தமிழ் அரங்கம்

Thursday, January 11, 2007

டாட்டா-பிர்லா கூட்டாளி!

டாட்டா-பிர்லா கூட்டாளி!
பாட்டாளிக்குப் பகையாளி!!

மார்க்சியம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்; ""டாடா மார்க்சியம்'' பற்றி உங்களுக்குத் தெரியுமா?


அதென்ன டாடா மார்க்சியம்? மார்க்சியத்துக்கு ""டாடா'' காட்டிவிட்டு, செங்கொடி பிடித்துக் கொண்டே தரகுப் பெருமுதலாளி டாடாவுக்கு விசுவாசமாகச் சேவை செய்வதற்குப் பெயர்தான் ""டாடா மார்க்சியம்''. இதைப் பற்றி நீங்கள் விளக்கமாக அறிய வேண்டுமானால், "டாடா மார்க்சிஸ்டுகள்' ஆளும் மே.வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள சிங்கூர் கிராமத்தில் நடக்கும் போராட்டத்தைப் பார்த்தாலே போதும்.


""டாடாபிர்லா கூட்டாளி; பாட்டாளிக்குப் பகையாளி'' என்று முன்னொருக் காலத்தில் முழங்கிவந்த "மார்க்சிஸ்டுகள்', இப்போது மே.வங்க மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு சிவப்புக் கம்பளம் விரித்து மறுகாலனியாக்கச் சேவையில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றனர்.


இதன்படி, சிங்கூர் கிராமத்தில் இருபோகம் சாகுபடியாகும் 997.1 ஏக்கர் நிலத்தை மே.வங்க "இடதுசாரி' அரசே ஆக்கிரமித்து, தரகுப் பெருமுதலாளித்துவ டாடா நிறுவனத்துக்குத் தாரை வார்த்துள்ளது. இங்கு கார் தொழிற்சாலையை நிறுவி நடுத்தர மக்களும் எளிதில் வாங்கும் வகையில் ஒரு லட்ச ரூபாய்க்கு கார் உற்பத்தி செய்யப் போவதாக டாடா நிறுவனம் கூறுகிறது. இதை எதிர்த்து, ""விளைநிலங்களை ஆக்கிரமிக்காதே! வாழ்வுரிமையைப் பறிக்காதே!'' என்று சிங்கூர் மக்களும் பல்வேறு இடதுசாரிஜனநாயக இயக்கங்களும் கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றன.


போராடும் சிங்கூர் விவசாயிகளையும் பிற இயக்கத்தினரையும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை சீர்குலைக்கும் அராஜகவாதிகள் என்றெல்லாம் முத்திரை குத்திச் சாடும் "மார்க்சிஸ்டு' ஆட்சியாளர்கள், சிங்கூர் விவசாயிகள் சுய விருப்பத்துடன் நிலங்களை அரசிடம் கையளித்து, உரிய நிவாரணத்தையும் பெற்று விட்டார்கள் என்றும், அரசியல் ஆதாயத்துக்காக எதிர்த்தரப்பினர் வெளியிலிருந்து ஆட்களைத் திரட்டி வந்து போராட்டம் என்ற பெயரில் அராஜகம் செய்வதாகவும் கூறுகிறது. கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று டாடா ஆலை அமையவுள்ள நிலத்தில் முள்கம்பி வேலி போட்டும், போராடிய மக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் தடியடி தாக்குதல் நடத்தியும், 144 தடையுத்தரவு பிறப்பித்தும், சிங்கூரில் டாடா ஆலையை நிறுவியே தீருவோம் என்றும் "இடதுசாரி' அரசு கொக்கரிக்கிறது.


போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியதும், பிழைப்புவாத திரிணாமுல் காங்கிரசு தலைவியான மம்தா பானர்ஜி, தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள, தாமும் டாடா ஆலைத் திட்டத்தை எதிர்ப்பதாக மறியல் கடையடைப்புப் போராட்டங்களை நடத்தினார். சிங்கூரில் அவர் நுழையத் தடை விதிக்கப்பட்டதும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அவரது போராட்டத்துக்கு நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் மேதாபட்கர் முதல் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் வரை பல்வேறு தரப்பினரும் ஆதரவு தருவதைக் கண்டு பீதியடைந்துள்ள டாடா மார்க்சிஸ்டுகள், தமது துரோகத்தனத்திற்கு நியாயவாதங்களை அடுக்கி மேலும் அம்பலப்பட்டு வருகின்றனர்.


""சிங்கூரில் இதுவரை 9020 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கி விட்டோம்; இன்னும் ஏறத்தாழ 3000 பேர் மட்டுமே உள்ளனர். டிசம்பர் மாத இறுதிக்குள் அவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விடும். சிங்கூரில் ஒரு ஏக்கர் நிலத்தின் உத்தேச மதிப்பு ரூ. 6.02 லட்ச ரூபாயாக உள்ள போதிலும், ஒரு ஏக்கருக்கு ரூ. 8.6 லட்சம் கொடுத்து நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளோம். இதற்காக அரசு ரூ. 76.64 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது'' என்று புள்ளி விவரங்களை அடுக்குகின்றனர் மே.வங்க ஆட்சியாளர்கள்.


கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதலாக தொகை கொடுத்துள்ளதாக போலி கம்யூனிஸ்டுகள் வாதிடுவதே மோசடித்தனமானது. நிவாரணத் தொகை என்பது பத்திரப் பதிவுப்படி, நடப்பிலுள்ள மூன்றாண்டுகளில் அந்த நிலத்தின் சராசரி மதிப்பேயாகும். பத்திரப் பதிவு செலவுகளைக் குறைக்க, நிலத்தின் மதிப்பை ஏறத்தாழ 5060 சதவீதத்துக்குக் குறைத்துக் காட்டி பதிவு செய்வதென்பது நாடெங்கும் எழுதப்படாத விதியாகவே உள்ளது. இந்நிலையில் நிலத்தின் சராசரி மதிப்பைக் கணக்கிட்டு அதனுடன் கொஞ்சம் கருணைத் தொகையை இடதுசாரி ஆட்சியாளர்கள் சேர்த்துக் கொடுத்தாலும், நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு நிலத்தின் உண்மை மதிப்பின்படி நிவாரணத்தொகை கிடைக்காது.


ஏற்கெனவே கொல்கத்தாவின் புறவழிச்சாலை மற்றும் ராஜர்ஹட் நகரியத்துக்காக நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சராசரியாக ரூ.3 லட்சம் தரப்பட்டது. ஆனால் அந்த இடத்தின் சந்தை விலையோ ரூ.10 லட்சத்துக்கும் மேலாகும். எனவே, சிங்கூரில் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் அளித்துவிட்டதாக போலி கம்யூனிஸ்டுகள் பசப்புவது கடைந்தெடுத்த மோசடித்தனமேயாகும்.


பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்வுக்கான உத்தரவாதம் ஏதுமின்றி, நிவாரணத் தொகை தருவதையே மறுவாழ்வு என்று ஏய்ப்பது போலி கம்யூனிஸ்டுகள் செய்யும் இன்னுமொரு மோசடி. 1947இலிருந்து 2000 வரை "வளர்ச்சி'த் திட்டங்களுக்காக மே.வங்கத்தில் 47 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் அரசால் பறிக்கப்பட்டு, 70 லட்சம் மக்கள் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்து தரப்படாமல் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களில் 9% பேருக்கு மட்டுமே மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்களே காட்டுகின்றன.


"இடதுசாரி' ஆட்சி நடக்கும் மே.வங்கத்தைவிட ஒப்பீட்டு ரீதியில் மேலானதாக இதர மாநில அரசுகள் மறுவாழ்வுநிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன. ஆந்திராவில் 28 சதவீத அளவுக்கும், ஒரிசாவில் 34 சதவீத அளவுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மைய அரசின் புள்ளியியல் துறையின் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இதுவும்கூட, உலக வங்கியின் நிர்பந்தம், மேற்கத்திய நாடுகளது மனித உரிமை அமைப்புகளின் கண்டனம் முதலானவற்றுக்குப் பிறகு கண்துடைப்பாகவே செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அதைக்கூட செய்யாமல் ஒப்பீட்டு ரீதியில் "இடதுசாரி' அரசு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.


மே.வங்கத்தில் பல லட்சகணக்கான மக்கள் "வளர்ச்சி'த் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த மறுவாழ்வுக் கொள்கை எதையும் இதுவரை "இடதுசாரி' அரசு வகுக்கவோ செயல்படுத்தவோ இல்லை. சிங்கூரில் போராட்டம் தொடர்வதாலேயே, இப்போது மறுவாழ்வுக்கான நிவாரணமளிப்பதாக "இடதுசாரி' அரசு கூறுகிறது. ஆனால், ஏற்கெனவே இதேபோல பல்வேறு தனியார்அந்நிய ஏகபோக நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களால் வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக எந்தக் கொள்கையோ, திட்டமோ இதுவரை இல்லை.


மே.வங்கத்தில் குத்தகை விவசாயிகள்தான் பெருமளவில் விவசாயம் செய்கின்றனர். சிங்கூரிலும் குத்தகை விவசாயிகள் கணிசமாக உள்ளனர். நிலவுடைமையாளர்களுக்கு அளிக்கப்படும் நிவாரணத் தொகையில் 25% தொகை, பதிவு பெற்ற குத்தகை விவசாயிகளுக்குத் தரப்படும் என்கிறது "இடதுசாரி' அரசு. ஆனால், பெரும்பாலோர் வாய்வழி ஒப்பந்தம் மூலம் குத்தகை விவசாயம் செய்யும் பதிவு செய்யப்படாத குத்தகை விவசாயிகளாக உள்ளதால், இவர்களுக்கு நிவாரணமோ மறுவாழ்வோ கிடைக்காது.


இதே நிலைமைதான் சிங்கூரிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலி விவசாயிகளுக்கும் நேரும். ஏனெனில், கையகப்படுத்தப்படும் நிலத்தின் உடைமையாளர்களுக்குத்தான் அரசு நிவாரணம் தருமேயொழிய, மற்றவர்களுக்கு எதுவும் கிடைக்காது. இக்கிராமத்தைச் சார்ந்து வாழும் நாவிதர்கள், துப்புரவுத் தொழிலாளிகள், சிறுவியாபாரிகள் முதலானோர் எவ்வித நிவாரணமோ, மறுவாழ்வோயின்றி கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, நகரங்களில் கூலி வேலை தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இவை ஒருபுறமிருக்கட்டும். நிலம் தேவையெனில் டாடா நிறுவனமே சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள விவசாயிகளிடம் பேசி வாங்கிக் கொள்ளலாமே! ஏன், அரசு அதைக் கையகப்படுத்தி டாடாவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் மையமான கேள்வி. 1894ஆம் ஆண்டின் நிலக் கையகப்படுத்தல் சட்டப்படி, பொதுநலனுக்காக பொதுப் பயன்பாட்டுக்காக மட்டுமே நிலத்தைக் கையகப்படுத்தலாம். அதாவது, அரசின் சார்பில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பேருந்துரயில் நிலையம், குடியிருப்புகளை நிறுவ இச்சட்டத்தின்படி விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தலாம். ஆனால், ஒரு தனியார் தரகுப் பெருமுதலாளியின் ஆதாயத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதென்பது சட்டவிரோதமானது. சட்டத்தைப் பார்த்தால் மாநிலத்தைத் தொழில்மயமாக்க முடியாது என்று நியாயவாதம் பேசும் "மார்க்சிஸ்டுகள்', டாடாவுக்காக சட்டத்தையே வளைத்து முறுக்குகிறார்கள்.


ஏற்கெனவே பல தனியார் ஆலைகளுக்கு மே.வங்க அரசு நீண்ட கால குத்தகைக்குத்தான் நிலங்களைக் கொடுத்து வந்துள்ளது. இப்போது டாடாவுக்கு குத்தகை அடிப்படையில் நிலத்தைத் தராமல், மொத்தமாகக் கையகப்படுத்தி தாரைவார்க்கக் காரணம் என்ன என்பதைப் பற்றி மே.வங்க இடதுசாரி அரசு இன்றுவரை வாய் திறக்க மறுக்கிறது. மேலும், மே.வங்க அரசிடம் குத்தகை அடிப்படையில் நிலத்தைப் பெற்று தொழில் தொடங்கிய பல தனியார் நிறுவனங்கள் நசிவடைந்து மூடப்பட்டு, அந்நிலங்கள் மீண்டும் அரசின் பொறுப்பில் உள்ள நிலையில், அவற்றை டாடாவுக்குக் கொடுப்பதை விடுத்து புதிதாக சிங்கூரில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்குக் காரணம் என்ன என்பதையும் தெரிவிக்க மறுக்கிறது.


கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் கார் தொழிற்சாலையை மட்டும் டாடா நிறுவப் போவதில்லை. உபரியாக உள்ள நிலத்தில் உற்பத்தி அல்லாத பிற நடவடிக்கைகளுக்கு அதாவது அடுக்குமாடி குடியிருப்புகள், அங்காடிகளை நிறுவவும் திட்டமிட்டுள்ளது. இப்படித்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் நிறுவப்படுகின்றன. ஆனால், சிங்கூரில் டாடா நிறுவுவது கார் தொழிற்சாலைதான்; அது சிறப்புப் பொருளாதார மண்டலம் அல்ல என்கிறது "இடதுசாரி' அரசு. அத்தகைய மண்டலம் அல்ல என்றால், உபரியாக ஏராளமான நிலத்தை டாடாவுக்குத் தாரை வார்ப்பது ஏன் என்பதற்குப் போலி கம்யூனிஸ்டுகள் விளக்கம் தர மறுக்கிறார்கள்.


ஒரு தனியார் நிறுவனத்துக்காக விளைநிலங்களை அரசு கையகப்படுத்த தனிச்சட்டமும் விதிமுறைகளும் உள்ளன. இச்சட்டப்படி, அத்தனியார் நிறுவனம், மாவட்ட ஆட்சியரிடம் நிலத்திற்கான தொகையையும் மறுவாழ்வு நிவாரணத் தொகையையும் முன்பணமாகச் செலுத்தி ஒப்பந்தம் போட வேண்டும். ஆனால் டாடா நிறுவனம் மே.வங்கத்தின் ஹூக்ளி மாவட்ட ஆட்சியரிடம் அப்படியொரு ஒப்பந்தம் போடவில்லை; மறுவாழ்வு நிவாரணத் தொகையையும் முன்பணமாகச் செலுத்தவில்லை.


இருப்பினும், டாடா நிறுவனம் ஆண்டுக்கு 0.01 சதவீத வட்டியோடு ரூ. 20 கோடியை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிவாரணத் தொகையாகத் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக "இடதுசாரி' ஆட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு உள்ள ரூபாயின் மதிப்போடு ஒப்பிட்டால், இன்று அதன் மதிப்பு ரூ. 1112 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், இன்றைய ரூபாயின் மதிப்புப்படி ஏறத்தாழ ரூ.12 கோடி கொடுத்துவிட்டு, ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை டாடா நிறுவனம் சுருட்டிக் கொண்டு விட்டது. இந்தப் பகற்கொள்ளைக்கான சிவப்புத் தரகர்களாக போலி கம்யூனிஸ்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


1988ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13வது விதியின்படி, அரசாங்க அதிகாரத்தைக் கொண்டு விதிமுறைகளை மீறி ஒரு தனிநபருக்கோ, நிறுவனத்துக்கோ சலுகை காட்டுவது சட்டப்படி குற்றமாகும். இதன்படி பார்த்தால், டாடாவுக்கு விதிமுறைகளை மீறி விளைநிலங்களைத் தாரை வார்த்துள்ள மே.வங்க "இடதுசாரி' அரசாங்கமே ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள குற்றவாளியாகும்.


இவையெல்லாம் மாநிலத்தைத் தொழில்மயமாக்குவதைத் தடுக்கும் அபத்தமான வாதங்கள் என்று தமது துரோகத்தனத்தை நியாயப்படுத்தும் டாடா மார்க்சிஸ்டுகள், இதர மாநில அரசுகளையெல்லாம் விஞ்சும் வகையில் மறுகாலனியக் கொள்கைகளை போட்டி போட்டுக் கொண்டு செயல்படுத்தி வருகின்றனர். அதற்கு சிங்கூர் விவகாரமே எடுப்பான சாட்சியமாக உள்ளது.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டாலும், அவை அன்னிய பிரதேசங்கள் தனி சமஸ்தானங்கள் என்றும், இந்தியக் குடிமகனாக இருந்தாலும் இந்த சமஸ்தானத்துக்குள் நுழைய அனுமதி அதாவது ""விசா'' வாங்க வேண்டும் என்கிறது மைய அரசு. சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்ப்பதாகக் கூறும் டாடா மார்க்சிஸ்டுகள், இதே விதியைத்தான் சிங்கூரிலும் செயல்படுத்துகின்றனர். சிங்கூரில் நிறுவப்படும் டாடா ஆலைக்கெதிராக விவசாயிகளும் பிற இயக்கத்தினரும் போராடத் தொடங்கியதும், டாடா சமஸ்தானத்திற்குள் நுழையக்கூடாதென 144வது பிரிவின்படி தடையுத்தரவு, ஊரடங்கு உத்தரவு போட்டு, மீறுவோரைக் கைது செய்துள்ளனர். மேதாபட்கர், அருந்ததிராய் உள்ளிட்டு எவருமே டாடா சமஸ்தானத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது என்று கெடுபிடி செய்து விரட்டியுள்ளனர். மறுகாலனியாக்கத்தின் கீழ் போலி கம்யூனிஸ்டுகள் எவ்வாறு ஆளும் வர்க்கத் தரகர்களாக மாறி துரோகமிழைப்பார்கள் என்பதை இவையனைத்தும் தெளிவாகவே நிரூபித்துக் காட்டிவிட்டன.


சிங்கூரில் தொடரும் போராட்டம், வெறுமனே நிவாரணம் மறுவாழ்வுக்கான போராட்டமல்ல; சாராம்சத்தில், இது நாட்டை மீண்டும் காலனியாக்கிவரும் ஆட்சியாளர்களுக்கும், தனியார் அன்னிய ஏகபோக முதலாளிகளின் சூறையாடலுக்கும், போலி கம்யூனிச துரோகிகளான டாடா மார்க்சிஸ்டுகளுக்கும் எதிரான போராட்டம்!


""போஸ்கோ'' ஒப்பந்தத்தால் தமது மண்ணிலிருந்து பிய்த்தெறியப்பட்ட ஒரிசா பழங்குடியின மக்களின் போராட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் வாழ்விழக்கும் விவசாயிகளின் போராட்டம், நகரை அழகுபடுத்தும் திட்டங்களால் வீடு வாசல் இழந்து நிற்கும் நகர்ப்புற சேரி மக்களின் போராட்டம், தமது பிழைப்புக்கான இடத்திலிருந்து விரட்டப்படும் சிறுகடைதரைக்கடை வியாபாரிகளின் போராட்டம், தனியார்மயதாராளமயத் தாக்குதல்களால் மூண்டெழும் விவசாயிகள்தொழிலாளர்களின் போராட்டம் — என நாடெங்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் பரவிவரும் போராட்டத்தின் ஒரு அங்கம்தான், சிங்கூரில் தொடரும் போராட்டம். சொல்லிலே சோசலிசம் பேசிக் கொண்டு செயலிலே உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்குச் சேவை செய்யும் சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், மறுகாலனியத் தாக்குதலுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதே சிங்கூர் உணர்த்தும் பாடம்.

· பாலன்

எனது புதிய நூல்

எனது புதிய நூல்

'மனித சாரத்தை மறுப்பதே உலகமயமாக்கம்" என்ற 256 பக்கத்தைக் கொண்ட எனது நூல் வெளியாகியுள்ளது. இதன் விலை 100 ரூபா. இதை நீங்கள் கீழைக்காற்று வெளியீட்டகத்தில் பெற முடியும்.

அத்துடன் சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு முன்னால் நடைபெறும் புத்தக கண்காட்சியில், அதாவது 250-251 கூந்தமல்லி நெடுங்சாலையில் உள்ள கீழைக்காற்று நூல் விறபனையகத்திலும் பெறமுடியும். இதை விட எனது அனைத்து நூல்களும் அங்கு பெறமுடியம்.

அத்துடன் கீழைக்காற்று வெளியீட்டகம் மனித அறிவை சிந்திக்க செய்யும் நூல்களை மட்டும், மனிதர்கள் முன் அறிமுகம் செய்யம் சிறப்பு விற்பனையகம். அங்கு உங்களுக்க தேவையான அறிவு சார்ந்த, மனிதம் சார்ந்த நூல்களை பெறமுடியும்.

இதன் முகவரி.

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.

தொலை பேசி எண்: 04428412367

பி.இரயாகரன்

Wednesday, January 10, 2007

ஈழம் : தொடரும் சிங்கள இனவெறி பாசிசம்!

ஈழம் : தொடரும் சிங்கள இனவெறி பாசிசம்!
அனாதைகளாகும் தமிழ் மக்கள்!

""தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதும் முன் வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெள்ளத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை'' என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது பிறந்தநாளான மாவீரர் எழுச்சி நாள் உரையில் அறிவித்திருக்கிறார்.


இதன் மூலம், ஒரு பக்கம் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் பேரழிவுப் போரை நடத்திக் கொண்டே மறுபக்கம் அமைதி வழித்தீர்வு காணப் போவதாக இரட்டை நாடகமாடும் சிங்களப் பேரினவாதக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவைப் போலன்றி பிரபாகரன் வெளிப்படையாகவே போர்ப் பிரகடனம் செய்துள்ளார். இலங்கையில் மீண்டும் மூண்டிருக்கும் இந்தப்போர் இதுவரை கண்டிராத அளவு மூர்க்கமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஈழதேசத்தை மேலும் நாசப்படுத்தும் அவ்வாறான யுத்தமானது இலங்கையின் வடக்குகிழக்கோடு நின்று விடாது. தென்னிலங்கையின் முக்கியக் குறியிடங்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி, முழுநாடும் பேரழிவுக்குள் சிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.


""சர்வதேச சமூகம்'' என்று சிங்களப் பேரினவாத அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் மதிக்கும் ஏகாதிபத்தியத்தின் நெருக்குதல், சமாதானத்தையும் இயல்பு வாழ்வையும் விரும்பிய ஈழத் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்களின் யுத்த எதிர்ப்பு நிலை மற்றும் சிங்களப் பேரினவாத அரசியல் சக்திகளிடையே நிலவிய கூர்மையான பிளவு ஆகியவை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையிலான போர்நிறுத்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் சமாதான முயற்சிகள் முன்னெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன.


ஆனால் இந்த முயற்சிகள் ""நாட்டைப் பிளவுபட வைப்பதாகவும், தமிழ் பயங்கரவாதிகளிடம் சரணடைய வைப்பதாகவும், அந்நிய சக்திகளிடம் இலங்கையின் இறையாண்மையை அடகு வைப்பதாகவும் இருக்கின்றன'' என்று அப்போதைய இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பீதியையும், சிங்கள பேரினவெறியையும் கிளப்பினார். இதில் ஜே.வி.பி. மற்றும் ஜாதிகா ஹெல உறுமய என்ற பௌத்த குருமார்களின் கட்சி ஆகிய சிங்கள பேரின வெறி கடுங்கோட்பாட்டு இயக்கங்களோடு கைகோர்த்துக் கொண்டு, தாம் சிறுபான்மையாக இருந்த நாடாளுமன்றத்துக்கு ஒரு திடீர்த் தேர்தலைக் கொண்டு வந்தார்.


சமாதான முன்னெடுப்புகளில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயின் தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டும், விடுதலைப் புலிகளின் தனிநபர் அழித்தொழிப்பு மற்றும் தற்கொலைப் படைத் தாக்குதல்களை மிகைப்படுத்தியும் பீதியூட்டி சிங்கள பேரின வெறியைக் கிளப்பி 2004 நாடாளுமன்றத் தேர்தல்களிலும 2005 அதிபர் தேர்தலிலும் சந்திரிகா ராஜபக்சே கும்பல் வெற்றி பெற்றது. விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அரசியல் நிலைப்பாடும் இதற்கு ஒருவகையில் மறைமுகமாக உதவியிருக்கிறது. போர்நிறுத்தமும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஈழத்தில் தாம் தலைமை வகிக்கும் ஒரு இடைக்கால நிர்வாகத்துக்கு வழிவகுக்கும், மேலைநாடுகளின் உதவியாக வரவிருந்த வளர்ச்சிப் பணிகளில் தமக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்த விடுதலைப் புலிகள் இயக்கம் அவ்வாறான வாய்ப்புகள் மறுக்கப்படுவதை 2002, 2003ஆம் ஆண்டே உணர்ந்தது.


கிழக்கில் தளபதி கருணாவின் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு கணிசமான அளவு நிதியையும் ஆயுதங்களையும் படையணியையும் இழந்தது, அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் புலிகளுக்குப் பின்னடைவைக் கொடுத்தது. சுனாமி பேரழிவைத் தொடர்ந்து வந்த நிவாரணப் பணிகள் மற்றும் மறுகட்டுமான வேலைகளில் விடுதலைப் புலிகளைப் பங்கேற்க விடாமல் விலக்கி வைப்பதில் ஜே.வி.பி. மற்றும் ஜாதிகா ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் நெருக்குதல்களை இலங்கை அரசு அப்படியே ஏற்றுக் கொண்டபோதே, இனி சமாதான முயற்சிகள் எவ்வித பலனுமளிக்காது, ""விடுதலைப் போர் ஒன்றே வழி'' என்ற முடிவுக்கு புலிகள் வருவதற்கு இது ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது. இவ்வாறான காரணங்களினால் சிங்களப் பேரின அரசியல் சக்திகள் அனைத்தையும் ஒருசேர எதிர்ப்பது என்ற நிலையிலிருந்து இலங்கை நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்களில் புலிகள் எடுத்த நிலைப்பாடு சந்திரிகாராஜபக்சே கும்பலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.


ரணில் மற்றும் புலிகளுக்கிடையிலான புரிந்துணர்வு யுத்த நிறுத்தம் மற்றும் சமாதான முன்னெடுப்புகளை முறியடிக்கும் முயற்சியினூடாக சிங்கள பேரினவாதம் சந்திரிகா குமாரதுங்கா மற்றும் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஒரு வலுவான சிங்களப் பேரினவாத சக்தியாக உருவெடுத்திருக்கிறது. அதன் சித்தாந்த தலைமையாக ஜே.வி.பி. மற்றும் ஜாதிகா ஹெல உருமய ஆகிய சிங்களப் பேரினவெறி அமைந்திருக்கிறது. இறுதியில் ரணிலும் கூட இந்த கூட்டணியுடன் சமரசம் செய்து கொண்டு ஐக்கியப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.


இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வு என்ற பழைய முயற்சியே மேற்கொள்ளப்பட்டாலும் தற்போதைய போரை தெளிவான, திட்டமிட்ட யுத்த தந்திர அடிப்படையிலேயே சிங்களப் பேரினவாதம் வழிநடத்துகிறது. இதன்படி போரை வழிநடத்துவதற்கான அதிகாரம் முழுக்கவும் இராணுவத் தளபதிகளிடமும், இராணுவ அமைச்சகத்திடமும் கையளிக்கப்பட்டிருக்கிறது. கிழக்கில் கருணாவின் கைக்கூலிப்படையைக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தாக்கி பலவீனப்படுத்துவது; கடந்த நான்காண்டுகளில் புதிதாகத் திரட்டப்பட்டிருக்கும் படைபலத்தையும், ஆயுத பலத்தையும் வைத்துக் கொண்டு புலிகளின் வலுவான இலக்குகளைத் தாக்கி பலவீனப்படுத்துவது; ஈழத் தமிழ் மக்கள் மீது விமானக் குண்டுவீச்சுகளை நடத்தி படுகொலைகள் செய்வது; பொருளாதார முற்றுகையிட்டு ஈழ மக்களை பட்டினிச் சாவில் தள்ளுவது; இதன் மூலம் புலிகளின் மக்கள் செல்வாக்கை வடியச் செய்வது; இலங்கை அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற அந்நிய நாடுகளுடன் இராணுவக் கூட்டை ஏற்படுத்திக் கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு உலகப் போரோடு புலிகளுக்கு எதிரானப் போரையும் இணைப்பது என்பதுதான் சிங்களப் பேரினவாதத்தின் தற்போதைய யுத்தத் தந்திரமாக இருக்கிறது.


இதன் ஓர் அங்கமாகவே சம்பூரிலும் பிற இடங்களிலும் குண்டு வீச்சை நடத்தியது. அடுத்து, புலிகளின் கெப்பித்தி கொல்லாவ கிளேமோர் தாக்குதலை சாக்காக வைத்து இராணுவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதேபோல மாவிலாறு அணை நெருக்கடியை சாக்கு வைத்து தொண்டு நிறுவனங்கள் உட்பட சிவிலியன்கள் மீதும் குண்டு வீசித் தாக்கியது. செஞ்சோலை சிறுவர்கள் முகாம் மற்றும் வாகரை அகதிகள் மருத்துவமனை மீதும் குண்டுவீசி படுகொலைகள் புரிந்தது. ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்தத் தாயகத்திலேயே அகதிகளாக்கப் பட்டிருக்கின்றனர்.


இத்தாக்குதல்களைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளது மனித உரிமை அமைப்புகளின் கடும் கண்டனத்துக்குள்ளான போதும், இலங்கை இராணுவம் வெற்றிக் குதூகலத்தில் வடக்கிலும், விடுதலைப் புலிகளைத் தாக்கி பலவீனப்படுத்துவதற்காக யானையிறவைக் கைப்பற்றும் சாகச முயற்சியில் கடந்த அக்டோபரிலும் இறங்கியது. ஆனால், தாக்குதல் தொடுத்த ஒரு சில மணிநேரங்களிலேயே அது பேரிழப்பை சந்தித்தது. 130 போர் வீரர்களைப் பலி கொடுத்ததோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. முகாமலை பெருந்தோல்வி எனப்படும் இதையடுத்து ஹப்அரானா எனுமிடத்தில் வெடிமருந்து ஏற்றிய லாரியைக் கொண்டு புலிகளின் தற்கொலைப் படை நடத்தியத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர் கொல்லப்பட்டது, மேலும் ஒரு பின்னடைவாக அமைந்தது. சிங்களப் பேரினவாதிகள் கனவு கண்டதைப் போல இராணுவ ரீதியிலான வெற்றி என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதையே களநிலைமைகள் தெளிவுபடுத்துகின்றன.


விடுதலைப் புலிகளின் யுத்தத் தந்திரமும் கூட ஒரு மாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது. இராணுவ ரீதியிலான வெற்றியின் மூலமாகவே ஈழ விடுதலையை சாதித்துவிட முடியும் என்று இதுவரை நம்பி வந்த புலிகள், சிங்கள பேரினவாதத்திற்கெதிராக இராணுவ ரீதியிலான மேலாண்மை பெற்று விட்டாலே ""சர்வதேச சமூக நெருக்குதல் காரணமாக, கிழக்கு திமோரில் நடந்ததைப் போன்ற சுயநிர்ணய உரிமைக்கான ஒரு வாக்கெடுப்புக்கான வாய்ப்பு தோன்றும்'' என்று இப்போது கருதுகிறார்கள். இதற்காக ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் அரசியல் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த ரீதியிலேயே, ஈழப் பிரச்சினையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று இங்குள்ள தமிழினவாதக் குழுக்களும் புலி ஆதரவு அமைப்புகளும் திரும்பத் திரும்ப கோருகின்றன. ஆனால், ராஜீவ் காலத்தில் நடந்ததைப் போல இந்தியத் தலையீடு என்பது ஈழத் தமிழர்களுக்கெதிரானதாகவே இருக்கும் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். ஏற்கெனவே மன்மோகன் சிங் சோனியா கும்பல் இராணுவ ரீதியில் இலங்கை அரசுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து வருகிறது. இதுவும் கூட மன்மோகன் சிங் சோனியாவுக்கு தெரியாமல் அதிகாரிகளாகவே மேற்கொள்ளும் நடவடிக்கைதான் என்று அவர்கள் பூசி மெழுகுகிறார்கள்.


சிங்களப் பேரினவாதிகள் கருதுவதைப் போல இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வு, விடுதலைப் புலிகள் கருதுவதைப் போல சர்வதேச சமூக ஆதரவு ஆகிய இரண்டுமே எதார்த்தத்துக்குப் புறம்பான நிலை என்பதையே நடப்பு அரசியல் இராணுவ நிலைமைகள் தெளிவாக்குகின்றன.

நன்றி புதியஜனநாயகம்

Monday, January 8, 2007

சி.ஐ.டி.யு.வின் மன்றம் ஜாடிக்கேத்த மூடி

தகவல் தொழில்நுட்பத் துறையில் சி.ஐ.டி.யு.வின் மன்றம்
ஜாடிக்கேத்த மூடி

கை நிறைய சம்பளம்; வேலை செய்து கொண்டே மேலும் படித்து முன்னேறலாம்; அதிருஷ்டமிருந்தால் அமெரிக்காவுக்கே போய்விடலாம் என்று பத்திரிகைகளால் பிரமையூட்டப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், கொத்தடிமைகளை விடக் கேவலமான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 10 12 மணிநேர வேலை, விடுமுறை நாட்களை ரத்து செய்வது, திடீர் வேலை நீக்கம், உத்தரவாதமற்ற வேலை, இது தவிர பாலியல் தொந்தரவுகள் என்பவையெல்லாம் "கால்சென்டர்கள்' எனப்படும் நவீன கொத்தடிமைக் கூடாரங்களின் பொது விதிகள்.


இருப்பினும், இத்தகவல் தொழில்நுட்பத் துறையில் இக்கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகத் தொழிற்சங்கம் அமைப்பதென்பதைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கை போலச் சித்தரித்து வருகிறது, அரசு. இராணுவம், போலீசுக்கு அடுத்தபடியாக சங்கம் அமைக்கக்கூடாத துறை, தகவல் தொழில்நுட்பத் துறை என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. பெங்களூர் கால் சென்டரில் பணியாற்றிய பிரதீபா என்ற இளம்பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்; சென்னையில் ஐ.கியூ.நெட் என்ற பி.பி.ஓ. நிறுவனத்தில் 2 மாதங்களாக செய்த வேலைக்குச் சம்பளம் கேட்ட ஊழியர்களை ஆபாசமாகத் திட்டி மிரட்டிய சம்பவம் என அடுத்தடுத்து கால்சென்டர் சொர்க்கங்களின் இருண்ட பகுதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தபோதிலும் இதுவரை சங்கமோ, ஊழியர் நலச் சட்டங்களோ உருவாக்கப்படவில்லை.


இத்தொழிலில் நாடெங்கும் ஏறத்தாழ பத்து லட்சம் பேர் பணியாற்றிய போதிலும், வேலை பளு தாறுமாறான வேலைநேரம் முதலானவற்றால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், இந்த ஊழியர்கள் இன்னமும் கனவுகளிலேயே மிதக்கின்றனர். இவர்கள் தங்களை நவீன கூலித் தொழிலாளிகளாகக் கருதுவதுமில்லை. தங்களை மேட்டுக்குடியினராகக் கருதிக் கொள்ளும் ஆளும் வர்க்கச் சிந்தனை தான் இவர்களிடம் நிலவுகிறதேயொழிய, தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை.


இத்தகையோரிடம் அரசியல் உணர்வூட்டி அமைப்பாக்குவதென்பது இடர்ப்பாடுகள் நிறைந்த பணி. பல்வேறு இடதுசாரி ஜனநாயக சக்திகள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சி.பி.எம். கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. அண்மையில் கொல்கத்தா நகரில், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கான சங்கம் ஒன்றைக் கட்டியமைத்துள்ளது. இத்துறையில் சங்கமே இல்லாமல் கொத்தடிமைத்தனம் நிலவும் சூழலில், முதன்முறையாக ஒரு சங்கம் உருவாகியிருப்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இனி விடிவுகாலம் பிறந்து விடும் என்று நம்பினார்கள்.


ஆனால், நீண்ட நாட்களாக வாய் பேசாமல் இருந்த கைக்குழந்தை, திடீரென ஒருநாள் வாய் திறந்து ""எப்போ அம்மா தாலியறுப்பே?'' என்று தாயைப் பார்த்து கேட்ட கதையாகி விட்டது, போலி கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ள சங்கம். இல்லையில்லை; இது சங்கமில்லை; இதற்குப் பெயர் ""மன்றம்'' (அசோசியேஷன்) என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள். மே.வங்க மாநில சட்டப்படி, பொறியாளர்கள் சங்கம் கட்ட முடியாது என்பதால், ""மன்றம்'' தொடங்கியுள்ளோம் என்கிறார், மே.வங்க சி.ஐ.டி.யு. தலைவரான சியாமல் சக்ரவர்த்தி.


""இந்த அமைப்பை வைத்துக் கொண்டு வேலை நிறுத்தம், போராட்டமெல்லாம் செய்வீர்களா?'' என்று கேட்டால், ஊழியர்களுக்கான அமைப்பு என்ற உடனேயே ஏன் வேலை நிறுத்தத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? என்று எதிர்க்கேள்வி கேட்டு பூசி மெழுகுகிறார், சக்ரவர்த்தி. அப்படியானால், இந்த மன்றத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்களாம்?


தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகளை அமைப்பாக்கி, அவர்களுக்குப் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவது குறித்துப் பயிற்சி தருவார்களாம். கணவன், மனைவி இருவருமே இத்துறையில் வேலை செய்தால், அவர்களின் குழந்தைகளைப் பராமரிக்கக் குழந்தைகள் காப்பகம் பால்வாடி முதலானவற்றை நடத்தப் போகிறார்களாம். தங்கள் மன்றத்தில் சேரத் தயங்கும் பொறியாளர்களுக்கு இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதில் பெயர் குறிப்பிட விரும்பாதவர்களையும் ஆதரவாளர்களாக இணைத்துக் கொள்ளப் போகிறார்களாம். சில தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தகைய மன்றத்தில் இணைவோரைப் பழிவாங்காமல் இருக்க, இது முன்னேற்பாடான நடவடிக்கையாம். இனி இந்த மன்றம், இன்னும் திருமணமாகாத ஊழியர்களின் ஜாதகங்களைத் திரட்டி, திருமண தகவல் மையம் நடத்த வேண்டியதுதான் பாக்கி.


தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான அமைப்பை உருவாக்கியுள்ள பெருமிதத்துடன் பேட்டி தந்துள்ள சியாமல் சக்ரவர்த்தி, இம்மன்றம் அன்னிய முதலீடுகளுக்கு எதிரானது அல்ல என்றும், அன்னியக் கம்பெனிகள் மே.வங்கத்தில் தொழில் தொடங்கி நடத்துவதற்கு எதிரான திசையில் செல்லாது என்றும் உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே சி.ஐ.டி.யு. சங்கம் இயங்கும் சணல் ஆலைகளிலும், ஜப்பானிய மிட்சுபிஷி நிறுவனத்திலும் போராட்டமோ, வேலை நிறுத்தமோ செய்யவே இல்லை என்று தமது சங்கத்தின் மகிமையை விளக்கி, பன்னாட்டு முதலாளிகளை தாஜா செய்கிறார்.


டி.வி.எஸ்., பொள்ளாச்சி மகாலிங்கம் முதலான தரகுப் பெருமுதலாளிகளின் நிறுவனங்களில், தொழிலாளர்கள் வர்க்க உணர்வோடு சங்கமாகத் திரளுவதற்கு முன்னரே, இம்முதலாளிகள் ஐ.என்.டி.யு.சி. போன்ற கைக்கூலி சங்கத்தைக் கட்டி, அதற்கு அவர்களே புரவலர்களாக இருப்பர். அச்சங்கங்கள் தீபாவளி பண்டு பிடிப்பது, கலை நிகழ்ச்சி நடத்துவது, ஆயுதபூசை கொண்டாடுவது என்பனவற்றையே தமது தலையாயக் கடமையாகக் கொண்டிருக்கும். மற்ற சங்கங்களைப் போலல்லாமல், நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று சவடால் அடிக்கும் சி.ஐ.டி.யு., தகவல் தொழில்நுட்பத் துறையில் ஐ.என்.டி.யு.சி. பாணியிலான ஒரு மனமகிழ் மன்றத்தைக் கட்டி, இதுவும் தொழிற்சங்கம்தான் என்று நம்பச் சொல்கிறது.


ஒருபறம், தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழிற்சங்கம் கட்டி விட்டோம் என்று பெருமையுடன் சவடால் அடிக்கலாம்; மறுபுறம், இச்சங்கத்தில் சேருவோரிடம் சந்தாநன்கொடை திரட்டி ஆதாயமடையலாம்; இப்படியொரு பிழைப்புவாத உத்தியோடு ஒரு மனமகிழ்மன்றத்தைக் கட்டி நாடகமாடுகிறார்கள், போலி கம்யூனிஸ்டுகள்.


· கவி

Sunday, January 7, 2007

மானமிழந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்!!

பெரியார் சிலை உடைப்பு:

மண்டைச் சுரப்பை உலகு தொழும்!

மானமிழந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்!!

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளன்று சிறீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பன இந்து மதவெறியர்களின் திட்டம். ""டிசம்பர் 6 இந்தியாவின் அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள்! இந்துக்களின் வெற்றித்திருநாள்!'' என்று அறிவிக்கும் சுவரொட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவு திருச்சியைச் சுற்றிலும் ஒட்டப்பட்டிருந்தன. இது ஒரு வகையில் சிலை இடிப்புக்கு எதிரிகள் வழங்கிய முன்னறிவிப்பு.


1973இலேயே சிறீரங்கம் நகரமன்றம், பெரியார் சிலைக்காக 144 சதுர அடி நிலத்தை ஒதுக்கிக் கொடுத்து, அந்த இடம் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ள போதிலும், 33 ஆண்டுகளாக அங்கே சிலை நிறுவப்படவில்லை. இந்த 33 ஆண்டுகளில் பெரியாரின் பெயரில் டஜன் கணக்கிலான நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் பரப்பில் தமிழகமெங்கும் எழும்பியிருக்கின்றன. ஆனால், இந்த 144 சதுர அடியில் பெரியார் சிலை மட்டும் எழும்பவில்லை. இந்தத் தாமதத்திற்கு பகுத்தறிவு சார்ந்த விளக்கம் எதுவும் நமக்குப் புலப்படவில்லை.


ஆனால், சிலை எழும்பவிருக்கிறது என்று தெரிந்ததும் பார்ப்பனக் கும்பல் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. நவம்பர் 28ஆம் தேதியன்று, திருவரங்கத்தின் புனிதம் காப்போர் கூட்டமைப்பு என்ற பெயரில் பார்ப்பன இந்து மதவெறி அமைப்புகள் ஒன்றிணைந்தன. டிசம்பர் 5ஆம் தேதியன்று கோவையில் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த இந்து ஆசார்ய சபாவின் தலைவர் தயானந்த சரஸ்வதி, ""பெரியார் சிலைக்கு ஸ்ரீரங்கம் பாதுகாப்பான இடம் அல்ல'' என்று பகிரங்கமாக மிரட்டினார். டிசம்பர் 6ஆம் தேதி பின்னரவில் கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இந்துமதவெறிக் காலிகள் பெரியார் சிலையை உடைத்தனர்.


இதற்குப்பின் அங்கே நடைபெற்ற சம்பவங்கள், பெரியாருக்கு எதிரிகள் செய்த அவமதிப்பைக் காட்டிலும் கொடிய அவமதிப்பாக இருந்தன. சிலை உடைப்பு பற்றிய செய்தி கேள்விப்பட்டு, திருச்சி நகரத்திலிருந்து மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்களும் புரட்சிகர மாணவர் இளைஞர் அணித் தோழர்களும் சிறீரங்கத்திற்கு வந்து சேர்ந்தபோது சிறீரங்கம் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விபத்து நடந்த இடத்தைப் போல ஒரு கூட்டம் பெரியார் சிலையைச் சுற்றி நின்று கொண்டிருக்க, கருப்புச் சட்டைத் தொண்டர்கள் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு முகத்தில் அதிர்ச்சியைத் தேக்கியவாறு நின்று கொண்டிருந்த பார்ப்பனர்களும் கேதம் கேட்க வந்த இந்தக் கூட்டத்தில் அடக்கம்.


இந்த மானக்கேட்டைக் காணப்பொறுக்காத ம.க.இ.க. தோழர்கள், தி.க. தொண்டர்களைக் கடிந்து கொண்ட பிறகுதான் சாலை மறியல் தொடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியலைத் திமிர்த்தனமாக மீற முயன்ற சில தனியார் பேருந்துகள் நொறுக்கப்பட்டன. ""ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அமைப்புகளைத் தடைசெய்! சிலை உடைப்பைத் தூண்டிய அதன் தலைவர்களைக் கைது செய்!'' என்று முழங்கியபடி ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் இராமதாசு தலைமையில் கோயில் ராஜகோபுரத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. தி.க., தி.மு.க. அணிகளும் பொதுமக்களும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர்.


போராட்டம் பரவத் தொடங்குகிறது என்று அறிந்தவுடனே தி.மு.க., தி.க. கரை வேட்டிகள் களத்தில் இறங்கினார்கள். ""நடப்பது நம்ம ஆட்சி. சிலை உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்தச் சிலை இல்லாவிட்டால் வேறு சிலை. எல்லாவற்றையும் கலைஞர் பார்த்துக் கொள்வார்'' என்று சொல்லி, கருஞ்சட்டைத் தொண்டர்களைக் கலைத்துவிட்டார்கள். மானக்கேடான சகஜநிலை மீண்டும் திரும்பியது.


எனினும், பெரியார் சிலையை திருட்டுத்தனமாக உடைத்த பார்ப்பன மதவெறியர்களுக்கான பதிலடி அன்று மாலையே பகிரங்கமாகக் கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்இன் தேசிய நாயகனான இராமனின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, செருப்பால் அடித்தபடியே, சிறீரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் சிலையை நோக்கி ஊர்வலமாக முழக்கமிட்டு வந்தார்கள் ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள். பெரியார் பற்றாளர்கள் பலர் தாமாகவே ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று இந்தக் காட்சியைத் தரிசித்தனர். பரவசமடைந்த ஒரு முதிய தி.க. தொண்டர் தம் கால் செருப்பைக் கழற்றி அடித்து இராமபிரானுக்கு அஞ்சலி செலுத்தினார்.


வருணாசிரமத்தின் பாதுகாவலான இராமனின் படத்தை, சேதமடைந்த பெரியார் சிலையின் காலடியிலேயே தீ வைத்துக் கொளுத்தினார்கள் தோழர்கள். படத்தைப் பிடுங்க முயன்ற போலீசை நெருங்கவிடாமல் தடுத்தார்கள் தி.க. இளைஞர்கள். தோழர்களைக் கைது செய்தவுடனே விடுதலை செய்யக் கோரி விண்ணதிர முழங்கினார்கள். பிரச்சினை பெரிதாகிவிடும் என்று உணர்ந்து கொண்ட போலீசு தோழர்களை அன்றிரவே விடுவித்தது.


""உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றிம்மா, நீங்களாவது மானத்தக் காப்பாத்தினீங்க'' என்று பெண் தோழர்களிடம் நா தழுதழுக்க நன்றி கூறினார், ஒரு முதிய தி.க. தொண்டர். திராவிடர் கழகத்தின் மாநில நிர்வாகியோ, ""தயவு செய்து இதற்கு மேலும் எதையாவது செய்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கி விடாதீர்கள்'' என்று தோழர்களைக் கைக்கூப்பிக் கேட்டுக் கொண்டார். சொரணையுள்ளவர்களால் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியாதென்பதால் போராட்டம் தொடர்ந்தது. மாநிலமெங்கும் கண்டனச் சுவரொட்டிகள் அன்றிரவே ஒட்டப்பட்டன.


மறுநாள் ஓசூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் எதிரில் இராமனின் படத்தைத் தீக்கிரையாக்கினார்கள் பு.ஜ.தொ.மு. தோழர்கள். நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்து நிற்க, நகரின் மையப்பகுதியில் நடைபெற்றது இந்தப் போராட்டம். போராட்டம் முடிந்து அரைமணி நேரத்துக்குப்பின், பா.ஜ.க.வின் மாநிலப் பொருளாளர் நரேந்திரன் தலைமையிலான 20 பேர் கொண்ட கும்பல், அந்த வழியே தன் மனைவி குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பு.ஜ.தொ.மு.வின் செயலர் தோழர் பரசுராமனை சுற்றி வளைத்துக் கொண்டது. ""இவனைக் கொலை செஞ்சாத்தாண்டா நாம் நிம்மதியா இருக்க முடியும்'' என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரை உருட்டுக் கட்டைகளால் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ். பேடிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலைத்தான் ""இந்துக்களின் கோபம்'' என்று பொய்யாகச் சித்தரித்தன சில நாளேடுகள்.


மண்டை பிளந்து மயங்கி விழுந்த பரசுராமனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. ஒரு மணி நேரத்திற்குள் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, ஆம்புலன்சில் தருமபுரிக்கு அவரைக் கொண்டு செல்ல முயன்றபோது வழிமறித்து அனைவரையும் கைது செய்தது போலீசு. இரவு முழுவதும் தோழர் பரசுராமனையும் அவரது மனைவியையும் ஆம்புலன்சிலேயே பூட்டி வைத்தது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைத்தார், சதி செய்தார் என்று பல பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்து, விடிந்ததும் சேலம் சிறைக்குக் கொண்டு சென்றனர். கடும் போராட்டத்துக்குப் பின்னர்தான் சேலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கேயும் கால்களில் விலங்கு மாட்டி வைத்தனர். கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினர் கைது செய்யப்படவில்லை என்பதுடன், பரசுராமனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் தேன்மொழி.


இதேபோல, சிவகங்கையில் சிலை உடைப்புக்கு எதிராகக் கண்டனச் சுவரொட்டி ஒட்டியதற்காகத் தோழர் எழில்மாறன், சுவரொட்டியை அச்சிட்ட அச்சக உரிமையாளர், வழக்குரைஞர் ஆகியோர் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சியில் கண்டனச் சுவரொட்டி ஒட்டிய இளம் தோழர் கார்க்கி ஒரு வாரம் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.


பெரம்பலூர், சங்கராபுரம், ஈரோடு போன்ற பல இடங்களில் பூணூல் அறுப்பு, சாமி சிலை உடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகப் பெரியார் தி.க.வைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை அயோத்தியா மண்டபத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பெரியார் தி.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பெரியார் சிலை உடைப்பை எதிர்த்த நடவடிக்கைளில் ஈடுபட்டதற்காக சிறையில் இருப்பவர்கள் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர்களும் பெரியார் தி.க. தோழர்களும் மட்டுமே.


16.12.06 அன்று சிறீரங்கத்தில் வெண்கலத்தினாலான பெரியார் சிலை திறக்கப்பட்டு விட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தி.க. பொதுச்செயலர் வீரமணி, எதிர்த்துப் போராடிக் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுவிக்க வேண்டுமென வாய்தவறிக் கூடப் பேசவில்லை. கலைஞர் ஆட்சியை காப்பாற்றும் விதத்தில் போராட்டம் ஏதும் செய்யாமல் அமைதி காத்த தொண்டர்களுக்கு மட்டும் நன்றி கூறினார்.


பெரியார் சிலை உடைப்பின் நோக்கம் என்ன? கலைஞர் அரசுக்கு களங்கம் கற்பிப்பதும், நெருக்கடி கொடுப்பதும்தான் இந்தச் சிலை உடைப்பின் நோக்கமாம். வீரமணி, திருமா போன்றோரின் கண்டுபிடிப்பு இது. சிலையை உடைத்தால் கட்டுப்பாடில்லாத பெரியார் தொண்டர்கள் பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாம். இதைக் காட்டி நம்மாளின் ஆட்சியைக் கலைத்து விடலாம் என்று திட்டம் போட்டுத்தான் அவாள் சிலையை உடைத்தார்களாம்.


கேட்பதற்கே கேவலமாக இருக்கும் இந்த விளக்கத்தைச் சொல்வதற்கு தி.க., தி.மு.க.வினர் கூச்சப்படவில்லை. 2000 முஸ்லிம்களின் ஈரக்குலையறுத்த மோடியின் ஆட்சியே கலையவில்லையே, கேவலம் பத்தாம் நம்பர் நூலை அறுத்தால் ஆட்சி கவிழ்ந்துவிடுமா என்ற கேள்வி அவர்களுடைய பகுத்தறிவுக்கு எட்டவில்லை போலும்!


இவர்களுடைய விளக்கத்தின்படி நம்மாளின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், அவாளின் பூணூலையும் இராமபிரானையும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கு கருப்புச் சட்டைகளைத்தான் காவலுக்கு நிறுத்த வேண்டும். கிட்டத்தட்ட அதுதான் நடந்தது. பூணூல் அறுப்பும் இராமன் எரிப்பும் நடக்கத் தொடங்கிய பின்னர்தான் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றிப் பேச ஆரம்பித்தார் டி.ஜி.பி. பெரியார் சிலை உடைப்புக்குச் சதித்திட்டம் தீட்டித் தூண்டிவிட்ட தயானந்த சரஸ்வதி மீது வழக்கு இல்லை. ஓசூர் தோழர் பரசுராமன் மீது 120 ஏ சதிவழக்கு. பாபர் மசூதி இடிப்பைக் கொண்டாடி சுவரொட்டி ஒட்டிய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்மீது வழக்கு இல்லை. பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய சிவகங்கைத் தோழர்கள் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு!


""பெரியார் ஆட்சி''யின் நடவடிக்கையைப் பார்ப்பனக் கும்பலின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்! ""பெரியார் சிலையைச் சட்டபூர்வமான முறையில்தான் அகற்றியிருக்க வேண்டும். சட்டவிராதமான முறையில் உடைத்திருக்கக் கூடாது'' என்று பாபர் மசூதி இடிப்புக்கு அத்வானி வருத்தம் தெரிவித்த அதே தோரணையில், பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்த அனைவரும் சொல்லி வைத்தாற்போல அறிக்கை விட்டனர்.


பாபர் மசூதியை இடித்தபின், ""சர்ச்சைக்குரிய இடம்' என்று அதற்கு ஆர்.எஸ்.எஸ். பெயர் மாற்றம் செய்ததைப் போல, ""சர்ச்சைக்குரிய பெரியார் சிலை'' என்று எழுதத் தொடங்கியது தினமலர். பெரியார் சிலைக்கு இரும்புக் கூண்டு போடச் சொன்னார் இராம. கோபாலன். ""இராமன் எரிப்பையும் பூணூல் அறுப்பையும் தூண்டுவதே கருணாநிதிதான்'' என்று மிரட்டினார் எச்.ராஜா. வைகுந்த ஏகாதசிக்கு சிறீரங்கம் வரும் பக்தர்கள் பெரியார் மீது கல்லெறிந்து காறித் துப்புமாறு தலைமறைவாய் இருந்தபடியே அறிக்கை விட்டார் அர்ஜூன் சம்பத். ""சிலை உடைப்பைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும்'' என்று கவலை தெரிவித்தார் கார்ப்பரேட் பார்ப்பான் ரவிசங்கர்ஜி. ""பெரியார் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்'' என்று கூறி வெளிப்படையாகவே களம் இறங்கினார் ஜெயலலிதா. திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை, தூத்துக்குடியில் தார்பூச்சு, பட எரிப்பு... என ஆங்காங்கே இந்து வெறியர்கள் மேலேறித் தாக்கினர்.


பெரியாரின் தொண்டர்கள் என்று கூறிக் கொள்வோர் என்ன செய்தார்கள்? ""இனி பொறுப்பதற்கில்லை; நெருப்புடன் விளையாடதே'' என்று 2 நாள் கழித்து அறிக்கை விட்டார் வைகோ. இதேநிலை தொடர்ந்தால் நாடு தழுவிய போராட்டம் என்று 3 நாள் கழித்து அறிக்கை விட்டார் திருமா. பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளைப் பற்றி பெரிதும் கவலைப்பட்ட "மார்க்சிஸ்டு' கட்சி கவனத்துடன் செயல்படுமாறு காவல்துறையைக் கேட்டுக் கொண்டது. ""இந்து பாசிச அமைப்புகுள் தலைதூக்குகின்றன. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்று பயமுறுத்தியது வலது கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியப் பெருமன்றம். இதுதான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதை! பெரியாரிஸ்டுகள் எனப்படுவோர் சோளக்கொல்லைப் பொம்மைகளாக இருக்கும்போது, பெரியாரை வெண்கலத்தில் உருக்கி வார்த்து என்ன பயன்?


சிலையை உடைத்ததன் மூலம் பெரியாரைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பைத் தங்கத்தட்டில் வைத்து வழங்கினார்கள் இந்து மதவெறியர்கள். உடைக்கப்பட்ட பெரியாரின் தலையை தமிழகம் முழுவதும் ஒரு வெடிகுண்டைப் போல ஏந்திச் சென்றிருக்கலாம். தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மறைந்த அந்தக் கிழவனை, இன்னொரு முறை மக்கள் மத்தியில் பிரச்சாரப் பயணம் அழைத்துச் சென்றிருக்கலாம். ""மண்டைச் சுரப்பை உலகு தொழும்'' என்று பாவேந்தர் பாடினாரே, அந்தத் தலையிலிருந்து தோன்றிய சிந்தனையை இளம் தலைமுறையினர் மத்தியில் தீயைப் போலப் பற்ற வைத்திருக்கலாம். சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்து தேசிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு எனப் பன்முகம் காட்டிய அந்தத் தலையை பார்ப்பன மதவெறிக்கெதிரான விடுதலையின் வித்தாய் தமிழகமெங்கும் விதைத்திருக்கலாம்.


பேசாத கல்லையும், களிமண்ணையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு, பகுத்தறிவுக் கல்லைப் பேச வைத்துக் காட்டியிருக்கலாம். இரும்புக் கூண்டுக்குள் பதுங்க வேண்டியவர் பெரியார் அல்லர். இராம.கோபாலன்தான் என்பதை அந்தப் பார்ப்பனக் கும்பல் பட்டுத் தெரிந்து கொள்ளுமாறு விட்டிருக்கலாம். சிறீரங்கம் கோயிலென்ன, எல்லாக் கோயில் வாசல்களிலும் சாதியையும் மடமையையும் வழிமறிக்கும் தடையரணாகப் பெரியாரின் சிலையை நிறுவியிருக்கலாம்.


இவையனைத்தும் கொள்கை உறுதி கொண்டவர்களின் செயல்முறைகள். ஆட்சியைக் காத்துக் கொள்ளவும் அதன் உதவியுடன் சிலையைக் காப்பாற்றிக் கொள்ளவும் சிந்திப்பவர்கள், கான்கிரீட்... வெண்கலம்... இரும்பு என்று உலோகத்தை உறுதிப்படுத்தும் திசையில்தான் சிந்திக்க முடியும். இறுதியில் அது இரும்புக் கூண்டில் தான் போய் முடியும்.


டிசம்பர் 7ஆம் தேதியன்று பெரியார் சிலையைப் பாதுகாக்கத் தவறிய பரிதாபத்துக்குரிய 4 போலீசுக்காரர்களைக் கடமை தவறிய குற்றத்துக்காகத் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது தமிழக அரசு. தங்கள் கடமையிலிருந்து தவறிய பெரியாரின் தொண்டர்கள் எனப்படுவோருக்கு யார் தண்டனை விதிப்பது?


இதோ, தண்டனையை எதிர் கொள்வதற்குத் தன்னந்தனியாக அங்கே அமர்ந்திருக்கிறார் பெரியார். அவரது சிலையை சட்டபூர்வமாகவே அகற்றுவதற்கான வழக்கைத் தக்க தருணத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. பக்தர்கள் என்ற போர்வையில் கும்பலோடு கும்பலாகச் சேர்ந்து சிலையின் மீது கல்லெறிய தக்க தருணத்திற்காகக் காத்திருக்கிறார்கள் பார்ப்பன இந்து வெறியர்கள். சுயமரியாதை இயக்கத்தின் துவக்கக் காலத்தில் தன்னந்தனியாக சாதி, மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து கல்லடியும் சொல்லடியும் வாங்கி, மாபெரும் மக்கள இயக்கத்தைத் தமிழகத்தில் உருவாக்கி நிலைநிறுத்திய பின்னரும், அந்தோ, பெரியார் இன்றும் தனியாகத்தான் அமர்ந்து கொண்டிருக்கிறார், சிறீரங்கம் கோயிலுக்கு எதிரே அரங்கநாதனுக்கு சவால்விட்டபடி!


align="justify" class="style2">அறுப்பதும் எரிப்பதும்தான் வன்முறையா?


""ஆத்திகர்கள் திரளும் கோயில் வாசலில் ஒரு நாத்திகரின் சிலையை வைக்கலாமா?'' — இது பெரியார் சிலைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.இன் முக்கியமான வாதம். ஆத்திகர்கள் திரளும் இடத்தில் நாத்திகம் பேசக்கூடாது என்று கூறுவது கருத்துரிமையை மறுக்கும் பாசிசம். ""குடி குடியைக் கெடுக்கும்'' என்று சாராயக் கடை வாசலில் எழுதி வைக்காமல், சர்பத் கடை வாசலிலா எழுதிப் போட முடியும்? ஆத்திகர்கள் கூடுமிடத்தில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதுதான் பொருத்தமானது. சிறீரங்கம் கோயிலைச் சுற்றி பிராந்திக் கடைகளும், ஆபாசப் பத்திரிகைகளும், நீலப்பட வியாபாரமும் நடக்கிறதே, அவையெல்லாம் ஆத்திகப் பிரச்சார நடவடிக்கைகளா என்ன?


மேலும், பெரும்பான்மை என்பதனாலேயே ஒரு கருத்து நியாயமாகிவிடாது. பாப்பாபட்டியில் ""தலித்துகள் ஊராட்சித் தலைவராகக் கூடாது'' என்று தடுத்தவர்கள் கூடப் பெரும்பான்மை பலத்தைக் காட்டித்தான் தங்கள் சாதிவெறியை நியாயப்படுத்தினார்கள். ""பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இடத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாது'' என்ற ஆர்.எஸ்.எஸ்.இன் வாதத்திற்கும், ""பெரியார் சிலை கூடாது'' என்பதற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இது ஆத்திக வேடம் போடும் பார்ப்பன மதவெறி, இறைநம்பிக்கை உள்ள பெரும்பான்மை தமிழக மக்கள், பிள்ளையாரையும், பெருச்சாளியையும் காட்டிக் கட்சி நடத்தும் பா.ஜ.க.வை நிராகரித்திருக்கும்போது, தன்னைப் பெரும்பான்மையின் பிரதிநிதியாகக் கூறிக் கொள்வதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.


""தமிழ் வழிபாடு கூடாது, பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகக் கூடாது'' என்று பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் இந்து முன்னணிக் கும்பல், பெரும்பான்மை ஆத்திகர்களுக்காகக் கவலைப்படுவுது போல நடிக்கிறது. ஆனால், பெரும்பான்மையான சூத்திரபஞ்சம சாதி மக்களைக் கோயிலுக்குள் விடமறுத்த இந்த பார்ப்பன, சாதிவெறியர்களை எதிர்த்துக் கோயில் நுழைவு உரிமைக்காகப் போராடியவர் பெரியார். அவர் சிலையை எல்லாக் கோயில் வாசல்களிலும் வைக்கவேண்டும். அதுதான் பொருத்தம்.


""சர்ச் வாசலில் பெரியார் சிலை வைப்பதுதானே!'' என்கிறார் இராம.கோபாலன். ஆசையிருந்தால் அவரே வைக்கட்டும். பெரியார் சிலைக்குக் கீழே இந்துக் கடவுள் இல்லை என்றா எழுதியிருக்கிறது? எந்தக் கடவுளும் இல்லை என்றுதான் சொன்னார் பெரியார். எனவே, எந்தக் கடவுளும் இல்லாத ஒரு தூணையோ துரும்பையோ இராம.கோபாலன் காட்டட்டும். அங்கே சிலை வைத்து விடுவோம்.


""பெரியார் சிலையை உடைத்தால் அதற்காக இராமபிரானின் படத்தை ஏன் கொளுத்துகிறார்கள்? அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?'' என்று கேட்கிறார் இராம.கோபாலன். இராமன் எல்லா இந்துக்களுக்குமான கடவுளல்ல. பார்ப்பன உயர் வருணத்தினரின் சாதிச்சங்கத் தலைவன். இதற்கு ஆதாரம் வால்மீகி இராமாயணம். வருணதருமத்தை நிலைநாட்டும் இராமராச்சியத்தை நடத்தியதற்காகத்தான் அவன் கொண்டாடப்படுகிறான்.


மேலும், இராமன்ஜி என்பவர் அத்வானிஜி, வாஜ்பாயிஜி ஆகியோரைக் காட்டிலும் மூத்தவர். எல்லாத் தேர்தல்களிலும் தாமரைச் சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர். இராமன் தேசிய நாயகன் என்பதால் முஸ்லிம்களும் அவனை வணங்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாடு. எனவே, அவர்கள் கூற்றுப்படியே இராமன் இந்துக் கடவுள் அல்ல என்று ஆகிறது. பெரியாரின் சிலையை அவாள் உடைக்கும்போது, அவாளுடைய கட்சித் தலைவரின் படத்தைச் செருப்பால் அடித்துக் கொளுத்துவதுதான் பொருத்தமான எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். இராமனைக் கடவுளாகக் கருதும் பக்தர்கள் ஒருவேளை மனம் வருந்தினால், சாதியைப் பாதுகாக்கும் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுமாறு அவர்களுக்கு நாம் புத்தி சொல்லலாம். புத்தி வந்தால் பக்தி தானே போய்விடும்.


""பூணூலை அறுப்பது தனிநபரின் உரிமையையும் மத உரிமையையும் மீறும் வன்முறை'' என்று அலறுகிறது. பாரதிய ஜனதாக் கும்பல். அறுப்பதும் எரிப்பதும் எதிர் வன்முறைதான். பூணூல் அணிவதுதான் முதல் வன்முறை. பூணூல் என்பது அவரவர் விருப்பப்படி அணியும் கலர் சட்டையோ, அல்லது ஒரு மதத்தினர் அனைவரும் அணியும் சிலுவை போன்ற சின்னமோ அல்ல. பூணூல் பெரியாரின் மொழியில் சொன்னால், ஒரு தெருவில் ஒரேயொரு வீட்டுக் கதவில் ""இது பத்தினி வீடு'' என்று எழுதிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பான நரித்தனம். பெயருக்குப் பின்னால் இருந்த சாதிவாலை நறுக்கியவர் பெரியார். அய்யர், அய்யங்கார் என்ற பட்டங்களை ஃபாஷனுக்காகத் துறந்தவர்கள், பூணூலையும் துறந்துவிட்டால் அவர்களை நாகரிப்படுத்தும் வேலை மிச்சம்!


· சூரியன்

ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர்கள் உள்ளனரா?

ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர்கள் உள்ளனரா?

(ஒரு விவாவதத்தின் தொடர்)
பி.இரயாகரன்
07.01.2006


ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனரே இன்றைய பார்ப்பனர் என்ற பொதுவான உள்ளடக்கம், இயங்கியல் ரீதியாக கேள்விக்குரியதே. பொதுவாக ஆரியரே இன்றைய பார்ப்பனர் என்ற நேர்கோட்டு வாதம் சிதிலமடைந்து காணப்படுகின்றது. இது பார்ப்பனீய ஒழிப்பில், அதாவது சாதிய ஓழிப்பில் தவறாக இட்டுச் செல்லுகின்றது. இது வராலாற்று இயங்கியல் தன்மையை தவறாக எடுத்துச் சென்று, தவறான மதிப்பீடுகளை உருவாக்கி அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கத் தூண்டி, தவறான வழிகாட்டலையும் செய்கின்றது.

அன்றைய ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனரே இன்றைய பார்ப்பனச் சாதி என்பது, தொடர்ச்சியாக பிறப்பு சார்ந்த இரத்த வழி எல்லைக்குள் பார்ப்பனீயத்தை முடங்கிவிடுகின்றது. இது உள்ளடகத்தில் பார்ப்பனீயம். சாதிய அமைப்பு தோன்ற முன் இரத்த உறவு ரீதியான இறுகிய சமூகக் கூறு என்பது, சாதிய நிபந்தனைக்கு அப்பாற்பட்டது. சாதிய அமைப்புக்கு பின்பான, இரத்த உறவு வழி பார்ப்பனீய கோட்பாடு தான் பாhப்பனீயமாகியது என்ற போதும், அது பிறப்பு சார்ந்த ஓன்றாக இன்று குறுகி பார்பானுடன் தன்னை நிலைநிறுத்திவிடவில்;லை. பார்ப்பனீயம் சமுதாயமயமாகியது. பார்ப்பனீயம் பார்ப்பான் வாழ்வியல் முறை என்பதுக்கு அப்பால், இதுவே இன்று இந்துத்துவமாகியுள்ளது. உண்மையில் பிறப்பில் இருந்து பார்ப்பனீயத்தை விடுவிப்பதும், அதே நேரம் அதை ஓழித்துக் கட்டுவதும் வரலாற்று இயங்கியலின் ஒரு அரசியல் கூறாகவேயுள்ளது.

ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர்களே இன்றைய பார்ப்பனர் என்று கூறுவதில், ஜெர்மனைச் சோந்த மாக்ஸ்முல்லர்தாம்; பங்கே முதன்மையானது. அவரைப் பொறுத்தவரை தமது நாட்டுக்கு ஒரு நகரிகத்தின் தொடர்ச்சியையும், இரத்த உறவு கொண்ட ஒரு ஆரிய தூய்மையை உருவாக்கவும், ஆரியம் பற்றிய மிதமிஞ்சிய கற்பனை புனைந்தாh. 1859 இல் தொடங்கி அவரின் இந்த முயற்சி, அந்த நூற்றாண்டின் இறுதிவரை அதற்காக முயன்று ஒரு ஆரியமாயை உருவாக்கினார். எல்லாம் ஆரியர் என்று கூறிதன் மூலம், உலக நாகரிகமே ஆரியம் என்று கூறி, பார்ப்பனீயத்தை ஆரியமயமாக்கினார். உண்மையில் இதை ஜெர்மனியுடன் இனைக்க முனைந்தார். இதன் மூலம் ஜெர்மனியருக்கு ஒரு உயர் தகுதியை உருவாக்க முனைந்தாh. ஒன்றுபட்ட ஜெர்மனிக்கு தேவையான இந்த ஆரிய மாயையும், அதற்குரிய ஒரு கோட்பாட்டு தகுதியை உருவாக்க முனைந்தார்.

இப்படி ஆரியம் பார்ப்பனீயம் கோட்பாடாக்கப்பட்டது. உண்மையில் ஆரியம் வேறு, பார்ப்பனீயம் வேறு என்பது நிராகரிக்கப்பட்டது. இன்று பார்ப்பனீயத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றன் பின் ஒன்றாக, அதாவது எல்லாமே ஒன்றாக காட்டுகின்ற போக்கே ஆதிக்கம் பெற்றுள்ளது. உண்மையில் இது பிறப்புவழி பார்ப்பனீய கோட்பாடே, இதற்கு எதிரான கோட்பாட்டிலும் ஆதிக்கம் பெற்று சமூகமயமாகி நிற்பதைக் காட்டுகின்றது. சாதியம் தோன்றாத சமூக அமைப்பில், இந்;த ஆரியம் பற்றி விளக்கம் தான் என்ன? அது பிறப்பு வழி சார்ந்த இரத்தவழியா? வரலாற்றின் தொடர்ச்சி சார்ந்த மாற்றங்கள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டுள்ளது. அதாவது சமூக பொருளாதார மாற்றங்கள், அதன் சமூக உட்கூறுகள் அனைத்தும் புறந்தளப்படுகின்றது.

ஆரியத்தை பிறப்பு சார்ந்த கோட்பாடாக வரையறுத்து, இன்று வரை அதுவே பார்ப்பனீயமாக தொடர்வதாக கூறுவது எப்படித் தான் சரியானது? பொதுவாக எல்லா ஆய்வளார்களும், சாதிக்கு ஏதிராக போராடிய அம்பேக்கா உட்பட, இக் கோட்பாட்டை கோட்பாடளவில் மறுதளிக்கினர். ஆனால் நடைமுறை எதார்த்தில், அதன் எதிர்வினையில் இதுவே ஆதிக்கம் பெற்றுள்ளது. இது பார்ப்பனீயத்துக்கு எதிரான போராட்டத்தின் சரியான வரலாற்று இயங்கியலை இனம்காண முடியாத வெளிப்பாடாகும். அத்துடன் அவர்களின் இன்றைய அரசியல் நிலைகாரணமாகவும், இந்த குறுகிய போக்கு ஆதிக்கம் பெற்று நிற்கின்றது.

இதில் இருந்து இந்த போக்கை விடுவிக்க வேண்டியுள்ளது. ஆரியமாயை தகர்ப்பதன் மூலம, எதிர்நிலையில் கட்டப்படும் திரவிட மாயையும் நாம் கலைத்தேயாக வேண்டும். இந்த பாhப்பனீய மாயையில் இரண்டு கூறுகள் உண்டு.

1.பார்ப்பனீயம் துய்மையானதும், வெளியில் இருந்த வந்துமான ஆரிய வழிப்பட்ட இன்றைய பார்பானர்கள் தான், தாம் என்ற பிரமை.
2.பார்ப்பனீயம் துய்மையானதும் வெளியில் இருந்து வராதுமான இந்தியாவில் தோன்றி ஆரிய வழிப்பட்ட இன்றைய பார்பானர்கள் தான், தாம் என்ற பிரமை.

முதலாவது பிரிவில் பார்ப்பனர்கள் சாதி ரீதியாக தமது தூய்மைக்கும், மேற்கு வரை தமது நகரித்தை பற்றிய பிiமைக்கும், தூய்மைக்கும், தமது வெற்றிக்கும், பெருமைப்படுகின்ற ஒரு கூறாக இதைக் காட்டிக்கொள்கின்றனார். இதற்கு எதிராக வந்தேறிகள் என்ற தளத்தில், இதற்கு எதிhவினை உள்ளது. இதை மறுதளிக்க இரண்டாவது அம்சம் தோற்றுகின்றது. அதாவது முதலாவதின் எதிர்வினையை மறுக்க, நாங்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள், என்றும், தாம் வந்தேறிகள் அல்ல என்ற காட்டும் பார்ப்பன எதிர்வினையும் உள்ளது. வரலாற்றை திரித்து புரட்டுவதன் மூலம், முழு வரலாற்றையும் இக் கூறுகள் சிதிலமாக்கியுள்ளது. மறுபகத்தில் எதிர்வினைகள் திராவிடமே உலக நாகரிகத்தினை முழுமை என்ற காட்டுகின்ற பிரமை கட்டப்படுகின்றது. பொதுவாக மொழி ஆய்வை வைத்துக் கொண்டு, இதை இரண்டு பிரிவும் தத்தம் சமகால அரசியல் தளத்துக்கும், காலத்தின் தேவைகும் எற்ப திரித்துப் புரட்;டு;கின்றனார்.

மித மிஞ்சி கற்பனைகள் ஆய்வுகளாக வருகின்றது. இதில் மொழி ஆய்வு மூலம் இதை நிறவுதல் என்ற பெயரில், அனைத்ததையும் தவிடுபொடியாக்கி குழப்பிவிடுகின்றனார். மக்களின் சமூக கொருளாதார கூறை புறந்தள்ளி, மிகைப்படுத்தபட்ட கற்பனைக்குள் இவைகளை முடங்கி தமது சொந்த முரண்பாட்டுடன் விடுகின்றனர்.

இதில் இருந்து இதை விடுவித்து, தெளிவுபடுத்துவது மிகவும் கடினமானது. நம்பிகைகள், பிரமைகள் மீதான எதிர்வினையாகவே இது உள்ளதாலும், இவைகளை நம்பிய ஒரு போராட்ட வழியாக வாழ்வியலாக உள்ளதால், இது மேலும் விகரமாகி கடினமாககின்றது. மறுபக்கத்தில் கடந்தகால ஆய்வுகள், விளக்கங்கள் சமூக பொருளாதார நோக்கில் செய்யப்பாடமையால், அவை வெற்றிடமாகவே உள்ளது. சிக்கல் நிறைந்த இந்த விடையம் மீது பற்பல கேள்விகளை எழுப்பவும், அதை தர்க்க ரீதியாக விவாதிப்பதன் மூலம் உரு தெளிவை பொதுத்தளத்தில் எற்படுத்த முடியும்.

1.வெற்றி பெற்று வந்தாக கருதும் வந்தேறி ஆரியர்கள் எந்தப்பக்கதில் எப்படி ஆட்சி அமைத்தனர்?
2.வந்தேற முன் அவர்களின் பண்பாட்டு வேர் எங்கு இருந்தது. அதற்கு ஆதாரங்கள் எவை? அதன் அப்படைகள் எங்கே? வந்தேறாத குடிகள் என்றால் கூட, அதன் அடிப்படைகள், ஆதாரங்கள் எங்கே?
3.வெளியல் இருந்து வந்து வெற்றி பெற்ற அல்லது இந்த மண்ணில் வாழந்த ஆரியர்கள் ஏன் ஒரு நாட்டு மக்களாக இந்த மண்ணில் இல்லாமல் போனார்கள்? அவர்களின் வேத மொழி ஏன் வாழவில்லை?
4.அப்படி வந்தேறிகளிள் வெற்றி பெற்ற ஒரு ஆட்சி இருந்து இருந்தால் அல்லத இந்த மண்ணின் உருவான ஆரியர் என்றால், அந்த ஆரியர் ஆட்சியை அழித்து யார்? எப்படி ஏன் அழிக்கப்பட்டது?
5.அவர்கள் தான் இன்றைய இரத்தவழி உறவு பார்பானர்கள் என்றால் அதன் அடிப்படை தான் என்ன? இலலை என்றால் எப்படி?
6.வராலாறு தெரிந்த காலம் முதலே பார்ப்பனர் தனித்து இருந்து ஒரு நாடு அல்லது ஒரு தனி ஆட்சி இருந்ததாக வரலாறு கிடையாது. அதற்கு முந்திய வேத காலத்திலும் அது கிடையாது. அப்படியாயில் பார்hனருக்கு மட்டும் மொழயாக உரிய சமிஸ்கிருத மொழி எப்படி எங்கே உருவானது? அப்படியாயின் பாhபான் யார்?
7.பார்ப்பன சாதி ஒரு பூசாரி பிரிவாக, ஒரே மொழி பேசுகின்ற ஒரு சாதிப் பிரிவாக எப்படி நீடிக்க முடிந்தது. அதற்கான சமூக பொருளாதாரக் கூறு என்ன?
8.வேதகால மக்களின் வர்க்க அமைப்பு என்ன? அது ஒரு வர்க்க அமைப்பு என்பதால், அது எப்படி பார்பனீயமாக ஒருங்கினைந்தது அல்லது சிதைந்தது.?
9.இன்றைய பார்ப்பனர் மூலத்தை வேதத்தில் தேடினால் காணமுடியாது. வேத மக்கள் அதாவது அந்த ஆரியர், வாழ்வு சார்ந்த மக்கள் பற்பல தொழிகளை செய்ததுடன், தமது மக்களின் நலனைக் கோருவதே வேதத்தில் முதன்மை பெற்று நிற்கின்றது. தமது வழிபாட்டை பெருமைப்படுத்தி பேசுகின்றனர். இது எப்படி இன்றைய பார்ப்பனீயமாக இருக்க முடியும்;. அதன் நீட்சியாக எப்படி எந்த வகையில் இருக்கின்றது?
10.பார்பனீயம் எந்த வரலாற்று காலத்துக்கு பிந்தைய கோட்பாடு? இதற்கு முந்தைய வரலாற்றை எப்படி பொருத்துவது அல்லது விவக்குவது?

இப்படி பலபத்து கேள்விகளுக்கு, சமூக பொரளாதார எல்லைக்குள் வரலாறு விடை காணவேண்டியுள்ளது. விடை கண்டதாக கருதப்படுபவை அரூபமாகவேயுள்ளது. அவை பலசந்தர்ப்பத்தில் இலகுவாக பொடிப்பொடியாக தகர்ந்து போய்விடுகின்றது. திரவிடர், ஆரியர் என்ற எல்லைக்குள் இதை அய்வு செய்யமுடியாது. இந்தியா சமூகத்தை சாதி சமூகமாக, சாதி சமூக தோன்றுவதற்கு முந்தை வரலாற்றுக்குள்ளும் நகர்த்தி, அதற்குள் குண்டு சட்டியை ஓட்டுவது அபத்தம்;. பொதுவாக திராவிடர், ஆரியர் என்ஓ தம்மைச் சுற்றி ஒளிவட்டம் கட்டி, உலகம் நாகரிகமே தமது இந்த ஒளிவட்டத்தை சுற்றி நடந்தாக ஆய்வுகள் புனையப்பட்டுள்ளது. அதாவது பூமியைச் சுற்றி இந்த பால்வெளி முதல் சூரியன் வரை சுற்றிவந்தாக நம்பிய அதே அறிவு குருட்டுத்தனமே கொலோசி நிற்கின்றது. இந்தியாலில் மட்டுமல்ல, உலகிலேயே எந்தனை மக்கள் கூட்டம் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்து இருந்துள்ளது. தனித்தனியான சுயதீனமான நகரிகம் இருந்துள்ள்து. எல்லாவற்றையும் குதர்க்கமாக திராவிடம் அல்லது ஆரியம் என்று, எமது அறிவியல் பூதக்கண்ணடி கொண்டு தேடுவதே நிகழ்ந்துள்ள்து.

சமூகங்கள் பற்றிய ஆய்வும் அறிவும், சமூக பொருளாதார வாழ்வியல் எல்லைக்குள், மக்கள் என்ற கோணத்தில் வைத்து ஆய்வு செய்யபட வேண்டும்;. அது செய்யப்படவேயில்லை. குழப்பம் குதர்க்கம் ஆய்வாகி நிற்கின்றது. பாவம் மொழிகள். ஒரு மொழியின் தேமாற்றத்தையே எள்ளிநகையாடுகின்றனர்.. மொழி ஒரு மக்கள் கூட்டத்தின் சமூக பொருளாதார உறவுடன் தொடர்புடையது. மொழியின் ஆரமப் உச்சரிப்புகள், இயற்கையை சார்ந்து, அதன் அடியில் இருந்து இயற்கையாக உருவாகின்றது. அது பெரும்பாலும் இயற்கையின் எதிர்வினையாக இருப்பதால், அதை உள்வாங்கும் மனிதன் அதுவாகவே பிரதிபலிக்கின்றான். இதன் வேர் பொதுவாக எல்லா மொழிக்கும் ஓத்த தன்மை கொண்டவை. உச்சரிப்புத் தன்மையில் மட்டும் வேறுபட்ட உச்சரிப்பு உருவாகின்றது. வாழும் சூழழுக்கும் அவர்களின் சமூக பொருளாதார சூழலுக்கும் உட்பட்டு இயற்கையுடன் மறுபடுகின்றது. இயற்கையுடன் ஓசையை எப்பாத இயற்கை சார்ந்த பொருள் பற்றிய மொழி, பயன்பாட்டுன் தொடர்பு கொண்டதாக மாறுபடுகின்றது. இயற்கை சாhந்த சாரம் அதலி பிரதிபலித்த மொழியின் மரபு வேர் இணைகப்படுகின்து.

மொழியை ஆரியர், திராவிடர் என்ற எல்லைக்குள் திரிப்பதை அனுமதிக்க முடியாது. அதன் சமூக பொருளாதார வாழ்வியலுடன், இயற்கை சார்ந்து இனம் காணவேண்டும். கி.மு 1500 முதல் கி.மு5000 வருட வாழ்வில் மனித வாழ்வு, இயற்கையை சார்தே வாழ்வில் கூறுகள் பெருமளவில் இருந்தது. இந்தவகையில் மொழியில் இயற்கை அம்சமே செறிந்து காணப்படும். மொழியைக் கொண்டு ஆரியர், திராவிடர் என்று சமூகங்களை வகைப்படுத்திய ஆய்வுகள் பல புனைவுத்தன்மை பெற்று நிற்கின்றது.

Friday, January 5, 2007

'மார்க்சிஸ்டுகள்" : பார்ப்பன பாதந்தாங்கிகள்!

'மார்க்சிஸ்டுகள்" : பார்ப்பன பாதந்தாங்கிகள்!

முற்றும் துறந்த துறவி வேடத்தில் ஹார்லிக்ஸ் ஷியாமளா, ஸ்ரீரங்கம் உஷா என்று பல பெண்களுடன் உல்லாச சல்லாபம் புரிந்து கொண்டு, பக்தர்களுக்கு ஆசீர்வாதமும், பல கருப்புப்பண முதலைகளின் சொத்துக்களுக்குப் பாதுகாப்பும் வழங்கிக் கொண்டிருந்த மோசடிப் பேர்வழிதான் காஞ்சி சங்கராச்சாரி. சங்கர மடத்தின் முன்னாள் விசுவாசியான சங்கரராமன் எனும் பார்ப்பனர், சங்கராச்சாரியின் இந்தக் காமக் களிவெறியாட்டங்களை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி விடுவாரோ என்று அஞ்சி, கூலிப்படையை ஏவி அவரைக் கொலை செய்த பயங்கரவாதிதான் இந்த சங்கராச்சாரி. அவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, சில நாட்கள் கம்பி எண்ணிவிட்டு, தற்போது பிணையில் உள்ள இந்த ஆசாமியைத் தமிழகத்தில் சீண்டக் கூட யாருமில்லை. எங்கே தங்கள் வீட்டுப் பெண்களிடமும் இந்தக் கிழட்டு காம கே(õ)டி கைவைத்து விடுவானோ என்ற பீதியில், பார்ப்பனர்களே கூட காஞ்சி சங்கரமடத்துக்குச் செல்லத் தயங்குகிறார்கள். இப்பேர்பட்ட யோக்கிய சிகாமணிக்கு, ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே, அரசு விருந்தினர் என்ற சிறப்புத் தகுதியளிக்க உத்தரவிட்டு, அதனைச் செயல்படுத்தி இருக்கின்றார்.

இந்துவெறி பாசிஸ்டுகள் ஆளும் குஜராத்தின் முதல்வரோ அல்லது இராஜஸ்தான், ம.பி. மாநில முதல்வர்களோ இதனைச் செய்யவில்லை. இந்துவெறிக்கு எதிராகச் சவடால் அடித்துவரும் "இடதுசாரி' ஜனநாயகக் கூட்டணி ஆளும் கேரளத்தின் முதல்வர் அச்சுதானந்தன்தான் இப்படி உத்தரவிட்டுச் செயல்படுத்தியுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக, சிறீ உத்திராடம் திருநாள் மகாராஜாவுக்கு ஆசி வழங்க திருவனந்தபுரம் சென்ற இந்த "மட' சங்கராச்சாரிக்கு, கேரள அரசின் 15 துறைகளும் அரசு விருந்தினர் என்ற தகுதியளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று அவர் டிசம்பர் 12ஆம் நாளன்றே உத்தரவிட்டு பக்தியோடு செயல்படுத்தியுள்ளார்.

மார்க்சியத்தின் பெயரால் கட்சி நடத்திக் கொண்டு ஆட்சி செய்யும் சி.பி.எம்.இன் முதலமைச்சரான அச்சுதானந்தன், ஒரு மடாதிபதிக்கு மரியாதை செய்வதே மார்க்சியத்துக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும். அதிலும் கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச்சதி, பொய்சாட்சிகளை உருவாக்குதல், கொலை செய்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினல் மடாதிபதிக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்திருக்கிறார் "மார்க்சிஸ்டு' முதல்வர். கூச்ச நாச்சமின்றி, ஒரு இந்துவெறி பயங்கரவாதிக்கு "இடதுசாரி' அரசே மரியாதை செலுத்திச் சிறப்பிக்கும் கீழ்த்தரமான செயலைக் கண்டிக்கக்கூட முன்வராமல், பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது, "இடதுசாரி' கூட்டணியிலுள்ள இன்னுமொரு போலி கம்யூனிஸ்ட் கட்சியான வலது கம்யூனிஸ்ட் கட்சி.

ஆனால், முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளரான குஞ்ஞாலிக் குட்டி, "இடதுசாரி' அரசின் இச்செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். ""தமிழ்நாட்டில் கொலைக் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கு அரசு மரியாதை அளிப்பது முறையல்ல; சங்கப் பரிவாரங்களின் விருப்பங்களுக்கேற்ப அரசின் கொள்கையை மாற்றக் கூடாது'' என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள தலித் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இராமபத்ரன், ""இது இந்துத்துவ ஓட்டு வங்கியை அறுவடை செய்ய முயற்சிக்கும் கீழ்த்தரமான செயல்'' என்றும், ""மத அடிப்படையில் மக்களைப் பிளக்கும் செயல்'' என்றும் "இடதுசாரி' அரசைச் சாடியுள்ளார். கொல்லத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான டாக்டர் எம்.எஸ். ஜெயபிரகாஷ், ""அனைத்து சட்டங்களுக்கும் மேலானவன் பிராமணன் என்று மனுதர்ம விதியை உயர்த்திப் பிடித்து, கொலைக் குற்றவாளியானாலும் பார்ப்பான் என்பதால் கேரள அரசு காஞ்சி மட சங்கராச்சாரிக்கு மரியாதை செலுத்துகிறது'' என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

அக்ரஹார அம்பிகளின் கூடாரமான சென்னைத் தொலைக்காட்சியில், ஆண்டுதோறும் தீபாவளியன்று அதிகாலையில் ""கங்கா ஸ்நானம் ஆச்சோ!'' என்று தனது ஊத்தை வாயை இளித்து ஆசி வழங்கி வந்த இந்த ஓடுகாலி சங்கராச்சாரியை, சங்கரராமன் படுகொலைக்குப் பிறகு அத்தொலைக்காட்சி கூட அழைப்பதை நிறுத்திவிட்டது. தமிழக பார்ப்பன பத்திரிகைகளும் இந்தக் காமகே(õ)டியின் அருளாசியை படத்துடன் வெளியிடுவதை நிறுத்தி விட்டன. அவாள்களே புறக்கணித்துவிட்ட இப்பார்ப்பன பயங்கரவாதியிடம் அப்படி என்ன முற்போக்கைக் கண்டார்களோ இந்த போலி கம்யூனிஸ்டுகள்; அரசு மரியாதை அளித்து சிறப்பித்து ஆராதனை செய்திருக்கிறார்கள்!

இவர்கள் இவ்வாறு பார்ப்பனியத்துடன் கூடிக் குலாவுவதும் பார்ப்பனியத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்வதும் புதிய விவகாரமல்ல. வேத மந்திரங்களிலும் வேள்விச் சடங்குகளிலும் புராதனப் பொதுவுடைமைக் கூறுகள் உள்ளன என்று ஆய்வு செய்து, இந்த அபத்தத்தை ""பண்டைக்கால இந்தியா'' என்ற தனது நூல் மூலம் பறைசாற்றினார் போலி கம்யூனிஸ்டுகளின் அந்நாளையத் தலைவர் எஸ்.ஏ. டாங்கே.
நரகலில் நல்லரிசி பொறுக்கிய கதையாக, கம்பராமாயணத்தில் சோசலிசக் கூறுகளைக் கண்டுபிடித்த ப.ஜீவானந்தம், தமிழக கம்யூனிசத் தலைமையையே கம்பன் கழகமாக மாற்றினார். அவரின் சீடரான பெரியவர் நல்லக்கண்ணு கூட இன்னும் தனக்குப் பிடித்த இலக்கியம் என்று கம்பராமாயணத்தைத்தான் குறிப்பிடுகிறார்.

""வேதங்கள், உபநிடதங்கள் முதலான பாரதீய கலாச்சார பொக்கிஷங்களும் மார்க்சிய லெனினிய புரட் சிகர தத்துவமும் இணைந்ததுதான் நான் உயர்த்திப் பிடிக்கின்ற இந்திய மார்க்சியம்'' என்று அறிவித்து, இந்தியாவை ""வேதங்களின் நாடு'' என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார், "மார்க்சிஸ்டு'களின் ஞானகுருவாகிய ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.
அவரது விசுவாச சீடரும், மறைந்த முன்னாள் கேரள "மார்க்சிஸ்டு' முதல்வருமான ஈ.கே.நாயனார், கிறித்தவர்களின் "லோக குரு'வான போப் இரண்டாம் ஜான்பால். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவருக்கு பக்தியோடு பகவத்கீதை நூலைப் பரிசளித்தார்.

அடக்கருமமே! இராம.கோபாலன் செய்கிற வேலையையா இந்தச் செஞ்சட்டை தோழர் செய்தார் என்று நீங்கள் முகத்தைச் சுளிக்கும்போதே, தனது வீட்டைக் கட்டுகையில் செங்கல் பூசை நடத்திய ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் புரட்சிகர போர்த்தந்திரத்தையும், தனது துணைவியார் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த மறுப்பேதும் சொல்லாத அவரது ஜனநாயக மாண்பையும், தனது பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்திய நாடாளுமன்ற "மார்க்கிஸ்டு' அவைத் தலைவர் சோமநாத் சட்டர்ஜியின் முற்போக்கு சிந்தனையையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.

குன்றக்குடி அடிகளாரை ""முற்போக்கானவர்'', ""ஆன்மீக கம்யூனிஸ்ட்'' என்றெல்லாம் பிதற்றித் திரிந்தவர்கள் முந்நாளைய போலி கம்யூனிசத் தலைமையினர் என்றால், ""நான் முதலில் பார்ப்பான்; அப்புறம் இந்து; அதன்பிறகுதான் கம்யூனிஸ்ட்'' என்று மே.வங்க "மார்க்சிஸ்டு' அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி வெளிப்படையாக அறிவிப்பதும், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகட்டி நிற்பதும் இந்நாளைய போலி கம்யூனிசத் தலைமையின் மகிமைகள்!

தமது அதிகாரபூர்வ நாளேடான தீக்கதிரில் நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம் முதலானவற்றுக்குச் சிறப்பு மலர் வெளியிடுவதோடு, தொழிற்சங்க அணிகளோடு சேர்ந்து ஆயுத பூசை விழா கொண்டாடி மகிழும் இப்போலி கம்யூனிஸ்டுகள், இனி வெட்கப்படாமல் பூணூலை மாட்டிக் கொண்டு காஞ்சி சங்கர மடத்தில் சங்கமிக்கலாம்; அடுத்து வரும் தேர்தல்களில் ""காஞ்சிப் பெரியவாளின் ஆசி பெற்ற சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்!'' என்று விளம்பரம் செய்யலாம்; கலை இரவுகள், தொழிற்சங்கக் கூட்டங்களுக்கு ஆசீர்வாதம் வழங்க "காம'ரேடு காமகே(õ)டியையே அழைக் கலாம்; போலி கம்யூனிஸ்டுகள் எதையும் செய்வார்கள்; யார் கண்டது!

இத்தனைக்கும் பிறகும், இந்துமதவெறி பாசிசத்தை சி.பி.எம். தலைமையில் அணிதிரண்டு வீழ்த்திவிட முடியும் என்று "மார்க்சிஸ்டு' கட்சியினர் யாராவது சொன்னால், சிந்திக்கத் தெரிந்த எவரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்!· இரணியன்

அன்று வியட்நாம் இன்று ஈராக்

அமெரிக்காவின் போர் குற்றங்கள்: அன்று வியட்நாம் இன்று ஈராக்

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் தினந்தோறும் நடத்திவரும் பச்சைப் படுகொலைகளும் அதை மூடிமறைக்க ஜார்ஜ் புஷ் கும்பல் அவிழ்த்துவிடும் புளுகுணிப் பிரச்சாரமும் இட்லரையும், கோயபல்சையும்கூட வெட்கப்பட வைத்துவிடும்.


கடந்த அக்டோர் 16ஆம் தேதி, ஈராக்கின் ரமாடி நகரில் அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதலொன்றை நடத்தியது. ""இத்தாக்குதலில் 75 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அந்த ஊரைச் சேர்ந்த மக்களுக்குச் சிறுகாயம் கூட ஏற்படவில்லை'' என்றும் அமெரிக்கா தனது எடுபிடி பத்திரிகைகள் மூலம் பிரச்சாரம் செய்தது.


அன்று அமெரிக்கா நடத்திய விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுள் 6 வயதான முகம்மது சாலிக் அலியும் நான்கு வயதான சாட் அகமதுவும் எட்டு வயதான ஹைஃபாவும் அடக்கம் என்பது ஈராக்கியர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.


அன்று, அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போராளிகள், ரமாடி நகரில் ஒரு அமெரிக்க இராணுவக் கவச வண்டியைக் குண்டு வீசித் தகர்த்து, ஐந்து அமெரிக்க சிப்பாய்களைக் கொன்றனர். குண்டு வீச்சில் சிதைந்துபோன அந்த வண்டிக்கு அருகே இந்தக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுதுதான், அமெரிக்கா இராணுவம் விமானத் தாக்குதல் நடத்தியது. குண்டு வீச்சுக்குப் பலியான இந்தக் குழந்தைகளும், அப்பாவி பொதுமக்களும்தான் ""தீவிரவாதிகளாக'' அறிவிக்கப்பட்டனர்.


அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் போராளிகளைப் பிடிப்பதற்கு, அவர்கள் வீட்டுப் பெண்களைப் பிணைய கைதிகளாகக் கடத்திக் கொண்டு போகும் கீழ்த்தரமான ""தாதா'' வேலையை, அமெரிக்க இராணுவம் ஈராக்கில் மதிப்புமிக்க தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக்கி விட்டது.


அமெரிக்க இராணுவம் ஒரு ஈராக்கியரைக் கைது செய்ய, அவர் போராளியாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ""எதிர்காலத்தில் போராளியாக மாறுவார்'', ""எதிர்காலத்தில் தற்கொலைப் படை மனித வெடிகுண்டாக மாறுவார்'' என்று "கண்டுபிடித்து', அமெரிக்க இராணுவத்தால் கை காட்டப்படுபவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகின்றனர். இப்படிப்பட்ட கற்பனையான குற்றச்சாட்டின் கீழ் மட்டும் 122 பெண்கள் சிறையில் எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ளனர்.


அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த வியட்நாம் மக்கள் மீது ""ஏஜெண்ட் ஆரஞ்சு'' என்ற இரசாயன ஆயுதம் வீசப்பட்டது போல, ஈராக்கில் பலூஜா நகரைப் போராளிகளின் பிடியில் இருந்து கைப்பற்ற, அமெரிக்கா நடத்திய சண்டையின் பொழுது, வெள்ளை பாஸ்பரஸ் என்ற தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதம் அந்நகரின் மீது வீசப்பட்டது. மேலும், அச்சண்டையில் காற்றில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சுவதன் மூலம், எதிரிகளை மூச்சுத் திணற வைத்துக் கொல்லும் இரசாயன ஆயுதங்களையும் அமெரிக்க இராணு வம் பயன்படுத்தியிருக்கிறது.


பலூஜா நகர் மீது இரசாயனக் குண்டுகள் வீசப்பட்ட பொழுது, ஏறத்தாழ 50,000 பொது மக்கள் அந்நகரில் இருந்தனர். இவர்களுள் எத்தனை ஆயிரம் பேர் உடனடியாக இறந்து போனார்கள்? எத்தனை பேர் எதிர்காலத்தில் சிறுகச் சிறுக உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போவார்கள் என்பது மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படுகொலை பற்றி பத்திரிகை நிருபர்கள் கேட்டதற்கு, அமெரிக்க இராணுவ மந்திரி டொனால்டு ரம்ஸ்ஃபெல்டு, ""நாங்கள் பிணங்களை எண்ணுவதில்லை'' எனத் திமிராகப் பதில் அளித்தார்.


இந்த அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, நாகரிக உலகம் போர் குற்றங்கள் என்கிறது. ஆனால், ஜார்ஜ் புஷ்சும், மன்மோகன் சிங் போன்ற அவரது எடுபிடிகளும் இந்த போர் குற்றங்களைத் தான் "ஜனநாயகம்' என்கிறார்கள்!



Wednesday, January 3, 2007

அபு கிரைப்: சித்திரவதையின் நோக்கம்!

அபு கிரைப்: சித்திரவதையின் நோக்கம்!

அபு கிரைப் சிறைச்சாலையில் இராக் மக்கள் மீது அமெரிக்க துருப்புக்கள் நடத்திய வக்கிரமான சித்திரவகைகள் குறித்த புகைப்படங்களும் ஒளிநாடாக்களும் சென்ற மே மாதம் முதன் முதலாகச் செய்தி ஊடகங்களின் வெளிவந்தன. உலகெங்கும் எழுந்த கன்டனங்களின் விளைவாக இந்த ஒளிநாடாக்களையும் புகைப்படங்களையும் பார்ப்பதற்க்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதித்தது புஸ் அரசு. ஓரு கண்துடைப்பு விசாரணையும் நடக்கின்றது.


இன்னும் வெளியிடப்படாத படங்களில் மிகக் கொடூரமான வன்புணர்ச்சிக் காட்சிகளும் இராக்கியச் சிறுவர்களுடனான ஓரினச் சேர்க்கைக் காட்சிகளும் உள்ளதாகக் கூறுகின்றது நியூஸ்வீக் வார ஏடு.


"துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்படும் இராக் பெண்கள், நேரடியான உடலுறவுக்காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு நான் திகிலில் உறைந்து போனேன்." என்றார் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்டின் டி.மிகான். "நரகத்தின் படுகுழிக்குள் தள்ளப்படுவது போல இருந்தது. ஆனால் இது நாம் உருவாக்கியிருக்கும் நரகம்" என்றார் செனட்டர் ரிச்சர்டு ஜே. டர்பின்.


இவ்விதழில் வெளியிடப்பட்டிருப்பவை அமெரிக்க அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்ட படங்கள். இவற்றை வெளியிட்டுயிருக்கும் வலைத்தளங்களைத் தேடிப்பிடித்துச் சீர்குலைக்கின்றது (Hacking) புஸ் அரசின் கூலிப்படை. அமெரிக்காவின் மீது வளைகுடா மக்களுக்கு வெறுப்பைத் தோற்றுவிற்பதற்க்காகவே பரப்பப்படும் போலிப் புகைப்படங்கள் இவை" என்று கேலிக்குரிய ஒரு பொய்யையும் பரப்பி வருகின்றது புஸ்அரசு. பொய், புனைசுருட்டுக்கள் அனைத்துக்குமான அறிவுச்சொத்துடமையைத் தனது மரபு உரிமையாக வரித்துக்கொண்டுள்ள அமெரிக்க அரசுக்கு நாம் விளக்கம் தரத்தேவையில்லை. நம்மிடையே பெருகிவரும் அமெரிக்க மோகிகளுக்கும் அமெரிக்க தாசர்களுக்கும் தான் விளக்கம் தேவைபடுகின்றது. அவர்களுது தடித்த தோலையும், இலவம் பஞ்சு மூளையையும் ஊடுருவும் வகையிலான விளக்கம் தேவைப்படுகின்றது. எனவேதான் இப்படங்களை வெளியிடுகின்றோம். சொற்கள் தீண்டமுடியாத சொறனையை இந்த விகாரமான படங்கள் தீண்டக் கூடும் என்பதால் வெளியிடுகின்றோம்.


இந்தப் படங்களைக் கண்டு ஒழுக்கவாதக் கண்ணோட்டத்தில் யாரையும் முகம் சுளிக்கக் கூடுமெனில் அத்தகையோருக்கு தமது போராட்டத்தின் வாயிலாக மணிப்பூர் பெண்கள் ஏற்கனவே பதிலளித்து விட்டார்கள். இராணுவத்துக்கு மட்டுமல்ல, பெண்ணை உடலாக மட்டுமே உணர்ந்து கிளர்ச்சி கொள்ளும் ஒவ்வொரு ஆண் மனதுக்கும் வழங்கப்பட்ட செருப்படி அந்தப்போராட்டம். இந்தப் புகைப்படங்களும் தான்.


ஓரு பெண்ணின் மீதும் கைதிகளின் மீதும் ஏவப்படும் பலியல் வன்முறையைமட்டும் சித்தரிப்பவையல்ல இந்தப்படங்கள். ஒரு தேசம் அதன் சுதந்திரம், இறையாண்மை, கலாச்சாரம் ஆகிய அனைத்தின் மீதும் ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்தும் கற்பழிப்பின் உருவகம் இது. எண்ணைக்கான யுத்தம், டொலருக்கான யுத்தம் என்றுமட்டும் இந்த ஆக்கிரமிப்பை புரிந்து கொள்ளும் பொருளாதார சவங்களுக்கு, உயிரின் துடிப்பை உணர்த்தும் படங்கள் இவை. "இந்தப் பாவத்தின் சம்பளம் தான் நீங்கள் அடைய விரும்பும் தங்கம்" என்ற உண்மையை அமெரிக்காவில் கரைசேரத்துடிக்கும் ஒவ்வொரு மைதாசுக்கும் உணர்த்தும் படங்கள் இவை.


தம்மை நாகரிக உலகம் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு ஓநாய்கூட்டம், மனித நாகரிகத்தின் உண்மையான தொட்டிலின் மீதும், அதன் குழந்தைகளின் மீதும்


நாம் பேசும் மொழியை, எழுத்தை, சுதந்திரம் எனும் சொல்லை முதன்முதலில் உச்சரித்த அந்த மழலைகள் மீதும்


நடத்தும் தாக்குதல் - உன் மீதும் என் மீதும் நடத்தப்படும் தாக்குதல்தான் என்பதை உறைக்கச் செய்வதற்க்கான படங்கள் இவை.


அமெரிக்கா தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் கொடூரத்தை, காலனியாதிக்கத்தின் அநீதியை நிருபிப்பதற்கு இந்தப்படங்கள் தேவையில்லை. ஆனால் தோற்கடிக்கப்பட்ட மக்களின் கையில் வெற்றியாளர்கள் படும் பாட்டை, உடலால் அடக்கப்பட்டாலும் உள்ளத்தால் பணிய மறுக்கும் ஒரு தேசத்தை, அத்தேசத்தின் ஆன்மாவை, அடக்கியாள முடியாமல் வெறி கொண்டு துடிக்கும் அமெரிக்க வல்லரசின் கையாலாகாத்தனத்தை நிருபிப்பதற்க்கு இந்தப்படங்கள் தேவை.


அமெரிக்க கொடும்கொலர்களின் பிடியிலிருந்து விடுபடத்துடிக்கும் இந்தச் சுதந்திரப் பறவைகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தகுதி நமக்கில்லை. நம் கையறு நிலைக்காக அவர்கள் வேண்டுமானால் நம்மீது அனுதாபப் படலாம்.


அமெரிக்க ஓநாய்களின் கோரப்பிடியில் இந்த உலகம் சிக்கி விடாமல் தன்னந்தனியே தடுத்து நின்று கொண்டிருக்கும் இராக் மக்களின் வீரத்தைப் போற்றுவோம்.


அபு கிரைப் சிறைச்சாலையில் நடைபெறும் கொடுமைகளை முதன்முதலில் தெரிவித்தவை மே மாதம் வெளியான புகைப்படங்கள் அல்ல. டிசம்பர் 2003-இல் சிறையிலிருந்து கடத்தப்பட்ட நூர் என்ற இராக்கியப் பெண்ணின் கடிதம். (கார்டியன், மே--20-2004)


"ஒவ்வொரு நாளும் ஆண் கைதிகள் மற்றும் அமெரிக்க இராணுவத்தினரின் முன் எங்களை அம்மணமாக நடக்க வைக்கின்றார்கள். உங்களுடைய தாயோ, சகோரரியோ இந்தச் சிறையில் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் அமெரிக்கச் சிப்பாய்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு. கருத்தரித்திருக்கிறார்கள் என்பது உறுதி. தயவு செய்து எங்கள் மீது குண்டு வீசுங்கள். இந்தச் சிறையின் மீது அணுக்குண்டைக் கூட வீசுங்கள். எங்களைக் கொன்று விடுங்கள்" இவ்வாறு அமெரிக்க இராணுவத்தை எதிர்த்துப் போராடும் இராக் போராளிகளிடம் மன்றாடுகின்றது அந்தக் கடிதம். (கிறிஸ்டியன் சைன்ஸ் மானிட்டர்)


இக்கடிதம் குறித்த செய்தி இராக் மக்களிடையே பரவத் தொடங்கியவுடனே இதனைப் பொய்யென்று நிராகரித்தது அமெரிக்க அரசு. ஆனால் அமெரிக்க இராணுவம் அமைத்த இரகசிய விசாரணைக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் அந்தோணி தகுபாவின் அறிக்கையோ அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளவையனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என்கின்றது.


ஓபெக் (opec) தலைமையகத்தின் எரிபொருள் ஆய்வுத்துறைத் தலைவராக இருந்த சதல்லா அல்பாத்திகல்ப் நியூஸ் (Guil
news
) எனும் பிரபல பத்திரிகையில் எழுதுகிறார். "இதுநாள் வரை நான் எண்ணெய் வணிகம் தொடர்பான கட்டுரைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதோ, இதை எழுதும்போதே நான் அழுகின்றேன்... என் தேசத்தில் நடந்ததற்காகவும், நடந்துகொண்டுருப்பதற்காகவும் மட்டுமல்ல, அவுகிரைப் கொடூரங்கள் பற்றிப் பலவாதங்கள் முன்பே கேள்விப்பட்ட போதும், அதை நம்ப மறுத்தேனே, அதற்க்காக அழுகிறேன்."


"நான் மேல்நாடுகளில் படித்தவன் வாழ்கையின் பெரும்பகுதியை அங்கேயே கழித்தவன். ~நாகரிகம் பொருந்திய மேலைநாட்டு அரசுகள் இவ்வாறெல்லாம் நடப்பதை அனுமதிக்கவே மாட்டார்கள் என்று இத்தனைக் காலம் நம்பியிருந்தேனே, அதற்க்காக அழுகிறேன்".


"எங்களைக் கொன்று விடுங்கள் என்று அபு கிரைப் சிறைச்சாலையின் பெண் கைதிகள் அனுப்பும் கடிதங்களைப் பற்றி நான் கடந்த மார்ச் மாதமே அறிந்தேன். அப்போதும் அதை நான் நம்ப மறுத்தேன். அது உண்மையல்ல என்பதனால் அல்ல, அந்த உண்மை தோற்றுவிக்கும் மன உளைச்சலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்க்காக அதை நம்பமறுத்தேன்."


"அடுத்த சில நாட்களில் பாக்தாத்திருந்து வந்த என் நண்பர் சொன்னார். ~பக்கத்து வீட்டுப் பெண்கள் இருவர் சில வாரங்கள் சிறையிலிருந்தனர். விடுவிக்கப்பட்டபின் அவர்களைச் சந்தித்து என்ன நடந்ததுதென்று அறிய முனைந்தேன். கண்ணீர் தான் அவர்கள் தந்த விடை நீண்ட நேரத்திற்குப் பின் விசும்பியபடியே ஒரு பெண் சொன்னால், என்னைத் தொட்டுவிட்டார்கள்." "இப்போதும் நான் நம்பமறுக்கிறேன். சில நேரங்களில் உண்மை எனத் தெரிந்தும் அதை நம்புவதற்க்கு நாம் விரும்புவதில்லை அல்லவா? அப்படித்தான் நானும் இந்த உண்மையை நம்ப மறுக்கிறேன்."


நாதியா இப்போது விடுவிக்கப் பட்டுவிட்டாள். ஆனால் தனது கன்னிமை சூறையாடப்பட்ட அந்த இருண்ட நாட்களின் கொடிய நினைவுகளிலிருந்து அவள் விடுபடவே முடியாது. லண்டணிலிருந்து வெளிவரும் அல்கியாத் நாளேட்டிற்கு அவள் அளித்த பேட்டியிலிருந்து: 'ஆயுதங்களைத் தேடுவதாக கூறி அமெரிக்கத் துருப்புக்கள் என் வீட்டில் நுழைந்தார்கள். என்னைத் தூக்கிச்சென்றார்கள். சிறையில் வைத்து என்னைத் துகிலுரிந்து நிர்வாணமாக்கி ஆணும் பெண்ணுமாக அமெரிக்கச் சிப்பாய்கள் சுற்றி நின்று கொண்டார்கள். பெண் ஆயுத வியாபாரிகளும் இராக்கில் உண்டு என்று இப்போதுதான் கேள்விபடுகிறேன்" என்று நக்கலடித்தாள் ஒரு பெண் சிப்பாய் நான் மறுத்துப் பேச முற்பட்டவுடன் தாக்கத் தொடங்கினாள். நான் செயலிழந்தேன். ஒரு குவளை தண்ணீர் கொடுத்தாள். ஓரு மிடறு விழுங்கியவுடனே சுயநினைவை இழந்தேன். நினைவு திரும்பிய போது நான் வண்புனர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன்".


"அடுத்த சில நாட்களில் 5 சிப்பாய்கள் கும்பலாக வந்தார்கள். காமவெறியைத் தூண்டும் இரைச்சலான இசையை அலரவிட்டு அதனை ரசித்தபடியே மாறிமாறி என்னை வேட்டையாடினார்கள்."


'ஒரு மாதத்திற்குப் பின் ஒரு சிப்பாய் வந்தான் என்னைக் குளிக்கச் சொன்னான். குளித்துக் கொண்டிருக்கும்போதே குளியலறைக் கதவை உதைத்துத் திறந்தான். நான் அவனை அறைந்தேன். அவனோ மிருகங்கள் புணர்வதைப் போல என்னைப் புணர்ந்தான். இன்னும் இரண்டு பேரையும் என் மீது ஏவிட்டான்."


'நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு பெண் சிப்பாய் நான்கு ஆண்களுடன் வந்தாள். ஆவர்கள் கையில் டிஜிடல் கமெரா. என்னை அம்மணமாக்கி என் மீது ஒரு ஆணைப் போல அவள் நடந்து கொண்டாள். மற்ற ஆண்கள் கைகெட்டிச் சிரித்தபடியே இதனைப்படமெடுத்தனர். அவளிடமிருந்து என்னைப் விடுவித்துக் கொள்ள போராடினேன். அவள் ஆத்திரமடைந்து என்னை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டாள். தோட்டாக்கள் தலையை உரசிச் சென்றதால் நான் திகிலில் உறைந்தேன். உடனே நான்கு ஆண்களும் என்மீது விழுந்து குதறத் தொடங்கினார்கள். நான் நினைவிழந்தேன்.


'நினைவு திரும்பிக் கண்விழித்தபோது என்னை அவர்கள் குதறிய காட்சி வீடியோத் திரையில் ஓடிக் கொண்டிருந்தது. கண்ணை மூடிக்கொண்டேன். எங்களை மகிழ்விக்கத்தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்! கண்ணைத் திற, பார், பார் என்று அவள் மிரட்டினாள்."


'ஆறு மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டேன். ஒரு நெடுஞ்சாலையில் பொட்டல் வெளியில் என்னை இறக்கி விட்டு கையில் கொஞ்சம் காசு கொடுத்து ~போ, போய் புதிய வாழ்க்கையைத் தொடங்கிக் கொள் என்று விரட்டிவிட்டான் ஒரு அமெரிக்கச் சிப்பாய்."


நாதியா என்ற புனைபெயரில் வாழும் இந்தப் பெண் அவமானத்தால் வீடு திரும்பவில்லை. சொந்த ஊரை விட்டு இராக்கின் வேறொரு மூலையில் வீட்டு வேலை செய்து வயிற்றைக் கழுவுகிறாள்.


நாதியா ஒரு அதிசயம். அபு கிரைப் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் பெண்களில் பலர் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். கருத்தரித்த பெண்களோ அமெரிக்க நாய்கள் கொடுத்த பிள்ளையைச் சுமக்க மறுத்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாத குடும்பத்தினரே பெண்ணைக் கொல்ல முயல்கின்றனர். அதைத் தடுத்து நிறுத்திய ஒரு சம்பவத்தை நினைவு கூறுகின்றார் பாக்தாத் பல்கலைக் கழகத்தின் பேராசிரியையும், அம்னாஸ்டி இன்டர்நேசனனின் பிரதிநிதியுமான நுவாய்ய்மி.


'எங்களைக் குண்டு வீசிக் கொன்றுவிடுங்கள்" என்று கடிதம் அனுப்பி அபுகிரைப் சிறையின் கொடுமைகளை உலகிற்கு அறிவித்த பெண் பெண் யார் என்பதைக் கண்டுபிடித்து, பாக்தாத் நகரில் அந்தப் பெண்ணின் வீட்டைத் தேடிச் சென்றார் பேராசிரியை நுவாய்மி. நூர் என்ற அந்தப் பெண்ணின் குடும்பமே ஊரை விட்டுப்போய்விட்டது. 'அவள் உயிருன் இருக்க வாய்பில்லை" என்கின்றார் நுவாய்மி.


ஆஸ்வாய் இருபது வயதுப் பெண் திடீர்யென்று ஒருநாள் அவளுடைய தாய் காணாமல் போய்விட்டால். ஓருவேளை கைது செய்யப்பட்டிருப்பாளோ என்று அஞ்சி அபு கிரைப் சிறைக்கு நடையாய் நடக்கிறாள் ஆஸ்வாய். 'ஆப்படியாரும் இங்கே இல்லை" என்று கூறி விரட்டுகிறார்கள் அமெரிக்க சிறையதிகாரிகள்.


ஆபுகிரைப் சிறையின் வீடியோ காட்சிகள் என்ற குறுந்தகடு மர்மமான முறையில் பாக்தாக்கில் புழங்கக் தொடங்குகிறது. அதில் தன்னுடைய தாயின் படத்தை பார்த்த ஆஸ்வாய் 'இது உண்மையாய் இருக்க முடியாது" என்று கதறுகிறாள்.


அடுத்த சில நாட்களில் செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து வந்த கடிதம். 'உங்கள் தாய் அபுகிரைப் சிறையில் இருக்கிறார்" என்று தெரிகிக்கிறது. என் அம்மாவுக்கு எதுவும் நேராமல் கூட இருக்கலாம். ஆனால் யார் நம்புவார்கள்? என்று கூறி விசும்புகின்றாள் ஆஸ்வாய்.


அபு கிரைப் படங்கள் வெளிவந்ததையொட்டி அமெரிக்கக் கட்சிகளும் ஊடகங்களும் வெளியிட்டு வரும் அதிர்ச்சியும் கண்டனங்களும் அயோக்கியதனமான மோசடிகள் என்கின்றார் பிரண்ட் லைன் இதழின் அமெரிக்கச் செய்தியாளர் விஜய் பிரசாத்.


'கலிபோர்னியா சிறையில் கைதிகளை கிளாடியேட்டர் பாணியில் ரத்தம் சொட்டச் சொட்ட மோதவிட்டு இந்த விளையாட்டைக் கண்டு களித்தனர் சிறையதிகாரிகள். விசாரணைக்குப் பின் யூன் 2001-இல் இந்த அதிகாரிகளைக் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தது அரசு."


'பெண்கள் சிறையில் 16 பென் கைதிகளை வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய குற்றத்துக்காக 11அதிகாரிகள் 1999இல் தண்டிக்கப்படனர்."


'இளம் பெண்களுக்கான சீர்திருத்தப் பள்ளியொன்றில், அப்பெண்களை நிர்வாணமாக்கி கைகளை அகலவிரித்து விலங்கிட்டு, உடலெங்கும் மிளகாய் பொடியைத் தடவி ஒவ்வொருநாளும் 23மணிநேரம் தனிமைச்சிறையில் வைத்தனர் சிறையதிகாரிகள்" என்று அமெரிக்கச் சிறைகளின் யோக்கியதையைப் பட்டியலிடும் பிரசாத், 'அமெரிக்கச் சிறைகளின் நீட்சிதான் அபுகிரைப். இது விதிவிலக்கல்ல" என்றுநிறுவுகிறார்.


தன் சொந்த மக்களையே விலங்குகள் போல நடத்தும் அரசு, ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தை எப்படி நடத்தும் என்பதை புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.


'எங்களை மகிழ்விப்பதற்க்காகதான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்" என்று நாதியாவிடம் சொன்னாளே அந்தப் பெண் சிப்பாய், அது அளுடைய தனிப்பட்ட கருத்தல்ல, அமெரிக்க அரசின் கொள்கை. தாங்கள் சுகிக்கவும், சூறையாடவும், கசக்கிப் பிழியவும், பருகவும் தான் இந்த உலகம் தேவனால் உண்டுபண்ணப்படிருக்கிறது என்பதே அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிகளின் கருத்து.


சமூக உணர்வற்ற தனிநபர்களாய் நொறுக்கிச் சிதறடிக்கப்பட்ட அந்தச் சமூகமோ 'தானும் தன் இன்பமுமே ஜீவன், அதை வழங்கவல்ல டாலரே சத்தியம்" என்று நம்புகிறது. காதல், அன்பு, பாசம், நட்பு, இரக்கம் போன்ற மனிதனுக்குரியவை அனைத்தையும் துறந்து, நாக்கும் வயிறும் குறியுமே இன்பத்தின் திறவுகோல்கள் என்று கொண்டாடுகிறது. ஏனவே, துடிக்கும் புழுவைப் புணரவும், விம்மி வெடிக்கும் கண்ணீரைச் சுவைக்கவும் அமெரிக்கப் படையினரால் இயலும் நிறவெறி மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும்' பண்பாட்டு விழுமியம்


அரசுப் படையைக் காட்டினும் கூலிப்படைச் சிப்பாய்களுக்குச் சம்பளம் அதிகமென்பதால், இராணுவத்திலிருந்து ராஜீனாமா செய்து கூலிப்படையில் சேருகின்றார்களாம் அமெரிக்க வீரர்கள். அமெரிக்காவால் புதிதாகப் பயிற்றுவிக்கப்பட்ட இராக்கிய வீரர்களோ, சொந்த மக்களைச் சுட மறுத்து போராளிகளின் அணியில் போய்சேருகின்றார்கள்.


கூலிக்குத் தம் உயிரை விலை பேசியிருக்கும் அமெரிக்கக் கூலிப்படைதான் இராக்கில் ஜநாயகத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கபடும் உற்பத்தி இலக்கைப் போலவே. கூலிப்படையினருக்கும் ~இலக்குகளை நிர்ணயிக்கின்றது புஸ் அரசு. கொல்லப்பட வேண்டிய போராளிகள், கைப்பற்றப்பட வேண்டிய ஆயுதங்கள், சதாம் அரசின் அதிகாரிகள், உருவாக்கப்பட வேண்டிய உளவாளிகள் - அனைத்திற்கும் இலக்கு தீர்மானிக்கப்படுகின்றது. இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளுக்கு வரம்பு இல்லை, முழுசுதந்திரம்! அந்தச் சுதந்திரத்தின் விளைவை அனுபவிக்கிறாள் இந்த இராக்கியப் பெண். (பின் அட்டை)


அவள் ஒரு போராளியின் மனைவியாக இருக்கக் கூடும், பிணைக்கைதியாக பிடித்து வரப்பட்ட சகோரதியாக இருக்கக் கூடும், சும்மா முகர்ந்துவிட்டு எறிவதற்காகக் கடைவீதியிலிருந்து இராணுவ வண்டியில் தூக்கிப் போடப்பட்ட யாரோ ஒரு பெண்ணாக இருக்கக் கூடும்,. அல்லது உளவாளியாக மாற மறுக்கும் போராளியாவும் இருக்கக் கூடும்.


உளவாளிகளை உருவாக்கும் 'கலை யில் அமெரிக்க இராணுவத்தைப் பயிற்றுவித்து வருகிறார்கள் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகள். கைது செய்யப்படும் பாலஸ்தீனப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியும், நிர்வாணப் படமெடுத்தும் வைத்துக்கொண்டு அவர்களை விடுவிப்பது@ சில ஆண்டுகளுக்குப் பின் இந்தப் படங்களைக் காட்டி ஜந்தாம் படை வேலை செய்யச் சொல்லி நிர்பந்திப்பது, இல்லையேல் உன் குடும்ப வாழ்க்கையைச் சீர் குலைப்போம் என மிரட்டுவது.... இது இஸ்ரேலின் மொசாத் உளவுப்படை கையாண்டு வரும் வழிமுறை. இந்த வழிமுறைதான் இராக்கிலும் இன்று பின்பற்றப்படுகின்றது.


எனவே கற்பழிப்பைப் படம் பிடித்ததென்பது சிப்பாய்களின் வக்கிரம் மட்டுமல்ல, இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அமெரிக்க இராணுவம் கடைடித்துக் கொண்டிருக்கும் அதிகாரபூர்வமான போர்த்தந்திரம்.


'ஒன்று அராபியர்களுக்கு புரியக் கூடிய ஓரே மொழி வன்முறை, இரண்டு அவர்களுடைய மிகப் பெரிய பலவீனம் அவர்களது மான உணர்ச்சி" ~என்று அராபிய மனம் (The Arab
Mind
1973) எனும் நூலில் குறிப்பிடுகிறான் ரபேல் பதாய் என்ற அமெரிக்க ஆய்வாளன். 'இந்தப் நூல்தான் இன்றைய புஸ் அரசின் வேதப் புத்தகமாக பயன்படுகின்றது" என்று அபு கிரைப் கொடுமைகளை விளக்குகிறார் {நியூயாக்கர் நாளேட்டின் செய்தியாளர் செய்மர் கொர்ஷ்.


மானத்தைத் துனியில் தேடும் தேசமா ஆயிரம் சவப்பெட்டிகளை அமெரிக்காவுக்கு அனுப்பியிரும்? தமது வீரத்தை கவசவண்டிக்குள் ஒளித்துகொண்ட அமெரிக்க சிப்பாய்களிடம் 'கால்செருப்பில் இருக்குதடா வீரம என்று கற்பித்தவர்கள் இராக்கின் சிறுவர்கள். தொருவோரக் கல்லும் தீக்குண்டாகு என்று இஸ்ரோலுக்கு நிருபித்து வருபவர்கள் பாலஸ்தீன இனைஞர்கள்.


உரியப்படும் ஆடை ஒவ்வொன்றுக்கும் ஓர் உடலைப் பரிசளிப்பார்கள் இராக் மக்கள். சவப்பெட்டிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை டில்லியை ஆளும் சவங்கள் கணக்கிடட்டும். அமெரிக்கச் சொர்க்கத்தை அடைவதற்க்காக விரதமிருக்கும் சவங்கள் இந்த படங்களைப் பார்த்த பின்ராவது உயிர் பெறட்டும்.


சூரியன்.


அபு கிரைப் மிச்சமிருக்கிறது மனச்சாட்சி!


சென்ற யூன் 22ம் திகதி அமெரிக்காவின் மஸா சூசெட்ஸ் நகரில் ஜெப்ரி லுசி என்ற 23 வயது இளைஞன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான். அவன் இராக்கிலிருந்து திரும்பிய அமெரிக்க இராணுவச் சிப்பாய்.


மார்ச.2003-இல இராக்கின் நசிரியா நகரில் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட நிரயுதபாணிகளான இராக் மக்களைத் ~தன்னுடைய இராணுவம் கொலை செய்வதைக் கண்டு தவித்தான் லூசி. 'நான் இங்கே அறநெறியற்ற அநீதிகளைச் செய்து கொண்டியிருக்கிறேன்" என்று தன் காதலிக்கு கடிதம் எழுதினான்.


அமெரிக்கா திரும்பியவுடன் தன் தந்தையிடம் பேசினான், 'நாங்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் ஒவ்வொரு நாளும் கொன்றிருக்கிறோம். என் வயதையொத்த இரண்டு இளைஞர்களை நெற்றியில் சுட்டுக் கொல்லுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். அவர்கள் கண்களைப் பார்த்தேன், அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்காதா? தடுமாறினேன், சுட்டுவிட்டேன்" என்று கூறி அழுதான்.


செத்துப்போன லூசியின் கழுத்தில் இரண்டு அடையாள அட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவனால் கொலைசெய்யப்பட்ட இளைஞர்களின் படங்கள்.


சென்ற யூலை மாதம் மட்டும் இராக்கிலேயே 24 அமெரிக்கச் தற்கொலை செய்து கொண்டியிருக்கிறார்கள். இராக் சென்று திரும்பிய சிப்பாய்களில் 17சதவீதம் பேர் தற்கொலைக்குச் செல்லும் அளவிற்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருபதாகக் கூறுகிறது இங்கிலாந்துன் மருத்துவ ஆய்வுப் பத்திரிகை.


இராக்கிலிருந்து திரும்பிய அமெரிக்கச் சிப்பாய்கள் அமைப்பாகத் திரண்டு (IVAW) இது ஏகாதிபத்திய யுத்தம் என்று பிரகடனம் செய்கிறார்கள். 'என் கணவன் போருக்குச் சென்றிருக்கிறான் என்று என்று பெருமை பேசாதே... சாதனையாளர்களை எண்ணித்தான் பெருமைப்பட முடியும். வேறு வழியில்லாமல் சிக்கிக் கொண்டவர்களைப் பார்த்து யாராவது பெருமை கொள்ள முடியுமா? எங்களுக்காக அனுதாபப் படுங்கள், கண்ணீர் விடுங்கள்" என்று இராக்கிலிருந்து கடிதம் எழுதுகிறார் ஒரு சிப்பாய். 2000 அமெரிக்கச் சிப்பாய்களின் குடும்பத்தினர் 'இராணுவத்தை திரும்பப்பெறு" என புஸ்சை எதிர்த்துப் போராடுகிறார்கள்.


இராக்கிலிருந்து திரும்பிய சார்ஜென்ட் காமிலோ மெஜியோ மீண்டும் இராக் சென்று போரிட மறுத்துச் சிறை சென்றுயிருக்கிறார். கடும் தண்டனை விதித்தால் சிப்பாய்களிடையே கலகம் தோன்றுமோ என்று அஞ்சி ஓராண்டு மட்டுமே தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.


'இராணுவத்தில் சேர்ந்து இராக் செல்லும் மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசம்" என்று ஏழை இளைஞர்களுக்குத் தூண்டில் வீசுகின்றது புஸ் அரசு.'எங்களுடைய போர், களத்தில் துவங்கவில்லை, கல்விக் கூடத்தில் தொடங்கின்றது" என்று கண்டிக்கிறார் இராணுவ ஆளெடுப்பு மையத்தின் அதிகாரி.


ராபின் பான்டன் என்ற 13 வயதுச் சிறுமி... இராக் சென்றிருக்கும் சிப்பாயின் மகள் - அமெரிக்க நடாளுமன்றத்தின் முன் தன்னந்தனியே மறியல் செய்கிறால். 'என் தந்தையை எனக்குத் திருப்பிக் கொடு. ஓரு பொய்க்காக அவர் உயிரை விடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்" என்கிறது அவள் ஏந்தியிருக்கும் முழுக்க அட்டை.


அபு கிரைப்: நாடகம் கூறும் உண்மை


அபு கிரைப் கொல்கத்தாவில் நாடகமாக்கப்பட்டுள்ளது. 'இது கற்பனைக் கதையல்ல, அபு கிரைப் குறித்த மனித உரிமைக் குழுவின் ஆய்வறிக்கை, இராணுவ அதிகாரி அந்தோனியோ தகுபாவின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந் நடகம் தயாரிக்கப்ட்டுள்ளது. கதைமாந்தர்களும் உண்மையானவர்களே" என்கின்றார் நாடகாசிரியர் சங்க்ராம் குகா.


ஒரு நீதிமன்ற விசாரணையைப் போல வடிவமைக்கப் பட்டுள்ள இந்நாடகம், வெறுமனே சித்திரவதையின் மட்டும் சித்தரிக்கவில்லை. 'சித்திரவதையின் நோக்கமென்ன?" என்ற கேள்வியை எழுப்பிக் கீழ்க்கண்டவாறு விடைசொல்கின்றது.


'அபு கிரைப் சிறையில் கைதிகள் அனைவரும் சோதனைச் சாலை எலிகள். சித்திரவதையின் எந்தக் கட்டத்தில் ஒரு கைதி நொறுங்கிப்போய்ச் சரணடைகிறான் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அந்தத் தருணத்தில் அவனுடைய இரத்தத் துளிகள் சோதனைக்கு எடுக்கபடுகின்றன. இரத்தத்தின் மரபணுக் கட்டுமானத்தில் (Genetic
structure
) சித்திரவதை செய்யப்பட்ட மனிதனின் மனதில் உருவான பீதி என்ன விதமான மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது எனபது கண்டுபிடிக்கப்படுகின்றது. சித்திரவதை தோற்றுவிக்கும் இந்தப் பீதியை, மரபணுக் கட்டுமானத்தில் மாற்றம் ஏற்படுத்துவதன் வாயிலாகவே ஒரு கைதியின் மனதில் தோற்றுவித்து விட முடியுமா என்பது அமெரிக்காவில் ஆராயப்படுகிறது. 'இதுதான் நாடகம் சுமத்தும் குற்சாட்டு." புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டம்" என்று அழைக்கப்படும் உலக மேலாதிக்கத் திட்டத்தின் ஒரு அங்கம் தான் அபுகிரைப் சித்திரவதைகள் என்று நிறுவுகிறது நாடகம். இந்நாடகம் எழுப்பும் கேள்வி அதீதமானதோ, கற்பனையானதோ அல்ல, கைது செய்யப்பட்ட சீன மக்களைக் குறுக்கு நெடுக்காகப் பிளந்து பார்த்து அறிவியல் ஆய்வு நடத்தியது ஜப்பான் இராணும். மருத்துவ விஞ்ஞானிகளைப் பயன்படுத்தி இட்லர் நடத்திய ஆய்வுகளை அம்பலப்படுத்தியது 'மருத்துவர்கள்" என்ற ஜெர்மன் நாடகம்.


அமெரிக்கா நடத்தும் உயிரியல் யுத்தம் என்பது விஞ்ஞானக் கதையல்ல, எதார்த்தம். நேற்று வியத்நாம்-- இன்று இராக்.


நன்றி புதியகலாச்சாரம்


Sunday, December 31, 2006

பார்ப்பனீயம் பற்றி ஒரு ஆய்வும், விவாதமும்

பார்ப்பனீயம் பற்றி ஒரு ஆய்வும், விவாதமும்

பி. இரயாகரன்.
01.01.2007


மனித இனம் மற்றொரு புதிய வருடத்தில் கால் பதிக்கின்றது. சமூக மாற்றங்களை கோருகின்ற வருடம். இது ஒரு புரட்சிகர வருடமாக இருக்க, நாம் உழைக்க வேண்டும். அந்த வகையில் புதிய வருடத்தில் வாழும் உங்களுக்கு, எமது கரம் கொடுக்கும் தோழமையுடன் கூடிய வாழ்த்துகள்.


பார்ப்பனீயம் பற்றிய அடிப்படை ஆய்வை நாம் நடத்த முனைகிறோம். இதுபற்றி புனைவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், எதிரி பற்றிய குழப்பங்கள் உள்ளடங்கிய வகையில் உள்ள தெளிவின்மையை நாம் எதிர்கொள்கின்றோம். சாதிய ஒழிப்பு அவசியம் என்றதில் உள்ள தெளிவு, அதைப் பற்றிய உள்ளடக்கம் மீதானதில் தெளிவு கிடையாது.


சாதியம் பற்றிய அதிதீவிரமான கருத்துநிலைப் போக்கு, உள்ளடகத்தில் அறிவியலுக்கு புறம்பாகவே பல சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்படுகின்றது. சாதியம் மனித குலத்துக்கு எதிரானது என்ற வகையில், அதை வேர் அறுப்பது மனிதனின் கடமை. சாதியைக் கடந்த மனிதன் மட்டும் தான், இயற்கையின் மனிதனாக உள்ளான். இதை மறுத்து, இதை பாதுகாக்க விரும்புபவர்களுக்கு எதிரான போராட்டம் தவிர்க்க முடியாதவொன்று.


எதிரி பற்றி சூக்குமமாகவும், பிறப்பை அடிப்படையாக கொண்டும், வெறும் நம்பிக்கைகளின் பின்னால் நின்றும், கற்பனையான புனைவுகளின் பின்னால் மிதக்கும் கருதுகோள்களில் நின்றும் சாதியை ஒழிக்க முடியாது. உதாரணமாக சாதியை பிறப்பை அடிப்படையாக கொண்டு வரையறுகப்படுகின்றது. இது பார்ப்பனீய கோட்பாட்டு விளக்கத்தில் ஒன்று. அதாவது இந்துமதத்தின் அடிப்படை விளக்கமும் கூட. இந்த நிலையில் பிறப்பை அடிப்படையாக கொண்டு, போராடப் போவதாக பாசாங்கு செய்வது நிகழத்தான் செய்கின்றது. அதாவது இந்த சாதியை எதிர்த்து போராட, பிறப்பை அடிப்படையாக கொண்டு, இனப்பிரிவை அடிப்படையாக கொண்டு போராடுவதாக கூறுவது கூட, உள்ளடகத்தில் பார்ப்பனீயம் தான்.


பார்ப்பானாக பிறப்பதும், பார்ப்பனீயமும் ஒன்ற அல்ல. பிறப்பு சாதிய வடிவில் இதன் போக்கில் உள்ளது உண்மை. ஆனால் பார்ப்பனீயத்தை மறுக்கும் பார்ப்பான், தன் சாதியை உதறும் பார்ப்பான் அவனை எப்படி வரையறுப்பது. ஒரு மனிதனாக மாறுவதை எப்படி நாம் வேறுபடுத்துவது! அதை எப்படி செய்யக் கோருவது! இதை நாம் எதிர்நிலையில் கீழ் இருந்தும் காணமுடியும். பிறப்பை அடிப்படையாக கொண்ட பார்ப்பனீய சித்தாந்தத்தை, அதற்கு எதிரான போராட்டத்துக்கு பயன்படுத்த நினைப்பது உண்மையில் பார்ப்பனீயத்தை பாதுகாக்கின்றது.


இந்த பார்ப்பனீயத் தன்மை எதிர்நிலைப் போராட்டத்தில் பல கற்பனை புனைவுகளின் வெளிப்பாடாக மிதக்கின்றது. எதிரியை தவறாகவும், பகுதியாகவும் வரையறுத்து மனிதகுல எதிரிக்கே உதவுவது தொடருகின்றது. இந்த வகையில் சாதியம் பற்றிய ஒரு தெளிவை, சந்தேகங்களை எழுப்பியும், விடை காணமுடியாத புதிர்களை விடுவிக்கவும் விரும்புகின்றோம். உங்கள் பங்களிப்பை இதற்காக எதிர்பார்க்கின்றோம்.


அந்த வகையில்


1. பார்ப்பனீயம் என்பது மனித இனத்துக்கு எதிரானது. ஏன்? ஏப்படி?


2. நாம் பிறப்பை குறித்து பார்ப்பனீயத்தை வரையறுக்கவில்லை. ஏன்?


3. பார்ப்பனீய நடைமுறை உள்ளடகத்தின் வெளிப்பாட்டைத் தான், நாம் எதிராக காண்கின்றோம்.


4. ஆரியர் திராவிடர் என்ற வரையறைக்குள் பாhப்பனீயத்தை பொதுமைப்படுத்துவதை, நாம் எதிர்க்கின்றோம். ஏன்?


5. பார்ப்பானுக்கு எதிர் மற்றைய சாதிகள், என்ற பிறப்பை அடிப்படையாக கொண்ட சாதியக் கோட்பாட்டை நாம் எதிர்கின்றோம். ஏன்?


6. அம்பேத்கார் வருணம் மற்றும் சாதி இரண்டையும் ஒன்றாக காட்டிய, ஒன்றின் நீட்சியாக இந்திய சாதிய ஆய்வு முறையை நாம் மறுதலிக்கின்றோம்.


7. வருணத்தை தொழில் பிரிவினையாக காட்டிய அம்பேத்கார் வாதம் உட்பட, இது போன்ற குருட்டு வாதங்கைள நாம் மறுக்கின்றோம்


8. சாதியம் தோன்ற முன்பு இருந்த நான்கு வருண அமைப்பு என்பது, சாதியத்துக்கு முன்னம் அவை அழிந்து போய்விட்டது. ஒரு இடைக்காலம் நான்கு வருணம் அற்ற அமைப்பாகும். குறிப்பாக பாhப்பனீய வருண அமைப்பு முதல் வருணமாகவே இருக்க முடியாது சிதைந்து, மற்றைய இரண்டாம் முன்றாம் நாலாம் வருணத்துடன் கலைந்து போனது. எதிர்ப்புரட்சி மட்டும் தான், அவர்களை முதன்மை இடத்துக்கு சாதிய வடிவில் கொண்டு வந்தது.


9. தொல்காப்பியத்தில் வருணம் இருந்ததா எனின் ஆம் என்று நாம் தெளிவாக பதிலளிக்கின்றோம். அது இடைச்செருகல் என்பதை மறுக்கின்றோம்


10. சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்ற மிகை வாதங்களை கேள்விக்குள்ளாக்குகின்றோம்.


11. அன்றைய ஆரியர் அல்லது பார்ப்பானே, இன்றைய பிறப்பை அடிப்படையாக கொண்ட பார்ப்பான் என்பதை கேள்விக்குள்ளாக்குகின்றோம். இன்றைய பார்ப்பான், அன்றைய பார்ப்பான் வேறுவேறானவர்கள்.


12. பார்ப்பான் என்ற ஒரு சாதியில் பிறந்தவர்கள என்பதால், அவர்களை பார்ப்பனீயமாக பொதுமைப்படுத்தி வகைப்படுத்துவதை நாம் மறுக்கின்றோம். பார்ப்பனீயம் பிறப்புக்குள்ளும், வெளியிலும் இயங்குகின்றது.


14. சிந்துவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்பதை நாம் மறுக்கின்றோம். ஏன்?


15. இந்திய சமூக அமைப்பை வருண மற்றும் சாதிய அமைப்பு என்ற எடுகோளில் பின்னால், வர்க்க அமைப்பு எங்கே போனது? இந்திய சமூக அமைப்பு வர்க்க அமைப்பாக இருக்கவில்லையா? இந்த கேள்வி அவசியமற்றதா?


16. புத்தன் பார்ப்பனீயத்தை எதிர்த்தான் என்பதை நாம் கேள்விக்குள்ளாக்குகின்றோம். புத்தன் எதை மறுத்தான், எதை பாதுகாத்தான் என்பதை தெளிவாக முன்வைக்க முனைகின்றோம்.


17. சாதியம் எப்படியான எந்த சந்தர்ப்பத்தில் ஏன் தோன்றியது? என்பதை நாம் ஆராய முனைகிறோம்.


18 .பார்ப்பான் என்ற சாதி, சாதிய தோற்றத்தில் என்ன பங்கு வகித்தது என்பதை தெளிவுபடுத்த முனைகின்றோம்.


19. இந்து மதம் என்பது என்ன என்பதை வரையறுத்துக் காட்ட முனைகின்றோம்.


20. ஆபிரிக்காவில் சாதி உள்ளது என்ற வாதங்களை, நாம் மறுதலிக்கின்றோம்.


21. இந்து மதம் வேறு, பார்ப்பனீயம் வேறு என்பதை அதாவது இதில் சாதி வேறு என்பதை மறுதலிக்கின்றோம்.


22. சாதிய சமூக அமைப்பு விதியை, அதன் சித்தாந்த கோட்பாட்டை பார்ப்பனீயமே உருவாக்கியது. அதாவது பார்ப்பனீயம் எந்த சாதிக்கு முதன்மையாக சேவை செய்கின்றதோ, அந்த சாதியின் கோட்பாடே சாதியம். இது அந்த சாதியை குறிக்கின்றதே ஒழிய, அதில் உள்ள நபர்களையல்ல. யாரெல்லாம் சாதியை வெறுத்து, சாதிக்கு வெளியில் சாதியை துறந்து, தனது அடையாளத்தை இழந்து வாழ முற்படுகின்றனரோ, அவர்களை இது உள்ளடக்காது. யாரெல்லாம் சாதியை கொண்டு அப்பிறப்பைக் கொண்டு சாதியாக வாழ்கின்றனரோ, அவர்களை இது மறுதலிப்பதில்லை. இது ஒடுக்குகின்ற சாதிகளில் பார்ப்பனிய சாதிக்கு மட்டும் குறுக்கிப் பொருந்தாது.


23. நான் பிறந்த சாதியை பார்ப்பனீயமாக வகைப்படுத்துவதை எதிர்க்க வேணடுமென்றால், சாதியை துறந்து ஒரு மனிதனாக வேண்டும்.


24. பார்ப்பனீயம் பார்ப்பான் சாதியைக் கடந்து காணப்படுகின்றது.


இப்படி பலவற்றை நான் எழுதி வரும் நூலினுள் விவாதிக்கின்றேன். இப்படி 50க்கு மேற்பட்ட தலைப்புகள். பெரும்பகுதி முடிந்த நிலையில் உள்ளது. எனது ஆய்வுகள் ஒரு அதிர்வை, அதிர்ச்சியை உண்டாக்கத்தக்கன.


உண்மையில் கடந்தகால நம்பிக்கைகள், ஆய்வுமுறைகள், சமூகத்தின் பிளவு மீதான ப+டகமான எடுகோள்கள், போராட்ட வழிமுறைகள், என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க முனைகின்றேன். சாதிய அமைப்பை புதிய முறையில், முன்னைய ஆய்வுக்கு மாறாக முன்வைக்கும் எனது ஆய்வு முறைக்கு, உங்கள் விவாதத்தினூடான பங்களிப்பை கோரி நிற்கின்றேன். உங்கள் கேள்விகள் மற்றும் பதில்கள், உங்கள் விவாதங்கள் மற்றும் மறுப்புகள், சந்தேகங்கள் மற்றும் தெளிவாக்கல் மூலம் நீங்களும் பங்களிக்க முடியும். நான் எனது முயற்சியை விவாதத்துக்காக உங்கள் முன் முன்வைப்பதன் மூலம், இந்த நூலுக்கு உதவும் வகையில் குறிப்புகள், தரவுகள், வாதங்களையும் முன்வைத்து கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி, அவற்றை விவாதிக்க அழைக்கின்றோம்.


தனி நூலுக்கான எனது இந்த முயற்சியில் 150 பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டது. 50 மேற்பட்ட தலைப்பை உள்ளடக்கிய இந்த நூல், இந்தியாவில் வெளியிடப்படும். நூலின் உள்ளடக்கம் விவாதம் மூலம் வளம்பெறும் என்ற வகையில், உங்கள் முன் பல பகுதிகளாக இம் மாத இறுதிக்குள் முன்வைக்க உள்ளேன்.


எனது கட்டுரையின் உள்ளடக்கம் புத்தகம் வெளிவரும் வரை, தொடர்ச்சியான திருத்தத்துக்கும், இணைப்புக்கும், நீக்கத்துக்கும் உள்ளாகும். அதேபோல் கட்டுரையின் தலைப்பு, கட்டுரைகள் வரவேண்டிய இடம், கட்டுரையின் உள் மேலும் கீழுமாக இடம்மாறும். அந்த வகையில் இவை தொடர்பான எனது கற்றலும், உங்கள் ஆக்கபூர்வமான விவாதமும் இதற்கு உதவும். இந்த வகையில் உங்கள் தர்க்கங்கள், வாதங்களையும், ஆலோசனைகளையும் கூட எதிhபார்க்pன்றேன்.


இந்த நூலை எழுதத் தூண்டியது இலங்கை சாதியப் போராட்டம் தொடர்பான எனது மற்றொரு நூல் தான். சண்முகதாசன் தலைமையிலான கட்சி நடத்திய சாதிய போராட்டத்தின் தோல்விகள் வெற்றிகளை பற்றி எனது நூல் முழுமைபடுத்த முடியாத வகையில் சாதியம் பற்றிய வரலாற்றுப் பார்வை குறுக்கிட்டது.


1. சண் தலைமையிலான கட்சியின் மார்க்சிய பார்வை தவறுகள்


2. சண் தலைமையிலான கட்சி முன்னெடுத்த சாதியம் பற்றிய அடிப்படைக் கோட்பாடு


அம்பேத்கரின் தவறு இலங்கை சாதிய போராட்டத்திலும் தவறாக வழிநடாத்தியுள்ளது. இலங்கை சாதிய நூலின் வெளியீட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி, இந்திய சாதியம் பற்றிய ஆய்வுகள் மீதான இந்த நூலை ப+ர்த்தி செய்ய உள்ளேன்.


நான் பார்ப்பனீயத்தின் எதிரி என்றவகையில் இந்த விவாதத்தை எழுதும் போது, பிறப்பை அடிப்படையாக கொண்டு எதிரியை வகைப்படுத்தவில்லை. பிறப்பு தற்செயலானது என்ற வகையிலும், பார்ப்பான் சாதியில் பிறப்பவர் பார்ப்பனீயத்தை பிரதிநிநித்துவம் செய்வர் என்பதை ஒரு எடுகோளாக கொள்வதையும் நான் அங்கீகரிக்கவில்லை. பார்ப்பனீய சிந்தாந்தம், அதன் நடைமுறை அம்சம், அதைக் கொண்டு நியாயப்படுத்தி வாழும் பிரிவுகளே, இந்த மனித குலத்தின் எதிரிகள்.


சாதியம் சித்தாந்த ரீதியானது, அதையொட்டிய நடைமுறை சார்ந்தது. சாதியம் பிறப்பை அடிப்படையாக கொண்டதை பார்ப்பனீயமாக வகைப்படுத்துகின்றது என்ற பொது சாதிய விதியை, அப்படியே போராட்டத்தில் பயன்படுத்துவது என்பது மற்றொரு பாhப்பனீயம் தான். பார்ப்பனீயத்தையே மறுகையில் தாங்கிக் கொண்டு, முதல்கையுள்ள பார்ப்பனீயம் மீது தட்டுவதுதான். மாறாக மனிதன் என்ற வகையில் நின்று தான் இந்த விடையத்தை அணுக முனைகின்றோம்.


இந்த வாதத்தில் பார்ப்பனீயம் சரி என்பதை யாராவது முன்வைப்பார்கள் என்றால், அதற்கான அடிப்படைக் காரணத்தை விளக்குமாறு கோருகின்றோம் ஏன்?, எதனால்? எப்படி?


1. பொருளாதார காரணமா!


2. சாதிய சமூக அந்தஸ்தா!


3. சாதிய பிறப்பா!


4. அல்லது எது?


இதை எந்த வகையில் மனித குலத்துக்கு முரணாக அல்லது சார்பாக நீங்கள் முன்வைத்து எப்படி சரியானது என்கின்றீர்கள்?


இந்தவகையில் இந்த விவாதத்தளம் மூலம் அல்லது எனது ஈமெயில் மூலம்mailto:tamilcircle@tamilcircle.net நீங்கள் பற்பல வழிகளில் உதவமுடியும்.


எமது தளத்தில் இடப்படும் கருத்துகள் நேரடியாக வரமுடியாத வகையில் உள்ளதால், அதை அனுமதிக்கும் வரை நீங்கள் காத்திருக்கவும். கருத்து அல்லாத தனிமனித தாக்குதல் மட்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. கருத்துகள் என்ற வகையில் உள்ள அனைத்தும் அனுமதிக்கப்படும். அடிப்படையான தர்க்கவாதங்களை, உங்கள் நியாயங்களை விளக்கும் வகையில், உங்கள் கருத்துக்களையே நாம் விரும்புவது இயல்பு அல்லவா! ஆமாப் போடுவது விவாதத்தக்குரிய நடைமுறையல்ல.


முஸ்லீம் விரோதிகளே ஒரு கணம்

முஸ்லீம் விரோதிகளே ஒரு கணம்


நடுநிலையா அது என்ன? அப்படி உலகில் எதுவும் கிடையாது. உங்கள் கருத்தில் கூட!

சாதம் அன்று விஷவாயு மட்டுமல்ல, எந்தனையோ கொலைகளை செய்தபோது அதற்கு துணை நின்று யார்? நாங்களா இல்லயே! மூஸ்லீமா இல்லை! யார்? அமெரிக்கா தான். அதன் அருவடி விசுவாசிகளும் தான்.

ஈரான் அமெரிக்காவின் பொம்மையாக இருந்த பாசிட் மன்னனுக்கு பின்னால் நின்றதும் அமெரிக்க தான். அங்கு நடத்த கொலைகள் எத்தனை ஆயிரம். அந்த மன்னனுக்கு பின்னால் பாதுகாப்பு வழங்கியது யார்? எங்கே உங்கள் நீதி எங்கே போனது? ஐயோ உங்கள் ஜனநாயகம்?

பின் ஈரான் பழிவாங்க முகமாக ஈராக் மூலமான தாக்குதலை நடத்தியது யார்? நாங்களா? முஸ்லீமா? இன்று இதே குருடிஸ் இனமக்களின் மற்றொரு பகுதிக்கு எதிராக துருக்கி நடத்துதும் படுகொலைக்கு பின்னால் யார் உள்ளனர்? முஸ்லீங்களா? இல்லை. அதே அமெரிக்கா தான். சிலி, வியட்நாம்? பிலிப்பைன்ஸ் எத்தனை ஆதார வேண்டும்?.

சாதம் கொன்ற போதும் அவருக்கு வராத முஸ்லீம் உணர்வு, உங்களுக்கு எதிர்ப்பதற்கு வருகின்றது. எல்லாம் முஸ்லீம் என்று கண்ணை குறுக்கி குறண்டி பார்ப்பது அறிவு கெட்ட தனம். குறைந்த பட்சம் நடுநிலைத்தன்மை என்று நீங்கள் கருதும் உங்கள் அருகதை கூட உங்களுக்கு இல்லாமல் போகின்றது.

சமூகத்திதை பார்பனீயத்தின் ஊடாக பார்த்தல் எல்லாம் காவியாகத் தான் தெரியும். மலைக்கண் நோய் போல் இது காவி நோய். முதலில் மனிதனாக பார்க்க பழகுங்கள்.

மனித குலத்தின் எதிரிகளை மக்கள் மன்னிக்க மாட்டர்கள். குறுக்கி குருட்டு கண் மட்டும் தான் அதற்குள் இழிவாடி வாழ்கின்றது.

அன்று சாதம் அந்த மக்களை கொண்ற போது அதை எதிர்த்தவர்கள் நாங்கள். அன்று அதை ஆதாரித்தவாகள் இன்று போல் அன்றும் அமெரிக்கா விசுவாசிகள் தான். முஸ்லீம் விரோத உணர்வுடன், காவிக் கண் பார்த்தால் எல்லாம் பார்பனீயமாக தெரிவது ஆச்சரியமன்று. அதனால் தான் பார்பனீயம் அமெரிக்கா மயமாகின்றது.

பி.இரயாகரன்
31.12.2006

கூலிக் கும்பல் வழங்கிய மரண தண்டனை

கொலைகார கொள்ளைக்காரர்களின் கூலிக் கும்பல் வழங்கிய மரண தண்டனை


ஈராக்கில் உள்ள ஆக்கிரமிப்புப்படை ஓரு நிமிடம் விலகினாலேயே, ஆட்சியில் நீடிக்க முடியாத ஒரு கூலிக் கும்பலின் பெயரில், சதாமுக்கு வழங்கிய மரணதண்டனை. அமெரிக்கா மற்றும் பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்கள் ஊதும் மகுடிக்கு ஏற்ப ஜனநாயக வேசம் கட்டி ஆடுபவர்கள் தான் இன்றைய ஈராக்கிய ஆட்சியாளர்கள். அமெரிக்காவின் டொலரைக் கொண்டு கூலிப் பொலிஸ் படையை வைத்துக் கொண்டு, அமெரிக்கா இராணுவத்தின் துணையில் மனித வேட்டை நடத்துகின்றனர்.


இப்படி வளர்ப்பு நாயாக பழக்கி வளர்க்கப்பட்ட ஒரு கொலைகாரக் கும்பல் தான் ஆட்சியில் உள்ளது. ஜனநாயகம் கிலோ என்ன விலை என்று விலைபேசி விற்பவர்கள். இவர்களின் நாய் வேசம் இன்றைய ஏகாதிபத்தியங்களின் கொலையையும், கொள்ளையையும் பார்த்து வாலாட்டுவது தான். இதுதான் இவர்களின் ஜனநாயகம் கூட.


இந்த ஜனநாயகம் தான் உருவாக்கிய சர்வதேச விசாரணைக்கே சதாமை உட்படுத்த மறுத்தது. உலக நீதிமன்றம், உலக ஜனநாயகம் பேசும் இவர்கள் நடத்திய கூட்டுச் சதிதான், இந்த மரணதண்டனை. உலகின் குற்றவாளிகள் சேர்ந்து நடத்திய கொலைதான், இந்த மரணதண்டனை.


சொந்தக் கொலைகார முகம் உலகுக்கு தெரியக்கூடாது என்பதால் கமுக்கமாக நடத்திய விசாரணை நாடகத்தின் முடிவு, முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. புஸ்சின் கொலைவெறித் தனம் தான், உலக மக்களின் எதிர்ப்பை மீறி கொன்று போட்டது.


ஈராக் எண்ணை வயல்களில் காய்க்கும் டொலர் நோட்டுக்களை அள்ளிச் செல்லும் அமெரிக்காவின் ஆளும் கும்பல், நடத்துகின்ற தொடர் மனித வேட்டைகளில் சதாமும் ஒருவர்.


இதன் மூலம் உலகை அடிமைப்படுத்திவிடலாம் என்று நம்புகின்ற அதிகார வர்க்கத்தின் திமிர், இது போன்ற வக்கிரங்களால் மக்களை அடிமைப்படுத்திவிட முடியாது. கொள்ளையும் கொலையுமாக மக்களின் உழைப்பையே சூறையாடித் தின்னுகின்ற இந்த ஜனநாயகம், மக்களின் அதிகாரம் நிறுவப்படும் போது தகர்ந்தேபோகும்.


அன்றாடம் கொலையை கேட்டும், தெரிந்து வாழ்கின்ற துரதிஸ்டவசமான எமது நிலையில், சதாமின் கொலை ஒரு கணம் அதிரவைத்தது.


ஒருபுறம் ஆத்திரம், கோபம் ஒருங்கே எழுகின்றது. மக்களை ஏமாற்றி நடத்தும் சதிகளுக்கு எதிராக, இந்த கொலைகார ஏகாதிபத்தியத்தை பழிவாங்க வேண்டும் என்ற அவா இயல்பாகவே எழுகின்றது. மக்களின் மண்டையோடுகளை அடுக்கி அதன் மேல் நடாத்தும் அராஜகமே இது. மக்களை கொள்ளையடித்து மாடமாளிகைகளை கட்டுகின்ற இந்த வக்கிரத்தை, மன்னிக்கவும் மறக்கவும் முடியாது.



சர்வதேச குற்:றங்களின் மொத்த ஊற்று மூலம் இந்த ஏகாதிபத்தியங்கள் தான். சதாமுக்கு பிந்தைய ஈராக்கில் நடந்த குற்றங்களின் அளவுக்கு, சதாம் குற்றம் இழைக்கவில்லை.


இலட்சக்கணக்கான மரணத்தில் தான் அமெரிக்க ஆட்சியாளர்களின் வங்கிக் கணக்குகள் வீங்குகின்றது. அமெரிக்காவை ஆளுகின்ற ஒரு ரவுடியின் தனிப்பட விரும்பம் கூடத்தான் இந்த மரணதண்டனை.


சதாம் போன்ற சர்வாதிகார மக்கள் விரோதிகள் உலகில் பலர் உள்ளனர். அவர்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் தான் இயங்குகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஜனநாயக நாய் வேசம் போட்டு ஆட்டுவிக்கும் ஏகாதிபத்தியங்கள், சதாம் போன்றவர்களைக் கொண்டு தான் உலகையே ஆளுகின்றனர்.


சதாம் ஆட்சியின் பின்னால் இருந்ததே அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் தான். பற்பல தொடர் கொலைக்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கியது அமெரிக்கா தான்.


வளர்ப்பு நாயை உறும அதையே எஜமான் வேட்டை ஆடுவதுபோல், சதாமும் வேட்டையாடப்பட்டவர். வேட்டை ஆடுவது நாயின் தொழில். ஆட்டுவிப்பது எஜமான் தொழில். இதைத்தான் அமெரிக்கா செய்தது. பழைய நாயை, புதிய நாயைக் கொண்டு வேட்டை ஆடினர்.


இந்தப் படுகொலையை நியாயப்படுத்த ஒரு நீதிமன்றம்;. அன்று ஈராக்கை ஆக்கிரமிக்க அமெரிக்கா பொய்யையும் புரட்டையும் சொல்லி ஐ.நாவையே விபச்சாரம் செய்தவர்கள். இன்று நீதியின் பெயரில் அதை மீண்டும் செய்துள்ளனர். இது அமெரிக்க ஜனநாயகம்; மட்டுமல்ல சுதந்திரமும் கூட. இதுவே உலகினதும் என்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இதை எப்போது மக்களாகிய நாம் கணக்கு தீர்க்கப் போகின்றோம்.





இந்த பாசிச அமெரிக்காவை, அதன் சுதந்திரத்தை, அதன் ஜனநாயகத்தை விரிவாக தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்புகளை அழுத்துக.


மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்





1. வியட்நாம் மைலாய்! ஈராக்கில் ஹதிதா! அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்


2. வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்


3. அமெரிக்காவின் போர் குற்றங்கள:; அன்று வியட்நாம் இன்று ஈராக்


4. அமெரிக்கர்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு தாயின் போராட்டம்!


5. அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் அல்லற்படும் ஈராக்கிய மக்கள்


6.அபு கிரைப் சித்திரவதையின் நோக்கம்