தமிழ் அரங்கம்

Saturday, June 20, 2009

சிங்கள மக்கள் மேலான உனது தாக்குதல்தான், தமிழன் மேலான அவர்களின் கண்காணிப்பாகியது

போராட்டத்துக்கு விரோதமான உனது செயல்கள் தான், தமிழருக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சிங்களமக்களின் எதிர்வினையாகியது. நீ அரசுக்கு எதிராக மட்டும் போராடி, சிங்களமக்களின் அவலங்களுக்கு நீ குரல் கொடுத்து இருந்தால், உன்னை அவர்கள் போற்றியிருப்பார்கள். உன்னை அவர்கள், தங்கள் எதிரியாக பார்த்திருக்கமாட்டார்கள்.

தமிழனை தெய்வமாக மதித்திருப்பார்கள். 1971, 1989-1990 தங்கள் குழந்தைகளை இந்த இராணுவத்திடம் பறிகொடுத்த மக்கள், அதை பழிவாங்க உன்னுடன் சேர்ந்து நின்றிருப்பார்கள். ஆனால் நீ இன்னமும் சிங்கள மக்களை தமிழனின் எதிரியாக காட்டுவது நிற்கவில்லை. உனது ஆட்டம் முடிந்து விட்டது, நிற்பாட்டு. நீயே தமிழனுக்கே எதிரானவன். அதையே உன் வரலாறாக நிறுவியிருக்கின்றாய். நீ வேறு, தமிழன் வேறு. அது போல் சிங்கள மக்கள் வேறு, சிங்கள அரசு வேறு. உன்னுடைய குறுந்தேசிய தமிழ் இனவெறியை, தமிழர்களின் உணர்வாக காட்ட முனைகின்றாய். தமிழ் தேசிய உணர்வுக்கும், உன்னுடைய இனவெறி உணர்வுக்கும் இடையில் உள்ள மெல்லிய இடைவெளியை கொண்டுதான், தமிழினத்தையே நீ அழித்தவன்.

இப்படிப்பட்ட நீ தான் சொல்.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: