""விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்?'' என்ற சிறு வெளியீடு மற்றும் மே நாள் அறைகூவலைக் கொண்ட துண்டறிக்கைகளோடு, இவ்வமைப்புகளின் தோழர்கள் தமிழகமெங்கும் வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர். வீடுகள், தெருக்கள், கடைவீதிகள், பேருந்துகள், புறநகர் ரயில் பெட்டிகள் அனைத்தும் பிரச்சார மேடைகளாகின. தனியார்மயம் தாராளமயத்துக்கு எதிரான புரட்சிகர அரசியல், மே நாளன்று இவ்வமைப்புகள் நடத்திய பேரணி. பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகளில் எதிரொலித்தது.
பின்னலாடை, ஆயத்த ஆடை, சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில், கோவை ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த இவ்வமைப்புகள் இணைந்து, மே நாளன்று மாலையில், செங்கொடிகள் விண்ணில் உயர எழுச்சிமிகு முழக்கங்களோடு பேரணியை நடத்தின. சாமுண்டிபுரம் சாலை குமார் நகரில், திரளான உழைக்கும் மக்களின் பங்கேற்புடன் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் சீனிவாசன் (ம.க.இ.க) ஆற்றிய சிறப்புரையும் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்த அறைகூவுவதாக அமைந்தன. புதுச்சேரி மற்றும் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து கடலூரில், தலைமை அஞ்சலகம் அருகிலிருந்து திருப்பாப்புலியூர் தேரடி வீதி வரை விண்ணதிரும் முழக்கங்களுடன் மே நாள் பேரணியை நடத்தின. ஜெயகாந்த்சிங் (வி.வி.மு), துரை.சண்முகம் (ம.க.இ.க) ஆகியோரின் சிறப்புரைகளும், கலைநிகழ்ச்சிகளும் இன்னுமொரு விடுதலைப் போருக்கு நாடும் மக்களும் ஆயத்தமாக வேண்டிய அவசியத்தை உணர்த்தின......
தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து ஓசூரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் துண்டறிக்கை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்து, உழைக்கும் மக்களை அணிதிரட்டி பேருந்து பணிமனையிலிருந்து ராம்நகர் வரை, பாட்டாளி வர்க்கப் பேராசான்களின் உருவப் படங்களுடன் செங்கொடிகளை ஏந்தி,
No comments:
Post a Comment