தமிழ் அரங்கம்

Wednesday, December 31, 2008

பொருளாதார நெருக்கடி : எரிகிற வீட்டிலும் பிடுங்கும் வக்கிரம்

"எதைத் தின்றால் பித்துத் தெளியும்?'' இந்தக் கேள்விதான் இப்பொழுத் மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தையும் குடைந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் வங்கியில் இருந்து 2,60,000 கோடி ரூபாய் சந்தையில் கொட்டி விட்டோம்; முதலாளிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டியையும் இயன்றவரைக் குறைத்து விட்டோம். ஆனாலும், பங்குச் சந்தை சரிந்து கொண்டே போகிறதே எனத் திகைத்துப் போய் நிற்கிறார்கள், அவர்கள்.

பங்குச் சந்தைக் சரியச் சரிய, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் (நவ. 22 நிலவரப்படி ரூ. 50.20) சரிந்து கொண்டே போகிறது. தரகு முதலாளிகளோ சந்தையில் பணத்தை இன்னும் கொட்ட வேண்டும்; வட்டியை இன்னும் குறைக்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்கள். இதற்கு மேலும் பணம் வேண்டும் என்றால், அரசு வங்கிகளின் சாவிகளை அம்பானிடாடாவிடம் ஒப்படைத்துவிடுவது தவிர வேறு வழியில்லை.

No comments: