பிரதமர் மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் மாதம் மும்பய் நகரில் நடந்த கூட்டமொன்றில், ""நமது கஷ்டகாலம் முடிவுக்கு வந்துவிட்டதாக'' அருள்வாக்கு செõன்னார். அவர் எந்த நேரத்தில் திருவாய் மலர்ந்தாரோ தெரியவில்லை, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் நாடெங்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து, பாமர மக்களை மயக்கம் போடவைத்தது.
கடந்த மூன்று மாதங்களாக அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போகிறது. இது, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத விலை உயர்வு என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே அச்சப்படுமளவிற்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
ஒரு ரூபாய் அரிசியையும், 50 ரூபாய்க்கு அஞ்சறைப் பெட்டிச் சாமான்களையும் ரேஷனில் தருவதைக்காட்டி, விலைவாசி உயர்வுக்கு எதிராக மாபெரும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டதைப் போல தி.மு.க.அரசு காட்டிக் கொள்கிறது. அதே சமயம், அவரது கூட்டாளிகளோ இந்த விலை உயர்வை நியாயப்படுத்தும் திமிரோடு நடந்து வருகின்றனர். ""விலைவாசி உயர்ந்தால் அதன் பலன் விவசாயிகளுக்குத்தான் போய்ச் சேருகிறது'' எனத் திட்ட கமிசனின் துணைத் தலைவரும்............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment