தமிழ் அரங்கம்

Monday, May 26, 2008

அரசு அல்லது புலியை நாம் ஆதரிக்கா விட்டால் 'என்ன தீர்வு" என்று எம்மிடம் கேட்பவனின் அரசியல் என்ன?

இதுவோ எம்மை எதிர்கொள்ள முடியாதவனின் எதிர்வாதம். இது நாம் சந்திக்கும் அரசியல் சவால். எம்மால் அம்பலமாகும் புலிகளும் புலியெதிர்ப்பும் தான் தொடர்ச்சியாக இந்த வாதத்தை எம்மை நோக்கி எழுப்புகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் நலனில் இருந்து இதைக் கேட்கவில்லை. இந்த அடிப்படையில் சுயமாக சிந்திப்பது கிடையாது.


வேடிக்கை என்னவென்றால் புலிக்கும் அரசுக்கும் வெளியிலான மக்களின் அரசியல் செயல்தளத்தை இவர்களே முன்நின்று அழித்த வண்ணம் தான் அந்த அரசியலை முன்னெடுத்தபடி தான் எம்மை நோக்கி இந்த அரசியல் தர்க்கத்தையே வைக்கின்றனர். மக்களுக்கான அரசியல் சாத்தியமற்ற ஒன்றாக கூறுமளவுக்கு இந்த மக்கள் விரோதத்தை 'ஜனநாயக" மாக்குகின்றனர். இப்படி இவர்கள் யாருக்காக ஊளையிடுகின்றனர்? மக்கள் அரசியல் என்பது ஒரு விவாதப்பொருளல்ல என்று கூறுமளவுக்கு புலம்பெயர் சூழலில் எதிர்ப்புரட்சிகரமான பண்பு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஒன்றில் புலியை ஆதாpப்பது அல்லது அரசை ஆதாpப்பது என்ற ஒற்றைப்பரிமாண பாசிச அரசியல் முன்தள்ளப்படுகின்றது. இதற்கு வெளியில் இன்று மாற்று அரசியலுக்கு இடமில்லை என்கின்றனர். இது தான் புதிய அரசியல் சூழலின் சாரப் பொருள். இதைப் பொதுவில் இனம் காணாமல் இருப்பது இதை நாம் தனித்து எதிர்கொள்வது நாம் மட்டும் சந்திக்கும் புதிய அரசியல் நெருக்கடி.

அரசுடன் அல்லது புலியுடன் சேர்ந்து இயங்குவதா மக்கள் அரசியல்?
.

No comments: