ஆளுக்காள் கோள் மூட்டி தான் பிழைப்பதே தேசத்தின் ஊடகவியல் தத்துவமாக, அதை 'தொழில் நேர்மை" என்று அது தனக்குள் பீற்றிக்கொள்கின்றது. இதற்குள் ஜனநாயகம் பேசும் விற்பன்னர் கூட்டமோ தமது குறுகிய வக்கிர அற்ப தேவைக்கு ஏற்ப அதற்குள் குத்தி முறிகின்றனர்.
ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்ற மூக்கால் சிந்தி சிணுங்கும் இக் கூட்டம், புலியல்லாத மாற்றுத் தளத்தில் கடந்த காலத்தில் எப்படி தான் நடந்து கொண்டது.
அரசியல் ரீதியாக எதையும் இன்று வரை வைத்தது கிடையாது. அதாவது மக்கள் தாம் போராடி, தமது சொந்த விடுதலை அடையும் வகையில், எந்த அரசியலையும் இந்த 'ஜனநாயக இலக்கிய வாதிகள்" வைத்தது கிடையாது. இதை எப்போதும் நிராகரித்தே வந்துள்ளது. இதை வைக்கும் போது, அதைத் தூற்றியது. வைப்பவருக்கு எதிரான தடையாகவும், தாக்குதலாகவும் கூட மாறியது. உண்மையில் எதை அவர்கள் ஜனநாயகம் என்றனரோ, அதையே அவர்கள் மறுத்தனர். இதற்கு நிறையவே உதாரணங்கள் உண்டு.
1. அண்ணளவாக 15 வருடங்களுக்கு முன்னம் 14வது இலக்கியச் சந்திப்பு பாரிசில் நடந்த போது, இது வெளிப்படையாக சந்திக்கு வந்தது. அந்த இலக்கிய சந்திப்பில் கருத்துக் கூற முடியாது என்று, எனக்கு மட்டும் சிறப்பு நிபந்தனை போட்டு தடை விதித்தனர். இது கூட்டத்தில் வைத்து கலைச்செல்வனால் அறிவிக்கப்பட்டது. ஒரு விடையத்தில் ஒரு நிமிடத்துக்கு மேல் நீ பேச முடியாது என்றனர். இது எனக்கு மட்டுமான சிறப்புத் தடை. இதையடுத்து, நாம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்தை விட்டு வெளியேறினோம்.
அன்றும் இன்றும் ஜனநாயகம் வேஷம் போடும் ஜம்பவான்கள் எல்லாம் கூடியிருக்க, மௌனம் சாதித்து இதை ஆதரித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பத்திரிகை சுதந்திரத்தை புலிகளிடம் மட்டும கேட்கும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அங்கு ராஜமரியாதையுடன் கொலுவேற்று இருந்தார்.
இப்படி எனக்கும், நான் வைத்திருந்த கருத்து போக்குக்கும் புலம்பெயர் இலக்கிய சந்திப்பு முதல் புலம்பெயர் புலியல்லாத செயற்பாடுகள் கருத்துச் சுந்திரத்தை மறுத்தே வந்தது. இதுவே தான் எனக்கு எதிரான கல்வெட்டாகியது. இதுதான் இன்று வரையான பொதுவான நிலை. இந்த சீரழிவு தான், இன்று, எங்கும் எதிலும் அம்மணமாகி கிடக்கின்றது. அன்று என்ன நடந்தது என்பதை சமர் 7 பதிவாக்கியது. அதை தெரிந்து கொள்ள
1.இலக்கிய சந்திப்பும் மறுக்கபட்ட கருத்துச் சுதந்திரமும்
2.இலக்கியச் சந்திப்பும் நிகழ்ச்சிகள் மீதான எமது நிலையும்
3.இலக்கிய சந்திப்பும் பிழைப்புவாதப் பிரமுகர்களும்
2. பாரிலில் 29.09.2002 நடந்த குறும்பட விழாவில் இதே கலைச்செல்வன் எம்மீது வன்முறை நடத்த முனைந்தான்;. தீக்கொழுந்து என்ற ம.க.இ.க வின் படம் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென படம் இடையில் நிறுத்தப்பட்டது. கலைச்செல்வன் அறிவித்தான், இந்த படம் சில பெண்களுக்கு பார்க்க தலையிடிப்பதாகக் கூறினான். தமது வர்க்க அடிப்படையை படம் தகர்ப்பதை சகித்துக் கொள்ள முடியாத, பெண்களின் பெயரால் பார்வையாளர்களின் கருத்துக் கேட்காது நிறுத்தினான். தலையிடித்தால் வெளியில் செல்ல வேண்டியது தானே! கருத்துச் சுதந்திரத்தை கோரும் யாரும், இன்றுபோலவே அன்றும் இதைக் கண்டிக்கவில்லை.
இடைவேளையின் போது, பார்வையாளனின் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இங்கும் நான் தான் அதைக் கண்டித்தேன். அப்போது கலைச்செல்வன் பலர் முன்னிலையில் என்னை தாக்குவதற்கு வந்ததுடன், வாயில் வந்தமாரி தாறுமாறாக தூற்றினான். இன்று கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் தேசத்தில் தூற்றுவது போல் தூற்றினான். அவன் முகத்துக்கு நேரே கையை ஓங்கி வன்முறைக்கு முயன்ற போது.... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

1 comment:
கோள் மூட்டாமல் வாழ்வது கஷ்டம்...
that is fit of survival
Post a Comment