தமிழ் அரங்கம்

Friday, November 30, 2007

புலியெதிர்ப்பு கூறும் வரட்டு மார்க்சியம் என்பது என்ன?

பி.இரயாகரன்
30.11.2007

னது மக்கள் விரோத வலது தன்மையை அங்கீகரிக்க மறுக்கும் மார்க்சியத்தைத் தான், அவர்கள் வரட்டு மார்க்சியம் என்கின்றனர். இலங்கை இந்திய ஏகாதிபத்திய வேலைதிட்டத்தின் கீழ் இயங்கும் புலியெதிர்ப்பு அரசியலை, மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொள்ளக் கோருவதை அடிப்படையாக கொண்டு தான், வரட்டு மார்க்சிய முத்திரை குத்தப்படுகின்றது.

வரட்டு மார்ச்கியம் பற்றி பேச முனைபவன், முதலில் தன்னை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்த வேண்டும். இல்லாதுவிடில் வரட்டு மார்க்சியம் பற்றி பேச, எந்த அருகதையுமற்றவன். அவன் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான மற்றொரு வார்க்கத்தின் பிரதிநிதி என்பதால், அவன் அதை வெறும் உள்நோக்கத்தடன் தான் பயன்படுத்துவான்.

அடிக்கடி ராகவன் வரட்டு மார்க்சியம் பற்றியும் மார்க்சிய பைபிள் பற்றியும் கூறுகின்றார். இது போல் பலரும் கூறுகின்றனர். மார்க்சியத்தின் ஆரோக்கியமான வளர்ச்சி பற்றியும் இவர்கள் சிலாகிக்கின்றனர். தனக்கு எதிரான வர்க்கத்தின் வளர்ச்சியில் இருக்கின்றதாக காட்டுகின்ற அக்கறையின் பின் இருப்பது நஞ்சு. முதலில் நீங்கள் மார்க்சியவாதிகளாக இல்லாத வரை, இவை எல்லாம் மார்க்சியத்தின சேறடிக்க செய்யும் அற்பத்தமான சூழ்ச்சியான செயல்கள் தான்.

ஒருவன் தன்னை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்துகின்றான் என்றால், அவன் வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூகத்தை வர்க்க அடிப்படையில் பகுத்தாராய வேண்டும். ஒரு சமூக அமைப்பில் எதிரி வர்க்கத்தை தெளிவுபடுத்த வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வர்க்கப் போராட்டத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பதை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி பல விடையங்கள் உண்டு. இப்படி இவற்றை ஏற்றுக் கொண்டு, அதற்காக போராடும் போது தான் வரட்டு மார்க்சியத்தை இனம் காணமுடியும். பைபிள் மார்க்சியத்தை உடைத்துக் காட்ட முடியும்.

இதையா! இந்த புலியெதிர்ப்பு கனவான்கள் செய்கின்றனர். இல்லை. அவர்கள் வரட்டு மார்க்சியம் என்பது, புலியெதிர்ப்பு அரசியலை ஏற்க மறுக்கும் மார்க்சியத்தை தான். அவர்களின் பிற்போக்கு அரசியல் நோக்கத்துக்கு ஏற்ப, மார்க்சியத்தை வரட்டு மார்க்சியம் என்கின்றனர்.

வரட்டு மார்க்சியம் என்கின்ற இந்த புலியெதிர்ப்பு கனவான்களின், எந்த செப்பிடுவித்தையும் மாhக்சியத்தின் முன் அவியாது. புலியை ஒழித்தலுக்கு, ஏற்ப மார்க்சியத்தை வளைத்து சொன்னால் வரட்டு மார்க்சியமல்ல என்று நீங்கள் சொல்ல தயாராக உள்ளீர்கள் என்பது எமக்கு நன்கு தெரியும்.

புலிகளின் பாசிசத்துக்கு அப்பால், மார்க்சியவாதிகள் வர்க்க ரீதியாகவே அவர்களுடன் உடன்பாடு அற்றவர்கள். மார்க்சியவாதிகள் புலியை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்திய அளவுக்கு, வேறு யாரும் செய்தது கிடையாது. இருந்தபோதும் மாhக்சியவாதிகள் புலிகளை விடவும், பேரினவாத அரசைத்தான் முதலாவது எதிரியாக பார்க்கின்றனர். அரசு தான் புலியை உருவாக்கியதே ஒழிய, புலிகள் பேரினவாத அரசை உருவாக்கவில்லை. பேரினவாத அரசு ஒழிக்கப்பட்டால் புலி ஒழியும். புலி ஒழிக்கப்பட்டால், பேரினவாத அரசு ஒழியாது. இது மார்க்சியவாதிகளுக்கும் புலியெதிர்ப்புக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளில் ஒன்று.

மார்க்சியவாதிகள் அரசையும், அதை இயக்குகின்ற ஏகாதிபத்திய கட்டமைப்பையும், பிராந்திய வல்லரசு அனைத்தையும் எதிரியாக பார்க்கின்றனர். அவர்களுடன் கூடிக் குலாவி புலியை ஒழிக்கும் எந்த வேலை திட்டத்தையும், சதிகளையும் மாhக்சியவாதிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். இதிலும் கூட புலியை விட, நாம் தான் அரசியல் ரீதியாக கடுமையான எதிரிகளாக உங்கள் முன் உள்ளோம். இதனால் எம்மை வரட்டு மார்க்சியவாதிகளாக கூறுவதால், மார்க்சியம் வரட்டு வாதமாகி விடுவதில்லை.

புலியை ஒழித்தல் மார்க்சியவாதிகளின் அரசியல் வேலைத் திட்டமல்ல. மாறாக மக்களின் அதிகாரத்தை நிறுவுவது தான், மார்க்சியவாதிகளின் வேலைத்திட்டம். இந்த வகையில் தான், நாம் அனைத்தையும் விமர்சனக் கண்கொண்டு அணுகுகின்றோம். இது போன்ற எந்த வேலைத்திட்டமும் புலியெதிர்ப்பிடம் கிடையாது.

அவர்களின் வேலைத் திட்டம் என்பது, இலங்கை இந்திய ஏகாதிபத்தியத்தின் நகர்வுகளுக்கும், நலனுக்கும் உட்பட்டது. இதை இல்லை என்று யாராலும் மறுக்கமுடியாது. இதை நாம் அம்பலப்படுத்துவதால் வரட்டு மார்க்சியம் என்று புலம்புகின்றனர். அவர்கள் வரட்டு மார்க்சியம் என்று கண்டு பிடிப்பது, இலங்கை இந்திய மற்றும் ஏகாதிபத்திய நலனுக்கு இசைவானதாக மார்க்சியம் வளைந்து கொடுக்க மறுப்பதைத் தான்.

ராகவன் போன்ற புலியெதிர்ப்பு பிரிவினரிடம் இதற்கு வெளியில், எந்த மக்கள் நலன் சார்ந்த சொந்த வேலைத்திட்டமும் கிடையாது. தனிமனிதர்களிடம் கூட, இதையொட்டிய ஒரு சமூக கண்ணோட்டம் சமூகப் பார்வை கிடையாது. எல்லாம் கூலிக்கு மாரடிக்கின்ற அரசியல், மார்க்சியத்தை வரட்டுத்தனமாக காட்டுவதும் மாரடிப்புக்கு ஏற்பத்தானே.

பின் குறிப்பு:

நாம் தொடாந்து ராகவனின் வாதங்கள் மூலம் மற்றொரு கட்டுரை மூலம் காண உள்ளோம்.


3 comments:

sukan said...

இந்த கட்டுரையை படித்ததில் மகிழ்வடைகின்றேன்.

//ஒருவன் தன்னை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்துகின்றான் என்றால், அவன் வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூகத்தை வர்க்க அடிப்படையில் பகுத்தாராய வேண்டும். ஒரு சமூக அமைப்பில் எதிரி வர்க்கத்தை தெளிவுபடுத்த வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வர்க்கப் போராட்டத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பதை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி பல விடையங்கள் உண்டு. இப்படி இவற்றை ஏற்றுக் கொண்டு, அதற்காக போராடும் போது தான் வரட்டு மார்க்சியத்தை இனம் காணமுடியும். பைபிள் மார்க்சியத்தை உடைத்துக் காட்ட முடியும்//

இந்த கருத்து ஆழமானது. ஆனால் எனக்கு தெரிந்த மார்க்ஸிய வாத நண்பர்கள் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை மார்க்ஸியத்தின் தவறு என்கின்றார்கள். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பது மீள ஒரு ஒடுக்குமுறை என்ற கருத்தில் உள்ளனர்.

இவ்வாறு கருத்துக்கொண்ட பலர் ஒருவகையில் வர்க்க அடிப்படையிலும் சரி சாதி அடிப்படையிலும் சரி பாட்டாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள் இல்லை என்ற உண்மையும் உண்டு.

மார்க்ஸியத்தை அதன் சாராம்சங்களுடன் அவரவர் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்வதும் மார்க்ஸியத்தின் சாராம்சங்களை தங்கள் சுய நலன்களுக்கேற்ப மாற்றி தமக்கென்று ஒரு மார்க்ஸிய முகமூடியை அணிந்து கொள்வதும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பரவலாக நடக்கும் ஒன்று.

புலிகள் இயக்கத்தை மார்க்ஸிய வழியில் ஏற்றுக்கொள்ளாதவர்கள் சிலர் கூறும் காரணங்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாமைக்கு உள்ள காரணங்களே.

இந்தகாரணங்களை வைத்து புலி மார்க்ஸிய சார்புடையது என்று சொல்வது எனது நோக்கமல்ல. ஆனால் புலி எதிர்ப்பும் பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரம் மேல் நிலை அடைவதையும் எதிர்ப்பவர்களினூடாகத்தான் மார்க்ஸியம் எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றது. இதற்கு காரணம் என்ன?

சிங்கள பேரினவாதம் என்பதை அலட்சியப்படுத்துதலும் அதே நேரம் தமிழர் தேசிய எழுச்சியில் குறை காணுதலும் என்ற மனநிலை மார்க்ஸியவாதிகளுக்கு பொருந்துமா? அவ்வாறு நடந்து கொள்பவர்கள் உண்மை அல்லது பொய் மார்க்ஸிய வாதிகள் என்பதற்கு வெளியில் வர்க்க சாதிய மேற்தட்டுகளில் இருந்து இறங்கி வர மறுக்கும் மனநிலையில் உள்ளவர்கள் என்றே கருத முடியும். அவ்வாறான ஒரு மனநிலையில் பேசப்படும் மர்க்ஸியம் என்பது உண்மை பொய்களுக்கு அப்பால் வலுவிளந்த ஒன்று.

அற்புதன் said...

இராகவன் தேசம் நெற்றில் எழுதியது,

//இன்னிலையை மாற்ற விடுதலை புலிகளின் தலைமை சில விட்டு கொடுப்புகளை செய்ய வேண்டிய அவசியம் இன்று உள்ளது. தனது கடந்த கால அரசியல் தவறுகளை மீள் பரிசீலனை செய்து பேச்சு வார்த்தைகளில் தங்களுக்கு நம்பிக்கை இருக்கின்ற தென்பதை நடைமுறையில் காட்ட வேண்டும். ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கின்றதென்று நடைமுறையில் காட்ட வேண்டும்.

அது மட்டுமல்ல மற்றைய அரசியல் கட்சிகள் அது தேசியக் கூட்டணியாக இருந்தாலென்ன முஸ்லிம் காங்கிரசாக இருந்தாலென்ன ஈ பீ டீ பீ ஆக இருந்தாலென்ன அவர்களது அரசியலை சுயாதீனமாக செய்ய வழி விட வேண்டும். விடுதலை புலிகளுக்கு தங்களது அரசியல் பலத்தில் நம்பிக்கை இருந்தால் மற்றைய அரசியல் கட்சிகளை பற்றி கவலை பட தேவையில்லை.

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெற விடுதலை புலிகள் இவ்வாறான விட்டு கொடுப்புகளை செய்தால் சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை அரசின் அத்துமீறல்கள் பக்கம் நிச்சயம் திரும்பும். //

இவர் யாரின் வேலைத் திட்டத்திற்க்கு அமைவாகச் செயற்படுகிறார் என்பதற்கு இதைவிட வேறு எதாவது சாட்சியங்கள் வேண்டுமா?

இது தான் இவர்களின் ஜன நாயக தலித்திய முகமூடியின் பின்னால் இருப்பது.

நர்மதா கூறியவ்ர்றில் இருக்கும் சிலவிடயங்களை ரயாகரனும் கருத்தில் எடுக்க வேண்டும்.ரசியப் புரட்சி இன்றி மாக்சியம் பற்றி எவரும் அறிந்திலர்.வெறும் தத்துவார்த்த நிலைப்பாடு மட்டும் மாற்றங்களைக் கொண்டுவராது.தத்துவமும் நடைமுறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

போர் களத்தில் உருமாற்றியுள்ள சமூக வர்க்க நிலை காரணக்களைக் கருத்தில் எடுக்க வேண்டும்.புலிகளின் உள் நிகழ்ந்துள்ள வர்க்க நிலைப்பட்ட மாற்றங்களையும் இரயாகரன் கண்டு கொள்ள வேண்டும்.
புலிகள் என்னும் இயக்கம் எப்போதுமே ஒரே நிலையில் இருக்கிறது என்பது ஆரோக்கியமான அறிவியற் பார்வை கிடையாது.

தமிழரங்கம் said...

அற்புதனுக்கு

உங்கள் கருத்தை ஒட்டிய சில குறிப்புகளை இரண்டொரு நாளில் மாவீரதின செய்தி மீதான குறிப்பில் விவாதிக்க துற்படுகினறேன்.