முறைகேடாகவே ஒரு தேர்தலை நடத்தி, தாமே அதில் வென்றவர்களாக இந்த அரசு தம்மைத்தாம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளரின் "மனச்சாட்சிக்கு விரோதமாக" மோசடியை தமது வெற்றியாக தமது பாசிசம் மூலம் அறிவிக்க வைத்துள்ளது.
இந்த அரசு. தமது வெற்றியை மோசடி செய்ய தெரிவு செய்த இடம், மக்கள் அளித்த வாக்கினை தமக்கு ஏற்ப எண்ணிக்கையில் திருத்தியது தான். தேர்தலை எண்ணுவதையும், அதை அறிவிப்பதையும் தமது சொந்த பாசிசக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதை மோசடி செய்தனர். இங்கு என்ன நடந்தது என்பது, இன்னும் மர்மமாக உள்ளது. எதிர்க் கட்சியினரும், ஊடகவியலும் இதைச் சுயாதீனமாக சரிபார்க்கும் அனைத்து சுதந்திரத்தையும், தொடர்ந்தும் அரசு பாசிசம் மூலம் ஒடுக்கி வருகின்றது. தேர்தல் வாக்களிப்பை பொதுவாக அமைதியாக நடந்ததாக கூறுகின்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கைகள், வாக்கு எண்ணுதல் மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு எப்படி நடந்தது என்பதுபற்றி, இது வரை எதையும் அது முன்வைக்கவில்லை. தேர்தல் ஆணையாளர் முதல் தேர்தல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டு அடிபணிய வைக்கப்பட்டனர். தேர்தல் எண்ணுவதை கண்காணித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரட்டப்பட்டனர். தேர்தலின் பின் எதிர்க்கட்சியினர், அவர்களின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு தாக்கப்படுகின்றனர். சொத்துகள் சூறையாடப்படுகின்றது.
இந்தத் தேர்தலை சட்டத்தின் எல்லைக்குள்,......... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment