தமிழ் அரங்கம்

Tuesday, June 17, 2008

சமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை"

சமூக நோக்கமற்ற புலித் தேசியம். சமூக நோக்கமற்ற புலியெதிர்ப்பு ஜனநாயகம். சமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை". இவைக்கு பின்னால், தெளிவான மக்கள் விரோத நோக்கங்கள் தெளிவாக உண்டு.

இங்கு சொந்த சுயநலம் உண்டு. அதுதான் சொந்த 'தொழில் நேர்மை" பற்றி பேச வைக்கின்றது. மக்களுக்கு எப்படி நேர்மையாக செயல்படுகின்றீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்;. மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசத்தையும், எப்படி நேர்மையாக எதிர்த்துப் போராடுகின்றீர்கள்? அதைச் சொல்லுங்கள். இதுவல்லாத ஊடகவியல் நேர்மை என்பது, பாசிசத்தை ஆதரித்து பூசிப்பது தான். இரண்டு பாசிசத்தை எதிர்த்து, அந்த வகையில் கருத்தாளரைக் கொண்டிராத தேச 'தொழில் நேர்மை"யைக், கொண்டு போய் குப்பையில் போடுங்கள். அது யாருக்குத் தான் தேவை. இது சொந்த சுயநலத்துக்கு வேஷம் போட்டுக் காட்ட உதவும் என்று, கனவு காணாதீர்கள்.

இங்கு சுயநலம் தான் 'தொழில் நேர்மை" என்கின்றது. தொழில் வளர்ச்சி, தொழில்சார் பிரபல்யம் தான், தேச ஆசிரியரின் முதன்மையான நலனாகின்றது. இங்கு சமூக நோககமல்ல. சமூக விடையத்தை தனது 'தொழில் நேர்மை"யின் பெயரில், பயன்படுத்தவே முனைகின்றனர். இதனால் புலியெதிர்ப்பையும், இடதுசாரியத்தையும் கூட சந்தைப்படுத்தியவர்கள்.

இதற்கு ஏற்ப இந்தப் பொறுக்கி காலத்துக்கு காலம் ஆட்களையும், அவர்களின் சொந்த பலவீனங்களையும் தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தியதுடன், பயன்படுத்தவும் முனைகின்றான். மனித அவலத்தை கேலிசெய்யும் இந்த பொறுக்கியுடன் சேர்ந்து பொறுக்கும் கூட்டத்தையும், இந்த பொறுக்கியின் பல்லாக்கை தூக்கும் சுயநலக் கூட்டத்தை 'தொழில் நேர்மை" ஊடாக தான் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றேன் என்பதையும் கேலிசெய்து விடுகின்றான். இடதுசாரியம், அரசியல் எல்லாம் 'தொழில் நேர்மை" ஊடாக விலை போகின்றது.
.

No comments: