தமிழ் அரங்கம்

Friday, January 29, 2010

"ஜனநாயக" விரோத முறைகளில் வென்ற தேர்தலும், பாசிசமயமாக்கலும்

தேர்தலில் மகிந்தா வென்று விட்டார் என்பதும், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக கூறுவதும், தேர்தல் என்றால் பலதும் பத்தும் இருக்கும் தான் என்று கூறி அதை நியாயப்படுத்துவதுமான போக்கு இன்று அதிகரிக்கின்றது. வென்றவர்களை ஆதரித்தும், அதைச் சார்ந்தும் நிற்கின்ற போக்கு, மக்களுக்கு எதிரான பாசிச மயமாக்கலை ஆதரிக்கின்ற ஒரு புதிய போக்கு தமிழ் சமூகத்தில் உருவாகி வருகின்றது.


கடந்தகாலத்தில் புலிகள் செய்ததை எல்லாம் நியாயப்படுத்தி, அதன் பாசிசமயமாக்கலை நிறுவனப்படுத்தியதும் இப்படித்தான். அன்று குதர்க்கமான நியாயப்படுத்தல் மூலம் தமிழ் சமூகத்தை பாசிச சமூகமாக மாற்றி, மனித இனத்தையே படுகுழியில் தள்ளினர். அதே பாணியில் இன்று மகிந்தாவுக்கு பின் பலர். புலியெதிர்ப்பு அணிகள் மட்டுமல்ல, நடுவில் நின்றவர்கள், அன்று புலியுடன் நின்றவர்கள் என்று மகிந்தா கட்டமைக்கும் பாசிசத்தை நியாயப்படுத்தும், ஒரு புதிய பாசிசக் கும்பல் உருவாகி வருகின்றது. காத்தடிக்கும் பக்கம் சாய்ந்து வாழும் சிந்தாந்தம், பாசிசத்தை நியாயப்படுத்துகின்றது.

இது புலம்பெயர் சமூகத்தில், மிக வேகமாக புரையோடி வருகின்றது. அன்று புலி இணையங்கள் புலியை நியாயப்படுத்தி, புலிப் பாசிசப் பிரச்சாரத்தை கட்டமைத்ததுடன் தமிழ்மக்களின் தலைவிதியை படுகுழியில் தள்ளினார்கள். இதேபோல்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: