இல்லை; இது வளர்ச்சியில்லை; இது அப்பட்டமான சூறையாடல். பெருமுதலாளிகள் தமது தொழில் திறமையால் இவ்வளவு செல்வத்தை ஈட்டவில்லை. அரசின் தலையீடு கட்டுப்பாடு இல்லாததால்தான் அவர்களால் இவ்வளவு தூரம் முன்னேற முடிந்துள்ளது என்பது அப்பட்டமான பொய்.
உண்மையில், அரசு தலையிட்டு பொதுச் சொத்துக்களை அடிமாட்டு விலைக்குத் தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததால்தான் அவர்களால் கோடிகோடியாய் செல்வத்தைக் குவிக்க முடிந்துள்ளது. இதுதவிர, அரசு தலையிட்டு இத்தனியார் முதலாளிகளுக்குக் கணக்கற்ற சலுகைகளையும் வரிவிலக்குகளையும் வாரியிறைத்ததால்தான் அவர்களால் கொழுக்க முடிந்தது. இந்த உண்மைகளை நிரூபிக்க மாபெரும் ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஆண்டுதோறும் இந்திய அரசின் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டு வரும் அறிக்கைகளே இந்த உண்மைகளை மெய்ப்பித்துக் காட்டுகின்றன.
· பொதுத்துறை நிறுவனங்களில் அரசுப் பங்குகளை அவற்றின் உண்மை மதிப்பைவிடக் குறைந்த விலைக்கு தனியார் முதலாளிகளுக்கு விற்றதன் மூலம் தனியார்மயம் தாராளமயம் தொடங்கப்பட்ட 199192ஆம் ஆண்டிலேயே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3,442 கோடிகள். ஆரம்பத்தில், நட்டத்தில் இயங்கும் அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதாகச் சொல்லி தொடங்கப்பட்ட இக்கொள்ளை, வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்தில், இலாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களையும் சூறையாடுவதாக மாறியது. பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. கோரியபடி, பா.ஜ.க. ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் (2004) அவசர அவசரமாக இலாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த எண்ணெய் எரிவாயுக் கழகம் உள்ளிட்ட ...... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment