தமிழ் அரங்கம்

Tuesday, March 17, 2009

வழகுரைஞர்கள் மீதான தாக்குதல் : அம்பலமானது போலீசின் உண்மை முகம்! தி.மு.க.வின் பொய் முகம்!

பிப்ரவரி 19 காக்கி உடை ரவுடிகளின் லத்திக் கம்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தை இரத்தத்தில் முக்கி எடுத்தன. ஜனநாயகத்தின் மற்ற தூண்களெல்லாம் உளுத்து உதிர்ந்துவிட்ட நிலையில், நீதிமன்றம் என்ற ஒற்றைத் தூண்தான் அதனைத் தாங்கி நிறுத்திக் கொண்டிருக்கிறது என்றும், இந்திய ஜனநாயகத்தின் மீதான மக்களின் இறுதி நம்பிக்கையே நீதித்துறைதான் என்றும் ஆளும் வர்க்க அறிஞர்களால் போற்றிப் புகழப்பட்ட நீதிமன்றத்தின் வாயிற்கதவுகளை இழுத்து மூடிவிட்டு, லாக் அப்பில் சிக்கிய கைதியை அடித்துத் துவைப்பதைப் போல வழக்குரைஞர்களைத் தேடித்தேடி அடித்து நொறுக்கியது போலீசுப்படை. இதனைத் தடுத்து நிறுத்த முயன்ற நீதிபதிகளும் போலீசின் தடியடிக்குத் தப்பவில்லை. புனிதக் கருவறையின் போற்றுதலுக்குரிய தெய்வங்களைப் போல பாவிக்கப்பட்ட செங்கோல் தாங்கிய நீதிபதிகளை விரட்டியடித்துவிட்டு, "நானே அரசு, நானே நீதி' என்று போலீசின் தடிக்கம்பு பிரகடனம் செய்து கொண்டது.

நீதிபதிகளை போலீசார் ஓட ஓட விரட்டியதையும், அவர்கள் மீது விழுந்திருக்க வேண்டிய அடியைத் தாங்கள் வாங்கிக் கொண்டு, நீதிபதிகளின் உயிரை வழக்குரைஞர்கள் பாதுகாத்ததையும் நேரலை ஒளிபரப்பில் நாடே கண்டது. நீதிபதிகளின் அதிகாரம் செல்லாக்காசாகிவிட்டதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும்தான் கண்டனர். எனினும் தமது அதிகாரம் அரசியல் சட்டப் புத்தகத்தில் இன்னமும் பாதுகாப்பாகவே இருக்கின்றது என்று உச்சநீதிமன்றம் கருதுவதால், இப்பிரச்சினையில் தலையிட்டிருக்கிறது...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: