தமிழ் அரங்கம்

Thursday, June 19, 2008

தேசம்நெற் சொறியும் அரசியல் என்ன?

தேசம் தனக்கு எந்த அரசியலும் கிடையாது என்கின்றது. அரசியல் கிடையாது என்றால், அதன் அர்த்தம் நிலவுகின்ற பாசிசத்தை நடுநிலையுடன் ஆதரிப்பது தான். இதைத் தான் ஊடகவியல் என்று கூறுவதுடன், இதை நியாயப்படுத்தவே 'தொழில் நேர்மை" என்கின்றனர். இதுவல்லாத சமுதாய நலனா தேசத்திடம் உண்டு? சொல்லுங்கள்?

தேசத்தில் புல்லுருவியாக வாழ நினைக்கும் நீங்கள், எந்த சமுதாய நலத்துடன் செயல்படுகின்றீர்கள். அதையாவது சொந்த பெயரில் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு அரசியல் முகமிருந்தால், ஒரு துளி நேர்மையிருந்தால் அதைச் சொல்லுங்கள். மானம் ரோசமற்ற, மக்களின் அவலத்தை வைத்து பிழைக்கின்ற சொறி நாய்கள் தான்டா நீங்கள்.

தேசம் சொறிவதன் மூலம் 'தொழில் நேர்மை" என்று அரசியல் பேசுகின்றது. நீங்கள் அதையே சொறிவதன் மூலம், தமிழ் மக்களின் அவலத்துக்கு தீர்வு காண்கின்றீர்கள்!

கொசிப்பும், வம்பளப்பும், தூற்றலும், அவதூறுமின்றிய, ஒரு தேசம் நெற்றை கற்பனை பண்ணி பாருங்கள். எத்தனை பேர் அதைப் பார்ப்பார்கள் என்று? நீங்கள் எத்தனை பேர் அதில் சென்று வம்பளப்பீர்கள்? தேசம் மக்கள் கருத்தை வைத்தால், நீங்கள் அதற்காக முக்கியா முனைவீர்கள்! தேசம் நெற் உங்களைப் போன்ற பொறுக்கிகளை நம்பி, உங்களைப் பொறுக்க வைக்கின்றது.

கிழக்கு பாசிட்டுகளின் இணைய ஊடகமான விழிப்பு, ஆபாச சினிமா இன்றி கிழக்கு மக்களுக்காக இயங்க முடியவில்லை. அது செய்யும் மக்கள் சேவையை, சினிமா ஆபாசம் ஊடாகத் தான் உங்களைப் போன்றவர்களை கொசிக்க அழைக்க முடிகின்றது. கிழக்கு பாசிட்டுகளால் கிழக்கு மக்களின் வாழ்வைப் பேசி, மக்களை அணுக முடியாது. இப்படித்தான் யாழ் மேலாதிக்க வடக்கு பாசிட்டுகளின் சில இணையங்கள் இயங்குகின்றது.

இப்படித் தான் தேசமும். அது அவதூறுகளும் கொசிப்புகளும், வம்பளப்புகளுமின்றி, அதனால் ஒரு இணையமாக உயிர் வாழவே முடியாது. ஏன் சமூக அக்கறை கொண்ட எந்த நோக்கமும், அதனிடம் கிடையாது. இதனால் கொசிப்பை ஊக்குவிக்க, சேறடிப்பது அவசியம்.

உதாரணமாக பாரிசில் என்ன நடந்தது என்பதை அறிய, தேசத்திடம் தொலைபேசி தொடர்பு எண் இல்லை. பலருக்கு தொலைபேசி எண் கொடுத்தவராச்சே. அண்மையில் கிழக்கில் நடந்த பாலியல் வன்முறைகளை மறுக்கவும், தேசத்தின் முதுகெலும்பான கிழக்கு பாசிட்டுமான ... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: