தமிழ் அரங்கம்

Sunday, December 28, 2008

சிங்கள இராணுவம் பெண்களை நிர்வாணப்படுத்தி குதறுவதை, மூடிமறைக்கும் புலித் தேசியம்

90 செக்கனே கொண்ட இந்த ஒளிநாடாவை, புலித்தேசியம் ஏன் மூடிமறைக்கின்றது? மகிந்த சிந்தனையும் புலியிசமும் ஏன் இதில் ஒன்றாக கூடி நிற்கின்றது. இதை அவர்கள் மூடிமறைக்க, ஒரேயொரு காரணம் தான் உண்டு. இதை நாமே முதலில் வெளியிட்டோம் என்பதும், மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு இணையத்தில் இது வெளியாகியதுதான் காரணம்.

இந்த இணையம் மக்களுக்கு தெரியக்கூடாது என்ற அக்கறையும் கரிசனையும், இதை மூடிமறைக்கவும் மகிந்தவுடன் இதில் கூடி நிற்கவும் தயாராக உள்ளதையே இது அம்பலமாக்கியுள்ளது. தமிழ் மக்களுக்கு ஒரு ஆதாரபூர்வமான விடையத்தை மறைக்கவும், அந்தக் குற்றத்தை மூடிமறைக்கவும் புலியிசம் பின் நிற்கவில்லை.

இந்தக் காட்சி வெளிப்படுத்துவது, சர்வதேச குற்றங்களுக்கு நிகரான போர் குற்றத்தை, இறந்த பெண்களை மேலும் பாலியல் ரீதியாக குதறும் காட்டுமிராண்டித்தனத்தை. ஆனால் இதை மூடிமறைக்க முனைவதன் பின்னுள்ள அரசியல்தான், தமிழ் இனத்தின் தோல்விக்கான சமூக அடிப்படையாகும்.

மகிந்த சிந்தனை தமிழ் இனத்தை எப்படி
வேட்டையாடினாலும்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

4 comments:

இவன் said...

மக்களுக்காக இயங்கும் இணையதளம் என்றால் இந்த ஆவணத்தின் மூலம் எதுவென சொல்லி போர்குற்றத்தை நிரூபிக்க உதவலாமே அதைவிடுத்து குறைகூறியே கட்டுரை எழுதி என்னவகையான நேர்மறை சிந்தனை அல்லது மாற்றத்தை தாங்கள் ஏற்படுத்த போகிறீர்?

வீழ்ந்த பெண்னை குதறிய அந்த நாய்களிடத்திருந்து தாங்கள் எவ்வாறு வேறுபட்டுள்ளிர்? அவர்கள் பிறந்த மேனிமீது ஏறி நீங்களும்தானே மார்தட்டி கொள்கின்றீர். நான் தான் இதை அம்பலபடுத்தினேன் என்று!.


ஆழமான கருத்துக்கள் ஒருசில உங்கள் கட்டுரைகளில் இருந்தாலும், தீர்வை முன்வைக்காது பிரச்சனையை பற்றிமட்டும்மே போசும் தங்களது எதிர்மறை சிந்தனையாலே தங்களது பதிவுகளை வாசிப்பதையும், தமிழரங்கம் செல்வதையும் பெரும்பாலும் தவிர்கிறேன்.

தமிழரங்கம் said...

நாம் மார்பு தட்டவில்லை. மற்றவர்கள் அதை செய்யத்தவறியதை குற்றம் சாட்டுகின்றோம். அதுவே அடுத்த புற்றம்.

தீர்வு புலியை ஆதாரிப்பதல்ல. எதிர் நிலையான போராட்டம் தான். அதுதான் தீர்வின் முதல் புள்ளி. அதையே நாம் செய்கின்றோம்.

இவன் said...

//மற்றவர்கள் அதை செய்யத்தவறியதை குற்றம் சாட்டுகின்றோம். அதுவே அடுத்த புற்றம்.//

மற்றவர்கள் என்றால் யார்? புலிகளா? படம் எடுத்தது சிங்களத்தான், அதை வலையில் கசியவிட்டதும் அவன். அதை வலையேற்றம் செய்து கூப்பாடு போடுவது நீங்களும் நானும். அப்படியிருக்க யார் வந்து தீர்வை தருவார்? அதை முதலில் வலையில் கண்ட நீங்களும் அதற்கு பின் அதை பிரதி (copy) எடுத்த நானும் தான் முதல் தீர்வை தரவேண்டும். என்னால் இயன்ற தீர்வு, தமிழர்களுக்கு தீர்வைத்தராத காங்கிரஸ் கட்சி மீண்டும் அரசு ஆள வராமல் தடுப்பது. உங்களால் இயன்றது இந்த ஆவணத்தின் மூலத்தை உரியவரிடத்து கொடுத்து போரியல் குற்றத்தை நிருபிக்க உதவுவது. ஆவணத்தின் மூலத்தை கேட்பது புலிகளாய் இருந்தால் என்ன அல்லது உங்களையும் என்னைப் போல் ஒரு உணர்வுள்ள தமிழனாய் இருந்தால் என்ன? தந்து உதவலாமே!


//தீர்வு புலியை ஆதாரிப்பதல்ல. எதிர் நிலையான போராட்டம் தான். அதுதான் தீர்வின் முதல் புள்ளி. அதையே நாம் செய்கின்றோம்.//

புலிகளை எதிர்த்து குரல் கொடுங்கள் வேண்டாம் எனச் சொல்லவில்லை. அது உங்களது விருப்பம் அதில் நான் தலையிடவில்லை. ஆனால் புலி எதிர்பு மட்டும்தான் தீர்வின் முதற்படி என்பதை யாரும் ஏற்றுகொள்ளமாட்டர்கள். அவ்வாறு செய்பவர்களுக்கும், மகிந்த பேரினவத சிந்தனைக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

தீர்வை முன்வைத்து மக்களை திரட்டுங்கள், தீர்வு ஏற்றுக்கொள்வதாக இருந்தால் நான் உங்களுக்கா கொடிபிடிக்கவும் தயார். ஆனால் வெறுப்பை பிரதானமாக வைத்து தாங்கள் எழதும் பெரும்பான்மையான கட்டுரைகளைப் பார்கையில் எனக்கு ஒரு சொல்லாடல் ஞாபகத்திற்கு வருகின்றது 'holding bitterness in your heart is like drinking poison and expecting someone else to die'

தங்களது விமர்சனங்களுக்கு உட்பட்ட,
இவன்!

இவன் said...

தங்களது கீழ்கண்ட பதிவை கண்டேன்

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4714:2008-12-28-19-44-30&catid=74:2008

தங்களது பொருப்பான பதிலுக்கு நன்றி,

இவன்.