தமிழ் அரங்கம்

Wednesday, May 13, 2009

கோடீசுவர வேட்பாளர்கள் கோவணத் துணியோடு மக்கள்

மதுரை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.க. அழகிரி, "தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அழகிரி வந்திருக்கேன், எனக்கு ஓட்டுப் போடுவீங்களா?'' என்று அழகம்மா என்ற வாக்காளரிடம் கட்க, அவரோ "நாங்க ஓட்டுப் போடுவோம் நீங்க எப்ப நோட்டைப் போடுவீங்க?'' என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். இந்தியத் தேர்தலில் பணநாயகம் பல்லிளிப்பதைக் காட்டும் ஒரு சோற்றுப் பதம் இது.

தேர்தலில் வாக்குறுதிகளைக் கொடுத்த காலம் போய், கொள்ளையடிப்பதில் மக்களுக்கும் பங்காக "இலவசங்கள்' கொடுத்த காலமும் போய், ஒரு ஓட்டுக்கு இவ்வளவு ரூபாய், எங்க வீட்டில் இவ்வளவு பேர், இவ்வளவு ரூபாய் கொடுங்கள் என வாக்காளர்களே, வேட்பாளரைத் தேடிச் செல்லும் புதியதொரு பரிணாமத்தை இந்தியத் தேர்தல் களம் தொட்டுள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தல் தந்த படிப்பினையில் வாக்காளர்கள் இவ்வாறு விழிப்படைந்திருப்பதால், அதற்கேற்ப அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் பட்ஜெட்டையும் தயாரித்துள்ளன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பார்த்தாலே இது புரிந்துவிடும். தி.மு.க. சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுபவர் திரைகடல் ஓ.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: