தமிழ் அரங்கம்

Monday, June 15, 2009

முன்னணிக்கான அரசியல் திட்டமும், அதன் நோக்கமும்

மூன்று பத்தாண்டுகளாக நிலவிய ஆயுதப் போராட்டம், இன்று ஒரு தீர்வுமின்றி முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இதற்கு அரசியல் அடிப்படையாக இருந்த இன முரண்பாடு, அரசியல் ரீதியாக இன்னமும் முடிவுக்கு வந்துவிடவில்லை. மாறாக மிக மோசமான ஒரு இனவழிப்பு, பாசிச வடிவத்தை எட்டியுள்ளது. இதை இன்று எதிர்கொள்ளும் தமிழர் தரப்பின்றி, தமிழினம் அனாதையாகியுள்ளனர்.

பொறுக்கிகளும், புறம்போக்குகளும், சந்தர்ப்பவாதிகளும், பாசிட்டுகளுமே, தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் அரசியல் நிலையை எட்டியுள்ளனர். இதற்கு ஏற்ப பேரினவாதப் பாசிசம் தலைவிரித்தாடுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் உட்பட, அனைத்துவிதமான சுதந்திரங்களையும், உரிமைகளையும் தமிழ் மக்கள் மட்டுமின்றி, இலங்கை மக்கள் அனைவரும் இழந்து வருகின்றனர். ஒழுங்குபடுத்தப்பட்ட பாசிசம், நிறுவனமாகி வருகின்றது.

யுத்தத்தின் முடிவும், இலங்கை தழுவிய பாசிசமும், புதியதொரு சூழலை உருவாக்கியுள்ளது. நிலைமை மிகத் தீவிரமாக மாறியுள்ளது. இலங்கையில் நிலவிய இரண்டு பாசிசப் போக்கில், ஒன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அரச பாசிசம், மூர்க்கமாக மாறி நிற்கின்றது. அனைத்துவிதமான அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், அது தானே மறுத்து நிற்..........
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: