பல ஆண்டுகளாகவே சீமைச் சாராய விற்பனையில் கொடிகட்டிப் பறந்து வரும் தமிழகம், ""இப்பொழுது'' போதைப் பொருள் புழக்கத்திலும், விற்பனையிலும் சாதனை படைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத் தலைநகர் சென்னை, பிற ஆசிய நாடுகளுக்குப் போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறியிருக்கிறது.
மேலே பயன்படுத்தப்பட்டுள்ள இப்பொழுது என்ற வார்த்தைக்குப் பதி லாக, தாராளமயத்திற்கு பின்பு எனப் பயன்படுத்துவதுதான் துலக்கமானதாக இருக்கும். தாராளமயத்திற்கு முன்பு, போதைப் பொருட்களை பிற நாடுகளுக்கு கடத்திச் செல்லும் வழியாகத்தான் சென்னை பயன்படுத்தப்பட்டது. தாராளமயத்திற்குப் பின்பு, சென்னை விற்பனை மையமாக ""வளர்ச்சி'' அடைந்திருக்கிறது. உலகமயம் வாரி வழங்கியுள்ள முன்னேற்றம் இது.
சென்னையின் உள்ளூர் சந்தையின் மதிப்பு ரூ. 100/ கோடி என்றும்; ""ஏற்றுமதி'' வர்த்தக மதிப்பு ரூ.20/ கோடி முதல் ரூ. 40/ கோடி வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் இருந்து ஈழத்திற்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் ""கடத்தப்படுவதை''ப் பற்றி அலறி எழுதும் பத்திரிகைகள், இந்தப் போதை மருந்து கடத்தல் பற்றி அடக்கியே வாசிக்கின்றன.
.
1 comment:
சமீபத்தில் கர்நாடக-தமிழக எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்த கள்ளச் சாராய சாவு கூட தனியார்மய தாராளமய பொருளாதாரம் ஏற்படுத்திய தாக்கம்தான்
அசுரன்
Post a Comment