தமிழ் அரங்கம்

Friday, November 14, 2008

உத்தப்புரம் : இதுதான் சூத்திர ஆட்சி!

மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சித்ரா எனும் இளம்பெண் காச நோயினால் இறந்து விட்டார். அப்பெண்ணின் பிணத்தைப் பார்த்து அழுதிடக் கூட அவரைப் பெற்ற தந்தை வரவில்லை. உடன்பிறந்த சகோதரர்கள் மூவரும் வரவில்லை. அவர்கள் மட்டுமல்ல, பிணத்தைப் புதைக்கக் கூட அங்கு ஆண்களே வர முடியவில்லை.

உத்தப்புரத்திலுள்ள தாழ்த்தப்பட்டோர், கொடிக்கால் பிள்ளைமார் குடியிருப்பிற்குள் வரக்கூடாதென்பதற்காக, 300 அடி நீளச் சுவர் ஒன்றை எழுப்பி 18 ஆண்டுகளாக சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தனர், அச்சாதியினர். இந்த ஆண்டு ஏப்ரல்மே மாதங்களில் "மார்க்சிஸ்ட்' கட்சி இச்சுவரை இடிக்கக் கோரிப் போராடியது. "மார்க்சிஸ்ட்' கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் அங்கு வரப்போவதாய் அறிவித்தார். உடனே, வெறும் 15 அடி நீளச்சுவரை மட்டும் அவசரமாய் தமிழக அரசே இடித்துப் பொதுப்பாதை ஒன்றை உருவாக்கியது.

No comments: