Sunday, June 14, 2009

மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்

மலையக மக்களின் கடும் உழைப்பே, இலங்கையின் அனைத்து இனங்களினதும் சமூக வாழ்வை நலன்களை உயர்த்தின. மலையக மக்கள் பிழியப்பட்டு கிடைத்ததை உறிஞ்சி வாழ்ந்த மற்றைய இனங்கள், அந்த மக்களை தொடர்ச்சியாக கேவலப்படுத்தவும் ஒடுக்கவும் பின்நிற்கவில்லை. மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வையும் பற்றி புரிந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களை இலங்கையின் ஒரு தேசிய இன மக்களாக அங்கீகரிக்காத தேசியம், சிறுபான்மை இனமான தேசிய இறைமைக்காக போராட தேசியம் அடிப்படையிலேயே பிற்போக்கானது.

No comments: