தமிழ் அரங்கம்

Tuesday, May 27, 2008

தில்லைச் சமரில் வென்றது தமிழ்

தில்லைப் போராட்ட வெற்றியானது ஒரு துவக்கப்புள்ளிதான், சமஸ்கருத வழபாட்டை அகற்றல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சராதல் - என நீண்டதொரு போராட்டத்தை தமிழினம் நடத்த வேண்டியுள்ளது.

மார்ச் 2ஆம் நாள். தில்லைக் கோயிலில் தீட்சிதப் பார்ப்பனர்கள் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது. தில்லைச் சமரில் தமிழ் வென்றது. இது ஒரு வரலாற்றுச் சாதனை!

இந்தச் சாதனை ஒரேநாளில் எளிதில் நிகழ்ந்துவிடவில்லை. நீண்ட நெடிய உறுதியான போராட்டத்தின் வாயிலாகவே இந்த வெற்றி சாதிக்கப்பட்டுள்ளது. தில்லைச் சிற்றம்பல மேடையில் தேவாரத் தமிழ் பாடிய "குற்றத்திற்காக' 8 ஆண்டுகளுக்கு முன்பு சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்து வெளியே தூக்கி வீசினார்கள், தீட்சிதப் பார்ப்பனர்கள். அதைத் தொடர்ந்து, சிவனடியார் ஆறுமுகசாமிக்கு ஆதரவாக நின்று, தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்ற உறுதியேற்று மனித உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகர விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. மற்றும் தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்புடன் எண்ணற்ற பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.
.

No comments: