தமிழ் அரங்கம்

Friday, June 20, 2008

தான் வாழும் சமூகத்துக்கு எதிராக இயங்குபவனை எப்படி பாராட்ட முடியும்?

பாரதி பற்றி நாகார்ஜுனனுக்கும் ஏகலைவனுக்கும் நடந்த விவாதம், மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக இருக்கிறது.

பாரதி பற்றிய நம்முடைய கேள்விகளுக்கு முற்போக்கு முகாமை சேர்ந்த பாரதி அபிமானம் கொண்ட அறிவுஜீவிகள், தங்கள் மவுனங்களையே பதில்களாக தருகின்றனர்.

நெருக்கிப் பிடித்துக் கேட்டால், குணா கமல்போல், ‘அபிராமி, அபிராமி‘ என்ற பாணியில் ‘காலக்கட்டம், கவிதை` ‘கவிதை, காலக்கட்டம்` என்று சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்கிறார்கள்.

எதையும் விளக்கு விளக்கு என்று விளக்குகிற Intellectuals நம் கேள்விகளுக்கு எந்த விளக்கமும் சொல்லாமல், ஒரு பொதுபுத்தியில் இருந்தே பதில் அளிக்கின்றனர்.

***
ஏகலைவனின் கேள்விகளுக்கு நாகார்ஜுனின் பதில்கள் ஒரு தனிநபரின் பதில்கள் அல்ல. ஒட்டுமொத்த அறிவுஜீவிகளின் அபயக் குரலாகவே நாம் அதை பார்க்கிறோம்.

சில மாதங்களுக்கு முன் எஸ்.வி. ராஜதுரையை ஒரு மேடையில், பாரதி பற்றிய விவாதத்தின் போது, தோழர்கள் கேட்ட கேள்விகளுக்கு, குணா கமல் போல், ‘தெளிவாக` பதில் அளித்திருக்கிறார் ராஜதுரை.

( எஸ்விஆர் இதற்கு சரியான பதிலைக் கூறாமல் “இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற கவிஞர் அவர். அவர் காலகட்டத்தின் குழந்தை. நவீன தமிழ் அவரிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது. அதை மதிக்கிறேன்.” என்று சொல்லி நழுவிக் கொண்டார்

No comments: