தமிழ் அரங்கம்

Thursday, May 14, 2009

செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்பு முயற்சியை தடுத்து, வகைதொகையின்றி கொன்று குவிக்கும் 'மீட்பு" 'ஜனநாயகம்"

புலிகள் தமிழ் மக்களை பணயம் வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களை குறிவைத்துக் கொல்லுகின்றது இந்த அரச 'ஜனநாயகம்". இந்த ஜனநாயகத்தின் மகிமையோ, இன்று தாம் குண்டு போட்டு காயப்படுத்திய மக்களை மருத்துவமனையில் வைத்து கொல்லுகின்றது. மருத்துவ மனைகளையே, குண்டு வீசி அழிக்கின்றது.

அங்கு இரவு பகல் பாராது மருத்துவம் செய்யும் வைத்தியர்கள் முதல் சமூக நல மனிதாபிமானிகளை, பழிவாங்கும் உணர்வுடன் கொல்லும் மிருக வெறியுடன் தாக்குதலை நடத்துகின்றது. தாம் கொல்வதற்கு தடையாக உள்ள உயிர்காக்கும் மருத்துவமனையை, செயல்படவிடாத வண்ணம் மீண்டும் மீண்டும் தாக்கி அழிக்க முனைந்தது, முனைகின்றது.


பேரினவாத இனவழிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் குண்டுக் காயங்களுக்கு உள்ளாகி தவிக்கும் இன்றைய சூழலில், ஒரு சில மருத்து............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: