தமிழ் அரங்கம்

Monday, June 15, 2009

நேபாள ஆட்சிக் கவிழ்ப்பு: இந்திய மேலாதிக்கச் சதி, ஓட்டுக்கட்சிகளின் துரோகம்!


மன்னராட்சி ஒழிக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் முடிந்து, ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான பாதையில் அந்நாடு அமைதியாகப் பயணித்துக் கொண்டிருப்பதாக நிலவும் கருத்தைத் தகர்த்து, அந்நாடு மீண்டும் அரசியல் போராட்டங்களால் குலுங்குகிறது. இந்தியாவின் மேலாதிக்கச் சதிகளுக்கும் இந்தியக் கைக்கூலி அரசியல் சக்திகளுக்கும் எதிராக, “அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! நாட்டு விரோத சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கைக்கூலி இராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்! சதிகார அதிபர் ஒழிக!” என்ற முழக்கங்களுடன் வீதியெங்கும் மக்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்களாலும் சாலை மறியல் போராட்டங்களாலும் அந்நாடு அதிர்கிறது.

நேபாள மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக மாவோயிஸ்டுகள் பத்தாண்டு காலத்திற்கும் மேலாக நடத்திய ஆயுதப் போராட்டத்தின் விளைவாக, 2006ஆம் ஆண்டில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் எழுச்சியில் மக்கள் இறங்கினர். “மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்; அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தி புதிய அரசியலமைப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் நேபாள ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட வேண்டும்” என்ற மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை இம்மக்கள்..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: