தமிழ் அரங்கம்

Tuesday, May 12, 2009

பேரினவாத இனவழிப்பு யுத்தம், பெண்கள் மேல் திணித்துள்ள ஆணாதிக்க சுமை

பெண் உடல், பாலியல் உறுப்புகள் கூட, யுத்தத்தில் ஒரு கருவியாகின்றது. பெண்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் பாரியது. எல்லையற்றது. ஆணாதிக்க சமூக அமைப்பில் யுத்தம், விதவைகளை உற்பத்தி செய்கின்றது. பெண்ணின் உடல், பால் சார்ந்த உறுப்புகளை யுத்தம் மேய்கின்றது.

வாழ்வை நடத்த முடியாத யுத்த பொருளாதார சூழல், உடலை விற்கக் கோருகின்றது. தாயையும், குழந்தையையும் இழந்த பெண்ணின் யுத்தக் கதறல்கள், உளவியல் ரீதியில் மரணிக்கக் கோருகின்றனர். பேரினவாத பாசி;ட்டுகள் இனவழிப்பின் ஊடாக, பெண்ணை குறிவைத்து ஒரு உளவியல் யுத்தம் மூலமும் கொல்லுகின்றது. மறுபக்கத்தில் புலிகள் முதல் துரோகக் கும்பல் வரை, இந்த பெண்களை பிடுங்கித் தின்னுகின்றது. இந்த பெண்களுக்கு ஆறுதலாக இருக்க, உதவியாக இருக்க முன்வராத மலட்டுத் தேசியம், மலட்டு ஜனநாயகமும் பாசிசமாகி பெண் இனத்தையே புணருகின்றது.

இன்று இனவழிப்பு உச்சத்தில், பெண்களின் அவலமோ எல்லையற்றது. பேரினவாதம் தமிழர்களின் பொதுவான வாழ்வியல் அடிப்படைத் தேவைகளையே இன்று மறுத்து நிற்கின்றது. இதில் பெண்களின் தேவைகளையும், உணர்வுகளையும்,.........
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: