனர். நிலவும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒழுக்க கோட்பாடு, தமது நுகர்வு கலாச்சாரத்துக்கு சவாலாக இருப்பதைக் கண்டு பொறுக்க முடியாது புலம்பும் போது, மொத்த சமூகத்தையும் கேவலமாக வசைபாடுகின்றனர். ~~தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு இரண்டு கொம்பா முளைத்து இருக்கிறது?. என்ற மற்றொரு முன்னாள் நடிகை சுபாஷனியும் தனது மேட்டுக்குடி பார்ப்பானியத் திமிருடன் வக்காளத்து வாங்குகின்றார். தாங்கள் தமிழருடன் சம்பந்தமில்லாத அன்னியர் என்பதை இந்த நடிகை தனது கூற்றிலும் கூறிவிடுகின்றார். குஷ்புவோ ~~திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? என்ற தனது சொந்த வாழ்க்;கை சார்ந்த மேட்டுக்குடி விபச்சார அனுபவத்தில் இருந்த இப்படி சொல்லுகின்றார். இவர்களின் பாலியல் சார்ந்த நுகர்வு வெறிதான், இப்படி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்த வைத்தது.
பணத்துக்கு விபச்சாரம் செய்வது எப்படியோ அப்படித்தான் இந்த மேட்டுக் குடிகளின் பாலியல் நுகர்வு உள்ளது. பணத்துக்கு விபச்சாரம் செய்தலில் ஆண் மட்டும் நுகருகின்றான். ஆண் விபச்சாரர்களிடம் பெண் மட்டும் நுகருகின்றாள். பணத்துக்கு விபச்சாரம் செய்பவர்கள் இந்த சமூக அமைப்பின் வறுமை, மற்றும் ஆணாதிக்க கொடூரங்களினால் விபச்சாரியாக வாழ்க்கையில் தள்ளப்பபட்டவர்கள்.

இதில் இருந்து மாறுபட்ட மேட்டுக்குடி வாழ்க்கை சார்ந்த பாலியல் உறவு விபச்சாரமாகவே உள்ளது. எந்த மனித சமூக உறவும் இந்த பாலியல் உறவில் இருப்பதில்லை. விலையுயர்ந்த அன்பளிப்புகள், நடிப்பு சார்ந்த பாலியல் கவர்ச்சி, சினிமா பாணி காதல் நுகர்வு இப்படித் தான் இவர்களுக்கு இடையில் உறவு ஒரு விபச்சாரமாக மலருகின்றது. இங்கு நுகர்வு என்பது ஆண் அல்லது பெண் ஏதோ ஒரு பகுதிக்கு அவர்களின் தேர்வு சார்ந்து ஏற்படுகின்றது.

இந்த மே(மோ)ட்டுக்குடிகள் சொந்த வாழ்க்கை சார்ந்த கவர்ச்சியான நடிப்பு அனுபவத்தையே உலகமாக காண்பது இயல்பானது. சமூகத்தை தன்னளவில் மட்டும் புரிந்து வைத்திருக்கும் போது, மொத்த சமூகத்தையே இப்படித் தான் இருக்கின்றது என்று நம்புகின்றது. தமது குறுகிய வாழ்க்கை வட்டம், தமது குறுகிய நுகர்வு வெறி, தமது குறுகிய பண்பாடு என அனைத்தும் சேர்ந்து, இப்படித் தான் நாய் வேஷம் போட்டு குலைக்கவைக்கின்றது. சமூகக் கண்ணோட்டத்தையே அது மறுதலிக்கின்றது. குறிப்பாக அதே இந்திய ரூடேயின் தரவுகள் மேட்டுக்குடி பெண்களிடமே எடுக்கப்பட்டது. அப்படி இருந்தும் மேட்டுக்குடி நகர்புற பெண்களே, திருமணத்துக்கு முன் உறவு கொள்வது தவறு என்று 71 சதவீகிதப் பெண்களும், கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று 66 சதவீகிதமான பெண்கள் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். சென்னையில் 82 சதவீகிதமான பெண்கள் கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் குஷ்பு அதையும் மீறி கருத்துரைக்கின்றார். சொந்த மேட்டுக்குடி பெண்களே இப்படி கூறும் போது, சமூக ரீதியாக சீரழிந்து போன வாழ்க்கை அதையே நடிப்பாக தொலைத்த கும்பலின் குரல்கள் வக்கிரமாக வெளிப்படுகின்றன. ~~திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? என்று குஷ்பு கேட்கின்ற போது, சொந்த மேடடுக்குடி வர்க்கப் பெண்களையே கொச்சைப்படுத்தி கேவலப்படுத்திவிடுகின்றது. சொந்த சமூகத்துடன் கூட ஒட்டோ உறவோ கிடையாது. ஏன் இந்தியாரூடே எடுத்த தரவு சார்ந்த கருத்தைக் கூட, உள்வாங்கி கொள்ள முடியாது, சொந்த வாழ்க்கை சார்ந்த வக்கிரத்தை வெளிப்படுத்துகின்றனர். இதை பெண்ணியம் என்ற அ.மார்க்ஸ், வழக்கறிஞர் ரஜனி போன்றோர் ஏகாதிபத்திய விசுவாசத்துடன், அந்த சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தி குரைக்கின்றனர்.

இங்கு குஷ்பு பாலியலை திருமணத்துக்கு முன்னம் கொண்டிருக்கலாம் என்று கூறிய போது, ஒழுக்கக்கேடே முதன்மை பெறுகின்றது. இங்கு பாலியல் நுகர்வாக்கி, அதை யாருடனும் எப்படியும் என்ற விடையம் வந்துவிடுகினறது. இங்கு கற்பம் அடையாமல் இருந்தால் போதும். பால் நோய் வராமல் இருந்தால் போதும். இதைப் பெண் புரிந்து கொண்டால் சரி என்கின்றனர். இதை;தான் பெண்ணியம் என்று சிலர் கூறுகின்றனர். உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார ஆணாதிக்கம் வழங்கும் பெண்ணின் ஒழுக்கக் கேட்டை மூடிமறைக்கும் வழியைக்காட்டுகின்றனர். நுகர்வதை ஊக்குவித்து அதை இரகசியமாக இந்திய சமூக அமைப்பில் பாதுகாக்க வழி கூறுகின்றார்.
இதில் எங்கே பெண்ணியம் உள்ளது. இங்கு பாலியல் நுகர்வு முன்மொழியப்படுகின்றது. எப்படியும் நுகரலாம் என்று பெண்ணுக்கு புகட்டப்படுகிறது. சமூகத் தன்மையற்ற சந்தை நுகர்வு, இங்கு கொலுவேற்று நிற்கின்றது. சந்தை மனித இனத்தின் மீது எதை செய்ய விரும்புகின்றதோ, அதை நீ உனது ஒழுக்கமாக கொள் என்பது பொருளாதாரத்தின் ஒழுக்க விதி. இந்த ஒழுக்கக்கேட்டையே குஷ்பு வகையறாக்கள் மேதாவிகள் போல் உள்வாங்கி சொந்த மேட்டுக்குடி வாழ்பனுபவங்களுடன் அதையே பேட்டியளிக்கின்றனர்.

மனித இனத்தின் விடுதலைக்காக வழிகாட்ட வக்கற்றவர்கள், தம்மைத் தாம் முற்போக்குகள் என்று கூறிக்கொள்ளும் வகையறாக்கள், இதற்காக காவடி எடுக்கின்றனர். இதுவெல்லோ பெண்ணியம் என்கின்றனர். பெரியாரை இழுத்து வைத்து புணர்ந்து காட்டுகின்றனர். குஷ்புவின் வாழக்கை சார்ந்த ஒழுக்கக்கேட்டை ஆதரித்து அ.மார்க்ஸ். ~~குஷ்பு இந்தியாடுடேவுக்குத் தெரிவித்துள்ள ஒவ்வொரு வரியிலும் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. ஒரு தேர்ந்த சமூகவியலாளரைப் போல அவர் கருத்துக் கூறியிருக்கிறார். மாறிவரும் சமூகப் போக்கினை குஷ்பு புரிந்து கொண்ட அளவுக்கு கூட நமது அரசியல் தலைவர்கள் கொள்ளவில்லை என்பது அபத்தமாக இருக்கிறது." அ.மார்க்சின் சமூக ஆய்வுத் தளம் எப்படி உள்ளது என்பதைத் தான் இது காட்டுகின்றது. குஷ்புவின் இந்த கூற்றின் பின் உள்ள சமூக பொருளாதார அடிப்படை தான் என்ன. அது உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய பொருளாதார உள்ளடகத்தின் கொப்பளிப்பு அல்லவா.

குஷ்பு இந்த நுகர்வுச் சந்தை விதிக்கு அமைய புலம்பும் போது, கவர்ச்சியைக் காட்டி சமூகத்துக்கு முன் தன்னை நிலைநிறுத்திய அதே திமிருடன் தான், கொப்பளித்து கருத்துரைக்க முடிகின்றது. இதைத் தான் அ.மார்க்ஸ் ஒவ்வொரு வரியிலும் உடன்பாடு உண்டு என்று கூறி, இந்த ஆணாதிக்க உலகமயமாதல் உருவாக்கும் ஒழுக்கக்கேடான மேட்டுக்குடி பெண்ணின் வாழ்வின் முறையை ஆதரிக்கின்றார். இதையே அடிமட்டத்தில் உள்ள அனைத்துப் பெண்களும் தமது சொந்த வாழ்வியல் முறையாக கொள்ளவேண்டும் என்று உளறுகின்றார். இதைத்தான் இந்தக் கும்பல் பெண்ணியம் என்கின்றது.

வழக்கறிஞர் ரஜினி. ~~ஆண்களைத் தலைவர்களாகக் கொண்ட அரசியல் அமைப்புகள் தங்களது சொந்த ஆதாயத்திற்காக குஷ்பு என்கிற பெண்ணுக்கு எதிராக பெண்களையே தூண்டிவிடுகிறார்கள்" என்கிறார். அடிப்படையில் குஷ்பு ஒரு பெண் என்ற வகையிலும், குஷ்புவை எதிர்த்தவர்களின் கட்சி தலைவர்கள் ஆண்கள் என்ற வகையிலும் இதை குறுக்கி, குஷ்புவுக்கு வக்காலத்து வாங்குகின்றார். ரஜனி குறித்த கட்சிகளிள் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கூறை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு, குஷ்புவின் ஆடம்பரமான உலகமயமாதல் ஆணாதிக்கம் வழங்கும் நுகர்வு விபச்சாரத்தை சமூகமே கைக்கொள்ளவேண்டும் என்று வழக்காடுகின்றார். இவர் பாரிஸ் இலக்கிய சந்திப்பில் உலகமயமாதல் பெண்ணின் விபச்சாரத்தனத்தை, ஆதரித்து, அதன் அடிப்படையில் குஷ்புவின் ஒழுக்கக்கேட்டை ஆதரித்தார். இதை நாம் தனியாக கீழே விரிவாகப் பார்ப்போம்.

அடுத்த தலித் ஆய்வாளரும் ஏகாதிபத்திய உலகமயமாதலின் எடுபிடியுமான ரவிக்குமார் ~~சர்வேயின் முடிவுகளின்படி கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்து அது. அதை இந்த அளவு பிரச்சனையாக்கியிருக்கத் தேவையில்லை" என்று கூறி விடையத்தை முடக்கி தப்பிவிடவே முனைகின்றார். இதை அரசியலாக்கி மோதுவது அவர் தாங்கி நிற்கும் தலித்துகள். உலகமயமாதலை ஆதரித்து நிற்கும் மோதல் தரப்புகள், இரண்டும் சமூக பொருளாதார ஆணாதிக்கம் சார்ந்து அரசியல் ரீதியாக அம்பலமாவதை கண்டு அதில் இருந்து தப்பிவிடவே முனைகின்றார்.

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 2

பெண் விடுதலை என்பது பாலியல் சுதந்திரம் அல்ல

பெண் விடுதலையைப் பற்றி பேசமுற்படுபவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். சூக்குமமாக சந்தர்ப்பத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப கூத்தடிப்பது பெண்ணியமல்ல. முதலில் தெளிவாக இன்றைய ஆணாதிக்க உலகைப்பற்றிய கருத்துகளை சமூகத்தின் முன் வைக்கவேண்டும். ஆணாதிக்க உலகை எப்படி மாற்றினால், அது பெண்ணியமாக இருக்கும் என்பதை முரணற்ற வகையில் தெளிவாக்க வேண்டும். அதாவது ஆணாதிக்கமற்ற சமூகமாக, ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் ஒரு சமூகம் எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அங்கும் இங்குமாக ஒழிந்து நின்று கொண்டு, கருத்துரைக்க முடியாது. பெண்ணியத்தை சூக்குமமாக இருண்டவெளியில் வைத்து சமூகத்தை கொச்சைப்படுத்த முடியாது. இங்கு தனிப்பட்ட ஒரு பெண், தனது சொந்த வாழ்வியல் துயரத்தை போக்க போராடுவதற்கு, இது எந்தவிதத்திலும் தடையானதல்ல. சமூகத்துக்கு கருத்துரைப்பவர்கள், இப்படித் தான் பெண்கள் வாழவேண்டும் என்று கூற முற்படுபவர்கள், நிச்சயமாக தெளிவான வகையில் பெண்ணியத்தை விளக்கியாகவேண்டும். நாம் குறிப்பாக இன்றைய சமூக பொருளாதார அமைப்பு சார்ந்த ஆணாதிக்கத்தில் இருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டவேண்டும்.

இன்றைய அனைத்து சமூக பொருளாதார அமைப்பும், அது சார்ந்த சித்தாந்தங்களும், மனித கோட்பாடுகள், இது உருவாக்கும் வாழ்கை முறைகள் அனைத்தும் ஆணாதிக்கம் சார்ந்தது. இதில் இருந்து பெண்ணியம் எப்படி வேறுபடுகின்றது என்பதே, அடிப்படையான பெண்ணியம் பற்றிய புரிதலாகும், விவாதமாகும். குஷ்புவின் ஒழுக்கக்கேடான சமூகவிரோதக் கூற்றுகள் கூட, இந்த ஆணாதிக்க அமைப்பில் இருந்தே வருகின்றது.

ஆணாதிக்க வடிவங்களினுள் சோரம் போகும் பெண்ணியம்

இன்றைய ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பில், அனைத்தும் ஆணாதிக்க வடிவங்கள் தான். எந்த ஆணாதிக்க ஒழுக்கமும், இருக்கும் சமூக அமைப்பில் மறுக்கப்படும் போது அவையும் ஆணாதிக்கம் தான். அதாவது இருக்கும் சமூக அமைப்பை மறுக்கும் போது தான், ஆணாதிக்கமற்ற நிலை உருவாகின்றது. இன்று இருக்கும் ஆணாதிக்க சமூகப் பொருளாதார அமைப்பு என்ன எனப்பார்ப்போம்.

1. உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு, பெண்ணைப் பற்றி முன்வைக்கும் பார்வை என்ன என்பதையே எந்தப் பெண்ணியமும் முதலில் தெளிவாக்க வேண்டும். குஷ்புவின் கருத்துக்கு ஆதரவாக பதிலளிக்க முன், இது தெளிவாக்கப்பட வேண்டும். இதில் இருந்துதான், நாம் சமூகத்தில் வெளிவரும் கருத்துகளை பெண்ணிய நோக்கில் பகுத்தாயமுடியும். இல்லையென்றால் தத்துவ வறுமையில், ஒழுக்ககேடான விபச்சாரத்தை பெண்ணியமாக சித்தரிப்பது நிகழும். இதுவும் ஆணாதிக்கம் சார்ந்தது.

2.நிலப்பிரபுத்துவ சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு முன்வைக்கும் பெண் பற்றிய பார்வை என்ன என்பதையும், பெண்ணியம் முதலில் முன்வைக்க வேண்டும். இதை தெளிவுபடுத்தாவிட்டால், தத்துவ வறுமை உலகமயமாதல் பெண்ணின் ஒழுக்கக்கேடான வாழ்வை பெண்ணியமாக சித்தரிப்பது நிகழும்.

3.இதே போன்று முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு முன்வைக்கும் பெண் பற்றிய பார்வையையும் தெளிவாக முன்னிறுத்த வேண்டும். இந்த முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு கோரமாக இழிந்து மனிதவிரோதத் தன்மை கொண்டதாக மாறும் போதுதான், உலகமயமாதல் என்ற பொருளாதார கட்டமைப்பு உருவானது. இங்கு பெண்பற்றிய பார்வை இக்காலத்தில் வெவ்வேறானதாகவே அமைந்தன. இதைப் பற்றிய வரலாற்று வளர்ச்சியை பெண்ணியம் கோட்பாட்டு ரீதியாக தெளிவாக்க வேண்டும்.

ஆனால் பெண்ணியம் பற்றி பேசுபவர்கள் யாரும் இதைச் செய்வதில்லை. சொந்த தத்துவ வறுமையில் நின்று, சந்தர்ப்பத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப, உலகமயமாதல் ஆணாதிக்கம் வழங்கும் பெண் பற்றிய வாழ்வியல் ஒழுங்கை பெண்ணியமாக கருதுவது நிகழ்கின்றது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் அடிமைப் பெண்ணாக பெண்ணை உருவாக்கிய எமது அமைப்பில், உலகமயமாதல் அமைப்பு உருவாக்கும் மாற்றத்தை பெண்ணியமாக கருதுவதும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதும் இயல்பாக ஏற்பட்டு விடுகின்றது. இதை ஒரு பெண்ணின் புரட்சியாக நம்புவதும் கூட நிகழுகின்றது.

மேல் குறிப்பிட்ட இந்த மூன்று ஆணாதிக்க சமூக அமைப்பு சார்ந்து, பெண் பற்றி மூன்று விதமான பொதுப்போக்கு காணப்பட்டது, காணப்படுகின்றது. இந்த மூன்றும் ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பு சார்ந்தது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கும், உலகமயமாதல் என்ற சமூக அமைப்புக்கும் இடையில் பெண்பற்றி ஆணாதிக்கப் பார்வை, முரண்பட்ட எதிர்நிலைத் தன்மை கொண்ட போக்காக காணப்படுகின்றது. இதுவே இன்று முரண்பாடாக, கூக்குரலாகவும் கூட வெளிப்படுகின்றது. இன்று ஒரு பெண் பற்றிய ஆணின் பார்வை சரி, பெண்ணின் பார்வை சரி, இந்த சமூக பொருளாதார கூறுகளுக்கு வெளியில் எதையும் கொண்டிருப்பதில்லை.

உண்மையில் பண்பாட்டு கலாச்சாரத்துறையில் இவர்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடு, பொருளாதார துறையில் காணப்படுவதில்லை. பண்பாட்டு, கலாச்சாரத் துறையில் முரண்பட்டு எதிர்நிலையில் மோதும் இவர்கள், பொருளாதாரத் துறையில் உலகமயமாதலை ஆதரிப்பவர்களாக ஐக்கியப்பட்டு உள்ளனர். குஷ்பு விவகாரத்தில் மோதும் இரு தரப்பும், உலகமயமாதலை ஆதரிப்பதில், அந்த சமூக பொருளாதார கோட்பாட்டை முன்னெடுப்பதில் ஒன்றுபடுகின்றனர். பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜனி, இந்த அரசியல் விபச்சார தரகுவேலையை சிறப்பாகவே செய்தார். இதில் எதிரெதிராக களத்தில் நிற்பவர்கள் தலித்துகள், பெண்ணியல் வாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள்! ஆனால் இருதரப்பும், உலகமயமாதலை விசுவாசமாக ஆதரிக்கின்றனர். ஒரு விசித்திரமான, ஆனால் மக்கள் விரோதத் தன்மை கொண்ட ஒரு உண்மையாகும்.

பெண்ணின் மீதான ஆணாதிக்க அடக்குமுறையை ஆணாதிக்க சமூக பொருளாதார உள்ளடக்கத்தில் புரிந்து விளக்காத அனைத்தும், இந்த ஆணாதிக்கத்தில் ஏதோ ஒரு சார்புத் தன்மை கொண்டதாகவே அமைகின்றது. இந்த ஆணாதிக்க சமூக பொருளாதாரத்தில் பெண் ஆணின் பாலியல் நுகர்வுப் பொருளாக இருப்பதால், இந்த பொருளாதார அமைப்பில் பெண் விடுதலை அடைதல் என்பது கற்பனையிலும் சாத்தியமற்றது. மாறாக இந்த சமூகப் பொருளாதார அமைப்பின் மீதான ஒட்டுமொத்த மறுதலிப்பின்றி, எந்த பெண்ணும் இந்த ஆணாதிக்க சமூக பொருளாதார கூறுகளில் இருந்து விடுதலையடைய முடியாது. இதை மறுதலிக்கும் எந்தப் பெண்ணியக் கோட்பாடும், நிலவும் ஆணாதிக்க சமூக பொருளாதாரம் சார்ந்து ஆணாதிக்கமாகவே நீடிக்கும். சுற்றி சுற்றி இந்த ஆணாதிக்க அமைப்பில் சறுக்கி வீழ்வதே நிகழும்.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூகப் பொருளாதார பெண்ணை, ஆண் தனது தனிப்பட்ட நுகர்வுக்குரிய ஒரு சொத்தாகவே கருதினான், கருதுகின்றான். இதன் ஒரு அங்கமாக சொத்துரிமை சார்ந்து, வளர்ச்சியுற்றதுதான் குடும்பம் என்ற அலகு. இது பெண்ணின் நோக்கில் ஒரு திரிபுதான். பெண் ஒருதார மணத்தை, தனிச்சொத்துடமை அமைப்பில் ஆணின் வரைமுறையற்ற காட்டுமிராண்டித் தனமான புணர்ச்சியில் இருந்து தப்பிப்பிழைக்கவே, தனது சொந்தத் தேர்வாகவே தெரிவு செய்தாள். ஆனால் ஆணாதிக்க சமூக அமைப்பின் வளர்ச்சியில் அவள் விரும்பி தேர்ந்த வடிவம் கூட திரிபடைந்தது. கடந்த 2000 வருடங்கள் பல மாறுதலை அது கண்டுவந்த போதும் கூட, பெண்ணின் மீதான நிலப்பிரபுத்துவ ஆணின் அதிகாரம் சொத்துரிமையின் அடிப்படையிலேயே காணப்பட்டது. பெண்ணின் உழைப்பை சுரண்டவும், பெண்ணின் மீதான பாலியல் நுகர்வை அடையவும், இதனடிப்படையிலான குடும்ப அலகு ஒரு இறுக்கமான வடிவத்தில் காணப்பட்டது. இதைப் பாதுகாப்பதில் மதமே மிகமுக்கியமாக ஆணாதிக்க சமூக கோட்பாட்டுக்குரிய பங்கை வகித்தது.

சமூக பொருளாதார கட்டமைபில் ஏற்பட்ட முரண்பாட்டால் உருவான உலகமயமாதல் என்ற சமூக கட்டமைப்பு, எப்படி நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பை மறுத்ததோ அப்படி கடந்தகால நிலப்பிரபுத்துவ குடும்ப அலகு சார்ந்த ஆணாதிக்க பெண்ணையும் மறுதலிக்கின்றது. இதை இன்று பெரும்பாலான பெண்ணியல் வாதிகள் புரிந்து கொண்டதில்லை. மாறாக உலகமயமாதல் ஆணாதிக்கத்தையே, பெண்ணியமாக விளக்குவதே இன்று தீவிர பெண்ணியமாக காட்டப்படுகின்றது. இதுதான் உண்மை. இதை அவர்கள் யாரும் மறுக்க முடியாது.

இன்று உலகமயமாதல் என்ற ஆணாதிக்க பொருளாதாரக் கட்டமைப்பு பெண் பற்றி கொண்டுள்ள கொள்கை என்பது, ஒரு பெண்ணை வெறும் நுகர்வுச் சரக்காக மட்டும் காண்கின்றது. இன்றைய விளம்பரங்கள் அனைத்தும் இந்த வகையில் தான், பெண்ணைச் சித்தரிக்கின்றது. சினிமா முதல் ஒலி, ஒளி நிகழ்ச்சி வரை, ஏன் பெண் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து தளத்திலும், பெண் ஒரு நுகர்வுக்குரிய கவர்ச்சிகரமான பெண்ணாகவே இன்று உலகமயமாதல் காட்டுகின்றது. இது பழைய நிலப்பிரபுத்துவ பெண்ணின் ஆணாதிக்கக் கட்டுக்கோப்பையே கிண்டல் செய்கின்றது. அதை ஜனநாயக மீறல் என்கின்றது. அதை அநாகரிகமானதாகவும், மனித உரிமை மீறலாகவும் கூட காட்டுகின்றது. இதன் போதே தீவிர பெண்ணியல் வாதிகள் என்போர் (இங்கு ஆண் பெண்) வேப்பிலைக்கட்டிக் கொண்டு, இதற்கு அரோகரா போட்டு கும்மியடிக்கின்றனர்.

உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு பெண்ணை நுகர்வுக்குரிய ஒரு பாலியல் பண்டமாகவே கருதுகின்றது. உலகமயமாதல் உலகில் சொத்துரிமையை சமூக அலகில் இருந்து பிரித்து, அதை தனிப்பட்ட சொத்தாக குடும்பத்தக்கு வெளியிலும் குவிக்கின்றது. குடும்பச் சொத்து என்ற நிலப்பிரபுத்துவ சொத்துரிமை கூறு கூட, தனக்கு தடையாக இருப்பதை உலகமயமாதல் அனுமதிக்கவில்லை. இதனால் இந்த சொத்துடமைக் குடும்பத்தையும் கூட உலகமயமாதல் சிதைக்கின்றது. நுகர்வு சார்ந்த பாலியல் நோக்கில், நிலப்பிரபுத்துவ குடும்ப அலகு என்பது சுதந்திரமான பாலியல் நுகர்வுக்கு தடையாக இருப்பதை உலகமயமாதல் காண்கின்றது. பெண்ணை பாலியலில் சுதந்திரமான தனிப்பட்ட பெண்ணாக, குடும்பத்துக்கு வெளியில் கவர்ச்சிகரமான பதுமையாக நிறுத்துகின்றது. அதேநேரம் பெண்ணின் உழைப்பை ஆணுக்கு ஊடாக அல்லாது, கூலி கொடுத்து வாங்கும் ஒரு உழைப்புக் கருவியாக சந்தையில் நிறுத்துகின்றது. ஆணின் உழைப்புக்கான கூலியைக் குறைத்து, ஆண் ஒரு குடும்பமாக பெண் அதில் தங்கி வாழமுடியாத நிலையை உருவாக்கி, பெண்ணை கூலிகளாக மூலதனம் சந்தைக்கு கொண்டு வந்தது.

இப்படி ஆணாதிக்க சுரண்டல் சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இசைவாக, பெண்ணும் மாற்றப்படுகின்றாள். இவை பொதுவாக சமூக ஆதிக்கம் பெற்ற வர்க்கங்களின் பொது நிலைப்பாடாகவே இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஒரு பெண் அதை எப்படி உள்வாங்கி உணருகின்றாள் என்பதைப் பார்ப்போம்.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக அமைப்பில் ஒரு பெண், கட்டுக்கோப்பான தனது குடும்ப அலகை பராமரிப்பதே தனது கடமை என்று காண்கின்றாள். குடும்பத்தின் தேவையையும், ஆணின் தேவையையும் பூர்த்தி செய்து வாழ்வதே பெண்ணின் ஒழுக்கமாக காண்கின்றாள். தனிப்பட்ட ஆணுக்கான சேவை உழைப்பும், பாலியல் ரீதியாக குறித்த ஆணுடன் இணங்கி வாழ்ந்து மகிழ்ச்சி அடைவதே குடும்பமாக காண்கின்றாள். இதை அவள் மகிழ்ச்சிக்குரியதாக மாற்ற முனைந்தாள். இதில் இருந்தே ஆணாதிக்க பண்பாடுகளும், கலாச்சாரங்களும் பெண் சார்ந்து உருவாகின. தாய்மைக்குரிய சமூகப் பண்பு பெண்ணிடம் உயர்ந்து நின்றதால், காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சமூக அமைப்பிலும் கூட, பெண் சமூக உயிரியாக இருந்ததால் மொத்த சமூகத் தன்மையையே உயிருள்ளதாக்கி வைத்திருந்தாள். இதனால் சமூகம் உயிருள்ளதாக இருந்தது. சமூகத் தன்மை குடும்பம் சார்ந்த போதும் கூட, சமூகத்தின் இயல்பான வாழ்வியல் இதுவே அடிப்படையாக இருந்தது.

ஆனால் இவை எல்லாம் உலகமயமாதல் அமைப்பில் முற்றாக தகர்ந்து போகின்றது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூக உயிரி என்பதை மறுப்பதே, உலகமயமாதலின் ஆதாரமான கொள்கை. ஆணோ பெண்ணோ அல்லது குழந்தையோ யாராக இருந்தாலும், அவாகள் ஒரு சமூக உயிரியாக இருக்க வேண்டியதில்லை. மாறாக தனிமனித நலனுடன் ஒருவரையொருவர் சார்ந்தல்ல, குழிபறித்து வாழ்வதை வழிகாட்டுகின்றது. பழைய குடும்ப அலகுக்கு பதில், சுயநலமாக ஆணைப் போல் பெண் மற்றும் குழந்தைகளும் சுயநலத்துடன் வாழ்தலையே சுதந்திரம், ஜனநாயகம் என்கின்றது. பழைய நிலபிரபுத்துவ குடும்ப அலகு என்பது, அதாவது ஆணின் சுயநலம் சார்ந்த இந்த அமைப்பு தகர்ந்து போகின்றது. இதையே தீவிர பெண்ணியல்வாதிகள் பெண்ணியம் என்கின்றனர். இது பெண்ணை ஆணில் இருந்து விடுவிக்கின்றது என்கின்றனர். பெண் பாலியல் ரீதியாக சுதந்திரம் அடைகின்றாள் என்கின்றனர். உண்மையில் நடப்பது ஒரு ஆணின் சொத்து சார்ந்து பெண் ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்த நிலை என்பது தகர்ந்து, பெண் நுகர்வுக்குரிய பாலியல் பொருளாகி ஆணாதிக்க சந்தைப் பொருளாகின்றாள். இதில் பெண்ணையும், பாலியல் ரீதியாக ஆணைப் போல் ஆணுக்கு சோரம் போய் பெண்ணை நுகரக் கோருகின்றது. இந்த ஆணாதிக்க உலகமயமாதல் உருவாக்கும் பெண்ணின் நிலையைத்தான், தீவிர பெண்ணியம் என்று கூறி கும்மியடிப்போர் பெண்ணியம் என்கின்றனர். இதை யாரும் இல்லை என்று நிறுவவே முடியாது.

முதலாளித்துவ சமூக அமைப்பு நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கு மாற்றாக உருவான போது கூட, கடந்து வந்த குடும்ப அலகை முற்றாக சிதைத்துவிடவில்லை. இப்படி நீடித்த சமூக அமைப்பு, உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார அமைப்பில் குடும்பம் என்ற அலகு அவசியமற்றதாகின்றது. பாலியல் என்பது இங்கு நுகர்வு கண்ணோட்டத்தில், தனிமனிதனின் சுயநல எல்லைக்குள் சுருங்கிப் போனது. இது இயந்திரத் தன்மையானதாகவும், கவர்ச்சியை அடிப்படையாக கொண்டதாகவும், போலித்தனமான கூறுகளே, இந்த பாலியல் இணைப்பின் புள்ளியாகின்றது.

ஆண் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் பெண்ணை கற்புள்ள ஒருதார மணத்தில் ஒழுக்கத்தைக் கோரிய போது கூட, ஒழுக்கத்தை தனக்கு விதிவிலக்காக்கி பொது விபச்சாரத்தை ஆண் தக்கவைத்துக் கொண்டான். இன்று உலகமயமாதல் பெண்ணின் கற்பு சார்ந்த ஒருதார மணத்தை தகர்த்து, அதனிடத்தில் பெண் பொது விபச்சாரியாக்கப்படுகின்றது. தனிச்சொத்துரிமை அமைப்பு உருவான போது, அது இயல்பில் பெண் மீதான ஆணின் காட்டுமிராண்டித்தனமான வரைமுறையற்ற பாலியல் அத்துமீறலைத் தடுக்க, பெண் ஒரு தலைபட்சமாக ஒருதாரமணத்தை தேர்ந்தெடுத்தாள். ஆனால் பின் அந்த ஒருதாரமணமே பெண்ணின் சிறைக்கூடமாகவும் மாறியது. ஆணால் ஆண் பலதார மணத்தில் வாழ, பொது விபச்சாரத்தை தக்கவைத்து இருந்தான். பெண் அன்று எதைத்தடுக்க ஒரு தாரமணத்தை தேர்ந்தாளோ, அதை தகர்த்து ஆண் மீண்டும் பொது விபச்சாரியாக்கி பெண் மீதான பாலியல் அதிகாரத்தைப் பெற்று விடுகின்றான். இங்கும் பெண்ணும் ஆணுக்கு நிகராக நுகரலாம் என்பது, தொழிலாளியும் முதலாளியாகலாம் என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது.

ஏனென்றால் இந்த சமூகப் பொருளாதார அமைப்பே ஆணாதிக்கமாக உள்ளதால், பெண்ணின் நிலை இயல்பாகவே பொது விபச்சார நிலையை அடைகின்றது. இதையே பெண் விடுதலை என்று ஏகாதிபத்தியமும் சொல்லுகின்றது. தீவிர பெண்ணியமும் இதைத் தான் வாந்தியெடுத்து சொல்லுகின்றது. பெண்ணின் சுயம் சார்ந்த ஒழுக்கம் (இது ஆணுக்கும் உண்டு)அவசியமற்றதாக்கி, பொதுவிபச்சாரமே ஒழுக்கமாகின்றது. நுகர்வை, செல்வத்தின் உச்சத்தில் உள்ளவர்கள் (பொதுவாக மேற்கத்தையவர்கள்) எப்படி நுகர்கின்றனரோ, அப்படித் தான் பெண்ணையும் பாலியல் ரீதியாகவும் நுகர்வதை உலகமயமாதல் வழிகாட்டுகின்றது. ஆண் பெண் பாலியல் உறவு என்பது, வெறும் உடல் சார்ந்த பாலியல் சரக்கு என்ற நிலையைத்தான் ஆண் பெண் உறவு வழிகாட்டுகின்றது. இங்கு எந்த சமூக உணர்வும், இவர்களுக்கு இடையில் உருவாவதை உலகமயமாதல் மறுக்கின்றது. உதாரணமாக பிரான்சில் டிஸ்கோ ஒன்றில் வேலை செய்யும் ஒருவரின் வேலைபற்றி ஒருவர் குறிப்பிட்டார். அவரின் வேலை ஆண் பெண் சோடியாக, அதாவது சோடியாக யார் மலசலகூடத்துக்குச் சென்றாவும் அவர்களை தடுப்பதுதான் அவரின் வேலை. நான் முன்பு வேலை செய்த ஒரு டிஸ்கோவில், மலசலக் கூடத்துக்கு முன்னால் ஆண் உறையைப் பெறும் தன்னியங்கி இயந்திரம் பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே கால் வைத்தால் சறுக்கும் வகையில் ஆண் உறைகள்.

இது டிஸ்கோவில் மட்டுமல்ல. பல தளத்தில் காணப்படுகின்றது. நுகர்வு என்ற உள்ளடக்கம், பணம் கொடுத்தும், பரஸ்பரம் நுகர்தல் என்ற எல்லைவரை விரிந்து காணப்படுகின்றது. இதைத்தான் பெண்ணியம் என்றால், இதைத் தான் பாலியல் சுதந்திரம் என்றால், இந்த கோட்பாட்டாளர்களின் நுகர்வு வெறியே வக்கிரப்பட்டு வெளி வருகின்றது. குஷ்பு போன்ற மேட்டுக் குடிகள் தமது சொந்த வாழ்வு சார்ந்து இப்படித் தான் வாழ்கின்றனர். அவர்களின் மேட்டுக்குடி வாழ்வில் சமூக நலன் சார்ந்து எந்தக் கூறும் இருப்பதில்லை. இது அவர்களின் பாலியல் கூறிலும் கூட இருக்கமுடியாது. இருப்பது நுகர்வு அடிப்படையிலான கண்ணோட்டம் தான். பாலியலிலும் கூட சமூகக் கூறு உள்ளது. இதை தீவிர பெண்ணியம் கண்டுகொள்வதேயில்லை. இதில் இருந்தே உலகமயமாதலில் பெண் தாய்மைப் பண்பை இழந்து, சமூகப் பண்பை இழந்து வெறும் பாலியல் சரக்காக உடல் சார்ந்த பண்டமாகி விடுகின்றாள். இந்த நிலையை ஆதரிப்பவர்கள் தான், தீவிர பெண்ணியம் என்ற பெயரில் கவர்ச்சியாக தம்மை சிங்காரித்துக் காட்டுகின்றனர். இதை ஆதரிக்கும் ஆண், அந்த நுகர்வுக்குரிய பெண்ணை அடையும் நோக்கில் அணுகுகின்றான். இந்த தத்துவ உலகில் இப்படி ஆண்களையும், பெண்களையும் கூட நாம் கண்டு வருகின்றோம்.

பெண் சமூக உயிரிக்குரிய இயற்கையாகவே அவளிடம் எஞ்சிக் கிடந்த தாய்மைப் பண்பை வலிந்து இழக்கும் போதே, குழந்தைக்கு பாலூட்ட மறுக்கின்றாள். குழந்தையின் பிறப்பையே இழிவாகப் பார்க்கின்றாள். கற்பப் பையை அறுத்து எறிவது பற்றி வீரவசனம் பேசுகின்றாள். தனது சொந்த குழந்தையையே கைவிடுகின்றாள். ஆனால் பாலியல் ரீதியாக ஆணுடன் உறவு கொள்வதை மட்டும் நுகர்வு அடிப்படையில் கைவிடுவதில்லை. ஒரு அராஜகப் பெண்ணாக தன்னைத்தான் சிங்காரித்து சீரழிகின்றாள். இதைத்தான் பெண்ணியமாக சித்தரிக்கின்றனர். இந்த ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பை மாற்றாத ஆணாதிக்கமே இன்று பெண்ணியமாக சித்தரிக்கப்படுகின்றது. பெண்ணியம் பேசும் இன்றைய இந்த சித்தாந்த வாதிகளின் கோட்பாடே இதுதான்.

உண்மையில் நிலப்பிரபுத்துவ சமூகப் பொருளாதார கட்டமைப்பில் இருந்து முதலாளித்துவ கட்டமைப்பின் ஊடாக வளர்ச்சியுற்ற உலகமயமாதல் என்ற கட்டமைப்பின், பல இடைகட்டங்களை பெண் பல வடிவங்களில் கடந்துவந்தாள். இப்படி மாறிவந்த சமூகப் போக்கு சார்ந்து, ஆதிக்கம் பெற்ற வர்க்கங்களிடையே தான் எப்போதும் ஆதிக்கம் பெற்ற ஆணாதிக்க ஒழுக்கம் அதிகார பூர்வமான பண்பாடாக நடைமுறையில் இருந்தது. ஆனால் ஆதிக்கம் பெற்ற சமூகப் பொருளாதார அமைப்பினால் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளில், இது அதிகார பூர்வமான பண்பாடாகவும் ஒழுக்கமாகவும் கூட ஒருநாளுமே இருக்கவில்லை. இந்த சமூகப் போக்குடன் முரண்பட்ட சமூகமும், குறிப்பாக பெண்களும் பொது ஆணாதிக்க ஒழுக்கத்துடன் முரண்பட்டு பலவேறு கூறுகளுடன் தான் அவள் வாழ்ந்தாள். ஆதிக்கம் பெற்ற சமூக போக்கு முரண்பாடாக, இங்கு பெண்கள் சுதந்திரமுள்ளவராக இருந்தனர்.

உதாரணமாக உயர்சாதி பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ பெண்ணின் ஒருதார மணமுறையை, தாழ்த்தப்பட்ட பெண்கள் தமது ஒழுக்கமாக கடைப்பிடிக்கவில்லை. இங்கு பெண்ணின் விருப்பார்ந்த தேர்வு சுதந்திரமானதாக இருந்தது. இது இன்று ஏகாதிபத்தியம் பெண்ணியம் கூறும் அடிப்படையில், அதாவது பாலியல் அடிப்படையில் நிகழவில்லை. மாறாக பாலியல் அல்லாத கூறுகளே, ஆண் பெண் உறவில் முதன்மை பெற்றதாக இருந்தது. இங்கு ஆண் பெண்ணுக்கு இடையில் பரஸ்பர விசுவாசம் அந்தக் குடும்பத்தின் மையக் கூறாக இருந்தது. பெண்ணின் பிரிவும் ஐக்கியமும் பாலியல் சார்நத்தாக இருக்கவில்லை. வாழ்வு சார்ந்ததாகவே இருந்தது.

இன்றைய பெண்ணியல் வாதிகளினதும், பெண் விடுதலையை பேசும் ஆண்களினதும் கருத்துகள் இதற்கே எதிரானது. கோட்பாட்டு ரீதியில் தீவிர பெண்ணியம் பற்றிய கோட்பாடுகள் செயல்பாடுகள், நடைமுறைகள் உலகமயமாதல் சமூக பொருளாதார விளைவின் சீரழிவாக உள்ளது. ஆனால் கிராமப்புற பெண்ணகளின் நிலைப்பாடுகள் ஜனநாயகக் கூறாக உள்ளது.

நிலப்பிரபுத்துவ அமைப்பின் பெண்ணின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் தீவிர பெண்ணியம் உலகமயமாதல் பெண்ணை சுதந்திரமாக காணும் போக்கு காணப்படுகின்றது. இதற்கு மாறாக உலகமயமாதல் சமூக அமைப்பில் பெண் வெறும் பாலியல் பண்டமாக இருப்பதை எதிர்த்து, நிலப்பிரபுத்துவ குடும்பப் பெண்ணை வலியுறுத்துவது காணப்படுகின்றது. இந்த வகையில் தான் இன்று புலம்பல்கள், தீர்மானங்கள், வாய் வீச்சுக்கள், போராட்டங்கள் எல்லாம் நடத்தப்படுகின்றன.

இந்த இரண்டும் மக்கள் விரோத ஆணாதிக்க சமூக பொருளாதார கூறாக இருப்பதை இவர்கள் காண்பதில்லை. ஒரு பெண்ணை இந்த நிலையில் வைத்திருக்கின்ற சமூக பொருளாதார கூறுகளை பற்றிய தெளிவான பார்வை இன்றி, அதை சமூகம் சார்ந்து புரட்சிகரமாக மாற்றுவதைப் பற்றிய அரசியல் சமூக பொருளாதார நடைமுறையின்றி, பெண்விடுதலை பற்றிய கருத்துகள் அனைத்தும் அபத்தமானவை. இவை அனைத்தும் இந்த ஆணாதிக்க சமூகப் பொருளாதார கட்டமைப்புக்குள், ஏதோ ஒரு வகையில் தன்னைத்தான் அடையாளம் காட்டிக் கொள்பவைதான். இந்த சமூக உண்மையை யாரும் மறுத்து நிறுவமுடியாது.

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 1

ணாதிக்க பாலியல் வக்கிரத்தை பெண் தானும் தனது பங்குக்கு நுகரக் கோருவதா பெண்ணியம்? இப்படித்தான் குஷ்பு விவகாரத்தில் பலரும் தம்மைத் தாம் வெளிப்படுத்தினர். இவர்கள் பலர் குஷ்புவை பெண்ணியல்வாதியாகவும், தம்மை அவரின் சிஷ்சிகளாகவும் வரிந்து கட்டிக் கொண்டு கூத்தாடினர்.


ஆணாதிக்க உலகமயமாதல் கட்டமைக்கும் தனிமனித உலக ஒழுங்கு உருவாக்கும் சமூக வெறுப்புகளே சமூக ஒழுக்கவிதிகளாகி விபச்சாரமாகின்றன. இன்றைய உலகமயமாதல் உருவாக்கும் வக்கிரமான சந்தை நுகர்வே, இன்றைய பாலியல் நுகர்வுக்குமான அடிப்படையாகியுள்ளது. இதில் ஆண் மட்டும் நுகர்வதற்கு பதில், பெண்ணையும் நுகரக் கோரும் உலகமயமாதலின் தாராளமயமாதல் நிகழ்ச்சிநிரல் தான், தீவிர பெண்ணியமாக வெளிவருகின்றது.


உலகமயமாதல் என்ற ஆணாதிக்க நிகழ்ச்சி நிரலில், தீவிரமான பெண்ணின் சோரம் போகும் பங்காற்றலைத் தான், இன்று பெண்ணியமாக காட்டி, அதைப் பலர் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றனர். கேவலமான ஆணாதிக்க சமூக அமைப்பில் ஆண் எதையெல்லாம் செய்ய முடிகின்றதோ, அதையெல்லாம் பெண் செய்யும் உரிமையைத்தான் பெண்ணியமாக கருதுகின்ற வக்கிரம் அரங்கேறுகின்றது. ஆணின் ஆணாதிக்க மனிதவிரோதச் செயல்கள் சமூகவிரோதத் தன்மை கொண்டதாக இருப்பதை காணமறுப்பதே, பெண்ணியமாகிவிட்டது.

சமூகத்தன்மையை மறுக்கும் தனிமனித சுயநலம் கொண்ட ஆணாதிக்க ஆணை, பெண்ணின் சமூக நிலைக்கு ஒரு சமூக உயிரியாக மாற்றி அமைக்கப்பட வேண்டியதே பெண்ணியம் என்பதை மறுப்பதே, இன்று தீவிர பெண்ணியத்தின் பெயரில் நிகழ்கின்றது. பெண் ஆணாதிக்கவாதியாகின்றாள்.


தீவிர பெண்ணியம் என்ற பெயரிலும், மாற்று இலக்கியம் என்ற பெயரிலும் புலம்பெயர் நாடு முதல் இந்தியா இலங்கை வரை இன்று முன்வைக்கும் கருத்துகள், மக்களின் சமூக வாழ்வுடன் எந்தவிதத்திலும் தொடர்பற்றவை. சொந்த தனிமனித வக்கிரங்கள், தனிமனித ஆசைகளும், ஒழுக்ககேடான முறைமையில் சமூகம் மீது தமது அதிகாரத்தின் மூலம் திணிக்கப்படுகின்றது. சமூக தேவைகளை மறுக்கும் நுகர்வுப்பாலியலே தீவிர பெண்ணியமாகி, அதுவே குட்டிபூர்சுவாப் புலம்பல்களாகவும் கொப்பளிக்கின்றது.

உதாரணத்துக்கு அண்மையில் லண்டனில் நடந்த பெண்கள் சந்திப்பு தனது ஒழுக்ககேட்டின் மீது நின்று புலம்பியதை இந்தியாரூடே பத்திரிகைக்கு பேட்டியாக கொடுத்திருந்தனர். அதில் ~~குஷ்பு தெரிவித்த கருத்துகளை மனதார வரவேற்று அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. இது அண்மையில் இந்தியாரூடே பத்திரிகையில் வெளியாகிய செய்தி.

இதே போன்று பாரிஸ் இலக்கிய சந்திப்பு தனது சமூக விரோத ஒழுக்ககேட்டில் ஒர் அங்கமாக ~~தமிழகத் திரைப்படக் கலைஞர் குஷ்பு கூறிய கருத்துக்களுக்குப் பின்னால் குஷ்புவின் பேச்சுரிமை கருத்துரிமையை மறுத்து குஷ்புவை தமிழ் நாட்டை விட்டே விரட்டுவோம் எனக் கூறியும் குஷ்புவின் கருத்துரிமைக்காக குரல் கொடுப்போரை அச்சுறுத்தியும், குஷ்பு மீது பலவழிகளிலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் கட்சிகளையும் அமைப்புகளையும் கலாச்சார அடிப்படைவாதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். என்று கூறி, தமது சொந்த இலக்கியச் சந்திப்பு மரபை மீறி திடீர் தீர்மானம் எடுக்கின்றது.


கவர்ச்சியைக் காட்டியே சமூகத்தின் முன்னிலைக்கு வந்த ஒரு மேட்டுக்குடி பெண்ணின் நுகர்வு சார்ந்த சொந்த பாலியல் வக்கிரத்தை, அதையே அவரின் கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் நியாயப்படுத்துவது நிகழ்கின்றது. குஷ்புவின் கருத்துச் சுதந்திரத்தை கோரும் இவர்கள், தங்கபச்சானின் கருத்துச் சுதந்திரத்தை குஷ்பு மறுத்ததை பற்றி இவர்கள் யாரும் பேசமுற்படவேயில்லை. உலகமயமாதல் உருவாக்கும் சமூக ஒழுக்கக்கேட்டை ஆதரிக்க, கருத்துச் சுதந்திரம் என்ற இலக்கிய அரசியல் பம்மாத்து இவர்களுக்கு தேவைப்படுகின்றது. அனைத்துக்கும் கருத்துச் சுதந்திரம் என்றால், பிறகு ஏன் இதில் மட்டும் சந்தர்ப்பவாதம்.


குஷ்புவுக்காக மூக்கால் சிந்திப் புலம்புகின்றனர். குஷ்பு சொன்ன பாலியல் நடத்தைநெறி பற்றி, இவர்களுக்கு மாற்றுக் கருத்துகிடையாது. மறுபக்கத்தில் சமூகத்தில் பாலியலை இயற்கையாக உணர்ந்து வாழமுடியாது,
கோடானுகோடி மக்கள் கூனிக்குறுகி இந்த சமூக அமைப்பில் வாழ்கின்றனர்.
இவர்களுக்கு இடையில் என எதுவும் செய்ய வக்கற்றவராகவே, தமது சொந்த அரசியல் நிலைப்பாட்டால் புளுத்துக் கிடக்கின்றனர். பெண்ணியம் பற்றிய இந்த தீவிர பெண்ணியத்தின் தத்துவ வறுமை, உலகமயமாதல் வழங்கும் விபச்சாரத்துக்கு கொடிபிடிக்க தூண்டுகின்றது. இலக்கியச் சந்திப்பும் சரி, அதனுள் இருப்போரும் வெளியில் உள்ளவர்களும் சேர்ந்து கூடும் பெண்கள் சந்திப்பும் சரி, சமூகத்தை இழிவாடி அதில் தம்மை மிதப்பாக்கி கூத்தடிக்கும் கும்பல் தான் என்பதை மறுபடியும் நிறுவியுள்ளது. சமூகத்துடன் எந்த தொடர்பையும் கோட்பாட்டு ரீதியாகத் தன்னும் கொள்ள மறுக்கும் இவர்களின் அரசியல் வக்கிரமானது. இதில் பலர் புலியெதிர்ப்பு கும்பலுடன் கூடிக்குலவுபவர்கள். பலர் சமூக சீரழிவுவாதிகள். சிலர் பாலியல் சுதந்திரம் பேசி, அதில் கலந்துகொள்ளும் ஒரு சில பெண்களையாவது பாலியல் ரீதியாக நுகர முயற்சிப்பவர்கள். அதற்காகவே பெண்ணியம் பேசும் ஆண்களும் உள்ளனர். இப்படி பல ரகங்கள். தமது சொந்த ஒழுக்கக்கேட்டில் நின்று, கோசங்களையும் தீர்மானங்களையும் மற்றவர்களின் கருத்துகளை இழிவாக மட்டம் தட்டியே திணிக்கின்றனர்.


இலக்கியத்தின் பெயரில், பெண்ணியத்தின் பெயரில் பாலியல் ரீதியாக பெண்களை நுகர்பவர்கள்; அல்லது நுகர முனைபவர்கள் குஷ்புக்காக தூக்குக்காவடி எடுக்கின்றனர். இந்த ஆணாதிக்க நுகர்வுக்கு ஏற்ப, தத்துவ வறுமை கொண்ட பெண்கள் கோட்பாட்டு ரீதியாக அந்த பாலியல் சுதந்திரத்துக்கு தத்துவ விளக்கம் அளித்து, தம்மைத்தாம் ஆணாதிக்க வக்கிரத்துக்கு இசைவாக சிதைத்துக் கொள்பவர்கள். இப்படி பலர். கடந்த புலம்பெயர் இலக்கிய வரலாற்றிலும் இதற்கென நிறையவே உயிருள்ள சாட்சியங்கள் உண்டு. நான் இலக்கியச் சந்திப்புக்கு முன் எழுதிய விமர்சனத்தின் அடிப்படையில், இவர்களின் சீரழிவு உள்ளது. இம்முறை அது உலகமயமாதலை தலித்தியத்தின் பெயரில், பெண்ணியத்தின் பெயரில் நியாயப்படுத்துகிறது. இந்த அடிப்படையில் தான் குஷ்பு தனது சொந்த மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன் சார்ந்து வெளியிட்ட, நுகர்வு வெறிசார்ந்த பாலியல் சுதந்திரம் என்ற கருத்துக்கு பின்னால் இவர்களும் சேர்ந்து கூத்தாடினர்.

Saturday, December 10, 2005

மக்களின் முதுகில் குத்துவதே அரசியலாகிவிட்டது

தமிழ் பேசும் மக்களின் விருப்பம் எதுவோ, அது எப்போதும் நிராகரிக்கப்பட்டே வருகின்றது. தமிழ் மக்கள் விரும்புவது அமைதியான சமாதானத்தைத் தான். இதை புலிகள் முதல் பேரினவாத அரசு வரை அனைவருமே நிராகரிக்கின்றனர். மக்கள் புலிகளின் யுத்தத்தை விரும்புவதாகவும், அரசு புலிகளின் அடிமைத்தனத்தை விரும்புவதாகவும கூறி யுத்தத்தைத் திணிக்கின்றது. யாரும் ஒரு தலைப்பட்சமாகத்தன்னும் கூட, நேர்மையாக மக்களுக்கு சமாதானத்தையும், அமைதியையும் பிரகடனம் செய்துவிடவில்லை. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் ஒன்றிணைந்து கூட கருத்துரைக்கவில்லை. இதைப் புலிகள் சரி, புலியெதிர்ப்புக் கும்பல் சரி, கருணா சரி, அரசு சரி யாருமே மக்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்து கருத்துரைக்கவில்லை. மக்களின் வாழ்வியல் துன்பங்கள் மலையாகி, அதுவே கண்ணீர் ஆறாக ஒடுகின்றது. அண்மையில் நடந்த தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைத்த ஒவ்வொரு தமிழனும், சமாதானம் வேண்டியே வாக்களித்தனர். ஆனால் இந்தச் செய்தியைக் கூட பிரபாகரனின் மாவீரர் தினச்செய்தி மறுதலிக்கின்றது. மாறாக தாம் விரும்பித் திணித்த முடிவையே, தமிழ் மக்களின் விருப்பார்ந்த முடிவாக காட்டுவதே நிகழ்கின்றது. புலிகள் யுத்தத்தை நோக்கி மீளச் செல்லுதல் என்ற புலிகளின் அரசியல் நிலையும், புலிகள் யுத்தத்தை விரும்பியவாறு தொடங்க முடியாத வகையில் நிர்பந்தத்தைந் செய்வது என்ற அடிப்படையில் பேரினவாதம் கடிவாளங்களைப் போட்டுள்ளது. இரண்டு பகுதியும் தத்தம் பக்கத்துக்கு பரஸ்பரம் இழுக்கின்றனர். புலிகள் யுத்தத்தை நோக்கி படுகொலைகள், இராணுவம் மீதான தாக்குதல் என்ற அடிப்படையில் ஒரு யுத்தத்தையே ஆரம்பித்து விட்டனர். அரசு அதை தடுக்க சர்வதேச சமூகத்தையே நாடிநிற்கின்றது. ஏகாதிபத்தியம் புலிகளின் இந்த நிலையை, அமைதியாகவே அனுமதிக்கும் என்ற நிலையை கடந்து செல்லுகின்றது.

இந்த நிலையில் ஏகாதிபத்தியங்களின் அதிகரித்த தலையீடு, தமிழ் சிங்கள மக்கள் முதல் இலங்கை வாழ் மக்களின் அடிப்படையான சுதந்திரத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது. ஒரு அன்னிய தலையீட்டின் மூலம் தான் அமைதி நிலவமுடியும் என்ற மக்கள் மத்தியிலான ஒரு நம்பிக்கையை, தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் பலாக்காரமாகவே மக்களிடம் வலிந்து திணிக்கின்றனர். இந்த நிலையில் இலங்கையை அடிமைப்படுத்தும் வகையில், அதிகரித்து வருகின்ற நெருக்குவாரங்கள், புலிகளை வரலாற்றில் இருந்தே அரசியல் அனாதையாக்கின்றது.

பேரினவாதமும் குறுந்தேசியப் புலிகளும்

யாரும் இனம் கண்டுகொள்ள முடியாத வகையில், பேரினவாதம் தமிழ்மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமையை இழிவாடியே மறுக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகள் அரசியலில் இனம் காணமுடியாது சூக்குமாகி காணமால் போய்விட்டது. தமிழ் மக்களுக்கு கூட அரசியல் ரீதியாக தமக்கு என்ன பிரச்சனைகள் என்று தெரியாது போய்விட்டது. இதுவே உண்மை. பிரச்சனைகள் வெறும் புலிப்பிரச்சனையாக மாற்றப்பட்டுவிட்டது. தமிழ் மக்களின் பக்கதிலும் கூட இப்படித்தான் மாறிவிட்டது. புலியை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி, தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்னவெனத் தெரியாத ஒரு நிலைக்குள் அம்மணமாகவே தெருப்பிணமாகிவிட்டனர். எங்கும் இந்த நிலை. இந்த அரசியல் உண்மையை புலிகளின் இராணுவாத அரசியல் நடத்தைகள், வெளித்தெரியாத வகையில் சூக்குமமாக்கின்றது. இலங்கையில் எந்தப் பேரினவாதக் கட்சியும், தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனையை பிரச்சனையாகக் கூட எடுக்;கவில்லை. இதை தமிழ் மக்கள் உணர முடியாத வகையில், புலிகளின் இராணுவாத அரசியலே விலங்கிட்டுள்ளது. இதுவே படிப்படியாக வெறும் பிரபாகரன் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த நிலையில் சர்வதேச ரீதியாகவே சமூகங்கள் தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கை சாhந்த உண்மைகளைக் கண்டு கொள்ளமுடியாத வகையில், புலியின் மக்கள் விரோத அரசியலே முன்னிலைப்பட்டு நிற்கின்றது.

இந்த நிலையில் இன்று பேரினவாத அரசு வெறும் புலிப் பிரச்சனையாக மட்டும் தான், தமிழ் மக்களின் பிரச்சனையை எடுக்கின்றனர். இதைத் தான் புலிகளும் கூட தமிழ் மக்களிடம் மட்டுமல்ல, சிங்கள இனவாதிகளிடமும் திணித்துவிடுகின்றனர். பொதுவாக சிங்கள இனவாதிகள் தமது சொந்த இனவாத முகத்தை மூடி நிற்கும் வண்ணம், புலிகளின் ஜனநாயக மீறல்களையே தமிழ் மக்களின் பிரச்சனையாக மாற்றும் வகையில், புலியின் செயல்பாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுகின்றது. புலிகளின் நடத்தைகளும் கூட இதுவாக மாறி நிற்கின்றது. இதைத்தான் புலியல்லாத தரப்பும் கூட, தமிழ் மக்களின் பிரச்சனையை புலிப் பிரச்சனையாகவும், புலியின் ஜனநாயக மீறலைத் தான் தமிழ் மக்களின் பிரச்சனையாக காட்டுகின்றனர். அந்தளவுக்கு புலியின் இராணுவாத அரசியல், மக்களின் நலனில் இருந்து சிந்திப்பதையே மறுக்கின்றது. மக்கள் தமக்கு அடங்கி வாய்பொத்தி கைகாட்டி நிற்பதைத்தான், தேசியமாக புலிகள் புணர்ந்;து காட்டுகின்றனர். நினைத்துப் பார்க்கவே முடியாதளவுக்கு, தமிழ் மக்களின் குரல் வளையில் புலிகள் கையை வைத்தபடி தான், தமிழ் மக்களின் ஏக பிரநிதிகளாக தம்மைதாம் கூறிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் புலியின் ஜனநாயக மீறலைப் பற்றி நாம் நேர்மையாக பேச முற்பட வேண்டும் என்றால், நிச்சயமாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த ஜனநாயகக் கோரிக்கைகளைக் கூட புலிகள் அங்கீகரிக்கவில்லை என்ற உண்மையை நாம் கண்டு கொண்டு, அதை உயர்த்திப் போராட வேண்டும். இதன் மூலம் புலிகளின் குறுகிய தமிழ் தேசிய வரையறைகளை தெளிவாக இனம் பிரித்துக் காட்டவேண்டும். இதை முதன்மையான அரசியல் பணியாகச் செய்தபடிதான், புலிகளின் மக்கள் விரோத ஜனநாயக மீறலை அம்பலப்படுத்த வேண்டும்;. இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் யாருடனும், இதை அங்கீகரிக்க மறுக்கும் யாருடனும் நாம் இணங்கிப் போகமுடியாது. இதை அங்கீகரிக்க மறுப்பவர்களை கடுமையாக விமர்சித்து தனிப்படுத்த வேண்டும். இந்த வகையில் தமது கொள்கையை கொண்டிராத யாரும், புலிகளின் ஜனநாயக மீறலைப் பற்றி பேச எந்தத் தகுதியும் கிடையாது. இவர்களிடம் எந்த அரசியல் நேர்மையும் இருப்பதில்லை. சுற்றி வளைத்துப் பார்த்தால், அதே புலிப் பாணி அரசியலையே கொண்டிருப்பர். இதைப் புரிந்து கொள்ள, நேர்மையான ஒருவனுக்கு விளக்கங்கள் எதுவும் தேவையற்றது. இது அரசியலில் ஈடுபடாத, தனிப்பட்ட மக்களுக்கு மட்டும் விதிவிலக்காக உள்ளது. புலிகள் அல்லாத அணி எல்லோரும் ஒரே அணி என்ற வாதமும் பொய்யானது. நேர்மையற்ற சமரசத்தையே குறிக்கின்றது. மக்களுக்காக போராட முற்படாத அனைவரும், மக்களே தமது விடுதலைக்காக போராட வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படாதவர்கள் அனைவரும், ஒரே அணியாக இருக்கவே முடியாது.

பொதுவாக அரசியலில் மக்களின் அடிப்படை கோரிக்கைகளைப் பற்றி பேச மறுப்பவர்கள், புலிகளுடன் பேசுவது பற்றியும், புலிக்கு எதிராக அரசியல் நடத்தவும் கூட முனைகின்றனர். இலங்கையில் தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை ஏற்று, ஒரு அரசியல் தீர்வை தனது கட்சி சார்பாக அல்லது தமது அரசியல் சார்பாக முன்வைப்பதேயில்லை. இது புலியல்லாத தரப்பினதும் பொதுவான இன்றைய நிலையுயாகும். இலங்கையில் பேரினவாத கட்சிகளிடையே, இதுவே கொலுவேறி கிடக்கின்றது.

இந்த நிலையில் சர்வதேச அரங்கிலும், இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும், ஏன் தமிழ் மக்கள் மத்தியிலும் கூட பேரினவாதம் தனது சொந்த இனவாத முகத்தை மறைத்து வெற்றிபெறுவது நிகழ்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் என்ன. உண்மையில் புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளே முக்கியமான காரணமாகும். புலிகளின் இராணுவவாத அரசியல், தமிழ் மக்களின் பிரச்சனையையே இல்லாதாக்குன்றது. வெறும் புலிப் பிரச்சனையாக்கி அதைக் குறுக்கி விடுகின்றது. இதனால் மக்களின் மத்தியில் இருந்தும், சர்வதேச அரங்கில் இருந்தும் அன்னியமாகும் புலிகள், தமது சொந்த நிலையைத் தக்கவைக்க அதிகரித்த மனித உரிமை மீறலை தொடாச்சியாகச் செய்கின்றனர். இதைத்தான் அரசு மிக நேர்த்தியாகவே, தனக்கு பக்கபலமாக கொண்டு தனது சொந்த பேரினவாத நிலையைத் தற்காக்கின்றனர். தனது இனவாத ஒடுக்குமுறையை விட, புலிகளின் மனிதயுரிமை மீறலே முதன்மையான மனிதவிரோதச் செயலாக காட்டிவிடுகின்றது. இது தமிழ் மக்கள் மத்தியிலும் கூட, படிப்படியாக அங்கீகரிக்கும் நிலையே உருவாகி வருகின்றது.

சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்தும் பேச்சுவார்தையில், புலிகளின் பலவீனங்கள் மற்றும் ஜனநாயக மீறல்களின் மீது தன்னைத்தான் தற்காக்கின்றது. இதுவே புலிகள் நடத்திய அனைத்துப் பேச்சு வாhத்தையிலும், புலிக்கு பாதகமாக இருந்தது. புலிகள் நடத்திய அனைத்துப் பேச்சு வார்த்தையிலும் புலிகள் தோல்வி பெற்றனர். பேச்சுவார்த்தையை ஒரு தலைப்பட்சமாக முறித்து, முந்திக் கொண்டு இராணுவத் தாக்குதலை நடத்தினர். இராணுவ இலக்கில் புலிகள் தமக்கு சாதகமாக கருதியவை அனைத்தும், அரசியல் இலக்கில் பாதகமாக அமைந்தது. மிகக்குறுகிய வட்டத்தில் நின்று புலிகள் சிந்திக்கும் ஒவ்வொரு கணமும், இந்த இராணுவ சூனியவாதம் புலிகளின் வெற்றியாகவே எண்ண வைத்தது. ஆனால் உண்மையில் அது அரசியல் ரீதியான தோல்வியையே ஏற்படுத்தி வருகின்றது.

புலிகள் அரசியல் தீர்வைப்பற்றி எப்போதும் பேச மறுக்கும் அரசியல் உள்ளடகத்தின் பின்னால், இராணுவவாதமே முதன்மை பெற்று நிற்கின்றது. அதாவது புலிகள் ஆயுதத்தை கைவிட்டால், அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசுவதற்கு என்று எந்த மாற்று அரசியலும் கிடையாது. இந்த அடிப்படையான அரசியல் உண்மைதான், புலிகளை பேச்சு வார்த்தை மேசையை விட்டு இராணுவவாதத்தை நோக்கி ஒடவைக்கின்றது. இதனால் குறுகிய இராணுவவாதக் கோரிக்கைகளுடன் பேச்சு வார்த்தைகள் முறிந்து போகின்றன. பேச்சுவார்த்தை மேசையில் இருந்து ஓடுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதே, எப்போதும் புலியின் அரசியல் நிலையாக இருந்தது, இருக்கின்றது. 1995 இல் புலிகள் சந்திரிக்கா அரசுக்கு இடையில் பரிமாறப்பட்ட பேச்சுவார்த்தை உள்ளடக்கம் சார்ந்த கடிதங்கள், (இதில் ஒரு பகுதியை பாலசிங்கத்தின் போரும் சமாதானமும் என்ற நூலில் பார்க்கமுடியும்) தெளிவாக புலிகளின் அரசியல் வங்குரோத்தைத்தான் எடுத்துக் காட்டுகின்றது. பேச்சுவார்த்தை என்றும், மக்களின் அடிப்படையான இயல்பு வாழ்வு என்றும் புலிகள் எப்போதும் கூறுவது எல்லாம், ஒரு சமாதானத்தை நோக்கியல்ல. மாறாக பேரினவாதம் தடுத்து வந்த பொருளாதார தடை சார்ந்த பொருட்களை மீளப் பெறவும், இராணுவநோக்கில் நிலைமைகளை மாற்றி அமைக்கவும் தான் அனைத்துப் பேச்சு வார்த்தைகைளையும் புலிகள் நடத்தினர். இந்த வகையில் புலிகள் நடத்திய அனைத்துப் பேச்சுவார்த்தையையும், புலிகளை மேசையில் இருந்தே ஒடவைத்தது. புலிகள் ஆயுதம் இல்லாத எந்த ஒரு நிலையிலும், அவர்கள் மக்கள் முன் சென்று அரசியல் செய்ய என எதுவும் இருப்பதில்லை. மக்களிடம் அடாத்தாக மிரட்டி அணி பணியவைத்தே, எப்போதும் தமது அரசியல் செய்ய பழக்கப்படுத்தபட்டவர்கள் தான் புலிகள். மக்களிடம் தமது சொந்த அரசியலை விளங்கப்படுத்தி ஏற்கவைக்கும், அரசியல் நேர்மையும் தார்மீகப் பலமும் இவர்களிடம் கிடையாது.

இந்த நிலையில் புலிகளின் பேச்சுவார்த்தைகளை மிக நெருங்கிப் பார்த்தால், இராணுவம் அத்துமீறுகின்றது, பொருளாதாரத் தடை என்ற வழமையான பல்லவியைத் தாண்டி புலிகள் வேறு எந்த அரசியலையும் பேசுவதில்லை. பேச்சுவார்த்தை மேடையில் இதுவே புலிகளின் அதியுயர்ந்த அரசியலாகவும் உள்ளது. இந்த நிலையில் எப்படி புலிகள் ஆயுதம் அல்லாத ஒரு நிலையில் நீடிக்கமுடியும். மக்களின் இயல்புவாழ்வு பற்றி அடிக்கடி கூறும் இவர்கள், மக்களுடன் கொண்டுள்ள உறவு அனைவருக்கும் மிகத் தெளிவாகத் தெரிந்ததே. மக்களின் இயல்பான வாழ்வை மறுப்பதில், புலிகளின் பங்கே மிக முக்கியமானதாக உள்ளது. (பார்க்க யுத்த நிறுத்த மீறல் அறிக்கைகளை) இது எப்போதும் மக்கள் விரோதத் தன்மை கொண்டதாக உள்ளது. யுத்தமற்ற சூழல்களில் மக்களின் இயல்பு வாழ்வை, படுபயங்கரமாக நெருக்கடிக்கு உள்ளாக்குபவர்கள் புலிகளாகவே உள்ளனர்.

மக்களின் இயல்பு வாழ்வு என்ற பெயரில் புலிகள் கோருவது எல்லாம், புலிகளின் இராணுவவாத போக்குக்கு ஏற்ற பொருளாதார மற்றும் இராணுவ செயல்பாடுகளைத் தான். இதை பேரினவாதம் மிகச் சிறப்பாக வரவேற்கின்றது. உண்மையில் இனப்பிரச்சனையை பேசி முடிவெடுக்க விரும்பிய காலகட்டங்கள் தவிர, மற்றைய நேரங்களின் புலிகளை அம்பலப்படுத்தவும் அவர்களைத் தனிமைப்படுத்தவும் இது போதுமானதாகவே அமைந்தது. புலிகளின் சொந்த நலன் சார்ந்த பொருளாதாரக் கோரிக்கைகளுடன் அதற்கு ஏற்ற ஒரு நிர்வாகக் கட்டமைப்பு, என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சனையை சுருக்குவது எதிரிக்கு லாபமாகிவிடுகின்றது. இனப்பிரச்சனையின் தீர்வைப்பற்றி பேசவேண்டிய அவசியமல்லாத நிலைக்கு, புலிகள் எதிரிகளை இட்டுச் சென்று விடுகின்றனர். அரசியல் ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பேரினவாதத்தை தனிமைப்படுத்த முடியாத முட்டுச்சந்தியில், புலிகளை தள்ளிவிடுவதன் மூலம் தான், அன்றாடம் புலிகளை அம்பலமாக்கி வருகின்றனர். இந்த நிலையில் பிரபாகரனின் மாவீரர் தினச் செய்தி சிணுங்கி சிங்காரித்து வெளிவருகின்றது.

பிரபாகரனின் மாவீரர் உரையில் அரசியல் வறுமையே பிரதிபலிக்கின்றது.

புலிகளின் தலைவர் மாவீரர்தின உரையில், தமது சொந்த நிலையை விளக்க முனைகின்றார். தாமே வலிந்து உருவாக்கிய முட்டுச் சந்தியில் தாமே திணறுவதையும், அதை நேரம் அதைக் கவர்ச்சியாக ப+சிமெழுகி தம்மைத்தாம் நியாயப்படுத்திவிட முனைகின்றார். தாமே உருவாக்கிய ஒரு முட்டுச் சந்தியில் நிற்பதை ஒத்துக் கொள்கின்றனர். பிரபாகரனின் மாவீரர் உரையில் ~~சமாதானப் பேச்சு என்பது எமது விடுதலைப் போராட்டப் பாதையில் வைக்கப்பட்ட பொறி என்று கூறுகின்றார் பிரபாகரன். இந்த பொறியில் சிக்கியது எப்படி? அவர்கள் சிக்க வைத்தனரா? அல்லது நீங்களாக வலிந்து சிக்கிக் கொண்டீர்களா? இந்தக் கேள்வியை நாம் கேட்பது அவசியமாகிவிடுகின்றது. எப்படி நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள். இந்த சிக்கலில் இருந்து மீள்வது ஏப்படி? யுத்தநிறுத்தத்தை 2001 இல் ஒருதலைப்பட்சமாக முதலில் நீங்கள் தான் அறிவித்து சமாதானக் கதவை தட்டியதாக பெருமைப்பட்டவர்கள் தான் புலிகள். இதே நோக்கில் 2000ம் ஆண்டு இறுதியில் தொடங்கி நாலு மாதகால யுத்த நிறுத்தத்தையும் ஒரு தலைப்பட்சமாகவும் நீங்கள் தான் அறிவித்தீர்கள். இப்படி பேச்சுவார்த்தை நோக்கி நீங்கள் அறிவித்த உங்கள் முடிவு, எப்படி இன்று ஒரு பொறிக் கிடங்காக அமையமுடியும். நீங்களே சிந்தித்து ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம், எப்படி பொறிக் கிடங்காக அமைந்தது. பொறிக் கிடங்கை நாங்களே எமக்கு தோண்டினோமா அல்லது எதிரி தோண்டினானா?

முதலில் எதிரிக்கு வெளியில், எமது தவறு என்ன என்ற சுயவிமர்சனமற்ற பார்வைதான், முதலில் எமது பொறிக் கிடங்காகும். இதற்கு உங்கள் அரசியல் தவறுகளே அடிப்படைக் காரணமாகும். அரசியலை வெறும் இராணுவவாதமாக சிந்திக்கும் போது, அதை நடைமுறைப்படுத்தும் போது, பொறி ஆழமாகவே இறுகிவிடுகின்றது. தமிழ் மக்களின் வாழ்வுடன் நீங்கள் ஒன்றியிருந்தால், தமிழ் மக்களின் இயல்பான சமூக அரசியல் பொருளாதார கோரிக்கையுடன் ஒன்றியிருந்தால், இந்தப் பொறியென்பது சாத்தியமில்லை. இன்று புலிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் என்ன வகையான உறவுள்ளது. ஆண்டான் அடிமைகள் என்ற நிலப்பிரத்துவ அடிமை உறவுமுறையே காணப்படுகின்றது. மக்களை கண்காணிப்பதே உங்கள் அரசியல் இராணுவ வேலையாகிவிட்டது. இந்த மக்களை கூலிப்பட்டாளமாக எதிரியின் முன் தள்ளிவிட்டு, அவர்களை உங்கள் கோசங்கள் மூலம் கோசம் போடவைக்கும் இந்திய பிழைப்புவாத அரசியல் முறையே இங்கும் காணப்படுகின்றது. பொறி இப்படி பல தளத்தில் இறுகிவிடுகின்றது.

அரசியல் ரீதியாக எதிரியை எதிர்கொள்ளும் அரசியல் ஆளுமை அனைத்தையும் அழித்தொழித்தாயிற்று. பாலசிங்கம் ~~அங்கே பொறிகள் இருக்கும். சதி வலைப் பின்னல்கள் இருக்கும். என்ன மாதிரி பாலசிங்கத்தை மடக்கலாம். புலிகளை என்ன மாதிரி அவர்களது இலட்சியத்திலிருந்து திருப்பி வேறு பாதையில் கொண்டுபோகலாம் என்று சதிகள் இருக்கும். இவைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை என்றால் சாதாரண விடயம் அல்ல. சிங்கள எதிரி தங்களிடம் உள்ள சிறந்த சாணக்கியர்கள், சிறந்த அறிவுஜீவிகள், பெரிய படிப்பாளர்கள், சட்ட மேதைகளை அனுப்புவார்கள். என்று கூறுகின்றாh. ஏன் உங்களால் இப்படிச் செய்யமுடியவில்லை. பொறியை தாங்களே தமக்கு வெட்டிவிட்டு, சதியை தமக்கு தாமே உருவாக்கிவிட்டு, அதை எதிரியின் புத்திசாலித்தனத்தின் மீது சோடித்துக் காட்டுகின்றனர். பாலசிங்கம் உளறும் போது ~~சிங்களவனின் மேல்மாடியில் ஒன்றும் இல்லை என்கின்றார். கேட்கிறவன் கேனல் பயல் என்ற நினைப்பு. ~~சிங்களவனின் மேல்மாடியில் ஒன்றும் இல்லாதவன் தான் பொறியை வெட்டி வைத்திருப்பதாக் தலைவர் கூறியழுகின்றார். ~~சிங்களவன் மேல்மாடியில் ஒன்றும் இல்லாதவன் தான் ~~சிறந்த சாணக்கியர்கள், சிறந்த அறிவுஜீவிகள், பெரிய படிப்பாளர்கள், சட்ட மேதைகளை அனுப்புவார்கள். என்று கூறும் போது, அதற்கும் உற்சாகமாகவும் விசிலடித்து கைதட்டுகின்றனர். மேல்மாடியில் ஒன்றும் இல்லாதவன் உண்மையில் யார் என்றால், இதை கேட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் தான் என்பதை, பாலசிங்கம் சூட்சுமமாகவே சொல்லிவிடுகின்றார்.

~~மேல்மாடியில் ஒன்றும் இல்லாத சிங்களவன் வெட்டிய பொறியில் ~~மேதகு தேசிய தலைவர் பொறிந்து போனது எப்படி.? பொறியை எமக்கு நாமே வெட்டினோம். இதுவே உண்மை.

பேரினவாதம் தனது நோக்கில் சதிகள், மோசடிகள், அடக்குமுறைகள் என்ற எல்லாவிதமான மனித விரோத ஆயுதங்கள் மூலம் தன்னைத்தான் ஆயுதபாணியாக்கிபடி புத்திசாலித்தனமாக இயங்குகின்றது. இதுவே உண்மை. நாமும் அப்படி இயங்க முடியாது. எல்லாவிதமான சதிகள், மோசடிகள், மனிதவிரோத நடத்தைகள், அடக்குமுறைகளைக் கொண்டு புத்திசாலித்தனமாகக் கூட இயங்க முடியாது. புத்திசாலித்தனமாக இயங்குவதாக நம்பிய எந்த விடையமும், புலிக்கு பாதகமாகவே அமைந்தது. நாங்கள் விடுதலைக்காக போராடுவது என்ற பணியை கைவிட்டு, சதிகள், படுகொலைகள், சித்திரவதைக் கூடங்கள் என்ற மனிதவிரோத செயலையே விடுதலையாக காட்ட முற்பட்ட போது, பொறி தன்னளவில் எமக்கு ஏற்ப அதுவாகவே பொருந்திவிடுகின்றது. பொறி எதையும் பேரினவாத அரசு எமக்கு மேல் திணிக்கவில்லை. நாமே எமக்கு ஏற்ப போட்டுக் கொண்டவைதான் இவை. இந்த மனிதவிரோத செயலை செய்துவிட்டு, அதை நாம் செய்யவில்லை என்று மறுப்பதைக் கூட யாரும் (ஏன் நீங்களும் கூட அதை) உண்மையானது என்று ஏற்றுக் கொண்டதே கிடையாது. உண்மை வேறு ஒன்றாகவே எப்போதும் இருக்கின்றது. அது பொறி வடிவில் பேய் உருவம் எடுத்து நிற்கின்றது.

~~சிங்கள எதிரி தங்களிடம் உள்ள சிறந்த சாணக்கியர்கள், சிறந்த அறிவுஜீவிகள், பெரிய படிப்பாளர்கள், சட்ட மேதைகளை அனுப்புவார்கள். என்றால் ஏன் எம்மால் முடியவில்லை. எமது பலவீனம் என்ன? நாம் எமது சமூகத்தின் மிகச்சிறந்த சுய அறிவுள்ளவர்களை கொன்று ஒழித்துவிட்டோம் அல்லது தலைகுனிந்து வாழும் கன்னிப் பெண்ணாக்கிவிட்டோம். பினாமிகளைக் கொண்டு அரசியல் நடத்தினால், பொறிகள் பலவாகவா மாறிவிடும். அந்த பினாமிகளே (இன்று புலி பாட்டுப்பாடும் சந்தர்ப்பவாத விசுவாசிகள்) எதிர் காலத்தின் மிகப் பெரிய பொறியாக புலிக்கே சவால் விடுவார்கள். சிங்களப் பேரினவாதத்தின் நயவஞ்சகமான அணுகுமுறைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளக் கூடிய, ஆற்றல் உள்ளவர்களை நாமே எமது சுயநலத்துடன் வேட்டையாடிவிட்டோம். புலிகளுடன் கூடி நிற்பவர்கள், எந்த சுயமுமற்ற, சுயமான அறிவற்ற சந்தர்ப்பவாதிகள் தான். இதைக் காலம் தெளிவாக அவர்களுக்கே நிறுவிக் காட்டும். லண்டன் ஜெயதேவன் போன்றவர்கள் கூட ஒரு உதாரணம்.

நலமடிக்கப்பட்ட ஒரு தமிழ் சமூகத்தை நாமே உருவாக்கி வைத்துக் கொண்டு, பேச்சு வார்த்தை என்பது சூழ்ச்சியும் சதியும் கொண்ட பொறிகள் இருப்பதாக, இராணுவவாத நோக்கில் கூறுவதில் எந்தவிதமான அர்த்தமும் அதற்கு இருப்பதில்லை. இதில் இருந்து தப்பிப்பிழைக்க ~மேதகு பிரபாகரன் வழிகாட்டும் இராணுவாத நடவடிக்கைகள் கூட, உண்மையில் மற்றொரு பொறிதான்.

மிக நுணுக்கமாக பார்த்தால் பொறிக்கிடங்கு புலிகளின் இராணுவாதத்தில் இருந்தே தொடங்குகின்றது. சமாதானம் என்ற பெயரில் உருவான அமைதியான காலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான படுகொலை அரசியல் இன்று, இராணுவம் மீதான குண்டுவீச்சுகளாகவும் தாக்குதலாகவும் மாறிவருகின்றது. இது எந்தவிதத்தில் பொறிக்கிடங்காக அமையாது என்பதை புலிகள் விளக்குவதில்லை. புலிகளின் இந்த அணுகுமுறையை பேரினவாத அரசு எப்படி அணுகுகின்றது என்பதுதான், இதன் மற்றொரு பொறி. இந்த பொறியில் புலிகளை மாட்டிவிட்டு, இடைக்கிடை பொறிக்கு தீனி போடுவது போல், ஒரு சில படுகொலைகளை புலிகள் பாணியில் இனம் தெரியாத வகையில் இன்று பேரினவாதம் செய்து விடுகின்றது. புலிகள் மிகப் பெருமளவிலான சமாதானப் படுகொலை அரசியலை, மேலும் உசுப்பி விடும் வண்ணம் அண்மைக்காலத்தில் ஒரு சில படுகொலைகளை நடத்திவிடுகின்றனர். இதன் மூலம் புலிகள் ஒரு தலைப்பட்சமாக படுகொலைகளை வகைப்படுத்தி கண்டிப்பதன் மூலம், மற்றைய படுகொலைகளை உரிமைகோர வைப்பதன் மூலம், அதேநேரம் புலிகள் தமது சொந்த மனிதவிரோத அராஜகத்தை அதிகரிக்கும் போது, அரசு அம்பலப்படுவதை விட புலிகள் வேகமாகவே தம்மைத்தாம் அம்பலமாக்கி விடுகின்றனர். இந்த பொறி புலிகளை அரசியல் ரீதியாக மேலும் தனிமைப்படுத்தி வருகின்றது. இராணுவாத நோக்கில் நடத்தும் அரசியல் படுகொலைகள், இராணுவம் மீதான தொடர்ச்சியான குண்டு வீச்சுகள், படிப்படியாக ஒரு தலைப்பட்சமான ஒரு தாக்குதலாக மாறிவிட்டது. இது புலிகளை எப்படி பொறிக்குள் விழ்த்துகின்றது.

யுத்தத்தை நோக்கிய வன்முறையில் புலிகள் ஒரு தலைப்பட்சமாக இறங்கி நின்று குதிராட்டம் போடுகின்றனர். மறுதளத்தில் இந்தத் தாக்குதல்கள் அரசை சமாதான மேடைக்கு மீண்டும் கொண்டுவரும், மற்றொரு தந்திர உபாயம் என்ற உள்ளடக்கம் உள்ளதாக கருத இடமிருந்த போதும் கூட, புலிகள் சர்வதேச ரீதியாக அம்பலமாவதை இது எந்தவித்திலும் தடுத்துவிடவில்லை.

உண்மையில் இந்த இடத்தில் பேரினவாதம் இதை எதிர்கொள்ள, இராணுவாத அணுகுமுறையை கையாள்வதை திட்டவட்டமாக மறுத்து நிற்கின்றது. மாறாக இதை தனது சொந்த கட்டுப்பாட்டின் மூலம், மிகவும் நிதானமாகவும் நுட்பமாகவும் அணுகுகின்றது. பொறி துல்லியமாக வெட்டப்படுகின்றது. தமிழ்மொழி பேசும் மக்கள் மத்தியிலும் கூட, சமாதானத்தின் எதிரிகள் புலிகள் மட்டும் தான் என்று ஒரு செய்தியை தெளிவாக புலியின் நடத்தைகள் மூலம் நிறுவிவருகின்றது. இதன் மூலம் தனது பேரினவாத அணுகுமுறையை பாதுகாக்கின்றது. சர்வதேச சமூகங்களிடையேயும் கூட, சமாதானத்தின் எதிரிகள் புலிகள் தான் என்பதை புலிகளின் அன்றாட நடத்தைகள் மூலம் சொல்லி வருகின்றது. அன்னிய தலையீட்டின் அவசியத்தையும், புலிகளின் நடத்தைகள் மீது பேரினவாதம் சொல்லாமலேயே அவர்களே முடிவு எடுக்க விட்டுவிடுகின்றது. அமைதி சமாதானத்தின் பெயரில் ஏகாதிபத்தியம் கொண்டுள்ள நிலைப்பாட்டை, புலிகள் தகர்த்து வருவதாக அவர்களே சொந்தமாக உணரும் வண்ணம் பேரினவாதம் நிறுவிவிட்டது. இங்கு பேரினவாதம் அரசு கட்டமைப்பு இருப்பதைக் கூட, வெளித் தெரியாத வகையில் சூக்குமமாகி வருகின்றது.

பொறி என்பது பேச்சு வார்த்தைகளில் மட்டுமல்ல, இராணுவாதத்திலும் காணப்படுகின்றது. மனிதவிரோத நடத்தைகள் அனைத்தும் பொறிகள் தான். அந்த பொறியை நாமே நமக்கு உருவாக்கிக் கொள்வதுதான். எதிரி அதை பயன்படுத்திக் கொள்கின்றான். உலகில் பல நாடுகளின் இராணுவவாதப் பொறிகளில் தான், பல அதிகார மையங்கள் தகர்ந்துபோனது. இராணுவவாதம் எல்லா நேரங்களிலும் வெற்றிபெறுவதில்லை. இங்கு புலிகள் மற்றும் சிறிலங்கா என்ற இரண்டு இராணுவங்கள் மோதுவதையிட்டு நான் பேசவில்லை. புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ நடத்தைகள் சர்வதேச நிகழ்ச்சி நிரலான பின்பாக, சர்வதேச ரீதியாக ஏற்படும் நெருக்கடிதான் இங்கு மிகப் பெரிய பொறியாகும்;. சர்வதேச தலையீட்டை வலிந்து கோரியவர்கள் நாம் என்ற வகையிலும், ஆப்பிழுத்த குரங்காட்டம் குரங்குச் சேட்டைகளையே ~மேதகு தலைமையில் நாம் சிறுபிள்ளைத்தனமாக செய்த வண்ணம் உள்ளோம்.

இந்த நிலையில் ~மேதகு பிரபாகரன் கூறுகின்றார் ~~.. நாம் ஆயுத வன்முறையிற் காதல்கொண்ட போர் வெறியர் அல்லர் என்பதையும் சமாதான மென்முறையில் நாம் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதையும் உலகுக்கு உணர்த்திக் காட்டவேண்டிய தேவையும் எழுந்தது. என்கின்றார். இப்படி அடுப்படியில் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் பூனையாட்டம், கதை சொல்வதைத் தாண்டி, இதில் உண்மை எதுவும் கிடையாது. வன்முறையும், படுகொலையுமின்றி புலிகள் குசு கூட விடுவது கிடையாது. எம்மை நோக்கி எச்சரிக்கும் போது, காத்து போகாத இடத்திலும் கூட நாம் புகுந்து விளையாடுவோம் என்றதன் பின்னால் கொலுவேற்று இருப்பது, ஆயுத வன்முறையிற் காதல்கொண்ட மனநோய்தான் என்பதைத் தாண்டி வேறு எதுவுமல்ல. சமாதானம், அமைதிக் காலத்தில் தொடர்ச்சியான படுகொலைகள் (அண்ணளவாக 1000 படுகொலைகள்), கடத்தல்கள், சித்திரவதைகள், கப்பம் என்று மனித விரோத வன்முறை பரந்த தளத்தில் காணப்பட்டது. இது ~~போர் வெறியர் அல்லர் என்ற கூற்றை நகைப்புக்குரியதாக்கி விடுகின்றது. இதைச் சொல்லிக் கொண்டிருந்த சமகாலத்தில், தாம் ~~போர் வெறியர் அல்லர் என்ற சொந்த அரசியல் பினாற்றலையே, நடைமுறையில் புலிகளே மறுத்து நிற்கின்றனர். இந்த வாதம் உரையை மெருகூட்ட சேர்க்கப்பட்ட வெறும் அழகான சொற் கோவைகள் தான்.

ஏன் தாம் பேச்சு வார்த்தைக்கு போனார்கள் என்பதை மாவீரர் உரையில் ~~.. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை உலகமயப்படுத்தி சர்வதேசச் சமூகத்தின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்கும் இது அவசியமாக இருந்தது. என்கின்றார். இதை சாதிக்க முடிந்துள்ளதா? அல்லது மேலும் தனிமைப்பட்டு வெறும் ~~பயங்கரவாதக் குழுவாக அம்பலமாகியுள்ளனரா? உண்மையில் உலகளவில் நடந்தது, புலிகள் தங்களைத் தாமே அம்பலமாக்கிக் கொண்டது தான். பல நாடுகள் புலிகளை தடையெய்யும் நிலைக்கு நிலைமை மாற்றமடைந்துள்ளது. இதைத்;தான் ~மேதகு மற்றும் ~மதியுரையர் வழிகாட்டலில் உருவான சமாதானம் செய்து முடித்துள்ளது. இதை விட்டு வேறு எதுவுமல்ல. எதற்காக பேச்சு வார்த்தை தொடங்கினரோ, அதைக்கு எதிர்மறையில் இது முடிந்துள்ளது. இதை சிங்கள பேரினவாதம் தனது பிரச்சார வலிமையால் செய்யவில்லை. புலிகளின் மக்கள் விரோத அரசியலைக் கொண்டு, அந்த நாடுகளே சொந்த முடிவை இலகுவாக எடுக்கத் தூண்டியது. நாம் எமக்கு பொறியை வெட்டினோம். இது தான் உண்மை. இதைத் தான் பேச்சு வார்த்தை சாதித்தது.

இந்த நிலையில் மாவீரர் உரையில் பிரபாகரன் ~~தமிழீழ மக்களின் அடிப்படையான அரசியற் கோரிக்கைகளை ஏற்று ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைச் சிங்கள இனவாத ஆட்சியாளர் முன்வைக்கப் போவதில்லை என்ற உண்மையைச் சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவதும் எமது நோக்கமாக இருந்தது. இப்படியான குறிக்கோள்களுடனேயே நாம் பேச்சுக்களிற் பங்குகொண்டோம். என்று கூறுகின்றார். நல்லது. இதைக் கூட புலிகளால் சாதிக்க முடிந்தா? எனின் இல்லை. பிரச்சனை எப்படி உள்ளது. தனிப்பட்ட புலிப் பிரசசனையாக விடையம் சுருங்கிவிட்டது. தமிழ் மக்களின் பிரச்சனை படிப்படியாக காணமால் போய்விட்டது. சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கு கூட தமிழ் மக்களின் பிரச்சனை என்னவெனத் தெரியாத நிலைக்கு சரிந்து சீரழிந்து சென்றுவிட்டது. இதுவே புலிகளின் நிலை கூட. பிரச்சனை புலிப் பிரசைனையாகவும், புலியின் தலைவரின் பிரச்சனையாகவும் கூட மாறிவிட்டது. இவர்கள் அரசியல் பேசும் போது பேரினவாதம் நடாத்திய சில கொலைகளைச் சொல்வது, அல்லது பேரினவாதத்தின் சில நடத்தைகளைச் சொல்வதுடன் அரசியல் கூனிக் குறுகிப் போய்விட்டது. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை படிப்படியாக மறைந்து மடிந்துவிட்டது.

ஏன் சிங்களப் பேரினவாதம் தேசிய இனப்பிரச்சனை இருப்பதைக் கூட கருத்தில் எடுக்கவில்லை. அதை வெறும் புலிப்பிரச்சனையாக சுருக்கி காட்டு;கின்றது. இந்த நிலைக்கே புலிகளின் அரசியல் வழிகாட்டி நிற்கின்றது. ஏகப்பிரநித்துவம் என்ற பெயரில், பிரச்சனை வெறும் புலி சாhந்த பிரச்சனையாக மாறிவிட்டது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒற்றை ஆட்சி அமைப்பில் ஒரு தீர்வு என்ற பேரினவாதச் செய்திக்கு மாற்றாக, சமாதானத்தை ஆதரிப்பவர்கள் இதை அம்பலப்படுத்தி எதையும் யாரும் முன்வைக்கவில்லை. அமைதி முயற்சியில் ஈடுபடுவதாக கூறும் புலிகள் கூட, மௌனமாகி விடுவது கூட, பேரினவாத அரசுக்குச் சார்பானது தான். இலங்கையில் அமைதி வழியில் பேசி தேசிய பிரச்சனையை தீர்க்க முற்படுபவர்கள் யாராக இருந்தாலும், இதனை முழுமையாகவும் தெளிவான வகையில் இதனை அணுகவேண்டும்;. இது மட்டும்தான் சரியான அரசியல் வழியாகும். குறிப்பாக இலங்கையில் ஆட்சி அலகுகள் நிச்சயமாக இனரீதியாக பிரிக்கப்பட வேண்டும். தமிழ்பேசும் வடகிழக்கு மக்களுக்கு மட்டும் ஒரு தீர்வு என்பது, அது எந்த வகையான அரசியல் அலகாக இருந்தாலும் கூட, அதன் பின்னால் பேரினவாதம் கொலுவேற்று இருக்கும்.

மாறாக இனரீதியாக தெளிவாக வரையறுக்கப்பட்ட வகையில், இலங்கை முழுக்க ஒரே விதமான ஆட்சியலகுகள் உருவாக்கப்பட வேண்டும். இது சிங்கள மக்களுக்கும் கூட பொருந்தும்;. அதாவது சிங்கள மக்களுக்கும் கூட இன ரீதியான ஒரு ஆட்சியலகை உள்ளடக்கிய ஒரு தீர்வு அவசியமானது. இதுவே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது மட்டும் தான் குறைந்தபட்சம் இன முரண்பாட்டை சரியான வழியில் தணிக்கும். இல்லாது தமிழருக்கு மட்டும் ஒரு தீர்வு என்பது, மற்றைய ஆட்சி என்பது பழையபடி இனரீதியானதாகவே அமையும். தமிழ் சிங்கள மக்களின் தனித்துவமான இன ஆட்சி அலகுகள் மட்டுமின்றி, முஸ்லீம் மலையக மக்களின் ஆட்சி அமைப்பு வடிவங்களை உள்ளடக்கிய வகையில் நான்கு தனியான ஆட்சி அமைப்புகள் இனப்பிரச்சனையின் தீர்வில் தெளிவாக உருவாக்கப்பட வேண்டும். இது சட்டமியற்றும் அதிகாரத்துடன் கூடியதாக அமையவேண்டும்.

இதை அடிப்படையாக கொண்ட ஒரு கூட்டாச்சி அமைப்பு முறை, இதனுடன் அக்கபக்கமாக அமைய வேண்டும். இது இலங்கை முழுமைக்கும் ஒரு அமைப்பாக கொண்டு அமைய வேண்டும். அதேநேரம் இந்த கூட்டாச்சி இனரீதியான சட்டங்களை தன்னிச்சையாக ஏற்படுத்த முடியாத வகையில், அதிகாரம் கொண்ட சமமான பிரதிநிதித்துவம் கொண்டதும் அவற்றின் முடிவில் தாங்கியிருக்கும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். இதை இனப்பிரச்சனையில் அமைதித் தீர்வுக்கான குறைந்தபட்ச ஜனநாயகக் கோரிக்கையாக முன்னிறுத்த வேண்டும்.

இப்படி எதையும் தெளிவாக பிரபாகரனின் பேச்சு வார்த்தை, அரசியல் ரீதியாக முன்வைத்தது கிடையாது. அவர்கள் எதைப் பேசினார்கள் என்று கேட்டால் அதுவும் தெரியாது. பாலசிங்கம் வெளியிட்டுள்ள 790 பக்கங்களைக் கொண்ட ~~போரும் சமாதானமும் என்ற நூலில் கூட இதை காணமுடியாது. பிரபாகரனின் மாவீரர் உரை முடிவாக நான்கு வருடங்களின் பின் எதையாவது சாதிக்க முனைந்ததா எனின் எதுவுமில்லை. பேரினவாதம் எதையும் கொடுக்க முன்வரவில்லை என்பது ஒருபுறம். மறுபுறம் புலிகள் அரசியல் ரீதியாக தமது சரியான அரசியல் நிலையைக் கூட தம்மளவில் தன்னும் சாதிக்க முடியவில்லை.

இந்த நிலையில் குறைந்தபட்சம் அனுதாபத்தைக் கூட பெறமுடியவில்லை. பிரபாகரன் நினைத்த மாதிரி, சொன்ன மாதிரி சர்வதேச அரசுகளைத் தானும் வென்று எடுக்கவில்லை. சர்வதேச மக்களை இப்போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் வெற்றிகொண்டுள்ளனரா எனின் அதுவும் இல்லை. சொந்த மக்களின் அனுதாபத்தை ஆதரவை பெற்றுள்ளனரா எனின் இல்லை. வெடி குண்டும், துப்பாக்கியும், வாள்வெட்டும், அடியுதையும், ரயர் எரிப்பும், பினாமி பெயரில் எச்சரிக்கையும் இன்றி, புலிகள் உயிர்வாழவே முடியாது உள்ளனர். புலிகள் குசு விட்டாலும் இவை அவசியமாகிவிட்டது. இதுவே சமாதானம் சாதித்த ஒரேயொரு உண்மை.

இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? புலிகளின் இராணுவவாதம் தான். ஆயுத வன்முறையில் காதல் கொண்ட நடத்தை நெறிகளே அனைத்துக்குமான காரணமாகும். மக்களை நம்பி அரசியல் செய்வதில் எந்தவிதமான நம்பிக்கையும் அற்றவர்கள் தான் புலிகள். பேச்சுவார்த்தை தொடங்கியது முதலே கொலைகள் தொடங்கியது. ஒப்பந்த விதிகளை அரசைப் போல் கடுமையாகவே மீறி வந்தனர். புலிகளின் இராணுவவாத மீறல்தான், தனது தவிர்க்க முடியாத அரசியல் நிலையென பறைசாற்றத் தொடங்கியது. இந்த அத்துமீறல்கள் படிப்படியாக இராணுவம் மீதான தாக்குதலாக மாறிவிட்டது. இதுவே புலிகளை மிகத் துல்லியமாக, அரசியலில் இருந்து தனிமைப்படுத்தும் சர்வதேச நிலைக்கு நகர்த்திச் சென்றது, செல்லுகின்றது.

நாம் ஏகாதிபத்திய அரசுகளை விடுவோம், அந்த நாட்டு மக்களைக் கூட நாம் வென்று எடுக்க முடியவில்லை. எங்கள் மனிதவிரோத அரசியல் நடத்தைகளை, அவர்களால் கூட துளியளவுக்கு கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற உண்மை பளிச்சென்று எம்முன்னுள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கு முன்னால் நின்று, தம்மீதான தடையை நீக்கக் கோரி தாழ்மையான விண்ணப்பம் செய்கின்றனர். இப்படி செய்வது கூட அடிமைத்தனம் தான். ஐரோப்பிய மக்கள் தான் தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்யலாமே ஒழிய, நாங்கள் அதைச் செய்யமுடியாது. ஏகாதிபத்தியங்கள் என்பது நாடுகளை காலனியாதிக்க எல்லைக்குள் கொண்டுவரும் அரசியல் அடிப்படையில் தான் திட்டமிட்டு செயல்படுகின்றன. இந்த நிலையில் ஏகாதிபத்தியம் பற்றி எந்த உணர்வும் உணர்ச்சியும் இன்றி, அவர்களின் அரசியல் தயவுக்காக மக்களை நகர்த்துவது அர்த்தமற்றது. மாறாக அந்த நாட்டு மக்கள் போராடவேண்டும்; என்ற அடிப்படையில், நாம் எமது சரியானநிலையை உருவாக்க எம்மை நாம் சுயவிமர்சனம் செய்வதன் மூலமே அவர்களுடன் நாம் இணைந்து நின்று போராடவேண்டும்.

ஏகாதிபத்தியங்கள் தடைக்கு கூறும் பகிரங்கமான அனைத்தும் காரணங்களும், புலிகளின் மனித உரிமை மீதானதாக காணப்படுகின்றது. அதாவது மக்கள் பற்றி தான், புலிகளைப் போல் ஏகாதிபத்தியமும் மூக்கால் சிந்துகின்றனர். இதைப் பயன்படுத்தியே, ஏகாதிபத்திய தடைகள் அமைகின்றன. இந்த நிலையில் மக்கள் விரோதச் செயலை, புலிகள் இல்லாதொழிக்க முன் வரவில்லை. மாறாக அதையும் அங்கீகரிக்க கோருகின்றனர். அத்துடன் மனிதயுரிமை மீறல்களை அதிகரித்த வகையில் தொடர்ச்சியாக கையாளுகின்றனர். உண்மையில் புலிகளின் சமாதானம் எப்போதும், படுகொலைகளின் தொடக்கமாகவே அமைகின்றது. முடிவாக அமைதி குலையும் போது, ஒரு பாரிய படுகொலைகளுடன் நிறைவு செய்யப்படுகின்றது. யுத்தம் தொடங்கியவுடன் கொலைகள் உச்சத்தை அடைகின்றது.

புலிகள் தமது மாவீரர் உரையில் மக்கள் பற்றி மிக இழிவாகவும் தாழ்வாகவும் மதித்தே எப்போதும் கருத்துரைக்கின்றனர். மக்களை வெறும் மந்தைகளாக அடிமைப்படுத்தியபடி, மக்களுக்காக போராடுவதாக பீற்றும் உரை, எப்போதும் பொய்யையும் புனைவையும் கொண்டு மக்களின் பெயரில் வாசிக்க முனைகின்றனர். மக்கள் தாமாகவே விரும்பி தேர்தலை பகிஸ்கரித்ததாகவும், மக்கள் தாமாகவே முன்வந்து பாரிய போராட்டங்களை நடத்துவதாகவும் கூட கூற முனைகின்றனர். ஏன் இன்று இராணுவம் மீதான கிளைமோர் தாக்குதலைக் கூட மக்கள் செய்வதாக கூட புலிகள் கூறுகின்றனர். இவை எதையும் மக்கள் செய்யவில்லை. இது எல்லாத் தமிழ்மக்களுக்கும் நன்றாகவே தெரியும்;. புலிகள் தமது வழியில் தமது அராஜக வழிகளில் செய்கின்றனர். புலிகளின் ~தத்துவவாசிரியர் பாலசிங்கம் கூறியது போல் ~~பிரபாகரன் வன்னியிலிருந்து கொண்டு பகிரங்கமாகக் கூடச் சொல்லவில்லை. மறைமுகமாகச் சொன்னார்- தேர்தல் தேவையில்லை என்று. இப்படி மக்களின் பெயரில் வெடி குண்டுகள், ரயர் எரிப்புகள் என்ற எல்லாவிதமான அராஜகத்தையும் கட்டவிழ்த்துவிட்டு நடைமுறைப்படுத்துகின்றனர். இதன் பின்பான உதிரி லும்பன் தனமான செயல்பாட்டுத் தளம் உள்ளது. மக்கள் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பது, உண்மையில் மக்கள் போராட்டங்களே அல்ல. மாறாக நடப்பது புலிகளின் லும்பன் தனமான அராஜகப் போராட்டங்களே. மக்களின் இயல்பான எந்தப் பங்களிப்புமின்றி, களத்தில் அவர்கள் எதோ ஒரு வேஷத்தில் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களிடையே நின்றபடிதான் இந்த அராஜகம் கட்டவிழ்க்கப்படுகின்றது.

இதன் மூலம் புலிகள் வரலாற்றால் நீடித்து வாழ்ந்து விடமுடிமா? ~~சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள். என்று கூறும் போது, சொந்த உணர்வுடன் தான் பிரபாகரன் இதைக் கூறுகின்றரா? அல்லது புலிகள் மக்களை மனப்ப+ர்வமாக ஏற்று நிற்பதாக அப்பாவித் தனமாக நம்புகின்றாரா? அல்லது அவருக்கு இப்படிக் கூறப்படுகின்றதா! சரித்திரங்களாக தியாகங்கள் வாழும் என்றால், சரித்திரத்தை பாதுகாப்பவர்கள் மக்கள் என்பதை பிரபாகரன் என்றும் உணர்ந்தாக கூறமுடியாது. சரித்திரங்களில் புலி பினாமிகள் வாழவே முடியாது. மக்களின் நலன்கள் தான், மக்களால் போற்றப்படும் சரித்திரங்கள்.
எவ்வளவுதான் உன்னதமான இலட்சியமும், மாபெரும் தியாகங்களும் கூட, மக்களுக்கான போராட்டமாக இல்லாத வரை, ஒரு நாளுமே தமது சரித்திரத்தை இது எழுதிச் செல்வதில்லை. எந்தச் சரித்திரமும், எந்த இலட்சியமும் அந்த மக்களின் நேரடி நலனுடன் தொடர்புடையவை. இதை புலிகள் என்றைக்கும் கடைப்பிடித்தது கிடையாது.

மக்களை அடக்கியொடுக்காத புலிச்சரித்திரம் கிடையாது. மக்களின் நலனுக்காக போராடிய புலிச் சரித்திரம் கிடையாது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வே, புலிகளின் உணர்வுடன் முற்றிலும் முரண்பட்டு காணப்படுகின்றது. புலிகளின் வரலாற்றை, தியாகத்தை ஒரு நடுநிலை (இது ஒரு சார்பாக இருந்த போதும் கூட) ஆய்வாளன் எப்படி மதிப்பிடுவான் என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம்;. இன்று ~மாமனிதன், ~மேதகு, ~மதியுரையா, ~தத்துவாசிரியர் எவையும், உண்மையான கருத்துருவத்தில் கூட யாரும் உச்சரிப்பதில்லை. புலிக்கு பயந்து அல்லது புலிகள் மூலம் சொந்த நலனை பேணுபவர்கள் தான் இப்படி உச்சரிக்கின்றனர். அத்துடன் மந்தைகளாக உள்ள ஒரு கூட்டம் இதை விசிலடித்து உச்சரிக்கின்றது. இதுவே உண்மை. இது வரலாற்றால் நிச்சயம் நிறுவப்படும். இதனால் தான் இதை நாம் பிழைப்புவாத பினாமியத்தின் நக்கிபிழைக்கும் வம்புச் சொற்கள் தான் என்கின்றோம்.

தமிழ்மக்களின் தேசியவிடுதலைப் போராட்டம் தொடங்கிய போது எப்படி நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளுடன் இருந்ததோ, அதே வடிவத்தில் இன்றும் அப்பிரச்சனை அப்படியேயுள்ளது. இந்த வகையில் நாம் தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைக்காக உரத்துக் குரல் கொடுக்க வேண்டியவராக உள்ளோம். இதுவே எம்முன்னுள்ள அடிப்படையான கடமையாக உள்ளது. அன்று தொடங்கிய போராட்டம் பல ஆயிரம் மனிதர்களை பலி கொண்டு, இன்று முட்டுச் சந்திக்கு வந்து செய்வதறியாது நிற்கின்றது. பல ஆயிரக்கணக்கானோர் முதுகில் குத்த தயாரான நிலையில், போராட்டம் சிதைவின் விளிம்பில் காத்துக் கிடக்கின்றது. புலிகளை முதுகில் குத்துவோர் அவர்களுக்குள்ளேயே புளுத்துக் கிடக்கின்றனர். இது அவலமானது தான், ஆனால் இதுவே எதார்த்த உண்மை. இதன் நோக்கில் பேரினவாதம், ஏகாதிபத்தியமும் இணைந்து நடத்தும் சதிராட்டம், புலிகளின் ஜனநாயக விரோத செயல்களின் மீது கொலுவேற்று நிற்கின்றது.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்று ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியும், தமது அரசியல் கட்சி சார்பாக தாம் என்ன தீர்வை முன்வைக்கின்றனர் என்ற வகையில் கட்சி கொள்கைகளைக் கூட பிரகடனம் செய்வதில்லை. இது அடிப்படையில் தான் பேரினவாதத்தின் கட்டமைப்பில் கட்சிகள் அனைத்துமே உள்ளன என்பதை தெளிவாக காட்டுகின்றது. பேச்சுவார்தத்தை மேடையில் இந்த விடையத்தைத் தொட்டு புலிகள் பேசமறுத்து நிற்பதன் மூலம் தான் பேரினவாதம் புலிகளை இலகுவாக வெற்றிகொள்ள முடிகின்றது. புலிகள் மீதான பொறிகள் அனைத்தும் இதன் மூலம் தான் உருவாக்க முடிகின்றது. புலிகள் அரசியல் ரீதியாக பேரினவாத அரசை நெருங்கி அணுகுவதை தவிர்க்கின்றனர். இதை விட்டே விலகி வந்து விடுகின்றனர் அல்லது அதில் இருந்து தப்பியோடுகின்றனர். எந்தப் பேச்சுவார்த்தையும் இதை அடிப்படையாக கொண்ட தொடங்க நிர்ப்பந்திக்க வேண்டும்.

இதற்கு வெளியில் பேரினவாத அரசு இலகுவாக பேசிக் கொண்டு காலத்தைக் கடத்துகின்றனர். துணிச்சலாகவே யுத்ததுக்கு செல்வதில் இருந்து விலகி நிற்கின்றனர். புலிகள் எப்போதும் இயல்புவாழ்வை மீள கட்டமைத்தல் என்ற கோரிக்கையின் ஊடாக, சொந்த பொருளாதார நலன் சார்ந்து பேசமுனைகின்றனர். இதன் மூலம் இராணுவ இலக்கை குறிவைக்கின்றனர்.
ஆனால் அமைதி இயல்பில் படிப்படியாக, மக்கள் இயல்பான வாழ்வாக மாறிவிடுகின்றது. இதைத்தான் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதிகளிடம் எதிர்பார்ப்பதாக கருதுமளவுக்கு நிலைமை மாறிவிடுகின்றது. தமிழ் மக்களுக்கு, முன்பு இதே நிலையில் இயல்பு வாழ்வு ஒன்று இருந்து வந்த வரலாறே தெரியாது போகின்ற நிலையில், கிடைப்பது அமைதியான தீர்வாக கருதும் நிலைக்கு சென்று விடுகின்றனர். இதைக் குழப்பும் போது, புலிகளுக்கு எதிரான நிலைக்கு மக்கள் மாறுகின்றனர். புலிகள் தமது சொந்தக் கோரிக்கைக்குள்ளேயே முடங்கும் போது, மக்கள் தமது சொந்த நிலைப்பாட்டுடன் புலிகளுடனான முரண்பாட்டுக்கு இட்டுச் செல்லுகின்றனர். இதைத் தான் ஏகாதிபத்தியம் செய்ய விரும்புகின்றது. புலிகள் இதற்கு துணை நிற்கின்றனர்.

தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கை என்ன என்பது கூட புலிகளுக்கும் தெரியாது போய்விட்ட நிலையில், மக்கள் அடக்குமுறைக்குள்ளாகி மோசமான மந்தைக் கூட்டமாக மாறிவிடுகின்றனர். எங்கும் சூனியம்;. எப்படி எங்கிருத்து மீள்வது என்று தெரியாத வகையில் நெருக்கடி உருவாகின்றது.

இது புலிகளுக்கும் இயல்பில் ஏற்படுகின்றது. இந்தநிலை அரசுக்கு அல்ல. அரசு இந்த சூனியத்தை பாதுகாக்க விரும்புகின்றது. இதை உருவாக்கும் வலை, விரிந்த தளத்தில் விரிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக இதை எதிர்கொள்ள வக்கற்றுப் போன புலிகள், இதில் இருந்து மீற கடந்த ஜந்து மாதத்தில் மட்டும் 300 மேற்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களை இராணுவத்துக்கு எதிராக நடத்தினர். இதன் மூலம் அரசை நிர்ப்பந்தித்து சண்டையைத் தொடங்க விரும்புகின்றனர் அல்லது அமைதி பேச்சு வார்த்தைக்கு செல்ல முனைகின்றனர். கதிர்காமர் கொலை மூலம், அரசு யுத்த பிரகடனத்தை செய்யும் என எதிர்பார்த்தனர். ஆனால் அரசு இதை சரியாக புரிந்து நிற்கின்றது. புலிகள் சண்டையைத் தொடங்கும் முயற்சியை மறுத்து, அமைதியை பதிலாக பேணுகின்றது.

புலிகள் வலிந்து சண்டையைத் தொடங்க, மேலும் தீவிரமாக இப்படித் தாக்குதலை நடத்துவர் என்பது தெரியவருகின்றது. மிகப் பெரிய நடவடிக்கைளைக் கூட செய்யமுனைவர். அரசைப் பொறுத்தவரையில், அரசு சண்டையை தொடங்க மறுக்கும்;. தாக்குதலை அரசியல் ரீதியாக காட்டி, புலியை மேலும் தனிமைப்படுத்துவர். பொறி இயல்பில் எங்கும் எதிலும் ஏற்படுகின்றது. இதுதான் அன்றாடம் நடக்கின்றது. மற்றொரு தளத்தில் புலிகள் நடாத்திய தொடர்ச்சியான பல நூறு கொலைகள் ஒருபுறம், பதிலடியாக அரசு ஒரு சில கொலைகளை நடத்த தொடங்கியுள்ளது. இதைப் புலிகளுக்கு பதிலடியாக புலிக்கு எதிரான குழுக்கள் செய்வதாக காட்டப்படுகின்றது.

சமாதானம் அமைதி என்ற போர்வையில் இருந்து யுத்தத்தைத் நோக்கி புலிகள் செல்ல விரும்புகின்றனர். ஆனால் அரசியல் வங்குரோத்தால் நேர்மையாக செல்லமுடியாது உள்ள நிலையில், கொலைகளையும் இராணுவத்துக்கு எதிரான தாக்குதலையும ; தீவிரமாக்குகின்றனர். இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கினர். அரசு தற்காப்பு நிலையில் நின்றுமட்டும் இதை எதிர்கொள்கின்றது. சதிகள் மூலம் புலிப்பாணி நடத்தைகளை மேலும் உசுப்பிவிட்டுள்ளனர். எது புலி எது அரசு என்று இனம் காணமுடியாத சூனியத்தை, அரசு ஏற்படுத்தி அனைத்தையும் புலியாக்குகின்றது. அதேநேரம் புலிகளின் அராஜகத்தை உலக சமூகங்களின் முன்பும், உலகம் முன்பும் அம்பலப்படுத்தி புலிகளை தனிமைப்படுத்தி வருகின்றனர். புலிகள் மேலும் மிக கடுமையான சிக்கலான நெருக்கடிக்குள் சென்ற வண்ணம் உள்ளனர்.

அரசியல் ரீதியான சரியான அணுகுமுறையற்ற பேச்சுவார்த்தைகள் முட்டுச் சந்திக்கு வருவது தவிர்க்க முடியாதது. யுத்தத்துக்கும் மீள முடியாத நிலை வேறு. வடக்குகிழக்கு தமிழ் மக்கள் சரி, இலங்கை வாழ் மக்கள் சரி யுத்தத்துக்கு எதிரான தெளிவான நிலைப்பாட்டுடன் தான் உள்ளனர். இதை யாரும் மறுக்கமுடியாது. யுத்தம் தொடங்குபவர்கள் குற்றவாளியாகவே இலங்கையில் உள்ள அனைத்து சமூகத்தாலும் காணப்படுவர். இந்த வகையில் தான் ஜே.வி.பி மதில் மேல் பூனையாக காத்துக்கிடக்கின்றனர். அரசில் சேராது விலகி இருந்தபடி எதற்காகவோ காத்துக் கிடக்கின்றனர் என்றால், யுத்தத்தைத் தான். ஆனால் அந்த குற்றம் தம் மீது வீழ்ந்துவிடக் கூடாது என்பதால் அரசில் சேரவில்லை. அதேபோல் பேச்சு வார்த்தைக்கு செல்வதைக் கூட தனது முடிவு அல்லவெனக் காட்டுவதற்காக, அரசில் சேராது வெளியில் காத்துக் கிடக்கின்றனர். தாம் இவற்றில் எதிலும் சம்பந்தப்படவில்லை என்று, நாளை சந்தர்ப்பவாதமாக குலைக்கவே, அரசில் இணையவில்லை. இந்த நிலையில் இருந்து தீர்க்கமாக அரசு எப்போது வெளிவருகின்றதோ, அன்று இவர்கள் அரசில் சேர காத்துக்கிடக்கின்றனர்.
இந்த நிலையில் யுத்தத்தை புலிகள் தொடங்க கோரும் மேற்கு மந்தைகளான விசிலடிக் கூட்டங்கள், வடக்குகிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் கலக்காத வன்முறை மேல் காதல் கொண்ட லும்பன் சமூகமாக சிதைந்து கிடக்கின்றது. சண்டையை விசிலடித்து கொண்டாடுகின்றனர். மாவீரர் தின உரையைக் கேட்போரை கவர, உணவுவிடுதிகள் ஆட்டுக்கொழுப்பு இறைச்சியும் விஸ்கியும' விசேடமாக அன்று பரிமாறினர். கிரிக்கட் போட்டியின் போது உணவு விடுதிகள் வர்த்தக நோக்கில் கையாளும் அதே அளவுகோலையே, இதற்கும் பயன்படுத்தினர். எங்கும் மாவீரர் இழிவாடப்பட்ட நிலையில், யுத்தவெறி கூடிய லும்பன் ரசனைக்குரிய நிலையில் இது மேற்கில் கொண்டாடப்பட்டது. யுத்தம் ஒரு தீர்வாக அமையுமா?; எப்படி? யுத்தம் இருதரப்பிலும் பல ஆயிரம் பேரை பலி கொள்வதுடன், பல ஆயிரம் மக்களை கொல்லவும் அவர்களின் வாழ்வையும் சீரழிக்கும். ஆனால் யுத்த வெறியர்கள் இதை நோக்கியே புலம்புகின்றனர். சரி அப்படி யுத்தம் நடந்தால், யாழ்குடாவை பிடித்தால் எல்லாம் எப்படி சரியாகிவிடும்!

இயல்பாக பூரணமான பொருளாதார தடை அமுலுக்கு வரும்;. இராணுவம் இருக்கும் வரைதான் உணவு விநியோகம், அரசு ஊழியருக்கான சம்பளம் கூட. இந்த நிலையில் உலகில் எந்த நாடும் அங்கீகரிக்க மாட்டாது. புலிகளை பயங்கரவாத இயக்கமாக மேலும் பலநாடுகள் அறிவிக்கும். எப்படி இதில் இருந்து மீள்வது. மக்கள் உயிர் வாழ்வதற்கு, உற்பத்தி செய்வதற்கு எம் மண்ணில் நீடித்த முழுமையான ஆதாரத்தையும் புலிகளின் சூறையாடும் கொள்கையால் சமூகமே அனைத்தையும் இழந்து நிற்கின்றது. புலிகள் சமூகத்தில் இருந்து அன்னியமான நிலையில், சமூகத்தை சுரண்டி வாழும் லும்பன்களாகவே உள்ளனர். எப்படி சமூகத்தைப் பாதுகாப்பது? மீட்பது? இந்தக் கேள்விக்கு புலிகள் ~மேதகுகள் என்றும் பதிலளிபபதில்லை. தன்னெழுச்சி வாய்ந்த நிலைமைகேற்ற வாய்வீச்சை மட்டும் எப்போதும் நடத்துகின்றனர்.
யுத்தம் சர்வதேச ரீதியான கடுமையான எதிர் நடவடிக்கைக்கு இட்டுச் செல்லும். பயங்கரவாதப் பட்டியலில் தமிழ் இனத்தையே சேர்த்து, தமிழ் மக்களின் கழுத்தை இறுக்கிக கொல்லும். மறுபுறத்தில் சர்வதேச தலையீட்டுக்கான சூழலும் காணப்படுகின்றது.

இந்த நிலைமையில் இருந்து மீள்வது எப்படி?

பேரினவாதம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தனது சொந்த தீர்வை முன்வைக்காத இன்றைய நிலையில், யுத்தத்துக்கு செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் உள்ளது. ஆனால் புலிகளின் வழமையான பாணியில் அல்ல. அப்படியாயின் எப்படி? பேச்சுவார்தைகள் அனைத்தும் பகிரங்கமாக இருக்கவேண்டும்;. இலங்கையில் வாழும் சமூகங்களும், சர்வதேச சமூகமும் சொந்த முடிவை இதன் மேல் எடுக்க நிர்ப்பந்திக்க வேண்டும். பேச்சுவார்த்தை மேசையில் தெளிவாக அரசியல் கோரிக்கையை முன்னிறுத்த வேண்டும்;. நிரந்தர சமாதானம் என்ற வகையில், அரசின் யோசனையை பகிரங்கமாக முன்வைப்பதை நிபந்தனையாக்க வேண்டும். அந்த வகையில் பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும். தேசியம் சார்ந்த ஜனநாயகக் கோரிக்கையை முன்னிறுத்த வேண்டும். இதை சிங்கள சமூகத்தின் ஜனநாயகக் கோரிக்கைக்கு இயல்பானதாக இணங்கி வரும் வண்ணம், தெளிவாக முன்னிறுத்த வேண்டும். சிங்கள பேரினவாத தேசியத்தில் இருந்து, சிங்கள தேசியத்தை தனிமைப்படுத்தும் வகையில் கோரிக்கையை, தமிழ் மக்கள் சார்பாக முன்னிறுத்த வேண்டும். அதாவது சாரம்சத்தில் சிங்கள மக்களுடன் இணங்கி போகும் வகையில் கோரிக்கையை சரியாக முன்னிறுத்தி, பேரினவாதத்தை சிங்கள மக்களிடம் இருந்து பிரிக்கவேண்டும். இப்படி அரசை சிங்கள மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தை ஏகாதிபத்திய அரசுகளிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். வெளிப்படையான நேர்மையான அணுகுமுறை, எந்த தீர்வையும் நியாயமாக போராட்டத் தரப்புக்கு சார்பாக மாற்றும்.

மறுபக்கம் தமிழ் மக்களுடனான உறவை புலிகள் மாற்றியமைக்க வேண்டும். தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை முன்னிறுத்த வேண்டும். இந்த அடிப்படையில் சிங்கள அரசின் கூலிக் கும்பலாக உள்ளவர்களையும், ஏகாதிபத்திய கூலிகளாக வரத்துடிக்கும் கும்பலையும் தமிழ் மக்களிடம் இருந்து அரசியல் ரீதியாக தனிமைப்படுத்த வேண்டும்;. இதற்கு முதலில் புலிகள் பகிரங்கமான சொந்த சுயவிமர்சனத்தை செய்யவேண்டும். செய்வார்களா! மக்கள் தமது சொந்த விடுதலையை அடைவார்களா!

கருணாவின் புலி அரசியலும், அன்னிய கைக்கூலித்தனமும்

கருணா தனது கொலைகார புலிப்பாணி அரசியல் செயல்பாட்டுக்கு கூட நியாயம் கற்பித்துள்ளார். கருணாவின் மாவீரர் தினக் கூற்று அதே நிலைப்பாட்டில் இருந்து வெளிவருகின்றது. ~~எங்கள் இளைஞர்களையும் மக்களையும் வன்னி ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக வீடுகளுக்குச் சென்ற எங்கள் இளைஞர்கள் மீண்டும் ஆயுதங்களை எடுத்து இந்த இனத்துரோகிகளை விரட்டியடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். சிறிது காலம் ஒதுங்கியிருந்துதான் பார்ப்போம் என்று நினைத்திருந்த என்னை பிரபாகரனது கொலைவெறி உடனடியாகவே களத்துக்கு இழுத்து வந்துவிட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் பல தற்காப்பு தாக்குதல்களை நடத்தியுள்ளோம். இப்படி தமது பக்க கொலைக்கலாச்சாரத்தை நியாயப்படுத்தியுள்ளார். ஆனால் குற்றம் தர்க்க ரீதியாக புலிகள் மேலானதாக குற்றச்சாட்டப்படுகின்றது. கொலை செய்யும் உரிமையை எப்படி இது நியாயப்படுத்தும்! கொலைகளை தொடங்கியது புலிகள் தான். இன்று இராணுவத்துக்கு எதிரான தாக்குதலை நடத்துவதும் புலிகள் தான்.

அதனால் புலிப்பாணி அரசியலையை, கொலைக் கலாச்சாரத்தை செய்வது எப்படி நியாயமாகும். கருணா புலிகளின் பிரதேசவாதம் தான், தனது சொந்த தனிப்பட்ட பிரிவுக்கு காரணம் என்று சொன்னவர். எப்போதாவது அதன் அடிப்படையில் இவர் செயல்பட்டுள்ளாரா எனின் கிடையவே கிடையாது. பிரிவுக்கு முன்னும் சரி, பிரிவின் போதும் சரி, பிரிந்த பின்பும் சரி எந்த விதத்திலும், அந்த பிரதேச மக்களின் நலன்களுடன் தன்னை இணைத்துக் கொண்டவரில்லை. மாறாக அதே புலி அரசியலை, புலிக்கு மாற்றாக படுகொலை அரசியலை நடத்துகின்றார். இதைத்தான் பிரதேசவாத அரசியல் என்கின்றனர்.

இதற்கு ஒரு படி மேலே போய் ~~எங்கள் இனத்துக்கான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க எம் இனத்துடன் தொடர்புடைய எங்கள் பூர்வீகத்தை நன்கு தெரிந்து கொண்ட நாடுகள் முன்வர வேண்டும். ஒன்று இந்தியா, அல்லது பிரித்தானியா ஆகிய இரண்டு நாடுகளும் தான் எங்கள் பிரச்சனைகளை நன்கறிந்தவர்கள். இவர்களது மத்தியஸ்தம் தான் எமக்குத் தேவையானது. குறிப்பாக இந்தியாதான் எங்கள் இனத்துக்கான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க வேண்டியநாடு. பிரித்தானியா ஆட்சியாளராக இருந்து பொறுப்புகளை கொழும்புவாசிகளிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற நாடு. இந்த இரண்டு நாடுகளும் எங்கள் பிரச்சினையில் தலையிடாது இருப்பதற்கு யார் காரணம், வேறுயாருமல்ல பிரபாகரன்தான். இப்படி தனது மாவீரர் தினச் செய்தி மூலம் கூறி, அன்னிய கைக்கூலியாகி நிற்கின்றார். பிரபாகரனை விட கீழ் இறங்கி நிற்கின்றார். கிழக்கு வாழ் மக்கள் எங்கே போய்விட்டார்கள். கிழக்கு மக்களிடம் தங்கி நிற்காது, இந்தியாவையும் அன்னிய நாடுகளையும் சார்ந்து நிற்கும் விபச்சார அரசியலைத் தான், கருணா அறிவித்துள்ள நிலையில் இவர்கள் வன்னிப்புலிகள் என்று குற்றம்சாட்டும் அரசியல் அருகதையைக் கூட இழந்து விடுகின்றனர். நடைமுறையில் இந்தியாவுடனும், அரசுடனும் கூடிக்குலாவும் அரசியல் வளர்ச்சியே கண்டுவருகின்றது. முற்றாகவே இந்தியாவின் வளர்ப்பு நாயாக வளர்ந்த பரந்தன் ராஜன் கும்பலான ஈ.என்.டி.எல்.எவ் யுடன் கூடிய கூட்டின் போதே, இதன் பின்னனி அம்பலமாகத் தொடங்கியது. இவர் தனது முன்னாள் துரோகியுடன் கண்ணால் காணாத திடீர் காதல் கொண்டு கூடிய போது, இவரின் கைக்கூலி அரசியல் அம்பலமாகியது. இதே போன்று டக்கிளஸ்சுடன் கொண்டிருந்த ஆரம்ப உறவுகள் எல்லாம், அரசியல் ரீதியாக துரோகத்தனமானவை. நியாயப்படுத்த முடியாதவை.

இங்கு துரோகம் என்ற அரசியல் பதத்தை, புலிகள் பாணியில் நாம் பயன்படுத்த முனையவில்லை. மாறாக நாம் தெளிவாக சொந்த மக்களைச் சார்ந்து நிற்காது, அன்னிய அரசுடன், அன்னிய இராணுவங்களுடன், எதிரி இராணுவங்களுடன் கூடிச் செயல்படும் அனைத்தையும் துரோகத்தனமானதாகவே நாம் கருதுகின்றோம். புலிகள் படுபயங்கரமான மக்கள் விரோத செயல ;களை செய்த போதும் கூட, இந்த கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்திவிட முடியாது. நீ நேர்மையாக இருந்தால் மக்களுடன் நில், போராடி நேர்மையாக அதில் மடி. இல்லையென்றால் ஒதுங்கிப் போ. இது அரசியல் நேர்மை. மக்கள் என்ற வார்த்தையை புலிகளைப் போல், கெடுகெட்ட அன்னிய ஆக்கிரமிப்பாளருக்கு சாதகமாக பயன்படுத்துவதை, நாம் ஒரு நாளுமே புலிகளின் பெயரில் அனுமதிக்க முடியாது. இதை யார் செய்தாலும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

சாதாரணமான மக்கள் புலிகளின் கொடுமைகளின் போது, புலிகள் அல்லாத ஒருவரின் துணையை நாடுவதை நாம் துரோகமாக கருதுவதில்லை. ஆனால் அரசியல் குழுக்கள், அதன் தலைவர்களை, அரசியல் செய்வோர் இப்படி செயல்படும் போது, அரசியல் ரீதியாக மன்னிக்கவோ சலுகை வழங்கவோ முடியாது. புலி அல்லாத அணி, ஒரு அணியாக இதனால் இருக்கவும் முடியாது. நீங்கள் புலிகளின் கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினால், மக்களை மட்டும் சார்ந்து நில்லுங்கள். இதில் தனித்து நிற்கின்றீர்கள் என்றால், அப்படி மட்டும் நில்லுங்கள். மக்கள் அல்லாத அனைத்துச் செயல்பாடுகளும் துரோகத்தனமானவை தான். வரலாற்றில் மக்கள் அல்லாத புலியின் வரலாறு எப்படி தூக்கியெறியப்படுமோ, அப்படித்தான் இந்த துரோக வரலாற்றுக்கும் நிகழும்;. முடிந்தால் நேர்மையாக போராடுங்கள்.

Sunday, December 4, 2005

தமிழ் மக்களின் தலையில்

ஏறி நின்றே அனைவரும் மொட்டை அடிக்கின்றனர்

எப்படி மொட்டை அடிப்பது என்பதில் முரண்பாடு. ஒருவரையொருவர் எதிரியாக காட்டி விமர்சிக்கினறனர். ஒரவரையொருவா கழுத்து வெட்டிக் கொல்லுகின்றனர் அல்லது கொல்வதற்கான அரசியல் முன்முயற்சியை எடுக்கின்றனர். மக்கள் என்ற வார்த்தை, தமது சொந்த அரசியல் விபச்சாரத்தை மூடிமறைக்கும் ஒரு அரசியல் தந்திரமாகும். மக்களின் உண்மையான விடுதலையை நோக்கி, அவர்கள் தாம் தமது கையில் எடுக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இவர்கள் யாரும் புலம்புவது கூட கிடையாது. இதைதான் புலிகளும் சரி, புலியெதிர்ப்பு கும்பலும் சரி செய்ய முனைகின்றது. மாவீரர் தின உரையை அங்குமிங்குமாக புணர்ந்து தமது சொந்த குறுகிய நலன் சார்ந்து இவர்கள் அனைவரும் வக்கரித்தனர். இதில் புலியும் கூட விதிவிலக்காகவில்லை.

"மேதகு" பிரபாகரனுக்கே பொலிப்புரை வழங்கிய "மதியுரையர்" பாலசிங்கமும்

ஒற்றைப் பரிணாமமுள்ள ஒரு கதைக்கு ஒரு "மேதகு" தலைவர். அந்தக் கதையை மசலாவாக்கி சினிமாவாக்க ஒற்றைப் பரிணமுள்ள ஒரு "மதியூரைஞர்", ஒரு "தத்துவாசியர்". அந்த சினிமாவை மக்களிடம் எடுத்துச் செல்லும் புல்லுருவிகள், ஒட்டுண்ணிகள், நக்கிப்பிழைக்கும் பினாமிகள். பெரும் பரபரப்பூட்டி வெளிவந்த கதை தான், "மேதகு" பிரபாகரனின் புகழ்பூத்த மாவீரர் உரை. இதைப் படமாக தயாரித்து வழங்கியவர் "தத்துவாசியர்". பாலசிங்கம். சப்பென்று இருந்த கதையை ஜனரஞ்சகமாக்க சண்டைக் காட்சியைப் புகுத்தியபடியே படம் தொடங்கியது. கதையில் வில்லனாக காட்ட சில "எட்டபர்கள்" பற்றி பாலியல் கலந்த வம்புத்தனம். தனது நண்பர்கள் பற்றியே பாலியல் கலந்த கிண்டல். இதன் மூலம் "மதியூரைஞர்" "தத்துவாசியர்" என்ற காதநாயக வேடம். படத்தின் இடையில் பாலியல் வக்கிரம் இடையிடையே சந்தில் வகை பகிடிகள் என்று, எல்லாவகையிலும் இழிந்துபோன சினிமா மசலாவையும் கலந்தே, பாலசிங்கம் பிரபாகரனின் கதைக்கு ஒரு பொழிப்புரை வழங்கினார். மாவீரர் தினம் என்ற சோகக் கதை, படத்தில் வெளிவரவேயில்லை. படம் முடிந்த பின்பும் சோக உணர்வு எதுவுமற்ற கலகலப்பு, இப்படியும் ஒரு படமா என்ற அங்கலாய்ப்பு எங்கும் பரபரப்பு.

அமைதி சமாதனம் தொடங்கிய பொது பிரபாகரன் முதல்முதலாக பத்திரிகையாளரை சந்தித்த போது "மேதகு" தலைவர் பற்றி கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் தகாந்த போது எற்பட்ட அதே பரபரப்பு. அதே மனஉணர்வு பாலசிங்கத்தின் உரை எற்படுத்தியது. இப்படியா எமது தலைவர்கள் உள்ளனர் என்ற அங்கலாய்ப்பு. கற்பனைகள், விருப்பங்கள், மனக் கோட்டைகள் தகாந்து போகின்ற போது எற்படும் பதைபதைப்பு.

ஆனால் சினிமா பாணியில் அமைந்த மசாலவகையான வக்கிரத்தின் பொதுதெல்லாம், விசிலடியால் அரங்கமே அதிர்ந்துபோனது. மக்களின் வாழ்வியல் துயரங்களுக்கு எதிராக எங்கெல்லாம் வீசில் சத்தம் கேட்கின்றதோ, துசாணத்தால் அருச்சனை கிடைக்கின்றதோ, அங்கெல்லாம் இந்தக் குரங்குக் கும்பல் குந்தியிருப்பதைக் நாம் காணமுடியும். தியாகம் பற்றி கிளிசாரின் பூசிபடி கண்ணீhவிட்ட ஒப்பாரிகள், தியாகத்தின் பெயரில் தீபங்கள், அதைச் சுற்றி கவர்ச்சியான அலங்காரம் என்று, எடுப்பான வகையில் ஒரு அரசியல் நாடகம். மறுபுறம் உறவுகளை இழந்த கண்ணீர் காட்சிகள், வாழ்வை இழந்த மக்களின் நிஜமான முகங்கள். ஒரே அரங்கில் இவை பரதிபலித்தன.

இந்தக் கதையைக் பற்றி ஊதிப்பெருங்கி மிகப்பெரிய எதிர்பார்ப்பை எற்படுத்தி, ஊரறிய விளம்பரம் செய்தவர்கள் ஊடாகவியலார்கள் என்ற பெயரிலுள்ள மனிதவிரோத ஓட்டூண்ணிகள். பத்திரிகைகளும், ஒளி ஒலிச் சேவைகளும், இணையங்களும் எங்கும் இந்த வகை ஒட்டூண்ணிகளின், நக்கிப்பிழைக்கும் பினாமியம், தனது பிழைப்பு சார்ந்து மடியில் கனமில்லாத இல்லாத ஒன்றைப் பற்றி கற்பனையில் ஊதிப் பெருக்கிக் காட்டினர். இந்த விளம்பர சேவைக்கு பணம் வழங்கி, இதைப் பயன்படுத்தியவர்கள் வர்த்தகம் செய்ய விரும்பும் வர்த்தக சூதாடிகள். தமது சொந்தக் குழந்தையை இழந்து கதறும் உறவினர்களிடையே, ஒரு வர்த்தக விளம்பரத்தையே இவர்கள் நடத்தினர். தொலைக்காட்சி நிகழ்ச்சின் அடியிலும், இடையிலும் மிகப் பெரிய வர்த்தக விளம்பரங்கள். உண்மையில் ஒரு அருமையான ஒரு மாவீரர் தினம்.

மாவீரர்களை போற்றிப் புகழ விளம்பரம் தேவைப்படுகின்றது. இந்த விளம்பர சூதாடிகள் இல்லையென்றால் அவர்கள் மாவீரர்ராக நினைப்பது கூட அற்றுவிடும் என்ற அவலநிலை. இந்த நிலையில் மாவீரர்ரைப் போற்றவும், மெய்சிலிர்க்க பார்வையாளருக்கு சண்டைக்காட்சியும் செக்ஸ் வக்கிரமும், செந்தில் பாணி பகிடிகளும் தேவைப்படுகின்றது. இதுவும் இல்லை என்றால் மாவீரர் கதி என்வாகும். இந்த மாவீரரைப் புரிந்து கொள்ள ஒரு பொழிப்புரை தேவைப்படுகின்றது. இந்த பொழிப்புரையை வழங்க ஒரு "மதியூரைஞர்". சொந்த மாவீரர்களையே, இப்படி அவர்களால் மட்டும் தான் கேவலப்படுத்த முடியும். போராட்ட சீராழிவின் எல்லையை அவர்கள் தொட்டு நிற்கின்றனர்.

இது மட்டுமா! இல்லையே. பிரபாகரனின் ஆட்சேபனைகள் எதுவுமின்றி, மாவீரர் தினத்துக்கு முதல்நாள் கொண்டப்படும் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம். இதையும் கூட புலிகளால் மட்டும் தான் இப்படிச் செய்யமுடியும். அடுத்த நாள் செத்தவீட்டுக்கு தோரணம் கட்டியபடி, முதல் நாள் பிறந்த தினத்துக்கு கேக் அடிக்கின்றனர். உங்களால் இப்படிச் செய்ய முடியுமா? செய்ய முடியும் என்கின்றனர் புலிகள். செய்தும் காட்டுகின்றனர். தமிழ் பண்பாடு அனைத்தையும் கூட மாற்றிக் காட்டுகின்றனர் வீரத் தமிழர்கள்!

இப்படி இருக்கின்றது எமது தமிழ் தேசியம். இந்த குறுந் தமிழ்தேசியக் கூத்தில் எது உண்மையானது அல்லது இரண்டுமே போலியானதா? நீங்களே உங்களைக் கேட்டுப் பாருங்கள். நடிப்பே எமது வாழ்வாகிவிட்ட நிலையில், மக்களின் மந்தைத்தனத்தின் மீது சவாரிவிடுகின்றனர். மந்தையின் மேலேறி நின்று மொட்டை போடுகின்றனர். இந்த இரண்டு கொண்டாட்டங்களையிட்டு பூரித்துப் போவோரோ, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் புடுக்குவது பற்றி வியாகியானங்கள். அதாவது முட்டையில் மயிர்புடுங்கிய கதையைச் சொல்லுகின்றனர். இந்த இரண்டு கொண்டாட்டத்துக்கும் ஒருங்கே விளம்பரங்கள், ஆர்ப்பாட்டங்கள், தயாரிப்புகள். "மேலே எதுவுமற்று" ரசிக்கும் மந்தைக் குணம் கொண்ட ரசிகப் பெருமக்கள். அவர்கள் வாழ்த்தையும், துயரத்தையும் ஒருங்கே ஊடாகங்களில் தெரிவிக்கின்றனர்.

மாவீரர்களின் வீரத்தையும் துயாரத்தைச் சொல்லி அழுது அழுது எழுதிய கவிதைகளை மூடி வைத்துவிட்டு, அழுத கண்ணீரை துடைத்தபடி பிறந்த தினக் கவிதைகளையும் வடிக்கின்றனர். கட்டுரைகளை எழுதுகின்றனர். இவை இணையங்கள், பத்திரிகைகள், ஒலி ஒளி ஊடாகங்களில் இரண்டையும் ஒருங்கே தாங்கி வருகின்றன. இப்படிச் செய்ய உங்களால் முடியுமா? உங்கள் பண்பாட்டால் முடியுமா? ஆம் முடியும் என்று, அதை நடைமுறையில் செய்து காட்டுகின்றனர் புலிகள். இதையே இன்று மாவீரர் என்ற பெயரில் வர்த்தக பெருவிழாவாகவும் நடத்திக் காட்டுகின்றனர். இதை நாம் சீராழிவு என்று தானே கூறமுடியும்.

இந்தக் கூத்தை நியாயப்படுத்த "மதியூரைஞர்" அன்ரன் பாலசிங்கம் நினைப்பில் பலர், அரசியல் பொழிப்புரை வழங்க புலிப்பினாமிகள் பின்நிற்பதில்லை. என்ன அதிசயமான மனிதப்பிறவிகள்! அவர்கள் கூறுகின்றனர் மக்கள் "மேதகு"வின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனராம். புலிகள் செத்த வீட்டைக் கொண்டாடுகின்றனராம். இப்படி உங்களால் நியாயப்படுத்தி தர்க்கம் பண்ணமுடியுமா? இதுவே இதை நியாயப்படுத்த விரும்பும் புலிப்பினாமிகளின் இன்றைய புலம்பல். ஆனால் இந்த இரண்டு கொண்டாட்டத்தையும் கொண்டாடவென களத்தில இறங்கி தண்டல் வசூல் செய்யும் போது, ஒரே நபர்களே களத்தில் நின்று கப்பம் வசூலிக்கின்றனர். ரவுடிகளுக்கு ஒத்த அதே பண்பாடும், அதே கலச்சாரம். இது அல்லாது வேறு ஒன்றல்ல.

இந்த நிகழ்ச்சியின் வெட்டுமுகம் இதுவே. இது எமது கற்பனையல்ல. இது எமது கண்டுபிடிப்பல்ல. இதைத்தான் புலிகள் நடைமுறையில் செய்து காட்டியுள்ளனர். அன்று சுனாமி ஊர் ஊராகவே சூறையாடிய போது, இடிபாடுகளிடையே பிணங்களையே விட்டுச் சென்றது. அதைக் காட்டியே பணம் வாங்கியவர்கள் அல்லவா இவர்கள். மீண்டும் ஒரு சுனாமியாக மட்டுமல்லபது, சூறவாளியாக இணைந்தே சூறையாடியவர்கள் இவர்கள். அப்படிச சூறையாடிச் சேர்த்த பல நூறு கோடி பணத்துக்கு என்ன நடந்தது என்று இதுவரைக்கும், யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் அந்த மனித அவலம், அந்த பிணங்களின் மேலாக தொடருகின்றது. ஏன் நாற்றம் கூட எடுக்கின்றது. இது மட்டுமே உண்மை, இது மட்டுமே எதார்த்தம். இப்படிப் பிணத்தைக் காட்டி சூறையாடியவர்கள், தமது மாவீரர்களையே வர்த்தக விளம்பரம் செய்வது போல் செய்து அரசியல் நடத்துவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

பாலசிங்கம் கூறியது போல் "மேலே எதுவுமற்ற" சிங்களப் பேரினவாதம் இதைச் செய்யவில்லை. மேலே எதோவுள்ளதாக கூறும் தமிழ் தேசியமே, இதைச் செய்தது, செய்கின்றது. பாலசிங்கம் "மேலே எதுவுமற்ற"தாக கூறியது, தமிழ் மக்களாகிய எங்களைத் தான். எங்களின் அறிவீனத்தில் இருந்து எழும் கைதட்டும், விசிலடிக்கும் உள்ள அடிமைத்தனத்தைத் தான் அவர் சூசகமாக குறிப்பீடுகின்றார். தமிழ் மக்கள் தாம் தமது கையில் அணிந்துள்ள அடிமை விலங்கை பாதுகாத்து போற்றவே, எதிரி மீது இதை சோடித்து காட்டியதே இங்கு நிகழ்ந்தது. இது ஒன்றும் நகைச்சுவையல்ல. பேரினவாதச் சிங்களவன் எமக்கு இதைத் திணித்தவனல்ல. நாங்களே எமக்கு தேர்தெடுத்துக் கொண்ட ஒரு அடிமை விலங்காகும்.

பாலசிங்கமும் பெண்ணிலைவாதிகளும்

பாலசிங்கம் ஆபாசத்தை ஆணாதிக்க வடிவில் உளறிய போது, அது தற்செயலானவையல்ல. ஆனால் அதை பாலசிங்கத்தின் தனிப்பட்ட ஒன்றாகவே காட்டமுனைகின்றனர். தமிழ் பண்பாடு தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில், வடக்கில் செயல்படும் புலிப்பிணமிகளான ஷகலச்சாரம் பேனும் குழுவின் வேலையை புலியெதிhப்பு கும்பலும், பெண்ணியல் வாதிகளும் ஐரோப்பாவில் தற்காலிகமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர்.

அவர்கள் முதல் செய்தது பாலசிங்கத்தை தனிமைப்படுத்தி துற்றுவது. புலிகள் இயகத்தில் இருந்த பாலசிங்கத்தைப் பிரித்து துற்றிய ரிபிசி நிகழ்சியில், தனிப்பட்ட முரண்பாடுகளை பழிவாங்கவும் பயன்படுத்திக் கொண்டனர். பாலசிங்கம் இப்படி கூறியது என்பது, தனிப்பட்ட பாலசிங்கத்தின் நிலைபாடல்ல. பாலசிங்கம் வழிகாட்டிய இயக்கம் ஆணாதிக்க இயக்கம் தான். நிலப்பிரபுத்துவ பெண் அடிமைத்தனத்தின் கட்டமைப்பை ஒழுக்கமாக கருதி உருவான ஒரு இயக்கம், பெண்ணை இப்படித் தான் பார்க்கின்றது. தனது எதிரியாக கருதும் அனைத்தையும், இப்படித்தான் கொச்சைப்படுத்தும். எமது இயக்க வரலாறு முழுக்க விதிவிலக்கின்றி இப்படித்தான் இருந்தது, இருக்கின்றது. பாலசிங்கத்தை விமர்சிப்பவர்கள் பலரும், இதற்கு விதிவிலக்கற இந்த சமூக அமைப்பை பாதுகாக்கும் வக்கிரத்துடன் தான் குதித்தெழுகின்றனர்.
பாலசிங்கம் எதைச் சொன்னரோ, அது புலிகள் இயக்கத்தின் உயிருள்ளதும் அன்றாடம் அவர்கள் புணரும் ஒரு தேசிய மொழியாகும். இதை இப்படி மக்களிடம் கூறமுடியுமா என்பது தான், இன்று சார்;ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அதுவும் ஒரு தலைவர் என்று கருதப்படும் ஒருவர், இப்படிக் கூறலாமா என்ற சாச்சையே நிலவுகின்றது. 2000 ஆண்டு இதே மதிரியாக பாலசிங்கம் ஆற்றிய உரையில் "சின்ன சின்ன ஆசைகள் எனக்கு உண்டு" என்று சந்திரிக்காவையே பாலியல் ரீதியாக இழுத்தவர். இதைப்பற்றி சமர் 28 இல் "மாவீரர் தின உரைகளும் சமாதனப் பேச்சுகளும்" என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரையை அன்று நான் எழுதினேன். அதை இணையத்திலும் நீங்கள் பாhக்கமுடியும். இவாகளின் உரையென்பது ஆணாதிக்கம் சார்ந்து இருப்பது என்பது, இயக்கத்தின் உள்ளாந்த ஆணாதிக்க கூறாகும். இதை நாம் பிரித்து பாhக்க முடியாது. பிரித்துக் காட்டுவது, தூற்றவது ஆணாதிக்க சமூகக் கூறையே பாதுகாப்பதன் மூலம் குறுகிய உள்நோக்கம் கொண்ட அரசியலையே முன்னிலைப்படுத்துவதே. புலிகள் ஒரு ஆணாதிக்க இயக்கம் என்பதையும், அந்த ஆணாதிக்க இயக்கத்தின் மொழியாக இது இப்படி இருப்பது ஆச்சரியமானதல்ல.

வழக்கத்தில் இந்த ஆணாதிக்க மொழி வாழ்வின் எல்லா சமூகக் கூறுகளிலும் காணப்படுகின்றது. இதை மறுத்தபடி புலிகளின் பெண்கள் தாம் பெண் விடுதலைக்காக போராடுவதாக பீற்றுவதும், அதை தாம் அழுல் செய்வதாக கூறுவதும் கூட நகைப்புக்குரிய அரசியல் விடையமாகி விடுகின்றது. தலைவர் பெண்விடுதலையை தாருவர் என்ற பொலிப்புரை கூறுவதும் கேலிக்குரியதாகிவிடுன்றது. "கற்பு", "கற்பழிப்பு" போன்ற சொற்களைக் கூட முதன் முதலில், புலிகள் தான் மாற்றி மாற்றுச் சொல்லை முன்வைத்தனர். தாம் பெண் விடுதலைக்காக போராடுவதாக காட்டவும், கற்பு என்ற ஆணாதிக மரப்பை மறுத்த புலிப்பெண்கள் போராடுவதாக சோடிக்கவும் இது அவசியமாகியது. இதையே புலியல்லாத பெண்களும், தீவிர பெண்ணிலைவாதியாக தம்மைக் காட்டிக் கொள்ள தமது நிலைக்கு பொருத்தமாக எடுத்து போர்த்திக் கொண்டனர். ஆச்சரியம் ஆனால் இதுவே உண்மை. இப்படி எங்கும் எதிலும் நடிப்பும் நாடகமும் ஆடிக் காட்டப்படுகின்றது.

பாலசிங்கத்துக்கு எதிராக ஐரோப்பாவில் கலாச்சாரம் பேனும் குழுவாக தற்கலிகமாக அவதாரம் எடுத்துள்ள புலியெதிர்ப்பு கும்பல் எதை எப்படிச் செய்கின்றதோ, அதை அப்படியே புலிகள் யாழ்குடாவில் அழுல் செய்கின்றனர். கலச்சாரம் பேனும் குழு என்ற பெயரிலும், மாகவம்சகால மன்னர்களின் பெயரில் கொலைகாரக் கும்பலும் இது போன்ற ஆபாசங்களையும், நடத்தைகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுகின்றனர்., மரண தண்டனை விதிக்கின்றனர். இவர்களின் ஆசான், குரு தான் இப்படி இங்கு பாலியல் ரீதியாக விபச்சாரம் செய்யம் போது இவருக்கு தண்டனை கிடைப்பதில்லை. இங்கு அந்த இழிந்து போன மக்கள் விரொதத் தொழிலை புலியெதிர்ப்பு கும்பல் எடுக்கின்றது. ஆணாதிக்கம் சமூகம் பாதிக்காத வண்ணம், நேர்த்தியாகவே மரண தண்டனையை வழங்குகின்றது. இங்கு மரண தண்டனை என்பது, பாலசிங்கத்தின் அரசியல் ஈடுபாட்டை இல்லாதாக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது ஆணாதிக்க சமூகத்தை எதிர்தல்ல. மண்ணில் கலாச்சாரம பேனுவது என்ற பெயரில், மக்களின் அடிமை விலங்கை இறுக்குவது தான் நிகழ்கின்றது. கலாச்சாரத்தின் பெயரில், சமூக ஒழுக்கத்தின் பெயரில் இதைச் செய்வது பாசிசத்தின் அடிப்படையான ஒரு சமூகக் கூறாகும்.

புலிகள் அல்லாதவர்கள் என்று தம்மைத் தாம் தீவிரவாத பெண்ணியல்வாதிகள் என்ற கூறிக் கொள்வோரும், பாலசிங்கத்தை கண்டிப்பதற்க்கு எந்த சமூக அருகதையும் அவர்களுக்கு கிடையாது. அவர்கள் கூறுவது வரம்பற்ற பாலியல் சுதந்திரத்தைத் தான். அதாவது நுகர்வை அடிப்படையாக கொண்ட உலகமயமாதல் என்ற பாலியல் சுதந்திரத்தைத் தான். அதாவது நுகர்வுவெறி என்ற ஆணாதிக்க எல்லைக்குள், பெண்ணைப் புணரும் ஆணாதிகத்தைத்தான் இந்த தீவிரவாத பெண் கோருகின்றாள். இதைத்தான் தனது வழியில் பாலசிங்கம் ஒப்புவிக்கின்றார். ஆனால் மக்களுக்கு முன்னால் தமிழ்பண்பாடு என்ற பெயரில் இறுக்கமான நிலப்பிரபுத்துவ அடிமைப் பெண்ணைத் தான்; கலச்சாரத்தின் பெயரில் முன்னிறுத்துகின்றனர். மகாவம்சகால மன்னர்களின் பெயரிலும், கலாச்சார பெனும் காவலர்களின் பெயரிலும் விடும் எச்சரிக்கைகள், படுகொலைகள் இதற்குள் தான் அமைகின்றன.

"மதியுரையர்" பாலசிங்கமும் புலியெதிர்ப்பு கும்பலும்

பாலசிங்கம் மேடையில் எல்லாவிதமான சொந்தக் கவர்ச்சியையும் கடந்து அம்பலமான போது, அதை அழுங்குப் பிடியாக பிடித்துக் கொண்டு புலியெதிர்ப்பு கும்பல் ஒலமிடுகின்றது. பண்பாடு பற்றியும், கலாச்சாரம் பற்றியும், குனிந்ததலை நிமிர மறுத்த பெண்கள் பற்றியும் ஒப்பாரி வைக்கின்றனர். தாம் தம்மை மிகச் சிறந்த பண்பாட்டு கலாச்சார நயகராக நிலைநிறுத்தி, பாலசிங்கத்தின் குறித்த பகுதியை மட்டும் எடுத்து வைத்து புணருகின்றனர். ஆனால் குறித்த பகுதியை பலதரம் ஒளிபரப்பிய போதும், தேனீ விழுந்தடித்துக் கொண்டு பாலசிங்கத்தின் உரையை இணையத்தில் வெளியிட்ட போதும் கவணமாக அதிலும் ஒரு திட்டமிட்ட தணிக்கையைச் செய்த கொண்டனர். அதாவது தமது சொந்த மக்கள் விரோதப் புத்தியைக் காட்டிக் கொண்டனர். பாலசிங்கம் கருணா "பாலியல் இயக்கம்" ஒன்றை ஆரமப்பித்து இருந்தால், நாங்களும் அதில் சோந்திருக்கலாம் என்ற அடிப்படையில் கூறியதை மட்டும் மிகக் கவணமாக நீங்கியிருந்தனர்.

பாலசிங்கத்தின் பாலியல் மற்றும் வன்முறையை சார்ந்த கூறுகளை குறித்த நபர் சார்ந்து மட்டும் விமர்சிக்க புறப்பட்டவர்களின் சொந்தத் தணிக்கை பின் ஒரு அரசியல் உள்ளது. அது மக்கள் விரோத அரசியலாகும். கருணாவை பற்றி கூறியதை மட்டும் ஏன் தணிக்கை செய்கின்றனர். புலிகளின் அதே அரசியலைக் கொண்ட, கருணாவின் மக்கள் விரோத அரசியலை பாதுகாக்க முனைகின்றனர் அவ்வளவே. விவாதத்துக்கு எடுத்த உள்ளடகத்தில் கூட இவர்களின் நோமையினத்தின் வக்கிரம் வெளிப்படுகின்றது.

நீங்கள் கூர்ந்து கவனித்தால், விவாவதத்தை நடத்தியவர்கள் பாலசிங்கத்தை மட்டும் குறிவைத்து தாக்கிய வடிவம், அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை. இயக்கமே ஒரு ஆணாதிக்க இயக்கமாக இருப்பதை மறுத்து, எதோ தனிப்பட்ட பாலசிங்கம் என்பதன் மூலம் கையாளும் அரசியலே ஆணாதிகம் தான். ஆணாதிக்க அமைப்பில் கீறுவிழாத பாதுகாக்கும் அரசியல் உத்தி நயவஞ்சகமாக கையாளப்பட்டது. பாலசிங்கம் ஏன் இப்படி கதைக்கின்றார். இதற்கு சமூகத்துக்கும் உள்ள உறவு என்ன என்ற கேள்வி, இங்கு முன்வைக்கப்படவில்லை. ஆணாதிக்க அமைப்பின் எல்லா சமூகக் கூறுகளிலும் இது அடங்கி புளுத்துக் கிடக்கின்றது. தேனீயில் வெளிவரும் அநாமதேய எழுத்திலும், ரி.பி.சி யின் நிகழ்ச்சிகளிலும் இந்த ஆணாதிக்க கூறுகள் நிறைந்து காணப்படுகின்றது. இதில் இருந்து உருவான பாலசிங்கம் இதன் ஒரு பிரதிநிதி மட்டும் தான். இது எப்படி இருக்கு என்றால், குஸ்புக்கு எதிராக சில சுயநலக் கட்சிகள் காட்டிய எதிர்ப்பும், குஷ்புக்கு சிலர் காட்டிய ஆதாரவு போன்றதே இது. உள் நோக்கம் கொண்டவை. சமூக நோக்கத்துக்கு அப்பற்பட்டதாக இது காணப்படுகின்றது.

அரசியல் ரீதியாக இது உள்நோக்கம் கொண்டவை. பாலசிங்கத்தின் ஆணாதிக்கம் பற்றி ஜெயதேவன் கூறும் போது, அவர் பலவற்றை தன்னளவில் கூட மறந்து விடுகின்றார். தனிப்பட்ட தனது சொந்தப் பகையுணர்வை தீர்த்துக் கொள்ள முனைகின்றார். பாலசிங்கத்தின் நேர்மையாக எதிர்க்க வேண்டும் என்றால், அதை சமூகத்தின் அனைத்து சமூகக் கூறுகளிலும் எதிர்க்க வேண்டும் என்ற நேர்மை அவரிடம் கிடையவே கிடையாது. இவரை புலிகள் கைதாக்கிய போது, இவரின் சகோதாரர் எழுதிய கட்டுரையில் புலியின் செயல்பாட்டை அதன் அணியில் உள்ள பள்ளுப்பறைகளின் செயலாகத் தான் காட்டியவர். புலியின் அரசியலாக இதைக் காட்டவில்லை. இதே பணியில் தான் புலியின் ஆணாதிகமாக அல்லாது, பாலசிங்கத்தின் செயலாக மட்டும் காட்டுகின்றார். ஆணாதிக்க அமைபில் கிறு விழுவதை கவனமாகவும் நோத்தியாக தவிர்க்கின்றார்.

அவர் நிர்வாகத்தில் உள்ள கோயிலும், அது சார்ந்த இந்து மதமும் இதை விடக் கேவலமான ஆணாதிக்க பாலியலை உச்சரித்து அதை அடிப்படையாக கொண்டே செயல்படுகின்றது. வாழிபாட்டின் உள்ளடக்கம், வாழிப்பாட்டு மந்திரங்கள், கடவுகளின் பிறப்புகள், வழிபாட்டு முறைகள், வழிபாடுகள் என எங்கும் இந்துமதம், ஆணாதிக்க வக்கிரத்தின் மேல் தான் இந்து மதம் பிறந்தது. இதை அங்கீகரித்து இதைத் தமிழ்பண்பாடு என்று போற்றியபடி, பாலசிங்கத்தை விமர்சிக்கும் எந்த தகுதியும் இவருக்கு கிடையாது. விமர்சிக்கும் தகுதி என்பது முரணற்ற வகையில், அனைத்து ஆணாதிக்கத்தையும் எதிர்ப்பவர்களுக்கே உள்ளது. இல்லையென்றால் இங்கு எந்த நேர்மையும் கிடையாது. உள்நோக்கம் கொண்ட பாலசிங்கத்தின் அதே ஆணாதிக்கம் அரசியலே இங்கும் உள்ளது.

ஏன் இவர் அங்கம் வகிக்கும் பிரிட்டிஸ் தொழில்கட்சி ஈராக் பற்றி பொய்களையும் அவதூறுகளையும் கூறியே ஈராக்கை ஆக்கிரமித்தது. நேர்மையான ஒரு மனிதன் அக்கட்சியில் இருந்து, விலகியல்லவா இருக்கவேண்டும். இவர் அங்கம் வகிக்கும் கட்சியின் ஆட்சியில் தான் பிரிட்டிஸ்சில் படைகள், ஈராக்கில் நடத்தும் பாலியல் வக்கிரங்களையும் படுகொலைகளையும் நடைமுறையில் நடத்துகின்றது. பாலசிங்கத்தின் உரைக்கு புடுக்கும் இவர்கள், ஈராக்கில் பிரிட்டிஸ் நிலையை நியாயப்படுத்தும் அதே கட்சியின் உறுப்பினர் தான் இவர். (இவரின் அரசியலைப் பற்றி விரைவில் தனிக் கட்டுரை வெளியிட உள்ளேன். அதில் விரிவாக நாம் பாhக்கவுள்ளோம்.) இப்படி nஐயதேவன் ஒரு ஆணாதிக்க அமைப்பின் பாதுகாவலர். அவர் எப்படி பாலசிங்கத்தை விமர்சிக்கமுடியும். அதனால் தான் தனிப்பட்ட பாலசிங்கத்தை விமர்சிக்கின்றார். அதைத் தான் ரி.பி.சி யும் செய்யமுனைகின்றது. இங்க நேர்மையென எதுவும் கிடையாது.

இந்த நேர்மையினம் திட்மிட்ட வகையில் ஆணாதிக்க பண்பாடு கலாச்சாரத்தின் பெயரில், தனிப்பட்ட பாலசிங்கத்தை குற்றவாளியாக காட்டியே ஆணாதிக்க அரசியல் கூத்தாடப்படுகின்றது. இதன் பின் உள்ள அரசியல், என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் ஏகாதிபத்திய ஆணாதிக்க ஆதாரவு அரசியல் தான். ஐரோப்பிய பராளுமன்றத்தில் முன்நின்று புலிகளைப் போல் புலம்பும் இவர்கள், ஐரோப்பாவின் சர்வதேச ஒழுக்ககேட்டைப் பற்றி பேசுவதில்லை. பாலியலடிப்படையில் நோக்கின் உலகில் உள்ள விபச்சார விடுதிகள் எல்லாம், ஐரோப்பிய உல்லாசத்துறையுடன் நேரடியாக தொடர்புடையவை. இந்த பாலியல் இல்லையென்றால், ஐரோப்பிய உல்லாசத்துறையே கிடையாது. ஏகாதிபத்திய அரசுங்களை ஆதாரித்துக் கொண்டு, அதன் ஒரு உறுப்பாக இருந்த கொண்டு, நேர்மையாக சமூக ஒழுக்கத்தைப் பற்றி பேசுவது எப்படி சாத்தியம். தனிப்பட்ட பாலசிங்கம் மீதான தாக்குதலாக இது மாறுகின்றது. பாலசிங்கம் புலிகள் என்ற ஆணாதிக்க இயக்கத்தின், ஏன் ஆணாதிக்க சமூதாயத்தின் ஒரு பிரதிநிதி என்ற வகையில் இவர்கள் அனுகமறுப்பது அரசியல் ரீதியாகவே தெளிவானது. ஏனென்றால் இவர்கள் புலிக்கு மற்றாக முன்வைப்பதே அதே ஆணாதிக்க சமூகத்தைத் தான். அதே ஆணாதிக்க அரசியலைத் தான். ஜெயதேவன் சரி, ரி.பி.சி சரி புலிகளின் பினாமியாக விசுவசமாக இருக்க அனுகிய போது, அவர்களின் புறக்கணிப்பால் மட்டும் புலியெதிர்ப்பு அரசியல் வேடம் தாங்கியவர்களே ஒழிய, அரசியல் ரீதியாக மக்கள் நலனை முனைவைத்து அவர்களுடன் முரண்பட்டவர்கள் அல்ல. அரசியல் ரீதியாக அதே புலி அரசியல் தான் சமூகத்தின் எல்லாக் கூறுகளின் மேலும் கொண்டுள்ளனர்.

உண்மையில் பாலசிங்கத்தின் ஆணாதிக்க உரை எவ்வளவு மோசமானதோ, அதே அளவுக்கு இவர்களுடையது அரசியலும் ஆணாதிக்கம் சார்ந்ததே.

இதில் லாபம் அடைவது சிங்கள பேரினவாதமும் ஏகாதிபத்தியமும் தான்.

இதையிட்டு பேரினவாதமே மகிழ்ச்சியடைகின்றது. ஏகாதிபத்தியமும் மகிழ்ச்சியடைகின்றது. மக்களையிட்டு அக்கறைப்படும் யாரும், இதைக் கண்டு, இந்த இழிவாடலைக் கண்டு கோபமடையாது இருக்கவே முடியாது. புலிகள் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கூறை ஆணாதிக்க மொழியில் புணர்ந்த போது, தியாகங்களையே சொந்த மக்களின் முன் கொச்சபைபடுத்தி இழவாடிய போது ஒரு அதிர்வையே எற்படுத்தியுள்ளது.

அதை தூக்கிக் கொண்டு அதே ஆணாதிக்க எல்லைக்குள் நின்ற குதிராட்டம் போட்ட புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல், தமிழ்பேசும் மக்களின் வாழ்வின் சகல கூறுகளை அடிமை நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது. மக்களை இந்த ஆணாதிக்க சமூக அமைப்பில் இருந்து மீட்டு அவர்களை வழிகாட்டும் வகையில் விமர்சிக்க முற்படாது, பேரினவாத நுகத்தடிக்குள்ளும் எகாதிபத்திய அடிமைத்தனத்துக்குள் இழுத்துச் செல்லமுனைகின்றனர். புலிகளின் ஒவ்வொரு அரசியல் தவறையும் அப்படி இழுத்துச் செல்லும் புலியெதிர்ப்புக் கும்பல், மக்கள் தமது சொந்த விடுதலையின் பால் சிந்திக்க துண்டுவதைத் திட்டமிட்ட வகையில் தடுக்கின்றனர். புலிகள் எப்படி மக்களை தவறாக மக்களின் பெயரில் பயன்படுத்தி குறுகிய மக்கள் விரோத அரசிலை அரங்கேற்றுகின்றரோ, அதே போன்று புலியெதிர்ப்புக் கும்பல் மக்களின் பெயரில் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யம் வகையில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரத்தைச் செய்கின்றனர். மக்கள் விடுதலையை அவர்கள் தமது கையில் எடுக்கும் வண்ணம், இந்த புலியெதிர்ப்புக் கும்பல் வழிகாட்டுவதாக யாரும் சுட்டிக்காட்டவே முடியாது.

இந்தப் புலியெதிர்ப்புக் கும்பல் புலிகளைப் போல் அதே அரசியலைக் கொண்டுள்ளனர். ஏகாதிபத்தியம் பற்றி புலிகளுக்கு முரணான அரசியலே எதுவும் கிடையாது. ஆணாதிக்கம், சாதியம் போன்ற பல்வேறு கூறுகளிலும் கூட இதே நிலைதான்;. பிரபாகரனின் மாவீரர் தின உரை, கருணாவின் ஏகாதிபத்திய ஆதாரவு உரை, பேரினவாதத்தின் நிலை பற்றி மற்றொரு கட்டுரையில் தனியாக விரைவில் பார்ப்போம்.