தமிழ் அரங்கம்

Saturday, March 4, 2006

புலிகள் மீதான ஏகாதிபத்திய உத்தரவுகளே

புலிகள் மீதான ஏகாதிபத்திய உத்தரவுகளே,
புலியெதிர்ப்பு கும்பலின்
(ஜனநாயக) கோசமாகின்றது

பி.இரயாகரன்
02.03.2006



எமது விமர்சனத்தின் தன்மையையொட்டி புலியெதிர்ப்பு அணியினர் எம்மீது ஆத்திரம் கொள்கின்றனர். தமது மோசடி அம்பலமாவதால், கண்ணை மூடி ஆதரித்த தமது அணிகள் விழிப்புற்று கேள்வி கேட்பதால் இது ஆத்திரத்தை உண்டாக்குகின்றது. அவர்கள் புலிகள் தான் இன்று பிரச்சனை என்கின்றனர். புலியெதிர்ப்பு அணியை அம்பலப்படுத்துவது, புலியைப் பலப்படுத்துவது என்கின்றனர். அத்துடன் தம்மை புலிக்கு ஒப்பிடுவது தவறுறென்று கூற முனைகின்றனர். நாங்கள் புலிகளைப் போல் கொலை செய்தோமா என்று வினா தொடுக்கின்றனர். புலியைவிட குறைவாகத்தானே நாங்கள் செய்தோம் என்றும் விவாதிக்க முற்படுகின்றனர். அத்துடன் புலிசார்பு, புலியெதிர்ப்பு இரண்டையும் ஒன்று கலந்து எழுத வேண்டாம் என்று, அவர் அவரவர் சார்பு நிலைக்கு ஏற்ப கோருகின்றனர்.

எமது விமர்சனம் புலியெர்ப்பு அணியின் (புலி) அரசியல் தளத்தையும், அதன் மீதான கண்மூடித்தனமான வழிபாட்டையும் தகர்க்கத் தொடங்கியுள்ளது. இதனால் கடும் விமர்சனத்தையும், வன்மமிக்க எதிர்ப்பையும் காட்டுகின்றனர். இதில் இருந்தே தமது அரசியல் நிலையை தக்கவைக்க என் மீது தனிப்பட்ட அவதூறுகளை கூறி தப்பிக்க முனைகின்றனர். ஆனால் நாம் அவர்களின் மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்துவதில் உறுதியாகவே உள்ளோம். இதை நாம் ஏன் செய்யவேண்டியுள்ளது. மக்கள் நலனை முன்னிறுத்தாத எதையும் நாம் கடுமையாக விமர்சிப்பதை கோருகின்றோம். மக்களை நலனை முன்னெடுக்கும் குறைந்தபட்ச எந்த முயற்சியையும், அது எவ்வளவுதான் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அதை நாம் நட்பு ரீதியாகவே அணுகுகின்றோம்.

ரி.பி.சியைச் சுற்றியுள்ள புலியெதிர்ப்புக் கும்பல் மக்கள் நலனை முன்னெடுக்கின்றதா? இதை அரசியல் ரீதியாக யாராவது நிறுவும் பட்சத்தில், நாம் அவர்களுடன் அதைப்பற்றி பேசமுடியும். புலிகளை எதிர்ப்பது மட்டும் தான் புலியெதிர்ப்பு அரசியலாக உள்ளதால், நிச்சயமாக இந்த அரசியல் மற்றொரு புலியையே உருவாக்கும். எமக்கு ஒரு புலியே போதும். எமது மக்கள் படும் துன்பம் போதும் போதுமென்றாகிவிட்டது. மற்றொரு புலி உருவாகுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்.

புலிகளின் பாசிசம் மக்களின் வாழ்வை துன்புறுத்துகின்றது என்பது உண்மை. ஆனால் அதை மட்டும் தன்னளவில் எதிர்ப்பதுடன் ஒரு மனிதன் நிறுத்திக் கொள்வானேயானால், அதை நாம் விமர்சிக்க முற்படவில்லை. அது அவனின் சொந்த வாழ்வின் வெளிப்பாடாகவே உள்ளது. ஆனால் புலியெதிர்ப்பு அணி அப்படி அல்ல. புலியெதிர்ப்பின் அரசியல் என்ன? புலியை எதிர்க்கும் அனைவருடனும் ஒன்று சேருகின்றது. புலியை எதிர்க்கும் சிங்களப் பேரினவாதம், பிராந்திய வல்லரசான இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை இவர்களின் அணியில் இணைந்து கொள்கின்றனர். இது இயல்பில் தமிழ் மக்களின் நலனை நிராகரிக்கின்றது. புலியை எதிர்க்கும் ஏகாதிபத்திய நலன்களுக்கு துணை போவதே, புலியெதிர்ப்பு அரசியலாகி விடுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான எல்லாவிதமான முயற்சியையும் நாம் எதிர்ப்போம். இதை அம்பலப்படுத்தும் அதேநேரம், ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் முன்முயற்சிகள் அனைத்தையும் தகர்ப்பது எமது இன்றைய பணியாக எம்முன்னுள்ளது.

இந்த ஏகாதிபத்திய சார்பு புலியெர்ப்பு அரசியல், புலியின் அரசியலைவிட மிக மோசமான ஒன்றாகவே நிச்சயமாக உள்ளது. புலிகள் இனம் காணப்பட்ட தெரிந்தெடுத்த அழித்தொழிப்பையே செய்கின்றார்கள். (தனிப்பட்ட ரீதியில் எம்போன்றவர்களுக்கும் கூட விதிவிலக்கின்றி அது பொருந்துகின்றது.) ஆனால் புலியெதிர்ப்பு அரசியல் இராணுவமயமாகும் போது, ஒட்டு மொத்த மக்களையும் அதன் வாழ்வாதாரங்களையும் அழித்தொழிக்கும். முன்பு இந்திய ஆகிரமிப்பாளனுடன் களமிறங்கிய முன்னாள் புலியெதிர்ப்பு கும்பல்கள் இதைத்தான் செய்தது என்பதை, எமது வரலாறு இரத்த சாட்சியமாக்கியுள்ளது. இதைவிட இன்று புலியெதிர்ப்பு பேசுபவர்கள் எதைத்தான் செய்வார்கள்.

எமது மக்களின் பிரதான எதிரி புலிகள் அல்ல. மாறாக பேரினவாத அரசும், இந்தியாவும், ஏகாதிபத்தியங்களும் தான். இதனுடன் எந்த கூட்டு அரசியல் முயற்சியையும் நாம் அனுமதிக்க முடியாது. அதை நோக்கி அணிதிரளும் அனைத்தையும் அம்பலப்படுத்தி, அரசியல் ரீதியாக மக்களை வழிகாட்டுவது எமது வரலாற்றுக் கடமையாகும்.

இன்று புலியெதிர்ப்பு அணியில் உள்ளவர்கள், நாம் மக்களை அணிதிரட்ட முடியாத நிலை உள்ளது என்கின்றனர். மக்களை அணிதிரட்டும் சூழலை உருவாக்க முதலில் புலிகளை அழிக்கவேண்டும் என்கின்றனர். இதற்கு ஏகாதிபத்தியத்தின் துணையைத் தான் நாட வேண்டியுள்ளதாக, தனிப்பட்ட உரையாடல்களில் கூறுகின்றனர். இதை பகிரங்கமாக முன்வைக்க அவர்கள் முன்வருவதில்லை. மக்கள் முன் இதைப்பற்றி பகிரங்கமாக விவாதிக்கவும் தயாராக இல்லை. புலியைப் போல் மக்களை ஏமாற்றவே விரும்புகின்றனர். புலிப் பாசிசத்தை ஒழிப்பதில் தமிழ் மக்கள் பங்கு பற்ற மாட்டார்கள் என்ற நிலைப்பாடும், மக்களைக் கொண்டு இது சாத்தியமில்லை என்ற நிலைப்பாடும் புலியெதிர்ப்பு அணியின் மைய அரசியல் நிலைப்பாடாகவேவுள்ளது. அப்படியாயின் யாருக்காக எதற்காக நீங்கள் போராடுகின்றீர்கள்.

ஆனால் இதற்கு வெளியில் மக்கள் தமது வாழ்க்கைக்காக போராடவேண்டியுள்ளது. இதனால் உங்களுக்கு எதிராகவும் மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லாததாகி விடுகின்றது. நீங்களும் மக்களுடன் இணைந்து நிற்க மறுத்து ஏகாதிபத்திய துணையை நாடுவதால், இயல்பாகவே நீங்களாகவே மக்களின் எதிரியாகி விடுகின்றீர்கள். மக்கள் அன்றாடம் தமது வாழ்வுக்காக போராடுகின்றனர் என்ற உண்மையை இவர்கள் மூடிமறைக்கவே விரும்புகின்றனர்.

உண்மையில் புலியெதிர்ப்பு என்ற பெயரில் நீங்கள் செய்வது, மக்களுக்கு வெளியில் அன்னிய சக்திகள் மூலம் புலிப் பாசிசத்தை ஒழிப்பது என்றதன் பெயரில், மற்றொரு பாசிசத்தையே உங்கள் தலைமையில் ஏற்படுத்த முனைவதுதான். இதற்கு உலகத்தில் மக்கள் தலையீடற்ற அனைத்து வரலாறும், மிகத் தெளிவாகவே விதிவிலக்கின்றி பதிலளிக்கின்றது. மக்கள் தீர்மானிக்காத அனைத்து மாற்றங்களும், அந்த மக்களுக்கு எதிரானது தான். மக்கள் தான் தமக்கு எது தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும். இல்லாத அனைத்தும் மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே.

அண்மையில் பிரிட்டின் மற்றும் சுவிஸ்சில் (ஜெனிவாவில்) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில், வைக்கப்பட்ட கோசங்கள் அனைத்தும் புலி பற்றிய ஏகாதிபத்திய அரசியல் நிலைப்பாட்டுடன் முரண்படாத வகையில் தெரிவு செய்து வைக்கப்பட்டுள்ளது.

அரசும் மக்களை ஏமாற்றுவதை கண்டிக்கின்றோம்.பேச்சுவார்த்தை உண்மையான சமாதானத்திற்காக நடைபெற வேண்டும்.

புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னரும் முன்பும் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு புலிகளின் சித்திரவதை முகாம்களில் தடுத்து வைத்திருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

புலிகள் அமைப்பு கொலை, ஆட்கடத்தல், சிறுவர்களை பலாத்காரமாக படையணியில் இணைத்தல் போன்றவற்றை உடன் நிறுத்த வேண்டும்.

இலங்கை அரசே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் புலிகளிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் களையப்பட்டு அனைத்து ஜனநாயக அரசியல் கட்சிகளையும் சுதந்திரமாக இயங்குவதற்கு வகைசெய்ய வேண்டும்
.



மக்களின் பெயரில் யுத்தம் வேண்டாம்.

வேண்டும் வேண்டும் நிரந்தரத்தீர்வு

இனவாதப் பருப்பு இனி அவியாது

அரசியல் வாதிகளே இனவாதத்தீயில் குளிர்காயாதீர்கள்

சாவது மட்டுமல்ல வாழ்வதும் ஒருமுறை தமிழனும் வாழப்பிறந்தவன்

வேண்டாம் வேண்டாம் யுத்தம் வேண்டாம்

தேவை தேவை அரசியல் தீர்வு

சேர்க்காதே, சேர்க்காதே சிறுவர்களை படையில் சேர்க்காதே


இவை தான் இவர்கள் வைத்த கோசங்கள்.

குறித்த இக் கோசங்களையே மக்கள் நலன் சார்ந்தாக காட்டப்படுகின்றது. அப்படி உள்ளதாகவே பொதுவாக பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் ஏகாதிபத்தியம் சார்ந்ததாகவும், இது அவர்களின் கோரிக்கையாக, புலியை நோக்கிய நிபந்தனையாகவும் உள்ளது.

இந்தக் கோசங்கள் அனைத்தையும் இன்று ஏகாதிபத்தியம் புலியிடம் நிபந்தனையாக வைக்கின்றது.இதையே புலியெதிர்ப்பு அணியினர் மீண்டும் தமிழ்மக்களிடம் கோசமாக்கி வைக்கின்றனர்.

இக் கோசங்களை வைத்தவர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, தமிழ் மக்கள் நலன் சார்ந்த கோசங்களை முன்வைப்பதில்லை.

இவர்கள் மக்கள் நலன் சார்ந்த கோசங்கள் எதையும் முன்வைக்கவில்லை
.

இப்படி ஒரு அரசியல் மோசடியைச் செய்கின்றனர். தமிழ் மக்களின் பெயரில் ஏகாதிபத்தியத்திடம் தலியீட்டைக் கோருகின்றனர். இதைபோல் தான் புலிகள் பேச்சுவார்த்தை சமாதானம் என்று நடத்தும் அனைத்து அரசியல் திருகுதளங்களின் போது மக்கள் நலன் எதையும் முன்வைப்பதில்லை. புலியெதிர்ப்பு அணியும் மக்கள் நலனை தனது கோசமாக்கி அந்த அரசியலாக முன்னிறுத்தவில்லை. மாறாக ஏகாதிபத்திய நலனை அடிப்படையாக கொண்ட மக்களின், ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர்.

இதை நாம் நுட்பமாக புரிந்து கொள்வதற்கு, புலிகள் ஏன் ஜனநாயக மீறலைச் செய்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. புலிகள் ஏன் கொலைகளையும், சித்திரவதைக் கூடங்களையும் அடிப்படையாக கொண்டு மக்களை அடக்கியாளுகின்றனர். இந்தக் கேள்விக்கு விடையளிக்காத, விடையைத் தெரிந்து கொள்ளாத வரை, உண்மையைக் கண்டு கொள்ள முடியாது. இதை அரசியல் ரீதியாக விளக்காத அனைத்தும், மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே.

மக்களுக்கு எதிரான அடக்குமுறையை ஏவுவதற்கு, அவர்களுக்கென்று விசேட மனநோய் எதுவும் கிடையாது. மாறாக அவர்கள் ஏன் இப்படிச் செய்கின்றனர். அதிகாரம், தனியாக தாம் மட்டும் என்ற கோரும் பாசிச உள்ளகத்தில் புலிகள் இதை கையாளுகின்றனர் என்றால், ஏன். இதன் பின் என்ன நலன் உள்ளது. பொருளாதார நலன்களை தாம் மட்டும், நெருக்கடி இன்றி அனுபவிக்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணம் தான் அனைத்துக்குமானது.

இதை நாங்கள் நடைமுறையில் பார்க்கலாம். சமாதானம் அமைதி என்ற போர்வையில் முக்கிய தளபதிகளில் உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் நிரந்தரமாகவே வந்து தங்கிவிட்டனர். இப்படி நோர்வேயில் பல நூற்றுக்கணக்கானோர். இதுபோன்று பல்கலைக்கழகங்களில் பல நூறு பேர். இது ஒருபக்கம் என்றால் மறுபக்கத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான பைரோ ஜீப்பில் தளபதிகள் திரிகின்றனர். ஒரு கோடி ரூபா பெறுமதியான பைரோவில் திரியும் இவர்களின், தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும். இதை எப்படி அவர்களால் இழக்க முடியும். இதனாலேயே வன்முறை கட்டவிழ்க்கப்படுகின்றது. கருணா தனது பிளவில் இந்த ஆடம்பர வாழ்வைச் சொல்லிதானே புலம்பினான். எங்களுக்கு பங்கில்லையா என்றான்.

ஆடம்பரமான வாழ்விலும் விருந்துகளில் ஈடுபட்டாலும் சரி, உழைப்பில் ஈடுபடாது பல ஆயிரம் பேர் உண்டு கொழுக்கின்ற சொந்த வாழ்க்கையை பாதுகாக்கவே அதிகாரம் அவசியமாகிவிடுகின்றது. வெளிநாட்டில் பல புலிகள் உழைப்பில் ஈடுபடாது, உழைப்பில் ஈடுபடுபவனைவிட மிக உயர்ந்த வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த சொகுசு வாழ்க்கையை பாதுகாப்பதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராகவே உள்ளனர். இதுதான் வலதுசாரிய புலிப் பாசிசம்.

மனிதர்களை சுரண்டி வாழ்வதற்கு அடக்குமுறை அவசியமாகிவிடுகின்றது. சொகுசாக உழைப்பில் ஈடுபடாது செல்வத்தை இலகுவாக நுகரும் அமைப்பில், அதை கட்டி பாதுகாக்க வன்முறை அவசியமாகிவிடுகின்றது. மக்கள் தமது உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யும் வற்றாத செல்வத்தை அபகரிப்பதற்கே தேசியம் அவசியமாகின்றது. இதைப் பாதுகாக்க வன்முறை அவசியமாகின்றது. இந்த எல்லைக்குள் தான் தேசியம் திக்குமுக்காடுகின்றது.

போராட்டத்தை நிறுத்தி சமாதான நாடகமாடி செல்வத்தை அன்னியனிடம் பெற்றாலும் சரி, மக்களை உருட்டி மிரட்டி அபகரித்தாலும் சரி, வரிகள் என்று மனித உழைப்பை அறவிட்டாலும் சரி, போராட்டம் தேசியம் என்று வசூலித்தாலும் சரி, பணம் தான் தேசியத்தின் இலட்சியப+ர்வமான கனவாகிவிட்டது.

இந்தப் பணம் பல ஆயிரம் பேர் உழைப்பில் ஈடுபடாது, சுரண்டி வாழும் நிலையை உருவாக்கியுள்ளது. இதைத் தக்கவைக்க படுகொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள், நீதிமன்றங்கள் என்ற அடக்குமுறைச் சாதனங்கள் தேசிய நிர்மாணமாகியுள்ளது. இதை பாதுகாக்க ஊடகங்களை முழுமையாக கட்டுப்படுத்தி, ஒரு பாசிச சர்வாதிகார கட்டமைப்புக்குரிய அனைத்தையும் வன்முறை ஊடாக கட்டமைக்கின்றனர். மக்கள் பற்றி எந்தவிதமான கருசனையும் கிடையாது. மக்களை மந்தைகளாகவே, தமது தேவையைப் பூர்த்தி செய்யும் கறவை மாடாக கருதுகின்றனர். ஆனால் கறவை மாட்டுக்கு உணவு கூட போடாது அவிழ்த்துவிட்டு கறக்கின்றனர்.

இந்த உண்மையை அரசியல் ரீதியாக புரிந்து, அதை மறுத்து புலியெதிர்ப்பு அரசியல் பூத்துக் குலுங்கவில்லை. புலியெதிர்ப்பு அரசியல் இதை மறுத்து போராடவில்லை. மக்களின் உழைப்பைச் சுரண்டும் சமூக அமைப்பையே இவர்களும் முன்வைக்கின்றனர். இவர்கள் கேட்பதெல்லாம் புலிகள் அனுபவிக்கும் இந்த வாழ்க்கையில் தமக்கான பங்கைத்தான் கோருகின்றனர். இதையே அவர்கள் ஜனநாயகம் என்கின்றனர். இது முடியாது போனால், தமக்கு கீழ் அவர்களுக்கு அதை மறுப்பதே இவர்களின் ஜனநாயக இலட்சியம். புலிகளுக்கு மாற்றாக புலியெதிர்ப்பு ஜனநாயகம் இதைத் தாண்டி எதையும் கோரவில்லை. மக்கள் நலன்கள் எதையும், மக்களிள் சமூக பொருளாதார வாழ்வில் இருந்து முன்வைக்கவில்லை.

இவர்களின் ஜனநாயகமும், சுதந்திரமும் மக்களை சுரண்டுவதை மறுதலித்துவிடாது. மற்றவனின் உழைப்பை புடுங்கித் தின்பதை இவர்கள் ஜனநாயகம் என்கின்றனர். இதை இவர்கள் ஜனநாயகம் எதிர்க்காது. மக்களின் உழைப்பை புலிகள் புடுங்கித் தின்பதை மட்டும், தமக்கும் பங்கு கோரி எதிர்க்கின்றது. இதற்கு ஜனநாயகம் என்று கவர்ச்சியான கோசத்தை, மக்களின் பெயரில் வைக்கின்றனர்.

ஜனநாயகம் என்று கோசம் போடும் இந்த புலியெதிர்ப்புக் கும்பல், மக்கள் நலனை முன்னிலைப்படுத்துவதையே மறுதலிக்கின்றது. மாறாக ஏகாதிபத்திய கோசங்களையே ஜனநாயகத்துக்கான கோசமாக முன்னிறுத்துகின்றது. இந்த நெளிவு சுழிவை நாம் இனம் காணமுடியாத வகையில், சூக்குமமாக முன்னிறுத்துகின்றனா. புலிப் பாசிசத்தை முன்னிறுத்தி தமது மூகமுடிக்கு பின்னால் இதை மூடிமறைகின்றனர்.

அறிவுள்ள சுயமாக சிந்திக்க கூடிய எந்த ஒரு மனிதனும், ஏகாதிபத்தியமும் இதைத்தானே கோருகின்றது என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் இதன் உண்மை கந்தலாகி விடுகின்றது.

மக்களின் அதிகாரத்தை இவர்கள் புலிப் பாசித்துக்கு மாற்றாக கோருவதில்லை.

மக்களின் சமூக பொருளாதார விடுதலையைக் கோருவதில்லை. இதற்குத் தடையான புலிகளை எதிர்த்து கோரிக்கைகளை முன்வைப்பதில்லை.

மக்களைச் சுரண்டும் புலிகளின் அரசியல் கட்டமைப்பை எதிர்த்து போராடுவதில்லை.


புலியின் அரசியல் பொருளாதார நலன்களும், ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார நலன்களும் இணங்கிப் போவதை இவர்கள் இனம் காட்டி எதிர்த்துப் போராடுவதில்லை.

புலிகளின் பல மனித விரோத நடவடிக்கைகள் ஏகாதிபத்திய தரம் வாய்ந்தது. இவை ஏகாதிபத்தியம் செய்வது போல் இருப்பதையும், ஏகாதிபத்தியத்திடம் இருந்தே பெறப்படுவதை இவர்கள் இனம் காட்டி அம்பலப்படுத்தி போராடுவதில்லை.


இப்படி பற்பல.

மக்கள் நலன்களை இப்படி திட்டமிட்டு சேறடித்தபடிதான், மக்களின் முதுகில் ஏறி நிற்கின்றனர். இதை இனம் கண்டு போராட வேண்டியதே, எமது வரலாற்றுக் கடமையாக எம்முன் உள்ளது.

Friday, March 3, 2006

மீண்டும், மீண்டும் வேதாளம் ------

மீண்டும், மீண்டும் வேதாளம் ------

சுதேகு
03.03.2006


புலிகளுக்கும், ரணில் அரசுக்கும் இடையே எட்டப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியல் யாப்புக்கு முரணானது என ஜே.வி.பியும், ஜாதிகவும் வழக்குத் தாக்குதல் செய்திருக்கிறது. இந்த அரசியல் யாப்பே இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு விரோதமான இனவாத யாப்பாகத்தான் எப்பவும் இருந்து வருகிறது. இதுபற்றி ஜேவிபிக்கு ஏதாவது சூடு சுரணை இருந்திருக்கிறதா? இதைவிடுவம், இந்த யாப்பு தனது சொந்த உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துத் தள்ளுவதை எல்லாம் அந்த மக்களின் சொந்த அதிகாரத்தில் வழக்காடி புரட்சிகர தீர்ப்பாக மாற்ற வக்கில்லாத இந்த ஞான சூனியங்கள்தான் ஏகாதிபத்திய வாசல்படி கூட்டுகின்ற இனவாத யாப்பு எனும் துடைப்பங்; கட்டைக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறது. புலிப் பாசிசத்தை எதிர்க்கிறோம் என்று இவர்கள் ஆடுகின்ற சதுரங்க ஆட்டத்தில் தமிழ் மக்களையும், ஏனைய சிறுபான்மை மக்களையும் பகடைக்காய்களாக உருட்டுகின்ற "மசாலவடே' அரசியல் இனவாதக் கட்சிதான் ஜே.வி.பி.

இப்படிச் சொல்வதால் பலருக்குப் பொத்திக் கொண்டு வரும்தான். வந்தாலென்ன, வந்திட்டுப் போகட்டுமே. இதுவரை காலமும் தீர்வுக்காக எடுக்கப்பட்ட எல்லாவித முயற்சிகளையும் தாக்கி வந்ததோடு தீர்வுகளை எல்லாம் நிராகரித்த ஜேவிபி, அரசில் இன்று அங்கம் வகிக்கும் போது கூட இனச்சிக்கலுக்கு உருப்படியாகச் சிறு துரும்பைக் கூட செய்ய முன்வராத நிலைமை ஆச்சரியத்துக்கோ அதிர்ச்சிக்கோ உரிய விடயம் ஒன்றல்ல. ஒருகாலத்தில் ஐந்து வகுப்புக் கொள்கை நடத்திய ஜேவிபி அதில் ஒரு வகுப்பாக இந்திய விஸ்தரிப்பு வாதத்தினை நடத்தியது. இலங்கையின் சிறுபான்மை இனங்களில் ஒன்றான மலையக மக்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இறுதி அங்கமாக அது கருதியது. இதன் பிரதிநிதி இ.தி.மு.க என்ற கருத்தை ஜே.வி.பி முன்வைத்தது.

இலங்கையில் நீண்ட காலமாக இயங்கிவந்து, 1962ல் இராணுவச்சதியை அடுத்துக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் (இ.தி.மு.க) 68ல் சீர்திருத்த இயக்கமென்ற தனது நிலையினை மாற்றி அரசியல் கட்சியாக பிரவேசித்தது. 1969ல் தனது 4வது மாநில மாநாட்டையும், பொதுக் கூட்டமொன்றையும் யாழ் முற்றவெளியில் நடத்தியது. இக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் ஏ.இளஞ்செழியன் "தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை சாதவீகப் போராட்டம் மூலம் பெற முடியாவிடின், புரட்சி ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலம் பெறவிரும்பின் தமிழ் மக்கள் கொரில்லா யுத்தமொன்றிற்கு தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமெனக்" கூறினார்.

"தற்கொலைப்படை அமைத்தல், பொலீஸ் நிலையங்களைத் தகர்த்தல், ஆயுதப் பயிற்சி முகாம் அமைத்தல் வேண்டுமெனவும் ஆயினும் அதற்கான தேவை தற்போது இல்லை" எனவும் அவர் பேசியிருந்தார். (ஆதாரம்- எழுதாத வரலாறு ) இவ்வுரை சிங்கள இனவாதிகளுக்கு எரிச்சலை ஊட்டின. இ.தி.மு.கதை தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்தின.

தமிழ் காங்கிரசும் ஏனைய தமிழ் தலைவர்களும் இவ்வுரையைக் கண்டித்து அறிக்கைள் விட்டனர். சமத்துவம், சமாதானம், சமதர்மக்குடியரசு போன்றவற்றை இ.தி.மு.க வலியுறுத்தியதுடன், பேராதனைப் பல்கலைக் கழகம் போன்ற ஒர் நிறைவான பல்கலைக்கழகத்தை தமிழ் பிரதேசத்தில் கோரியது. ஆயினும் உடனடிக் கோரிக்கையாக வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு, குறிப்பாகத் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பை அது கோரியிருந்தது.

இவ்வாறான ஒரு சூழலில் இ.தி.மு.க இன்னொரு இடதுசாரி பெயர் கொண்ட இளம் சோசலிச முன்னணி (இ.சோ.மு) எனவும் இயங்கத் தொடங்கியது. இளஞ்செழியன் இ.தி.மு. வின் மறைமுகத் தலைவராகவும், இ.சோ.மு தலைவராகவும் இயங்கினார். இ.சோ.மு 70களில் இடதுசாரி கூட்டரசை ஆதரித்தது. இ.தி.மு.க வடகிழக்கில் தேர்தலில் குதித்தது.

கூட்டரசு ஆட்சிப்பீடம் ஏறிய ஒரு சில மாதத்தில் பதுளை சீனாக்கொல தோட்டத்தில் நோய்வாய்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வாகன வசதியை தோட்டத் தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கோரிக்கையாக முன்வைத்து 90 நாட்கள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுமிருந்தனர் அத் தோட்டத் தொழிலாளிகள்.

1970.10.01 திகதி தோட்டத்துக்குள் புகுந்த இடதுசாரி கூட்டரசின் பொலீஸ் படை துப்பாக்கிகொண்டு இப் போராட்டத்தை நசுக்கியது. இத்துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி அழகர்சாமி, இராமையா என்ற இரண்டு தொழிலாளர்கள் 1970.10.04ம் மரணமடைந்தனர்.

இப்படுகொலைக்கான கண்டன நடவடிக்கையில் இ.சோ.மு யுடன், ஜே.வி.பி கூட்டுக்கு வந்தது. இக்கூட்டின் தொடர்ச்சி வேலைத் திட்டமாக 71ல் தொழிலாளர் தினத்தை மலையகத்தில் இணைந்து நடத்துவதாக இணக்கம் ஏற்பட்டிருந்தது. இம் மேதினத்துக்கு முன்னர் 1971.03.13ல் ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீரா கைது செய்யப்பட்டார். இக் கைதைத் தொடர்ந்து 1971.04.05ல் ஜேவிபி திடீர் ஆயுதக் கிளர்ச்சியில் குதித்தது. இவ் ஆயுதக் கிளர்ச்சியில் தமக்கு ஆதரவாக மலையகத்தில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடும்படி ஜேவிபி, இ.சோ.மு யிடம் கோரியது. இதற்கு அவர்கள் தம் முடிவுக்கு 10 நாள் அவகாசத்தை ஜேவிபியிடம் கேட்டனர். இந்த அவகாசத்துக்குள் ஜேவிபியின் ஆயுதக் கிளச்சியை படு மோசமாக அரசு அடக்கத் தொடங்கியதுடன், ஜேவிபி, இ.சோ.முயினர் உட்பட ஏனைய இடதுசாரிகள் பலரும் நாடு அடங்கலாகக் கைது செய்யப்பட்டனர். 3 வாரத்தில் அடக்கப்பட்ட இக்கிளச்சியில் 50,000 க்கு மேற்ப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர், 15,000க்கு மேற்பட்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜேவிபி யாரை இந்நிய விஸ்தரிப்புவாதத்தின் நேரடிப் பிரதிநிகளாக இனங்காட்டியதோ, அவர்களிடமே தமது கிளச்சிக்காக கூட்டையும் கோரியும் இருந்தது. மலையக மக்கள் தொடர்பான தனது மிகமோசமான இனவெறிக் கருத்தை மாற்றாமல் - சுயவிமர்சனம் செய்யாமல் அவர்களிடம் கோரிய இக்கோரிக்கை ஜேவிபி தனது அதிகாரத்தைப் பெறுவதற்கான கபடம் நிறைந்த கோரிக்கையே ஆகும். 84ல் ஜேவிபியின் அதிருப்திப்பிரிவால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் "எல்லா அயல்நாட்டுத் தமிழர்களும் புரட்சிக்குப்பின் கொல்லப்படுவர்" என 71க்கு முன்னர் விஜேவீரா சொன்னதாக குறிப்பிட்டிருந்தனர். (ஆதாரம் இலக்கு-4) ஒருவேளை இக்கிளர்சிக்கு ஆதரவாக மலையகத்திலும் கிளர்ச்சி நடத்தப்பட்டு ஜேவிபி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் அதன் பின் நிச்சயமாக இவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று யாரும் வாதிடவும் முடியாது. ஜேவிபியின் இக்கிளர்ச்சிக்கு உதவக்கூடிய நிலையில் மலையகமக்களை ஆயுதபாணியாக்கக்கூடிய தயார் நிலையில் இ.சோ.மு அன்று இருந்திருக்கவில்லை என்று யாரும் சப்பைக்கட்டும் கட்டமுடியாது.

70 களில் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கக் கூடிய விளைச்சல் நிலமாகவே இலங்கை முழுவதும் காணப்பட்டது. வேலையில்லாப் பிரச்சனை எரியும் பிரச்சனையாக நாடடலங்கலாகக் காணப்பட்டது. 69-70களில் வேலையில்லாப் பிரச்சனையே ஜேவிபியினதும், இ.தி.மு.கழகத்தினதும் முதன்மைக் கோரிக்கையாகக் காணப்பட்டது.

ஏன் வடக்குக் கிழக்கிலும் 70களில் ஆயுத இளைஞர் இயக்கங்கள் தோன்றுவதற்கான மூல ஊற்றும் இப்பிரச்சனையே ஆகும். தழிழ் இளைஞர் இயக்கங்களின் மூலம் "மாணவர் பேரவை" என புஸ்பராஜா தரவளிகள் சாட்சியப்படுத்துபவை எல்லாம் அன்றைய சமூக நிலவரங்கள் கணக்கில் எடுக்கப்படாத தற்பெருமைகளே ஆகும். இவ் ஆயுத இயக்கங்களின் தோற்றத்துக்கு தரப்படுத்தலை முதன்மையான மையப் பிரச்சனையாகக் காட்டுவதே யாழ்த் தேசியத்தின் முகிழ்வுதான். ~மாணவர் பேரவை" யை உருவாக்கிய உரும்பிராய் சத்தியசீலன் இவ்வமைப்பை உருவாக்கும் போது "வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தை" உருவாக்கி வழிநடத்தி வந்தவரே. சத்தியசீலனின் கைது கூட மாணவர் பேரவையால் மட்டும் ஏற்பட்டதல்ல. மாணவர் பேரவைக்கு முன்னரே "ஈழ விடுதலை இயக்கம்", "தமிழர் விடுதலை இயக்கம்" என்பன வேலையில்லாப் பிரச்சனையின் சமூகப் பின்புலக் காரணிகளிலிருந்தும் இவை தோன்றியிருந்தது என்பதே யதார்த்தமாகும்.

ஜேவிபி அதிகாரத்தைக் கைப்பற்ற இளைஞர்களையும் இவ் நிலைமைகளையும் பாவித்தது, யாழ்த் தலைமைகள் அதிகாரத்தைத் தக்கவைக்க இளைஞர்களயும் இவ் நிலைமைகளையும் பாவித்தது அவ்வளவே!

84 யூலையில் ஜேவிபி தடை செய்யப்பட்ட போது தொடர்ந்து மூன்று பிரசுரங்களை அது வெளியிட்டிருந்தது. 16 பக்கங்கள் கொண்ட "சிறீலங்காவின் முற்போக்கான மக்களுக்கு" என்றும், 71 கிளர்ச்சியின் 13வது நிறைவுக்காக 18 பக்கங்கள் கொண்ட "காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை" (உட்சுற்றுக்கு மட்டும்) என்றும், மேதினப் பிரசுரமாக இன்னொன்றுமாக அவை இருந்தன. இவை அனைத்துமே தமிழ் அமைப்புகள் பற்றியும், தமிழர்களுக்கான தீர்வுகள் பற்றியுமே கருக்கட்டி வெளிவந்திருந்தன.

இன்று புலிகளையும் அதன் பாசிசத்தையுமே மட்டும் பேசுகின்ற ஜேவிபி அன்று வடக்கிலிருந்த எல்லா "இனவாத" இயக்கங்கள் பற்றியும் கருத்துக் கூறி நிராகரித்திருந்தது. அக்காலகட்டம் வட்டமேசை மாநாட்டுக் காலமாக இருந்தது. வட்டமேசை மாநாட்டை நிராகரித்தது மட்டுமின்றி சமஸ்டி முறையிலான மாவட்ட மாகாண சபைகளைக் கூட இது நிராகரித்திருந்தது. சமஸ்டி முறையால் ஈழ இயக்கங்களை அழிக்க முடியாது என்பதே இதன் திருமந்திரமாகும். சமஸ்டி ஆட்சிமுறை இனவாதத்தை தூண்டி வளர்க்கும் முறையென இது ஓதியது. சமஸ்டியே பிரிவினை என்னும் ஜேவிபி இன்று இனவாத யாப்புக்கு குஞ்சங்கட்டி அதில் தன்னை அழகு படுத்துகிறதென்றால் இதுவே மிக மோசமான இனவாதக் கட்சியாகும்.

Monday, February 27, 2006

கசாப்புக்கு கடைக்கு இட்டுச் செல்ல விழையும் ஜெயதேவன்.

நல்ல "மேய்ப்பன்" வேடமிட்டு கசாப்புக்கு கடைக்கு இட்டுச் செல்ல விழையும் ஜெயதேவன்.


சிறி
27.2.2006

வெட்டிச்சாய்க்கப்பட்ட உயிர்கள் எத்தனை.
வீதிகளில் அனாதைப்பிணங்களாய் சுட்டுச் சரிக்கப்பட்டவர்கள் எத்தனை.
நேசித்த தேசத்தின் மக்களின் விடுதலைக்காய் போராடப் புறப்பட்டோர் புத்தி பேதலித்தவர்களால் புதைகுழிகளில் மண்ணோடு மண்ணாய் புதைக்கப்பட்டவர்கள் எத்தனை எத்தனை.

அந்தோ பெண்கள் ஒழுக்கமிழந்ததாய் விபச்சாரிகளாய் ஒழுக்க சீலர்களால் நாமமிடப்பட்டு சுடலைக்காட்டுக்குள் ஆடைகள் இல்லாமல் அடக்கம் பண்ணப்பட்டார்கள். இன ஒடுக்கு முறையாளனிடமிருந்து விடுதலை பெற்றுத் தருவதாய் முளைத்தெழுந்த இயக்கங்கள். துப்பாக்கிகளால் சொந்த மக்களை அடக்கியாளும் புதிய எஐமானர்களாய் மாறினார்கள். சுழிபுரத்தில் ஆறு போராளிகள் ஆண்குறிகள் அறுக்கப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.

இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று ஆரம்பித்த மறுப்பறிக்கைகள் உடல்களை மறைப்பதற்காய் மண்ணுள் புதைத்தது போல் உண்மையை புதைக்க முடியாது போயின. தலைமையை பாதுகாக்கும் பாரிய கடப்பாட்டில் தாம் இதை செய்ததாக தர்க்க நியாயங்கள் சொன்னார்கள் இந்தத் தறுதலைகள்.

இயக்கப் போராளிகள் அகிலன் செல்வன், அன்றைய எஸ்.ஆர் இன்றைய மாமனிதன் (கொலைசெய்யப்பட்டால் மட்டும் கிடைக்கும் பட்டம்) சிவராம் "தாரகி" யின் அநுசரணையுடன் காணாமல் போனவர்கள் ஆனார்கள். அகிலன் செல்வன் எங்கே என்ற கேள்விக்கு அவர்கள் பின்தளத்தில் விசாரணைக்காக சென்றிருக்கின்றனர், கடலில் படகு போக்குவரத்து நிலைமைகள் கடற்படைக் கெடுபிடிகள் தணிந்த பின்னால் திரும்பி வருவார்கள் என்றவாறான புனைகதைகளின் மூலம் அடுக்கடுக்கான பொய்கள் அள்ளி வீசப்பட்டன.

சொந்தப் போராளிகளையே கருவறுக்கத் தொடங்கிய போது கணிசமான மக்களும் போராளிகளும் விழிப்படைந்தனர். மக்களுக்கான ஐனநாயகக் கோரிக்கைகளும் உட்கட்சி அராஐகத்திற்கெதிரான கோசங்களும் முளைவிடத் தொடங்கியது. இந்த திரண்டு வந்த மக்களின் போராட்டம் ஐனநாயக கோரிக்கைகளை முன் வைத்து போராளிக் குழுக்களை நெறிப்படுத்தும் நோக்கில் சாத்வீக பாதையில் எதிர்த்து கிளம்பியது. உண்மையான விடுதலை வேண்டி நின்ற ஐனநாயகம் கோரிநின்ற போராளிகள் தலைமைகளால் மிகக் கொடூரமான முறைகளில் சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கேள்வி முறைகளின்றி புதைக்கப்பட்டார்கள்.

போராளிகள் இயக்கங்களுக்குள்ளேயும், மக்கள் எவ் இயக்கமும் சாரா போராட்ட வழிமுறைகளினூடும் ஐனநாயக மீட்சிக்கும் இயக்க அராஐகங்களுக்கும் எதிரானதுமான போராட்டங்களுக்கு திரண்டெழுந்தனர். இயக்கங்களின் இராணுவ அராஐக நடவடிக்கைகளையெல்லாம் நியாயப்படுத்தும் தொங்கு தசையாக மட்டும் மக்கள் அணி அரசியல் அணி இருக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்த தலைமைகளும் அதனது அராஐக அணிகளும் அவர்களின் பொய்களை மிரட்டல்களை சதிகளை அவதூறுகளை திசைதிருப்பல்களை இயக்க தலைமை விசுவாசத்தை எல்லாம் மூடி மறைக்கும் முயற்சியில் தனது கீழணி போராளிகளை அரசியல் அணிப் போராளிகளை தம் இடையறாத பொய்ப்பரப்புரைகள் மூலமும் அரசியல் சாயமிட்டு நியாயப்படுத்துவதன் மூலமும் திசைதிருப்பி விடலாம் என மனப்பால் குடித்தனர்.

மத்திய குழு தீர்மானங்களும் மக்கள் அவை தீர்மானங்களும் நடைமுறைகளும் இராணுவ நடைமுறைகளினால் மிதித்தொதுக்கப்பட்டன. இராணுவ நடைமுறைகள் எதுவும் மக்கள் நலன் சார்ந்த அரசியலோடு பிணைந்திராத, அரசியலால் வழி நடத்தப்படாத இயக்கங்களின் மத்திய குழுத் தீர்மானங்களோடு மக்கள் அவை தீர்மானங்கள் முரண்படத் தொடங்கின.

மக்களால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு மக்கள் அவை பதிலளிக்கும் போது அது திக்கித் திணறும் நிலைக்காளாக்கப்பட்டது. மக்களோடான அரசியல் தொடர்பாடல்களை மக்கள் அவையானது முன்னெடுக்கப்பட முடியாதபடி மக்கள் அவைக்கு மக்களோடிருந்த நெருக்கம் சீர்குலைந்தது. இயக்கத்தின் திசைவழி கொள்கை வழிகளில் முரண்பட்டு நின்ற மத்திய குழு அங்கத்தினர் தனிநபர் வழிபாட்டு அணியினரால் சித்திரவதைக் கூடங்களுக்குள் சிறை வைக்கப்பட்டனர். இவைகளை எதிர்த்த போராளிகள் விசாரணை என உழன்றியில் ஏற்றப்பட்டு மரணங்களை தழுவிக் கொண்டனர்.

குரூரக் கொலைஞர்களின் குகைக்குள்ளும் துஞ்சுவர் என்றறிந்திருந்தும் அஞ்சா நெஞ்சத்துடன் அவர்கள் தளர்விலாது போராடி தம்முயிரை ஈய்ந்து விடுதலையின் வீரிய நோக்கிற்காய் வீழ்ந்து பட்டனர். விடுதலைக்காய் வீழ்ந்த இவர்கள் தன்னுயிரை ஈய்ந்த வெளிச்சத்தில் தான் நீறாய் போனது அந்த அராஐகக் கும்பல். உள்ளும் வெளியுமாய் விரிந்த போராட்டத்தில் உடைந்து சிதறி துரும்பாய் சீரழிந்தனர். மத்திய குழு தவிர்க்க முடியாதபடி இரண்டாய்ப் பிளந்தது. விடுதலை இலக்கிய நாவல் ஒன்றின் மூலம் உண்மையாக பாத்திரப்புனைவுகளோடும் சம்பவங்களோடும் அரசியல் விமர்சனத்தோடான பாங்கில் "புதியதோர் உலகம்" என்ற இலக்கியம் வெளிவந்தது. பிரிந்த உறுப்பினர்களை வேட்டையாடுமாறு நரபலி வேட்டைக்குழு பணிக்கப்பட்டது.

பின்தளத்தில் தங்கிவிட்ட "வசந்தன்" சந்ததியார் குரூரமாக கண்களிரண்டும் தோண்டப்பட்டு சித்திரவதை மூலம் கொலைசெய்யப்பட்டார். குரூரக்கொலைவெறி தீர்ந்த பின் உடல் சாக்கில் இடப்பட்டு கூவம் ஆற்றுக்குள் வீசப்பட்டது. காந்தீயவாதி டேவிட் அவர்கள் கைது செய்யப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்கள்.

தளத்துக்கு வந்து சக மத்திய குழுவினருடன் தலைமறைவாய் இருந்த மத்திய குழு உறுப்பினர், அதுவரையும் தளப் பொறுப்பாளராகவிருந்த "டொமினிக்" "கேசவன்" "கோவிந்தன்" எழுதி வரலாறாக்கப்பட்டது தான் "புதியதோர் உலகம்" என்ற நாவல்.

தளத்தில் தங்கியிருந்த இவர்களையும் இன்னும் தளத்திலிருந்த அர்ப்பணிப்பான போராளிகள் மீதும் அருவருப்புக் கொண்டனர், தளத்திலிருந்த தலைமை விசுவாச பதவி மோகங் கொண்ட எடுபிடிகள். இந்த எடுபிடிகள் அவர்களை தேடியழிக்கும் நடவடிக்கைக்காக தெருவெங்கும் அலையும் ஆயுததாரிகளாக்கப்பட்டார்கள். தலைமையின் கடைக்கண் பார்வைக்கும் மத்திய குழு அங்கத்துவத்துக்கும் ஆலாய்ப்பறந்த சிலரில் " மாமனிதர்" சிவராமும் அடக்கம். எஸ்.ஆர் என்ற அன்றைய பெயரோடு துப்பாக்கி தரித்து நரவேட்டைக்காய் "மாமனிதர்" புறப்பட்டார். வாய்மூடி மௌனித்திருந்தனர் இன்னும் சில தள மத்திய குழு உறுப்பினர்கள். அராஐகம் தெருவெங்கும் புறப்பட்டது. துப்பாக்கியின் சன்னக் குழாய்கள் சக போராளிகளின் இரத்தம் குடிக்கவென இவர்களின் கைகளுக்குள்ளும் பைகளுக்குள்ளும் பல ரகங்களில் பதுங்கியிருந்தது. மாமனிதர் எஸ். ஆரின் விரல்கள் வேட்டு வைக்கும் விசையை அழுத்தும் இமைப்பொழுதில் சுதாகரித்து தற்காத்து மரணத்திலிருந்து தப்பி மீண்டனர் "தீப்பொறி" குழுவினர் சிலர். இச்சம்பவம் பின்னர் தாக்க வந்தவர்களையே தாம் தாக்க முனைந்ததாகவும் தங்களது தற்பாதுகாப்புக்கான எதிர் நடவடிக்கையால் அவர்கள் பின்வாங்கிக் கொண்டதாகவும் வீரப்பிரதாப நையாண்டிகள் மூலம் ரசித்துரைக்கப்பட்டன.

இயக்கத்தின் பல்கலைக்கழக மாணவர்களிடையேயான சரிந்து சென்ற ஆதரவை மீண்டும் சரிசெய்து கொள்ளவும், இவர்களை மீண்டும் தமது பிரச்சார நடவடிக்கைக்கு மீளவும் பாவித்து மக்கள் மத்தியில் திரண்டிருந்த எதிர்ப்புக்களை சரிக்கட்டவும் கண்துடைப்பான ஒரு தள மாநாடும் அதைத் தொடர்ந்த பின்தள மாநாடும் ஒழுங்கு செய்யப்பட்டு மிக நல்ல நாடகமாக அரங்கேற்றப்பட்டது. திறமையான நடிப்பெல்லாம் சோரம் போனது தான் மிச்சம். இத் தள மாநாட்டின் விளைவாய் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் இருந்த சிலர் வெளியேறி நின்ற "றோ"வின் தயாரிப்பான பரந்தன் ராஐனால் அறுவடை செய்து கொள்ளப்பட்டார்கள். பரந்தன் ராஐனுடன் இரகசியமான ஒப்பந்தத்துடன் சிலர் மீண்டும் தளம் திரும்பினர். எனினும் இது கசியத் தொடங்கி அம்பலத்துக்கு வந்தது.

மாணவர் அமைப்பானது "தமிழீழ மாணவர் பேரவை" தன்னகத்தே முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் தனது மத்திய குழுவில் இயக்கத் தலைமைகளின் குருட்டு விசுவாசிகள் ஓரிருவரை கொண்டிருந்த போதும் ஐனநாயக மறுப்புக்கும் அராஐகவாதப் போக்குக்கும் முற்றாக அடிபணிந்து போகாதிருந்தது. இன்னொரு மாற்று அரசியல் போராட்டப்பாதைக்கான பரிதவிப்பில் ஊசலாடியபடி இருந்தது. தனது கீழணி மாணவ அங்கத்தவர்களுக்கான மாற்றுப் பாதையை தரமுடியாதபடி அதன் அரசியல் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தமிழீழ மாணவர் பேரவை ஆகக் குறைந்தது ஐனநாயகத்துக்கான குரலாகக் கூட தனது பாதையைத் தொடர பல முனைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

அதனது முன்னணி உறுப்பினர்கள் அப்போது தான் மாற்று இயக்கப் போராளிகளின் உறவுகளை வளர்க்கத் தொடங்கியிருந்தார்கள். கருத்தியல் ரீதியல் தம்மை வளர்ப்பதற்காகவும் கருத்தியல் விவாதங்களுடு தம்மை அரசியல் ரீதியில் உயர்த்திக் கொள்வதற்காகவும் சக போராளிக்குழுக்களின் முன்னணி உறுப்பினர்களின் நல்லுறவுகளை தேடத் தலைப்பட்டனர்.

இந்நிலைமை அன்றைய மாற்றுப் போராளிக்குழுக்களால் தங்கள் தொங்கு தசைகளாய் மக்கள் மத்தியில் இவர்களை காட்டும் முயற்சிக்கு வழிவகுத்தது. இது அவர்களின் சுயாதீனத்துக்கு சேறடித்தது. சரியான கருத்தியல் ரீதியான அரசியல் போராட்ட ரீதியிலான உள்வாங்குதலுக்கு பதிலாய் வெறுமனே எண்ணிக்கை அடிப்படையில் கபளீகரம் செய்ய நினைத்தார்கள்.

அதுவரை இயக்க நடவடிக்கைகளின் பிரச்சார எடுபிடிகளாய் மட்டுமே பழக்கப்பட்டிருந்த இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தவிர்க்க முடியாதபடி ஒரு சரியான அரசியற் கருத்துப்பலமின்றி தளமின்றி தனித்து விடப்பட்டார்கள்.

உதிரிகளாய் உடையத் தொடங்கிய நிகழ்வானது பலரையும் பல திசைகளில் சிதற வைத்தது. இவர்களில் சிலர் புலிகளினால் கைது செய்து சிறை வைக்கப்பட்டார்கள். சிலர் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். தீப்பொறி தர்மா காணாமல் போனார் என்பது இன்றைய "ஒட்டுப்படைகள்" இல்லாத மாற்று இயக்கங்கள் தடைசெய்யப்பட்டு துப்பரவாக்கப்பட்ட, இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக்கிடந்த, குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில் நடந்ததொன்றாகும். சொந்த இயக்க அராஐகத்தை எதிர்த்து போராடிய இவர்கள் சளைக்காது மீண்டும் மக்களுக்கான ஐனநாயகத்துக்கான போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட போது புலிகளினால் ஆபத்தானவர்களாய் கருதப்பட்டு அச்சுறுத்தப்பட்டார்கள்.

புதியதோர் உலகம் என்ற நாவலை பல பிரதிகளாக்கி அதை விநியோகித்து மாற்று இயக்க அராஐகத்தை வெளிக்கொணருவதாக நடித்த புலிகள் இதன் மூலம் தங்கள் அராஐகத்தை கீழ்நிலைப்படுத்தி தங்களின் மீதான, தங்களின் பாசிச நடவடிக்கைகள் மீதான எதிர்ப்பு முன்னிலைப்பட்டு வந்த சூழலை இதன் மூலம் பின்தள்ளினார்கள். மக்களின் விழிப்புணர்வையும் திசை திருப்பினார்கள். இங்கே இவர்கள் சொந்தப் பாசிச நடவடிக்கைகளிலிருந்து தங்களை மறைத்துக் கொள்ள மிகவும் திட்டமிட்டுக் கருமம் ஆற்றினார்கள். இதை மறுத்துரைக்க முடியாதபடி இவர்களே பின்னாளில் நாவலாசிரியரின் கைதுக்கும் காணாமற் போனதற்கும் பொறுப்பானவர்கள் ஆனார்கள்.

ரெலோ இயக்கத்தின் உட்பூசல் தாஸ்க்கும் பொபிக்கும் இடையில் வெடித்து யாழ் மருத்துவமனை இரத்தக்களரியாகியது. படுகொலைகளை ஆயுத வெறியாட்டங்களை மக்கள் தம் கண்ணால் தரிசித்து உறைந்து போயினர். பகிரங்கமாகவும் கடத்திவைத்தும் பொதுமக்களை ஆயுதமுனையில் மிரட்டும் கலாச்சாரத்தை பாகுபாடின்றி எல்லா இயக்கங்களும் செய்தன. ஆலாலசுந்தரம் தர்மலிங்கம் போன்றோர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அத்துமீறல்கள், உரிமைகோராத படுகொலைகள், கடத்தல்கள் நாளாந்த நிகழ்வாகியது.

கந்தசாமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இலிருந்து பிளவுபட்டுச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தீர்த்த துப்பாக்கி வேட்டு சூளைமேட்டில் இந்தியக் குடிமகன் ஒருவனைப் பலிகொண்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்குள் வெடித்த உட்கட்சிப் போராட்டங்கள் கோரிக்கைகள் கைகூடா நிலையில் உதிரிகளாய் வெளியேறிய பலர் வெளியில் மக்களோடு போராட்டங்களில் தம்மை அடையாளப்படுத்த முனைந்தனர்.

ரெலோ இயக்கத்தலைமையை விமர்சித்து அதன் இயக்கப்போராளிகள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை பிரகடனப்படுத்தி இந்தியாவில் களத்தில் இறங்கினர். நூறுக்கும் மேற்பட்ட பெண் போராளி உறுப்பினர்கள் இங்கு பங்கெடுத்துக் கொண்டனர்.

இயக்கங்களின் மாறான போக்குகளுக்கு வளைந்து கொடுக்க மறுத்த மக்கள் சுயாதீனமான போராட்டங்களில் அணிதிரண்டனர். வாகன வழிமறிப்பு, வீதித்தடைப் போராட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் என பலவாறான வழிகளில் மக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

இவையெல்லாவற்றையும் விழுங்கி ஏப்பமிட்டது புலிகள் இயக்கம். புலிகள் இயக்கத்தின் மற்றைய இயக்கப் போராளிகள் மீதான அழித்தொழிப்பு, அரசியல் கொலைகள் ரெலோ இயக்கத்தின் மீதான அழிப்பின் போது கோர வடிவம் கொண்டது. ரெலோ இயக்கப் போராளிகளை தெருதெருவாய் குற்றுயிரும் குறையுயிருமாய் ரயர் தீயில் உயிரோடு கருக்கி சாகடிக்கப்பட்ட அதுவரை காணாப் பயங்கரம் மக்கள் கண்முன் விளைந்தது. மக்களின் இரத்தம் உறைந்தது.

ரெலோ இயக்கம் சாய்க்கப்பட்டபின் ஈ.பி.ஆர்.எல்.எவ; இயக்கம் குறிவைக்கப்பட்டு வேட்டையாடப்பட்டது. சிறைப்பிடிக்கப்பட்டிருந்த அதனது போராளிகள் சிறையிலேயே குண்டு வீசி கூட்டாக கொலை செய்யப்பட்டார்கள்.

புளட் இயக்கத்தின் இராணுவ பொறுப்பாளர் மெண்டிஸ் கிட்டுவினால் சிநேக பூர்வ முறையுடன் "விசாரணைக்கென" அழைத்துச் செல்லப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். இதற்கு முன்பாகவே புளட் இயக்கம் தன்னை தானே கலைத்துக் கொள்வதாக பகிரங்கப்படுத்தியிருந்தது.

என்.எல்.எவ்.ரி போன்ற இயக்கப் போராளிகள் கைது செய்யப்பட்டு காணாமல் போனார்கள். பலர் தேடப்படும் நிலைக்காளானார்கள். இப்படியான கைதுகளின் போது பொய்க்குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டன. அக்குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் வைக்கப்படுவதோ விசாரணைகளோ நடாத்தப்படுவதில்லை.








இவையெல்லாம் பின்னணிகளாகவிருக்க பல்கலைக்கழக மாணவன் விஐpதரன் கடத்தப்பட்டு காணாமல் போன போது சக மாணவனை விடுதலை செய்ய வேண்டியும் அது மட்டுமல்லாது

மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்"

என்ற கோசத்தோடு பல்கலைக்கழகத்திலிருந்து மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கைக்கு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்ட வடிவத்தில் தம்மையே சமர்ப்பணம் தர வந்தார்கள் போராளிகள். எல்லா இயக்கங்களினதும் ஐனநாயக விரோதப் போக்கு கொலை அராஐகங்களுக்கு முகம் கொடுத்து சகித்துக் கொண்டிருந்த மக்கள் மேலும் சகிக்க முடியாத போக்கின் வளர்ச்சி கண்டு இக் கோரிக்கையின் போர்க்கொடி தூக்கினார்கள். அவ்வவ் வியக்கங்களிலிருந்து வெறுப்படைந்து வெளியேறிய போராளிகள் மக்களுக்கான ஐனநாயகப் போராட்டத்தில் கைகோர்த்தார்கள். ஒரு வித மக்கள் எழுச்சி நாலாபக்கமும் பற்றிப்பரவி தீயாய் எழுந்தது. இந்தக் கோரிக்கைகளின் வேகம் கொடுத்த தாக்கம் உண்ணாவிரதப் போராளிகளை புலிகளின் மரணதண்டனை பட்டியலிலிட்டது.

தன்னுடைய உள்ளியக்க அராஐகத்துக்கு தாழ்பணியாது வெளியேறிய விமலேஸ்வரன் உண்ணாவிரதப் போராளியானான். அதற்காக அவன் அனாதைப்பிணமாய் தெருவில் வீழ்த்தப்பட்டான். அவனது உடலம் கூட "அவர்களால்" அப்புறப்படுத்தப்பட்டது. ஊர்வலம் கிளர்ச்சி கண்டன அறிக்கைகள் அஞ்சலிக் கூட்டம் யாவும் இதன் மூலம் தவிர்க்கப்பட்டது. பத்திரிகைள் எவையும் பத்திச்செய்தியாகக் கூட பிரசுரிக்காத வகையில் எச்சரிக்கப்படடிருந்தன. மக்களுக்கான கோரிக்கையோடு மரணத்தையும் எதிர்கொள்ளும் அர்ப்பணிப்போடு எழுந்த ஐனநாயகத்துக்கான போராட்டக் குரல்கள் கொலைகள் மூலமாக கொடூரமாக நசுக்கப்பட்டது.






















இந்தப் போராட்டத்தின் ஒலி ஒளி ஆவணங்களை நீங்கள் www.tamilcircle.net இல் பார்க்க முடியும்.

இந்தியா பணம் கொடுத்து கட்டளையிட்ட உயிர்ப்பலிக்களமான புலிகள் செய்த பயங்கரம் அநுராதபுரத்தில் அப்பாவி சிங்கள மக்களின் உயிர் குடித்தது.

முஸ்லீம் மக்கள் பள்ளிவாசல்களில் தொழுகையின் போது பலியெடுக்கப்பட்டார்கள்.

யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இரவோடிரவாக வேரோடு பிடுங்கி வீசப்பட்டனர்.

அகதிவாழ்வு தேடி வந்த நாட்டிலும் புலிகளின் கொலைக்கரங்களால் பாரிஸில் சபாலிங்கம் குதறப்பட்டார். நாதன் கஜன் பட்டங்கள் வழங்கி குதறப்பட்டனர்.

கொலைக்கரங்கள் குரல்வளைகளை இறுக்கிய போதும் இந்திய ஆக்கிரப்பு இராணுவத்தின் கொடுமைகளை ஆவணப்படுத்தி "முறிந்தபனை" என்ற ஆவணத்தை தயாரித்து

"... மக்களைப் பொறுத்தவரையில் கொடூரமான - தீர்க்கமான இந்த வன்முறைக்கான தீர்வு சமூகத்திற்குள்ளிலிருந்து தான் வரவேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிப்பதால் உருவாக மாட்டாது. இத்தகைய உள்ளக அமைப்புகளை விருத்தியுறச் செய்வதென்பது நீண்ட கடினமான பணியாகும்"

என்ற உடற்கூற்றியல் விரிவுரையாளர் ரஐனி திரணகம தனது பல்கலைக்கழக வாசலிலேயே பரிதாபமாய் கொலை செய்யப்பட்டார்.











பல்கலைக்கழக மாணவி செல்வநிதி தியாகராசா விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு திரும்பாதவர் ஆக்கப்பட்டார். இவருடைய விடுதலைக்காய் பென் என்ற அமைப்பும் வெளிநாட்டு ஸ்தாபனங்களும் குரல் கொடுத்தார்கள். விளைவேதுமில்லை.(http://www.pen.org/freedom/bga.htm). இவர் மரணதண்டனைக்காளாக்கப்பட்டார் என புலிகளினால் உறுதிசெய்யப்பட்டது.


மேற்சொல்லப்பட்டது மேலும் இன்னும் சொல்லப்படாததும் ஐனநாயக மறுப்புக்களும், மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகளும் ஒரு வழி செல்ல, அதற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட தியாகத்துடன் கூடிய மக்கள் போராட்டங்கள் நடந்தேறிய வரலாறுமாகும். இவை நிகழ்ந்தது இன்று நேற்றல்ல. இத்தனைப் போராட்டங்களும் ஐனநாயகத்துக்கான போராட்டங்கள் தான். மக்களும் போராளிகளுமாய் தங்கள் உயிர்களை அர்ப்பணித்து நடாத்திய இந்தப் போராட்டங்கள் பற்றி அறியாதிருந்தேன் என்று ஜெயதேவன் குறிப்பிடுவாராயின் பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்த கதையாகத் தான் இருக்கும்.

எனவே இன்றைய ஐனநாயகச் சீமான் ஜெயதேவன் அன்றைய இந்நிகழ்வுகள் நடந்தேறிய போது ஐனநாயகம் என்றால் என்ன என்று புரியாத அரிவரி அறிவுடன் இருந்ததாக நாங்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்றெண்ணி நாடகம் போடுகின்றார். அப்போதெல்லாம் இவர் புலிகளின் நம்மவராக நாலும் கற்றவராக பவனி வந்துகொண்டிருந்தார். "ஐனநாயகம்" என்று திடீரென இப்போது புலிகளுக்கெதிராக வாய் கிழிய கத்தும் சீமானே, நீங்கள் இத்தனை ஐனநாயக மீறல்கள் நடந்தேறிய போதெல்லாம் இத்தனை போராட்டங்கள் நடந்த போதெல்லாம் அவைகளை நசுக்கிய நிகழ்ச்சிகளை நியாயப்படுத்திய அணியின் வெளிநாட்டு தூண்களில் ஒன்றாய் நீங்கள் இருக்கவில்லையா? அப்போதெல்லாம் நீங்கள் என்ன மக்குப் பிண்டமா?

இன்றும் கூட என்ன ஈராக் மக்களின் இரத்தம் குடிக்கும் பிரிட்டிஸ் தொழிற்கட்சியின் பெரிய பிரமுகராமே நீங்கள். ரொனி பிளேயரின் தோழனாமே நீங்கள். இலட்சக்கணக்கில் பிரிட்டிஸ் மக்கள் ஈராக் போருக்கெதிராய் தெருக்களில் இறங்கி போர் எதிர்ப்பு ஊர்வலம் சென்ற போது நீங்கள் ஈராக் மக்களின், அந்நாட்டின் இறையாண்மையை மீறி அவர்களை கொன்று குவித்த இரத்தத்தில் கைகழுவும் போர்வெறியர்களோடு கைகுலுக்கிக் கொண்டிருந்தீர்கள். எங்கே வாழ்கிறது உங்கள் ஐனநாயகம் இங்கே.

போராட்டங்களில் இறந்துபட்டவன், களையெடுப்பதாய் உயிர்ப்பலி கொள்ளப்பட்டவன் எல்லாம் எட்டப்பன், துரோகி, என்று நீங்கள் அவர்களின் நம்மவராக விருந்தபோது திரும்ப திரும்ப சொல்லி மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால் உங்கள் தோல்களில் நீங்களே வளர்த்தெடுத்த புலியின் நகக் கீறல்கள் பட்ட மாத்திரத்துடன் தான் ஐனநாயகம் மீறப்பட்டு விட்டதாக ஐயோ முறையோ என்று காட்டுக் கூச்சல் போடுகிறீர்கள். புலிகளின் தலைவரைப் போற்றிப் பேணும் உங்களது தமையனார் சிபாரிசு செய்ய முனைவது யாதெனில் புலிகளில் "உயர்சாதி" களுக்குடைத்தான அறிவும் ஆற்றல் திறனும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது என்பதாகும். நீங்கள் புலிகளிலுள்ள லும்பன்களே(உங்கள் பாசையில் சொல்வதானால் கஞ்சிக்கு வழியின்றி லும்பன் தனத்தில் கச்சை வரிந்து கட்டிய கட்டுக்கோப்பில்லாத எளிய சாதிப்பன்றி) புலிகளின் பிரச்சனை என்கின்றீர்கள். ஜெயதேவனும் அவருடைய அண்ணனும் இங்கே என்னே ஒற்றுமை.

“Prabhaharan, whom I yet consider a rare individual born to accomplish a historic mission, should immediately set about revamping the political and public affairs divisions in his organization and make them more responsive to the real needs and desires of the Tamil people. Every individual manning these positions should be screened for probity, as there is no legal frame work to govern their conduct at present

“Secondly, by quite blatantly discriminating against the so-called 'Higher Castes ' of old, the LTTE has alienated many Tamils with considerable talent and abilities. At the helm of the new social order being engineered by the LTTE are their cadres and their families. This is a matter of serious concern and has to be challenged by the Tamil people. An old evil can not be permitted to be replaced by a new one.”


உயிர்த்தியாகம் தந்து போராடி மாண்டவர்களின் சமாதிக்கு மேலாக அரண்மனை கட்டும் கனவுகளோடு ஏகாதிபத்திய தயவுடன் நாக்கைத் தொங்கவிட்டபடி நாயாய் அலைகின்ற உங்களுக்கு "ஐனநாயகம்" ஒரு முகமூடி.

அராஐகத்துக்கு எதிராக போராடி சமாதியானார்கள் எத்தனையோ போராளிகள். அப்போதெல்லாம சங்கூதி மணியடித்து உங்கள் சங்கரனாருக்கு பூசை செய்த நீஙகள் இப்போது ரி.பி.சி யில் ஐனநாயக மகுடி வாசிக்கின்றீர்கள்!. எதற்காக!

Saturday, February 25, 2006

புலியெதிர்பு அரசியலின் நேர்மை நிர்வாணமாகின்றது.

ஜனநாயகத்தையே விலைபேசும் புலியெதிர்பு அரசியலின் நேர்மை நிர்வாணமாகின்றது.

பி.இரயாகரன்
25.02.2006

னநாயகம் சார்புத் தன்மையானது என்பதை நிறுவும் முயற்சியில், புலியெதிர்ப்பு அணியின் முயற்சிகள் சந்தியில் தலை விரிகோலமாகி வருகின்றது. புலிகளிடம் ஜனநாயகத்தை கோரும் புலியெதிர்ப்பு அணி, தமக்கு அது பொருந்தாது என்பதையே ராம்ராஜ் விடையத்தில் மீண்டும் நிறுவிக் காட்டமுனைகின்றனர்.

22.2.2006 அன்று ரி.பி.சி ராம்ராஜ்சை சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ள நிகழ்வும், ரி.பி.சியும் மற்றும் புலியெதிர்ப்பு கும்பலின் மௌனமும், அவர்களின் சொந்த ஜனநாயக மூகமுடியை நிர்வாணமாக்கி வருகின்றது. ஒரு வானொலி, பல புலியெதிர்ப்பு இணையத்தளங்கள் எல்லாம் வாய் பொத்தி மௌனம் சாதிக்கின்றனர்?. மறுபக்கத்தில் மௌனத்தின் ஊடாகவே மெதுவாக ஆதாரம் எதையும் வைக்காது குசுவிடும் தேனீ "புலிகளின் சதித்திட்டத்தினால் ராமராஜன் கைது என்று செய்தி போடுகின்றனர். இதற்கு ஆதாரம் தான் என்ன? அப்படியானால் அந்த புலிச் சதி தான் என்ன? அதை மட்டும் மௌனவிரதத்துக்குள் விட்டுவிடுகின்றனர்.

இலங்கையில் கொலை, கொள்ளை, கடத்தல் நடந்தவுடன் அதை யார் செய்தது என்று கண்டுபிடித்து போடும் இவர்கள், ராம்ராஜ் விடையத்தில் மௌனம் சாதிக்கின்றனர். நீடித்த மௌனம். 23.2.2006 அன்று நடந்த அரசியல் அரங்கும் இதைப்பற்றி மௌனம் காக்கின்றது. இதன் பின்னணிச் சாத்தியப்பாட்டைக் கூட விவாதிக்கவில்லை. "புலிகளின் சதித்திட்டத்தினால் ராமராஜன் கைது" என்ற அந்த சதி என்ன என்று கூட, கூறமுடியாத நிலையில் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கிவிடுகின்றனர். சரி இந்தக் கைது ஏன். இதை அவர்கள் ஆய்வு செய்யவில்லை. புலியைப் பற்றி மட்டும், வீரமாக இவர்கள் ஆய்வு செய்வார்கள். தமக்குள் அதாவது புலியெதிர்ப்பு அணியின் பிரச்சனையை ஆய்வு செய்யமாட்டார்கள்.

இது பல கேள்விகளையும், அந்த அரசியலையும் சந்திக்கு கொண்டு வருகின்றது. புலிப் பாசிசம் என்பது எதார்த்தமானது தான். அதைச் சொல்லி புறப்பட்ட புலியெதிர்ப்பு அரசியல், மறுபக்கத்தில் இதைத் தாண்டியவை அல்ல என்பது எமது கடந்தகால விமர்சனமாகும்.

இந்தக் கைது புலியணியின் மௌத்தின் பின்னால், தெளிவாக இரண்டு சாத்தியக்கூறை எம்முன் தெளிவாக்கிவிடுகின்றது.

1.இக் கைது தெளிவாக ராம்ராஜ்சின் குற்றச் செயலினால் ஏற்பட்ட ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

இது இல்லை என்றால்

2. ஜனநாயகத்தை கோரி போராடியதற்கான கைது என்றால், யாரிடம் ஜனநாயகத்தை பெற்றுத் தரக் கோரினார்களோ அவர்களின் ஏகாதிபத்திய முகத்தையே இது தெளிவாக்கின்றது.

இதில் ஒன்று நிச்சயமாக நிகழ்ந்துள்ளது. அதை அவர்கள் தெளிவுபடுத்த மறுக்கின்றனர். இதை ஆய்வு செய்யவும் மறுத்து நிற்கின்றனர். மறுப்பதில் இருந்து குற்ற நடவடிக்கை சார்ந்த கைதுதான் அநேகமானதாக இருக்கும் என்பது உறுதியாகின்றது. பொதுவாக கைதுக்கு பின் விடுதலை செய்யப்படாதது, குற்றத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றது. ராம்ராஜ் போன்றவர்களின் அரசியல், புலியைப் போல் எல்லாவற்றையும் செய்வதில் சளைக்காத அதே அரசியல் தான். எப்படி செயல்படுவது, எப்படி வாழ்வது என்பது அவர்கள் கொண்டுள்ள அரசியல், அரசியல் வழிதான் தீர்மானிக்கின்றது. தனிமனிதன் தீர்மானிப்பதில்லை.

கடந்தகால நிகழ்கால அரசியல் அடிதடி முதல் கொலைகள் வரை செய்வதில் தான் பலம்பெறுகின்றது. இதுவே இவர் இருந்த, இவர் சார்ந்து இருந்த இயக்கத்தின் அரசியலாக இருந்தது. இதில் அவர்கள் சாமபேதம் பார்த்தது கிடையாது. சமூக விரோத அதாவது மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இயக்கங்களில் இருந்தவர்களின் வாழ்க்கை மர்மமானது. இன்று புலியெதிர்பு என்ற எல்லைக்குள் ஜனநாயகம் என்று கோருவதன் மூலம், மீண்டும் அந்த மக்கள் விரோத வாழ்க்கை முறைக்கு திரும்புவது இவர்களின் அரசியலாகின்றது.

சதாம்குசைனிடம் இருந்து ஜனநாயகத்தை மீட்பது என்ற பெயரில் ஈராக்கில் நடப்பது எதுவோ, அதையே இவர்கள் ஏன் செய்யமாட்டார்கள். இவர்களுக்கு என்ன விதிவிலக்குண்டு? இன்று ஈராக்கின் ஆட்சியில் உள்ளவர்கள், முன்பு பிரிட்டன் அரசினால் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாய்கள் தான்.

இரண்டாவதாக இக் கைது ஜனநாயகத்துக்காக (புலியின் சதியாக இருந்தாலும் கூட) போராடியமைக்கான கைது என்றால், புலியெதிர்ப்பு ஜனநாயக அரசியலே அம்பலமாகிவிடுகின்றது. இக் கைது புலியெதிர்ப்பு ஜனநாயகத்தை மீட்கும் போராட்டத்தில் ஏற்பட்டதாக கூறுவார்களேயானல், அவர்களின் ஜனநாயகமே கேள்விக்குள்ளாகிவிடுகின்றது. யாரை எல்லாம் ஜனநாயக அரசுகள் என்று எடுத்துக் காட்டினார்களோ, அவர்களின் சொந்த ஜனநாயக முகமே அம்பலமாகி நிற்கின்றது.

ஜனநாயக நாடுகள், ஜனநாயக அரசுகளின் ஜனநாயக விரோதக் கைது பக்கசார்பானது என்பதையும், அது ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவை என்பது மீண்டும் அம்பலமாக்கிவிடுகின்றது. இது தவிர்க்க முடியாமல் புலியெதிர்ப்பு மைய அரசியல் போக்கையை கேள்விக்குள்ளாக்கி மாற்றக் கோருகின்றது.
அவரை விடுவிக்க பிரிட்டிஸ் ஆளும் வர்க்கம் முயற்சிப்பதாக வெளிவரும் செய்தி உண்மையானால், ஜனநாயகம் வளைந்து கொடுக்கும் தன்மையும் சந்திக்கு வந்துவிடுகின்றது. ஒரு நாட்டின் கைதுக்குள் (தன் நாட்டு பிரஜையாக இருந்தாலும்) பிரிட்டிஸ் ஆளும் வர்க்க தலையீடு, அந்த நாட்டின் ஜனநாயக சட்டங்களையே கேள்விக்குள்ளாக்குவதாக அமைகின்றது. இந்த தலையீடு சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்குமாயின், புலியின் அரசியல் நடத்தைக்கு ஒப்பானதே. புலிகளின் நீதிமன்றம் பொலிசாரின் பிணையை மறுக்கும் போது, புலித்தலைமை தலையிட்டு பொலிசை விடுவிக்கின்றது. இது சட்டம் ஒழுங்கு மீறல் மட்டுமின்றி ஜனநாய விரோதமானதும் கூட.

1.இதே உள்ளடக்கம் தான் சுவிஸ்சில் ராம்ராஜ்சை விடுவிக்கும் முயற்சிகள். சட்டத்துக்கு உட்படாத நடத்தைகள், நீங்கள் சொல்லும் புலியெதிர்ப்பு ஜனநாயகத்துக்கே விரோதமானவை தான். இதில் உண்மையாகவே ஒரு குற்றமிழைக்கப்பட்ட நிலையில், குற்றத்தில் இருந்து விடிவிக்க முயன்றால், உங்கள் ஜனநாயகத்தின் போலித்தனம் அம்பலமாகிவிடுகின்றது. அதன் பக்க சார்பு அம்பலமாகிவிடுகின்றது.

2.இல்லாது போராடியதால் கைது என்றால், போராடும் உரிமையை மறுக்கும் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் போலித்தனம் அம்பலமாகின்றது. அதன் பக்க சார்பு அம்பலமாகின்றது. நீங்கள் இதுவரை காலமும் ஜனநாயகம் என்று எமக்கு எடுத்துக் காட்டிய இந்த மோசடியான ஜனநாயகம் அம்பலமாகின்றது. அதைப் பாதுகாக்கும் உங்கள் ஜனநாயகத்தின் போலித்தனம் அம்பலமாகிவிடுகின்றது.

3.விடுவிக்கும் முயற்சியில் பிரிட்டிஸ் அரசின் அத்துமீறிய தலையீடு இருப்பின், ஜனநாயகத்தின் ஏகாதிபத்திய தன்மையும், ஜனநாயக விரோத வக்கிரத்தின் அரசியலை அம்பலமாக்குகின்றது.

ஜனநாயகம் மக்களுக்கானது. அதை உயர்த்திப் பிடிப்போம். ஜனநாயகத்தை சார்புத் தன்மையாக்கி குறுகிய நோக்கங்களுக்கு வளைப்பதை நாம் எதிர்ப்போம். ஜனநாயகத்தின் பெயரில் ஏகாதிபத்தியத்துக்கும், அவர்களின் மக்கள் விரோத நோக்கத்துக்கும் துணைபோவதை நாம் அனுமதிக்க முடியாது. இதை எதிர்த்தே எமது போராட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம்.

Friday, February 24, 2006

இனப்பிரச்சனைக்கான பேச்சுவார்த்தை என்னும் சுத்துமாத்து!

இலங்கையின் இனப்பிரச்சனைக்கான பேச்சுவார்த்தை என்னும் சுத்துமாத்து!

சுதேகு
22.02.06

இலங்கையில் இனங்களுக்கிடையிலான இனச்சிக்கல் தொடர்பாக கடந்த அரை நூற்றாண்டு காலமாக பேசியாயிற்று. வட்டமாக, சதுரமாக, பல கோணங்களாகப் பேசியாயிற்று. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், ஐரோப்பிய நாடுகளின் மத்தியஸ்தம், வெளிநாடொன்றில் பேச்சுவார்த்தை என்றெல்லாம் பல வாணவேடிக்கைகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது ஒய்ந்துவிடவில்லை, இன்று ஜெனிவாவில் பேச்சுவார்த்தை!

என்ன பேசப்போகிறார்கள்? யாருக்கும் தெரியாத பரம ரகசியம் இது. கடந்த அரைநூற்றாண்டு காலமாக என்ன பேசினார்கள் என்று தெரியாமல் போனதோ, அதேபோலத்தான் இந்தப் பேச்சு வார்த்தையும். இதில் என்ன வேடிக்கை என்றால் எந்த மக்களின் பெயரால் இந்தப் பேச்சு வாத்தைகள் நடந்ததோ - நடக்கிறதோ, அந்த மக்களுக்கே இது கண்கட்டு வித்தையாக நடக்கிறது. இது இப்படி என்றால், இப்பேச்சுவார்த்தையை ஒட்டி ஐரோப்பாவில் உள்ள சில தமிழர்களால் ஐனநாயகத்தின் பெயரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆகக்குறைந்த ஜனநாயகக் கோரிக்கைகள் கூட சரியாக முன்னெடுக்க முடியாத இவர்கள் அதேவேளையில், "இனப்பிரச்சனைக்கான சரியான தீர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்’’ என இவர்கள் துள்ளிக் குதிப்பதன் அர்த்தம் புரியவில்லை. ஐயா! இனப்பிரச்சனைக்கு அப்படி என்ன சரியான தீர்வை வலியுறுத்தினீர்கள். ஓகோ அதுகும் பரம ரகசியமா இருக்கட்டும், இருக்கட்டும்.

இந்த ஜனநாயகவாதிகளால் ஏன் இந்தப் பேச்சு வார்தைகளையும், அரசியலையும் மக்கள் முன் பகிரங்கமாக நடத்தும் படி கோரமுடியவில்லை? இது என்ன முட்டாள் தனமான கேள்வி. நோர்வேயும் சரி, ஐரோப்பிய நாடுகளும் சரி, அரசும் சரி, புலிகளும் சரி ஒரு திறந்த பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லை என்ற அரசியல் அரிச்சுவடி புரியாதவராக இருக்கின்றீர் என்று முணுமுணுப்பது கேட்கிறது. அப்ப தெரியாமல்தான் கேக்கிறன். யாருக்காக, எதுக்காகப் பேச்சுவார்த்தை? சாதாரண மக்களோ தெரிந்து கொள்ள முடியாத, தெரிந்து கொள்ளக் கூடாத பேச்சுவார்த்தைகளும், அதன் தீர்வுகளும் எப்படியய்யா இனப்பிரச்சனைக்கான சரியான நிரந்தரத்தீர்வாக இருக்கப்போகிறது? புலியும், அரசும் பறந்து பறந்து குசுகுசுப்பது, தத்தமது அதிகாரங்களை தக்கவைப்பதற்கும், தமது பணப்பெட்டிகளை குறையாமல் பார்த்துக் கொள்வதற்கு மட்டுமேயல்லாமல் அவர்கள் வேறு எதையும் பேசத் தயாராகவும் இல்லை. இவர்களுக்கு அந்தத் தேவையும் இல்லை, அதுபற்றிக் கருசனையுமில்லை. இவர்கள் இனப்பிரச்சனைக்கான தீர்வைப்பற்றி பேசுகிறோம் என்பதே சுத்தப் பம்மாத்து!

சுதேகு

Wednesday, February 22, 2006

புலிப் பினாமிகளும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும்

மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும்

பி.இரயாகரன்
04.02.2006


தமிழ் சமூகம் சமூக சீரழிவுக்குள்ளாகி வரும் ஒரு வரலாற்று காலகட்டத்தில் நாம் எம்மை அறியாது பயணித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ்மக்களின் படித்த சுயநலம் கொண்ட முட்டாள்தனத்தையே பயன்படுத்தி உருவான புலிப் பாசிச பயங்கரவாதம், மக்களின் வாழ்வை உறுஞ்சிக் குடிப்போருக்கு இசைவானதாகவே உள்ளது. சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களையே எதிரியாக்கி ஒடுக்கி நிற்க, புலிகள் சிங்கள அரசை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு தமிழ்மக்களையே அரையடிமைகளாககியுள்ளளர். இதன் மூலம் ஒரு கும்பல் உழைபின்றி உழைப்பை சூறையாடி வாழ்வதே தேசியமாகிவிட்டது. மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகள் சொந்த உழைப்பின்றி, இவர்கள் கருதும் தேசியத்தையே உறிஞ்சி வாழ்வது எதார்த்தமாகிவிட்டது.

இந்த நிலையில் புலி அல்லாத ஒரு பிரிவு இந்தியக் கைக்கூலிகளாகவும், இலங்கை அரசின் கைக்கூலிகளாகவும் சிதைந்து போனார்கள். மற்றொரு பகுதி இலக்கியம் செய்கின்றோம் என்ற சொல்லிக் கொண்டு, மக்களுக்கு எதிரான தமது சொந்த தனிமனித வக்கிரத்தையே இலக்கியமாக்குகின்றனர். இன்னுமொரு பிரிவு ஏகாதிபத்திய அரசியல் ஏஜண்டுகளாக, அதன் கூலிப்பட்டாளமாக மாறிவருகின்றனர். இவை அனைத்தும் புலிப் பாசிசத்தை சொல்லியே, தமது மக்கள் விரோத நடத்தைகளை நிலைநாட்டுகின்றனர். இதன் மூலம் தங்களின் சொந்த கைக்கூலித்தனத்தையே அரசியலாக்கி நியாயப்படுத்துகின்றனர். புலியெதிர்ப்பு அணியாகவும், அதேநேரம் தம்மைத் தாம் ஜனநாயகத்தின் ஒரு குரலாக அடையாளப்படுத்தியபடி ஒருங்கிணைந்த ஒரு குரலாக காட்ட பிரயத்தனம் செய்கின்றனர்.

இவர்கள் அனைவரும் அரசியல் ரீதியாகவே முரண்பட்ட கருத்துகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள். மக்கள் பற்றி அக்கறையற்ற ஒரு கும்பலாக, விசுவாசிகளாக, ஊதுகுழல் பினாமிகளாக சிதைந்து, எதிர்தரப்பு மீது அவதூறுகளை பொழிகின்றனர். புலிகள் தொடங்கி புலியெதிர்ப்பு அணிவரை அனைவரும் ஒத்த, ஒரே அரசியலையே செய்கின்றனர்.

இவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் நலன், அவர்களின் விடிவு பற்றி சொற்களில் கூறுகின்றவர்கள், தமிழ் மக்களின் விடிவு நலன் என்னவென்பதை சொல்வது கிடையாது. தேசியத்தின் பெயரில் ஒருபுறமும், மறுபக்கம் ஜனநாயகத்தின் பெயரிலும், இவர்கள் தத்தம் நிலையில் மக்களையே கூட்டிக் கொடுத்தே அரசியல் விபச்சாரம் செய்கின்றனர்.

புலிகள் முன்வைக்கும் புலித் தேசியத்தை, ஜனநாயகம் பேசுவோர் தேசியம் என்று கூறி தூற்றுவது பரஸ்பர உடன்பாட்டுடன் நிகழ்கின்றது. இது போன்றே மார்க்சியத்தை கொச்சைப்படுத்தி விளக்குவதும், தூற்றுவதும் நிகழ்கின்றது. ஜனநாயகம் பேசுவோர் புலிகள் போல் உலகமயமாதலை ஆதரிப்பதால் தான், தேசியத்தை புலியின் பெயரால் அடையாளப்படுத்தி அதை கொச்சைப்படுத்துகின்றனர். புலிகள் உலகமயமாதலை ஆதரிப்பதால், தேசியத்தை கொச்சையாக கேவலமாக்கி, அதை குறுகிய எல்லைக்குள் சிதைக்கின்றனர். இதுவே இன்று பிரபாகரன் ஆட்சியே தேசியமாக காட்டி, குறுகி கூனிப்போகின்றது. உலகமயமாதலை ஆதரிக்கும் புலிசார்பு, புலியெதிர்ப்பு வலதுசாரி அணிகள், தேசியத்தை அதன் இடது நிலைக்கு எதிராக உயர்த்தி அதைச் சிதைக்கின்றனர். உண்மையில் இரு அரசியல் போக்கும் செய்யமுனைவது, உலகமயமாதலுக்கு எதிரான அணிகளின் கருத்துக்களத்தை இல்லாதாக்குவது தான். மக்களின் சமூக பொருளாதார உள்ளடகத்தை இல்லாதாக்கி, ஏகாதிபத்தியங்களின் பண்ணைகளின் வாழும் மந்தைகளுக்குரிய ஒரு நிலைக்கு சமூகத்தை இட்டுச் செல்வதைத்தான்; இவர்கள் செய்கின்றனர். இதனால் தமிழ் மக்களின் சமூக பொருளாதார கூறுக்கு எதிராகவே, இவர்களின் வலதுசாரிய அரசியல் உள்ளது.

இதனால் ஒருபுள்ளியில் இருந்து மறுகோடி வரை விடையங்களை திரிப்பது, கொச்சைப் படுத்துவது, அவதூறு பொழிவது என்பதே அவரவர் அரசியலாகிவிட்டது. மலிவான இழிவான பிரச்சார உத்தி, சமூகத்தை தமது சொந்த வக்கிரத்துக்குள் அங்கு இங்குமாக கிழித்தெறிகின்றது. மக்கள் பற்றி, அவர்களின் விடுதலை பற்றி, அந்த விடுதலை என்ன என்பது பற்றி யாரும் வாய்திறந்து பேசுவது கிடையாது. புலித் தேசியம், புலியெதிர்ப்பு ஜனநாயகம், என்ற சொற்களில் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். மீண்டும் மீண்டும் மனித நாகரிகத்தையே எள்ளிநகையாடும் முயற்சிகளை, தமது சொந்த கைக் கூலித்தனங்கள் மூலம் அரங்கேற்றுகின்றனர். இவைகளில் இருந்து அண்மைய சில உதாரணங்களைப் பார்ப்போம்.

ஒரு பேப்பரில் பச்சோந்தியும் தொழுதுண்டு வாழும் புதுசு ரவியும்

தொழுதுண்டு நக்கிவாழ்வதே தேசியம் என்றால், புதுசு ரவிக்கும் அது அச்சொட்டாகவே பொருந்திவிடுகின்றது. நக்கிவாழ எதுவெல்லாம் தேவையோ, அதை இந்த தெருநாய் செய்ய முனைகின்றது. கல்லெறிவாங்கி உயிருக்கு அஞ்சியோடிய இந்த தெருநாய், வீட்டுவாசலில் நின்று குரைத்து வீட்டிற்குள் வருவோர் போவோருக்கு விசுவாசமாக வாலையாட்டி, வளர்ப்பு நாய் வேடமிட்டு தன்னைத்தான் காட்ட முனைகின்றது. சேயோன் என்ற புனைபெயரில் எழுதும் இந்த புதுசு ரவி, புலிப்பாசிசத்துக்கு அன்னக்காவடியாகிய போது அவர்கள் பாணியில் தூற்றுவதே அவரின் அரசியலாகிவிட்டது.

புலிக்கு எதிரான புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய ஆதரவுக் கோஸ்டியை, அரசியல் ரீதியாக மக்கள் நலனில் நின்று அம்பலப்படுத்த முடியாத அரசியல் வறுமையில், மற்றவனை தூற்றுவது அரசியலாகி விடுகின்றது. முன்னாள் புலிகள் புதுசு ரவியை துரோகியாக கருதியே, அவர்களின் சொந்த வதைமுகாமுக்கு இட்டுச் செல்லவிருந்தனர். அந்த நேரத்தில் புலியில் இருந்த ஒருவரின் துணையுடன், அவர் கொடுத்த கள்ளப் பாஸ்சில் தப்பி வந்தவர்தான் இந்த சேயோன் என்ற புதுசு ரவி. இவர் பின்னால் சரிநிகரில் புலிக்கு எதிராக தொடர்ச்சியாக ஒரு கட்டுரையை புனைபெயரில் எழுதியவர். பின்பு முன்னாள் பல்கலைக்கழக புலி நண்பர்களும், இன்று புலிக்கு ஐரோப்பாவில் முக்கியமான நபர்களாக உள்ள சிலர், உழைத்து வாழாது வழங்கிய (போராட்டத்தின் பெயரில் சேர்த்த பணத்தில்) நிதியில் லண்டன் வரை வந்தவர். வந்தவர் பாரிஸ் ஊடாகவே லண்டன் சென்றவர். என்னுடன் தற்காலிகமாக ஐந்து நாட்கள் வரை தங்கியவர். அப்போதும் என்னுடன் புலிக்கு எதிராகவும், தான் தப்பிவந்த அந்த பாசிசத்தின் கதையையே எனக்குச் சொன்னவர்.

லண்டன் சென்றவருக்கு முன்னால் இருந்தது, வந்த பணத்தை கொடுக்க வேண்டிய நிலை. அங்கிருந்து இங்குவரை கூட்டி வந்தவர்கள் வைக்கும் நிபந்தனைகள். உழைத்துவாழ இடம் கொடுக்காத பொறுக்கித்தனம். சொகுசாக வாழ வழிதேடும் சின்னத்தனம். பணத்தைக் கொடுக்காது, அதேநேரம் மக்களின் பணத்தில் சொகுசாக வாழ வழிகண்ட போதே, இந்த சேயோன் என்ற தொழுதுண்ணும் பாத்திரம் உருவானது. இப்படி புலியாக மாறிய போது, அவர் புலியாக மாறமுன்னும் பின்னுமாக புலிபற்றி எழுதிய கடிதங்கள் பல, என்னிடம் அவரின் கையெழுத்தில் உள்ளது. இதற்கான எனது பதிலும் அவரிடம் உள்ளது. தொழுதுண்டு வாழ்வதை மறுத்து, அவருக்கு அதை விளக்கமுற்பட்டேன். அவன் எனக்கு எழுதிய கடிதத்தில் தொழுதுண்டு வாழ்வது பற்றியே எழுதினான்.

இவனின் கடந்தகாலம் என்ன? என்.எல்.எப்.ரியின் தீவிர ஆதரவாளர். என்.எல்.எப்.ரிக்கு முன்னம் இருந்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியை வழிநடத்திய கமிட்டியின் ஒரு உறுப்பினன். அதாவது ஐவர் கொண்ட கமிட்டியின் ஒருவன். ஆனால் என்.எல்.எப்.ரியில் புதிய அங்கத்துவ விதிக்கு அமைய ஒரு உறுப்பினராக உள்வாங்கவில்லை. ஆனால் என்.எல்.எப்.ரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவன. குறிப்பாக 1986 இல் விஜிதரன் போராட்டத்தில் முன்னணியில் நின்றதுடன், அதில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட படங்களும் கூட உள்ளது. இந்த படங்களை எல்லாம் என்னிடம் பெற்று, இதன் மூலம் தான் பிரிட்டனில் அரசியல் புகலிடம் பெறமுடிந்தது.

இவன் தொழுதுண்டு வாழ்வதே தனிப்பட்ட நலனுக்கு உகந்தது என்ற பின், மற்றவர்கள் மேல் சேறடிப்பதே அவனின் அன்றாட அரசியல் பிழைப்பாகிவிட்டது. இதற்காக மக்களிடம் வசூலிக்கும் பணத்தில் இருந்து இவர்களுக்கு கூலி கொடுக்கப்படுகின்றது. இந்த தொழுதுண்டு நக்கிப்பிழைக்கும் விசுவாசத்தை நிறுவ, பெப்பரவரி 16 இல் வெளியாகிய "ஒரு பேப்பரில்" இந்த தெரு நாய் வாலாட்டி நக்கியுள்ளது. அதில் "சற்று மாறுதலுக்காக தொழுதுண்டு பின் செல்வோர்" என்ற தலைப்பில், ரி.பி.சி ராம்ராஜக்கு எதிராக ஒரு அரசியலற்ற வக்கிரத்தை அடிப்படையாக கொண்டு ஒரு கட்டுரையை எழுதியிருந்தது இந்த நாய். ராம்ராஜ்க்கு எதிராகவும், அவரின் மனைவிக்கு எதிராக கூட பாலியல் வக்கிரத்துடன் இந்த புலிக்கும்பல்களால் இயக்கும் இனம் தெரியாத நபர்களின் இணையங்கள், அன்றாடம் தாறுமாறாக எழுதுவது உண்டு. இப்படி தேசியம் இழிவடைந்து வக்கிரப்படுகின்ற ஒரு தொடர்ச்சியில் தான், புதுசு ரவி தனது பங்குக்கு வக்கரித்து நிற்கின்றான். அதில் குறித்த தலையங்கம் "சற்று மாறுதலுக்காக தொழுதுண்டு பின் செல்வோர்" என்று கூறுவது யாரைப்பற்றி. அது இயல்பில் தன்னனைப்பற்றியதாகவே உள்ளது. இன்று புதுசு ரவி செய்வதே தொழுதுண்டு வாழ்தல் தான். இங்கு சற்று மாறுதலுக்காக அல்ல, மாறாக தொழுதுண்டு கூலிக்கு மாரடித்து பிழைத்தலே நடக்கின்றது. இந்த தெருவோர நாய் மற்றவர் பற்றி கூறுவதே, தனக்கு பொருந்தி விடுவதை தடுத்துவிட முடியவில்லை. இக்கட்டுரையில் அதை அவர் தனக்குத்தானே இப்படிக் கூறிக் கொள்கின்றான். "இவர்கள் ஏன் தொழுதுண்டு பின் செல்கின்றனர்? அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு அடையாளத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைக் கண்டவுடன் அனைத்தையும் ஒடுங்கி கூனிக்குறுகி நிற்கிறார்கள். அதிகாரத்திற்காக அனைவரையும் காட்டிக் கொடுத்துக் கூழை கும்பிடு போடுகிறார்கள்" புதுசு ரவியின் இந்த வரிகள் ராம்ராஜ்க்கு எந்தவிதத்திலும் பொருந்தாது. ஆனால் அது அப்படியே உனக்குத்தான் அச்சொட்டாக பொருந்துகின்றது. உனது நிலையை வைத்து மற்றவனுக்கு நீ அதை கூற முற்படுகின்றாய்.

சரி நீ எதற்கு ஆசைப்பட்டு புலிப்பினாமியானாய். முடிந்தால் அதைச் சொல். எதற்கு தொழுதுண்டு நக்குகின்றாய். நீ லண்டன் சென்ற பின், எப்படி யாரிடம் தொழுதுண்டு உன் வயிற்றைக் கழுவுகின்றாய். உனக்கே தெரியும் நீ யாரைத் தொழுதுண்டு நக்கிப் பிழைக்கின்றாய் என்பது. வந்த பணத்துக்காக புலிப்பினாமியாகியவன் நீ. அவர்களின் பத்திரிகை மற்றும் வானொலியில் அதிகாரத்துக்கான உனது போராட்டம் அனைவரும் அறிந்ததே. உழைத்து வாழமறுத்து, மக்களின் பணத்தில் சொகுசாக வாழ நீ நக்கியதும் நக்குவதும் அறிந்ததே. கூனிக்குறுகி நீ உன் சுதந்திரத்தை அடைமானம் வைத்து, சுதந்திரத்தையே இழந்து தனிமனித புகழ்பாடி தொழுதுண்டு பிழைப்பது உலகம் அறிந்ததே. ந.சபேசனையும் அந்தக் குடும்பத்தையும் இழிவுபடுத்தி, அவர்கள் உனக்கு சோறாக்கிப் போட்ட கோப்பையிலேயே நீ பேர்ந்தபோது, உனது பிழைப்புத்தனம் எது என்பதும் தெரிந்தது. இப்படியும் தெருநாய்களாக பிழைக்கலாம் என்பதை, நீ வாழ்ந்து காட்டுகின்றாய்.

எப்படி இன்று நீ புலியாகி பிழைக்கின்றாயோ, அதைத்தான் நீ லண்டன் சென்றவுடன் செய்தாய். அப்போது உனது லண்டன் விசா முக்கியமானதாக இருந்தது. இதற்கு என்.எல்.எவ்.ரியின் முன்னைய நபர்களின் உதவி தேவைபட்டது. அவர்களின் காலைக் கையை நக்கி, புலிக்கெதிராக நீ ஜனநாயகத்துக்காக போராடியதாக காட்டியே அரசியல் புகலிடம் கோரினாய். பல்கலைக்கழகத்தில் நீ முன்நின்று புலிக்கு எதிராக போராடிய போட்டோக்கள், வீடியோ உட்பட, சரிநிகர் பத்திரிகையில் நீ எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் கூட என்னிடம் பிரதியெடுக்க பணம் தருவதாக கூறி, (இதில் நக்சலைட்டுகளின் பல கசெட்டுகள்) அனைத்தையும் பணமின்றி என்னையே ஏமாற்றியே நீ எடுத்தாய். இப்படித் தான் இன்றைய உன் லண்டன் "வாழ்வை" நீ "தொழுதுண்டு" பெற்றாய். நிலைமைக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப தெரு நாயாக அலைந்தாய். எல்லாமே உனது கடித எழுத்தில் உள்ளது. இப்படித் தொடங்கிய நீ, சொகுசான வாழ்வுக்கு தொழுதுண்டு புலிப்பினாமியாகிய நீ, இன்று புலித்தலைவரையே மேற்கோள் காட்டியெழுதுகின்றாய். மானம் கெட்டவனே உனது நேர்மை தான் என்ன? நீ அண்மையில் வெளியிட்ட "காலம் ஆகிவந்த கதை" என்ற உனது நூலில், உன்னைப்பற்றியே நீ தொழுதுண்டு வாழும் உனது சொந்த அறிமுகத்தில், உன்னையே நீ மறைத்து புலிக்கே அரசியல் வியாபாரம் செய்கின்றாய். நீ என்.எல்.எப்.ரி யின் தீவிர ஆதரவாளராக இருந்ததையும், என்.எல்.எப்.ரியாக பெயர் மாற்றப்பட முன் இருந்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஒரு முக்கிய கமிட்டி உறுப்பினர் என்பதையும் கூட, திட்டமிட்டு யாருக்கு மறைக்கின்றாய். ஏன் மறைக்கின்றாய்.

உனது அறிவுக்கு அனுபவத்துக்கு கல்வியூட்டிய அந்த அரசியல் வரலாற்றை மறைத்து, ஒரு பினாமியாக தொழுதுண்டு ஏன் நக்கமுனைகின்றாய். மானம் கெட்டவனே, நீ தீவிர என்.எல்.எப்.ரி ஆதரவாளனாக செயல்பட்டது, புதுசு சஞ்சிகை எமது கருத்து ஆளுமையில் இருந்துவந்தது எல்லாம் நீ முடிமறைக்கவே முடியாது. புலிகளால் கொல்லப்பட்ட பலருக்கு, உன்னுடைய வீட்டில் நீ உணவு ஆக்கிப் போட்ட 1987 வரையான காலம் அனைத்தையும் நீ மிகவும் திட்டமிட்டு ஏன் மறைக்கின்றாய். சரிநிகரில் நீ ஒரு ஒட்டுண்ணியாக ஒட்டிக் கொள்ள உனக்கு உதவியது முன்னயை என்.எல்.எப்.ரியின் அரசியல் தொடர்பு என்பதையும் கூட நீ மறைக்கின்றாய். ஏன் மறைக்கின்றாய். இப்படி அரசியல் விபச்சாரம் மூலம் மறைக்கும் போதே உனது அரசியல் நேர்மை அரசியல் ஒழுக்கம் கேள்விக்கு உன்ளாகின்றது. தொழுதுண்டு வாழ்வதே பிழைப்பாகின்றது.

நீ பினாமியாகி தெருநாயாக குலைக்க வெளிக்கிட்டவுடன் அமர்தலிங்கம் மங்கையற்கரசியின் இனவாத உரையும் கூட உனது தொழுதுண்ணும் வாழ்வுக்கு மேற்கோளாகின்றது. "இந்தத் துரோகிகளின் மரணம் இயற்கையாய் இராது" என்று எடுத்தும் காட்டி, மனிதனைக் கொல்வதைப் பற்றி நீ பேசுகின்றாய். "கொலை செய்வதால் நாலு பேருக்கு நல்லது நடக்கும் என்றால் அதனையும் செய்யலாம்" என்கின்றாய். பார்ப்பன பாசிசத்தை, அதாவது சாதிய இந்து மதத்தை கட்டமைக்கும் கீதையின் சாதிய வரிகள் தான் இவை. பாசிசத்தை நியாயப்படுத்த நீ இதையே எடுத்துக்காட்டி உனது தொழுதுண்ணும் வாழ்வை வாழப்படுத்துவது நாறுகின்றது. அன்று உன்னை புலிகள் இப்படிதான் கொல்லத் திட்டமிட்டனர். தப்பியோடி வந்த நீ, இன்று அதையே மற்றவனுக்கு பார்த்து குலைத்துச் சொல்வது, தொழுதுண்டு வாழ்வதற்குத் தான். நல்லது நீ மறைத்த இனனுமொரு வரலாறு உண்டு. நீ அமிர்தலிங்கமாக வேடம் போட்டு நடித்த தேர்தல் திருவிழா என்ற நாடகம் பற்றியது. அதைக் கூட உனது நூலில் திட்டுமிட்டு மறைத்துள்ளாய். 1980 முதல் 1983 வரையில், இந்த திருவிழா நாடகம் எத்தனையோ மேடைகள் ஏறினவே. நீ அமிர்தலிங்கமாக வேடமேற்று அவர்களின் அரசியல் மோசடியை அந்த அரசியல் ஒழுக்கக்கேட்டையும் கூட, உனது தொழுதுண்ணும் வாழ்வுக்கு ஏற்ப நீ மறைக்கின்றாய். இப்படி ஒரு நாய்ப்பிழைப்பு உனக்கு எதற்கு. அன்று கூட்டணியின் அரசியல் ஒழுக்கக்கேட்டை அம்பலம் செய்த நீ, அதேநேரம் தனிப்பட்ட ஒழுக்கக்கேட்டை இந்த நாடகத்தின் பின்னனியில் இருந்த சிலர் செய்ததை நாம் பின்னால் அறிந்தோம். அந்த ஒழுக்கக்கேடான விபச்சாரக் கதையை மறைத்தபடி, மற்றவனின் ஒழுக்கத்தைப் பற்றி நீ இன்று பேசுகின்றாய். அன்று அமிர்தலிங்கமாக போட்ட நாடக வேஷத்தை கலைத்து, இன்று அமிர்தலிங்கமாக மாறிநிற்பது தான் இங்கு விசித்திரமான உண்மை. மங்கையற்கரசியின் வார்த்தையை உனது இன்றைய வேடத்தின் பாத்திரத்துக்கு ஏற்ப எடுத்துக்காட்டி, புலிக்கே நடிப்பதால் தான் "இந்தத் துரோகிகளின் மரணம் இயற்கையாய் இராது" என்று கூறி வக்கரிக்க முடிகின்றது. எதிராளியின் அரசியலை விவாதிக்க திறனற்று, கொலைகார கூலிக்கும்பல் எதைச் செய்யுமோ அதையே எழுத்தில் கூலிப்பட்டாளமாகி தொழுதுண்டு குழைவது தொடங்குகின்றது. அன்று மங்கையற்கரசி "இந்தத் துரோகிகளின் மரணம் இயற்கையாய் இராது" என்று கூறும் போது, அதை தொழில் ரீதியான கூலிக் கொலைகளாகச் செய்தவர்கள் தான் இந்த பிரபாகரன் குழு. இன்று அதையே அப்படியே ஒப்புவிப்பது, மக்களை ஏமாற்றி தொழுதுண்ணும் இந்தக் கும்பலின் நக்கிப்பிழைக்கும் பண்பாகின்றது.
இப்படி புலம்பும் இந்த பினாமி முண்டம் மங்கையற்கரசியை மட்டும் மேற்கோள் காட்டவில்லை. தலைவர் பிரபாகரனின் பெயரில் கூட மேற்கோள் காட்டுகின்றது. "ஒர் ஒழுங்கிற்குள் ஒன்றுபடுத்த தேவையான சக்திதான் அதிகாரம்" என்றாராம். நல்லது இந்த அதிகாரம் என்பது தமது கருத்தை திணிக்கவும், மாற்றுக் கருத்தை கொன்று போடுவதற்கே அதிகாரம் என்கின்றனர். இந்த அதிகாரம் எதற்கு? எந்த மக்களுக்கு? இந்த அதிகாரம் மக்களுக்கு எப்படி பயன்படுத்தப்படுகின்றது. மக்களின் அதிகாரம் அல்ல என்பதையும், மக்கள் மேலான தனது அதிகாரம் தான் என்பதையே, இது ஒத்துக் கொள்கின்றது. மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தால் புலிகள் அரசியல் அனாதைகள் ஆகிவிடுவார்கள் என்பதையும் தலைவர் முன்னமே கூறியுள்ளார். நீயும் எம்முடன் சேர்ந்து அதாவது பல்கலைக்கழக மாணவர்கள் போராடிய போராட்டத்தின் போது தான், தலைவர் மக்களுக்கு அதிகாரம் வழங்கினால் புலிகள் அரசியல் அனாதைகளாகிவிடுவர் என்று கூறியதையும் கூட வசதியாக வசதிகருதி நீ குழிதோண்டி புதைக்கின்றாய். தொழுதுண்டு நக்கவெளிக்கிட்டால் எல்லாம் மறந்து போகும். போலியாக அனைவரையும் ஏமாற்றி நடிப்பதே வாழ்க்கையாகி விடுகின்றது.

மக்களுக்கு துரோகம் செய்து, நன்றி கெட்டதனத்தால் பிழைக்கும் நயவஞ்சகன் தான் நீ என்பதையே, உனது வாழ்க்கையாக்கிவிட்டாய்உன்னைப்பற்றியும், உனது கும்பலைப்பற்றியும் நீயே மற்றவர்களின் பெயரில் கூறுவதைப் பார்ப்போம். "நீதியிலிருந்தும் நாம் நழுவலாம். நேர்மையிலிருந்தும் நாம் விலகலாம். ஆயிரம் பொய் சொல்லி நாம் அநியாயம் செய்யலாம். அற்புதமாக நடித்து நாம் செய்த அனைத்துக் கொடுமைகளையும் இல்லையென்றாக்கலாம் நாம் எவ்வவளவோ நல்லவர் என்ற வேஷம் போடலாம்" என்று உன்னைப் பற்றியும் உன்னைப் போல் தொழுதுண்டு நக்குபவர்கள் பற்றியுமே, எதைக் கூறி தொழுதுண்கின்றீர்களோ அதைப்பற்றியுமே நீ கூறுகின்றாய். அப்பட்டமாகவே புலியைப்பற்றி புலிக்குள் இருந்து அதைப்புரிந்து கொண்டு இதை எழுதுகின்றாய் என்பதை, நிச்சயமாக நாம் பாராட்டவே முடியும். இந்தக் கட்டுரையில் ஒரு சில சொற்களை மாற்றிவிட்டால், அப்படியே உன்னைப் போன்று தொழுதுண்ணும் புலிக்கு பொருந்திவிடுகின்றது. தமது சொந்த தொழுதுண்ணும் வாழ்வை எதிராளிக்கு கூறுவதன் மூலம், கடைந்தெடுத்த ஒரு பொறுக்கியின் நடத்தைகள் அம்பலமாகின்றது.

இதற்கு ஏற்ப இந்தப் பன்றி "தோழர்" என்று விழித்து, தனது தொழுதுண்ணும் வேஷத்தையே நரி வேஷமாக்குகின்றது. "ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க ஸ்ராலின் முயற்சித்திருப்பாரேயானால், அப்போதே சோவியத்யூனியன் அமெரிக்காவின் வலைக்குள் வீழ்ந்திருக்கும்..." இப்படி தமது பாசிசத்தை மறைக்க, ஸ்ராலினையே திரித்து விபச்சாரம் செய்கின்றது. இந்த பிழைப்புவாத பரதேசி. ஏன் கிட்லரை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள். கிட்லரிடம் இருந்து பிரபாகரனின் புலிகள் இயக்கம் எப்படி வேறுபடுகின்றது? ஸ்ராலின் பெயரில் அதைத் திரித்து, தொழுதுண்ணும் தமது சொந்த வக்கிரத்துக்கு ஏற்ப கொச்சைப்படுத்துவது இங்கு நிகழ்கின்றது. இதைத் தான் புலியெதிர்ப்பு கோஸ்டியும் செய்கின்றது. ஒரே நிலைப்பாட்டில் நின்று இவர்கள் இதில் ஐக்கியப்படுகின்றனர்.

ஸ்ராலினை ஜனநாயக விரோதியாக காட்ட புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு கோஸ்டியும் கூட அதைத்தான் செய்கின்றது. இரண்டு வலதுசாரிகள் இப்படித் தான் செய்யமுடியும். ஸ்ராலின் ஜனநாயகத்தைப் பாதுகாத்தார் என்பதையே, இவர்கள் முரணிலையில் நிறுத்தி ஒன்றுபட்டு மறுக்க முனைகின்றனர். ஜனநாயகம் என்பது எப்போதும் எங்கும் ஒரு வர்க்கத்தின் ஆட்சியைத்தான் குறிக்கின்றது. ஸ்ராலின் சுரண்டும் வர்க்கத்தினருக்கு ஜனநாயகத்தை வழங்கவில்லை. மற்றைய சகமனிதனின் உழைப்பை சுரண்டுவதும், சுரண்டுவதை நியாயப்படுத்துவதற்கும் பெயர் ஜனநாயகமே அல்ல. இதையே ஜனநாயக மீறலாக காட்டுவது, இவர்களின் சுரண்டலை ஆதரிக்கும் அரசியலாகும். மற்றவனைச் சுரண்டுவது, மற்றவனின் உழைப்பில் வாழ்வது எப்படி ஜனநாயகமாகும்! இதனால் இதை ஸராலின் அனுமதிக்கவில்லை. இதை ஜனநாயகமல்ல என்று அமெரிக்கா பாணியில், புலி ஆதரவு புலி எதிர்ப்பு அணிகள் விளக்கி ஸ்ராலினை இழிவுபடுத்தியே தமது சொந்த மக்கள் விரோத வக்கிரத்தை அரங்கேற்றுவது நிகழ்கின்றது. சமூகத்துக்கு எதிராகவும், சமூகத்தில் தங்கி சிலர் வாழும் எந்த நிலைப்பாடும், அந்த மக்களுக்கே எதிரானது. இதற்கு ஜனநாயகம் எப்படி இருக்க முடியாதோ, அப்படி அதில் தங்கி வாழ்வோரின் நிலைப்பாடும் ஜனநாயகத்துக்கு விரோதமானது. புலிகள் சரி, புலியெதிர்ப்புக் கும்பல் சரி, மக்களின் வாழ்வை சூறையாடி சுரண்டி வாழ்பவர்கள், எப்படி மக்களின் ஜனநாயகத்துக்காக மக்களுக்காக போராட முடியும். சுரண்டுவதும், சூறையாடுவதும் தான் இவர்களின் ஜனநாயகம். இதை மக்களுக்கு மறுப்பதே இவர்களின் அரசியலாகின்றது. இதைத்தான் இந்த நாய்கள், சுதந்திரம் உரிமை என்கின்றனர். இதற்காக புதுசு ரவி தெருநாய் வேஷம் போட்டு குலைப்பது, தனது தொழுதுண்ணும் சுரண்டல் வாழ்வை நியாயப்படுத்துவதை அடிப்படையாக கொண்டது.

ராம்ராஜ் ரி.பி.சி வானொலியில் குடித்துவிட்டு குடிபோதையில் வானொலியில் உளறுவதாக நீ கூறும் போதே, உனது தொழுதுண்ணும் அரசியல் இன்மையைக் காட்டுகின்றது. ரி.பி.சி வானொலியில் அவர்கள் நடத்தும் அரசியல் குடிபோதையிலான உளறல் அல்ல. அவர்களின் மக்கள் விரோத அரசியலை, மக்களின் நலனின் உறுதியாக நிற்பவர்கள் தெளிவாக அம்பலப்படுத்த முடிகின்றது. மக்கள் நலனுடன் தொடர்புடையவர்கள் யாரும் அவர்களுடன் இல்லை. இந்த நிலையில் யார் மக்கள் நலனில் இல்லையோ, அவர்களுக்கு இது குடிபோதையில் உளறுவதாகவே தெரியும். இதை கேட்கும் நீங்கள் குடிபோதையில் கேட்கும் போது தான், மற்றவன் குடிபோதையில் இருப்பதாக பிரதிபலிக்கின்றது. உனது இந்த பிரதிபலிப்பை நீ என்னுடைய பாரிஸ் வீட்டில் தங்கிய போது, போதையில் நீ மற்றவன் கதவெல்லாம் தட்டி அவர்களை எல்லாம் அதிர்வுக்குள்ளாக்கிய போதே நான் அறிவேன். குடிபோதையில் ரி.பி.சியை எதிர்கொள்வது, இயற்கை மரணம் உனக்கு இல்லை என்பது விசித்திரமானது. குடிபோதையில் உளறுபவர்களுக்கு இயற்கை மரணமில்லை என்று கூறி தண்டனை வழங்குவது, மங்கையற்கரசி வழியில் நியாயப்படுத்துவது தான் உங்கள் அதிகாரத்துக்கான தேசிய தலைவரின் வழிகாட்டலோ! தலைவர் குடிபோதையில் உள்ளவருக்கு மரணதண்டனைகளையே வழங்குகின்றார்.

குடிபோதையில் மானிட விடுதலைக்கு விரோதமாக ராம்ராஜ் உளறுகின்றார் என்றால், அந்த மானிட விடுதலை என்ன? உங்கள் தலைவரின் மேற்கோளில் இருந்து எமக்கு காட்டுங்களேன். முன்பு மானிட விடுதலை என்று புலிகள் "சோசலிச தமிழீழம்" என்ற நூலில் "தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு … அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்றனர். "தேசிய விடுதலை எனும் பொழுது ….ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மானத்தையுமே" தமது இலட்சியம் என்றனர். அதை அவர்கள் எமக்கு விளக்கும் போது "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வாகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடன், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்… " ஆட்சியாக அமையும் என்றனர். மேலும் அவர்கள் விளக்கம் போது "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. … வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு… பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் உடூருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்கமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" என்றார். இது மானுடம் சார்ந்தது. இதையா இன்று புலிகள் செய்கின்றனர். இதற்கு எதிராக அல்லவா நீயும் அவர்களும் உள்ளனர்.

ராம்ராஜ்சும் அவரின் பின்னால் உள்ள புலியெதிர்ப்பு கும்பலும் மானிட விடுதலைக்காக செயல்படவில்லை என்பதும், அதற்கு எதிராகவும் உள்ளனர் என்பது ஒருபுறம். ஆனால் நீங்களும் அதைச் செய்யவில்லை. மானிடத்துக்கு எதிராகவே புலிகள் உள்ளனர். ரி.பி.சியும் அந்தக் கும்பலும் எதைச் செய்கின்றது என்பதை கீழே தனியாக பார்க்கவுள்ளேன். குடித்துவிட்டு புலம்பும் அந்தக் கருத்தை "சட்டையில் ஒட்டியிருந்த தூசியைப் போல் தட்டிவிட்டுச் செல்வேன்" என்று கூறும் நீ, ஏன் இயற்கை மரணமில்லை என்று முரண்பாடாகவே புலம்புகின்றாய். குடித்துவிட்டா நீ எழுதினாய். சட்டையில் உள்ள தூசி போல் தட்டிவிட்டுச் சென்ற நீ, இதேபோல் அன்று 20 ரூபாவுக்கு விலை பேசிய கதையையும் நான் அறிவேன். நீ கடைசியாக நீ மட்டும் இரண்டாவது முறையாக 20 ரூபா கொடுக்காது இலவசமாக அனுபவித்து விட்டு தூசு தட்டிய கதையையும் நான் அறிவேன். அன்றே நீ சுரண்டினாய். அன்றே சட்டைப்பையில் இருந்த தூசை நீ தட்டினாய் என்றால், இன்று எவ்வளவு பொருத்தமாகவே தொழுதுண்டு தூசு தட்டுகின்றாய். அது மட்டுமா கங்கேசன்துறையில் இருந்து வெளிகிட்ட வான் ஒன்றில் நீ செய்த கூத்தையும் நான் அறிவேன். இதைப்பற்றி ஒரு கதையை நீ அனுபவத்துடன் எழுதேன். ஏன் மற்றவனின் ஒழுக்கத்தை பற்றி நீ பினாற்றுகின்றாய். ராம்ராஜ்சின் ஒழுக்கத்தைப் பற்றி நீ கேட்க முன், மற்றவனுக்கு தெரியாது என்று நீ கருதும் உன் ஒழுக்கத்தைப் பற்றி, நீ உன்னையே முதலில் தெரிந்துகொள். புலியைப் பாசிட்டுகள் என்ற நீ, இன்று தெருநாயாக ஒரு பரதேசியாக தொழுதுண்டு நக்குவதைப் புரிந்துகொள். உனது நக்குத்தனத்துக்கு மார்க்சிய தலைவர்களையே விபச்சாரத்துக்கு கூவி அழைப்பதை நிறுத்திக் கொள்.

நீ புலியாக விரும்பினால் அது உன் சுதந்திரம். ஆனால் மக்களை விபச்சாரம் செயயும் சுதந்திரத்தை உனக்குத் யாரும் தரவில்லை. மக்களின் பெயரில் தொழுதுண்டு வாழ்வது ஒழுக்கமுமல்ல, நேர்மையுமல்ல. மனிதயினத்தை உங்கள் சொந்த நலனுக்காக விரும்பியவாறு எல்லாம் புணர்ந்து போடுவது, தொழுதுண்டு நக்கிவாழ்வதற்குத்தான். நீ சொல்லுகின்றாய் "ஜனநாயகம் என்று பீற்றிக் கொள்கிறார்களே இந்த ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்த காவலர்கள். ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் தேவைதானா? இவர்கள் சொல்லும் ஜனநாயகம் எத்தகையது" சரி நீ சொல்லும் ஜனநாயகம் என்றால் என்ன? நீ தொழுதுண்டு வாழ்வதையா கூறுகின்றாய்? நீ ஏன் மக்களின் ஜனநாயகத்தை வெறுக்கின்றாய்? மக்கள் ஜனநாயகம் உனக்கு என்ன செய்யும்? அவர்கள் கேட்பது ஜனநாயகம் இல்லை என்றால், நீ ஜனநாயகம் என்று எதைக் கருதுகின்றாய். நீ தொழுதுண்ணாது எப்படி ஜனநாயகத்துக்காக போராடுகின்றாய்? எப்படி? அதை முதலில் சொல்.

நீ கூறும் ஜனநாயகம் புலிகளை அரசியல் அனாதையாக்காத ஜனநாயகம் தான். அன்று நீ எம்முடன் சேர்ந்து போராடிய போது, உனது முகத்துக்கு நேராக 28.11.1986 இல் வீசிய துண்டுப்பிரசுரத்தில் இதை தெளிவாகவே கூறினார்கள். "..விடுதலைப் புலிகள் அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று கூறினார்கள். அன்று நீ எம்முடன் சேர்ந்து மக்களின் நலனுக்காக கோரியது என்ன. "மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்" , "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." இதைத்தான் நீ இன்று மறுக்கின்றாய். புரிகிறது, இதனால் தான் உனது நூலில் இந்த வரலாற்றையே தொழுதுண்ண மூடிமறைத்தாய். வேறு எதற்காக இவற்றை எல்லாம் மூடிமறைத்தாய்!

உனது தொழுதுண்ணும் நாய் வேஷம் பலவற்றை இழிவுபடுத்துவதில் தொடங்குகின்றது. பாரிஸ் ஈழமுரசில் சோபாசக்தியின் கதையை இழிவாக்கினாயே. ஒருகாலத்தில் நீ பாரிஸ் அம்மா சஞ்சிகையில் போற்றிய அதே சோபாசக்தியை, நீ எப்ப தொழுதுண்ண தொடங்கினாயோ அப்போதே இழிவாடத் தொடங்கினாய். ந.சபேசனுக்கு எதிராக வரிந்துகட்டி வலிந்து எழுதி அனுப்பிய அவதூறில்

"ரமணி என்று பரவலாக அறியப்பட்ட மருத்துவபீட மாணவரான இவர் - தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியின் (NLFT) மத்தியகுழு உறுப்பினர் என்கின்ற காரணத்துக்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் 1989 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சபேசன் என்கின்ற இந்த நபர் - தனது பெயரில் தொகுத்த எந்த நூலுக்காவது இவ்வாறு ஒரு குறிப்பு எழுதியிருந்தால், நாங்கள் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால் எங்களின் பெயரில், அதாவது புதுசுகளின் பெயரில் இவ்வாறு எழுதியதையிட்டு நாம் கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம் என்கின்ற வார்த்தையுடன் இதனை நாம் விட்டுவிடப் போவதுமில்லை.

இந்த செல்வகுமாரனை நான் 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டிருக்கின்றேன். அதுபோக, தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் என்கின்ற காரணத்துக்காக நாங்கள் செல்வகுமாரனை கடத்திக்கொன்றுள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் அறிக்கை விட்டார்களா? அல்லது இவருக்காவது, யாருக்காவது இரகசியமாகச் சொன்னார்களா? சபேசன் என்கின்ற இந்த நபர் - தானே காரணத்தைக் கற்பித்து, அதனைத் தன் பெயரில் அல்லாது புதுசுகளின் பெயரில் பிரசுரிப்பதற்கு என்ன காரணம்."
என்று தொழுதுண்டு குலைக்கின்றாய். "நாங்கள்" என்று பாசிசமாகி வக்கரிக்கின்றது. புலிகள் தான் கடத்தினர். புலிகள் தான் கொன்றனர். உனக்கு இல்லை என்று (எம்மீது துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்திய படி) சொல்லும் உரிமை எப்படி உள்ளதோ, அதே போல் சொல்லும் உரிமை எங்களுக்கும் உண்டு. புதுசு சஞ்சிகைக்கு சபேசனுக்கு உரிமை இல்லையென்றால், உனக்கும் அது கிடையாது. அதை மறுத்து ஏன் பினாற்றுகின்றாய். ரமணியை புலிகள் கடத்தி சித்திரவதை செய்து கொன்றது மட்டுமல்ல, ரெலோ அழிப்பு முதல் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஒருவரை புலிகள் கொன்று வந்தனர். தாம் கொன்றுவந்ததை புலிகள் சொன்னார்களா என்று கேட்பது இங்கு அர்த்தமற்றது. நீ புலியின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி கொழும்பு நோக்கி ஏன் ஒடினாய்? யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கு நீ தான் தகவல் வழங்குவதாக கருதிய புலிகள், உன்னை கைது செய்ய முயன்ற போது, உனது முன்னைய பல்கலைக்கழக புலி சகா தகவல் தந்து கள்ளப் பாஸ் எடுத்துத் தந்து தப்பியோடி வந்தாய் அல்லவா, ஏன்? தலைவரின் அதிகாரம் பற்றிய அவரின் மேற்கோளுக்கு இணங்க விசுவாசமாக அவர்களின் வதைமுகாமில் பிணமாகி இருக்கலாமே. நாங்கள் புலிகள் சொன்னார்களா என்று கூறி, உன் கதையை உன்னைப் போன்ற தொழுதுண்ணிகள் முடித்திருப்பார்கள்.

இதை எல்லாம் மறந்துவிட்டு ஏன் புலம்புகின்றாய். அங்கு நடந்த கொடூமைகளைப் பற்றி நீ பலருக்கு கூறினாய். ரமணியை புலிகள் கடத்தியது பற்றி கூட நீ எனக்கு கூறினாய். புதுசு பற்றி நீ வம்பளக்காதே. புதுசின் பிந்திய காலத்தில் என்.எல்.எப்.ரி.யின் பலரின் கருத்துகள் அதற்குள் உள்ளதை மறந்துவிடாதே. எப்படி இது சாத்தியமானது. ரமணி உட்பட பலர் எப்படி இதில் எழுத முடிந்தது என்றால், புதுசு உன் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. என்.எல்.எப்.ரியின் ஆளுமைக்குள், அக்கருத்தின் பின் நீயும் இருந்தாய் என்பதே.

நீயும் புதுசுவாக இருப்பதால், சபேசனும் புதுசுவாக இருப்பதால் அவர் அவர் தத்தம் கருத்தை புதுசு சார்பாக சொல்லும் உரிமை உண்டு. ஆனால் புதுசு கொண்டிருந்த கருத்துக்கே, நீ இன்று எதிராக இருப்பதால் அந்தக் கருத்தின் சார்பில் சபேசன் சொல்வதற்கே அதிக உரிமை உண்டு. நீ தொழுதுண்டு வாழ புறப்பட்ட பின், கடந்த காலத்தையே மறைத்து நக்கிப்பிழைக்க வெளிக்கிட்ட பின்பாக, புதுசுவினதும் அதில் என்.எல்.எப்.ரியின் உறுப்பினர்களின் கருத்துகளின் அரசியல் உள்ளடகத்தை மறுக்கும் நீ, அந்த அரசியல் உள்ளடக்கத்தை உரிமைகோர முடியாது. அது தான் நீ ரமணியை புலிகளா கொன்றார்கள் என்று தொழுதுண்டு கேட்கின்றாய்! நீ இயற்கை மரணம் இல்லையென்று மற்றவர்களுக்கு பிரகடனம் செய்கின்ற போது, அதையும் நாங்களா செய்தோம் சொன்னோம் என்று தொழுதுண்ணக் கேட்பாய். அதுவே உனது ஒழுக்கம். அதுவே துப்பாக்கியை நீட்டியபடி நீ கூறும் உனது அதிகாரம் சார்ந்த பாசிசமாக உள்ளது.

ஜனநாயகம் பேசும் புலியெதிர்ப்பு ரி.பி.சி கும்பலும் ராம்ராஜ்சும்

புதுசு ரவி தான் தொழுதுண்டு கொண்டுவாழும் அரசியல் ஒழுக்கத்தை ரி.பி.சி ராம்ராஜ்சுக்கு எதிராக காட்டியபடி எப்படி இருக்கின்றான் என்பது சொல்லில் ஒரு சின்ன வேறுபாடுதான். நான் ஏன் தொழுதுண்டு பின் செல்லுகின்றேன்.? அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு அடையாளத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைக் கண்டவுடன் அனைத்தையும் ஒடுங்கி கூனிக்குறுகி நிற்கிறேன். அதிகாரத்திற்காக அனைவரையும் காட்டிக் கொடுத்துக் கூழை கும்பிடு போடுகிறேன் என்கின்றான் ரவி. இவர் இப்படி என்றால், ராம்ராஜ் எப்படி வாழ்கின்றான்.

ஒன்றும் மக்களுக்காக அவன் வாழவில்லை. மக்களைச் சொல்லி வாழ்கின்றான். எப்படி வாழ்கின்றான்? புலியைச் சொல்லி, புலிக் கொடுமைகளைச் சொல்லி தமது சொந்த மக்கள் விரோதத்தை மறைத்துக் கொண்டு வாழ்கின்றான். இலங்கை பேரினவாத சிங்கள அரசாங்கம் முதல் ஏகாதிபத்தியம் வரை, அவர்களுடன் கூடிக்குலாவி வாழ்கின்றான். புலிகள் நீங்கள் மட்டும் அப்படி செய்யமுடியும் என்றால், அதை நான் செய்யும் உரிமையைத் தான் அவன் ஜனநாயகம் என்கின்றான்.

இந்த ராம்ராஜ் முன்னாள் புளாட். பின்னால் ஈ.என்.டி.எல்.எப். இப்படித் தான் இவனின் அரசியல் உள்ளது. ஈ.என்.டி.எல்.எவ் இந்திய கூலிப்பட்டாளமாக மட்டும் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு மூலம் இலங்கையில் கால்பதித்து இயங்கிய போது, அதில் ஒரு கூலிக்கும்பலாக சென்றவன் தான் இவன். இன்று ஜனநாயக வேஷம். அதுவும் ஏகாதிபத்திய கூலிக் கும்பலாக, அவர்களின் தயவில் அரசியல் செய்யத் தொடங்கியுள்ளான்.

இப்படி அன்று கூலிக் குழுவாகச் சென்றவன், கடந்தகாலத்தை சுயவிமர்சனம், விமர்சனம் செய்து மக்களுக்காக இயங்கினால் அவனின் கடந்த காலத்தை பற்றி நாம் விமர்சிக்க முடியாது. அன்று மக்களுக்கு எதிராக என்ன அரசியலில் எப்படி இவர்கள் செயல்பட்டனரோ, அப்படியே அதே அரசியலையே இன்றும் செய்கின்றனர். இதனால் தான் அந்த அரசியல் கொண்ட, மக்கள் விரோத கூலிக்கும்பல்கள் ஒன்று இணைகின்றன. இதற்கு ஜனநாயகம் ஒரு போர்வையாகியுள்ளது. முன்னாள் புலிப்பினாமி ஜெயதேவன் புலியிடம் தனக்கு மகுடம் சூட்டும்படி வலிந்து தூது சென்ற போது, மகுடத்துக்கு பதில் சிறையும் தண்டனையும் கிடைத்தது. இந்த நிலையில் தப்பிவந்தவர், கடந்தகாலத்தை மக்கள் நலனில் நின்று தன்னை சுயவிமர்சனமும் செய்யவில்லை, அதை விமர்சிக்கவுமில்லை. தங்களைப் போன்ற புலிப் பினாமிக்கே இந்தக் கதியா என்ற அங்கலாயப்பில், புலியெதிர்ப்பு அணியில் இணைந்து கொணடவர். மக்களுக்காக இவர்கள் அரசியலை முன்னெடுக்க முடியவில்லை.

ராம்ராஜ்சும் புலியிடம் தென்றல் தூதுவிட்டவர்தான். மாவீரர் உரை உடனடியாக ஐரோப்பாவில் முதன் முதலில் ஒளிபரப்பிய பெருமை கூறும் இவன், மக்களுக்காக அல்ல புலிக்கு துதிபாடியாகவே வானொலியை நடத்தியவன். இவர்களின் இன்றைய ஜனநாயகம், அன்று நாற்றம் கொண்ட குசுவாகிக் கொண்டிருந்தது. ஜெயதேவனுக்கு எது நடந்ததோ அதுவே ராமராஜ்சுக்கும் நடந்த போது, புலியெதிர்ப்பு அணியாகி திடீர் ஜனநாயகவாதியானார்கள். இந்த புலியெதிர்ப்பு ஜனநாயகம், மக்கள் நலனை முன்னிலைப்படுத்தவில்லை. மாறாக புலியுடன் பங்குகொண்டு சுகித்து வாழமுடியாத அங்கலாய்ப்பே, புலியெதிர்ப்பு அரசியலாகியது. மகுடங்கள், அதிகாரங்களின்றி வாழமுடியாத நிலையில், ஜனநாயக வேஷம் போட்டு குதிரையாட்டம் ஆடுகின்றனர்.

ராம்ராஜ் புளாட்டில் கொலைகார கும்பலாக இருந்த காலத்திலும், பின்னால் ஈ.என்.டி.எல்.எப் இந்தியக் கைக்கூலியாக இலங்கையில் இறங்கிய போது செய்த மானுடவிரோத கொடுமைகள், புலிக்கு எந்தவிதத்திலும் குறைந்தவையல்ல. உள்ளியக்க கொலைகள், தேடியழிக்கும் கொலைகள் தான் கடந்தகால ராம்ராஜ்சின் அரசியலாக இருந்தது. தாம் ஆதரித்து துணை நின்று செய்த கொலைக்காக, அவர்கள் ஒருநாளும் மனம் வருந்தியது கிடையாது. ராம்ராஜ் கடந்தகால மகக்ள் விரோத சொந்த அரசியலை சுயவிமர்சனம் செய்யாமையால் தான், இன்று பிரிட்டிஸ் அரசின் கைக்கூலிகளாக மீண்டும் அதே அரசிலுடன் அவதரிக்கின்றனர். ஏகாதிபத்திய துணையுடன் அரசியல் கைக்கூலி கொலைகளை செய்யும் காலத்தை எதிர்பார்த்து, ஜெயதேவனுடன் சேர்ந்து அணிதிரட்டலை முடுக்கிவிட்டுள்ளனர். தீவிர வலதுசாரிய நிலையை எடுத்து, இடதுசாரிய நிலையை கொச்சைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

1982.01.02 சித்திரா அச்சகத்தில் புலிகள் தொடங்கிய சுந்தரம் படுகொலை, 1982.05.19 பாண்டி பஜார் உமாமகேஸ்வரன் மீதான பிரபாகரனின் துப்பாக்கிச் சூடு, 1982.05.26 இறைகுமாரன் உமைகுமாரன் மீதான புளாட் படுகொலையாக பரிணமித்து. அன்று தொடங்கிய புளாட் படுகொலைகளின் பின், நடந்த தொடர் படுகொலைகளில் கதாநாயகர்களில் ராம்ராஜ்சும் ஒருவன். புளாட்டின் உள்நடந்த 500 மேற்பட்ட உட்படுகொலைகள் இந்தியாவில் நடந்தபோது, ராம்ராஜ் அந்த இயக்கத்தின் பெருமைமிக்க கொலைக்கு ஆதரவான ஒரு உறுப்பினர். கொலையை எதிர்த்தவர்களையும், கேள்வி கேட்டவர்களையும், மக்கள் நலனை பேசியவர்களையும் இவர்கள் தேடி கொன்றொழித்தனர். பின்னால் கொலைகார உமாமகேஸ்வரனுக்கும், பரந்தன் ராஜனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட அதிகாரத்துக்கான மோதலின் போது, கொலைகாரன் பரந்தன் ராஜன் குழுவின் தூண்களில் ஒருவனாக ராம்ராஜ் மாறினான். இதன் பின்னணியில் இந்தியாவும் செயல்பட்டது. பரந்தன் ராஜன் இந்திய கைக்கூலியாகி எடுபிடிகளாக மாறிய போது, ராம்ராஜ் அந்த இயக்கத்தின் கொலைகார கும்பலாகவே செயல்பட்டவன்.

இக்காலத்தில் இயக்கத்தின் உள் ஜனநாயகத்துக்காவும், வெளி ஜனநாயகத்துக்காவும் நடத்தப்பட்ட போராட்டத்தில் பலர் இவர்களால் தமது உயிரை இழந்தனர். இன்று இவர்கள் தம்மைத் தாம் ஜனநாயகவாதிகள் என்கின்றனர். முட்டாள்களே நம்புங்கள். அன்று இவர் என்ன செய்தவர். அந்த கொலைக்கான சூத்திரதாரிகளில் ஒருவர். அவர் ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கவில்லை. இதனால் தான் இந்த புலியெதிர்ப்பு கும்பலின் இன்றைய ஜனநாயக வேஷத்தில் கூட, திட்மிட்டு கடந்தகால ஜனநாயகத்துக்கான போராட்டத்தையும், அதில் தமது சொந்த இரத்தக்கறைகளையும் மூடிமறைக்கின்றனர். அன்று அப்படி ஒரு ஜனநாயகத்துக்கான போராட்டம் நடந்ததைக் கூட இருட்டடிப்பு செய்கின்றனர். அதற்காக அன்று பலர் உயிர்தியாகம் செய்தனர். இதை எல்லாம் திட்டமிட்டு மறைக்கின்றனர். ஏன் இன்று அந்த அரசியலைக் கூட சேறடிக்கின்றனர். மாறாக இன்று கைக்கூலியாக இறப்பவர்களைப்பற்றி மட்டும் பேசுகின்றனர். போகிறபோக்கில் ஜனநாயகத்துக்காக மரணிப்பவர்களை கூலிக்கும்பல்களின் கொலையுடன் போட்டுவிட்டுச் செல்லுகின்றனர்.

ஈ.என்.டி.எல்.எப் என்ற பரந்தன் ராஜனின் குழு நேரடியாகவே இந்தியக் கூலிக்கும்பலாகவே வளர்ச்சியுற்றது. ஜனநாயகத்துக்காக போராடுபவர்களை போட்டுத்தள்ளி, தனிமனித சர்வாதிகார புலிப்பாணி இந்தியக் கூலிக் கும்பலாகவே வளர்க்கப்பட்டது. இதன் போது ராம்ராஜ் அந்த கூலிக்கும்பலின் தூண்களில் ஒருவர். அமைதியின் பெயரில் சமாதானப் படையின் பெயரில், இந்தியா இலங்கையை ஆக்கிரமிப்பை நடத்தியபோது, அதன் கூலிப்பட்டாளமாக இந்திய விமானங்களிலும் கடற்படைக் கப்பல்களிலும் களமிறங்கியவர்களின் தொழிலே மனித வேட்டையாடுதல்தான். கொலை, கொள்ளை, கற்பழிப்பே இந்தக் கூலிப்பட்டாளத்தின் தொழிலாகியது. முன்பு புளாட் இயக்கத்தில் இருந்து விலகியவர்களை இரத்தவெறியுடன் இவர்கள் தேடி அழித்தனர். புலிகள், புலி ஆதரவாளர்கள், மக்கள் என்று பலரைக் கொன்றுபோடும் கூலிப்பட்டாளமாகவே செயல்பட்டவர்கள் தான் இவர்கள்.

தொழில்முறை கூலிப்பட்டாளமாக இருந்த இவர்கள், புலிகள் பிரேமதாச தேனிலவின் போது அங்கிருந்து இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தப்பியோடியவர்கள். இப்படி தப்பியோடிவர்களில் இருந்து ராம்ராஜ் பின்னால் லண்டன் வந்தவர் தான். ஆனால் ஈ.என்.டி.எல்.எப் உடன் தொடர்பை இன்று வரை கொண்டிருப்பவர். இன்று இவர் இதற்கு இட்டுள்ள பெயர் ஜனநாயகம். கடந்தகால கூலிப்பட்டாள கூலி அரசியலை, இவர்கள் சுயவிமர்சனம் செய்தவர்களல்ல. அதாவது சுயவிமர்சனம் என்பது மக்களுக்காக, அவர்களின் நலனுக்காக போராடுவது தான் சுயவிமர்சனம். கடந்த காலத்தில் மக்களுக்காக போராடியவர்களை நீங்களும் மற்றவர்களும் நரவேட்டையாடி கொன்ற போது, அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களை இன்று முன்னிலைப்படுத்தி அதை முன்னெடுப்பதுதான் சுயவிமர்சனம். அந்தக் கருத்துகள் தான் மக்களின் ஜனநாயகத்தை அடிப்படையாக கொள்கின்றது. ரி.பி.சி ராம்ராஜ் கும்பல் இதையா செய்கின்றது! செய்வது என்ன, அதே கூலிப்பட்டாள கைக்கூலி அரசியல். சந்தர்ப்பம் கிடைத்தால், ஈராக்கிய அரசில் இன்று உள்ள கூலிக் கும்பல் போல் செயல்படும் நனவுடன், பிரிட்டிஸ் அரசியல் ஏஜண்டுகளாக மாறிவிட்டனர். இதை யாரும் மறுக்கமுடியாது. இதைத்தான் அவர்கள் ஜனநாயகம் என்கின்றனர். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை ஆளும் அரசியல்வாதிகள் இலங்கை பிரச்சனையை எப்படிக் கையாளவேண்டும் என்று நினைக்கின்றனரோ, அதைத் தான் இந்தக் கும்பல் அவர்களின் பினாமியாக மாறி நிற்கின்றனர். ஜெயதேவன் என்ற முன்னைய புலியின் இன்றைய வருகை, அதே புலி அரசியலுடன் துல்லியமாகி வேகமான ஏகாதிபத்திய ஜனநாயகமாகி வருகின்றது.

இவர்கள் செய்யப் போவது என்ன? இவர்கள் செய்ய நினைப்பது என்ன? தமிழ் மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் விடுதலைக்காக போராடுவதல்ல. புலிக்கு மாற்று என்ற பெயரில், புலியாக தமக்கென ஒரு இடத்தைத் தேடுவது தான். இதைத்தான் ஏகாதிபத்தியத்தின் அரசியல் இராணுவ முனைப்புடன் செய்யமுனைகின்றனர். இதை தவிர வேறு எதையும், மக்களுக்கு இவர்கள் தரப்போவதில்லை. இந்த மக்கள் விரோத அரசியலைத்தான் அவர்கள் ஜனநாயகம், சுதந்திரம் என்று பினாற்றுகின்றனர். இவர்கள் ஜனநாயகம் என்று கோருவது தமது சொந்த கூலிப்பட்டாள அரசியல் சுதந்திரத்தையே ஒழிய, மக்களின் சமூக பொருளாதாரம் சார்ந்த சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையுமல்ல.

1. இந்த வகையில் இவர்கள் தெளிவாகவே தேசிய எதிர்ப்பை முன்வைக்கின்றனர். புலிகள் தேசியத்தை வைப்பதால் அதை எதிர்கின்றனர். புலிகளின் தேசியம் மக்கள் விரோதமானது என்பதை சொல்வதில்லை. தேசியத்தைய புலிகள் வைக்கின்றனர் என்ற இவர்களின் எடுகோளே தவறானது. உண்மையான தேசியத்தை இவர்கள் பகுத்தறிவு கொண்டு பார்ப்பதில்லை. திட்டமிட்ட வகையில் இதை மக்களுக்கு மூடிமறைகின்றனர். புலிகளில் இருந்து மாறுபட்ட உண்மையான மக்கள் தேசியத்தை முன்னிலைப்படுத்துவதை திட்டமிட்டு செய்வதில்லை. மாறாக இவர்கள் உலகமயமாதலை ஆதரிப்பதால், விசுவாசமாக ஏகாதிபத்தியத்துக்கு முண்டுகொடுக்க தேசியத்தை எதிர்க்கின்றனர். தேசியம் என்பது பிற்போக்கானது என்கின்றனர். இப்படிப் புலியின் பெயரில் திடட்மிட்ட வகையில் உலகமயமாதலுக்கு ஆதரவாக தேசிய எதிர்ப்புக் கோட்பாட்டை வைப்பதால், தேசிய எதிர்ப்பை புலியின் பெயரில் முன்னிலைப்படுத்துகின்றனர். இப்படி ஏகாதிபத்திய கைக்கூலிகளாக அரசியல் ரீதியாக மாறிவருகின்றனர்.

2. இடது எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு அணிகளாக, இவர்கள் உள்ளனர். இதை இவர்களின் புலியெதிர்ப்பு அரசியலூடாகவே, தம்மை அடையாளம் காட்டத் தொடங்கியுள்ளனர். இடதுசாரி கருத்துகள் இன்றைய தமிழ் மக்களின் வாழ்வில் ஆளுமை செலுத்தாத நிலையிலும் கூட, இடதுசாரிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அந்த கோட்பாடுகள் மீதான சேறடிப்புக்களை அன்றாடம் புலிகளுடன் போட்டிபோட்ட படி இந்தக் கும்பலால் செய்யப்படுகின்றது. இந்தக் கும்பல் புலியின் வலதுசாரி போராட்டத்தை, இடதுசாரிய போராட்டத்துக்கு ஒப்பிட்டு கருத்துரைப்பதும், அதே போன்றதாக திரித்து தூற்றுவது அதன் மைய அரசியலாகவே உள்ளது. இதை அவர்கள் அமெரிக்கா, பிரிட்டின் ஜனநாயக பாசிச ஏகாதிபத்திய அரசியலுடன் ஒப்பிடுவதில்லை. புலிகள் அந்த அரசியலைத்தான் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.

சொந்த வலதுசாரிய புலி அரசியல் நிலையை தக்கவைக்க, இடதுசாரி அரசியல் மீதான தாக்குதல் அவசியமாகி விடுகின்றது. புலிகள் என்ற தீவிர வலதுசாரிய அரசியல், அமெரிக்கா தலைமையிலான ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டது. இதை மறுதலிக்க மற்றொரு வலதுசாரிய அணி என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்கின்றது. இடது எதிர்ப்பாக, கம்யூனிச எதிர்ப்பாக மாறி, இதுவே அதன் மையமான அரசியல் உள்ளடக்கமாகி விடுகின்றது. இதனால் தான் இந்தக் கும்பல், கடந்தகாலத்தில் உள்ளியக்க படுகொலை மற்றும் மாற்று இயக்க படுகொலையில் முதலில் பலியான இடதுசாரிய வரலாற்றை குழிதோண்டிப் புதைக்கின்றனர். கிட்லரின் பாசிசம் நிலவிய போது, அதற்கு எதிராக போராடி முதலில் உலகெங்கும் பலியானவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே. அதை பின்னால் ஏகாதிபத்தியம் மறைத்து, பாசித்துக்கு துணைபோன தாங்களே பாசிச எதிர்ப்பாளராக நாடகமாடி வரும் வரலாற்றுக்கு இது ஒப்பானது. அன்று மக்களின் நலனை முன்னிறுத்தி முன்னெடுத்த சரியான அரசியல் நிலையையே, இன்று இவர்கள் எதிர்த்தே மக்கள் விரோத அரசியல் செய்கின்றனர். அன்று இடதுசாரிகள் மீதான கொலைகளுக்கு துணைபோனவர்கள், கொலைகளை முன்னின்று செய்தவர்கள், இன்று ஜனநாயக வேஷமிட்டுள்ளார்கள். அன்றைய ஜனநாயகவாதிகளின் ஆவிகளைக் கூட திட்டமிட்டு வெளிவராது பார்த்துக் கொள்கின்றனர். தாம் ஏன் அன்று கொலை செய்தோம், ஏன் அதற்கு துணைபோனோம் என்பதைக் கூட அவர்கள் சுயவிமர்சனம் செய்து, மக்களுக்காக மரணித்த அவர்களின் மக்கள் அரசியலை யாரும் முன்னெடுக்க மறுப்பதில் இருந்தே, தமது சொந்த வலதுசாரிய நிலையை மீண்டும் புலிக்கு மாற்றாக அதிகாரத்துக்கு கொண்டு வரவே துடிக்கின்றனர். புலிக்கு மாற்றாக அன்று இந்திய இராணுவத்துடன் களமிறங்கிய கூலிக்கும்பல் நிலையில் களமிறங்கும் மறுமுயற்சிதான் இன்று நடக்கின்றது.

3. புலியெதிர்ப்பு அரசியலை இவற்றுக்கு பின்னால் பூச்சுட்டிக் காட்டப்படுகின்றது. புலியின் மக்கள் விரோத சமூக பொருளாதார அரசியல் கண்ணோட்டத்தை இவர்கள் விமர்சிப்பதில்லை. புலிகளின் உதிரியான நடத்தையை மட்டும் கவனமாக தேர்ந்து திட்டமிட்டு இவர்கள் விமர்சிக்கின்றனர். அதன் அரசியலையல்ல. உண்மையில் இந்த புலியெதிர்ப்புக் கும்பல் புலிகளின் அரசியலை விமர்சிக்காமல் அதை பாதுகாத்துக் கொண்டு, அதை தம்மளவில் சுயவிமர்சனம் செய்யாமல் கட்டமைப்பது புலி அரசியலைத்தான். அதை தாம் ஜனநாயக வழியில், நாகரிகமான வழியில் கையாளப் போவதாக பீற்றுகின்றனர்.

புலிகள் ஏன் இப்படி ஆயிரக்கணக்கில் கொல்லவேண்டும். கொல்லவேண்டும் என்று திட்டமிட்டு இயக்கத்தை உருவாக்கியவர்களல்ல. புலியின் அரசியல் மக்களுக்கு எதிராக இருப்பதால், மக்கள் நலன் சார்ந்த முரண்பாடுகளை கையாள்வதற்கு கொலைகள் ஒரு வழியாகின்றது. இந்த புலிகள் இடத்தில் யார் இருந்தாலும், புலி அரசியலில் இதுதான் நிகழும். மக்களின் அரசியல் என்பது, மக்களின் பொருளாதார வாழ்வு சார்ந்தது. இந்த புலியெதிர்ப்புக் கும்பல் என்ன அரசியலை மக்களுக்காக வைக்கின்றது. புலி அரசியலைத் தாண்டி எதுவுமில்லை. ஏகாதிபத்திய விசுவாசிகளாக, மக்களைச் சூறையாடிவரும் உலகமயமாதலை தமிழ் மக்களின் முதுகில் சுமத்திவிடுவதைத் தான், இவர்கள் புலியெதிர்ப்பின் பின்னால் செய்கின்றனர். பிரிட்டிஸ் அரசின் ஒரு அரசியல் ஏஜண்டாகவே ஜெயதேவன் அரங்கில் வெளிவந்த பின்பாக, என்ன நடக்கின்றது என்பதை அன்றாடம் நாம் காண்கின்றோம். ஏகாதிபத்தியம் எதை விரும்புகின்றதோ, ஏகாதிபத்திய அரசியல் நிலைப்பாடு எதுவோ, அதுவே புலியெதிர்ப்பு அரசியலாகின்றது. மக்கள் பற்றிய நிலைப்பாட்டில், இது மிகத் துல்லியமாக அரங்கேறுகின்றது. இந்தக் கும்பலின் இணையங்கள் முதல் வானொலி வரை, ஏகாதிபத்திய நிலைப்பாட்டை முன்னுரிமை கொடுத்தே பிரச்சாரம் செய்கின்றன. அதை ஆதரித்து, அதற்கு கொள்கை விளக்க கட்டுரையை எழுதுகின்றனர்.
புலிகள் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளையும், அவர்களின் சமூக பொருளாதார கூறுகளையும் மறுத்து நிற்கின்றனர் என்ற உண்மையை, புலியெதிர்ப்பு அணி திட்டமிட்ட வகையில் கண்டுகொள்வதில்லை. இது போன்ற கருத்துகளை அவர்கள் சகித்துக் கொள்ளக் கூட அவாகள் தயாராகவில்லை. புலிகள் பாணியில் இதை எதிர்கொள்கின்றனர். இது போன்ற கருத்துகளை திட்மிட்ட வகையில் அவர்கள் பிரசுரிப்பதில்லை. இது போன்ற கருத்துகள் வந்தால், அவற்றை முடிந்தவரை வரவிடாது தடுக்கின்றனர். இதைத்தான் இந்த பிரிட்டிஸ் எஜண்டுகளாக தம்மை காட்டிக்கொள்ளும் கும்பல் செய்யத் தொடங்கியுள்ளது. இதற்கு இசைவாகவே புலியைப் போல் ஊடகத்துறையை பொய்யும் புரட்டுகளாலும் அசிங்கப்படுத்துகின்றனர். இதைப்பற்றி இந்தக் கும்பல் மௌனமான உடன்பாட்டுடன், பரஸ்பர உறவுடன் இயங்குகின்றனர்.

புலியெதிர்ப்பு கும்பல் புலியைப் போல் செய்தி வெளியிடுகின்றனர்.

புலிகளின் எப்படி தமிழ்மக்களை முட்டாளாக்கி, தமது சொந்த வலதுசாரிய அரசியலுக்கு ஏற்ப மக்களை தயார்படுத்தி செய்தித்துறையை கைப்பற்றி அங்கு அரசியல் விபச்சாரம் செய்கின்றனரோ அதையே புலியெதிர்ப்பு கும்பலும் தமது சொந்த வக்கிரத்துடன் தமது செய்தித்துறையை விபச்சாரத்துக்கு விட்டுள்ளனர். நிதர்சனம் டொட் கொம் எப்படி இயங்குகின்றதோ, அப்படி புலியெதிர்ப்பு அணியும் தனக்கு கொம்களையும் நெற்றுகளையும் உருவாக்குகின்றனர்.

செய்திகளின் உண்மைத் தன்மையையே புணர்ந்துபோடுவதும், அவதூறுகள் கட்டமைப்பது வரை, புலிகள் மட்டுமல்ல புலியெதிர்ப்பு அணியும் தனக்கு ஏற்ப அவற்றை சொந்தமாக்கியுள்ளது. இணையத்தில் வந்ததாக கூறிக் கொண்டு அவற்றை ரி.பி.சி, பாய் விரித்து விபச்சார தரகனாக மாறி சமூகத்தின் முன் இட்டுச் செல்லுகின்றது. கும்பல் அரசியலில் ஒரு இணக்கப்பாடான விபச்சாரத்தை, அவதூறை பரஸ்பரம் இணைந்து செய்கின்றனர். நிதர்சனம் டொட் கொம்மை விமர்சிப்பவர்கள், தமது புலியெதிர்ப்பு டொட் கொம்களை விமர்சிப்பதில்லை.

ஒரு விடையத்தின் உண்மைத் தன்மையை சிதைத்து, மக்களை மந்தை நிலைக்குள் இட்டுச் செல்வது புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அணியினதும் அரசியலாகிவிட்டது. நிதர்சனம் டொட் கொம் ஒன்று சொன்னால், நெருப்பு டொட் கொம் வேறு ஒன்றைச் சொல்லும். தகவலின் சாரம் வேறு ஒன்றாக இருக்க, இரண்டும் தத்தம் வக்கிரப்பாணியில் பூச்சூட்டி அலங்கரித்து சிங்காரித்த பின் அதை வெளியிடுகின்றனர். நிதர்சனம் டொட் கொம்மை கண்டிப்போர், நெருப்பு டொட் கொம்மை கண்டிப்பதில்லை. பொய்யும் புரட்டையும் தமது சொந்த அரசியல் வக்கிரத்துக்கு ஏற்ப புணர்ந்து, அதை செய்தியாக்கி அதை சமூகத்தின் முன் பேர்ந்து விடுகின்றனர்.

இதில் தேனீ முதல் நெருப்புக் கொம் வரை ஆதாரமற்ற பொய்களை எல்லாம் கூட்டி அள்ளியே செய்தியாக்குகின்றனர். தாங்கள் சொல்லும் செய்திக்கு தர்க்க ரீதியான உண்மையோ, ஆதாரமோ அவர்களுக்கு அவசியமானதாக இருப்பதில்லை. மக்களை முட்டாளாக கருதுபவர்கள் இவர்கள். இதைத் தான் புலிகள் செய்கின்றனர்.

மக்கள் நலனற்ற இந்த இணையங்களில் எதைத்தான், அவர்கள் எழுதமுடியும்;. முடிவாக புலியெதிர்ப்பு அரசியல், புலி ஆதரவு அரசியலை அடிப்படையாக கொண்டு புணர்ந்து விடுவது நிகழ்கின்றது. புலிகள் எதை மறைக்கின்றனரோ அதை கொண்டு வந்த இந்த இணையங்கள், படிப்படியாக அதை திரித்து அனைத்தையும் புலியாக்குவது நிகழ்கின்றது. உதாரணமாக புளாட்டில் ஒருவர் கொல்லப்பட்டால் நிதர்சனம் டொட் கொம், அதை புளாட்டே கொன்றதாக எழுதுகின்றது. புலியெதிர்ப்பு இணையங்கள் இதே மாதிரி புலி கொல்லப்பட்டால், புலியே கொன்றதாக எழுதுகின்றது. இப்படி எல்லா விடையமும் புணரப்படுகின்றது. இதற்குதான் புலியெதிர்ப்பு ஆய்வுகளும், அரசியலும் புளுக்கின்றது.

உதாரணமாக புதுசு ரவி ஒரு பேப்பரில் ராம்ராஜ்க்கு இயற்கை மரணமல்ல என்று கூறி தொழுதுண்டு வாழமுற்பட்ட போது, தேனீயில் பெயர் குறிப்பிட்டு எழுதமுடியாத அரசியல் அனாதை ஒன்று விமர்சனம் என்ற பெயரில் பொய்யையும் புரட்டையும் கூட்டிவைத்து புணர்ந்தெழுதியது.

இவர்கள் எப்படி செய்திகளை புனைந்து புணர்கின்றனர் என்பதைப் பார்ப்போம். புதுசு ரவியின் பாசிச அரசியலை விமர்சிக்க மக்கள் அரசியல் வழி இருந்தும், ஒரே வலதுசாரிய அரசியல் என்பதால் விமாசிக்க முடியாது புலிப்பாணி அவதூறுகளை புனைந்து புணர்ந்து விடுவது இங்கு நிகழ்கின்றது. தேனீயின் புலியெதிர்ப்புக் வலதுசாரிக் கட்டுரையில் "1986ல் புலிகளால் தடை செய்யப்பட்ட என்.எல்.எப்.டி. என்னும் ஈழ விடுலை அமைப்பொன்றின் அங்கத்தவராக சிறிது காலம் இருந்து புலிகளுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டவராவார்." என்று புதுசு இரவி பற்றி கூறுகின்றனர். இப்படி கூறுவது பொய்யும் பித்தலாட்டமுமே. மிகவும் இழிந்த நிலையில் இது முன்வைக்கப்படுகின்றது. இதைத் தான் புலிகள் செய்பவர்கள். நான் அந்த இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினராக 1983 முதல் 1988 வரை இருந்தவன். புதுசு இரவியை இயக்கத்தில் இருந்து என்.எல்.எப்.ரி விலக்கியதே இல்லை. இதில் புலி என்று நாம் அவனைக் கூறியதே கிடையாது. என்.எல்.எப்.ரி இருந்த வரை, அவன் அதன் தீவிர ஆதாரவாளராக இருந்தவன். எங்கிருந்து எப்படி இந்தப் பொய்யை கட்டமைக்க முடிகின்றது. இப்படித்தான் பல கட்டுரைகள் மற்றும் செய்திகள்.

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி பெயர் மாற்றப்பட்டு புதிய அங்கத்துவ விதிகள் வரமுன், அதை வழிநடத்திய கமிட்டியின் உறுப்பினர் என்ற தகுதியும், அந்த உறுப்புரிமையும், என்.எல்.எப்.ரி புதுசு இரவிக்கு வழங்கவில்லை. இது அந்த அமைப்பின் பழைய மத்தியகுழு உறுப்பினர் ஒருவரைத் தவிர, மற்றைய அனைவருக்கும் வழங்கப்படவில்லை. அமைப்பின் அங்கத்துவ விதிகள், தனிமனிதனின் செயல்பாடுகள், கொள்கை கோட்பாடுகள், உறுதியற்ற தன்மை, நேர்மையீனம் போன்ற பல காரணத்தினால் அதை வழங்கவில்லை. ஆனால் இரவி என்.எல்.எப்.ரியில் தீவிர ஆதரவாளராகவும், போராட்டங்களில் வழமை போல் பங்கு கொண்டவன். இவரை புலிக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி நீக்கியதாக கூறுவது அப்பட்டமான அவதூறாகும். இன்று அதையே இரவி செய்கின்றான் என்பது வேறு. உண்மையை உண்மையாக கூறாது கற்பனையில் தூற்றுவது, புலியெதிர்ப்பு அரசியல் எவ்வளவு விபச்சாரமாக உள்ளது என்பதை இது நிறுவுகின்றது.

இந்த விபச்சார அரசியலை மேலும் பார்ப்போம். "என்.எல்.எப்.ரி. அமைப்பின் தலைவர் தோழர் விஸ்வானந்ததேவன் அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தோழர்.விஸ்வானந்ததேவனின் பயண விபரங்களை புலிகளுக்குத் தெரியப்படுத்தியவர் இரவி அருணாசலமே என தற்போதும் சந்தேகிக்கப்பட்டு வருகிறது." இப்படி கூறுவதற்கு பொய்காரனுக்கு தோழமை வேறு தேவைதானா! தோழமையையே கேவலமாக்கி, வாய்வைத்து குதறுவது இது. முதலில் விசுவானந்ததேவனை புலிகள் தான் கொன்றார்களா என்பதே, இன்னமும் உறுதி செய்யமுடியவில்லை. இதற்குள் இவர்கள் இப்படி கூறமுடிகின்றது. கடலில் காணாமல் போன விசுவின் குழுவுக்கும், அவருடன் வள்ளத்தில் இருந்த பொதுமக்கள் 28 பேருக்கும் என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாது. கடற்படையா அவரைக் கொன்றது அல்லது புலிகளா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. அவர்களின் உடல்கள் கூட இதுவரை கிடைக்கவில்லை. வள்ளம் மட்டும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தேனீயில் இரவிஅருணாசலமே புலிக்கு காட்டி கொடுத்ததாக கூறுவதன் பின்னாலுள்ள அரசியல் மிகவும் கேவலமானது. இதில் மற்றொரு பொய், முன்னமே புலி உளவாளியாக என்.எல்.எப்.ரியால் வெளியேற்றப்பட்டதாக கூறும் கட்டுரையாளர், இரவிக்கு எப்படி விசுவின் பயணம் தெரியவரும் என்பதை பற்றி அவரின் அவதூறுக்கு அக்கறை இருக்கவில்லை. சொந்த அரசியல் புத்தி இப்படி கோணங்கித்தனமாகி வக்கரிக்கின்றது.

அடுத்து விஸ்வானந்ததேவனின் பயணம் பகிரங்கமாகவே இருந்தது. குருநகர் கடற்கரையில் அன்று பயணம் செய்ய இருந்த 28 பொதுமக்களுடன் மக்கள் கூடி நிற்கவே ஆரம்பமானது. அந்த வள்ளம் வெளிகிட்ட தளத்தில் புலிகள் கூட இருந்தனர். யாரும் யாரையும் காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. எல்லோர் முன்னிலையில் தான், அவரின் பயணம் ஆரம்பித்தது. தேனீயின் புலியெதிர்ப்பு கற்பனைச் செய்தியில் பொய்யும் புரட்டுமே கொப்பளிக்கின்றது.

இது போன்றே மற்றொரு புரட்டு. "பெண்ணிலைவாதியும், சர்வதேச "பெண்" விருதுபெற்ற கவிஞருமான யாழ் பல்கலைக்கழக மாணவி செல்வி புலிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதிலும் இரவி அருணாசலத்திற்கு தொடர்பிருந்ததாக பிரஸ்தாபிக்கப் பட்டிருந்தது. " திடீர் ஜனநாயகவாதிகள், இப்படி திடீர் கண்டுபிடிப்புகள் திடீரென மலிவுவிலையில் பிரசுரிக்கின்றனர். செல்வி கடத்தப்பட்டதில், எப்படி உள் தொடர்பு இருந்தது. செல்வியை தெரியாதவராக, திடீர் ஜனநாயகவாதிகளாகிய நீங்கள் இருந்திருக்கலாம். மக்கள் போராட்டத்தை எம்முடன் முன்னின்று முன்னெடுத்த அவரை அனைவருக்கும் நன்கு தெரியும். யாழ்பல்கலைக் கழகத்தில் அவர் பகிரங்கமாகவே எம்முடன் செயல்பட்டவர். தில்லை, செல்வி, விமலேஸ்வரன் இன்னும் பலர். இவர்களை யாரும் யாருக்கும் காட்டிக்கொடுக்கும் நிலையில் ஒளித்திருக்கவில்லை. தமது சொந்தக் கருத்துடன் அவர்கள் பகிரங்கமாகவே செயல்பட்டவர்கள். விமலேஸ்வரன் சுடப்பட்ட 1988 ம் ஆண்டில் அன்றே நான் தலைமறைவாகிய போதும், அன்று நானே விமேலேஸ்வரனுக்காக ஒரு போராட்டத்தை நடத்தினேன். அப்போதும் மக்களுக்காக போராடிய பலரும், எந்த நேரமும் தமக்கு என்ன நடக்கும் என்ற ஒரு நிலையில் தான் அனைத்தையும் எதிர்பார்த்து இருந்தனர். அவர்கள் கடத்தப்பட்ட போது, அவர்கள் தலைமறைவாகி இருக்கவில்லை. ஏன் செல்வி அசோக்கை காதலித்து இருந்தபோதும் கூட, ஈ.என்.டி.எல்.எப் பரந்தன் ராஜனுடன் அசோக் சென்றதை அரசியல் ரீதியாக ஏற்றுக் கொண்டதேயில்லை. அரசியல் ரீதியாக அவருக்கு முரணாகவே இருந்தவர். அதனால் தான் அவர் மக்கள் மத்தியில் உண்மையாக இருந்தார். யாரும் அவரை காட்டிக் கொடுக்க முடியாது. அவரை அனைவரும் நன்கு அறிவர். அவர் உண்மையான ஜனநாயகத்துக்காக அன்று மரணித்த பலரின் குரல்களில் ஒருவராக இருந்தவர். திடீர் ஜனநாயகவாதிகளுக்கு இது தெரியாது இருப்பதால் தான், எதிராளிக்கு எதிராக இப்படி புனையமுடிகின்றது. இப்படி இருக்க, இதை கேவலமாக எதிராளியை அரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வக்கிழந்து தூற்றுவது ஏன்? புலியும் இதைத் தான் செய்கின்றது. புலியெதிர்ப்புக் கும்பலும் இதைத் தான் செய்கின்றது.

அடுத்த பொய்யையும் புரட்டுமான வக்கிரத்தைப் பார்ப்போம். "1986ல் இதர இயக்கங்கள் அனைத்தும் புலிகளால் தடைசெய்யப்பட்டு, அவை அனைத்தினதும் அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் புலிகளால் வேட்டையாடப்பட்ட பின்னரும் வடபகுதியில் தொடர்ந்து வாழ்ந்து வந்த திரு அருணாசலம் அவர்கள் பின்னர் புலிகளால் கொழும்புக்கு அனுப்பப்பட்டு சரிநிகர் என்னும் பத்திரிகையிலிருந்து கட்டுரைகள் வரைந்து வந்துள்ளார்." இப்படி கூறும் உங்களுக்கு, இது அல்லது அது என்ற புலிக் காய்சல் தீர்வாகின்றது. புதுசு ரவி புலிகளால் கைது செய்யப்படும் உத்தரவு தெரிந்து கொண்ட இவரின் முன்னாள் பல்கலைக்கழக புலிச் சகாவே தகவல் கொடுத்து, இவருக்கு கள்ள பாஸ் கொடுத்து தப்பியோடச் செய்தவர். ஏன் இவரை கைது செய்ய முயன்றனர். மனித உரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க குழுவுக்கு யார் தொடர்ச்சியாக செய்திகளை வழங்குகின்றனர் என்ற புலிச் சந்தேகத்தில், இவரின் பெயரும் அடங்கும். இதனால் தான் இவரை வதைமுகாமுக்கு இட்டுச்செல்ல முயன்ற சம்பவத்தை தொடர்ந்து இவர் கொழும்பு தப்பிவந்தவர். தப்பிவர உதவியதும் ஒரு புலிதான்.

இதன்பின் சரிநிகரில் புனைபெயரில் (இந்த புனைபெயரில் ஒன்று இயக்கத்தில் அவனுக்கான புனை பெயர்) இரண்டு முக்கிய தொடரை எழுதியவன். அதில் ஒன்று புலிக்கு எதிரானது. இப்படி தான் இருக்கிறது உண்மை. ஆனால் அவன் புலிப்பினாமியாகி தொழுதுண்டு வாழத் தொடங்கிய இன்றைய நிலையில், அவனின் பாசிச அரசியலை விமர்சிக்க மக்கள் அரசியல் உண்டு. மக்கள் அரசியலை முன்னெடுக்க முடியாதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு துரோகி, காட்டிக் கொடுப்பு, புலி உளவாளி என்று கற்பனையில் வந்ததை எல்லாம் புலியெதிர்ப்பில் பேர்ந்து விடுகின்றனர். உண்மைக்கு பதில் பொய்யும் புரட்டும், நிதர்சனம் டொட் கொம்மின் விபச்சார நிலைக்கு தம்மை இட்டுச் சென்று இருப்பதையே இது காட்டுகின்றது. நிதர்சனம் டொட் கொம் என்ன செய்கின்றதோ அதையே மேலும் வக்கிரமாக செய்யவே நெருப்பு கொம் முனைகின்றது.

தேனீயில் இருந்த செய்தியை உள்வாங்கி, செய்தியை திரித்து அவதூறை பல மடங்காக்குகின்றனர். இவர்கள் தமக்குள் பரஸ்பரமாக செயல்படுவதில் ஒரு ஒருமைப்பாடு உண்டு. புலிகளின் பல இணையத்தளங்கள் எப்படி ஒன்றுபட்டு வசைபாடல்களை செய்கின்றதோ, அதைத் தான் புலியெதிர்ப்பு இணையங்களும் செய்கின்றன.

இந்த விடையத்தை நெருப்புக் கொம் "கொலைக்கு தூபமிடும் மாக்ஸிஸவாதிகள்!" என்று செய்தி போடுகின்றது. இப்படி தமது வலதுசாரிய நிலையில் நின்று மார்க்சியம் மீதான தாக்குதலை நடத்துகின்றனர். புதுசு இரவி தொழுதுண்டு புலிப்பினாமியான பின், புலிக்கு வாந்தியெடுப்பவன் எப்படி மார்க்சியவாதியாக முடியும். குறைந்தபட்சம் இடதுசாரியாகவே இருக்க முடியாது. ஆனால் வலதுசாரிய கருணாவின் புலி வக்கிரத்தை நியாயப்படுத்தி கொலைகளை ஆதரிக்கும் இந்த புலியெதிர்ப்பு இணையம், மார்க்சியம் மீதான தாக்குதலை புதுசு இரவியின் பெயரில் நடத்துகின்றது. புதுசு இரவியும் கூட உங்களைப் போல் ஒரு வலது சாரிதான். உங்களைப் போன்ற ஒருவன் தான். நீங்கள் அரசியலில் என்ன செய்கின்றீர்களோ, அதையே அவன் செய்கின்றான். இதில் உங்களுக்கு இடையில் அரசியல் வேறுபாடு எதுவும் கிடையாது. இடதுசாரிய நிலை என்பது உங்களுக்கும் சரி, அவனுக்கும் சரி கிடையாது.

இந்த அவதூறில் "தம்மை மாக்ஸிஸவாதிகள் என்றும், லெனின் மார்க்ஸ் போன்றவர்களின் பின்னர் அடுத்த தலைவர்கள் தாமே என்ற போர்வையில் வாழும் முன்னாள் NLFT யின் முக்கியஸ்தர்கள்." என்று கூறுவதன் மூலம், புலிப்பாசித்தையே மார்க்சியமாக திரித்து காட்டும் இவர்கள், கண் இருந்தும் கண் இல்லாத குருடர்களாக நடிக்கும் இவர்களின் வலதுசாரிய அரசியல் இப்படித்தான் இருக்கும். முன்னாள் என்.எல்.எப்.ரி இயக்கம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே அல்ல. அது ஒரு தேசிய விடுதலை முன்னணி. இதற்குள் ஒரு கட்சி இருந்தது. முன்னணியின் ஆதரவாளரான இரவிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதுபோல் என்.எல்.எப்.ரிக்கு கூட எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் மார்க்சியத்துடன் ஐக்கியத்தை, நல்லுறவை, மார்க்சிய கல்வியை அமைப்பில் எடுத்துச் செல்வதற்கும், மாறுபட்ட கருத்தின் ஜக்கியத்தை உள்ளடக்கிய ஒரு முன்னணியாக இருந்தது. இதனால் தான் அது முன்னணியாக இருந்தது. இதனால் தான் அந்த இயக்கம் மட்டும் தான், திட்டமிட்ட பல மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தது.

ஜனநாயகத்துக்காகவும், மக்களின் சமூக பொருளாதார வாழ்வுக்காவும், இயக்கங்களுக்கு எதிரான பல போராட்டங்களில் என்.எல்.எப்.ரியைச் சேர்ந்தவர்கள் தலைமை தாங்கினார்கள். மார்க்சியத்தை உள்வாங்கிக் கொள்வது, அதை முன்னெடுப்பது என்பது என்.எல்.எப்.ரி என்ற அடையாளத்தை மட்டும் கொண்டு அதை தாக்குவது அபத்தம். மார்க்சியத்தை முன்னெடுப்பது என்பது மக்களுக்காக, அவர்களின் பிரச்சனைக்காக அவர்களுடன் போராடி வாழ்தலாகும். இது உங்களிடம் எதுவும் கிடையாது.

நெருப்புக் கொம்மின் அடுத்த வக்கிரத்தைப் பார்ப்போம். "தமிழீழ போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரும் வங்கி கொள்ளையான ஹற்றன் நஷனல் வங்கிகொள்ளையை மேற்கொண்டு அந்தப்பணத்துடன் ஜரோப்பாவிற்கு இடம்பெயர்ந்தவர்களான இவர்களால் கொள்ளையிடப்பட்ட மேற்படி பணம் ஈழப்போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் பிரயோசனப்படாமல் அவ் அமைப்பில் இருந்த ஒருசிலரால் மோசடி செய்யப்பட்டுள்ளது. அந்தப்பணத்துடன் ஜரோப்பிய நாடுகளிற்கு இடம்பெயர்ந்தவர்களில் ஒருவர் வன்னிபுலிகளின் பினாமியாக மாறி அவர்களிற்காக "ஒருபேப்பர்" நடாத்துகின்றார்." இது அடுத்த அவதூறு. தேனீ கட்டுரையாளரே தனது கண்டுபிடிப்பு பொய்யில் புனைந்து கூறினார், அவரை இயக்கத்தைவிட்டு வெளியேற்றிய கதையை. அப்படி வெளியேற்றிய ஒருவர் எப்படி இயக்கப் பணத்துடன் வரமுடியும். தமது முன்னைய இன்றைய இயக்க அரசியல் தொழில்முறை கொலைக்கான காரணங்களை கண்டுபிடிக்கும் இந்தக் கும்பல், புலி அரசியலுக்கு ஆதரவாக இருந்த காலம் சரி அணி மாறி புலியெதிர்ப்பு அணியில் இருக்கும் இந்தக் காலத்திலும், இப்படித்தான் தமது அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர்.

கற்றன்நாசனல் வங்கி கொள்ளை பணம் ஈழப் போராட்டத்தில் எவ்விதத்திலும் பயன்படுத்தவில்லை என்று கூறுவது மூலம், அப்படி பிரயோசனமான வகையில் எப்படி பயன்படுத்துவது. சரி பணத்துக்கு என்ன நடந்தது என்று கருணாவையே கேளுங்கள். பணத்தையும், என்.எல்.எப்.ரியிடம் இருந்த பொருட்களையும் கைப்பற்றிய புலிகளின் புலனாய்வுக்கும் சித்திரவதைக்கும் அன்று கருணாதான் தலைமை தாங்கியதாக கூறப்படுகின்றது. இல்லாது போனலும் கூட, கருணா அப்போது முக்கியமான புலித்தலைவர் தான். எப்படி பயன்படுத்தினீர்கள் என்பதை உங்கள் முன்னாள் இன்னாள் தலைவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

புதுசு இரவியை கொழும்பில் இருந்து, அவரின் முன்னாள் பல்கலைக்கழக புலி சகாக்கள் தான் பணம் கொடுத்து கூட்டி வந்தனர். இதை ஒத்துக் கொள்ளும் இந்தச் செய்தி, பின் என்.எல்.எப்.ரியின் பணமோசடி செய்த பணத்தில் வந்து, அந்த பணத்தில் ஒரு பேப்பர் நடத்துவதாக அவதூறு புரிகின்றது.

புலியெதிர்ப்பு அரசியல் அதே புலி அரசியல் வழியில், இந்த மோசடியில் சிலர் என்று கூறுவதன் மூலம், புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல் விபச்சாரத்தை அம்பலப்படுத்துவதை தடுக்க இதை விரிந்த தளத்தில் இணைக்கும் அரசியல் மோசடி இங்கு அரங்கேறுகின்றது. இதுவே புலி அரசியல். பிறகு புலியிடம் இருந்து எந்த ஜனநாயகத்தை கோருகின்றீர்கள். உங்களுக்கும் ஜனநாயகத்துகும் என்ன சம்பந்தம். மோசடிக்காரக் கும்பலே, அவதூறுகளைத் தவிர, உங்களிடம் மக்களுக்கு சொல்ல எதுவுமில்லை.

புலியெதிர்ப்பு அணி சார்பாக வக்கரித்து, கருத்துக்கு பதிலளிக்க வக்கிழந்து புலம்பும் நெருப்புக் கொம் "இவர் இப்படி என்று பார்த்தால் அவரது நாட்டிற்கு அண்டைநாட்டில் வசிக்கும் மற்றையவரோ இன்றும் தான்தான் லெனின் மார்க்ஸ் போன்ற புரட்சிகர தலைவர்களிற்கு பின்னர் மாக்ஸிஸத்தை வழிநடாத்துவது போன்று அவ்வப்போது மின்னஞ்சல் மாக்ஸிஸம் பேசுவதும் வன்னிபுலிகளின் ஜனநாயக விரோத போக்குக்கு எதிராக குரல்கொடுக்கும் ஊடகங்கள் மீது சேறு ப+சுவதும்தான் அவரது மாக்ஸிஸம். இவ் மாக்ஸிஸவாதிகளின் செயற்பாட்டினால் மாக்ஸிஸத்தை விரும்பியவர்களும் வெறுக்கும் நிலை அதிகரித்துள்ளதாக ..." கூறுகின்றார்.

யாரை இங்கு மின்னஞ்சல் அனுப்புவதாக கூறுகின்றீர்கள். உங்கள் புலியெதிர்ப்பு சகா பாலசூரியையா குறிப்பீடுகின்றீர்கள்? புலியெதிர்ப்புச் செய்தியை அன்றாடம் மின்னஞ்சல் செய்யும் அவரையே பக்கத்து நாடு என்ற குறிப்பிடுகின்றீhகள். இப்படி உங்கள் சகாவை, முன்னாள் என்.எல்.எப்.ரியின் தீவிர ஆதரவாளரை நீங்களே இப்படி இழிவுபடுத்தலாமோ?


உண்மையில் இந்த "ஈமெயில்" தாக்குதல் அவரையும் உள்ளடக்கிவிடுகின்றது. ஈமெயில் அனுப்புவது நான் அல்ல, அவர் தான். அதையே குழப்பியதைத் தவிர, என்னைத் தாக்குவதே இதில் மைய நோக்கமாகின்றது. எனது கருத்தை முடிந்தால், அதை நேர்மையாக விமர்சியுங்கள். அதைவிடுத்து முதுகெலும்பு இல்லாது பக்கத்து நாடு, என்று புலம்பவது ஏன்?

"வன்னிபுலிகளின் ஜனநாயக விரோத போக்குக்கு எதிராக குரல்கொடுக்கும் ஊடகங்கள் மீது சேறு ப+சுவதும்தான் அவரது மாக்ஸிஸம்" என்று நீங்கள் சொன்னால், அதுவும் மார்க்சியத்தில் உள்ளடங்கியதே. யாரெல்லாம் மக்களுக்கு எதிராக உள்ளனரோ, அவர்களை எல்லாம் விமர்சித்து, போராடுவது மார்க்சியம். சரியான எம் நிலைமையை சொன்னமைக்காகவும், அதை தொடர்வதில் நாம் பெருமைப்படுகின்றோம். மக்களுக்காக சமரசமின்றி நாங்கள் உண்மையாக இருப்பதை இது உறுதி செய்கின்றது. இந்த "செயற்பாட்டினால் மாக்ஸிஸத்தை விரும்பியவர்களும் வெறுக்கும் நிலை அதிகரித்துள்ளது" என்றால், உங்களின் புலியெதிர்ப்பு அரசியலை, மார்க்சியமாக நாங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்கின்றீர்களா!. அதை மக்களே ஏற்றுக் கொள்வதில்லை. புலியை மட்டும் எதிர்ப்பது முற்போக்கானதல்ல. அது படுபிற்போக்கானது. இந்த நிலைக்காக மார்க்சியத்தை வெறுப்பதாக நீங்கள் கூறினால், நீங்கள் குறைந்தபட்சம் ஜனநாயகவாதிகளே கிடையாது.

இடதுசாரிய எதிர்ப்புநிலை எடுக்கும் வலதுசாரிய புலியெதிர்ப்பு நிலை

இதை நெருப்பு மட்டும் செய்யவில்லை. புலியெதிர்ப்பு இணையங்கள் முதல் வானொலிகள் வரை இதே இடதுதெதிர்ப்பு புராணமாகவேவுள்ளது. இடது எதிர்ப்பே மையமான புலியெதிர்ப்பு அரசியலாகிவிட்டது. ஏகாதிபத்திய ஆதரவு தளத்தில் இது, தன்னைத் தானே மக்களுக்கு எதிராக தகவமைக்கத் தொடங்கியுள்ளது. புலிகளை எதிர்க்கும் அதே தளத்தில், இடது அரசியலை எதிர்ப்பதில் அரசியல் ரீதியான முன்முயற்சி எடுக்கப்படுகின்றது.
இவர்களின் அரசியல் வலதுசாரிய அரசியலை தக்கவைக்கும் உள்ளடகத்தில், இடது எதிர்ப்பாக முன்வைக்கப்படுகின்றது. அதாவது புலிகள் கூட தமது அரசியலை நியாயப்படுத்த, அதைத் தக்கவைக்கவும் இடது எதிர்ப்பையே முன்னெடுக்கின்றது. புலியின் அரசியல் என்பது உலகமயமாதல் ஆதரவு, சுரண்டலான ஜனநாயவிரோத சமூக அமைப்பு, ஆணாதிக்க சமூக அமைப்பு, சாதிய சமூக அமைப்பு, பிரதேசவாத சமூக அமைப்பு, இனவாத சமூக அமைப்பு போன்றவற்றை பாதுகாக்கும் மக்கள் விரோத அரசியலை அடிப்படையாக கொண்டது. அதாவது ஜனநாயகம் என்ற பெயரில் சுரண்டல் சமூக அமைப்பை பாதுகாப்பது. இதனால் இடது எதிர்ப்பைக் அடிப்படையாகக் கொண்ட வலது சுரண்டல் சமூக அமைப்பை பாதுகாக்கின்றது.

இதைத்தான் புலியெதிர்ப்பு அணியும் தனது அரசியலாக கொள்கின்றது. இவர்களுக்கு இடையிலான முரண்பாடு என்பது, இதைச் செய்வதில் உள்ள அணுகுமுறை தொடர்பானதே. அதிகாரத்துக்கு வந்தால் இந்த முரண்பாடும் இல்லாது போய்விடும். இந்த அணுகுமுறையில் பல விதமான புலியெதிர்ப்பு அணிகளுமுள்ளது.

இவர்களின் கனவு மற்றொரு புலியாக இருந்து தாம் அதைச் செய்வதே. மற்றொரு பிரிவு மக்களை ஏமாற்றி பாராளுமன்ற பன்றித்தனத்தில் இதை செய்வதே. இப்படி இவர்கள் ஒரே குட்டையில் ஊறியவர்கள் தான். இதைச் செய்யும் இந்தக் கும்பலின் வாதங்கள் இடது எதிர்ப்புடன் கூடிய வலதுசாரிய கோட்பாடுகள் வைக்கப்படுகின்றது. இதில் ஜெயதேவன் முக்கியமானவர்.

1. கடந்தகாலத் தத்துவங்களைத் தூக்கிப்பிடிப்பது, அதை முன்னிறுத்துவது கருத்தென்ற அளவில் கூட ஏற்கமுடியாது என்பதே இவர்களின் வலதுசாரிய நிலையாக பிரகடனம் செய்கின்றனர். இங்கு இவர் கடந்தகாலத் தத்துவம் என்று சொல்வது மார்க்சியத்தைத் தான். அதாவது வர்க்கப்போராட்டத்தையும் அந்த அரசியலையும் தான். இதனால் பொதுவான இடது எதிர்ப்பு முன்வைக்கப்படுகின்றது. புலிகளை எதிர்கொள்வதற்கு இது அவசியமற்றது என்று இவர்கள் கூறமுற்படுகின்றனர். உலகம் மாறிவிட்டது. இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்று பலவாக புலம்பப்படுகின்றது.

தேசியம் என்பதே வர்க்கப் போராட்டம் தான். இதை புலிகளும் மறுக்கின்றனர். புலியெதிர்ப்பு கும்பலும் மறுக்கின்றது. ஏன் இருவரும் ஒரே குரலில் சேர்ந்து ஒத்திசைவாக இடதுசாரிய கருத்தையே மறுக்கின்றார்கள். இந்த இரு கும்பலின் வலதுசாரிய பாசிச பயங்கரவாதத்துக்கு முதலில் ஆயிரக்கணக்கில் பலியானவர்கள் இடதுசாரிகள் என்பதும், அந்த வரலாற்றையும் கூட இந்த கும்பல்கள் இருட்டடிப்பு செய்கின்றது. இதன் பின் பலியானவர்கள் உண்மையான ஜனநாயகவாதிகள். இதன் பின்பே கூலிக் கும்பல்களைச் சேர்ந்த, வாழவழியற்று வலதுசாரிக் கும்பலுடன் ஒட்டிக் கொள்ளும் அப்பாவிகள் பலியானார்கள். இது எம் வரலாறு. இதை எல்லாம் இவர்கள் திட்டமிட்டு மறுத்து பொதுமைப்படுத்தியபடிதான், தமது வலதுசாரிய அரசியல் வக்கிரத்தையே கக்குகின்றனர்.

தீவிர வலதுசாரிய நிலையுடன் ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கும் புலியெதிர்ப்புக் கும்பல் லண்டனை மையமாக கொண்டு, குறிப்பாக பிரிட்டனில் பிரிட்டிஸ் அரசியல் ஏஜண்டுகளாக மாறிவிட்ட காட்சியை நாம் காண்கின்றோம். நாடுகளையே கொள்ளையிட்டு அதில் ஜனநாயகம் பேசும் பிரிட்டிஸ் பாராளுமன்றத்தின் மலத்தையே நக்கி சுத்தம் செய்வதில் இவர்கள் களமிறங்கிவிட்ட ஒரு நிலையில், இடதுசாரியம் கடந்தகாலத் தத்துவமாக கூறுவது ஆச்சரியமானதல்ல.

கடந்தகாலத் தத்துவம் எமக்கு தேவையில்லை என்றால், எமது சமூக அமைப்பின் சாதியம், ஆணாதிக்கம், பிரதேச முரண்பாடுகள், இனமுரண்பாடுகள், மனித உழைப்பைச் சுரண்டுதல் போன்ற ஜனநாயக விரோத சமூக போக்கை தீர்ப்பதற்கான தீர்வை எப்படி முன்வைக்கின்றீர்கள். உழைத்தும், அன்றாட கஞ்சிக்கே போராடும் வறிய மக்களுக்கு வைக்கும் தீர்வு தான் என்ன. அவர்கள் உழைப்பு சுரண்டப்படுவதையா நீங்கள் ஜனநாயகம் என்கின்றீர்கள். மற்றவன் உழைப்பில் சொகுசாக வாழும் ஜனநாயகத்தை, புலிகளின் பெயரில் நியாயப்படுத்தும் கயவாளிக் கும்பலே, உங்களை மக்கள் அங்கீகரிப்பது கிடையாது. இதே நிலைதான் புலிக்கும் நடக்கின்றது. தன்னை சுரண்டிக் கொள்ளையிடுபவன் புலியாக இருந்தாலும் சரி, புலியல்லா உங்களைப் போன்ற புலியெதிர்ப்பு பிரிட்டிஸ் ஏஜண்டுகளை வரலாறும் மக்களும் என்றும் எங்கும் ஏற்றுக் கொள்வதில்லை.

மானம்கெட்ட நக்கிப்பிழைப்பு மக்களுக்காக ஒரு கணம் கூட போராடுவதில்லை. ஏழை எளிய மக்களும், தாழ்ந்த சாதி மக்களும், அடிமைப் பெண்களுக்கும் நீங்கள் வைக்கும் புலியெதிர்ப்பு தீர்வு தான் என்ன. இவர்கள் என்றும் பதில் தரப்போதில்லை. மௌனமாக இந்த விடையத்தை விவாதிக்காது பதில் சொல்லாது விட்டுச் செல்வதே, இவர்களின் மோசடியான அரசியல் மட்டுமின்றி விவாதப்பண்பாக இருக்கின்றது. முரண்பாடுகளை மௌனம் சாதித்து விடுவது அல்லது அவர்களை கொன்று ஒழிப்பதே உங்கள் முன் உள்ள ஒரே தீர்வு. கடந்தகால வரலாறு முழுக்க இதைத்தான், இயக்கங்கள் செய்தன. இதையே புலிகள் சொல்லுகின்றார்கள், தமிழீழம் வந்த பின் தலைவர் பார்த்துக் கொள்வாராம், நம்புங்கள். நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள், புலிகளை ஒழித்தால் ஏகாதிபத்தியம் தீர்த்துக் கொள்ளும் என்கின்றீர்கள். ஏகாதிபத்தியம் என்ற உலகமயமாதல் தனது நோக்கில் உலகமக்களைச் சுரண்டி பணத்தை தான் குவிப்பதற்காகத் தான் உருவானதே ஒழிய வேறு ஒன்றுக்காக அல்ல.

நீங்கள் செய்வது போல் மக்களை ஏமாற்றி பணம் பண்ணும் ஒரு கோயில், அதில் கிடைக்கும் ஒரு பகுதியை புலிப் பாசிட்டுகளுக்கு கொடுத்தது போல் மக்கள் சேவை என்ற பெயரில் பாசிச சேவையே, உங்கள் கடந்தகாலத் தீர்வும் சரி, இன்றைய தீர்வும் சரி இதற்குள் தான் உள்ளது. கடந்தகாலத் தத்துவங்கள் அவசியமில்லை என்றால், நல்லது ஆபிரிக்காவில் ஒவ்வொரு நாளும் பல பத்தாயிரம் மக்கள் ஏகாதிபத்திய கொள்ளையால் இறந்து கொண்டிருக்கின்றார்களே, அவர்களுக்கு என்ன தீர்வை முன்மொழிகின்றீர்கள். வாழவழியற்ற நிலையில் போராடும் மனிதர்களை உலகெங்கும் உள்ள ஜனநாயகச் சிறைகளிலும், சித்திரவதை கூடங்களிலும் சுரண்டும் நலனுக்காக துன்புறுத்தப்படும் மக்களுக்கு என்ன தான் தீர்வு. தமிழ் மக்களின் விடுதலை என்று கூறும் நீங்கள், தமிழன் ஒடுக்கும் அடிநிலை மக்களின் வாழ்வுக்கு என்ன தீர்வை வைக்கின்றீர்கள்.

2. புலிஎதிர்ப்பு கும்பலைச் சேர்ந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜெகநாதன் ரிபிசியில் கூறுகின்றார், ஏகாதிபத்தியங்களை நாம் பயன்படுத்த முடியும் என்கின்றார். அதாவது தாம் அவர்களுக்கு இதைச் செய்தால் போதும் என்று விளங்கப்படுத்துவதன் ஊடாக அவர்களை மட்டுப்படுத்தலாம்;. செம்மறி அரசியல் என்பது இதைத்தான். தமிழ் மக்களை ஏமாற்ற புளாட்டில், இப்படித்தான் அரசியல் செய்தீர்கள். பிறகு உட்படுகொலைகளை நூற்றுக்கணக்கில் நடத்தியவர்கள் நீங்கள். இப்படித்தான் முன்பு இந்தியாவையே பயன்படுத்தியவர்கள் அல்லவா! இந்தியாவின் கால்களை இயக்கங்கள் வீழ்ந்து நக்கிய போது, அதற்கு எதிரான விமர்சனங்களின் போது, சொன்னார்கள் நாம் இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்கின்றோம். அவர்கள் எம்மை பயன்படுத்தவில்லை என்றனர். இந்தியா இவர்களையே கைக்கூலியாக்கி மக்கள் விரோத அரசியலையும், மக்கள் நலன் விரும்பிகளையும் தேடிக் கொல்வதிலும் முடிந்தது. இன்றைய இலங்கையின் அவலமான நிலைக்கு ஒருபுறம் உங்களைப் போன்ற கைக்கூலி அரசியல் காரணமென்றால், மறுபக்கம் இந்தியாவே முழுப்பொறுப்பாக மறுபக்கத்தில் உள்ளது.

அன்று இந்தியாவை பயன்படுத்தி அவர்களை மட்டுப்படுத்த முடியும் என்று சொன்ன பல தலைவர்கள் இன்று இல்லை. அவர்களின் வாரிசுகள் தலைவராக வர துடிக்கும் நிலையில், ஏகாதிபத்தியத்தை பயன்படுத்துவதைப் பற்றி கூறுகின்றனர். புலிப் பாசிசத்தை ஒழிக்க இது உதவும் என்கின்றனர். ஏகாதிபத்தியத்தை நாம் பயன்படுத்த முடியும், ஆனால் அவாகள் எம்மை பயன்படுத்த அனுமதிக்க மட்டோம் என்று எமக்கு கதை சொல்லுகின்றனர். இப்படித் தான் புலிகள் பிரபாகனை பற்றி கூறுகின்றனர். இந்த அரசியல் விபச்சாரத்தை இவர்களால் மட்டும் தான் வானொலில் பினாற்ற முடிகின்றது.

3. அடுத்து கூறுகின்றனர் எமக்குத் தேவை புலிகளிடமிருந்து ஜனநாயகமே. இதுவே முதன்மையானது என்கின்றனர்! மற்றவை எல்லாம் அதற்கு உட்பட்டதே என்கின்றனர். நுணுக்கமாய் பார்த்தால் புலிகள் கூறுகின்றனர் இன்று தேவை தமிழீழம் என்கின்றனர். அதற்கு உட்பட்டதே மற்றவை என்கின்றனர்.

மார்க்சியத்தை தூற்றும் திரோக்சிய கோட்பாடே இந்த ஜனநாயகத்துக்கு கொள்கைவிளக்க அடியெடுத்துக் கொடுத்து. சமூக முரண்பாடுகள் எல்லாம் ஜனநாயகத்தை மீட்ட பின்புதான், அவைக்கான போராட்டம் என்கின்றனர். இதையே திரோக்சியம் மார்க்சியம் என்ற கதையளக்கின்றனர். ஜனநாயகத்தை முதன்மையான ஒன்றாக முன்வைத்து, புலியெதிர்ப்பு முன்னணி கட்டவேண்டும் என்கின்றனர். இதையே புலிகள் தேசியத்தை முன்வைத்து பேரினவாதத்துக்கு எதிராக ஒவ்வொருவரும் தமக்கு தலைவணங்க வேண்டும் என்கின்றனர். அதே அரசியல். ஜனநாயகம் என்பதில் வலது இடது என்ற பாகுபாடே இருக்கக் கூடாது என்கின்றனர். வலதுக்கு கட்டுப்பட்டு இடதுகள் தம்மை அடக்கியொடுங்கிக் கொள்ள வேண்டும் என்று ரி.பி.சி தலைமையிலான புலியெதிர்ப்பு கும்பல் பிரகடனம் செய்கின்றது. இதைத்தான் ஜனநாயகத்துக்கான ஐக்கிய முன்னணி தத்துவம் என்கின்றனர். இப்படி ஜனநாயகம் என்கின்றனர். அதிலும் புலியெதிர்ப்பது தான் ஜனநாயகம் என்கின்றீர்கள். புலியை எப்படி எதிர்ப்பது என்பதில், இந்த ஜனநாயகம் என்ன செய்யும்?

புலியை எதிர்க்கும் பேரினவாத சிங்கள அரசுடன் கூடுமா? புலியை எதிர்க்கும் ஏகாதிபத்தியத்துடன் இந்த ஜனநாயக முன்னணி கூட்டமைக்குமா? ஜனநாயக உள்ளடக்கத்தில் வர்க்கம், சாதியம், இனம், நிறம் போன்று பல தளத்தில் உள்ள முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் இடதுசாரிகளுடன் கூட்டமைக்குமா? பிராந்திய மேலாதிக்க அன்னிய சக்திகளுடன், ஏகாதிபத்தியம் கோரும் ஜனநாயகத்துடன் கூட்டமைக்குமா? ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் மக்களை ஆதரிக்குமா? உலகமயமாதலை எதிர்க்கும் அதேநேரம், புலியை எதிர்க்கும் ஜனநாயகவாதிகளுடன் எப்படி கூட்டமைப்பீர்கள்.

வலதுசாரி ஜனநாயக கோட்பாட்டாளரே இதற்குள்ளான சமூக முரண்பாட்டை எப்படி நீங்கள் ஒன்றாக்குவீர்கள். ரி.பி.சி செய்வது போல், தாம் விரும்பியதையே நீங்கள் ஜனநாயக முன்னணி என்கின்றீர்கள்.

சரி ஜனநாயகம் என்றால் என்ன? அரசியல் கட்சிகளை அமைப்பது, மக்களை ஏமாற்றும் அரசியல் பிரச்சாரத்தை செய்யும் உரிமையை தான் நீங்கள் ஜனநாயகம் என்கின்றீர்கள். அதாவது சுரண்டுவதுக்குரிய உரிமையைத் தான் நீங்கள் ஜனநாயகம் என்கின்றீர்கள். விடையத்தை சூக்குமமாக அருவமாக உளறுவதை விடுத்து, நேரடியாக துணிவிருந்தால் பேசுங்கள். எதற்கு ஜனநாயகம் என்று சொல்லுங்கள். ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சுரண்டும் அதிகாரத்தை பாதுகாக்கும் சட்டம் ஒழுங்குக்கு உட்பட்டதே. இதில் மக்களுக்கு ஜனநாயகம் இருப்பதில்லை. ஒரு நேரக் கஞ்சிக்கே வழியற்ற மக்கள், ஜனநாயகத்தை கரைத்தா குடிக்கின்றர்ர்கள். நீங்களே மக்களின் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டபடி, ஜனநாயகத்துக்கு போராடுவதாக ஆர்ப்பரிப்பது பளபளப்பான விளம்பர உத்தியாகும். மற்றவனின் உழைப்பை சுரண்டாத ஜனநாயகம் உன்னால் பேசமுடியாது. சுரண்டுவதே இவர்களின் ஜனநாயகம். இன்று ஜனநாயக காவடியை தூக்கிவைத்தாடும் எல்லாக் கயவாளிகளினதும் உண்மை முகம் இதுவாகும். மக்களை தங்குதடையின்றி சுரண்டுவதற்காக ஜனநாயகம் இவர்களுக்கு தேவைப்படுகின்றது. இங்கு இடைத்தரகர்கள் தேவையில்லை என்பதால், புலிகள் என்ற இடைத்தரகரை எதிர்கின்றனர். கோயிலை வைத்து மக்களை ஏமாற்றி சுரண்டிக் கொண்டு வாழும் இந்த அற்பர்கள், எப்படி ஜனநாயகம் பேசமுடியும் என்றால், இவர்களின் அரசியல் கேவலத்தையே எடுத்துக் காட்டுகின்றது.

4. இவர்கள் வைக்கும் வாதங்களில் மற்றொன்று இந்த புலி வன்முறைக்கு அடிநிலையில் இருந்து வந்தவர்களே காரணம் என்கின்றனர். ஜெயதேவனின் அண்ணன் பயலும் இதைத் தான் சொன்னான். கொஞ்சம் வெளிப்படையாக அடிநிலைச் சாதிகள், அதாவது பள்ளும் பறைகளும் இயக்கத்தில் இருப்பதால் தான் இந்த நிலை என்றான். புலிப் பினாமியான வெப்ஈழம் வைத்திருக்கும் ஜெர்மனி சபேசனும் இதைத் தான் சொல்லுகின்றான். புலியைப் பற்றிய மதிப்பீட்டில் எதிர்தரப்பில் இருந்தாலும் இதில் நல்ல ஒற்றுமை உண்டு. வலதுசாரிய அரசியல் வித்தை இது. அரசியல் ரீதியாக மக்களைச் சுரண்டி சூறையாடி வாழ்வதில் உள்ள அரசியல் கருத்தொற்றுமை, இப்படி மேட்டுக்குடியின் நலனை பேணும் போராட்டத்தில் நடக்கும் அக்கிரமங்களுக்கு கீழ்நிலை இழி மக்களே காரணம் என்று இவர்கள் கூற முடிகின்றது என்றால், அந்த கீழ்நிலை மக்கள் யார்?.

இவர்களின் சொகுசுக்காக தங்கள் வாழ்க்கை பூரவும், இவர்களுக்காக உழைத்துக் கொடுக்கும் மக்கள் தான் அவர்கள். மேட்டுக்குடிகளின் ஜனநாயக வேஷங்களுக்கு அவர்களின் உழைப்பும், அவர்களின் தியாகமும் அவசியமாகவுள்ள அதேநேரம், அவர்கள் வழமை போல் இழிவுபடுத்தப்படுகின்றனர். இந்து மதத்தின் பெயரில் சுரண்டித் திண்ட பார்ப்பான்கள் இதைத்தான் சாதியின் பெயரில் செய்கின்றார்கள். படிப்பறிவில்லாதவர்கள், காட்டுமிராண்டிகள் என்றெல்லாம் வாயில் வருவதையே தூற்றுவது, மேட்டுக்குடியில் பன்றித்தனத்துக்கே உதவுகின்றது.

ஜெர்மனி சபேசன் மேலும் ஒருபடி சென்று எல்லாப் போராட்டமுமே, புலிப்போராட்டம் போல் மக்கள் விரோதத்தை உள்ளடக்கியதாக கூறினான். இப்படி ரி.பி.சியில் முழுமையான ஒரு பாசிட்டாகவே வந்து அறிவித்தான். அப்போது வியட்நாம், நக்சலைட்டுகள், பாலஸ்தீன போராட்டம் என அனைத்தையும் புலியுடன் ஒப்பிட்டுக் காட்டி புலியை நியாயப்படுத்தினான். இதற்கு ராம்ராஜ் என்ற புலியெதிர்ப்பு வலதுசாரி, ஒன்றில் மட்டுமே முரண்பாடு என்று கூறி தானும் இதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தான்.

ஜெர்மனிய சபேசன் போன்றோர் தமது சொந்த புலிப் பாசிசத்தை நியாயப்படுத்த, உலகளாவிய மக்கள் போராட்டங்களையே தமது மேட்டுக்குடி வலதுசாரிய நிலைக்கு ஏற்ப திரித்துக் காட்ட முனைகின்றனர். அப்போராட்டங்கள் புலியைப் போன்று மக்கள் விரோதத் தன்மை கொண்டதாக சித்தரித்து, இதற்கு காரணம் அடித்தட்டு கிழ் மக்கள் தானாம்; என்று தமது சொந்த பாசிசத்துக்கு நியாயம் கற்பிக்க முனைகின்றனர்.

புலியெதிர்ப்பு, புலி சார்பு கடந்த அரசியல் ஒற்றுமை. சமூகம் பற்றி இவர்களின் ஒற்றுமையான பார்வை, அடிநிலை மக்கள் பற்றியான ஒத்தகருத்து இவர்களிடையே கொஞ்சுகின்றது. உண்மையில் அடிநிலையிலும் கீழ் நிலையிலும் வாழும் மக்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையும், மனிதப்பண்பும் எந்த மேட்டுக்குடியிடமும் கிடையாது. அவர்களிடையே நிலவும் ஜனநாயகம், ஜனநாயக மனப்பாங்கு எந்த மேட்டுக்குடி ஜனநாயகவாதியிடமும் கூட கிடையாது. பன்றிப் பயல்களே உங்களைத் தான் நான் நேரடியாக சொல்லுகின்றேன்.

உங்களின் ஜனநாயக வேடங்களை விட, அந்த மக்களிடம் இருப்பது உன்னதமான ஜனநாயகப் பண்பாடு. சக மனிதன் பற்றிய உயர்மதிப்பு அடிநிலை மக்களிடம் மட்டுமே உள்ளது. மற்றவன் உழைப்பைச் சுரண்டி, அவர்களை ஏமாற்றி வாழ்பவர்கள் அல்ல அவர்கள். தாம் உழைத்து வாழ்பவர்கள். உங்களைப் போல் மற்றவன் உழைப்பில் தங்கி வாழ்பவர்கள் அல்ல. உங்களுக்காக தமது உழைப்பையே இழக்கும், உங்கள் ஜனநாயக மோசடியால் வாழ்விழந்து நிற்கும் அபலைகள். அவர்களை அடக்கியொடுக்கி சுரண்டும் ஜனநாயகச் சட்டங்கள், உங்கள் ஜனநாயக விரோத நோக்கத்துக்காக, நீங்களே அவர்களுக்கு எதிராக உருவாக்கிக் கொண்டவை தான் அவை.

அடிநிலையில் உள்ள மக்கள் எப்போதும் எங்கும் மற்றவனுக்கு, அதாவது உங்களுக்கு கொடுத்த வண்ணம் ஒரு சமூக ஜீவியாகவே வாழ்கின்றான். தான் கஞ்சி குடித்தாலும் உங்களுக்கு வயிறுமுட்ட உண்ண உணவு தன் உழைப்பையே தந்து ஜனநாயகத்தின் பெயரில் வழங்குகின்றான். மிக உயர்ந்த ஜனநாயக மனப்பாங்கை தன்னகத்தே கொண்டுள்ளான். ஆனால் நீங்கள், அதாவது மேட்டுக்குடிகள் மற்றவன் உழைப்பில் இருந்து அபகரித்து வாழ்பவர்கள் தான் நீங்கள். ஜனநாயக விரோதியாகவே இயல்பில் உள்ளவர்கள். நீங்கள் கீழ் உள்ள மக்களின் உழைப்பை புடுங்கி, பின் அவர்களை உங்கள் ஜனநாயகத்தின் மூலம் கூலிப் பட்டாளமாக்கி அடியாள் கும்பலாக வளர்ப்பவர்கள் தான் நீங்கள். இதனால் தான் நீங்கள் மக்களுக்காக அல்ல, ஏகாதிபத்தியத்துக்காக மேட்டுக்குடி கும்பலுக்காக வாலாட்டி குலைகின்றவராக உள்ளீர்கள்.

மக்கள் விரோத பாசிசத்தின் அடிப்படையான சமூக கூறுகளுடன் புலிசார்பு, புலியெதிர்ப்பு என்ற இரண்டு அணிகளும் அக்கம் பக்கமாகவே இயங்குகின்றது. ஒன்றையொன்று கவிழ்த்து போடும் அரசியல் சூழ்ச்சியிலும் சதியிலும் ஈடுபட்டபோதும், மக்கள் பற்றிய நிலைப்பாட்டில் ஒன்றுபட்டு, அவர்களை ஒடுக்குவதில் கவனமாக செயல்படுகின்றன. மக்கள் தமது வாழ்வை பாதிக்கும் சமூக பொருளாதார அவலங்களை தீர்ப்பதற்கு தடையாகவும், இதன் அடிப்படையில் மக்களின் சிந்தனை தளத்ததை திட்டமிட்டு மழுங்கடிப்பதில் மிகக் கவனமாக இரண்டு போக்கும் திட்டமிட்டு செயல்படுகின்றன. ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதில், உலகமயமாதலுக்கு எடுபிடிகளாக செயல்படுவதில் இரண்டு பகுதிக்கும் முரண்பாடு இருப்பதில்லை, அதேபோல் தமக்கு இடையிலும் முரண்பாடு இருப்பதில்லை. மக்களை அடிமைப்படுத்தி ஏகாதிபத்திய நலன்களுக்குள் சிறைவைக்க முன்வைக்கும் அரசியல், புலிசார்பு, புலியெதிர்ப்பு அரசியலாகவுள்ளது.