தமிழ் அரங்கம்

Thursday, November 13, 2008

அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்புப் போர் : ஒட்டகம் மூக்கை நுழைத்த கதை


கடந்த செப்டம்பர் 3ஆம் நாளன்று பாகிஸ்தானின் மேற்கே, ஆப்கானின் எல்லையை ஒட்டியுள்ள வஜீரிஸ்தான் எனும் பழங்குடியின மாகாணத்திலுள்ள ஜலால்கேல் கிராமத்தில் அமெரிக்கப் படைகள் ஹெலிகாப்டரில் வந்திறங்கின. ஹெலிகாப்டர்களின் பேரிரைச்சலால் அச்சத்தோடு கிராம மக்கள் வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்தனர். நிராயுதபாணிகளான அக்கிராம மக்கள் மீது அமெரிக்கப் படைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தின. அதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம். அக்கிராம மக்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருக்க, அமெரிக்கப் படைகள் எவ்விதச் சலனமுமின்றி பறந்து சென்றன.

ஜலால்கேல் கிராமத்தில் நடந்ததைப் போலவே கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் எல்லைப்புற பகுதியில் அமெரிக்கப் படைகள் நான்குமுறை அத்துமீறி நுழைந்து, கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்துள்ளனர்.

No comments: