skip to main |
skip to sidebar
வன்னியில் உத்தரித்துக் கொண்டிருக்கும் மக்களின் அவஸ்தைகள் எல்லைமீறி வருகின்றது. இந்த நிலையில் இந்தியா முதற்கொண்டு, வெளிநாடுகள் அனைத்தும் இன்று யுத்தநிறுத்தத்தை முன்தள்ளி வருகின்றன. அண்மித்து வரும் இந்நியத் தேர்தல்கள், சர்வதேச பூர்வீக மக்களின் அன்றாட வாழ்கைளில் குறுக்கிடும் புலிசார்பு போராட்டங்கள், இதற்கான சர்வதேசங்களின் பாதுகாப்புச் செலவீனங்கள், மற்றும் புலம் பெயர் தமிழர்களின் வாக்கு வங்கிமீதான கவனங்கள் போன்ற இன்னோரன்ன காரணங்களால், ஒரு யுத்த நிறுத்தத்துக்கான சூழ்நிலைகள் மேலெழுந்து வருகிறது.
பயங்கரவாத அமைப்பாக சர்வதேச ரீதியில் கணிசமான நாடுகளால் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்குச் சார்பான போராட்டங்கள் உலகெங்கும் பரவலாக நடந்தன. ஆனாலும் இப்போராட்டங்கள் மீது கடுமையான கெடுபிடிகளை இந்த நாடுகள் தவிர்த்திருந்தன. இதற்கான காரணங்களைத் தமிழர் தரப்பு புலி ஆதரவாளர்கள் அலசி ஆராயத் திராணியற்று கிடந்தார்கள். கிடக்கிறார்கள். உண்மையில் வன்னியில் சீவன் போகிற நிலையில் வாழ்ந்து வருகிற அப்பாவி மக்களுக்காக, தமது சொந்த உறவுகளுக்காக, உளவியல் ரீதியாக உந்தப்பட்டு அதை வெளிப்படுத்துகிற புலம் பெயர் மக்களின் மன உளைச்சலின் வெளிப்பாடாக இப்போராட்டத்தை இவர்கள் பார்க்கின்றனர். இதை அடக்குவதால், இவர்கள் மனநோயாளிகளாக மாறக்கூடிய யதார்த்தத்தை புரிந்து கொண்டும், இதற்கான சமூக உதவிகளைக் கணக்கிற் கொண்டும், இவ் மன உளைச்சலின் வடிகாலாக இப்போராட்டங்களை அனுமதித்தனர். அனுமதிக்கின்றனர்.
இருப்பினும், இவர்களின் இப்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
No comments:
Post a Comment