தமிழ் அரங்கம்

Thursday, June 19, 2008

மேற்கு வங்கப் பஞ்சாயத்துத் தேர்தல் : 'வன்முறையே வெல்லும!"; - "மார்க்கிஸ்டு"களின் தேர்தல் கொள்கை

பஞ்சாயத்துத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே எதிர்க்கட்சியினரைப் பிரச்சாரம் செய்ய விடாமல் பல பகுதிகளில் சி.பி.எம்.குண்டர்கள் விரட்டியடித்தனர். குறிப்பாக,சிங்கூர்நந்திகிராமம் பகுதியில் சி.பி.எம் குண்டர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு, தமது வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் இப்பகுதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ""சிங்கூர்நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்காக கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட சி.பி.எம் கட்சியினருக்கு இத்தேர்தல் மூலம் பாடம் புகட்டுங்கள்'' என்று பிரச்சாரம் செய்து வந்த நந்திகிராமத்தைச் சேர்ந்த பூமி பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோடிகள் மீது சி.பி.எம். குண்டர்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தினர். அவர்களின் வீடுகள்வாகனங்கள் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டன.
சிங்கூர்நந்திகிராமம் பகுதியில், அன்னிய சக்திகள் ஊடுருவி மக்களைத் தூண்டிவிட்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகப் புளுகி, அடக்குமுறைகளை நியாயப்படுத்தி வந்த சி.பி.எம் கட்சி, தற்போதைய பஞ்சாயத்து தேர்தல் வெற்றி மூலம் தமது செல்வாக்கை நிரூபிக்கலாம்; பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை இத்தேர்தலைச் சாதகமாக்கிக் கொண்டு பழிவாங்கி ஒடுக்கலாம் என்று கணக்கு போட்டு, இப்பகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு குண்டர் படைகளை ஏவியது.

சி.பி.எம் குண்டர்படையின் வன்முறைகள் பற்றிய புகார்கள் குவியத் தொடங்கியதும், தேர்தல் ஆணையம் மத்திய ரிசர்வ் போலீசுப் படையை இப்பகுதிகளில் குவித்தது. ஆனாலும், உள்ளூர் போலீசின் துணையுடன் சி.பி.எம் குண்டர்கள் தாக்குதலைத் தொடர்ந்தனர். மத்திய ரிசர்வ் போலீசு பல இடங்களில் சி.பி.எம்.குண்டர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி, பாதுகாப்பு அளித்த பிறகே எதிர்க்கட்சியினர்.. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: