தமிழ் அரங்கம்

Monday, April 13, 2009

போலீசின் நீதிமன்றத் தாக்குதல் பஞ்சு மிட்டாய் தீர்ப்பு

பிப்ரவரி 19 உயர்நீதி மன்றத் தாக்குலுக்கு எதிராக தமிழக வழக்குரைஞர்கள் ஒரு மாத காலமாக நடத்தி வந்த நீதிமன்றப் புறக்கணிப்பு இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

உயர்நீதிமன்றத் தாக்குதலுக்குப் பொறுப்பான இரு போலீசு அதிகாரிகளை (ராமசுப்பிரமணியம், விசுவநாதன்) தற்காலிகப் பணிநீக்கம் செய்வதாக, 18.3.09 அன்று முகோபாத்யாயா தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றப் புறக்கணிப்பைக் கைவிடுவதாக வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு 20.3.09 அன்று மாலை அறிவித்திருக்கிறது. புறக்கணிப்பு கைவிடப்பட்ட போதிலும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரையில் பிற வடிவங்களிலான போராட்டங்கள் தொடரும் என்றும் போராட்டக்குழு கூறியிருக்கிறதே தவிர, என்ன விதமான போராட்டங்கள் நடத்தப்படும் என்பது குறித்து விளக்கவில்லை.

போராட்டங்களில் வெற்றிதோல்வி சகஜம்தான்; பிழைப்புவாத சங்கத் தலைமைகள் போராட்டத்துக்குத் துரோகமிழைப்பதும் சகஜம்தான். எனினும், இந்தத் தலைமையால் ஒரு தோல்வியை வெற்றியாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. ஆகப்பெரும்பான்மையான வழக்குரைஞர்கள் இதனை ஒரு வெற்றி என்று நம்பவில்லை; எனினும், இந்த முடிவை எதிர்க்கவும் இல்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: