தமிழ் அரங்கம்

Wednesday, January 27, 2010

மகிந்தாவை மீண்டும் ஜனாதிபதியாக்கியது எது?

இலங்கை மக்கள் அனுபவிக்கும் சுபிட்சமான வாழ்வா!? இல்லை. வேறு தெரிவு எதுவும் இல்லை என்பதாலா!? இல்லை. அப்படியாயின் எது? இலங்கையில் நிலவும் உச்சக்கட்ட சிங்கள இனவாதம்தான், மீண்டும் மகிந்தாவை வெல்ல வைத்துள்ளது. சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் சிங்கள இனவாதம் தோற்கடிக்கப்பட, சிறுபான்மை இனங்கள் அதிகமாக வாழும் சிங்களப் பகுதிகளில் விளிம்பில் வெற்றி பெற்று, முழு சிங்களப் பகுதிகளில் பெரும்பான்மை பெற்று ஜனாதிபதியாகியுள்ளார் மகிந்தா.

குடும்ப சர்வாதிகாரம் பாசிசம் கொப்பளிக்கவே, இனவாதியாக மாறி தமிழ் பகுதிகளில் வாக்களிப்பை பல வழிகளில் தடுத்து நிறுத்திய மகிந்தா, வெற்றியை தக்க வைக்க முனைந்தார். யாழ்குடாவில் குண்டுகளை வீசி மக்களை அச்சுறுத்தி வாக்களிப்பை தடுத்தது முதல், வன்னியில் போக்குவரத்தை முடக்கியதுடன், முழுத் தமிழ் மக்களையும் தங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து தமிழ்மக்கள் வாக்களிப்பதைத் தடுத்தனர்.

இலங்கை முழுக்க இராணுவத்தை கொண்டும், அரச அதிகாரத்தைக் கொண்டும் தேர்தலை முறைகேடாக்கி, தனது வெற்றிக்குரியதாக மாற்றினார். அனைத்து ஜனநாயக விரோத வழிமுறைகளையும் கையாண்டு, தன் வெற்றியை உறுதி செய்து கொண்டார்.

புலிகள் எ.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: