வட்டுக்கோட்டை "தமிழ் ஈழம்" தமிழர் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்காக வைக்கப்பட்ட ஒன்று. இது தமிழ்பேசும் மக்களின் முழு அபிலாசைகளையும் பிரதிபலிக்காத ஒன்று! இதை எவ்வித சமூக விஞ்ஞானப் பார்வையோ ஆய்வோ இன்றி இளைஞர் இயக்கங்கள் அன்று கையில் எடுத்தன! இதன் விளைவு பல இயக்கஙகள் துரோகிகள் (புலிகளால்) ஆகி, பின்பு ஐனநாய....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழ் அரங்கம்
Saturday, November 14, 2009
மீண்டும் வட்டுக்கோட்டை நோக்கி….
வட்டுக்கோட்டை "தமிழ் ஈழம்" தமிழர் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்காக வைக்கப்பட்ட ஒன்று. இது தமிழ்பேசும் மக்களின் முழு அபிலாசைகளையும் பிரதிபலிக்காத ஒன்று! இதை எவ்வித சமூக விஞ்ஞானப் பார்வையோ ஆய்வோ இன்றி இளைஞர் இயக்கங்கள் அன்று கையில் எடுத்தன! இதன் விளைவு பல இயக்கஙகள் துரோகிகள் (புலிகளால்) ஆகி, பின்பு ஐனநாய....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Friday, November 13, 2009
நோர்வே புலித் தேர்தல்கள் பற்றிய, சிறு குறிப்பு..
நோர்வேயில் வெளியாகிய, புலிகளின் 3 பிரிவினரது பிரசுரத்தை (பிரகடனத்தை) - தமிழரங்கம் - வெயியிட்டிருந்தது. நாடுகடந்த தழிழீழ அறிவிப்பு, புலிகளின் அழிவின் பின்னர் சுமார், ஒருமாத காலத்தின் பின்னர் வெளிவந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், வன்னியுத்தத்தின் நெருக்கடி காலகட்டத்தில்: புலிகளால் வெளிநாட்டுப் புலிகளிடத்தில் ஏவப்பட்டது. இது யுத்தநேரத்தில் புலிகளின் இருப்புக்காக -சர்வதேச அழுத்தமாக - இதைத் தேர்தலாக்கி (மே 10-2009) நோர்வே ஊடாகப் பிரயோகித்துப் பயனடைய முன்னெடுக்கப்பட்ட முயற்சியாகும்!
புலிகளின் அழிவுக்குப் பின்..... (நோர்வே)
உள்ளுக்குள் நடக்கும், நடத்தப்படும் நாடகம்:
2- 'வட்டுக்கோட்டை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்.
உளுத்துப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானம், மாபியாத் தனத்துக்கே இறுதியாக உதவுகின்றது
இந்தத் தீர்மானத்தின் பெயரில் தான், தமிழினத்தையே அழித்தனர். தமிழினத்தை பல பத்தாகப் பிளந்தனர். இதுவே எம் கடந்தகால, நிகழ்கால வரலாறாகிக் கிடக்கின்றது.
இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாரால் முன்வைக்கப்பட்டது. தமிழ் மக்களை ஓடுக்கிய, மேலாதிக்க சமூகப் பிரிவுகளால், சொந்த சுயநலத்;துடன் தமிழனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது. யாழ்மேலாதிக்க வலதுசாரியக் கும்பலால் தான், இடதுசாரிய......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, November 12, 2009
ஈழம் : தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம். நண்பர்களே கலந்து கொள்ளுங்கள்..
ஈழத்தமிழ் மக்களை அடைத்து வைத்திருக்கும் வதை முகாம்களை நீக்கு!
மக்களை தத்தம் வசிப்பிடங்களில் குடியமர்த்து!
அவர்களின் விவசாயம், தொழில்களை புணரமைத்துக்கொள்ள நிதி உதவி செய்!
ஈழத் தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள குடியேற்றங்களை அகற்று!
இந்திய அரசே!
சிங்கள அரசின்...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
புலத்து புலிக்குள் நடக்கும் சொத்து மோதல்கள் (நோர்வேயைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு குழுக்களின் ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது.)
தமிழீழத்தின் பெயரில் தமிழினத்தையே கடந்த காலத்தில் அழித்தவர்கள், இன்று அதன் பெயரில் உள்ள பினாமி சொத்துக்களுக்காக மோதுகின்றனர். இப்படி புலத்து புலிக்குள் நடக்கும் மோதல்கள், நோர்வேயில் குறைந்த பட்சம் மூன்று குழுக்களை உருவாக்கியுள்ளது. இந்த மோதல்களின் பின்னணி, எந்த மக்கள் நலன் சார்ந்ததுமல்ல.
தங்கள்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, November 11, 2009
கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும் - 02
Tuesday, November 10, 2009
Monday, November 9, 2009
மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்?
2.பு.ஜ.வின் விமர்சனங்களும் மாவோயிஸ்டுகளின் வசவுகளும்
3.எதிரிக்கு ஒத்திசைவாக அமைவது மாவோயிஸ்டுகளின் செயலா? பு.ஜ.வின் விமர்சனங்களா?
4.யார் நேர்மையானவர்கள்: பு.ஜ.வா, மாவோயிஸ்டுகளா?இதோ ஆதாரம்!
5.மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட "நடிப்பு'
6.முதன்மைத் தவறும் ஆயுதக் குழுக்களும்
7.மாவோயிஸ்ட் இயக்கம்: ஏறுமுகத்திலா, இறங்கு முகத்திலா?
8.தர்மபுரி அனுபவம் என்ன? மீளாய்வு எங்கே?
9.கர்நாடகா அனுபவமும் இதுதான்!
10.ஒப்பாரி வைக்கமாட்டார்கள்! புரட்சி சவடால் அடிப்பார்கள்!
11.உள்ளொன்றும் புறமொன்றும் பேசும் மாவோயிஸ்டுகளின் சாணக்கியத்தனம்
12.குதர்க்கவாதமே கோட்பாடாக!
13.புரட்சிப் பாதை: பு.ஜ.வின் நிலையும் மாவோயிஸ்டுகளின் புளுகும்
14.அரசியலுக்காகத்தான் ஆயுதமா? ஆயுதத்துக்காக அரசியலா?
15.இணைப்பு: நக்சல்பாரி "அபாயம்': அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?(புதிய ஜனநாயகம், ஆகஸ்டு 2007இல் வெளியான கட்டுரை)
Sunday, November 8, 2009
Friday, November 6, 2009
உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி
1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.
ரசிய உழைப்பாளி மக்கள் கடந்து கொண்டிருந்த ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, November 5, 2009
முதலாளித்துவ இலாபவெறி: பன்றிக் காய்ச்சலைவிட கொடிய கிருமி!
வயிற்று பிழைப்புக்காக சவூதி சென்றிருந்த சலீம், தன் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூர் திரும்பினார். வந்திறங்கிய மூன்று நாட்களில் அவர் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு ஆளானார். இதேநேரத்தில் பெங்களூரில் பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பின்னணியில், சலீம் குடும்பத்தினரும் உறவினர்களும் தொலைக்காட்சியில் சொல்லப்படும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமா என்று சந்தேகிக்க ஆரம்பித்தனர். இதை கேட்ட சலீமும் சற்றே நிலை குலைந்தார்.
இறுதியாகþ நான்காவது நாளில்...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, November 4, 2009
“ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது” தோழர் சிவசேகரத்தின் நேர்காணல் – இரண்டாம் பாகம்
இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர் தோழர் சிவசேகரம் பு.ஜ.விற்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் மற்றும் இறுதிப் பாகம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழக் குழுக்களின் சர்வாதிகாரப் போக்கு, அவற்றின் துரோகம் மற்றும் ஈழ சுயநிர்ணயப் போராட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த மாலெ புரட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்த முடியாமல் போனதற்கான காரணம் உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. அவரது நேர்காணல் குறித்து வாகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சீனாவிலும், ஆப்கானிலும் இருந்த யுத்தப் பிரபுக்களைப் போலவே தமிழீழ இயக்கங்களும் செயல்பட்டன.
சிவசேகரம்: எந்த ஒரு சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் கல்வியறிவு என்பது உயர் நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்கங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. யாழ்ப்பாண சமூகத்திலும் அப்படித்தான். யாழ்ப்பாணத்துப் பொருளாதாரமே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்ல. சிங்கள முதலாளிகளோடு ஒப்பிடும்போது, மஹாராஜா போன்ற ஒரிருவரைத்தான்... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
போர்க் குற்றம் : அமெரிக்க ஏகாதிபத்திய சதிராட்டமும், பேரினவாதத்தின் சூழ்ச்சியும்
தமிழ்மக்கள் சந்தித்த அவலங்களும் துயரங்களும், இன்று குறுகிய நலன்களுடன் அரசியல் ரீதியாக விலை பேசப்படுகின்றது. இப்படி அமெரிக்க ஏகாதிபத்திய நலன்கள் முதல் மகிந்த குடும்பத்தின் பாசிச ஆட்சியைத் தக்க வைக்கும் எல்லைகள் வரை, தமிழ் மக்களின் அவலம் அரசியலாக்கப்படுகின்றது.
இலங்கையின் எதிரணி அரசியல் கூட, இந்தப் போக்கில் பிளவுபட்டு வருகின்றது. பரஸ்பரம் போர்க்குற்றத்தை காட்டிக்கொடுப்பதில்லை என்று கூறிக்கொண்டு, ஒன்றையொன்று குழிபறிக்கின்றது. இதையே சரத் பொன்சேகா "யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன்" என்கின்றார். இதன் மூலம் காட்டிக்கொடுக்க போர்க் குற்றங்கள் உண்டு என்பதும், வெளிப்படையாக..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, November 3, 2009
மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை…
கீழ்க்காணும் துண்டுப்பிரசுரம். பாரிசில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் கொடுக்கவும் உள்ளோம். அண்மையில் சுவிஸ்சில் கொடுத்த துண்டுப்பிரசுரம் உட்பட பலவற்றை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதன் பி.டி.எவ் பிரதி தனியாக இணைப்பில் இணைக்க உள்ளோம். அதை பல மட்டத்தில் எடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம்.
மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை………
ஆம்… எம்மிடம் வீரம் இருந்தது. தீரம் இருந்தது. ஆயுதம் இருந்தது. ஆட்படை இருந்தது. தரைப் படை, கடற்படை, ஏன் வான்படை கூட… இருந்தது!....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, November 2, 2009
கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும்.
இலங்கையில் தேர்தலுக்கான பரபரப்புக்கள் தொடங்கி விட்டன. அங்கைமாறி இங்கமாறிக் கதைப்பதும், விலைக்கு வாங்குவதும், வழமைபோல் இந்தத் தரகுகளை வளைத்துப் போடுவதுமாக களைகட்டத் தொடங்குகிறது தேர்தல் வியாபாரம்.
Sunday, November 1, 2009
கொல்வதோ அரசின் உரிமை! அதை ரசிப்பதே சமூகத்தின் கடமை!
இலங்கையின் ஜனநாயகம் இதுதான். இதற்குள் தான் சட்டம் நீதி, சமூக ஒழுங்கு என அனைத்தும் இயங்குகின்றது. நாட்டின் அதிகார வர்க்கம், தான் விரும்பியவர்களை எதுவும் செய்ய முடியும். மக்கள் முன் ஈவிரக்கமின்றியே அடித்துக் கொல்லுகின்றது. சூடு சுரணையற்ற சமூகம், அதை வேடிக்கையாகவே பார்த்து ரசிக்கின்றது.
இந்த நிகழ்வு தற்செயலாகவே..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்