தமிழ் அரங்கம்

Saturday, November 15, 2008

புலியின் தோல்வி தவிர்க்க முடியாதது

புலிகள் தாமே தேர்ந்தெடுத்த தோல்வி இது. இது பேரினவாதத்தின் சொந்த இராணுவ வெற்றியல்ல. இது தமிழ் மக்களின் சொந்த வெற்றியுமல்ல. தமிழ்மக்களோ அனைத்துத் தரப்பாலும் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்கள் மேல் புலிப் பாசிசத்தை நிறுவிய புலிகள், அதன் மூலம் மக்களை தோற்கடித்து அதை இராணுவத்தின் வெற்றியாக்கியுள்ளனர்.


புலிகளின் தோல்வி பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாதவர்கள் கூட, இது நடந்துவிடும் என்று இன்று நம்பத் தொடங்கியுள்ளனர். புலிப் பினாமிகளான கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட, புலிகளை தோற்கடித்தாலும் விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்று பேசுமளவுக்கு நிலைமை வேகமாக மாறிச்செல்கின்றது.

தொடர்ந்தும் தொடரும் போராட்டம் பற்றி வேடிக்கை காட்டுகின்றனர். புலிகளின் இந்த பொம்;மைகள், வாய்வீச்சைத் தவிர வேறு எதுவும் செய்ய லாயக்கற்ற பினாமிகளின் உளறல்கள் இவை. சுயநிர்ணயம் என்றால் என்ன என்ற தெரியாத மலட்டுச்சமூகத்தை உருவாக்கியுள்ள புலிகள், அனைத்தையும் அழித்து விட்டு கதை சொல்கின்றனர். புலிகள் அழிந்தவுடன், பேரினவாதத்தின் கோமணத்தை எடுத்துக் கட்டும் முதல்தரமான பொறுக்கிகள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் எமக்கு கிடையாது.

புலிகளை தோற்கடிக்கும் புறநிலையான நெருக்கடிகள் எவை

அனைத்தையும் இராணுவ வடிவில் கட்டமைத்த புலிகள், சமூகத்தை தம் பாசிச கட்டமைக்குள் அடக்கியொடுக்கினர். இதன்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

4 comments:

Unknown said...

புலிகளின் தோல்வியில் உங்களுக்கு அப்படி என்ன ஆனந்தம் என்று தெரியவில்லை. புலிகள் உங்களை என்ன செய்தார்கள்?? ஒற்றை துப்பாக்கியோடு ஆரம்பித்த போராட்டம் இன்று விமானங்கள் வரை வளர்வது அவ்வலவு எளிதா என்று யோசித்து பாருங்கள். இது சிருபிள்ளை விலையாட்டல்ல. மக்களின் உரிமைக்காய், மக்களின் துனையுடன் நடக்கும் போராட்டம் இது. மக்கள் துணை இல்லை என்றால், புலிகளின் இயக்கம் என்பது எப்போதோ சுவடு கூட இல்லாமல் போயிருக்கும். புலிகளின் வெற்றி என்பது உரிமைக்காக போராடும், போராடிய அனைத்து மக்களின் வெற்றி. இதில், நாமும் அடக்கம் தான். கொஞ்சம் வரலாரு படியுங்கள் அன்பரே!!!

தமிழரங்கம் said...

'துப்பாக்கியோடு ஆரம்பித்த போராட்டம் இன்று விமானங்கள் வரை வளர்வது அவ்வலவு எளிதா என்று யோசித்து பாருங்கள்." இதை நாங்கள் மறுக்கவில்லை. இதனால் எதை தமிழ் இனம் சாதித்தது. எந்த உரிமையை பெற்றனர். தமிழ் மக்கள் தாம் உரிமையை புலிகளிடம் இழந்தது போனார்கள்.

'புலிகளின் தோல்வியில் உங்களுக்கு அப்படி என்ன ஆனந்தம்.." நாங்கள் ஆனந்தம் கொள்வதாக கருதும் நீங்கள், எம்பற்றிய கற்பனை இவை. புலிகள் பற்றி எமது மதிப்பிடு, நிலைமை பற்றிய மதிபீடு.

'புலிகள் உங்களை என்ன செய்தார்கள்??" என்பதை வரலாற்றை தேடிப்படியுங்கள். மக்களுக்கு எதிராக எப்படி செயல்பட்டனர் என்பதை, புலிகளின் வரலாறு. ' வரலாரு படியுங்கள்" நிச்சமயமாக, இதனால்தான் இதை எழுத முடிகின்றது. ' அனைத்து மக்களின் வெற்றி" அது என்ன? புலிகள் ஆள்வதா!? மக்களின் அடிப்படை உரிமைகளா!? தமிழ் மக்கள் அனைத்து உரிமையையும் இழந்து விட்டனர் என்பதே உண்மை.

Unknown said...

ஆயுதத்தால் புலிகள் என்ன சாதித்தார்கள்?? முற்றிலும் சரி, தனி ஈழம் மலராதவரை எதுவும் சாதிக்கவில்லை என்றுதான் பொருள். மக்கள் புலிகளிடம் உரிமை இழந்தார்கள். சரி, சிங்கள அரசிடம் பெற்ற எந்த உரிமையை புலிகளிடம் இழந்தார்கள்??

புலிகளின் இயக்கம் நீர்த்துப்போனது என்பதை நானும் ஏற்கிரேன். புலிகள் ஆள்வதா??? நிச்சயம் இல்லை. ஆலவும் முடியாது. புலிகளுக்கு எதிராக ஈழ மக்களே எழுதுவதை நானும் ஆங்காங்கே படித்திருக்கிரேன். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உங்கள் போல் முற்றாக புலிகளை ஈழத்திலிருந்து அகற்றுவதை எப்படி ஏற்க முடியும். சரி, அப்படியே ஆனாலும், புலிகள் இல்லையேல் யார் இருக்கிறார்கள், தமிழர்களுக்கு??

புலிகள் இயக்கம், எந்த தனிமனித குறிக்கோலுக்காகவும் ஏற்படுத்தப்பட்டதல்ல. 30 ஆண்டுகளாய் ஒரு இயக்கம் கட்டுக்கோப்போடு இருக்கமுடியும் என்பது எதிர்பார்கமுடியாது. புலிகளின் நிலை இன்று அம்மக்களையே சில அடக்குமுறைகளுக்கு உட்படுத்தியதன் காரணம், பிரபாகரன் மட்டுமோ, அல்லது புலிகள் மட்டுமோ இல்லை. இன்று புலிகளிட மக்கள் உரிமை இழந்தனர் என்று எழுதும் நாம், அன்று அவர்கள் அதை செய்ய ஆரம்பித்தபோது எங்கு போனோம்?? புலிகளின் இந்த மாற்றம் என்பது, காலம் மற்றும் நாம் வித்திட்டு வளர்த்த மாற்றம். இடைக்காலத்தில், புலிகளை யாரும் சீண்டவில்லை. சிங்கள அரசும், நாமும். அதனால் அவர்களின் பாதையில் மாருதல்கள் ஏற்பட்டது உண்மை. அவர்களின் நோக்கம் சிங்கள அரசை அகற்றுவதாய் இருந்திருக்குமேயானால், ஒரு வேளை, அவர்களின் இயக்கம் உருகுளையாமல் இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும், ஏன், சிங்கள அரசை அகற்றவும் முடிந்திருக்களாம். ஆனால், அங்கு நிலமை வேறு. அவர்கள், மக்களை பாதுகாக்கவும், அம்மக்களுக்காய் ஓர் நாடு வேண்டியும் போராட்டத்தை தொடங்கியவர்கள். நாளாக, நாளாக, அம்மக்களை அவர்கள் கட்டுக்குள் கொண்டுவரவேண்டிய நிலை வந்தது என்பதுதான் உண்மை.

நீங்கள், எந்த ஒரு உரிமைபோராட்டதின் பக்கங்களை திருப்பினாலும், அதில், இதை ஒத்த அத்தியாயங்களை கடந்துதான் வந்திருக்கும். இப்போது வேண்டியது அந்த அழுக்கான பக்கங்களை புரட்டுவது அல்ல. புலிகள் வெற்றி பெற்றால், உலகத்தின் மொத்த பார்வையும் ஈழத்தின் மேல் திரும்பும், அங்கே ஒரு புதிய நாடு அழகாய் மலரும். இதில், புலிகளின் ஆதிக்கம் எந்த வகையிலும் செல்லாது. ஈழம் மலர்வதற்கு புலிகள் வெண்றாக வேண்டும். அது புலிகளின் வெற்றி அல்ல. அந்த மக்களுக்கு கிடைக்கப்போகும் நல்வாழ்வுக்கான ஆரம்பம். ஒருவேளை புலிகள் தோற்றால், அம்மக்களின் இந்நிலைக்கு விடிவு இன்னும் 30 ஆண்டுகள் ஆனாலும் கடினம்தான். ஏனெனில், புலிகள் தோற்றால், புலிகள் இயக்கம் இருந்து கொண்டேதான் இருக்கும். புலிகள் இயக்கம் இருக்கும் வரை சிங்கள அரசாங்கம் தமிழ்ர்களை கொலை செய்துகொண்டுதான் இருக்கும். இந்த போர் ஒய்ந்தால், உலகநாடுகளின் பங்கேற்புகளிடையே புலிகள் இயக்கம் கைவிடப்பட்டு அழகான நாடு அமைவதற்கு வாய்பு ஏற்படும்.

தமிழரங்கம் said...

உங்கள் கருத்துகளை மதிக்கிகின்றேன். ஒவ்வொன்றுக்கும் பதிளளிக்க நேரமில்லை. உங்கள் தவறே வராற்றை தொடர்ந்தும் புலி ஊடாகவே பார்க்க விரும்புகின்றீர்கள். இது தவறு என்று உணரும் போது, சரியான வழி கிடைக்கும். எனது புதியகட்டுரைகள் உங்கள் சில கேள்விகளுக்கு தெளிவாக பதில் தருகின்றது. ஒன்றை மட்டும் எடுக்கின்றேன். '..;, புலிகள் தோற்றால், புலிகள் இயக்கம் இருந்து கொண்டேதான் இருக்கும்" என்ற உங்கள் வாதம், தனிப்பட்ட வெறும் நம்பிக்கை தான். ஏன் புலிகள் தோற்கின்றனர்!? இந்த காரணம், தொடர்ந்து புலியின் இருப்பை அனுமதிக்காது. மக்கள் போராட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும்;. ஆனால் அது புலிப்போராட்டமாக ஒருநாளும் இருக்காது.