தமிழ் அரங்கம்

Sunday, June 22, 2008

மகிந்தாவின் மடியில் குந்தியபடி புலிப்பாசிசம் பற்றி பேசுபவர்கள்

இதில் ஒருவர் தான் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இவர் மகிந்தவை சந்தித்து ஆசி பெற்றது முதல், இருண்டதெல்லாம் புலியாகத் தெரிய உருவாடுகின்றார். ஏதேதோ புலம்புகின்றார். கொலையையே அரசியலாக கொண்ட புலிப் பிள்ளையான், பேரினவாத மகிந்த அரசினால் ஒரு கூலிக் கும்பல் தலைவனாக திடீரென உயர்த்தப்பட்டவுடன், கிழக்கின் விடிவெள்ளி என்று உச்சிமோந்தவர் தான் இந்த இராஜேஸ் பாலா.

இப்படி கிழக்கு மக்களுக்கு மேல் ஒரு நரகலை அள்ளி தெளித்ததுக்கு அப்பால், அந்த மக்கள் அதை கழுவக் கூட முடியாத வகையில், பிள்ளையான் - மகிந்தவின் பாசிச கொடூரங்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புலி பாசிசக் கும்பல் ஒழிந்தால் சரி என்று கருதும் 'ஜனநாயக" கும்பல் பக்கப்பாட்டு பாட, ராஜேஸ் பாலாவோ இந்தப் பாசிசத்துக்கு ஆராத்தியெடு;த்தார். கிழக்கு மக்களின் அடிமைத்தனம் தான், கிழக்கின் விடுதலை என்கிறார். இப்படி மகிந்தவுக்கு ஏற்ப தளம் போடும் இந்த கிழக்கு பாசிட் தான், புலியெதிர்ப்பு பாட்டுப்பாடும் தேனீயில் மகிந்தவுக்காக முந்தானை விரிக்கின்றார். எழுத்துச் சுதந்திரம் பற்றி, இன்றைய எதார்த்தத்தையே தனக்கு ஏற்ப திரித்துப் புரட்டுகின்றார்.

எழுத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தானே மகிந்தாவுடன் குலாவியபடி, புலிக்கு எதிராக புலம்புகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை மறுக்கின்ற பேரினவாத பாசிச அரசை காப்பாற்றும் வகையில், ஒரு பாசிட்டுக்கே உரிய கோமாளித்தனதுடன் கதை சொல்லுகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை நசுக்குவது அரசு தான். இது உலகமறிந்தது. இப்படி இருக்க இந்தப் பேரினவாத அரசுக்கு எதிராக கருத்துரைக்காது, ஒரு போக்கிலிக்குரிய வகையில் சுதத்திரத்தைப் பற்றிப் பேசுகின்றார். ரவுடி பிள்ளையானை கிழக்கின் விடிவெள்ளியாக எழுதிய இந்தப் பரதேசி... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: