தமிழ் அரங்கம்

Saturday, February 4, 2006

வக்கிரமடைந்த தலைமைத்துவம்


வக்கிரமடைந்த தலைமைத்துவமும், சமூக பண்பாட்டுக் கூறுகளும்

பி.இரயாகரன்
4.02.2006

முட்டாள்கள் முட்டாளாகவே நீடிப்பார்கள். ஒரு தலைமையே முட்டாளாகிவிட்டால், முட்டாள்தனமே சமூகத்தை குரூரமாக்குகிறது. இதுவே போராட்ட அமைப்பில் ஏற்பட்டுவிட்டால், எங்கும் வேதனையும், துன்பமும், தீமையும் சமூகத்தின் தலைவிதியாகி விடுகின்றது. சமூகம் எதையும் சுயமாக ஆற்றும் சமூக ஆற்றலை இயல்பாகவே இழந்து விடுகின்றது. சமூகம் சுய உணர்வை இழந்து, சுதந்திரத்தையே இழந்து விடுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு மூச்சுக்கள் எந்தவிதமான இரைச்சலுமின்றி போகின்றது. வாய்விட்டு அழவும் முடியாத, பீதி கலந்த அச்சவுணர்வே சமூக உறவாகிவிடுகின்றது.

எமது சமூகத்தில் நாம் காண்பது எல்லாம், மனிதத்துவத்தை ஏறி மிதிக்கும் பண்பாட்டையே. ஈரமற்ற, பகுத்தறிவு அற்ற, எங்கும் எதிலும் வன்மமும் மூர்க்கமும் நிறைந்த பகைமைப் பண்புகளே, ஆட்சி செலுத்துகின்றன. இரண்டு மனிதர்கள் பண்புடன், மாண்புடன் சேர்ந்து கூடி வாழ்வது என்பது இன்று சாத்தியமா என்ற அளவுக்கு, வக்கிரம் கொண்ட சமூக உணர்வோட்டங்கள் எங்கும் எதிலும் எதிரொலிக்கின்றன. அடிக்கடி ஏற்படும் எமது சொந்த அனுபவங்கள் ஒருபுறம் கோபத்தையும், மறுபுறம் இந்த சமூகம் இந்த நிலையை அடைநத்தையிட்டு எம்மீதே எமக்கே எரிச்சலையே உருவாக்கின்றது. பரிதாபகரமான ஒரு சமூகமாக, எமது சமூகம் மாறிவிட்டது. சொந்த சமூக ஆளுமைகளை எல்லாம் இழந்து, சிதைந்து செல்லுகின்றது. சொந்த பகுத்தறிவை இழப்பதால், வழிபாட்டுக்குரிய ஒன்றை தலைக்கு மேல் தூக்கிவைத்திருப்பது என்பது எமது சமூகத்துக்கு ஏற்பட்ட ஒரு இழிநிலைதான். நாங்கள் எங்கே எந்த சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். மிருகங்களின் நிலைக்கு எமது சொந்தப் பகுத்தறிவையே இழந்து, சுய உணர்வை இழந்து, மலடாகி புதியதொரு சமூகம் படைக்கும் சொந்தப் பிரமையில் வீறுநடை போடுகின்றோம். தனிப்பட்ட சொந்த பன்றித்தனத்தை சமூகத்தின் பன்றித்தனமாக மாற்றுகின்றோம். தனிப்பட்ட தலைமையின் வக்கிர குணங்களை சமூகத்தின் வக்கிரமாக மாற்றுவதில் வீறுநடை போடுகின்றோம்.

மறுபுறம் உலகெங்கும் வன்முறையையே பண்பாடாக கொண்ட இளையதலைமுறை உருவாகின்றது. எமது சமூகத்தில் இதற்கு இசைவாக தேசியம் என்ற பெயரில் சமூகத்தில் புரையோடிப்போகும் இழிந்த பண்பாட்டுக் கூறுகள், மிகவும் மூர்க்கமிக்கதாக மாறிவிட்டது. இழிவான சமூகக் கூறுகளை தேசியமாக்கி, அதுவே பாசிப் பண்பாடாக வெளிப்படுகின்றது. இந்த வகையில் இரண்டு பிரதானமான போக்கை ஒட்டியே, இக்கட்டுரை இச் சமூகத்தினை ஆராய முற்படுகின்றது.

1.பண்பற்ற புலித் தலைமைத்துவப் பண்பாடுகள்.
2.புலியை ஆதரிப்பவர்கள் உருவாக்கும் வக்கிரம் நிறைந்த பண்பாடுகள்.

இவற்றை நாம் இக்கட்டுரையில் ஆராயவுள்ளோம். நாம் எமது சமூகக் கூறுகளை இழந்து, ஒரு மனிதத்துவ சமூகப் பண்பாட்டுத் தளத்தை இழந்து, ஒரு இழிந்து போன மிகப் பின்தங்கிய ஒரு சமூகமாக மாறிக் கொண்டிருக்கின்றோம். இப்படி நான் கூறுவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டம் என்பதே, சாராம்சத்தில் தேசிய (மனிதப்) பண்பாட்டை வளர்த்திருக்க வேண்டியதே, அதன் உள்ளடக்கமாகும். தேசியம் என்பது மக்களிடையே ஜக்கியத்தையும், சொந்த சமூக முரண்பாடுகளைக் களைந்து சமூக உயிரியாக மனிதனை மனிதனாக மாற்றியிருக்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால் அவை எதிரிடையில் நிலவிய இணங்கமான தேசிய பண்பாட்டையே அழித்தொழித்து, அதனிடத்தில் காட்டுமிராண்டித்தனமான இணக்கமற்ற சமூக உறவை உருவாக்கியது. இணக்கமான முரண்பாடுகளை களைந்து அதனிடத்தில் ஒரு உயர்ந்த தேசிய பண்பாட்டுக்கு பதில், எமது தேசிய பண்பாடுகளை பாசிசமாக்கியுள்ளது. இது சமூகத்தின் உள்ளே முரண்பாடுகளை ஆழமாக்கி, சமூகத்தை பிளந்து சின்னாபின்னமாக்கி வருகின்றது.

வேதனையான பொதுஜன வாழ்வு சார்ந்த தேசிய பண்பாட்டு மொழிக்கு பதில், வாழ்வு சாராத வன்மம்மிக்க மொழிப்பண்பாடே உருவாகியுள்ளது. இது மனிதனை மிருக நிலைக்கும் கீழாகவே இழிவுபடுத்தி தாழ்த்திவிடுகின்றது. சமூகம் நடைப்பிணமாக, செம்மறி மந்தைகளாக, வேலியிடப்பட்ட சிந்தனைச் சிறைக் கூடங்களில் பண்பாட்டு சிதைவின் எல்லையில் உயிருடன் வாழ்கின்றனர்.

இங்கு சமூகத்தையும், சமூக முரண்பாடுகளையும் புரிந்து கொள்ளாத, வன்முறை மூலம் ஆதிக்கம் பெற்ற கருத்துத் தளம் பலம்பெற்றுள்ளது. இது சமூக கூறுகளால் தன்னை நிலை நிறுத்தவில்லை என்றது உண்மையாக இருந்த போதும், ஒரு சிறு கும்பல் முழு சமூகத்தையும் இதற்குள் புணர்ந்து போடுகின்றது.

மனிதர்களையும், அவர்களின் சிந்தனைகளையும், முரண்பாடுகளையும் கூட துரோகி, எட்டப்பன், கைக்கூலி, தேசவிரோதி என்று பலவிதமாக ஒற்றைப் பரிணாமத்தில் தமது சர்வாதிகார பாசிச போக்குக்கு ஏற்ப அடையாளப் படுத்துகின்றனர். புலிகள் பற்றிய ஒரு மனிதனின் நிலைப்பாட்டில் இருந்து, இதைக் கட்டமைக்கின்றனர். தமிழ் தேசியத்தை தமிழ் மக்கள் சார்ந்து உயர்த்துவதையே தேசிய குற்றமாக்கிவிடுகின்றனர். அது கட்டமைக்கும் பண்பாடு வன்மம் மிக்கது. உண்மையான தமிழ்தேசியம் புலிக்கு முரணாக உள்ள நிலையில், புலி இயக்கம் தான் தனக்கு ஏற்ப கட்டமைக்கும் பண்பாடு, தனது சொந்த சர்வாதிகார பாசிசத்தின் இருப்பையே அடிப்படையாக கொண்டதாகவுள்ளது.

இது மனிதனின் முரணை பகைமுரண்பாடாகவும், முரண்பாட்டின் பிரதிபலிக்கும் நபரை வெட்டிக் கொல்லப்பட வேண்டும் என்றவாறு எமது பண்பாடு வக்கிரமடைந்து கிடக்கின்றது. இதுவே அங்கீகாரம் பெற்ற பண்பாடாகவுள்ளது. சாதாரணமாக ஒருவிடையத்தின் மீதான முரண்பாட்டைக் கூட விவாதிக்க முடியாதவர்களாகவே, மனநிலை குறைந்த மனிதர்களையே தேசியம் உற்பத்தி செய்கின்றது. சமூக அறிவை இழந்துபோன, வன்முறையை மட்டும் நம்பி வாழும் ஒரு லும்பன் கும்பலாகவே சீரழிந்துள்ளது. புலித் தேசியத்தை மட்டும் ஆதரிக்கும் இந்த கும்பலின் அறிவுபூர்வமற்ற வன்முறையே, சமூக ஆதிக்கமாக இன்று காணப்படுகின்றது. இதனிடையே மக்களின் தேசியத்தை உயர்த்துபவர்களை, இந்தக் கும்பல் சமூகத்தின் எதிரியாக காட்டுவது இங்கு நிகழ்கின்றது. ஆக்கமும், ஆக்கத் திறனும் அற்ற தலைமைத்துவம் மலடாகி நிற்கின்ற போது, இதுவே சமூக ஆதிக்கம் பெறுகின்றது. சமூக ஆக்கத்திறனை இழந்து, தன்னைத்தான் தக்கவைக்க உற்பத்தி செய்யும் வழிபாட்டு கூறுகளே, இதன் முக்கியமான சிதைவுக்கான அடிப்படையான காரணமாகும். இப்படி அடக்குமுறையின் பின்னால் எழும் குரல்கள் பாசிசத்தின் கோமாளித்தனத்தையே எப்போது வெளிப்படுத்துகின்றது.

வன்மமும் மூர்க்கமும் நிறைந்த புலிப் (புலித் தேசிய) பண்பாடு

வன்மமும் மூர்க்கமும் நிறைந்த புலிப் (தேசிய) பண்பாடு என்று நான் கூறும் போது, அதை யாரும் இயல்பாக எதார்த்தம் சார்ந்து மறுக்கமுடியாது. அனைவருக்கும் நன்கு தெரிந்த, சொந்த அனுபவவாயிலாக புரிந்து கொண்ட இந்த விடையத்தை, வீம்புக்கு ஒரு சிலர் விவாதிக்க முற்படலாம். அன்றாடம் நடக்கும் கொலைகள், கொலையிலும் வெளிப்படும் வக்கிரம், சித்திரவதைகள், பணம் அறவிட கையாளும் வன்மமிக்க நடத்தைகள், தங்களை தக்கவைக்க சமூகத்தை அணுகிக் கொள்ளும் முறைமைகள் … என எங்கும் எதிலும் இந்த பண்பாட்டுக் கூறு ஆற்றும் வக்கிரம், நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். மனிதனும் மனிதமும் சந்திப்பது அச்சமும் பீதியும் கலந்த உளறல் தான். இந்த குரலே தேசியத்தின் இதைய வீணையாகின்றது.

நடத்தைகளும், அது உருவாக்கும் பண்பாடுகள் அந்த தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றது. புலிகளின் நடத்தை உருவாக்கும் பண்பாடுகள், தேசத்தின் எதிர்காலத்தை சூனியமாக்குகின்றது. மனிதத்துவமற்ற பண்பாடுகள் காட்டுமிராண்டிச் சமூகத்தையே உருவாக்கும். இதை நாம் எல்லா சமூகக் கூறுகளிலும் இன்று காணமுடியும். இதன் விளைவு என்ன. உணர்ச்சியற்ற தேசியத்தில் வரட்டுத்தனத்தை உணர்ச்சியாக்குவது நிகழ்கின்றது. கூலிக்கு மாரடிப்பதும், மாரடிக்க மறுப்பவர்களை வெட்டிக் கொல்வது நிகழ்கின்றது. இதைத் தான் தேசியம், தேசிய பண்பாடு என்கின்றனர்.

ஆனால் எதிர்மறையில் புலிகளின் இந்த நடத்தைகளையும், அதன் உள்ளடகத்தையும் இல்லையென்று மறுப்பதே, தமிழ் மக்கள் முன் தேசியமாக காட்டப்படுகின்றது. எல்லோரும் உணர்வுபூர்வமாக புலியின் நடத்தையை உணர்ந்து தெரிந்து கொள்ளக் கூடிய நடைமுறைக்கு மாறாக, அவர்களின் நியாயவாதங்கள் மாரடிக்கப்படுகின்றது. இதற்கு பேரினவாதத்தின் இனவொடுக்குமுறையை எடுத்துக் காட்டுவதன் மூலம், சொந்த நடத்தைகளை அதற்குள் மூடி போட்டு மூடிவிட முனைகின்றனர். முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மூடிய முனைவது போல், இதையே மீண்டும் மீண்டும் செய்ய முனைகின்றனர். இதுவே புலித் தேசியத்தின் உயாந்தபட்ச அறிவியலாகும். இதுவே இன்றைய புலித் தேசிய பண்பாடு. இந்தப் பண்பாடு, விவாத முறைமையை மறுக்கின்றது. சமூக முரணை பார்ப்பதை, சிந்திப்பதை, அதைக் காண்பதை எல்லாம் மறுக்கின்றது. உலகை ஒற்றைப்பரிணாமத்தில், அதுவும் தவறாக சித்தரித்து, அதையே உலகமே நம்பக் கோருகின்றது. இப்படி நம்ப மறுப்பதையே, புலித்தேசிய குற்றமாக கருதுகின்றது. இதுவே இன்று ஆதிக்கம் பெற்ற, அதிகாரம் கொண்ட, வன்முறை கொண்ட பண்பாடாக எம் முன் எதார்த்ததில் உள்ளது.

இதை எப்படி உருவாக்குகின்றனர். பாசிசத்தின் சமூகக் கூறை அடிப்படையாக கொண்டு இது கட்டமைக்கப்படுகின்றது. மரண தண்டனையையும் சித்திரவதையையும் அன்றாட நிகழ்சி நிரலில் நடைமுறைப்படுத்தி, சமூகத்தின் சுயமான இயங்கியல் சமூகக்கூறை ஒழித்துக் கட்டுகின்றனர். சமூக அறிவற்ற ஒரு வழிபாட்டு சமூகத்தை வலிந்து திணிக்கின்றனர். சமூக கல்வியை பெறும் அனைத்து சமூக வழியையும் அடைத்து, கற்றுக் கொள்ளும் சூழலையும் கூட சிதைக்கின்றனர். பொதுமக்களிடம் கருத்தற்ற ஒரு நிலையை உருவாக்குகின்றனர். இதையே எமது சமூகத்தில் நீங்கள் தெளிவாக எங்கும் எதிலும் காணமுடியும்.

அங்கீகரிக்கப்பட்டவற்றை தலைகுனிந்து வணக்கம் செலுத்துவதுடன், சமூக இருத்தல் எல்லைப்படுத்தப்படுகின்றது. கிளிப்பிள்ளை போல் அடுத்தவனின் கருத்தை திருப்பிக் கூறுகின்ற மலட்டுத்தனமே, உயர்ந்தபட்ச பரிமாறிக் கொள்ளும் மொழியாகுகின்றது. மொழியின் பயன்பாடு என்பது சிலவற்றை நியாயப்படுத்தும் எல்லைக்குள் சுருங்கிப் போகின்றது. போலியான பளபளப்பான கவர்ச்சியான தனிமனித வாயப்பாடுகளே சமூகத்தின் ஆன்மீக உணர்வாகின்றது. சுய ஏமாற்றுதலில் தொடங்கி சமூகத்தை ஏமாற்றி மோசடி செய்வது வரை இயல்பான ஒன்றாக கட்டமைக்கப்படுகின்றது.

வளர்ப்பு மந்தைக்குரிய ஒரு செம்மறித்தனத்தில் சமூகத்தை இட்டுச் செல்லுகின்றனர். மேய்வதற்கு செம்மறிகளுக்கு ஒரு புல்வெளி எப்படி உண்டோ, அதே மாதிரி ஊடகத்துறையை தமது தேவைக்கு ஏற்ப வளைத்து அதையே மேயவிடுகின்றனர். அற்பத்தனத்தின் இழிநிலையில் சொந்த வாழ்வை பேணும் இழிந்த கும்பல் ஒன்று, இங்கு ஆதிக்கம் பெறுகின்றது. இதுவே சமூக ஆதிக்கம் பெற்ற ஒன்றாக மாறுகின்றது. இங்கு முட்டாள் தனத்தின் மேதைகள், தமது போக்கிரித்தனத்தை சமூகத்தின் மேல் புணருகின்றனர். அறநெறி அற்ற பாசிச வக்கிரங்களையே சமூகத்தின் மீது பீச்சி விடுகின்றனர். மனித உறவுகளின் கொடுமைகளை பார்க்கவிடாது சமூகத்தையே தடுக்கின்ற இச்சக்திகள், அடிப்படையில் நேர்மை எதுவுமற்றவர்கள். இவர்கள் யார்? இவர்களின் பண்பு என்ன?

கூலிக்கு மாரடிக்கும் எழுத்தாளர்கள், புகழுக்கு மாரடிக்கும் எழுத்தாளர்கள், அரசியல் சதிகாரர்கள், திறமையற்ற வாய்வீச்சாளர்கள், சமூகத்தில் தமக்கென இடம் கிடைக்காது அலைந்தவர்கள், பச்சோந்திகள் என்ற பலவகையான போக்கிடமற்றவர்கள் தான் இவர்கள். தமது ஆதிக்கத்தை புலியின் வன்முறை ஊடாக ஊடகத்துறையில் உருவாக்கி, அதில் தமது சொந்த பாசிசத்தை நியாயப்படுத்தும் எழுத்துக்களால் நிரப்புகின்றனர். இங்கு அறிவால் அல்ல, துப்பாக்கியால் அதாவது வன்முறையால் இது சாதிக்கப்படுகின்றது. உண்மையைப் பொய்யாக்கவும், நிகழ்சிகளை வளைக்கவும், அதைத் திரிக்கவும், நிகழ்ச்சிகளை மறைக்கவும் தெரிந்த, படுமோசமான கயவாளிக் கூட்டத்தின் கருத்தே, இன்று சமூக ஆதிக்கம் பெற்ற ஒன்றாக அரங்கில் உள்ளது. அறிவிலித்தனம், போலித்தனம், முட்டாள்தனம், போக்கிரித்தனம், எதேச்சதிகாரம், பணிவது, மழுப்புவது, ஏமாற்றுவது, வார்த்தைஐhலம், ரவுடித்தனம், கைக்கூலித்தனம், காட்டிக்கொடுத்தல் போன்ற இழிந்துபோன சமூகவிரோத நடத்தைகளைக் கொண்டு, ஊடகத்துறையில் இடம் பிடித்தவர்கள் தமது பினாமிக் கருத்துகளையே சமூகத்தில் மேல் திணித்து விடுகின்றனர். தமது தனிப்பட்ட பன்றித் தனத்தனத்தையே சமூகத்தின் பன்றித்தனமாக்கின்றனர்.

சமகாலத்திய சமூக உறவுகளின் அனைத்து கொடுமைகளினதும் காவலராக உள்ளனர். மனிதம், மனிதத்துவம் என்பது இவர்களின் அறிவுத்தளத்தில் அhத்தமற்ற ஒன்றாக சித்தரிப்பதே, இவர்களின் அரசியல் ஒழுக்கமாகின்றது. உண்மையில் அறியாமை யாருக்கு உதவுவதில்லை என்பதை அடிப்படையாக கொண்டு, கற்பிழந்த சமூகத்தையே மீண்டும் மீண்டும் தமது சொந்த பலத்காரத்தால் புணருகின்றனர். தமிழ், தமிழ் தேசியம் எல்லாம் இவர்களைப் பொறுத்த வரையில், இழிந்து போன தமது அற்பத்தனத்தை நியாயப்படுத்தும் ஒரு கருவியாகிவிட்டது. எந்தவிதமான தர்க்க நியாயமுமற்ற கருத்துகளை, துப்பாக்கிகள் இன்றி சமூகத்தின் மேல் நியாயப்படுத்த முடியாத அறிவிலிகளாக முட்டாள்களாக இவர்கள் உள்ளனர். பாசிச அதிகாரத்தில் நம்பிக்கை, குருட்டுத்தனமாக கீழ்படிதல், முன்னரே தயாரிக்கப்பட்ட அனுமானங்கள் கருத்துகள் தீர்மானங்கள் என எங்கும் எதிலும் சுயாதீனமற்ற அடிமைகளாக மாறி, சமூகத்தை தீhமானகரமான அழிவுக்கு இவர்கள் இட்டுச்செல்லுகின்றனர்.

ஒன்றைப் பற்றி தீர்ப்பு அளிக்கும் எந்த சமூகத் தகுதியும் இவர்களிடம் கிடையாது. ஆனால் இவர்கள் தான் தீர்ப்பளிக்கின்றனர். அன்றாடம் ஆயிரம் ஆயிரம் விடையங்கள் மீதான இவர்களின் சொந்தத் தீர்ப்புகள், சமூகத்தின் அவலத்தையே சமூக மயமாக்குகின்றது. சமூக பெருமூச்சுகளின் ஈனமான குரல், இதயமற்ற புலித் தேசியத்தில் மரணதண்டனைக்கு உள்ளாகுகின்றது. குருட்டுத்தனம், முட்டாள்தனம், போக்கிரித்தனம் சமூகத்தின் இதயமாக, ஒழுக்கக்குறைவும், அடிமைத்தனமும், கீழ்மையான ஒழுக்கமுமே பண்பாகிவிடுகின்றது. யாரும் எதையும் எதிர்த்து கேள்வி கேட்டுவிட முடியாது.

எங்கும் எதிலும் உருத்திராட்சைக் கொட்டைகளை உருட்டியபடி உருப்போடும் ஒரு வக்கிரம் பிடித்த கும்பல் தான், புலித் தேசியத்தின் முன்னணிப் பிரிவாகும். இதுவே தமிழ் சமூகத்தை வழி நடத்துகின்றது. இதனிடம் சமூக நடத்தையையிட்டு, எந்த நன்நடத்தையும் நன்நெறியும் கிடையாது. சமூக அடிமைத்தனத்தின் மீது, சிம்மாசனத்தை நிறுவும் நன்நெறியற்ற வக்கிரத்தில் காலம் தள்ளுபவர்கள். இதற்காக எந்த நன்நடத்தையையும் துரோகமாக தூற்றி புணரத் தயாரானவர்கள் தான் இவர்கள். சமூகத்தில் இவர்களின் பாத்திரம் என்ன?

இதன் பெரும் பகுதி தாங்கள் ஆதரிக்கும் இயக்கத்துக்கு தமது உழைப்பில் இருந்து பணம் கொடுக்காதவர்கள். மற்றவனை ஏமாற்றி பணம் வசூலிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். இவர்களின் பெரும்பான்மையானோர், வட்டிக்கு பணம் கொடுத்து சமூகத்தையே ஈவிரக்கமின்றி ஒட்ட உறுஞ்சுபவர்கள். தமது வட்டித் தொழிலுடன் இதை இணைத்து, இயக்கத்துக்கு பணம் திரட்ட அலைபவர்கள். இதில் பெரும்பான்மையானோர் தனது சொந்தக் குடும்பத்தையே முழுமையாக நாட்டைவிட்டு நாடு கடத்துபவர்கள். புலிகளின் பகுதியிலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற சதா துடிப்பவர்கள். தமது சொந்த குழந்தை போராட்டத்துக்கு செல்வதை அனுமதிக்காதவர்கள். இதைப் பயன்படுத்தி வர்த்தகத்தை விருத்தி செய்பவர்கள். சமூகத்தில் இடம் கிடைக்காது அலைந்தவர்கள். இயக்கத்தைப் பயன்படுத்தி பிழைக்க வழிதெரிந்தவர்கள். சினிமா கதாநாயகர்களுக்கு இரசிகர் மன்றம் அமைக்கும் பாணியிலான இரசிகப் பெருமக்கள். சண்டைக்காட்சியை இரசிப்பவர்கள். உழைப்பில் ஈடுபடாத லும்பன்கள். மந்த புத்தி கொண்டவர்கள். வாழ்வில் ஒழுக்கமற்றவர்கள். வன்னியில் தமது சொத்துகளை முதலிட மறுபவர்கள். கொழும்பில் வீடு வாங்குபவர்கள். தமது சொந்தப் பாதுகாப்புக்கு எதிரியின் பிரதேசத்தில் இடம் தேடுபவர்கள். முன்பு தமது குடும்பத்தில் ஒரு உறுப்பினரையாவது பலிகொடுத்தவர்கள். அதன் பெயரால் தம்மையும் தமது வாழ்வையும் தக்கவைப்பவர்கள். இயக்கத்தில் முக்கிய உறுப்பினர்களின் உறவினர்கள். இப்படி பலவிதமானவர்கள் தான் இயக்கத்தின் செயற்பாட்டாளராக உள்ளனர். இவர்கள் தான் இயக்கத்தின் ஆன்மாவாக உள்ளனர். இதை நீங்கள் தனித்தனியாகவே எங்கும் எதிலும் இனம் காணமுடியும்.

இவர்களின் பலம் எப்படி உருவாகுகின்றது. அதிகாரத்தினால் அல்லது நம்பிக்கையினால் அல்லது பாரம்பரியத்தினால் ஏற்றுக் கொண்ட தமது சொந்த அற்பத்தனத்தைக் கொண்டு, சமூகத்தை இழிவாடி அதில் தான் இவர்கள் மிதப்பாகின்றனர். தேசத்தையும், மக்களையும், தேசியத்தையும் அறிவு பூர்வமாக உணர்ந்து, உணர்வு பூர்வமாக விளக்க முடியாதவர்கள் தான் இவர்கள். தாங்கள் என்ன செய்கின்றோம் என்று எதையும் சொல்ல தெரியாதவர்கள் இவர்கள். சினிமா இரசிகர் மன்றத்தின் வழியில், தேசத்தையும் தேசியத்தையும் புரிந்து கொண்டவர்கள் இவர்கள். முட்டாள்தனமாக விதண்டாவாதமாக வக்கரிக்கத் தெரிந்தவர்கள் இவர்கள். அதை சமூக விரோத வன்முறை ஊடாக சாதிக்கத் தெரிந்த, நியாயப்படுத்த தெரிந்த ஒழுக்கம் கெட்டவர்கள் தான் இவர்கள். எதையும் உருபோடுவதை தவிர, வேறு ஏதும் சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் இவர்கள். சமூகத்தின் முரண்பட்ட கருத்தை காண்பது, கேட்பது, வாசிப்பதைக் கூட சகிக்க முடியாத முட்டாள்கள் இவர்கள். முரண்பட்ட செயல்பாட்டை வன்முறை மூலம் ஒடுக்குவதை கண்ணை மூடி ஆதரிக்கும் அடியாட் கும்பல் தான் இவர்கள். சமூக விடையங்களை விவாதிக்க, பதிலளிக்க தெரியாதவர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்கள் தான், புலியின் முன்னணியாளர்கள். அதாவது புலிப் பினாமிகள். ஆனாலும் புலிகளாக இருக்க முடியாதவர்கள். புலிகளின் அடிமட்டத்தில் உள்ளவர்களின் தியாக மனப்பான்மை எதுவுமற்றவர்கள். தியாகத்தையே புரிந்து கொள்ளமுடியாத சமூகத்தில் இழிந்து போன சுயநல விரும்பிகள் இவர்கள். தெரு நாய்களைப் போல் ஊளையிட்டு, கூச்சல் போடத் தெரிந்தவர்கள் இவர்கள்.

உளவு சொல்லவும், படுகொலையை ஆதரிக்கவும், மனிதத்துவத்தை ஏறி மிதிக்கவும் தெரிந்த இவர்களுக்கு, கருத்துக்கு பதில் முத்திரை குத்தி விடையத்தை முடித்துவிடவே விரும்புகின்றவர்கள் இவர்கள். படுகொலைகளை நியாயப்படுத்தி ஆதரிப்பது முதல் தேசியத்தின் பெயரில் தூசணத்தால் தாராளமாக புணரத் தெரிந்தவர்கள் இவர்கள். இவர்கள் தான் புலித் தேசியத்தின் முன்னணிப் பினாமிகள். மற்றவனின் பின்னால் நின்று கொக்கரிப்பதே இவர்களின் பலமாக உள்ளது. இதுவே இவர்களின் அரசியலாகும். தனக்கென கருத்தற்ற இவர்கள் தமக்கென ஒரு தோலைப் போர்த்திக் கொண்டு, விண்ணாதிவிண்ணராக புலம்புவது நிகழ்கின்றது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு பணிந்து சிரம் தாழ்த்தி இழிந்து போன நிலையில் சமூகத்தை புணர்ந்தே இவர்கள் வாழ்கின்றனர்.

அதிகமான தனிமனித நம்பிக்கை கொண்ட போக்கிரிகளாக சமூகத்தை தனிமனிதனுக்கு நிகராக நிறுத்துகின்றனர். இதில் அனுபவமுள்ள பகட்டாளர்களாக மாறி, மக்களை விலங்குகளின் நிலைக்கு இழிவு படுத்துகின்றனர். பணத்துக்காக விபச்சாரம் செய்யும் விபச்சாரியாக, தமிழ் தேசியத்தையே புலித் தேசியமாக கொண்டுவந்து நிறுத்துகின்றவர்கள் இவர்கள் தான். பணம் கண்ணுக்கு தெரியும் கடவுளாக எப்படி இருக்கின்றதோ, அது போல் தான் இரத்த வெறிபிடித்த மக்கள் விரோத நடத்தைகளையே தமிழ்தேசியம் என்று புணர்ந்து காட்டுகின்றவர்களும் இவர்கள் தான்.

மதத்தில் கடவுளின் சர்வவல்லமை எப்படி மனிதனை அடிமையாக்குகின்றதோ, அப்படி தேசியத்தில் புலிப்பாசிட்டுகளை கடவுளின் நிலைக்கு உயர்த்துகின்றனர். தனிநபரை ஆதரிப்பதன் மூலம், மேல் மட்டத்திடம் கீழ்மட்டம் அளவுக்கு அதிகமான நம்பிக்கை உருவாக்குகின்றனர். கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~.. உச்சியில் இருப்பவர்கள் விவரங்களைப் புரிந்து கொள்வதைக் கீழ்நிலையில் இருப்பவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். பொதுவானவற்றை உச்சியிலிருப்பவர்கள் புரிந்தது கொண்டிருப்பதாகக் கீழ்நிலையில் இருப்பவர்கள் கருதுகின்றார்கள். ஆகவே எல்லோரும் பரஸ்பரம் ஏமாற்றப்படுகின்றனர். என்றார். இதுதான் இங்கும் நிகழ்கின்றது. உண்மையில் அறிவற்ற தலைமையின் முட்டாள்தனம், சமூக முட்டாள் தனத்தை விதைகின்றது.

இதுவே இயல்பில் தனிமனிதனை போற்றி வழிபடும் அரசியலாகி, தனிமனிதனுக்கு எதிராக எல்லாவிதமான குற்றத்தையும் நியாயப்படுத்துகின்றது. சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனையும் குற்றவாளியாக காணத் துடிக்கின்றது. அதேநேரம் தன்னைத்தான் தூய்மையானதாக பிரகடனம் செய்கின்றது. உண்மையில் இது எதிர்மறையில் செயற்படுகின்றது. தனிநபரை ஆதரிப்பதன் மூலம் தனிநபரை கீழ் இறக்குகின்றது. தனிமனிதன் பற்றிய பிரமை இயல்பில் மற்றைய தனிமனிதனை கீழ்மைப்படுத்துகின்றது. தனிநபர் சொந்தக் கருத்தை வைத்திருக்கும் உரிமையையே மறுக்கின்றது. இதன் மூலம் தேசிய உணர்ச்சியை அதிகரிக்கும் போது, தேசியத்தை இழிவுபடுத்துவது நிகழ்கின்றது. காhல் மார்க்ஸ் கூறியது போல் ~~தேசிய இனத்தை அவமதிக்கின்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது என்பது, எமது புலித் தேசியத்தில் எதார்த்தமாகவே உள்ளது.

கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~ஒரு தந்திரமுள்ள அரசியல் கோஷ்டியின் தீங்கான மனம் மட்டுமே ~~பழிவாங்கும் சட்டங்களை, கருத்துகளுக்கு எதிரான சட்டங்களை கண்டுபிடிக்கின்றது என்ற அரசியல் எதார்த்தம், புலித் தேசியத்தில் படுகொலைகளாக சித்திரவதைகளாக மாறுகின்றது. துரோகி, எட்டப்பன், கைக்கூலி... போன்ற அர்த்தமிழந்து செல்லும் புலி அடைமொழிகள், வசைபாடலாகி சம்பந்தப்பட்ட தனிமனிதனை வெட்டிப்போடும் புலித் தேசிய பண்பாடாக தேசியம் புணரப்படுகின்றது.

இதை காவிச் செல்பவர்கள் வெகுளித்தனமான அறிவு மந்தத்தில், முரட்டுத்தனமான வன்முறையை உருப்போட்டு வழிபடுபவர்கள் இவர்கள். தமது சொந்த வயிற்றுக்காக எதையும் செய்ய தயாரான இவர்கள், சமூகத்தின் வாழ்வை புரிந்து கொள்வது கிடையாது. சமூகத்தின் வாழ்வுக்கு எதிராக நஞ்சிடுபவராக உள்ளனர். சுய கற்பனை, சுய பிரமைகள், சுய திருப்தியில் மனித குலத்தையே ஏளனமாகவே எள்ளி நகையாடுகின்றனர். சுதந்திரம் வேண்டுமென்ற இவர்கள், தாம் சுதந்திரமாக இருப்பதாக கற்பனை செய்கின்றனர். ஆனால் மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் என்பதெல்லாம் எதிரியின் சதி என்று முத்திரை குத்தி அதை மக்களுக்கு மறுக்கின்றனர். தமிழ் மக்களின் தேசியம் என்று பீற்றும் இவர்கள், மக்கள் பற்றி மூக்கால் சிந்தும் இவர்கள், தேசியத்தில் மக்களின் உரிமையை மறுக்கின்றனர். தமக்குள்ள உரிமை மற்றவனுக்கு கிடையாது என்கின்றனர். மனித குலத்தின் ஒரு மனிதனுக்கு எவையெல்லாம் பெற உரிமை உண்டோ, அதை மற்றவனுக்கு இல்லை என்று மறுப்பதே இவர்களின் பாசிச தேசியமாகும். மனிதனுக்குரிய அனைத்தும் அனைவருக்குரியது என்பதை இவர்கள் மறுக்கின்றனர். பிரபாகரனுக்குரிய உரிமை, தமிழ் மக்களின் ஒவ்வொருவருக்கும் கிடையாது என்பதே, இவர்கள் துப்பாக்கி முனையில் சொல்லும் அன்றாட செய்தியாக உள்ளது. இதைத் தான் தமிழீழத் தாகம் என்கின்றனர்.

தலைமைத்துவப் பண்பாடு

~~மனிதகுல முன்னேற்றத்துக்குப் பாடுபடு என்று மாhக்ஸ் கூறியது போல், ஒரு தலைமையும் அதன் பண்பாடும் இதை நடைமுறையில் கொண்டிருக்காத எவையும், மக்களுக்கான தலைமைப் பண்பாட்டைக் கொண்டிருப்பதில்லை. மக்களை நேசிப்பவர்கள், நேசிக்கும் மக்கள் தொடர்புடைய பிரகடனங்கள் முதல் அனைத்தையும் சந்தேகிக்க வேண்டியவராகவே உள்ளனர். ஒவ்வொன்றையும், ஒவ்வொரு துளியையும் மனிதகுல முனனேற்றத்துடன் இணைத்து பார்க்க வேண்டியவராக நாம் உள்ளோம். இங்கு இதில் இருந்து தான் தலைமைத்துவப் பண்பாட்டை விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. ஒரு தலைமை என்பது தனது சொந்த வாழ்வு சார்ந்த நலன்கள மற்றும் சுயநலங்களுக்காக தலைமையைத் தக்கவைக்காது, மனித நலன்களை முதன்மைப் பண்பாக முன்னிறுத்தி போராடவேண்டும். மனிதனின் துன்ப துயரங்களை நீக்கும் அக்கறையுடன் போராட வேண்டும். இதன் மூலம் மக்கள் தாங்களாகவே நேசிக்கும் ஒரு தலைமையை, தலைமைப் பண்பைப் பெறவேண்டும்.

தலைமைத்துவம் என்பது ரவுடித்தனத்தால் வன்முறையால் பெறமுடியாது. சமூக விரோத ரவுடியும் கூட, ஒரு சமூகக் கூறில் தனது ரவுடித்தனத்தால் பலாத்காரத்தால் அச்சத்தை உருவாக்கி தலைமைத்துவத்தை எதிர்மறையில் பெறத்தான் செய்கின்றான். இது அந்த மக்களால் வெறுக்கப்படுகின்ற, உள்ளடகத்தில் எப்போதும் எதிர்நிலையில் பணியாற்றுகின்றது. இதேபோன்று அச்சம், பீதி, ஈவிரக்கமற்ற அரக்கத்தனத்தை சமூகத்தில் விதைத்து, பின் தலைமையை தக்கவைப்பது தான் தேசிய தலைமையா?

வளமுள்ளதும் மனித ஜீவனுள்ளதுமான வாழ்வை மக்களுக்கு வழங்கமறுத்து, அதை சிலர் மட்டும் அனுபவிப்பது தான் தலைமையா? அதுதான் தேசியமா? சமூக அவநம்பிக்கையை உருவாக்கி, கோழைத்தனத்தை உற்பத்தி செய்து அதில் குளிர்காய்ந்தபடி தலைமையை தக்கவைப்பதா தேசியம்! அறிவு நாணயத்துடன் சமூகத்தின் உணர்வுடன் ஒன்று கலந்து, மனித விடுதலைக்கு போராடி ஒரு தலைமையை பெற மறுப்பது ஏன்? எமது சமூகத்தின் தலைவிதி இப்படி மூளை கெட்டு முட்டாள் தனத்தில் மண்டிக் கிடப்பது ஏன்? இந்தக் கேள்வியை கேட்பதன் மூலம் தான், மக்களின் தலைமையை நேர்மையாக இனம் காணமுடியும்.

புலித்தேசியமும், புலித்தலைமையும் உருவான நாள் முதல் இன்று அதை கட்டிப் பாதுகாக்கும் வடிவம் வரை காணப்படுவது என்ன? மக்களின் தலைமைக்குரிய எந்த சமூகப் பண்பாடும் அதனிடம் கிடையாது. மாறாக அவர்கள் தாங்களாகவே, தம்மை சிருஷ்டித்துக் கொண்ட ஒன்றே அது. ஆரம்பத்தில் பத்து பேர் அந்த இயக்கத்தில் இருந்த போதே, தலைவர் பிரபாகரன் என்ற பெயர் போட்டு ஆரம்பித்த இயக்கத்தின் தலைமை, எப்படி எங்கு எப்போது எதனால் தமிழ் மக்களின் தலைமையானது? மக்கள் நலன் என்று எதைத்தான் நடைமுறைப்படுத்தினர்.

துப்பாக்கி முனையில் மனித பிணங்களின் மேலாக, இராணுவ வீரசாகசங்கள் மூலம் தமது தலைமையை தக்கவைக்கின்றனர். இந்த தக்கவைப்பு கடந்த காலத்தில் தலைவர் என்று போட்ட அதே வழியில், தமக்குத் தாமே பட்டங்கள் சூடிக் கொண்டும், அடைமொழியில் மகுடங்களையே சூட்டிக் கொண்டு புகழுக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு பவனி வருகின்றனர். தமிழ்மக்கள் அனுபவிக்கவே முடியாத விசேடமான எதிர்மறையான வாழ்வை அனுபவிக்கின்றனர். அதைத் தமிழ்மக்களின் வாழ்வில் இருந்து அபகரித்துக் கொள்கின்றனர். இதைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் உரிமையை மறுப்பதே, புலித் (தமிழ்) தேசியமாகிவிட்டது. இதைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் கோருவது கூட தேசிய குற்றமாகிவிட்டது.

இப்படி உருவான எமது தலைமை எப்போதும் மக்களுடன் நெருங்கிப் பழகியதே கிடையாது. இயக்கம் ஆரம்பித்தது முதலாக, பிழைப்புக்காகவே மக்களை ஏமாற்றி அரசியல் செய்த கூட்டணி யாரை எல்லாம் எதிரி, துரோகி என்று முத்திரை குத்தியதோ, அவர்களை தேடிச் சுட்டதே இயக்கத்தின் ஆரம்ப கால அரசியல் வரலாறாகும். தமிழர் கூட்டணிக்கு ஒரு கூலிக் கும்பலாகவும் பினாமியாகயும் வளர்ச்சியுற்றவர்கள், எப்போதும் மக்களுடன் நெருங்கி பழகாது ஒளித்துக் கொண்டவர்கள் தான் இவர்கள். மக்களுடன் நெருங்கி தமது நோக்கம் கொள்கையை முன்வைத்தவர்கள் அல்ல இவர்கள். அவர்கள் வெளியில் வருவதே, யாரையாவது சுடுவதற்கு அல்லது கொள்ளை அடிப்பதற்கு என்ற நிலையிலேயே, இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகள் அமைந்திருந்தன. இப்படி படுகொலை அரசியலில் தொடங்கிய இயக்கங்கள், தலைமைகள் மனித உழைப்பில் இருந்து முற்றாக அன்னியமாகினர். மற்றவன் உழைப்பிலும், கொள்ளை அடிப்பதிலும் தங்கியிருக்கும் லும்பன் நிலைமை உருவானது. ஒரு லும்பன் தனமான வாழ்வியலை அரவணைத்துக் கொண்டு, பதுங்கிக் கிடக்கும் ஒரு நிலைக்குச் சென்றனர். இந்த லும்பன்களுக்கு இடையில் அதிகாரப் போட்டிகள், தலைமைப் போட்டிகள் அடிக்கடி உருவானது. இப்படியான ஒரு சூழலில் தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று வலிந்து போடப்பட்டது. எந்த நிலையிலும் மக்களின் தலைமையாக உருவாவதற்கான சூழலை, அவர்கள் நெருங்கிக் கூடப் பார்க்கவில்லை. எந்த மக்களைப்பற்றி பேசி போராடுகின்றனரோ, அந்த மக்களின் வாழ்வியலுடன் சம்பந்தப்படாத ஒரு தலைமையை நிறுவினர். தாங்கள் சுதந்திரமுள்ளவராக, எதையும் எப்படியும் கூறத் தகுதியுள்ளவராக, எதையும் எப்படியும் செய்யும் தகுதி உடையவராக தம்மைத் தாம் மாற்றிக் கொண்ட இவர்கள், அதை அந்த மக்களுக்கு மறுப்பதே கடந்தகால படுகொலைக்கான சமூக அடிப்படையாகும். மக்கள் இதற்கு வெளியில் வாழ்வுக்கான சொந்தப் போராட்டத்தை இவர்களுக்கு வெளியில் நடத்திக் கொண்டிருந்தனர். மக்கள் தமது வாழ்வுக்கான போராட்டத்தில் கிடைப்பதில் ஒரு பகுதியை, இவர்களுக்கு இலவசமாக கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

மக்களின் சொந்த அபிப்பிராயங்கள் துப்பாக்கி முனையில் அடக்கப்பட்டன. தமிழ் மக்களின் தலைமையாக தம்மைத் தாம் வலுக்கட்டாயமாக மக்கள் மேல் திணித்துக் கொண்டனர். துப்பாக்கி முனையில் இதைச் செய்தவர்கள், மக்களின் உழைப்பை கட்டாயமாக அறவிடும் ஒரு நிலைமையை உருவாக்கி கொண்டனர். தமிழ் தேசியம் என்று தொடங்கிய காலத்தில் மக்கள் யாரையும் கண்டு அஞ்சியது கிடையாது. யாருக்கும் பணம் கொடுத்ததும் கிடையாது. ஆனால் இன்று தமிழ் தலைமைகளை கண்டு அஞ்சவும், பணம் கொடுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இன்று போராட்டத்தில் உள்ள பகுதி உழைப்பில் ஈடுபடாதது மட்டுமின்றி, மனித உழைப்பையே அறியாதது. மக்களின் உழைப்பை பறித்தெடுத்து, அதைக் கொண்டு லும்பன்தனமான வாழ்வை வாழ்கின்றனர். இதற்குள்ளும் ஒரு பகுதி அதிதமான சொகுசுடன் கூடிய வாழ்க்கையை வாழ்கின்றனர். மக்களிடமிருந்து அறவிடும் பணம் (செல்வம்) அதிகரிக்கும் போது மக்கள் மேலான அடக்குமுறை அதிகரிக்கின்றது. அதேநேரம் சொகுசுடன் கூடியதும், மக்கள் அனுபவிக்க முடியாத வாழ்வின் வக்கிரமும் அந்த அடிமை மக்களின் முதுகின் மேல் அரங்கேறுகின்றது.

மக்களின் நிலை என்ன? அவர்களின் சொந்த உணர்வுகள் தேசியத்தின் பெயரில் அல்ல. பங்களிப்பு சுயத்தில் அல்ல. மாறாக பயத்தில் அடங்கி போன நிலையில், நிசப்தத்தில் அனைத்தும் அவர்கள் பெயரால் நிகழ்த்தப்படுகின்றது. தலைமைத்துவத்தின் சமூக இருத்தல் இப்படித்தான் கட்டமைக்கப்படுகின்றது. கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~அதிகார வர்க்கத்தின் பொது உணர்ச்சி இரகசியம் மர்மம் என்பதற்கு ஏற்ப, புலிகள் ஒரு விடுதலை இயக்கமாக அல்ல மக்களை அடக்கியொடுக்கும் அதிகார வர்க்க கும்பலாக உள்ளது. இரகசியம், மர்மம் வாழ்வின் அனைத்தையும் ஈவிரக்கமின்றி நாசமாக்குகின்றது. நாம் வலிந்து உருவாக்கிய தமிழீழத்தில் ஒரு மனிதன் ஏன் எதற்காக வீதிகளில் கழுத்தை வெட்டி போடுகின்றனர் என்பது கூட மர்மான இரகசியமான விடையமாகிவிட்டது. எந்த நீதிக்கும் சட்டத்துக்கும் வெளியில் இயங்கும் வதைமுகாங்கள் இயங்குவதையும், அங்கும் உயிருள்ள மனிதர்கள் கொல்லப்படுவதைக் கூட தமிழீழச் சட்டமே கேள்வி கேட்கமுடியாது. இதுவே நீதி பற்றி, தலைமையின் தலைமைத்துவ ஒழுக்கப் பண்பாடாகும்.

தலைமையும் அதைச் சுற்றியுள்ள கும்பலின் வாழ்வின் மீதும் யாரும் எதுவும் கேட்கவும் முடியாது, விமர்சிக்கவும் முடியாது. காhல் மாhக்ஸ் கூறியது போல் ~~ஆகவே அதிகாரம் அதன் அறிவின் அடிப்படை, அதிகாரத்தைக் கடவுளாக உயர்த்துவது அதன் பற்றுறுதி இந்த ஒழுங்கில் அனைத்தும் கட்டமைக்கப்படுகின்றது. அறிவு என்பது அதிகாரத்தை தக்கவைக்கும் எல்லைக்குள் கூனிக்குறுகி ஐhலம் போடத் தொடங்குகின்றது. அதை முன்னிறுத்தி வழிபடுவது தேசியமாகிவிடுகின்றது. சொந்த அதிகாரம், புகழ் இதுவே அனைத்தினதும் தாரகமந்திரமாகிவிடுகின்றது. இதுவே கடவுளின் பூசைக்குரிய மந்திரமுமாகிவிடுகின்றது. இலட்சியங்கள் என்று கூறியவை சிதைந்து புதிய வகையில் தனிமனித நலன்களுக்குள் வக்கிரமடைகின்றன.

இந்த நிலையில் புலிகளை தமது சமூக பொருளாதார விடிவிற்கான தலைவர்களாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டார்களாவெனின், ஒரு நாளும் இல்லை. தமது சொந்தச் சமூக பொருளாதார வாழ்வுக்கு தடையாகவே புலிகளைக் எப்போதும் காண்கின்றனர். மனிதனின் ஒவ்வொரு உழைப்பிலும் இருந்து தமது வாழ்வை புலிகள் உறுஞ்சிக் கொழுப்பதைக் காண்கின்றனர். அதைக் கொண்டு தன்னை அடக்குவதையும், ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த அனுபவத்தில் புரிந்து கொள்கின்றான். மக்கள் தமது சொந்த வாழ்வுடன், புலிகள் இணங்கி நிற்பதாக, காண்பதேயில்லை. தமது சொந்த வாழ்வுக்கு ஆதாரமாக, புலிகள் இருப்பதாக மக்கள் கருதுவது கிடையாது. தமது சொந்த வாழ்வை புலிகள் ஆழமாக சிதைக்கும் போக்கைக் கண்டு, வாய் திறக்க முடியாத நிலையில் மக்கள் மனதால் குமுறுகின்றனர். இதயமற்ற இந்த தேசியத்தில், தமது சொந்த இதயத்தில் அனைத்தையும் பூட்டிவைத்து மக்கள் புலம்புகின்றனர்.

போலித்தனமும் உளுத்துப் போன அரசியல் வக்கிரமும் மக்களின் வாழ்வையே அரித்துத் தின்கின்றது. நேர்மை என்பது சொல்லுக்கு கூட கிடையாது. எந்த அறிக்கையிலும் நேர்மையான எதார்த்தம் கிடையாது. மக்களை அடக்கியாளும் பாசிச வெறிபிடித்த இந்த நடத்தைகளை தமது போலித்தனத்தால் விளம்பரப்படுத்துகின்றனர். அதீதமான நம்பிக்கையை விதைத்து, அதில் தங்கியிருக்கும் வகையில் மக்களை நிர்பந்திக்கின்றனர். வாழ்வுடன் கூடிய எந்த எதார்த்தமும் தீர்வும் கிடையாது. அதைக் கோருவது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

மரணங்களை விதைத்து அதையே மீண்டும் மீண்டும் அறுவடை செய்யும் புலிகளின் முன்னால் மக்களை மண்டியிடவைத்து, வலிந்த ஒரு உபதேசத்தைச் செய்கின்றனர். தமது தியாகம் பற்றி மக்களுக்கு உபதேசிக்கின்றனர். இதன் மூலம் தியாகம் செய்தது மக்கள் அல்ல, புலிகள் என்கின்றனர். மக்களுக்கு முன்னால் ஒரு மோசடியையே அரங்கேற்றுகின்றனர். தமது வாழ்வுடன் சம்பந்தமில்லாத ஒரு போராட்டத்தின் பெயரில் மக்கள் தமது சொந்தக் குழந்தையை, சொந்த உழைப்பை, சொந்த உயிரை தாம் சுயமாக தேர்ந்தெடுக்காத ஒரு வழியில், வலிந்து தியாகம் செய்ய வைத்துள்ளனர். புலிகள் வாழ்க என்று கோசம் போடச் செய்கின்றனர். புலிகளின் கட்டுபாட்டிலும், புலிகள் படுகொலை செய்யக் கூடிய ஆதிக்கம் பெற்ற பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும், புலிக்கும் இடையில் உள்ள உறவு தலைமறைவானது. அது கொரில்லா தாக்குதல் வகைப்பட்டது. மக்கள் மனத்தில் ஒன்றும், வெளியில் ஒன்றுமாக நடமாடும் பிணங்களாக வாழ்கின்றனர்.

மக்கள் கூனிக்குறுகி கைகட்டி வாய்பொத்தி உணர்வின்றி பிணங்களாக பணிந்து வாழும் சமூகத்தின் முன்நின்று, தம்மைத்தாம் தலைவர்களாக காட்டிக் கொள்வதில் புலிகள் முனைப்பு கொள்கின்றனர். சமூக அறிவோ, கல்வியறிவோ அற்ற இவர்கள் தான், சமூகத்தின் தலைவர்களாக தம்மைத்தாம் பிரகடனம் செய்கின்றனர். சமூகத்தின் முன்னணி செயல்பாட்டு கூறுகளை எல்லாம் துப்பாக்கி முனையில் அடக்கியும், தம்மால் படுகொலை செய்யப்பட்ட பிணங்களைக் காட்டி அச்சுறுத்தியும், அவர்களை அடிபணியத் செய்கின்றனர். இதில் ஒருபகுதியை தனக்கு விசுவாசமான பினாமியாக, கைக்கூலிகளாக, தமது பூட்சை மண்டியிட்டு நக்குபவர்களாக மாற்றி வைத்துக் கொண்டு, செய்தித்துறையை கட்டுப்படுத்தி தம்மைத் தாம் தலைவர்களாக எழுதிக் கொள்கின்றனர். இந்த பினாமிகள் கூட உள்ளொன்றும், வெளியொன்றுமாக கூட நக்கிப்பிழைக்கின்றனர்.

இந்தவகையில் புலிக்குள் உள்ள இரண்டாம் மட்டத் தலைமை முதலாம் மட்டத் தலைமையை எப்படிப் புகழ்வது என்று தமக்கு இடையில் போட்டியில் ஈடுபடுகின்றது. ~மேதகு, ~தலைவர், ~பிரபானிசம், ~தேசியத் தலைவர், ~மதியுரையர் ~அம்மான் போன்ற அடைமொழிகள் ஊடாக போற்றும் வழிபாட்டு முறைமை எதுவும், மக்கள் மத்தியில் இயல்பாக கிடையாது. கிளிப்பிள்ளைகள் போல் சமூகத்தின் முன் மீண்டும் மீண்டும் கூறிய போதும், மக்களுக்கு முன்னால் உருபோடப்பட்ட வார்த்தைகளை ஒப்புவித்த போதும், மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான தலைமை பற்றிய நல்லதொரு சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது.

மாறாக இதை யார் செய்கின்றனர். புலிகளும், புலிப்பினாமிகளும், புலி வால்களும், புலிக்கு பின்னால் நின்று துதிபாடுபவர்களும், புலியைப் பயன்படுத்தி வியாபாரம் செய்பவர்களும் மட்டும் இதைச் சொல்லுகின்றனர். சமூக ஆதிக்கமுள்ள கூறுகளில் அச்சத்தினை விதைத்து, நிர்ப்பந்திக்கப்பட்ட வடிவங்களில் வலிந்து இவை புகுத்தப்படுகின்றது.

இவை எல்லாம் எதைக் காட்டுகின்றது. உண்மையில் மக்களின் தலைவனாக தாங்கள் இருக்க விரும்புவதும், புகழையடைய விரும்பும் விருப்பத்தைக் காட்டுகின்றது. ஆனால் இந்த வழிமுறை மக்களின் விருப்பாந்தமான ஒன்றாக அல்லாது, எதிர்நிலைப் பாத்திரத்தையே வகிக்கின்றது.

மக்களின் தலைவன் எப்படி இருக்க வேண்டும்?

இது ஒன்று மந்திர தந்திரம் கிடையாது. மக்களுக்காக அவர்களின் சொந்த சந்தோசத்துக்காக யார் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கின்றனரோ அவர்கள் தான் மக்களின் தலைவர்கள். சொந்த சுயநலத்தைக் கடந்து, மக்களின் துன்ப துயரங்களை யார் உணர்ந்து போராடுகின்றனரோ அவர்கள் தான் மக்களின் தலைவர்கள். வாழ்வை தனது சொந்த நலனில் இருந்தே சிந்திப்பவன், சொந்த நலனை முன்னிலைப்படுத்துவன் மக்கள் தலைவன் அல்ல. மக்களின் சமூக பொருளாதார உறவுடன், அதன் விடுதலைக்காக போராட முடியாத யாரும், மக்களின் தலைவராக ஒரு நாளுமே இருப்பதில்லை.

மக்களுக்காக போராடுவது என்பது சொந்த வாழ்வை தியாகம் செய்ய வேண்டும். மக்களின் நல்வாழ்வுக்காக சொந்த உடல் நடத்தையை, மகிழ்ச்சியை, குடும்பத்தை எல்லாம் தியாகம் செய்யும் உயர்பண்பு வேண்டும். சொந்தக் குடும்பம், சொந்த மகிழ்ச்சியை அந்த மக்களின் பொதுவோட்டத்தில் அந்த எல்லைக்குள் அடைய வேண்டும். மகிழ்ச்சி என்பது மக்களுக்கான போராட்டமே. சொந்த தனிப்பட்ட சுக துக்கங்களை கடந்து, மக்களின் சுக துக்கங்களில் ஒன்றுகலக்க வேண்டும். கார்ல் மார்க்ஸ் கூறி வாழ்ந்து காட்டியது போல் ~~விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் செங்குத்தான பாதைகளில் களைப்போடு எறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும் என்றார். ஒரு மனிதனின் புகழுக்குரிய சொந்த வாழ்வு, இந்த வர்க்க அமைப்பில் கடுமையான துன்பத்துக்குரியது. இவர்கள் மட்டும் தான் மக்களின் தலைவர்களாகின்றனர்.

மக்களுக்கு உண்மையாக நேர்மையாக வெளிப்படையாக இருத்தல் முதலாவது அடிப்படையாகும். மக்களுக்கான வெளிப்படையான நேர்மையான செயற்பாடுகள் அற்ற எதுவும், மக்களுக்கு உண்மையாக இருக்க முடியாது. கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது பிறருக்காக வாழ்தல், தனது சொந்த வாழ்வை அதற்காகவே அர்பணித்தல் என்பது தலைமைக்குரிய பண்பாட்டில் முதன்மையானது. இதுவே தியாகத்தின் முதன்மைப் பண்பு. இதை விடுத்து மரணமல்ல. வாழ்வில் அதை வாழ்ந்து காட்டுவதன் மூலம் தலைவனாக வேண்டும்.

மக்களின் உணர்வை அதிகமான மனசாட்சியுடன் தலைமை தாங்குபவன் தான் தலைவன். மக்களின் உணர்வை அடக்கியொடுக்கி, அவர்களின் வாழ்வை பறித்து ஆள்பவர்கள் உண்மையில் மக்களின் தலைவர்கள் அல்ல. அவர்கள் தமக்காகவும், தம்மைச் சுற்றி உள்ள கும்பலுக்காகவும், மூலதனத்துக்காகவும் மக்களை ஒடுக்கும் மிலேச்சர்கள். இதனால் நெஞ்சில் ஈரமற்ற, கருணை சிறிதும் அறியாத ஈவிரக்கமற்ற கொலைகாரராக உருவாகின்றனர். இப்படி இரக்கமில்லாது இருப்பவர்கள் அதில் மகிழ்;சியடைகின்றனரே ஒழிய, மக்களின் தலைவனாக இருப்பதில்லை. சக மனிதனை துன்புறுத்தி அவன் மீது ரசனைமிக்க வக்கிரத்துடன் அதிகாரத்தை செலுத்தி தலைமையைத் தக்கவைப்பது இயல்பான ஒன்றாக கூட புனையப்படுகின்றது. அடக்குமுறையை துப்பாக்கி முனையில் உருவாக்கி அந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, தம்மைத் தாம் தலைவராக காட்டிக் கொள்கின்றனர்.

கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~அநியாயமான முறைகள் அவசியமாக இருக்கின்ற குறிக்கோள், நியாயமான குறிக்கோள் அல்ல மிகச் சிறப்பாக, எமது போராட்டத்தின் மக்கள் விரோதத் தன்மையை இது அம்பலமாக்குகின்றது. அவசியமானது என்று கருதுகின்றவை நியாயமானவை அல்ல. மாறாக அவை அநியமானவையாக உள்ளன. எமது சமூகம் சந்திக்கும் நியாயமற்ற அநியாயங்களையே அவசியமானதாக புணர்ந்து காட்டுகின்றனர். ஒரு கொடூரமான நிலையை இது உருவாக்கின்றது. தலைமைத்துவப் பண்பாட்டையே மறுதலிக்கின்றது. சமூகப் பண்பாட்டை வக்கிரம் கொண்ட வன்மப் புத்தியாக்கின்றது.

மனித விடுதலை என்பது கற்பனையான சூக்குமம் அல்ல. தலைவர்களின் மண்டைக்குள் அவை நிரந்தரமாக ஒளித்திருப்பதல்ல. அங்கு அவை சக்குப் பிடிப்பவையல்ல. மனித விடுதலை என்பது தலைவர்களின் தனிப்பட்ட விருப்பு சார்ந்தவையல்ல. மக்களின் வாழ்வில் தான் விடுதலையும், விடுதலைத் தத்துவமும் உண்டு. ஆவியை எழுப்பவும் பூசாரியின் சுபிசேட்சத்துக்காக மக்கள் யாரும் காத்திருப்பதில்லை. மக்கள் விடுதலை என்பது, சொந்தப் போராட்டத்தை உள்ளடக்கியது. கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~ஒவ்வொரு ரகத்தையும் சேர்ந்த அடிமைத்தனத்தை நொருக்காமல் மனிதவிடுதலை என்பதே கிடையாது. எல்லாவிதமான மனித அடிமைத்தனத்தையும் முன்னிறுத்தி போராடாத, போராட வழிகாட்டாதவர்கள், யாரும் எங்கும் மக்களின் தலைவராகிவிட முடியாது. மக்கள் ஒடுக்கப்படும் நிலையில், ஒடுக்குபவனுக்கு துணை போகும் ஒருவனை, தலைவனாக மக்கள் ஒரு நாளுமே ஏற்றுக் கொள்வது கிடையாது. மக்களின் கையில் விலங்கையிட்டுவிடும் எந்த முயற்சிக்கும் துணை போபவர்கள், எப்படி மக்கள் தலைவனாக முடியும். இது சாத்தியமற்றது.

மாறாக தலைவனாக வேடமிட்டு நடிக்க முடியும். உண்மைக்குபுறம்பாக வாக்குறுதிகளை வாரி வழங்க முடியும். தனிமனித நம்பிக்கையை, கேள்வியற்ற விசுவாசத்தை கொண்டு சமூகத்தையே அடக்க முடியும்;. வன்முறை கொண்ட அதிகாரத்தின் மூலம், சமூகத்தையே பீதிக்குள்ளாக்கி தலைவர்களாக சொந்த பாதுகாப்பில் மட்டும் ஒரு இயந்திரமாகவே நடமாடமுடியும். மக்களைக் கண்டு அஞ்சும் இவர்கள், மக்ளை நெருங்குவது கிடையாது. சொந்த அகம்பாவம், மக்களின் வாழ்வின் மீதான விளையாட்டுத்தனம், மலிவான உணர்ச்சி பசப்புகள், கூலிப்புத்தி வளர்த்தல், வீரப் பெருங்கதைகளை பீற்றுதல் மூலம், ஒரு தேசத்தின் வாழ்வை கற்பழிப்பது, மக்கள் விரோதத் தலைமையின் முக்கியமான நடைமுறையாகும். சமூகத்தின் உயிரோட்டமுள்ள எந்த முன்முயற்சியையும் ஒடுக்குவது இதன் சிறப்பான வெளிப்பாடாகும்.

மக்களின் உயிரோட்டமுள்ள உண்மையான உணாச்சிபூர்வமான செயலுக்கு வழிகாட்ட விமர்சனம் சுயவிமர்சனம் அவசியமானது. கார்ல் மாhக்ஸ் கூறியது போல் ~~..விமர்சனம் என்பது அறிவின் உணர்ச்சியல்ல, அது உணர்ச்சியின் அறிவு. அது சிறு கத்தியல்ல, அது ஒரு ஆயுதம் என்றார். இந்த கூறு சமூகத்திலின்றி, எதுவும் உணர்வு பூர்வமானவையல்ல. மாறாக கைதேர்ந்த நடிப்பே உறவின் விழுமியங்களை உருவாக்கின்றது. இது புலிகள் மட்டுமல்ல, புலிகள் பற்றி மக்களும் இதை எதிர்நிலையில் கையாளுகின்றனர். ஏன் புலிக்குள்ளான உறவுகள் கூட இப்படித் தான் உள்ளது. காhல் மாhக்ஸ் கூறியது போல் ~~...அடிமைத் தனத்தின் எல்லா உறவுகளும்; இந்த உறவின் உருத்திரிபுகளும் விளைவுகளுமே என்றார்.

எமது தேசத்தில் மனித உறவுகள் சார்ந்த பண்பாடுகள் கூட, இந்த எல்லைக்குள் உருக்குலைந்து சிதைந்து விடுகின்றது. புலித் தேசியத்தில் பரஸ்பர உறவுகள் உருத்தெரியாது சிதைந்து தலைமறைவான ஒன்றாகிவிடுகின்றது. எதுவும் நேர்மையான உறவாக இருப்பதில்லை. உறவுகளில் உள்ள சந்தேகம் அனைத்தையும் அரித்தெடுக்கின்றது. சந்தேகம் அனைவரையும் சிறுவராக, பலவீனமானவராக, மன உறுதி இல்லாதவராக, எதற்கும் லாயக்கற்றவராக மாற்றிவிடுகின்றது. பிரமைபிடித்த உறவும், கண்ணை மூடி வழிபாட்டு உறவும் எங்கும் எதிலும் கொலோசுகின்றது. காய் அடிக்கப்பட்ட சமூகமாக, சமூக உறவாகவே மாறிவிடுகின்றது. எல்லாவகையான ஆன்மீக நம்பிக்கைகளையும் இல்லாததாக்கி விடுகின்றது. அவநம்பிக்கையே சமூகத்தில் புரையோடிப் போகின்றது. தனக்குத் தானே போலியாக இருத்தல் என்பதே எப்போது உணரப்படுகின்றது. மக்கள் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் கூட தமக்கும் தாம் போலியாகவே வாழ்கின்றனர். எதிலும் உண்மையாக, நேர்மையாக இருப்பதில்லை. இவர்களின் வார்த்தையை நம்புவதற்கு உலகத்தில் யாரும் இருப்பதில்லை.

அந்தளவுக்கு தலைவர்களின் போலித்தனமான பசப்பல்கள், நேர்மையற்ற செயல்கள் உண்மையை குழிதோண்டி புதைத்துவிட்டது. சமூகம் எதையும் நம்பத் தயாரற்ற நிலையை அடைந்துவிட்டது. ஊகங்கள் உடன் அதிருப்த்தியுற்று ஊமையாகின்றனர்.

சமூகத்துக்கு வழிகாட்டும் வகையில் சுதந்திரமான அபிப்பிராயம், துணிகரமான கற்பனை பாய்ச்சல், பிரச்சனைக்கு முடிவு காண்பதில் தற்சிந்தனையான அணுகுமுறையற்ற தலைமைகள், ஆயுதம் ஏந்திய கூலிப் படைகளை நம்பியே வாழ்கின்றனர். அதன் நலன் தான் தன் நலன் என்ற அடிப்படையில், தன்னைச் சுற்றியே வேலியிடுகின்றனர். சுய திருப்தியில் திளைத்துப் போகின்றனர். போலியான வாழ்வையே உண்மையான சமூக வாழ்வாக காட்டி வாழத் தொடங்குகின்றனர். மக்கள்விரோத செயல்கள் மூலம் தனது கோஸ்டியை அதற்கு வெளியில் நிறுத்திக் கொள்கின்றது. தாம் உருவாக்கிய சொந்தச் சட்டத்துக்கு, தாமே கட்டுப்படுவதில்லை.

அவர்கள் செய்ய நினைப்பது எல்லாம் மக்களின் உழைப்பு வழங்கும் வற்றாத செல்வத்தை, அபகரிப்பதிலேயே அதிகமான அக்கறை காட்டுகின்றனர். எப்போதும் தம்மை பணத்தால் நிரப்ப வேண்டும் என்ற வேட்கையில், தனது காலத்தையும் சொந்த அரசியல் நடத்தையையும் தீர்மானிக்கின்றனர். இதில் ஈவிரக்கமற்ற வகையில், கல்நெஞ்சக்காரராக மாறி மனிதத்துவத்தையே குதறுகின்றனர். மக்களையிட்டு ஒரு கணம் கூட இந்தத் தலைமைகளால் சிந்திக்க முடிவதில்லை. சொந்த மூளையில் மக்கள் நலன் பற்றி எதுவும் இருப்பதில்லை. இதயமற்ற தேசியத்தை கொண்டு இதயமுள்ள சமூகத்தை புணருகின்றனர். தீமையை அல்லது நன்மையை ~~புறநிலை உறவுகளில் விளைவுகளில் காண வேண்டும் என்றார் கார்ல் மார்க்ஸ். எமது சமூகத்தில் புறநிலை மனித உறவுகள் தீமையின் பிறப்பிடமாகவே உள்ளது. மனிதத்துவம் எதுவுமற்ற வரண்ட உறவுகளிடையே எமது சமூகத்தின் சிசிலமடைந்த வன்மத்தையே நாம் காண்கின்றோம். ஆக்கமும், ஆக்கத்திறனுமற்ற வழிகாட்டல், அழிவையும் அழிவுத்திறனையும் வழிகாட்டுகின்றது. எமது தலைமையும் அது வழிகாட்டும் ஆற்றலும் மனிதத்தை வென்றல்ல அடக்கியாள்வதில் தான் வெளிப்படுகின்றது.

இதற்கு மாறாக மக்கள் தலைவன் என்பது சொந்த தியாகத்தை அடிப்படையாக கொண்டது. மற்றவனின் நலனை முன்னிறுத்தி, தன்னை அதற்காக அர்பணித்துப் போராடுவதாகும். இதை நாம் எமது தலைமைகளிடம் எங்கே தேடுவது. கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~மனிதகுலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால், அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது, ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம் இது தான் உண்மையான தியாகம். சமூகத்துக்காக தன் வாழ்வை தியாகம் செய்வதே தியாகம். இதை எந்த தலைமையிடம் நாம் இன்று இதைக் காணமுடியும். தியாகங்கள் குறுகிய சொந்த நலனுக்காக, ஒரு குறிப்பிட்டவர்களின் நலனுக்காக தியாகங்கள் கூட திருட்டுத்தனமாக திருடப்படுகின்றது. இதுவே எமது மண்ணில் நடக்கின்றது.

தம்மைத் தாம் தலைவராக காட்டிக் கொள்பவர்கள், எந்த சமூகச் சுமையையும் சுமந்து கொள்ளாது வாழ முற்படுகின்றனர். சொகுசான சொந்த ஆடம்பரத்தில், மற்றவனின் உழைப்பில் வாழ்வதற்காக, உயிர்ப்புள்ள சமூகத்தை மலடாக்குகின்றனர். சமூகத்தை கண்டு ஏற்படும் பீதி, சொந்த கோழைத்தனத்தை உருவாக்குகின்றது. இதனால் அதற்கு இசைவான சமூக விழுமியங்களை திணிக்கின்றனர். கார்ல் மாhக்ஸ் குறிப்பிடுவது போல் ~~கோழைத்தனத்தினால் தூண்டப்படுகின்ற சட்டங்களில் குறிப்பிடத்தக்க பண்பு கொடுஞ்செயல் ஏனென்றால் கோழைத்தனம் கொடுமையாக நடந்து கொள்கின்ற போது மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கும் என்றார்.

கொடுமையாகவும், ஈவிரக்கமற்ற வகையில் செய்யும் கொடுஞ்செயல்களில் ஒரு தலைமை ஈடுபடுகினறது என்றால், அதன் பின்னால் ஒரு கோழைத்தனம் உள்ளது. அந்தக் கோழைத்தனம் என்பது மக்களின் நலன்களையிட்டு அக்கறைப்படாத நிலையில் ஏற்படும் சொந்த பீதிதான் அது. சொந்த நலனை மட்டும் இட்டு அக்கறைப்படும் போது, மக்களுக்கு எதிரான கொடூரமான வக்கிரபுத்தி கொண்ட வன்முறையை ஏவிவிடுவது குறித்த தலைமைகளின் தனிச்சிறப்பான பண்பாகும். இதை பின்னால் அவர்கள் ரசிக்கத் தொடங்கி, அதையே தொழிலாக கொள்கின்றனர். இதை நியாயப்படுத்த கோட்பாடுகளை, கோசங்களை கண்டறிவதன் மூலம், சமூகத்தின் உதிரி வர்க்கத்தை தன் பின்னால் திரட்டிக் கொண்டு பாசிச வெறியாட்டத்தையே சமூகம் மீது நடத்துகின்றனர்.

கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை என்றார். சமூகத்தின் நலனை மறுத்து, சுயநலத்தின் நலனை முன்னிறுத்தும் வாதங்கள் கோட்பாடுகள் தர்க்கங்கள் மிகவும் பயங்கரமானவை. ஈவிரக்கமற்ற, கோழைத்தனமான வன்முறையைக் கொண்டு, உயிருள்ள சமூகங்களின் மீது உயிரற்ற இதுவே பாய்ந்து குதறுகின்றது. இப்படி வாழ்பவர்கள் எப்படி தலைவராக முடியும்? எப்படி தான் மேதைகளாக முடியும்? எந்த மக்கள் இதை அங்கீகரிப்பார்கள்?

காhல் மாhக்ஸ் கூறியது போல் ~~எது மிருகத் தன்மையோ அது மனிதனுக்கு உரியதாகிறது. எது மனிதத் தன்மை உடையதோ அது மிருகமாகின்றது எவ்வளவு சரியான ஒரு கூற்று. மனிதத்தை இழந்து, மனிதத்துவத்தை இழந்த வன்மம் கொண்ட ஒரு இழிந்த மிருகமாக நாம் நடத்தும் வெறிக் கூத்துக்கு மேல், எம்மை நாமே தலைவர்கள் என்கின்றோம், மேதைகள் என்கின்றோம். கார்ல் மார்க்ஸ் கூறுகின்றார் ~~இரண்டு மக்களினங்கள் தீர்க்க முயன்று கொண்டிருக்கிற பிரச்சினைகளை ஒரேயொரு சொற்றொடரில் தீர்த்துவிடுகின்ற கலையை நாம் கற்கவில்லை என்கின்றார். ஆனால் பிரபானிசம் ஒரேயொரு சொற்தொடரில் தீர்க்க முனைகின்றது. துப்பாக்கியால் சுடுவதே அது. இதை பிரபானிச தலைமை சொந்த மக்களுக்குள்ளும் இதைத் தான் தீர்வாக வைக்கின்றது. சமூகங்களை கையாள்வதிலும், மனித முரண்பாடுகளை கையாள்வதிலும் உள்ள அணுகுமுறை கூட எங்கும் எதிலும் படுகொலை அரசியலே. இதற்குத் தான் பிரபாகரன் தலைவனாக இருக்கின்றார் என்றால், எப்படி ஒரு இனத்தின் தலைவனாக இருக்க முடியும்?

பரஸ்பர நம்பிக்கை இல்லாத அனைத்தும் மலட்டுத்தனமானது. இங்கு உணர்ச்சி பூர்வமான உணர்வுகள் வெளிப்படுவதில்லை. உருபோட்ட நம்பிக்கைகள், விசுவாசங்கள், இதுவே சமூகத்தை இழிநிலைக்குள்ளாக்கியபடி வழிநடத்துகின்றது. மக்கள் விரோதச் செயல்களை, அதாவது சட்டவிரோத செயல்களை சட்டமாக்கி, அதையே ஒழுக்கம், தியாகம், பண்பாடாக புணர்ந்து சமூகத்தின் வேதனையில் தன்னை உயிர்ப்புள்ளதாக காட்டி நடிக்கின்றனர்.

மக்களின் பெரு மூச்சை மோந்து கண்காணிக்கும் அடிவருடிக் கும்பல்கள், பெருமூச்சு வார்த்தையாக வருவதை அனுமதிப்பதில்லை. மீறி வெளி வந்தால் ~துரோகி, ~கைக்கூலி ~பொம்பளைப் பொறுக்கி , போன்ற அடைமொழிகள் மூலம் புணர்ந்து கொன்று விடுகின்றனர். இப்படித் தான் தலைமை, தன்னையும் தனது சொந்த இருப்பபையும் பாதுகாக்கின்றது. அடுத்தவனின் கழுத்தை வெட்டுவதன் மூலம், தம்மைத்தாம் தலைவர்கள் என்கின்றனர். இதுவே இன்றைய எமது எதார்த்தம். முட்டாள்கள் முட்டாள்களாகவே நீடிப்பர்.


குறிப்பு: இக்கட்டுரை தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான சமூக ஒடுக்குமுறைகளை ஒழிக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதாக பீற்றும் புலிகள பற்றி குறிப்பாக விசேடமாக ஆராய்கின்றது. இது பேரினவாத பாசிச சிங்கள ஆட்சியாளர்களையோ, அதனுடன் கூடி நிற்கும் அரசியல் கட்சிகளையே, அரசியல் ரீதியாக தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த துரோகக் குழுக்களையே இந்த விமர்சனம் எந்தவிதத்திலும் பாதுகாக்க முற்படவில்லை. ஏன் சர்வதேச ரீதியாக ஏகாதிபத்தியங்களுடன் ஜனநாயகத்தின் பெயரில் கூடிக்கூலவும் உதிரிகளும், சிறுகுழுக்கழும் கூட விதிவிலக்கற்ற மக்கள் விரோதிகள் தான். சமூகத்தின் மீது சவாரிவிடும் இந்த மக்கள் விரோதிகள் புலிக்கு நிகாரனவர்கள். சந்தர்ப்பங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வேஷம் கட்டி நாடகமாடும் கயவர்கள் தான் இவர்கள். ஈவிரக்கமற்ற மக்கள் விரோதிகள் இவர்கள். மக்களுக்காக எதையும் உண்மையாக சொல்ல நேர்மையற்ற பொறுக்கிகள் தான் இவர்கள். எனது இக்கட்டுரை குறிப்பாக புலிகள் பற்றி ஆராய்ந்த போதும், இது உலகம் தழுவிய மக்கள் விரோத சக்திகளின் பொதுவான கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு விவாதிக்கின்றது.

Saturday, January 28, 2006

வெள்ள நிவாரணம்

வெள்ள நிவாரணம் :"அரசியல் பண்ணுவது" தவறா?

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெறப் போனவர்களில் 42 பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உற்றார்உறவினர் கதறி எழும் ஓலத்தை விட ஓங்கி ஒலிப்பது, அந்தக் கொடுமையை தூர நின்று வேடிக்கை பார்த்து, ''ச்ச்சு''க் கொட்டும் நடுத்தர, மேட்டுக்குடி அறிவாளிகளின் வேறு வகையான, வழக்கமான ஒப்பாரிதான்:

''ஐயோ, அரசியல் பண்ணாதீங்க!'', ''அரசியல்வாதிங்கதான் எல்லாத்துக்கும் காரணம்!'', ''அரசியல்வாதிங்க தலையீடு செஞ்சுதான் எல்லாத்தையும் கெடுக்கிறாங்க!'', ''இந்தத் துயரச் சம்பவத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயல்றானுங்க!'', ''அழுகைச் சத்தத்திலும் ஓட்டுத் தேடும் அரசியல்கள்.''

எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சிகளும் குறிப்பாக கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டுகள் எதிர்க் குற்றச்சாட்டுக்கள் வீசிக் கொள்வதைத்தான் இப்படிச் சொல்லி ஒப்பாரி வைக்கிறார்கள். முக்கியமாக இப்படிப்பட்டவாதப் பிரதிவாதங்களைச் செய்திகளாக்கிக் காசு பார்க்கும் செய்தி ஊடகம்தான், தங்களின் பெரும்பான்மை நேயர்கள் வாசகர்களான நடுத்தர, மேட்டுக்குடியின் சார்பாக இத்தகைய ஒப்பாரி வைப்பதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றது. இதுவும் ஒரு வியாபாரத்துக்காகத்தான்!

உண்மையில் ''அரசியல் பண்ணுவது'' அரசியல் கட்சிகளின் முக்கியமான வேலைகளில் ஒன்று! அப்படிச் செய்யாமல் இருக்கும் அரசியல் கட்சி அரசியல் அரங்கில் நீடிக்கவே முடியாது, அழிந்து போகும்! அவை ''அரசியல் பண்ணு''வதால்தான் மக்களுக்குக் கொஞ்ச நஞ்சமாவது அரசியல் தெரிகிறது. இதுவும் ஒருவகையான அரசியல் விழிப்புணர்வுதான். அதனால் தான், எங்கே தன் ''குட்டு'' அம்பலப்பட்டு போகுமோ, மக்களிடையே தம் செல்வாக்கு மங்கிப் போகுமோ என்று ஓரளவு அஞ்சி அஞ்சி, அரசியல் கட்சிகள் குறிப்பாக, ஆளும் கட்சிகள் பயந்து நடக்கின்றன. கருணாநிதியோ, ஜெயலலிதாவோ யாராக இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகள், இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகள், நிர்வாகச் சீர்கேடுகள், குற்றங்குறைகள் ஆகியவை மக்களிடையே வைத்து அலசப்படும்போதுதான் ஓரளவாவது உண்மைகள் தெரியவருகின்றன.

''அரசியல் பண்ணப்''படுவதால்தான் சுனாமி நிவாரணத்தில் நடந்த ஊழல்கள், வெள்ள நிவாரணம் வழங்குவதில் நடந்த படுகொலைகள் போன்றவற்றுக்கு எந்த அளவு யார், யாருக்குப் பொறுப்பு இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இல்லையென்றால், இந்த உண்மைகள் எல்லாம் அடையாளம் தெரியாத பிணங்களாக வகைப்படுத்தி புதைக்கப்படும் அல்லது அதிகாரவர்க்க ஆவணக் குவியல்களுக்குள் புதைந்து போகும்.

இதுபோன்ற விவகாரங்கள் பொதுமக்கள் முன்பு வைத்து அலசப்படாமல் போவதால் அதிகபட்சம் ஆதாயம் அடையப்போவது போலீசும் அதிகாரவர்க்கமும்தான். ஏற்öகனவே, ஓட்டுக்கட்சிகளைப் போல மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஏதுமில்லாத இவர்கள் மேலும் கொழுத்துத் திரிவார்கள். உங்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை என்று ஏற்கெனவே திமிராகப் பேசித்திரிகிறார்கள்.

கொஞ்சங்கூட அரசியல் அறிவும் ஈடுபாடும் இல்லாமல், தானுண்டு, தன்வேலை, தன் மனைவிமக்கள் உண்டு என்று பிழைப்புவாதத்தில் மக்கள் இருப்பதும், பொறுக்கித் தின்னுவதே அரசியல் என்றும் போராட்ட உணர்வு எதுவும் இல்லாது தலைவர்களின் காலில் விழுந்து கும்பிடுவதும் என்று தொண்டர்கள் இருப்பதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பாசிஸ்டுகளுக்கு வசதியாக இருக்கிறது.

பேருந்துக் கட்டண உயர்வு உட்பட ஒரே சமயத்தில் திடீரென்று 4000 கோடி ரூபாய் சுமையைத் தமிழக மக்கள் மீது மூன்றாண்டுகளுக்கு முன்பு ஏற்றி வைத்து அப்படியே அமுக்கினார், ஜெயலலிதா. இது வெறும் பொருளாதார சீரமைப்பு, கசப்பு மருந்து, இதை அரசியல் படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், இது கருணாநிதி ஆட்சியின் சீர்கேட்டால், கருவூலம் காலியாக்கப்பட்டதன் விளைவு என்று தானே ''அரசியல்'' பண்ணினார். அன்று ஜெயலலிதாவுக்கு எதிராக பிற அரசியல் கட்சிகளும் தொழிலாளர், மாணவர் என்று பிற இயக்கங்களும் கடும் எதிர்ப்புக் காட்டியதால்தான் ஜெயலலிதா ஒரு உண்மையைப் போட்டுடைத்தார். ''தமிழ்நாட்டுக்கு நேரடியாகவும், மத்திய அரசு மூலமாகவும் கடன்தரும் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் கட்டண உயர்வு, வரி விதிப்பு போன்ற பல நிபந்தனைகள் விதிக்கின்றன. கடன் பெற வேண்டுமானால் அதன்படி செய்ய வேண்டியிருக்கிறது'' என்றார்.

அதேபோலத்தான் சுனாமி நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட செலவிடப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு சிறு துளி அளவுதான் பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்தும் ''பொதுமக்கள்'' வழங்கிய நன்கொடையும் ஆகும். மிகப் பெரும் அளவிலான மீதித் தொகை எங்கிருந்து, எதற்காக வந்தது என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாக உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து போன தி.மு.க. உள்ளிட்ட எம்.பி.க்களும், அமைச்சர்களும் இந்த மாநிலத்திற்காக எதுவும் செய்யவில்லை; மத்திய அரசிடம் தான்தான் போராடிப் பல கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதாக ஜெயலலிதா அடிக்கடி குற்றஞ்சாட்டுகிறார். அதேபோல, பல அந்நிய நாட்டு முதலீடுகளைப் பெற்று தனது சொந்த முயற்சியால் தமிழகத்தை தொழில்மயமாக்கி வருவதாக ஜெயலலிதா உரிமை பாராட்டிக் கொள்கிறார்.

இது உண்மையல்லவென்று மறுக்கும் தி.மு.க. காங்கிரசு தரப்பு, தாம் எவ்வளவு அந்நிய முதலீடுகள், தொழில்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறோம் என்று பட்டியல் போடுகிறார்கள். சுய உதவிக் குழுக்களுக்கான திட்டம் கடன், மத்திய அரசு உதவியிலானது என்றாலும் தமது சொந்த முயற்சியிலானது என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார், ஜெயலலிதர் அதேபோல சுனாமி நிவாரணத்துக்குப் பல ஆயிரம்கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது; இருந்தபோதும் அவை நிர்வாகச் சீர்கேடு, ஊழல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படாமல் போகிறது என்கிறது எதிர்த்தரப்பு.

இப்படி இவர்கள் ''அரசியல் பண்ணுவதில்'' கொஞ்சமாவது அரசு இரகசியங்கள் வெளிப்படுகின்றன என்றாலும் வெளியே தெரியாமல் போகும் மறைக்கப்படும் முக்கியமான உண்மைகளும் உள்ளன. எப்படி இவர்கள் போட்டி போட்டு, கொண்டு வரும் அந்நிய முதலீடுகள் தொழில்கள் ஏகாதிபத்தியப் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் சுரண்டலுக்காக செய்யப்படுகின்றனவோ, அப்படித்தான் சுய உதவிக் குழுக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சுனாமி நிவாரண வெள்ள நிவாரண உதவிகள் பணிகள் எல்லாமே ஏகாதிபத்திய சேவைக்காக உலக வங்கி ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அந்நிய நிதி நிறுவனங்களின் கடன்கள் திட்டங்களுக்காகவே திட்டமிட்டு செய்யப்படுகின்றன.

சுனாமி நிவாரணத்துக்காக வழங்கப்படும் நிதி, மீனவர்கள் மீன்பிடிப் படகுகள் வலைகள் மற்றும் மீனவர்களின் குடியிருப்புகள் போன்ற மக்கள் நல்வாழ்வுக்காகச் செலவிடப்படுகின்றன என்றே பலரும் எண்ணுகின்றனர். அதேபோல மழை வெள்ள நிவாரணம் என்பது குடும்பத்துக்கு ரூ. 2,000, ரூ.1000 என்றும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இவ்வளவு என்றும் ரொக்கமாகவும், வேட்டிசேலை, அரிசி, மண்ணெண்ணெய், சோற்றுப் பொட்டலம் ஆகியவற்றுக்காக செலவிடப்படுவதாகவும் பலரும் நம்புகிறார்கள்.

சுனாமி நிவாரணத்திற்காக இதுவரை மைய அரசு மூலம் வந்தது ரூ.679.61 கோடி ரூபாய். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரணம் வழங்குவதற்கு மாறாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளைச் சீர்செய்வதற்காக என்றே உலகவங்கி ரூ. 1903.5 கோடியும், ஆசிய வளர்ச்சி வங்கி ரூ. 646.88 கோடியும், வேளாண் வளர்ச்சிக்கான உலக நிதியம் ரூ. 67.50 கோடியும் கொடுத்துள்ளன. இவையும் கடனுதவி தாமே தவிர நன்கொடை உதவி அல்ல. இவற்றிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சீரமைக்க ரூ. 28 கோடியும், மீன்பிடிப்பு தொழிலை சீரமைக்க ரூ. 87.60 கோடியும் நான்கு, ஐந்து தவணைகளில் தரப்படும். மீதம் பெரும்பாலான தொகை சுற்றுலா வளர்ச்சி முதலிய வேறு தொழில்களுக்காக ஒதுக்கப்படும்.

இப்போது, ஜெயலலிதா கோரியிருக்கும் வெள்ள நிவாரணமும் இதே வகையானதுதான். வெள்ள நிவாரணமாக ஜெயலலிதா கோரியிருக்கும் ரூ.13,685 கோடியில் அடங்கியுள்ள விபரங்கள்; கூட்டுறவு சங்கங்களுக்கு விவசாயிகள் அசலும் வட்டியுமாக கட்ட வேண்டிய தொகையைத் தள்ளுபடி செய்யும் வகையில் ரூ. 4626 கோடி, சாலைகளைச் சீரமைக்க 2,523 கோடி, நீர்ப்பாசன ஆதாரங்களை சீரமைக்க774 கோடி, ஊரணிகள் மற்றும் குளங்களை புனரமைக்க 60 கோடி, வெள்ளப் பேரழிவால் வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு உடல் உழைப்பு வேலைவாய்ப்பு (தினக்கூலி) வழங்க ரூ. 77 கோடியே 33 லட்சம் என்று கணக்கு சொல்கிறது, ஜெயலலிதா அரசு.

கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சத்துணவுத் திட்டம் எம்.ஜி.
ஆரின் உள்ளத்தில் சுரந்த கருணை மழையின் விளைவு என்று பலரும் எண்ணுகிறார்கள்; ஆனால், அது உலகவங்கியின் மூளையில் உதித்த திட்டம் என்பது அவர்களுக்குத் தெரியாது. மகளிர் சுயஉதவித் திட்டம் என்பது உலகவங்கி முதலிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் நுண்கடன் வழங்கு திட்டத்தின் கீழ் வருவது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஏதோ சில தொண்டு உள்ளம் படைத்த மனிதர்களின் முயற்சியால் உருவாக்கப்படுபவை அல்ல, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்; ஏகாதிபத்தியத்தின் திட்டமிட்ட சதித்தனமான ஏற்பாடுதான்.

இவைபோலவே, சுனாமி நிவாரணம், வெள்ள நிவாரண வேலைகளிலும் உலக வங்கி முதலிய ஏகாதிபத்தியங்களின் நிதி, தொழில் நிறுவனங்களின் சதித்திட்டங்கள் ஒளிந்து கொண்டு வருகின்றன. குடிசைப் பகுதிகளையும், குப்பங்களையும் அகற்றுவது; அங்கே அந்நிய நிதி தொழில் தேவைக்கான கட்டமைப்புகளை உருவாக்குவது என்று அடாவடித்தனமாக ஜெயலலிதா செய்த முயற்சி ஏற்கெனவே முழுமையாக நிறைவேற்றப்பட முடியவில்லை. இப்போது சுனாமி வெள்ள நிவாரணம், மறுசீரமைப்பு என்ற பெயரில் செய்யப்படுகிறது.

வரலாறு காணாத வெள்ள பேரழிவில் தமிழக மக்கள் உயிரோடு அடித்துச் சென்ற அதேசமயம் தயாநிதி மாறனும் ஜெயலலிதாவும் அமெரிக்க பில்கேட்ஸ், ஜெர்மனியின் பி.எம்.டபுள்யூ முதலாளிகளோடு புதிய தொழில்களுக்கான ஒப்பந்தம் போடுகின்றனர். உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் பி.எம்.டபிள்யூ.வின் துணைத் தலைவர் கிளாஸ் பெர்னிங், ''இதுவரையில் பி.எம்.டபிள்யூ நிறுவனம் கண்டிராத அதிவேகமான பதிலுக்காகவும், இந்த நிறுவனம் முதலீடு செய்வதற்கு வசதியாக தமிழக அரசு காட்டிய வேகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

''வெள்ளத்திற்கு அணை போட முடியாது. ஆண்டுதோறும், போதிய அளவு மழை பெய்யும் என்று இனி திட்டவட்டமாக கூறவும் முடியாது. இந்நிலையில் விவசாயிகள் வருமானத்திற்கு உத்திரவாதம் வேண்டும் என்றால் மரபுவழி விவசாயத்தை உடனடியாக கைவிட வேண்டும். அரசு அறிமுகப்படுத்தும் ஒப்பந்த பண்ணை விவசாயத்திற்கு மாற வேண்டும். பயோபெட்ரோல் தயாரிக்கப் பயன்படும் சக்கரைக் கிழங்கு, சக்கரைச் சோளம், பயோடீசல் தயாரிக்கப் பயன்படும் காட்டாமணக்கு மற்றும் ஏற்றுமதிக்கான மலர், பழம், மூலிகை பண்ணைகளாக விவசாயத்தை மாற்றுவதுதான் ஒரே தீர்வு என்கிறது, ஜெயா அரசு. அதற்காக தனியார் முதலாளிகளுடனான ஒப்பந்த பண்ணை சாகுபடிதான் செய்ய வேண்டும் என்று விவசாயிகளை நிர்பந்திக்க, கடன், நிவாரணம் மற்றும் மானியங்களைப் பயன்படுத்தி சதி வலையைப் பின்னுகிறது, அரசு.

வெள்ளப் பேரழிவை தங்கள் கண்ணாடி மாளிகைகளிலிருந்து பார்த்து ரசிக்கும் ஏகாதிபத்திய அடிவருடிகளுக்குத் தும்மல் வந்தாலும் துடித்துப் போகிறது, பாசிச ஜெயா கும்பல்.

குறிப்பாக, சென்னையைத் தாக்கிய வெள்ளத்திற்கு முக்கிய காரணம், 17 கி.மீ. நீளத்திற்கு சென்னைக்குள் ஓடும் பக்கிங்காம் கால்வாய்! ஆக்கிரமிப்பால் அது சுருங்கி போனதால், பிதுங்கிய பெருவெள்ளம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் மண்டி கிடக்கும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை மூழ்கடித்து போக்குவரத்தை குலைத்து விட்டது. வெள்ளத்தால் முற்றுகையிடப்பட்ட ஏகாதிபத்திய நிறுவனங்கள் உடனடியாக நிலைமையைச் சரிசெய்யுமாறு ஜெயலலிதாவிற்கு ஆணை பிறப்பித்தன. ஜெயலலிதாவின் பட்டாளம் அவ்விடத்திற்குப் பதறிக் கொண்டு ஓடியது. அடுத்த சில நிமிடங்களில், பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலுக்கு புதிய கால்வாய் வெட்ட, வரைபடத்தோடு உத்தரவு பிறந்தது.

சுனாமி நிவாரணமோ, வெள்ள நிவாரணமோ, தவறாமல் ''அரசியல் பண்ணும்'' ஆளும் கட்சிகள்எதிர்க்கட்சிகள், ஓரளவு உண்மைகள் வெளிவர உதவினாலும், தமது ஏகாதிபத்திய சேவை பற்றிய இரகசியங்கள் மட்டும் வெளிவராமல் எச்சரிக்கையாக இருக்கின்றன.

நன்றி புதியஜனநாயகம்

Friday, January 27, 2006

இங்கேயும் ஒரு அபுகிரைப்

இங்கேயும் ஒரு அபுகிரைப்
வீரப்பனைத் தேடுவது என்ற பெயரால் மலைவாழ் மக்களின் மீது அதிரடிப்படை ஏவிவிட்ட சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் சதாசிவம் கமிசனால் உறுதி செய்யப்பட்டுள்ளன


சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலை வேட்டையாடுவதற்காக, தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படைகள், சத்தியமங்கலம், தாளவாடி, கொள்ளேகால் பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் மீது நடத்திய மனித உரிமை மீறல்களைப் புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. வீரப்பனைக் ''கொன்ற'' தமிழக அதிரடிப்படையின் ''வீர சாகசத்தை''ப் புகழ்ந்து தள்ளிய முதலாளித்துவ பத்திரிகைகளால்கூட, அதிரடிப் படைகளின் அட்டூழியங்களைப் பூசி மெழுகிவிட முடியவில்லை.

தமிழக கர்நாடக அதிரடிப் படைகள் நடத்திய பாலியல் வன்முறைகள், சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள், இரத்த சாட்சிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பவானி நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ச.பாலமுருகன், அதிரடிப்படையால் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிர்மூலமாக்கப்பட்டதை, ''சோளகர் தொட்டி'' என்ற நாவல் மூலம் இலக்கிய சாட்சியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய மனித உரிமை கமிசனால் நியமிக்கப்பட்ட சதாசிவம் கமிசன், தமிழககர்நாடக அதிரடிப் படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய பொழுது, இந்த அதிரடிப் படைகள் மலைவாழ் மக்களின் மீது ஏவிவிட்ட சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், போலி மோதல் கொலைகள் அம்பலமாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கின.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சதாசிவா, மையப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் நரசிம்மன் ஆகியோரைக் கொண்டு 1999ஆம் ஆண்டு ஜூனில் உருவாக்கப்பட்டது இந்த கமிசன். மலைவாழ் மக்களில் 193 பேர், தமிழக கர்நாடக அதிரடிப் படைகளைச் சேர்ந்த 28 போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு 243 பேரிடம் விசாரணை நடத்தி, சதாசிவம் கமிசன் 2003ஆம் ஆண்டு டிசம்பரில் தனது அறிக்கையை தேசிய மனித உரிமை கமிசனிடம் ஒப்படைத்தது.

இந்த கமிசன் உருவாக்கப்பட்டதையும், விசாரணை நடத்துவதையும் ஏற்றுக் கொள்ளவே மறுத்து வந்த தமிழக கர்நாடக மாநில அரசுகள், வீரப்பனோடு சேர்த்து சதாசிவம் கமிசன் அறிக்கையையும் புதைத்துவிட கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முயன்று வந்தன. எனினும், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களும், மனித உரிமை அமைப்புகளும் கமிசனின் அறிக்கையை வெளியிடக் கோரித் தொடர்ந்து போராடி வந்தனர். இதனால் மனுதாரர் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.பி.குணசேகரனுக்கு, சதாசிவம் கமிசன் அறிக்கை தேசிய மனித உரிமை கமிசனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

''தமிழக கர்நாடக அதிரடிப் படைகளால் அக்.3 1990க்கும் ஜூலை 18, 1998க்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் 66 பேர் போலி மோதல் படுகொலைகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்; இந்தச் சட்ட விரோதமான படுகொலையை மறைக்க, வீரப்பன் கும்பலோடு நடந்த மோதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தமிழக கர்நாடக அதிரடிப்படைகள் நடத்திய நாடகத்தையும் கமிசனின் அறிக்கை தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது.

''அதிரடிப் படைக்கும், வீரப்பன் கும்பலுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் இம்மோதல்களின் உண்மைத் தன்மை குறித்து, பல்வேறு சாட்சியங்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை ஆதாரமற்றவை என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது'' எனக் குறிப்பிட்டுள்ள சதாசிவம் கமிசன், ''ஒரு மோதல் நடந்தால், அதில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பும், ஒருவரை நோக்கி ஒருவர், மிக விரைவாக, குறுக்கும் நெடுக்குமாகச் சுட்டுக் கொண்டிருப்பது நடந்திருக்கும். ஆனால் இந்த மோதல்களில் அப்படி இங்கொன்றும் அங்கொன்றுமாக, பல்வேறு திசைகளில் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை'' என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த 66 பேரும், தலையின் முன்புறமோ, பின்புறமோ அல்லது உடம்பின் முன்புறமோ, பின்புறமோ சுடப்பட்டு இறந்து போயிருப்பதை ஆதாரமாகக் காட்டி, இவை அனைத்தும் போலி மோதல் படுகொலைகள்தான் என்பதை சதாசிவம் கமிசன் ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.

பெங்களூரில் இயங்கி வரும் தடய அறிவியல் பரிசோதனைக் கூடத்தின் துணை இயக்குநர் என்.ஜி.பிரபாகர், ''இந்த 66 பேரில், 28 பேர் ஆறு தப்படியில் இருந்து அறுநூறு தப்படி தூரத்திற்குள் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்; மூன்று பேர் 550 மீட்டர் தொலைவிற்குள் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்; ஆறு பேர் மிக மிக அருகாமையில் இருந்து அதாவது, ஆறு தப்படிக்கும் குறைவான தொலைவில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்'' சதாசிவம் கமிசனில் சாட்சியமாக அளித்து, அதிரடிப் படையின் மோதல் நாடகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மிக மிக அருகாமையில் இருந்து சுடப்பட்ட இந்த ஆறு பேரில், புட்டா என்பவர், வாய்க்குள் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். குமத்ஸா என்பவரின் உடலில் பாய்ந்துள்ள ஒரு குண்டு, மூன்று இன்ஞ் தூரத்தில் இருந்தும், குஞ்சப்பா என்பவரின் உடலில் பாய்ந்துள்ள ஒரு குண்டு ஒன்பது இன்ஞ் தூரத்தில் இருந்தும் சுடப்பட்டுள்ளது. இவர்களைப் போல, வீரப்பனின் நம்பகமான கூட்டாளியாக இருந்த சேத்துக்குளி கோவிந்தனின் மனைவி பாப்பாத்தியும்; மணி என்ற மற்றொரு பெண்ணும் மிக அருகாமையில் இருந்து சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

''மோதலில் நடந்த மரணம் என்றால், இறந்தவர்களின் உடலில் துப்பாக்கி தோட்டாவின் புகைபடிய வாய்ப்பில்லை; ஆனால், இந்த 66 பேரின் உடலில் தோட்டாவின் புகை இருந்திருக்கிறது.''

''அதிரடிப்படை கூறும் ஒரு மோதல் மரணம், மாதேஸ்வரன் மலைப்பகுதியில் அதிகாலை 5.30 மணிக்கு நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணிக்கே மைசூர் ஆர்.டி.ஓ. மோதல் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. மைசூரில் இருந்து மாதேஸ்வரன் மலை 140 கி.மீ தூரத்தில் உள்ளது. அதற்குள் ஆர்.டி.ஓ. அந்த இடத்திற்கு எப்படி வர முடியும்? எனவே, இந்த 'மோதலை' போலீசாரே உருவாக்கியுள்ளனர்.''

''மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்த 66 பேரின் நெருங்கிய உறவினர்கள் கூறியவற்றைப் பற்றித் தீர விசாரிக்காமல், ஒதுக்கித் தள்ளியிருப்பது ஒன்றே, அதிரடிப்படையின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது'' எனப் பல்வேறு கோணங்களில் இருந்து, அதிரடிப் படையின் மோதல் நாடகத்தை சதாசிவம் கமிசன் அம்பலப்படுத்தியிருக்கிறது.

''ராஜேந்திரன் என்பவரது மனைவி லட்சுமியைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்து, அவரை அதிரடிப்படை பாலியல் பலாத்காரப்படுத்தியிருக்கிறது. இவரைப் போல பல பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பல பெண்களின் உடம்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய பாலியல் வன்முறை, மின்சாரத் தாக்குதலால் ஏழு பெண்கள் நிரந்தர ஊனமடைந்துள்ளர். ராஜப்பா என்பவரது மனைவியை வயதான பெண் என்றும் பாராமல் 4 அதிரடிப்படை போலீசார் அடித்தே கொன்றுள்ளனர். விசாரணை என்ற பெயரில் கூட்டிச் செல்லப்பட்ட பெண்களில் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்'' என அப்பாவி மலைவாழ் பெண்களின் மீது ஏவிவிடப்பட்ட சித்திரவதைகளும், அதிரடிப்படையின் காமவெறியும், களியாட்டங்களும் அறிக்கையில் பட்டியல் போட்டுக் காட்டப்பட்டுள்ளன.

''ஒர்க்ஷாப்'' என்று அழைக்கப்பட்ட அதிரடிப்படையின் மாதேஸ்வரன் மலை முகாம் சட்டவிரோதமான சிறையாகவும், சித்திரவதைக் கூடமாகவும் செயல்பட்டு வந்ததையும் சதாசிவம் கமிசன் அம்பலப்படுத்தியிருக்கிறது. ''அப்பாவி மலைவாழ் மக்கள் பலரை தடா வழக்கில் சேர்ப்பதற்கு முன்பாக, இந்த ஒர்க்ஷாப்பில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து ஆண்பெண் என்ற வேறுபாடின்றி, அவர்களின் உடம்பிலும், பிறப்புறுக்களிலும் கிளிப்புகளைப் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்யப்பட்டிருப்பதை கமிசனின் அறிக்கை உறுதி செய்திருக்கிறது.

''தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட அதிரடிப் படைகள் என்பது ஆயுதப் படைப் பிரிவு போன்றதுதான். அப்படைகளுக்கு போலீசு நிலையம் போலச் செயல்படக் கூடிய அதிகாரம் கிடையாது. அதாவது, அதிரடிப் படைக்கு யாரையும் கைது செய்யவும், காவலில் அடைத்து வைக்கவும் அதிகாரம் இல்லாதபொழுது, அப்படைகள் தங்களின் அதிகார எல்லைகளை மீறிச் சட்டவிரோதமாக நடந்து கொண்டுள்ளன'' என சதாசிவம் கமிசன் குற்றஞ் சுமத்தியுள்ளது.

இச்சட்டவிரோதக் காவல், கைது குறித்த கமிசனின் குற்றச்சாட்டுகளுக்கு, தமிழகப் போலீசு துறையின் இயக்குநர் மற்றும் அதிரடிப் படைகளின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தேவாரம், ''தனக்கு நாடு முழுவதும் யாரையும் கைது செய்யும் அதிகாரம் உண்டு; அதனால் தனக்குக் கீழ் பணியாற்றும் அதிரடிப் படைக்கும் கைது செய்யும் அதிகாரம் உண்டு'' எனப் பதில் அளித்தார். ஆனால், கமிசன் தேவாரத்தின் ''வானளாவிய அதிகாரம்'' குறித்த இந்தப் பதிலை ''சட்டரீதியாகச் செல்லத்தக்கதல்ல'' எனக் கூறி, ஒதுக்கித் தள்ளிவிட்டது.

வீரப்பனைத் தேடிப் பிடிக்க முடியாத அதிரடிப் படை, 121 பேரை வீரப்பன் கூட்டாளிகள் என்ற குற்றச்சாட்டின் கீழ் ''தடா''வில் கைது செய்து, மைசூர் சிறையில் அடைத்தது. ''போலீசின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதக் காவலில் அடைக்கப்பட்டு, அருவெறுக்கத்தக்க வகையில், மிருகத்தனமாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். தங்களின் சட்டவிரோதமான கைதை நியாயப்படுத்துவதற்காகவே, இவர்களைப் பொய் குற்றச்சாட்டின் கீழ் தடாவில் கைது செய்துள்ளனர்'' என சதாசிவம் கமிசன் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ''தடாவின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 121 பேரில், 38 பேரின் வழக்குகளை மாநில அரசின் தடா மறுஆய்வு கமிட்டி முறைப்படி தீர விசாரித்திருந்தால், அந்த 38 பேரும் நீண்டகாலம் சிறையில் இருந்திருக்க வேண்டியிருக்காது'' எனச் சுட்டிக் காட்டியுள்ள சதாசிவம் கமிசன், ''செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்த இந்த 38 பேருக்கும் உரிய நட்டஈடு வழங்க வேண்டும்'' என்றும் பரிந்துரை செய்துள்ளது.

அதிரடிப் படையால் ''தடா''வின் கீழ் கைது செய்யப்பட்ட 121 பேரில், 14 பேர் தவிர மீதி அனைவரும் எவ்விதக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுள் 46 பேரின் மீது தடாவை ஏவியதற்கு, அவர்கள் அதிரடிப்படையிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர, வேறு எந்த ஆதாரத்தையும் போலீசால் காட்ட முடியவில்லை. இந்த ஒப்புதல் வாக்குமூலம் கூட நம்பத்தகுந்ததாக இல்லை என்பதை சதாசிவம் கமிசன் மட்டுமல்ல, இவர்களை விடுதலை செய்த தடா நீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளது.

முமுமு
பல ஆண்டுகளுக்கு முன் போலீசின் அத்துமீறல்களை விசாரித்த ஒரு நீதிமன்றம் ''போலீசார் காக்கிச் சட்டை போட்ட கிரிமினல்கள்'' எனத் தீர்ப்பளித்தது. அது மறுக்க முடியாத உண்மை என்பது சதாசிவம் கமிசன் விசாரணையில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

அதிரடிப்படை வீரர்களைத் தூண்டிவிட்டு சதாசிவம் கமிசன் நியமிக்கப்பட்டதையே எதிர்த்து வழக்குப் போட வைத்த கர்நாடக மாநில அரசு, ''அதிரடிப்படை நடத்திய மோதல்கள் போலியானவை என்று கூற போதிய ஆதாரம் இல்லை; தடய அறிவியல் பரிசோதனைக் கூட துணை இயக்குநர் பிரபகாரன் சாட்சியம் அளிக்க, எந்தவொரு சமயத்திலும் அழைக்கப்படவேயில்லை'' எனக் கூறி சதாசிவம் கமிசன் அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது.

பாசிச ஜெயா தலைமையில் உள்ள தமிழக அரசோ, ''சதாசிவம் கமிசன் குறிப்பிடும் அத்துமீறல்கள் 199394ஆம் ஆண்டில் நடந்தவை; சட்டப்படி இந்த அத்துமீறல்களை, அவை நடந்த ஒரு வருடத்திற்குள் விசாரித்திருக்க வேண்டும்; ஆனால் சதாசிவம் கமிசனோ 1999ஆம் ஆண்டில்தான் விசாரணையை நடத்தியது. எனவே, கமிசனின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது'' எனச் சட்டவாதத்திற்குள் புகுந்து தப்பித்துக் கொள்ள முயலுகிறது.

ஈராக்கின் அபுகிரைப் சிறைச்சாலையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அமெரிக்கச் சிப்பாய்களில் ஒருசிலர் தவிர்க்க முடியாமல் தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அபுகிரைப்புக்கு இணையாக மலைவாழ் மக்களின் மீது சித்திரவதைகளை ஏவிவிட்ட அதிரடிப்படை வீரர்களுள் ஒருவர் கூடத் தண்டிக்கப்படாமல், அரசாலேயே காப்பாற்றப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழக கர்நாடக மாநில அரசுகள், அதிரடிப் படைக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெகுமதிகளை அளித்து, காக்கிச் சட்டை கிரிமினல்களுக்குக் கொம்பு சீவி விடுகின்றன. அரசு பயங்கரவாதம் என்ற சட்டபூர்வ பாசிசம் அரங்கேறி வருவதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது.

சதாசிவம் கமிசன் கூட, தன்னிடம் சாட்சியம் அளித்த 243 பேரின் வாக்குமூலங்களில், 89 பேரின் வாக்குமூலங்களைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளது. மீதியுள்ளவர்களின் வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்வதோடு, போலீசாரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி கமிசன் முன் சாட்சியம் அளிக்க வர முடியாமல் போனவர்களின் வாக்குமூலங்களையும் சேகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் அமைப்புகளால் முன்வைக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த சதாசிவம் கமிசன் அறிக்கையை, மலைவாழ் மக்கள், மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் தொடர்ச்சியான போராட்டம்தான் வெளி உலகிற்குக் கொண்டு வந்தது. இப்படிப்பட்ட மக்கள்திரள் போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டும்தான், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நட்டஈடும் கிடைக்கவும்; தேவாரம் உள்ளிட்ட அதிரடிப்படை கிரிமினல்களைத் தண்டிப்பதற்கான நிலைமையையும் உருவாக்க முடியும்.
மு ரஹீம்
நன்றி :புதியஜனநாயகம்

Thursday, January 26, 2006

புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

பி.இரயாகரன்
25.01.2006


திட்டமெதுவுமின்றி புலிகள் அன்றாடம் தாம் செய்தவற்றை, நியாயப்படுத்தி தாமே கூறுவதே புலிகள் அரசியலாகியது. திட்டமாக வெளியிடப்பட்டவை எவையும், அவர்கள் தமது சொந்த இயக்க நடைமுறையாக கொண்டது கிடையாது. அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும், அவர்களாக வெளியிட்ட சொந்த வேலைத்திட்டம் எதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது. இந்த வகையில் கட்டுரையில் சில பகுதிகளை எடுத்துக் காட்டியுள்ளேன். அன்ரன் பாலசிங்கம் எழுதிய "விடுதலை" என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் இந்த வகையில் அமைந்ததே. புலிகள் தாம் செய்ததை நியாயப்படுத்த, தம்மை மறுக்கின்ற முரணை உள்வாங்கியதே இந்த நூல். உண்மையில் புலிகளின் லும்பன் தனமான நடத்தைகளுக்கு, அரசியல் முலாம் பூசுவதே புலியின் அரசியலாக உள்ளது. பாலசிங்கமே அதன் பிதாமகன். இந்த நூலின் முன்பகுதி மீதான, சுருக்கமான விமர்சனத்தை இக்கட்டுரை அவர்களின் மக்கள் விரோத அரசியல் அம்பலம் செய்கின்றது.

தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானித்ததும், தீர்மானித்துக் கொண்டிருக்கும் புலிகளின் நடவடிக்கைகளில் அன்ரன் பாலசிங்கத்தின் தலையீடே விசித்திரமானது. எப்போதும் புலிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் அரசியல் வாதங்களை கண்டுபிடிப்பதைத் தான், அவரின் மதிநுட்பமாக புலிகள் காட்டிவந்தனர். இந்தப் போக்கே புலிகளின் இன்றைய அரசியலாகியது. லும்பன் தனத்தில் புலிகள் செய்வதை நியாயப்படுத்தும் அனைத்து வாதங்களும், இதற்குள் தான் மண்டிக் கிடக்கின்றது. புலிகளின் அன்றாட இராணுவ நடிவக்கைகளை நியாயப்படுத்தும் அரசியல், எந்த வித்திலும் மக்களின் சமூக பொருளாதார நலன் சார்ந்தவையாக என்றும் அமையவில்லை. மக்களின் சமூகப்பொருளாதார வாழ்வாதாரங்கள் சார்ந்த, அதற்கேற்ற இராணுவ வடிவங்கள் எதையும் புலிகள் என்றும் கொண்டிருக்கவில்லை. இதுவே இன்றைய எதார்த்தம்.

இந்த எதார்த்தம் ஆயிரக்கணக்கான மக்களின் தலைகளை உயிருடன் உருட்டிவிடுவதில் முடிகின்றது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், புலிக்கு இசைவானதாக்கி திரித்து விளக்குவதில் முடிகின்றது. தமிழ்மக்களின் நியாயமான போராட்டம் சிதைந்து சீரழிந்து அது என்னவென தெரியாது உருக்குலைந்து அழுகத் தொடங்கியுள்ளது. மக்களின் சமூகப் பொருளாதார நலன்கள் மறுக்கப்பட்டு, புலிகளின் நலன்கள் முதன்மைபெற்ற ஒரு அரசியல் வடிவமே வெம்பி வீங்கி காணப்படுகின்றது.

இதையே ~~விடுதலை என்ற பாலசிங்கத்தின் நூலின் முதல் கட்டுரை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. "எம்.ஜி.ஆரும் புலிகளும்" என்ற பாலசிங்கத்தின் முதல் கட்டுரை, எம்.ஜி.ஆர் என்ற நடிகனை, மக்கள் விரோதியை, காம வெறியனை, ஒரு ஊழல் பேர்வழியை நியாயப்படுத்துவதில் இருந்து அரங்கேறுகின்றது. அதே தளத்தில், தமது சொந்த கைக் கூலித்தனத்தை; சிறப்பாக எடுப்பாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த எம்.ஜி.ஆர் சினிமா என்ற விளம்பர கவர்ச்சி ஊடகம் ஊடாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்த ஒரு கைதேர்ந்த நடிகன். இவன் ஒரு மக்கள் விரோத பாசிட் கூட. தமிழக மக்களை அடக்கியாண்ட, அவர்களை சூறையாடிய ஒரு கொடுங்கோலன். இந்தக் கொடுங்கோலனை பற்றி புலிகளும், பாலசிங்கமும் கொடுக்கும் படிமமே விசித்திரமானது. பாலசிங்கம் கூறுகின்றார் "… இல்லாதோருக்கு வாரி வழங்கும் மன வளமும் இருந்தது. ஏழை மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் பூசித்தனர்… அதிசயமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதாபிமானி" இதுதான் எம்.ஜி.ஆர் பற்றிய புலிகளின் சொந்த அரசியல் மதிப்பீடு. இந்த எம்.ஜி.ஆர் மக்களுக்காக என்னதான் செய்தான். சாதியம், ஆணாதிக்கம், சுரண்டல் முதல் சாராயம் காய்ச்சி கொள்ளையடிப்பது வரை அனைத்தினதும் ஏகபிரதிநிதியாக இருந்தவன். அரசு சொத்தையும், மக்களின் சொத்துகளையும் முறைகேடாக பயன்படுத்தியவன்;. பல மக்கள் போராட்டங்களை அடக்கியொடுக்கியவன். சில துப்பாக்கி சூட்டை போராட்டங்கள் மீது நடத்தி பலரைக் கொன்றவன். பல பத்தாயிரம் மக்களை போராட்டங்களின் போது கைது செய்து சிறைகளில் தள்ளி தாலியறுத்தவன்;. எம்.ஜி.ஆர் மோகன்தாஸ்சும் தேவாரமும் இணைந்து வடஆர்காடு, தர்மபுரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்யூனிச புரட்சியாளர்கள் 21 பேரை மோதல் என்ற பெயரில் சுட்டு படுகொலை செய்த ஒரு பாசிட். இப்படி பற்பல.

இவனைத்; தான் புலிகள் ஒரு மாமனிதனாக, விடுதலை விரும்பியாக காட்டுகின்றனர். "தலைவர் பிரபாகரனது புரட்சிகரமான வாழ்வும் வீர வரலாறும் எம்.ஜி.ஆரை வெகுவாக கவர்ந்தது" என்கின்றனர். இப்படி புலிகள் ஒரு தலைப்பட்சமாக கூறுவது நிகழ்கின்றது. ஏன் இப்படி கூற முடிகின்றது என்றால் புலிகளின் குறித்த நலன் சார்ந்த நிலைப்பாட்டில் இருந்து, ஒரு மக்கள் விரோதியை மக்களின் தோழனாக காட்டுகின்றனர். புலிகளுக்கு பணமும், அவர்களின் நடவடிக்கைகளை பினாமியாக ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை மாமனிதர்களாக காட்டுவதே புலிகளின் அரசியல். இதுவே இன்றைய புலிகளின் எதார்த்தப் போக்கும் கூட. அதன் அடிப்படையில் தான் எம்.ஜி.ஆரைப் புகழ்கின்றனர்.

புலிகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக கோடிக்கணக்கில் கொடுத்த பணம், இந்திய துறைமுகத்தில் இருந்து ஆயுதங்களை கடத்திக் கொடுத்த விவகாரம், மற்றைய இயக்கங்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்து புலிகளிடம் கொடுத்த நிகழ்ச்சி போன்ற பலவே, புலிகள் எம்.ஜி.ஆர் பற்றி கொண்ட அரசியல் நிலைப்பாட்டுக்கு காரணம். எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதோ செய்தார் என்ற அடிப்படையில் புலிகள் புகழவில்லை. தமது சொந்த நலனை அடிப்படையாக கொண்டு, பொது அரசியல் நலனை திரித்து விடுவது நிகழ்கின்றது. இந்த அரசியல் வழியைப் போற்றி புகழ்வது நிகழ்கின்றது. நல்லதொரு உதாரணமாக, சிங்கள பேரினவாத கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என தமிழக மக்கள் வழங்கிய நிதியை, புலிகளின் குறுகிய நோக்கத்துக்கு முறைகேடாக எம்.ஜி.ஆர் வழங்க முற்பட்டதும், அதை புலிகள் பெற்றுக் கொண்டதுமான நிகழ்வு எதைக் காட்டுகின்றது என்றால் மக்கள் விரோதத் தன்மையின் கூட்டுப் பண்பை வெளிப்படுத்துகின்றது. இந்த மோசடிக்காகவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை உருவாக்கி, மருத்துவமனை ஒன்றை அமைக்க உள்ளதாக கூறி, உலகத்தை ஏமாற்றி நாலு கோடி ரூபா பணத்தை பெற்ற நிகழ்வையும், அந்த மோசடியையும் இந்த நூல் கூறத் தவறவில்லை. இது அம்பலமான போது, அதை திருப்பிக் கொடுத்தது ஒருபுறம் நிகழ, எம்.ஜி.ஆர் அதற்கு பதிலாக கறுப்பு பணமாக அதை வழங்கியதை இந்த நூல் சொல்லுகின்றது. இந்த மோசடிப் பணம் எங்கிருந்து எப்படி எம்.ஜி.ஆருக்கு கிடைக்கின்றது?.

ஏழைகளின் நண்பனாக நடித்தபடி மக்களின் பணத்தை கொள்ளை அடித்ததையும், சட்டத்துக்கு புறம்பாக பணமூட்டைகளின் பின்னால் பதுங்கிக் கிடந்த எம்.ஜி.ஆரின் வேஷம் அருவருக்கத்தக்கவை. இதை விமர்சனமின்றி புலிகள் புகழ்வது எதைத்தான் காட்டுகின்றது. ஆம் மக்களின் பணத்தை எப்படியும் சூறையாடி பயன்படுத்தலாம் என்ற புலிகளின் சொந்த சிந்தாந்தத்தையே நியாயப்படுத்துகின்றது. அன்று ஒரு நிதி மோசடிக்காக உருவான அதே புனர்வாழ்வுக்கழகம் தான், இன்று வரை புலிப் பினாமியமாக உலகெங்கும் அத்தொழிலை செய்கின்றது. மக்களுக்கான நிவாரணம் என்ற பெயரில் நடப்பது அப்பட்டமான ஒரு மோசடி. நூல் பெருமையாக பீற்றி ஒத்துக் கொள்வது போல், எம்.ஜி.ஆர் ஆசியுடன் தொடங்கிய மோசடி எம்.ஜி.ஆரின் வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாக இருந்தது.

எம்.ஜி.ஆரின் சமூகப் பாத்திரம் பொதுவாழ்வில் கோமாளியாகவே இருந்தது. எதை எப்படி செய்வான் என்று யாரும் கூற முடியாத ஒரு பச்சோந்தியாகவே இருந்தவன். தற்புகழ்ச்சிக்காக தனக்குத் தானே நிறைய பட்டங்களை சூட்டிக் கொண்டவன். இதைத்தான் இன்று புலிகள் செய்கின்றனர். அரசு சொத்துகளை முறைகேடாக தனிப்பட்டவர்களுக்கு தாரை வார்த்தவன். பல நடிகைகளை மிரட்டி தனது வைப்பாட்டியாகவே வைத்திருந்தவன். அதற்காகவே தனது அதிகாரத்தையும், பணப்பலத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தியவன். அவன் உருவாக்கிய வாரிசு பற்றி, மிகச் சரியாக புதியகலாச்சார இதழில் குறிப்பிட்டது போல் "ஒரு மேட்டுக்குடிப் பார்ப்பனப் பெண் என்ற முறையில் ஜெயலலிதாவிடம் குடிகொண்டிருக்கும் வர்க்கத் திமிரும் சாதிய இறுமாப்பும் அசாத்தியமானவை. ஆங்கிலக் கான்வென்டிலிருந்து ஆணாதிக்கம் கோலோச்சும் கோடம்பாக்கம் திரையுலகிற்குள் திடீரெனத் திணிக்கப்பட்டு, அங்கே ஒரு அரைக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு, எம்.ஜி.ஆரின் பாசிசக் குரூரங்களை அனுபவித்து, பின்னர் அவற்றையே தானும் உட்கிரகித்துக் கொண்டு எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கதை நெடியது." என்கின்றது. இதே குரூரங்கள் தான் எம்.ஜி.ஆரின் பண்பு.

தனக்கு பின்னால் ஒரு பொறுக்கி தின்னும் கூட்டத்தையே உருவாக்கி அதில் தன்னைத்தான் மிதப்பாக்கியவன். பெரியாரியவாதியாக கூறிக் கொண்டு, குறி கெட்ட அனைத்தையும் செய்த ஒரு ஏமாற்று பேர்வழி. மக்களுக்காக அழுவதற்காகவே தனது கண்கள் இரண்டிக்கும் "கிளிசரினை" விட்டு அழும், கைதேர்ந்த ஒரு நடிகனாகவே வலம்வந்தவன். தமிழீழப் போராட்டத்தை தனது சொந்த பிழைப்புவாத போட்டி அரசியலுக்கு ஏற்ப திறமையுடன் பயன்படுத்தியவன். அதில் புலிகள் இணைந்து கொண்ட நிகழ்வை, நியாயப்படுத்தும் அரசியல் விளக்கம் தான் பாலசிங்கத்தின் இந்தக் கட்டுரை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரமே ஏகாதிபத்திய சதி; தான். சோவியத் ஏகாதிபத்தியத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட உலகளாவிய முரண்பாட்டில், அமெரிக்கா சார்பாக இலங்கைப் பிரச்சனையில் களமிறக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். இந்திய அரசு சோவியத் ஏகாதிபத்தியத்தின் துணையுடன் இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநாட்டிய காலத்தில், அது சார்பான தமிழ் இயக்கங்களை உருவாக்கியதுடன் இருந்தவற்றை வளர்த்தெடுத்தனர். இதனடிப்படையில் அமெரிக்காவும் தனது பங்குக்கு தனக்கேற்ற குழுக்களை வளர்த்தெடுக்க முனைந்தன. இதன் போதே எம்.ஜி.ஆர் என்ற நடிகனூடாக, புலிகளுக்கு தீனிபோட்டு வளர்த்தெடுக்கப்பட்டனர். இந்த உண்மையின் ஒரு பக்கத்தை மூடிமறைத்தபடியே இந்த நூல் வெளிக்கொண்டு வருகின்றது.

புலிகள் இயக்க வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் வழங்கிய பணமும், ஆயுதங்களுமே மூலகாரணம் என்பதை இந்த நூல் ஒத்துக் கொள்கின்றது. தமிழ்மக்கள் தான் புலிகளை இந்த நிலைக்கு கொண்டு வந்தனர் என்று பின்னால் கூறுவது அபத்தமாகும். அன்னிய நிதிகளும், அன்னிய ஆயுதங்களும் தான், லும்பனான புலிகளைப் புலிகளாக்கியது. புலிகளின் அனைத்து நடவடிக்கையும் இதைத் தாண்டி நகரவில்லை. மக்களின் சமூக பொருளாதார உறவுக்கு வெளியில் இப்படிதான் புலிகள் உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டனர். அவர்களின் எடுபிடிகளாக கூட இருந்தனர். 14.05.1985 இல் அனுராதபுரத்தில் அப்பாவி மக்கள் மேலான தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர். அன்று வில்பத்தில் நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் இத் தாக்குதலை நடத்தியதன் பின்னனியில் இந்திய அரசு இருந்ததை, பின்னால் பாலசிங்கம் இந்தியாவுக்கு எதிரான பேட்டியொன்றில் குறிப்பிடுகின்றார். இந்த தாக்குதலை அந்தநேரம் புலிகள் மறுத்றுவிட்ட மறுப்பறிக்கையும், பின்னால் அதை இந்தியா சொல்லி செய்ததாக கூறியதையும் நாம் எப்படிப் சுய அறிவுடன் புரிந்து கொள்வது.

முதலில் தாக்குதலை தாம் செய்யவில்லை என்றதும், பின் அதை இந்தியா சொல்லி செய்ததாக கூறியதும் இங்கு அரசியல் நேர்மையற்ற போக்கை அம்பலமாக்குகின்றது. மறுபக்கத்தில் இந்த தாக்குதலை செய்ய புலிகள் எதை இலஞ்சமாக பெற்றனர் என்பது மர்மமாகவே உள்ளது. இப்படி சோரம் போகும் அரசியல் வழியும், பின் அதை நியாயப்படுத்தும் அரசியலும் தான் இன்று வரை புலி அரசியலாக உள்ளது. இதைத்தான் பாலசிங்கத்தின் இந்த கட்டுரை செய்கின்றது. தமிழ் மக்களின் போராட்டம் மக்கள் நலன் சாhந்ததாக அமையாத வரலாற்றுக்கு, இந்த இரண்டு பிரதான ஏகாதிபத்திய தலையீடும் முக்கியமான காரணமாகவே அமைகின்றது.

ஆனால் மக்களை ஏமாற்றவும், தம்மை மக்கள் நலன் சார்ந்ததாக காட்டவும் புலிகள் பின்நிற்கவில்லை. புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்தை உள்ளடங்கிய கொள்கை விளக்க நூலை (இது ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவந்தது.) "சோசலிச தமிழீழம் எனறே தலைப்பிடுகின்றனர். அதில் புலிகளின் அரசியல் இலட்சியம் என்ற பகுதியில் ~~தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு … அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்கின்றனர். ஆனால் அதையா இன்று அவர்கள் கொண்டுள்ளனர்? அதில் அவர்கள் தொடர்ந்தும் கூறகின்றனர் "தேசிய விடுதலை எனும் பொழுது ….ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர். அதை அவர்கள் மேலும் விளக்கும் போது "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்… " ஆட்சியாக அமையும் என்கின்றனர். மேலும் அவர்கள் விளக்கும் போது "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. … வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு… பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" இப்படி அந்த அறிக்கை நீண்டு செல்லுகின்றது.

இதை நாங்கள் சொல்லவில்லை. விடுதலைப்புலிகளின் அடிப்படையான ஆரம்ப அரசியல் ஆவணம் இப்படித் தான் சொல்லுகின்றது. இப்படித் தான் போராட்டம் அறிவிக்கப்பட்டு, அணிதிரட்டப்பட்டனர். இன்று இந்த இலட்சியத்தையே கைவிட்டுவிட்டனர். இன்று புலிகளில் உள்ள 99 சதவீதமானவர்களுக்கு தாங்கள் இப்படி ஒரு அரசியல் அறிக்கை விடட்தே தெரியாது. ஏன் பாலசிங்கத்துக்கே இது ஞாபகம் இருக்காது. மக்களின் நலன்களை கூறி இயக்கம் கட்டியவர்கள், அதை அப்படியே புதைகுழிக்கு அனுப்பினர். தமது சொந்த திட்டத்தை மட்டுமல்ல, அந்த கருத்தை கோரியவர்களையும் கூட புதைகுழிக்கு அனுப்பினார்கள். மக்கள் நலனை இந்த திட்டத்தின் ஒரு பகுதி தெளிவாக எடுத்துரைக்கின்றது. அதை கைவிட்ட அனைத்து செயல்பாடும் மக்கள் விரோதமானவையே. இன்று புலிகளின் திட்டத்தில் உள்ளவற்றையே வலியுறுத்தினால் கிடைப்பது மரணதண்டனை. புலியின் எதிரியாக, துரோகியாக, எட்டப்பனாக, கைக்கூலியாக பலவாக புலிகள் வருணிப்பது அன்றாட விடையமாகிவிட்டது. சொல்லப்போனால் முன்னைய புலிகளின் திட்டத்தை முன்னிறுத்தி போராட்டத்தைக் கோரினால் அல்லது போராடினால் அதற்கு பரிசாக கிடைப்பது மரண தண்டனைதான்;

இதனடிப்படையில் ஏற்பட்ட முரண்பாடுதான் புலிகளின் முன்னைய பிளவாகியது. அதை மறைக்க பாலசிங்கம் முனைகின்றார். அதை அவர் "இயக்கத்தின் ஒழுக்க விதிகளை மீறி ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டதால் அவர் (உமாமகேஸ்வரன்) அமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் புளாட் என்ற புதிய அமைப்பை உருவாக்கி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றார்" என்று கூறுகின்றார். உண்மையில் உமாமகேஸ்வரன் இயக்கப் பிளவில் சம்பந்தப்படவேயில்லை. உமாமகேஸ்வரன் இயக்கத்தைவிட்டு பாலசிங்கம் கூறும் காரணத்தின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருந்தவர். அவர் தனிமனிதனாகவே வெளியேற்றப்பட்டு வெளிச் சென்றவர். உமாமகேஸ்வரன் புலிகளில் இருந்தது வரை, அவர்தான் அதன் தலைவராக இருந்தவர்.

இயக்கப் பிளவு பின்னால் ஏற்பட்டது. மேற்கூறிய கோட்பாட்டின் அடிப்படையில் பிளவாகியது. இந்தப் பிளவில் சுந்தரம், நாகராஜா வாத்தி, ஐயர், நெப்போலியன் … என இருபது பேரளவில் விலகினர். இதன் பின்பு இவர்கள் கூட குறிப்பிட்ட கோட்பாட்டில் இயங்காமல், பழையபடி புலிப் பாணியில் இயங்கியதால் பலர் (சுந்தரம் போன்றவர்களைத் தவிர) விலகினர். இதன் போதும் பின்புமே உமாமகேஸ்வரனை சுந்தரம் தன்னுடன் இணைத்துக் கொண்டவர். பழையபடி புலிப்பாணியில் இயங்கத் தொடங்கியது.

இங்கு ஒரு வரலாற்றையே பாலசிங்கம் திரித்துக் காட்டுவதுடன், முதல் பிளவை அரசியலுக்கு வெளியில் ஒரு பொம்பிளைப் பிரச்சனையாக காட்டமுனைகின்றார். அதனால் ஏற்பட்ட உடைவாக காட்டுவது நிகழ்கின்றது. இதை எம்.ஜி.ஆர் என்ற பொம்பளை பொறுக்கி அங்கீகரித்தாக, பாலசிங்கம் தானாகவே கூறுகின்றார். புலிகளில் ஏற்பட்ட பிளவு அரசியல் ரீதியானது. அந்த அரசியல் மக்கள் நலனை கோரியது. ஆனால் அது தொடர்நது அப்படி இயங்க முடியவில்லை. உண்மையில் புலிகள் வெளியிட்ட "சோசலிச தமிழீழம்" என்ற அரசியல் அறிக்கையின் உள்ளடகத்தை புலிகளே சமகாலத்தில் எப்படி மறுக்கின்றனர் என்பதற்கு பாலசிங்கமே இந்த நூலில் அதை தன்னையறியாமலேயே விளக்குகின்றார்.

அவர் அதை எம்.ஜி.ஆர்க்கு கூறும்போது "விடுதலைப் புலிகள் கம்யூனிஸ்ட்டுகள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தாயகமான தமிழீழத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகின்றோம்…. ஏழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதமேந்தி போராடுகின்றோம்" என்கின்றார். கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்றால் எப்படி "சோசலிச தமிழீழம்" வரும். புலிகள் வர்க்கமற்ற சமுதாயத்தை படைக்கப் போவதாக கூறிய இயக்கம். ஆனால் தாம் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்கின்றார். ஒன்றுக்கு பின் ஒன்று முரணாகவே மக்களையும் சமூகத்தை ஏமாற்றும் ஒரு அரசியல் மோசடியைத் தவிர, வேறு எதையும் இது கூற முனையவில்லை. ஏன் நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து விடுத்த கூட்டு அறிக்கையில் "தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிச புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திர தாய்நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்" தமது இலட்சியம் என்று கூறியே பிரபாகரன் கைnழுத்திட்டார். இன்றைய அரசியல் துரோகிகளும் அன்றைய விடுதலை இயக்கமும் கூடத்தான் கையெழுத்திட்டனர். இதே சமகாலத்தில் தான் பாலசிங்கம் தாங்கள் சோசலிச இலட்சியத்தை முன்னெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்கின்றார். சாதி ஒழிப்பு, உழைக்கும் மக்களின் சுபீட்சம் என்று எதையும் பெற்றுத்தர புலிகள் போராடப் போவதில்லை என்பதையே பாலசிங்கம் இந்த நூலில் மூடிமறைத்து கூறுகின்றார். அவை மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் மோசடியான வார்த்தைப் பிரயோகங்களே என்பதைத் தான், முன்னைய தமது சொந்த அறிக்கையை மறுத்து கூறமுனைகின்றார். இப்படி நூற்றுக்கணக்கான எடுத்துக் காட்டுகளை புலிகளின் முன்னையதுக்கும் பிந்தியதுக்கும் இடையிலும், சமகாலத்திலும் எடுத்துக் காட்டமுடியும். ஒரு கட்டத்தில் இந்த மோசடியை எம்.ஜி.ஆரின் நிலையுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். "… நீங்கள் ஏழைகளின் துயர் துடைக்கத் தொண்டாற்ற வில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். எங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்" என்று புல்லரிக்கும் வார்த்தைகள் மாயாஜாலத்தை அடிப்படையாக கொண்டது. எம்.ஜி.ஆர் எதை தனது மக்களுக்கு எப்படி செய்தாரோ, அதையே பிரபாகரன் எமது மக்களுக்கு செய்ய முனைகின்றார். இதைத்தான் பாலசிங்கம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றார். தமிழகத்தின் கதியே எமது கதி என்று பாலசிங்கத்தை விட யாரும் இதை திறம்பட விளக்கமுடியாது. தமிழகத்தில் சாதியம், ஆணாதிக்கம், சுரண்டலும் கோலோச்சும் வக்கிரமே, எமது போராட்டத்தின் இறுதி முடிவு என்பதைத் தான் இது பறைசாற்றி நிற்கின்றது.

பாலசிங்கம் மற்றைய இயக்கத்தில் இருந்து தமது அரசியல் வேறுபாட்டை விளக்குவதே, தாம் அறிவித்த சொந்த இலட்சியத்துக்கு முரணாது. பாலசிங்கம் மற்றைய இயக்கத்தில் இருந்து தமது அமைப்பு வேறுபாட்டை விளக்கும் போது "சாவுக்குத் துணிந்தவர்கள். எதிரியின் கையில் உயிருடன் சிக்காதிருக்க நஞ்சுக் குப்பிகளை அணிந்திருப்பவர்கள். தமிழீழத் தாயக விடுதலை என்ற இலட்சியத்திற்க்காகத் தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாரானவர்கள். இந்த அற்புதமான பண்புகள் இலட்சிய உறுதிப்பாடும் எவையும் மற்றைய அமைப்பினரிடம் காணமுடியாது" மற்றைய இயக்கத்தில் இருந்து புலிகள் இதனடிப்படையில் வேறுபடுவதாக கூறுவது, அரசியலின் செயலாற்றல் இல்லாமையின் ஒரு வெளிப்பாடாகும். இங்கு அவர்கள் தமது சிறப்பு தகுதியாக உயிரை அர்ப்பணிக்கும் இயல்பு என்ற பண்பு, போராட வந்த அனைத்து இயக்க உறுப்பினர்களினதும் பண்பாகவே இருந்தது. இதை புலிகள் உருவாக்கவில்லை. போராட வந்த மனிதர்களிடம் அது இருந்தது. அதனால் அவர்கள் போராட வந்தனர். அதை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. புளாட்டுக்குள் நடந்த நூற்றுக்கணக்கான உட்படுகொலையின் (1983-1986) போது, உயிரைத் தியாகம் செய்யும் உன்னதமான பண்புடன், மக்களின் உயரிய நலனுக்காக அவர்கள் போராடி மரணித்தனர். இப்படி பல தளத்தில் பலர் புலிகளின் வரலாறு எங்கும், புலிகளின் மக்கள் விரோத போக்குக்கு எதிராகவும் மாண்டுள்ளனர். மக்களுக்காக போராடுவது இன்று பொதுவாக புலிசார்பு, புலியெதிர்ப்பு அரசியலில் காணமுடியாத ஒன்று. இலட்சிய மனப்பாங்குடன் போராட வந்த அனைவரும் தமது உயிரை தியாகம் செய்யும் உயர் பண்புடன் தான் போராடினர். எம்.ஜி.ஆரை அரசியலுக்கு கொண்டு வந்த தமிழன் என்ற போராட்ட மரபை எப்படி எம்.ஜி.ஆர் தனது சொந்த பிழைப்புவாத அரசியலுக்கு குழிதோண்டி புதைத்து அதில் வக்கரித்து கிடந்தானோ, அதையே புலிகளும் செய்கின்ற ஒரு வரலாற்று சாட்சியாகவே இந்த நூல் உள்ளது.
24.08.2005

Wednesday, January 25, 2006

ப.வி.சிறிரங்கன் மீதான அற்பத்தனமான தாக்குதல்

ப.வி.சிறிரங்கன் மீதான அற்பத்தனமான தாக்குதல்

மனித நேயத்தை, மனிதத்துவத்தை விரும்பும் ஒருவனுக்கு இவை நிகழ்வது உண்டு. அற்பர்கள் முதுகுக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு எறியும் அவதூறுகள், வரலாற்றின் குப்பையில் தான் வீழ்கின்றன. சிறிரங்கன் பற்றிய பதிவொன்று, மிகவும் கேடுகெட்ட வகையில் பதிவிடப்பட்டு இருந்தது. திண்ணையில் பதிவிடப்பட்ட ஒரு கட்டுரை தொடர்பான விடையமாக இருந்தது. சிறிரங்கன் திண்ணைக்கு குறித்த கட்டுரையை அனுப்பிய போது, அதில் பரமுவேலனின் பெயர் இல்லாமையை அடிப்படையாக கொண்டு, பரமுவேலனும் சிறிரங்கனும் ஒரே ஆட்கள் என்று கூறியதன் பின்னால், வக்கிரமான பதிவுகள் இடப்பட்டன.

சிறிரங்கனின் கருத்துகளை கருத்தாக எதிர்கொள்ள முடியாத அரசியல் கோழைகள் எல்லாம், இதை ஏதோ ஒரு பெரிய விடையமாக ஊதிப்பெருக்கி வம்பளந்தனர். இந்தளவுக்கும் பரமுவேலன் எந்த ஆட்சேபனையும் இதில் எழுப்பவில்லை. சிறிரங்கன் பல்வேறு விடையங்களை பற்றிச் சொந்தமாக, சொந்தப் பெயரில் எழுதுபவர். அவர் ஒன்றும் பினாமியாக பதிவிடுபவரோ, எழுதுபவரோ அல்ல. தனக்கென்ற கருத்துதளத்தை தனது சொந்த ஆளுமையுடன் எழுத முற்படுபவர். அவரின் கருத்தை கருத்தாக எதிர்கொண்டு விவாதிக்க வக்கற்றவர்கள், இணைய விவாதத் தளத்தில் வம்பளக்கவே விரும்புகின்றனர். அறிவும் நேர்மையுமற்ற, சொந்தக் கருத்து வளமற்றவர்கள், எப்போதும் உருப்போடும் மதவாதிகள் போல, துப்பாக்கியின் பலத்தை நம்பி கருத்தையே விபச்சாரம் செய்ய விரும்புகின்றனர்.

இங்கு சிறிரங்கன் தெளிவாக விளக்கிய போது, அவர் விரும்பும் கட்டுரைகளை திண்ணைக்கு அனுப்பிய போதும், திண்ணையில் சம்பந்தப்பட்டவர்கள் கட்டுரையாளரின் பெயரை வெளியிடத்தவறிவிட்டனர். இப்படியான ஒரு காரணத்தைப் பற்றி அக்கறையின்றி பதிவிட முனைந்தவர்கள் அறிவோடு நேர்மையாக எதையும் எழுத முற்படவில்லை. சம்பந்தமில்லாத வகையில் சொந்த நேர்மையீனத்தை, ஒழுங்கீனத்தை வம்பளந்தனர்.

இரண்டாவது விடையமாக அப்படித்தான் பரமவேலனும் சிறிரங்கனும் ஒரே நபர்கள் என்று வைப்போம், அதில் என்ன தவறு காண்கின்றீர்கள். ஐயா தூற்றிய புண்ணியவான்களே, ஒழுக்கவாதிகளே அதில் என்ன தவறு உண்டு? ஒருவர் பல பெயரில் தளம் வைத்திருந்தால் தேசவிரோதக் குற்றமோ? தமிழ் மணம் அப்படி கூறுகின்றதோ!

ஒன்றுக்கு மேற்பட்ட தளம் வைத்திருந்தால், ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்றில் கருத்திட்டால் நானும் தான் விமர்சிப்பேன். அப்படி இருந்தால் விமர்சிக்கலாமே ஒழிய தூற்ற முடியுமா!

இதைப் பற்றிப் பதிவிடப் போனவர்கள் அவரின் மணைவி, குழந்தைகள் எல்லோரையும் இழுத்து வைத்து விவாதிப்பதில் என்ன நேர்மை உங்களிடம் உண்டு. இங்கு அப்படி கூறுவதன் மூலம், மிரட்டும் வக்கிரம் அரங்கேறியது. பதிவுகளின் நல்லபிள்ளையாக வேஷம் போடுவதும், அனாமதேயங்களாக வேஷம் போட்டு வரும் போது தூசணம் முதல் சகல வக்கிரத்தையும் தமிழ் தேசிய மொழியில் கொட்டித் தீர்ப்பது எந்த வகையில் நேர்மையானது.

இதை புலித் தேசியத்தின் பெயரில் நிகழ்த்துவது அன்றாடம் நடக்கின்றது. தமிழ் மணம் அதை நன்றாகவே கண்டு உணருகின்றது. கருத்தால் எதிர்கொள்ள வக்கற்று, கருத்துத் தளத்தின் மீது துப்பாக்கி முனையை நீட்டியபடி, தமிழ் மணத்தில் வந்த வக்கரிப்பது தான் உங்கள் நீதியோ!

சிறிரங்கன் பல்வேறு சமூகம் சார்ந்த விடையங்களை விவாதிப்பவர். புலித் தேசியத்தை மட்டும் விமர்சித்தால் சீறிக் கொண்டு வரும் உங்கள் பின்னால் இருப்பது, உருப்போடும் மலிவு அரசியல் தான். அது தர்க்க ரீதியாக கூட பலமற்றது. சிறிரங்கனின் நேர்மையை, ஒழுக்கத்தை கேள்வி கேட்பது தவறல்ல, அதற்கு முன் அதை நீங்கள் நேரடியாக நேர்மையாக உங்களை அறிமுகப்படுத்திபடி கேளுங்கள். உங்களை நீங்கள் யார் என்று அறிமுகம் செய்தபடி கேட்பது தான் நேர்மை. அது தான் ஒழுக்கம். அதைவிடுத்து முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு தூற்றுவது தான் இன்றைய புலித் தேசியம் என்றால், அது தான் உங்கள் மனித நாகரீகமோ!

தமிழ் மணத்தில் புலித் தேசியத்தின் பெயரில் எத்தனை தூசணங்கள், எத்தனை வக்கிரங்களை அரங்கேற்றும் போது, அங்கு ஒழுக்கம் பற்றியும் நேர்மை பற்றியும் எதுவும் தெரியாத பூனைமாதிரி இருந்து பால்குடிப்பவர்கள், திடீர் என்று பாய்ந்து குதறுகின்றனர்.

குதறும் போது கூட அறிவு நேர்மை எதுவுமற்ற வக்கிரப் புத்தியைக் காட்டுகின்றனர். கார்ல் மார்கஸ் கூறியது போல் அற்பவாதிகள் சொந்தக் கருத்தற்றவர்கள் "தன்னுடைய மிகவும் முட்டாள்தனமான அற்பக் கருத்துரைகளையும், சாதாரணச் செய்திகளையும் தத்துவஞானிகளுக்கு எதிர் நிலையில் நிறுத்துவதற்குத் தனக்கு உரிமை இருப்பதாக நம்புகின்றது" சொந்த வக்கிரங்களை, தாங்கள் அன்றாடம் உருப்போடும் வழிபாட்டு நம்பிக்கையை, தமது சொந்த அறிவிலித்தனத்தை, தலையில் சுமந்து வைத்துள்ள முட்டாள் தனத்தை எல்லாம் மூட்டைகட்டி குதியம் குத்துகின்றனர்.

சிறிரங்கனின் கருத்துக்களில் விமர்சனங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர் சமூகத்தை நேசித்து எழுதுகின்றார். மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்த முனைகின்றார். அவர் சமூகத்தின் பல்துறை சார்ந்து நின்று எழுத முனைகின்றார். அவரின் மனித நேயத்தை, மனிதப்பற்றை இழிவுபடுத்துகின்ற நீங்கள், எப்போதும் எல்லாவிடையத்திலும் அக்கறைப்படுபவர்கள் அல்ல. புலித்தேசியத்தின் விசுவாசிகளாக, உருப்போடப்பட்ட மதஉபதேசங்களைப் போன்று அற்ப மனிதர்களாக மட்டும் ஏன் நீங்கள் காட்சியளிக்கின்றீர்கள்.

Tuesday, January 24, 2006

உலக வர்த்தகக் கழக

உலக வர்த்தகக் கழக(W.T.O)த்தின் ஹாங்காங் ஒப்பந்தம் :
மறுகாலனியாதிக்கத்தின் பிடி இறுகுகிறது

தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் இந்திய விவசாயமும், சிறுதொழிற்துறையும், வங்கி, காப்பீடு, கல்வி போன்ற சேவைத்துறையும் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவது, தங்கு தடையின்றி நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, இந்தியா போன்ற ஏழை நாடுகள் அனைத்திலும் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த மாற்றங்கள்தான் திணிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், ஏழை நாடுகளின் இம்மூன்று துறைகளையும் ஒரே அடியில், முற்றிலுமாகத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, ஏகாதிபத்திய நாடுகள் உலக வர்த்தகக் கழகத்தின் மூலம் முயன்று வருகின்றன.

கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் 2001ஆம் ஆண்டு நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் நான்காவது அமைச்சர்கள் மாநாடு தொடங்கியே, இத்துறைகள் குறித்து உலக வர்த்தகக் கழகத்தில் ஓர் உடன்பாட்டுக்கு வர, ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகின்றன. ஏழை நாடுகளின் ஆளும் கும்பலுக்குச் சில சலுகைகளைக் கொடுப்பதன் மூலம், உடன்பாட்டைச் சாதித்துவிட ஏகாதிபத்திய நாடுகள் முயன்று வருகின்றன. இந்தச் சதித் திட்டத்திற்கு உலக வர்த்தகக் கழகம் சூட்டியுள்ள பெயர்தான் ''தோஹா வளர்ச்சி சுற்று பேச்சுவார்த்தை!''

இந்த நோக்கத்தை மையமாக வைத்து, மெக்சிகோ நாட்டில் உள்ள கான்கன் நகரில் 2003ஆம் ஆண்டு உலக வர்த்தகக் கழகத்தின் ஐந்தாவது அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டிற்கு எதிராக உலகு தழுவிய அளவில் எழுந்த எதிர்ப்பாலும்; ஏழை நாடுகளைப் பிரித்தாளும் ஏகாதிபத்திய நாடுகளின் சதி வெற்றி பெற முடியாமல் போனதாலும்; ஏழை நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் எதிர்பார்த்த சலுகைகள், ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து கிடைக்காததாலும் இந்த ஐந்தாவது மாநாடு தோல்வியில் முடிந்தது.

இதன்பின், 2004 ஜூலையில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் கூட்டத்தில் ''தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சுவார்த்தைகள்'' குறித்து, ஏகாதிபத்திய நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையே ஓர் சமரச உடன்படிக்கை ஏற்பட்டது.

இதன்படி, அரசாங்கம் நடத்தும் ஏலங்களில் பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களைப் போல கலந்து கொள்ளும்படி, ஏழை நாடுகளின் அரசாங்கக் கொள்முதல் கொள்கையை மாற்றியமைப்பது

ஏழை நாடுகளின் எந்தத் தொழிலிலும் பன்னாட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் மூலதனம் போடுவதற்கு முழுச் சுதந்திரம் அளிப்பது

ஏழை நாடுகளின் தொழிற் போட்டி சட்டத்தை மாற்றியமைப்பது ஆகிய அம்சங்களைப் பேச்சு வார்த்தையில் இருந்து விலக்கிக் கொள்வது என்றும்; விவசாயம், தொழிற்துறை காப்பு வரிகள், சேவைத் தொழில் குறித்து மட்டும் பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இச்சமரச ஏற்பாட்டின் பின், ஹாங்காங் நகரில் டிசம்பரில் மாதம் இரண்டாவது வாரம் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் ஆறாவது அமைச்சர்கள் மாநாட்டில், இந்த அம்சங்கள் குறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தங்களின் வேளாண் பொருட்களுக்குக் கொடுத்து வரும் ஏற்றுமதி மானியத்தை 2013ஆம் ஆண்டோடு நிறுத்திவிட வேண்டும்.

வேளாண் பொருட்கள் ஏழை நாடுகளில் அளவுக்கு அதிகமாக இறக்குமதியாகும் பொழுது, அல்லது அந்நாடுகளின் வேளாண் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும் பொழுது, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள், வேளாண் பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதித் தீர்வையை உயர்த்திக் கொள்ளலாம்.

தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள், தீர்வைகளைக் குறைப்பதில் ஏழை நாடுகளுக்குச் சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக, குறிப்பிட்ட சில உற்பத்திப் பொருட்களை, தீர்வை குறைப்பு வட்டத்துக்குள் கொண்டு வராமல் இருக்கும் சலுகை ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்.

இவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து அடுத்த ஆண்டிற்குள் முடிவு எடுக்கப்படும். தாவர வகைகள், நுண்ணுயிர்களின் மீது காப்புரிமை கோருவது; சேவைத் தொழிலைத் தாராளமயமாக்குவது குறித்து ஏழை நாடுகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என இந்த ஹாங்காங் அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஹாங்காங் அறிக்கை உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ள 149 உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பாக உலக வர்த்தகக் கழகத்தில் நடந்த விவாதங்களைக் காட்டி, உலக வர்த்தகக் கழகத்தை ஜனநாயக அமைப்பாகச் சிங்காரிக்கிறார்கள். ஆனால், ஏகாதிபத்திய நாடுகள் விவசாயத்திற்குக் கொடுத்துவரும் ஏற்றுமதி மானியத்தை 2010ஆம் ஆண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஏழை நாடுகளின் சாதாரண கோரிக்கையைக்கூட ஏகாதிபத்திய நாடுகள் விவாதத்தின் பொழுது ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டன.

ஐரோப்பிய யூனியன், தனது பொது விவசாயக் கொள்கையை 2013ஆம் ஆண்டில் பரிசீலிக்கும் வரை, மானியக் குறைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்திருந்தது. அமெரிக்கா, 2008 தொடங்கி 2013க்குள் தனது ஏற்றுமதி மானியத்தில் 53 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக, ''உலக வேளாண் வணிகத்தில் துணிச்சலான சீர்திருத்தங்கள்'' என்ற திட்டத்தில் அறிவித்திருந்தது. இதன்படிதான், ஏற்றுமதி மானியத்தை நிறுத்திக் கொள்ளும் இலக்காக 2013ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியன், கடந்த 200203ஆம் ஆண்டில் மட்டும் தனது நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், விவசாய கம்பெனிகளுக்கும் கொடுத்துள்ள மொத்த மானியம் 3,60,000 கோடி ரூபாய். இதில், ஏற்றுமதிக்காக கொடுக்கப்பட்ட மானியம் 15,750 கோடி ரூபாய்தான். அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் விவசாயத்திற்குக் கொடுத்துவரும் பல்வேறு விதமான மானியங்களில், 5 சதவீதம் கூடப் பெறாத இந்த ஏற்றுமதி மானியத்தை மட்டும்தான், 2013ஆம் ஆண்டில் நிறுத்திக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளன. மலையைக் கிள்ளி எலியைப் பிடித்த கதையாக, இந்த அற்பமான சலுகைதான் உலக வர்த்தக கழகத்தைச் சேர்ந்த 125 ஏழை நாடுகளுக்குக் கிடைத்திருக்கிறது.

அமெரிக்கா, தனது நாட்டு பருத்தி விவசாயிகளுக்குக் கொடுத்துவரும் மானியத்தை மட்டும் 2008ஆம் ஆண்டு முதல் நிறுத்திக் கொள்வதாக, இம்மாநாட்டில் டாம்பீகமாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் இந்தப் ''பெரிய மனதால்'' பலன் அடையப் போவது நான்கே நான்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதி வணிகர்கள்தான்.

இது ஒருபுறமிருக்க, உலக வர்த்தகக் கழகத்தில் எவ்வளவுதான் சலுகைகள் வழங்கப்பட்டாலும், 40 மிகவும் வறிய ஏழை நாடுகளுக்கு, எந்தவொரு பலனும் கிட்டப் போவதில்லை என உலக வங்கியே வெளிப்படையாகக் கூறியிருக்கிறது.

உண்மை இப்படியிருக்க, தாராளமயத்தின் ஆதரவாளர்களோ, இந்த மாநாட்டு அறிக்கை ஏழை நாடுகளின் விவசாயிகளுக்கு சொர்க்க வாசலையே திறந்து விட்டதைப் போலப் பீற்றிக் கொள்கிறார்கள். ''சமனற்ற போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்த கட்டாயத்தில் இருந்து இந்திய விவசாயிகள் தப்பித்து விட்டதாகவும்; அவர்கள் ஏற்றுமதி செய்வதற்குப் புதிய சந்தைகள் கிடைத்திருப்பதாகவும்'' இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

தாராளமயத்திற்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்ய முடியவில்லையே என்று கவலைப்பட்டா பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள்? ஒரிசாவையும், மகாராஷ்டிராவையும் சேர்ந்த பழங்குடி இன மக்களும், அவர்களின் குழந்தைகளும் ஒருவேளை சோறுகூடக் கிடைக்காமல் பட்டினியால் செத்த பொழுது, அவர்களுக்கு ரேசன் அரிசியை இலவசமாகத் தர மறுத்தது, மைய அரசு. அதேசமயம் வெளிநாடுகளுக்கு மானிய விலையில் அரிசியையும் கோதுமையையும் ஏற்றுமதி செய்தது. அந்நியச் செலாவணிக்காக நடந்த அந்த வியாபாரத்தை நியாயப்படுத்துபவர்களால் மட்டுமே, ஹாங்காங் அறிக்கையைக் கொண்டாட முடியும்.

தாராளமயத்தின் பின் விவசாயத்தில் நுழைந்துள்ள ஐ.டி.சி. போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள்; ஏற்றுமதிக்காகவே விவசாயம் செய்யும் புதுப்பணக்கார விவசாயிகள் இவர்களுக்குத்தான் ஹாங்காங் அறிக்கை இலாபகரமானதாக இருக்குமேயொழிய, கந்துவட்டிக்காரனிடம் கடன்பட்டு விவசாயம் செய்யும் சிறிய நடுத்தர விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பலனும் கிட்டப் போவதில்லை.

உலக வங்கியின் கட்டளைப்படி, கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும், விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியம் படிப்படியாக வெட்டப்பட்டு, ஏதோ பெயரளவிற்குத்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. விவசாய மானியம் என்பதே கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்ட நிலையில், அதில் இனியும் வெட்டுவதற்கு மிச்சம் எதுவும் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில்தான், இதுவரை மானியத்தை வெட்ட மறுத்துவந்த அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் 2013இல் ஏற்றுமதி மானியத்தை நிறுத்தும்பொழுது, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் மானியத்தைக் குறைக்க வேண்டியதில்லை என்ற ''சலுகை'' வாரி வழங்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பே, இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, 1,429 வேளாண் பொருட்களை, எங்கிருந்து வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்ற ''சீர்திருத்தம்'' நம்நாட்டில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தத் தாராள இறக்குமதி, ரப்பர், தேயிலை, காபி, பருத்தி, தென்னை, எண்ணெய் வித்துக்கள், பழங்கள், பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பல இலட்சக்கணக்கான விவசாயிகளைப் போண்டியாக்கி, அவர்களை விவசாயம் செய்ய முடியாமல் முடக்கிப் போட்டு விட்டது.

விவசாயத்திற்கு அடுத்து மிகப் பெரும் வேலைவாய்ப்புகளை வழங்கிவந்த சிறு தொழிற்துறைக்குக் கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளும், பாதுகாப்பும் தாராளமயத்தின் பின் நீக்கப்பட்டதால், இந்தியாவெங்கும் பல இலட்சக்கணக்கான சிறு தொழில்கள் மூடிக் கிடக்கின்றன. இப்படி விவசாயமும், சிறு தொழில் துறையும் அரசால் கைவிடப்பட்டு, அழிக்கப்பட்ட பிறகு, தாராள இறக்குமதியில் இருந்து இத்தொழில்களைப் பாதுகாக்க உலக வர்த்தகக் கழகத்தால் சலுகைகள் வழங்கப்படுவது குரூர நகைச்சுவையாகத்தான் இருக்க முடியும்!

அதனால்தான், இந்த மாநாட்டை எதிர்த்து ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட விவசாயிகளும், உழைக்கும் மக்களும், ''உலக வர்த்தகக் கழகம், மரணத்தை ஏற்படுத்தக் கூடிய பறவைக் காய்ச்சலைவிட மிகவும் அபாயகரமானது'' என முழக்கமிட்டார்கள்.

வெறும் மூங்கில் கழிகளைக் கொண்டு ஹாங்காங் போலீசாரோடு மோதிய தென்கொரிய நாட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ''நாங்கள் தீவிரவாதிகள் கிடையாது. எங்களின் வாழ்க்கை எப்படிச் சீரழிந்து போய்விட்டது என்பதைக் காட்டுவதற்காகவே இங்கே வந்திருக்கிறோம்'' என்றார்.

ஹாங்காங் நகரத் தெருக்களில் உலக வர்த்தகக் கழகத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள், சலுகைகள் கேட்டோ, அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளைத் திறந்துவிடக் கோரியோ போராடவில்லை. மாறாக, ஒரு மோசமான ஒப்பந்தத்தைவிட, ஒப்பந்தம் போடாமல் கலைவதே மேலானது என்று தான் அவர்கள் கோரினார்கள்.

''தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சு வார்த்தையின் தலையெழுத்து முடிந்துவிட்டது'' எனக் கை கழுவி விடப்பட்ட நிலையில், அதற்கு ஹாங்காங் ஒப்பந்தம் உயிர் ஊட்டியிருக்கிறது. உலக வர்த்தகக் கழகம் உருவாக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்த உருகுவே சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு இணையாக, தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சு வார்த்தை கருதப்படுகிறது. எனினும், இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே, ஹாங்காங் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறது, நயவஞ்சக காங்கிரசு கும்பல். இந்திய நாடாளுமன்றம், ஏகாதிபத்தியங்கள் ஆட்டிப் படைக்கும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தான் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாயிருக்கிறது.

காங்கிரசு கூட்டணியை முட்டுக் கொடுக்கும் போலி கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் ஹாங்காங் மாநாடு குறித்து வர்த்தக அமைச்சர் கமல்நாத்துக்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டு, இன்னொருபுறம் அதை எதிர்த்து அறிக்கை போர் நடத்தும் பித்தலாட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகளுக்கோ, உள்ளூர் பொறுக்கி அரசியலைவிட, ஹாங்காங் ஒப்பந்தம் ஒன்றும் முக்கியமான தலைபோகும் விசயமாகத் தெரியவில்லை.

1999ஆம் ஆண்டு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் மூன்றாவது அமைச்சர்கள் மாநாடு தொடங்கியே, உலக வர்த்தகக் கழகத்திற்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும், போலி கம்யூனிஸ்டுகள், தன்னார்வக் குழுக்கள், பின் நவீனத்துவவாதிகள், அராஜகவாதிகள் என்ற வானவில் கூட்டணியால்தான் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

''இந்த உலகம் விற்பனைக்கு அல்ல'' போன்ற கவர்ச்சிகரமான ஜனரஞ்சகமான முன் வைத்து இப்போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், உலக வர்த்தகக் கழகம் ஏழை நாடுகள் மீது திணிக்கும் மறுகாலனி ஆதிக்கத்திற்கான தீர்வை, இந்த ஏகாதிபத்திய கட்டமைப்பிற்குள்ளேயே இவை தேடுகின்றன. இதன் காரணமாகவே, ஏழை நாட்டு விவசாயிகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டி நடத்தப்படும் இந்தப் போராட்டங்கள், ஒரு அடையாள எதிர்ப்பு என்பதைத் தாண்டி வளர்த்துச் செல்லப்படுவதில்லை. இது மட்டுமின்றி, ஏழை நாட்டு மக்களின் மறுகாலனி ஆதிக்கத்திற்கான எதிரான கோபத்தை மழுங்கடிக்கும் பாதுகாப்பு ''வால்வு''களாகவும் இப்போராட்டங்கள் மாறிவிடுகின்றன.

இதற்கு மாற்றாக, ''சோசலிசமே ஒரே தீர்வு'' என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டிப் போராடும் பொழுதுதான், உலகமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க முடியும்.
மு செல்வம்
நன்றி புதியஜனநாயகம்

Friday, January 20, 2006

இணங்க வைக்கும் பாலியல் வன்முறை

இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும், இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்

பி.இரயாகரன்
18.01.2006

பாரிசில் ஒரு பெண்ணை இணங்க வைக்கும் பாலியல் வன்முறை முயற்சி ஒன்று சந்திக்கு வந்துள்ளது. அதுவும் ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண்ணியம் பேசிய ஒருவரால், தலித்தியம் பேசிய ஒருவரால் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. அதுவும் புலம்பெயர் இலக்கிய வட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது. ஆனால் இதன் எதிர்வினையோ உப்புச்சப்பற்றது. ஏதோ கடமைக்கு கண்டிப்பதைத் தாண்டி, எதையும் இது வெளிப்படுத்தவில்லை. இந்தளவுக்கு சம்பந்தப்பட்ட அரவிந் அப்பாத்துரையை யாரோ ஒரு வழிப்போக்கன் போன்ற பாணியில், புலம்பெயர் இலக்கிய உலகம் கருத்துரைத்துள்ளனர். மானத்தை இழந்தவர்கள் எப்படி செயல்படுவார்களோ அப்படி ஒரு எதிர்வினை.

புலம்பெயர் இலக்கியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலரும், தம்மை பெண்ணியல்வாதிகளாகவும், முற்போக்கு அரசியல்வாதிகளாகவும், தலி;த்தியல்வாதிகளாகவும், பலவாகவும் பல்வேறு வேஷம் போடுபவர்கள் பலரும் சேர்ந்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன் முழுமை

அர்விந் அப்பாதுரையின் பாலியல்...

தோழிகளே, தோழன்களே!

இந்த ஆணாதிக்க சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஒவ்வொரு மூலைகளிலும் ஒவ்வொரு கணங்களிலும் பெண்களின்மீதும் குழந்தைகள்மீதும் பாலியல் அத்துமீறல்களும் பாலியல் வன்முறைகளும் வதைகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு புறத்தில் அரசியல், பொருளியல் அதிகாரங்கள், சாதி ஆதிக்கம், இன மேலாண்மை, ஆயுதங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இப் பாலியல் வதைகள் நிகழ்த்தப்பட்டால், மறுபுறத்தில் சமூக சேவை மற்றும் அகதிகளுக்கு உதவி என்னும் முகமூடிகளுடன் இப்பாலியல் வதைகள் தொடர்கின்றன.

தமிழ்-பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரும் சட்ட ஆலோசரும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரும் 13, Rue de aqueduc, 75010 Paris, France என்ற முகவரியில் தனது மொழிபெயர்ப்பு அலுவலகத்தை நடத்தி வருபவருமான அர்விந் அப்பாதுரை தொடர்ச்சியாக பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறார் என்பதை உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

அர்விந் அப்பாதுரையின் பாலியல் அத்துமீறல்களின் உச்சக் கட்டமாக 26.12.2005 அன்று இரவு 8.30 மணியளவில் அவரின் அலுவலகத்துக்கு மொழிபெயர்ப்பு உதவி கோரிச் சென்ற பெண்ணொருவர் மீது அவர் பாலியல் வன்முறைக்கு முயற்சித்துள்ளார். 15 நிமிடப் போராட்டத்திற்குப் பின்பு அப்பெண் அவரிடம் இருந்து தப்பித்து வந்ததுடன், இக்கொடுமையை அப்பெண் எமது தோழிகள் இருவர் மூலமாக எங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

தனது மொழிபெயர்ப்பாளர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தொடர்ச்சியாக இவ்விதமான பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்தி வரும் அர்விந் அப்பாதுரையை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் நாங்கள் தயாராகவிருக்கிறோம். இக் கொடுஞ்செயல் குறித்து அர்விந் அப்பாதுரையின் சக மொழிபெயர்ப்பாளர்களும் நமது கலை இலக்கிய நண்பர்களும் சமூக அக்கறையாளர்களும் அர்விந் அப்பாதுரைக்கு தொடர்ச்சியான கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டுமெனக் கோருகிறோம்.

இக் கண்டனத்தில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் உங்களின் பெயர் இணைப்போடு பின்வரும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்."

இதன் கீழ் பலர் கையெழுத்திட்டுள்ளனர். நீண்ட இழுபறியூடாக, வாதப்பிரதிவாதங்களுக்கு ஊடாக, சிலர் கையெழுத்திட மறுத்த நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. சரி பேப்பரில் முண்டுவிழுங்கி புரட்சி செய்த நீங்கள், நடைமுறையில் இதை எப்படி எதிர் கொண்டீர்கள்.


ஏன் இதை பொலிசில் முறையிடவில்லை. சட்டப்படி இதை ஏன் நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லவில்லை.

சம்பந்தப்பட்ட நபரின் அலுவலகத்தின் உள்ளும், வெளியிலும் ஏன் ஒரு போராட்டத்தை நடத்தவில்லை. அத்துடன் சம்பந்தப்பட்டவர் அகதி அந்தஸ்து வழங்கு அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராக இருப்பதால், அங்கு ஏன் ஆர்ப்பாட்டத்தைச் செய்யவில்லை.


பாரிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு இந்த விடையத்தை (உதாரணமாக துண்டுப்பிரசுரம்) ஏன் எடுத்துச் செல்லவில்லை.


நீங்கள் ஒன்றாக கூடிக் குடித்து கூத்தடித்து கட்டிப்பிடித்து உருண்ட திரிந்த அரசியல் சீராழிவை, ஏன் நீங்கள் சுயவிமர்சனம் செய்யவில்லை.


சம்பந்தப்பட்ட நபர் முன்பும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிந்தும், ஏன் முன்பே இதை அம்பலம் செய்து அவருடன் இருந்த அரசியல் இலக்கிய மற்றும் கூடிக் குடிக்கும் உறவை முடிவுகட்டவில்லை.


இது போன்ற நபர்கள் புலம்பெயர் இலக்கிய உலகில், கொசுக்களாக உள்ள நிலையில், அதை இனம் கணமறுத்து கூட்டாக நீங்கள் ஒப்பமிட்டது ஏன்?




இப்படி பல கேள்விகள் இதன் பின் தொங்கிக் கிடக்கின்றது. இந்த கண்டன அறிக்கை சாதாரணமாக வெளியிடுவது போன்ற உள்ளடகத்தில் உள்ளது. இதை தமிழர்கள் எல்லோரிடமும் கேட்டிருந்தாலும், அவர்களும் கையெழுத்திட்டிருப்பார்கள்;. இதில் இருந்து மாறாக இலக்கியவாதிகள் மட்டும் கையெழுத்திடும் அளவுக்கு, இதில் விசேடமாக எதுவும் இருக்கவில்லை. ஆனால் இலக்கியவாதிகள் மட்டும் கையெழுத்திட்டனர். அதையும் ஒரு இணையத்தில் மட்டும் போட்டனர். இப்படிச் செய்ததன் மூலம் தம்மைத்தாம் புனிதமாக்கிக் கொண்டனர். நகைச்சுவையிலும் நகைச்சுவை. விடையத்தை அவருடன் தொடர்புடைய மக்களுக்கு மறைத்தனர். அத்துடன் அரவிந் அப்பாத்துரை இப்படி செய்ல்பட்டதற்கான சமூக காரணத்தை ஆராய்வதை மிக திட்டவட்டமாக மறுத்தனர்.

பாரிசில் நிதர்சினி என்ற குழந்தையை கற்பழித்து கொன்ற போது கண்டித்தவர்கள் யார்? யாழில் தரிசினி கற்பழிக்கப்பட்ட போது கண்டித்தவர்கள் யார்? அனைவரும் ஆணாதிக்கவாதிகள் தான். அங்கும் கண்டனம். இங்கும் அதே கண்டனங்கள். இயல்பான ஆணாதிக்க சமூக அமைப்பில், இதை ஆணாதிக்கவாதிகளே கண்டிக்கின்றனர். இது ஒரு விசித்திரமானது தான். இந்தியாவின் மலிவு வர்த்தக இதழ்களை வாசிக்கும் இலக்கிய வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை கண்டிக்கின்றனர். ஆனால் அந்த சஞ்சிகை ஆணாதிக்க வக்கிரத்தை உருவேற்று உள்ளடகத்தில் வெளிவருகின்றது. இதுவே இந்திய சினிமா. கண்டனங்கள் பொதுவான ஆணாதிக்க ஒட்டத்தில் அதன் போக்கில் வெளிவருகின்றன. அதையே இவர்கள் இலக்கியம் என்பார்கள். அர்விந் அப்பாத்துரையின் கதைகளை இவர்கள் வெளியிட்ட போது, அதன் உள்ளடக்கம் அப்படித்தான் இருந்தது.

இவர்கள் முதலில் எதை மறைக்க முனைகின்றனர். அர்விந் அப்பாத்துரையுடன் கொண்டிருந்த உறவை காட்டிக் கொள்வதை மறுக்கின்றனர். பாரிஸ் இலக்கிய சந்திப்பில் குஷ்புவுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவந்த போது, அதை கொள்கையாலும் நடைமுறையாலும் ஆதரித்த இரத்த உறவையும் திடீரென மூடிமறைக்கின்றனர். இவர்கள் தமக்கு இடையில் கொண்டிருந்ததே ஒரு இலக்கிய அரசியல் உறவாகும். இதையே இவர்கள் முதலில் மூடிமறைக்கின்றனர். யாழ் பல்கலைக்கழக பேராசிரியரும் பொங்கு தமிழ் ஊடக வன்முறையைத் தூண்டும் குழுவில் தலைமையிலும் இருந்த கணேசலிங்கம், ஒரு குழந்தையை கற்பழித்து வந்தது நிகழ்ச்சி, குழந்தையின் தற்கொலை முயற்சியினால் அது தெரிந்தபோது புலிகள் எதைச் செய்தனரோ அதையே இவர்கள் செய்கின்றனர்.

அவருடன் ஒன்றாக நாள் கணக்காக கூடிக்குடித்து இலக்கியம் செய்த அந்த அரசியல் விபச்சாரத்தை இவர்கள் சுயவிமர்சனம் செய்யவில்லை. ஏன் பாலியல் பற்றி கூடிக் கதைத்து இதை நியாயப்படுத்தும் தர்க்கவாதத்தை இவர்கள் சுயவிமர்சனம் செய்வில்லை. சம்பந்தபட்ட நபர் தனது இணங்க வைக்கும் நடத்தை சார்ந்த வன்முறை உள்ளடங்கிய முயற்சியை நியாயப்படுத்துவதாக அறிகின்றோம். இவர்களின் அரசியல் ரீதியாக, இலக்கியம் ரீதியாக, இவர்களின் அடிப்படை கோட்பாட்டு ரீதியாக அது சரியானது. இங்கு இணங்க வைத்தல் என்ற எல்லைக்குள், இந்த இலக்கிய உலகம் அதை நியாயப்படுத்துகின்றது.

சித்தாந்த ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக இணங்கவைக்கும் பாலியலை இவர்கள் அங்கீகரித்து, அதற்குள் விபச்சாரம் செய்கின்றனர். இதனால் தான் அவரின் பாலியல் வக்கிரத்தை இலக்கியம் என்ற பெயரில், பிரசுரித்து அதை கொண்டாடியவர்கள். இன்றும் அதை விமர்சிக்கவில்லை. இந்த இணங்கவைக்கும் வாழ்க்கையை கதையாகவே இவர் எழுதியவர்.

நான் சமர் 25 இல் இக்கதையை விமர்சித்து இந்த ஒழுக்ககேட்டின் விளைவைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று இவர்கள் பெயருக்கு கண்டனம் விடுகின்றனர். அன்று நான் "மக்களின் எதிரிகளை இனங் காண்போம்" என்ற தலைப்பில் அதை எழுதியிருந்தேன். அதை அன்று நான் "இருண்ட- இருள் வெளி" யில் -அனுபவம் தனிமை- என்ற சிறுகதையில், அர்விந் அப்பாத்துரையின் வக்கிரத்தைப் பார்ப்போம்.

" சினிமா எக்ஸ்பிரஸ் என்ற திரையுலக வாழ்க்கையை விமர்சனம் செய்யும் பத்திரிகையை புரட்டிப் பார்த்தால் கமல், ரஜனி, சிவாஜி, பாரதிராஜா, மற்றும் புதுமுகங்களின் புகைப்படங்களாவது அவள் கவனத்தை ஈர்த்தன. என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் படிக்க அவளுக்கு ஆர்வமும் இல்லை, இஸ்டமும் இல்லை. .......... -ஏன் எனக்கு சத்தமாகப் பேசி நித்திரையைக் குழப்புபவர்களை (பக்கத்து அறையில்) போய் பார்த்து வாயை மூடுங்கள் என்று சொல்ல துணிச்சலில்லை- தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் -அடுத்தமுறை அப்படி நடக்கும் போது, நிச்சயமாக போய்ச் சொல்வேன்.- அப்படி பேசிக் கொண்டிருக்கும் நபர்கள் கெட்டவர்களாக இருந்து தன்னை பலாத்காரம் செய்து விட்டார்கள் என்றால்? விஜிக்கு பயமாக இருந்தது..... விஜியால் தூங்க முடியவில்லை. அத்துடன் டீவியில் பார்த்த ஆபாசக் காட்சிகள் வேறு அவளுக்கு காம உணர்ச்சியைக் கிழப்பிவிட்டிருந்தன. திடீர் என விசித்திரமான எண்ணங்கள் விஜியின் மனதில் தோன்றின. பக்கத்து ரூமில் பேசிக் கொண்டிருக்கும் மூன்று பேரோடும் உடலுறவு கொள்ள வேண்டும் எனும் ஆசை அவள் மனதில் தோன்றியது. எப்படி அவர்களைக் கேட்பது? மெல்ல கட்டிலில் இருந்து எழுந்தாள் கதவை திறந்து பக்கத்துக் கதவைத் தட்டினாள். அந்த அறை ஒரே புகைமூட்டமாக இருந்தது. ~என்ன வேண்டும் பெண்ணே?- என்றான் அவன். -உங்கள் மூன்று பேருடனும் உடலுறவு கொள்ள வேண்டும்- எனக் கூற விஜிக்குத் தைரியமில்லை"

என்று தொடர்கிறது கதை. இதை இலக்கியம் என்ற பெயரில், இணங்கிப் போகும் விருப்பம் என்ற பெயரில் அன்று இந்த விபச்சாரத்தை இருள்வெளியில் தொகுத்திருந்தனர். முதலில் பலாத்காரம் செய்துவிடுவார்கள் என்ற நினைப்பு, பின்னால் அவளின் விருப்பமாகவே வெளிப்படுகின்றது.

இங்கு எப்படி காமம் உணர்ச்சி வருகின்றது. தொலைக்காட்சி, நடிகர்களின் கவர்ச்சி இதைத் தூண்டுகின்றது. பக்கத்து அறையில் இருந்த மூன்று பேரும் கற்பழித்துவிடுவார்கள் என்ற பயம், அடுத்த நிமிடமே மூன்று பேருடனும் உறவு கொள்ள வேண்டும் என்று இணங்கிப் போகும் வக்கிரத்தையே, இலக்கியம் என்ற பெயரில் இந்தப் பன்றி அன்று எழுதியது. இலக்கியம் என்ற பெயரில் அதை அன்று தொகுத்தவர்கள், அதை வாசித்து வாழ்வை அதற்குள் இட்டுச் சென்றவர்கள் இன்றும் இலக்கியத்தின் பெயரில் கையெழுத்திட்டுள்ளனர்.

படத்தை பார்த்து காமத்தில் காமம் கொள்ளும் வக்கிரத்தை சொன்னதையிட்டு, பெண்கள் அன்றும் இன்றும் மௌனமாக அங்கீகரித்தனர். உங்கள் எழுத்துக்கள், சந்திப்புகள், அதற்குக் கூடிக் குலாவி சுகிக்கப் போன போதே, அர்விந் அப்பாத்துரை இணங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டது தவறல்ல. குற்றவாளி அரவிந் அப்பாத்துரையல்ல. அவரை வழிகாட்டிய உங்கள் கோட்பாடுகளும், இலக்கிய விபச்சாரமும் தான் அதைத் தூண்டியது என்பது வெள்ளிடைமலை.

அன்று அப்பெண் மூன்று ஆணுடன் உடலுறவு கொள்ள எண்ணினாள் என்றால், நீலப்படக் காட்சியை அங்கீகரித்துள்ளது. அன்று அப்பெண் நீலப்படம் பார்த்ததுடன் ரஐனி, கமல் படத்தைப் பார்த்து ஏற்பட்ட அந்த வக்கிரமான காம உணர்ச்சியை இலக்கியத்தின் பெயரில் அன்று இவரால் கூறமுடிந்தது. பெண்கள் மீதான கொச்சைப்படுத்தலை, பெண்கள் தன்மானம், முதுகெலும்பு அற்றவர்களாக, பெண்களை நீலப்பட ஆணாதிக்க செக்ஸ் பிண்டமாக வருணித்து அலட்சியப்படுத்தியது. இந்த ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்திய போது அவர்களுக்கு அன்று கோபம் வந்தது. இலக்கிய இரசனை தெரியாதவன் என்றீர்கள்! பெண்ணின் சுதந்திரத்தில் தலையிடுவது என்றீர்கள்.

அன்றும், இன்றும் அப்படியே அவர் நடைமுறையில் செய்ய ஆசைப்படுகின்றார். அப்படியிருக்க இலக்கிய ஜம்பவான்களே, இப்ப ஏன் வேப்பிலை கட்டிக் கொண்டு சாமியாடுகின்றீர்கள். உங்கள் இலக்கியப் படி நடைமுறையில் இது தவறா? அவர் முயற்சி செய்து பார்த்திருக்கின்றார். நீங்கள் இதுவரை செய்யாததையா, அவர் புதிதாக செய்தார். உங்களில் எத்தனை பேர் இதையே தொழிலாக கொண்டவர்கள் உள்ளனர்! உங்களில் எத்தனை பேர் விபச்சாரிகளிடம் செல்லவே, இந்தியா முதல் பல நாடுகளுக்கு செல்லுகின்றீர்கள். மானம் கெட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து இலக்கியத்தின் பெயரில் கண்டிக்கின்றனர். நல்ல நகைச்சுவைதான். நீங்கள் அன்றாடம் நடைமுறையிலும் இலக்கியத்திலும் செய்ய முனைந்ததை, அவரும் நடைமுறையில் செய்ய முனைந்தார் அவ்வளவே. இலக்கியத்தில் இதை கூறுவது சரி, வாழ்வில் அல்ல என்ற தத்துவம் இங்கும் புளுக்கின்றது. உங்கள் இலக்கியமும், இலக்கிய இரசனையும், அதை நியாயப்படுத்தும் தத்துவங்களும் இதை கோருகின்றது. பின் ஏன் கண்டனங்கள், கோமளித்தனங்கள்.

குற்றவாளி அர்விந் அப்பாத்துரையல்ல. நீங்கள் தான், உங்கள் இலக்கியமும் இலக்கிய ரசனையும் தான். அர்விந் அப்பாத்துரை குறித்த பெண் தனக்கு இணங்கிப் போவாள் என்ற அனுமானத்தில், முயற்சி செய்கின்றார். ஒரு பெண்ணின் வெளிப்படையான சுதந்திரமான செயல்பாட்டை, தனக்கு இணங்கிப் போகும் நடைமுறையாக கருதி முயன்று பார்த்தார். இங்கு அவர் முயற்சி செய்து பார்க்கின்றார். இது இணங்கிப் போகும் எல்லைக்குள், அப்பெண்ணை கொண்டுவர முனைகின்றார். இணங்கிவிட்டால் அது பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை என்ற கோட்பாட்டு அடிப்படையில், அவரின் அத்துமீறல்கள் மட்டுப்படுத்தப்படுகின்றது. இதைத் தான் அவர் உங்கள் கோட்பாட்டின்படி செய்தார்.

கண்டனத்தில் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் "ஒரு புறத்தில் அரசியல், பொருளியல் அதிகாரங்கள், சாதி ஆதிக்கம், இன மேலாண்மை, ஆயுதங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இப் பாலியல் வதைகள் நிகழ்த்தப்பட்டால், மறுபுறத்தில் சமூக சேவை மற்றும் அகதிகளுக்கு உதவி என்னும் முகமூடிகளுடன்.." திரிவதாக. என்ன மோசடி.

ஏன் வசதியாக வசதி கருதி சிலவற்றை மறந்து போகின்றீர்கள். இலக்கியவாதிகளே இலக்கியம் மூலம் பாலியல் வதைகளில் ஈடுபட முடியாதோ? கையெழுத்திட்ட சிலர், அதையே தொழில் முறையாக கொண்டு, இலக்கியம் பேசி செய்கின்றனர். மானம் கெட்டவர்களே! முற்போக்கு பேசி இதைச் செய்ய முடியாதோ? உங்கள் இலக்கிய வரலாற்றில் சிலர் இதைச் செய்திருக்கின்றார்கள், செய்கிறார்கள். இலக்கியத்தின் பெயரிலும், உலகம் முழுக்க பெண்கள் மீதான வன்முறை பற்றி பல வரலாறுகள் உண்டு.

நீங்கள் தர்க்கித்து பாதுகாக்கும் மற்றொரு வாதம், பெண் தானாகவே இணங்கிப் போனால் எல்லாம் சரி என்கின்ற ஒரு வாதம். என்ன பெண்ணியம்! என்ன அரசியல்! என்ன முற்போக்கு!

பெண் அல்லது ஆண் இணங்கிப் போதல் என்ற வார்த்தையின் உள்ளடக்கம் என்ன? இங்கு இணங்க வைக்கப்படுவது கூட வன்முறை சார்ந்ததே. இணக்கம் என்பதும், இணங்க வைப்பதும் சமூக ரீதியானது. இங்கு மோசடிகள், நேர்மையினம், கபடம் என்று, மனித இனத்தில் மிக இழிந்த ஒரு பொறுக்கியின் தளத்தில் இவை இயங்குகின்றது. சந்தையில் பொருட்களை இணங்கி வாங்குவது போன்றது. இங்கு உண்மையில் இணக்கம் இருப்பதில்லை. அதேபோல் இணங்கி உறவு கொள்வது. உண்மையில் சேர்ந்து இணங்கி வாழ்பவர்களும், இந்த மாதிரியான பொறுக்கித்தனத்துக்கும் இடையில் மயிர் இடைவெளியே உள்ளதால், இலக்கியவாதிகளால் பொறுக்கித்தனம் நியாயப்படுத்தப்படுகின்றது. அர்விந் அப்பாத்துரை இணங்கி உறவு கொள்ள முயன்று தோற்றவர். இணங்க வைப்பதில் அவர் தொடர்ச்சியாக கையாண்ட வழியில் வெற்றி பெற்றதாக நம்பிய முயற்சியில் தோற்றபோதே, அதை தூக்கிவைத்து ஆடுகின்றீர்கள்.

இந்த இலக்கியவாதிகள் இணங்கிப் போகும் வடிவம் பற்றி பல கதைகள் எழுதியவர்கள் தான். இணங்க வைத்தல் என்பதில் பொறுக்கித்தனமான மோசடித்தனமே உண்டு. இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். புலிகள் தலைமை சுடு என்றால் சுட இணங்கிப் போகும் தன்மை, தற்கொலை போராளியாக இணங்கிப் போகும் தன்மை எவையும், சமூக நோக்கில் இருந்து பார்ப்பதில்லை. அந்த மனிதன் சுயமான வாழ்வியல் அறிவில் இருந்து இணங்கிப் போவதில்லை. இப்படித் தான் இணங்கிப் போதல் என்பது, வாழ்வில் பல கோணத்தில் நிகழ்கின்றது.

சினிமாவில் நடிக்க இணங்கிப் போகும் நடிகைகள், வேலைக்காக உயர் அதிகாரியுடன் இணங்கிப் போகும் பெண்கள், வெளிநாட்டுக்கு ஆட்களை கடத்துபவர்களுக்கு இணங்கிப் போகும் அபலைகள், வீட்டில் பெரியவர்களுக்கு இணங்கிப் போகும் வீட்டில் உள்ள பெண்கள், சாமியாருக்கு இணங்கிப் போகும் பக்தியுள்ள பெண்கள், உயர்சாதிய நிலப்பிரவுக்கு இணங்கிப் போகும் தாழ்ந்த சாதிப் பெண்கள் அல்து கூலிப் பெண்கள், காதலனுக்கு இணங்கிப் போன காதலித்து கைவிடப்பட்ட பெண், இலக்கியத்தின் பெயரில் இணங்கிப் போன பெண், இப்படி இணங்கிப் போகும் ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் அபலைகளே. ஆணாதிக்கம் என்ற பலமான சமூக அமைப்பில், பலவீனமான பெண்கள் இணங்கிப் போனால் அல்லது இணங்க வைக்கப்பட்டால் அதற்கான சமூக காரணத்தை கேள்விக்குள்ளாக்காது நுகர விரும்புபவர்கள் தான், இந்த இலக்கியவாதிகள். உலகெங்கும் பலமுள்ளவர்கள் முன்னால், பெண்கள் இணங்கிப் போகின்றனர். இந்த ஆணாதிக்க அமைப்பின் கட்டமைப்பில் இப்படித்தான் உள்ளது. கணிசமான திருமணங்கள் கூட இணங்கிப் போகும் வடிவத்தில் நிகழ்கின்றன. இணங்கிப் போதல் கூட, காலத்தால் பெண் வன்முறை சார்ந்ததாக உணர்வதை நாம் கண்டுகொள்ள மறுக்கின்றோம். இது எமது அற்பத்தனமாகும். குறித்த காலத்தில் தமது அறியாமை, மற்றும் தமது பலவீனத்தை பயன்படுத்தி ஆண்கள் தமது பாலியல் வக்கிரத்தை தீர்த்ததை பல பெண்கள் காலத்தால் உணருகின்றனர். புலம்பெயர் இலக்கியத்தில் அப்படி பல பெண்கள் உணர்ந்தனர். இங்கு எதிர்மறையிலும் கூட பெண்கள் உணர்ந்துள்ளனர். இலக்கியத்தின் பெயரில் அரசியல் பெயரில் தவறாக வழிநடத்தப்பட்டு, தமது பாலியல் தேவையை ஆண்கள் நுகர்ந்ததை, காலத்தால் பல பெண்கள் உணருகின்றனர். பெண்களை தவறாக வழிநடத்தி, பெண்ணை இணங்க வைப்பது அன்றாடம் நடக்கின்றது. பெண்கள் காலத்தால் அனுபவத்தால் இதை உணர்ந்து கொள்கின்றாள். இதை தன் மீதான வன்முறையாகவே அவள் கருதுகின்றாள். இணங்கவைத்து காதலித்து கைவிடப்படும் ஒவ்வொரு பெண்ணும் கூட, இதை தெளிவாக உணருகின்றாள். இணங்கவைக்கும் கருத்தியல் ரீதியான மோசடியான வன்முறை, நேரடி வன்முறையை விட மிக பாரதூரமானது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. இலக்கியவாதிகள் தமது சொந்த சுயநலம் சார்ந்த கோட்பாட்டுக்கு இணங்க, கருத்தியல் ரீதியாக இணங்க வைக்கும் மோசடியான வன்முறையை ஆதரிக்கின்றனர்.

இணக்கம், இணங்கிப் போதல் போதையில், இசைவெறியில் கூட நிகழ்கின்றது. இதை டிஸ்கோவில் சாதாரணமாக காணமுடியும். இதுவே இலக்கியத்திலும்; நடக்கின்றது. இதற்கு வெளியில் குறிப்பாக ஒரு ஆணும் பெண்ணும் இணங்கி சேர்ந்து வாழும் போது, அவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் உண்டு. இது இன்றி மனிதன் இல்லை. பொதுவாக இலக்கியம் மற்றும் அரசியல் பேசும் சிலர் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி, பெண்களை நுகரும் வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனர். முரண்பாட்டின் ஒரு தொங்கலில் தொடங்கி பெண்ணை தமக்கு இணங்க வைக்கும் நுகர்வுக் கண்ணோட்டத்துக்குள் கொண்டு வந்து, தமது தேவைக்கு ஏற்ப வன்முறைக்குள்ளாக்குகின்றனர். இதைத் தான் சாமிமாரும் செய்கின்றனர். மனிதனின் பலவீனங்கள் மீதான உளவியல் ரீதியான சிதைவை, தமது சொந்த வக்கிரத்துக்கு பயன்படுத்துவது, சமூக இயக்கத்தில் பொதுவாக காணப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் என்ற கோட்பாட்டைக் கொண்டு, இதைத் தர்க்கரீதியாக இலக்கியவாதிகள் தமக்கு சார்பாக பயன்படுத்துகின்றனர்.

பெண்கள் தாங்களாக இயங்கி இணங்கிப் போதல் என்பது கூட ஆணாதிக்க பாலியலையே நியாயப்படுத்துகின்றது. பெண்ணின் அறியாமையை, ஆணாதிக்க அமைப்பின் பாதிப்பால் ஏற்படும் துயரத்தையும், அவர்களின் பலவீனத்தை இணங்கவைத்து பாலியல் ரீதியாக நுகர்வது ஆணாதிக்கம் தான். இதற்குள் ஒரு வன்முறை உண்டு. இலக்கியத்தின் பெயரில், வாழ்வு சார்ந்த ஒழுக்கம் பற்றி கேள்விகள் ஊடாக, பெண்ணை இணங்க வைத்து பாலியல் ரீதியாக உறவு கொள்வதும் பாலியல் வன்முறை தான்.

இணங்கவைத்தல் என்பது இந்த சமூக அமைப்பில் மோசடிகளால், நேர்மையீனத்தால், நயவஞ்சகத்தால், பலத்தால், அதிகாரத்தால், சமூக ஆளுமையால் எப்போதும் அப்பாவிகள் மீது பெருமளவில் நிகழ்கின்றது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் குழந்தைகள் அதிகளவில் இணங்க வைக்கும் இந்த வன்முறைக்குள் பாதிக்கப்படுகின்றனர். இது சந்தை முதல் பெண்ணின் உடலை நுகர்தல் வரை இதுவே இன்றைய எதார்த்தமாகும்.

ஒரு பெண் இணங்கிப் போதல் என்பது கவர்ச்சி, பின் தங்கிய அறிவியல், சமூகப் பார்வை இன்மை, பலவீனங்கள், சொந்த பாதிப்புகள், உளவியல் சிக்கல்கள், நம்பிக்கை மோடிகள் குறிப்பாக இதை தீர்மானிக்கின்றது. இதைச் சமூகம் பொதுவான நுகர்வு பண்பாடாக உருவாக்குகின்றது. திரும்பிய இடமெல்லாம் பாலியல் ஊடாகவே உலகம் காட்டப்படுகின்றது. பாலியலே முதன்மையான செய்தியாக, மனித இருத்தலின் மையக் கூறாக காட்டப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் இயல்பானதாக, நியாயமானதாக காட்டப்படுகின்றது. விளம்பரம் முதல் சினிமா வரை இதையே செய்தியாக காட்டுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் நுகர்வின் எல்லைக்குள் இணங்கி உறவு கொள்வதை, இந்த புலம பெயர் இலக்கிய குஞ்சுகள் பெண்ணியம் என்கின்றனர். ஒரு பெண் இணங்கி சேர்ந்து வாழ்தல் என்பது வேறனாது. மாறாக வாழ்வுக்காக அல்லாது குறித்த உறவுக்காக உறவு கொள்ளும் நுகர்வு வேறு. இங்கு இணக்கம் என்பது ஏகாதிபத்திய நுகர்வுக்குட்பட்டது.

நாங்கள் பொருட்களை பயன்படுத்தும் போது, அது வாழ்க்கை பூராவும் பாவிக்கும் கண்ணோட்டத்தில் அதை நுகர்வது ஒருவகை. இதற்கு மாறாக கணநேரத்தில் நுகர்ந்த பின் அதை தூக்கி எறியும் கண்ணோட்டமும் உண்டு. இரண்டும் இந்த உலகில் உள்ளது. இதுவே பெண் பற்றிய ஆணின் பார்வையையும், ஆண் பற்றிய பெண் பார்வையையும் சரி, வாழ்வில் பாலியல் கருத்துகளையும் தீர்மானிக்கின்றது.

இணங்க வைப்பதற்காக அன்றாடம் மூளைச்சலவை செய்யும் ஆணாதிக்க ஆண்கள் சமூகம் தான் இது. தமிழ் மக்களை தேசியத்தின் பின் இணங்கவைக்க, எப்படி குறுந் தேசியம் முனைகின்றதோ, அப்படித்தான் இதுவும். இந்த முயற்சியில் பெண்கள் விழிப்புறும் போது, பலர் தோற்றுப் போகின்றனர். அர்விந் அப்பாத்துரையும் குறித்த பெண் இணங்கிப் போவாள் என்ற இலக்கிய ஜம்பவான்களின் கணிப்பீட்டுடன் முயன்றவர். அவள் மறுக்க, அதை வன்முறை என்று இவர்கள் கூப்பாடு போடுகின்றனர். இங்கு உங்களைப் போல் இணங்க வைப்பதில் அத்துமீறல் நடந்தது. அவள் மறுக்க, அவன் விட்டுவிடுகின்றான். கற்பழிக்க முனையவில்லை. இங்கு இணங்க வைப்பதில் ஒரு அத்துமீறல் இருந்துள்ளது. உங்கள் கோட்பாட்டுப்படி இணங்க வைப்பது வன்முறை இல்லை என்றால், இணங்க வைக்கும் அந்த முயற்சியும் வன்முறையல்ல. குறிப்பாக இதே அர்விந் அப்பாத்துரை இப்படி முன்பும் ஈடுபட்டவர் என்றால், அங்கு இணங்கிப் போகும் வழிமுறை வெற்றிபெற்றுள்ளது என்றே அர்த்தமாகும். அதனால் தான் அவருடன் நீங்கள் ஒன்றாக கூடி இலக்கியம் பேசியதுடன், கூடிக் குடித்தீர்கள்.

இங்கு ஆணாதிக்க அமைப்பு சார்ந்த இணங்க வைக்கும் கோட்பாட்டை, இந்த கண்டன அறிக்கை தனக்குள் ஆதரித்து நிற்கின்றது. அதனால் இணங்க வைப்பவர்கள் கையெழுத்திட முடிந்தது. மறுதளத்தில் இணங்க வைக்கும் முயற்சிகளின் போது பெண் பாதிப்படைகின்றாள். அவள் கொதித்துப் போகின்றாள். தனிப்பட்ட நம்பிக்கையை மோசடியாக பயன்படுத்திய போது, அந்தப் பெண்ணின் பாதிப்பு கடுமையானது.

இந்த வன்முறை முயற்சியை கண்டிக்கும் போது, ஆணாதிக்க அமைப்பின் நோக்கங்களை தோலுரித்துக் காட்டவேண்டும். "ஒரு புறத்தில் அரசியல், பொருளியல் அதிகாரங்கள், சாதி ஆதிக்கம், இன மேலாண்மை, ஆயுதங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இப் பாலியல் வதைகள் நிகழ்த்தப்பட்டால், மறுபுறத்தில் சமூக சேவை மற்றும் அகதிகளுக்கு உதவி என்னும் முகமூடிகளுடன்.." என்று விடையத்தை திரித்து மோசடி செய்வது நிகழ்கின்றது. ஏன் அர்விந் அப்பாத்துரை இப்படி செயல்பட்டார், என்ற அடிப்படையான காரணத்தை திட்டமிட்டு ஆராயவே மறுக்கின்றது. உங்கள் மனிதவிரோதக் கோட்பாடுகள் இதற்கு எப்படி துணை போனது என்பதையே, மூடிமறைக்கின்றது. இலக்கிய வட்டத்திற்குள்ளான இச் சம்பவத்தை கூட, அவர்கள் சொல்ல முற்படவில்லை. இங்கு தான் இந்த கண்டனத்தின் பின்னால் உள்ள வேஷம் அம்பலமாகின்றது. சமூகத்தின் பல கூறுகள் மீது வலிந்து கண்டனம் தெரிவித்தவர்கள், ஏன் இலக்கியத்தின் மீது முற்போக்கின் மீது இது போன்ற முயற்சிகளை கண்டிக்கவில்லை. மாறாக ஒப்புக்கு மாரடிக்கின்றனர். இந்த இலக்கியவாதிகளின் அன்றாட முயற்சிகளும் நடைமுறைகளும் இதற்குள் தான் உயிர் வாழ்கின்றது.

இந்த இலக்கியவாதிகளுடன் கூடித்திரிந்த போது அர்விந் அப்பாத்துரையின் அரசியல் என்னவாக இருந்தது. அதை அவர் எக்சில் 2 இல் எழுதியிருந்தார்.

"ஜாதி வேற்றுமை பெண்ணை ஒடுக்கும் விதிமுறைகள் ஆகியவற்றைப் போதிக்கும் மனுதர்மம் என்ற நூலை எதிர்த்து போராடுவதில் மட்டுமே தலித்தியமும் பெண்ணியமும் ஒன்று சேர்கின்றது. மற்ற எல்லா பரிமாணங்களிலும் பெண்ணியம் தலித்தியமும் வெவ்வேறு போராட்டங்கள்."

என்றார். இதை நாம் அன்றே விமர்சித்தோம். இவர் தன்னை ஒரு தலித்தியல்வாதியாக, பின்நவீனத்துவ வாதியாக காட்டியவர். புலம்பெயர் இலக்கியவாதிகளுடன் இப்படித் தான் புரண்டு எழுந்தவர். தனது மக்கள் விரோத எழுத்தை, கம்யூனிச விரோதமாக இவர்களுடன் கூடி எழுதிய அர்விந் அப்பாத்துரை

~~தத்துவரீதியில், கம்யூனிசம் என்பது சம உரிமைக்கான போராட்டம். இது முக்கியமான பொருளாதார, சமத்துவத்திற்கான போராட்டம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ...... மார்க்சிய வாதிகள் பெண்ணியப் போராட்டத்தில் பங்கு பெறுவோருக்கு துணை நிற்கக் கூடும் இதைத் தவிர்த்து கம்யூனிசத்திற்கும் பெண்ணியப் போராட்டத்திற்கும் என்ன நேரடித் தொடர்பு இருக்கின்றது என்பது ஒரு -பூடகம்

என்கின்றார்.

இப்படி சுயநலம் கொண்ட ஒரு கம்யூனிச விரோதியாக இருந்ததை, நாம் அன்றே அம்பலம் செய்தோம். சொந்த ஏகாதிபத்திய ஆணாதிக்க நுகர்வுக் கலாச்சாரத்தை நியாயப்படுத்த, பெண்ணியத்தை திரிக்க வேண்டியேற்பட்டது. இதனால் கம்யூனிசத்தை ஒடுக்கவேண்டிய நிலையேற்பட்டது. அதை கோட்பாட்டு ரீதியாக கொச்சைப்படுத்த வேண்டிய நிலை எற்பட்டது. இதனால் புலம்பெயர் இலக்கியவாதிகளின் சஞ்சிகைளில் இவை வெளிவந்தன. கண்டன அறிக்கை இதை எதையும் பேசாது மூடிமறைக்கின்றது.

பெண்ணியம், பெண் தலித்தியம் என்று எல்லாம் கூறிக் கொண்டு என்ன செய்தார்கள், செய்கின்றார்கள் என்பதை இங்கு எதார்த்தத்தில் நாம் காண்கின்றோம். இலக்கியச் சந்திப்புகள் மற்றும் சமூக இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு என்ன நடந்தது என்பதை, கடந்தகாலத்தில் நாம் நெருங்கிவைத்து அணுகிப் பாhக்கமுடியும். யார் இந்தக் கோட்பாடுகளை சொன்னாலும், தாம் தெரிவு செய்துகொண்டு ஆணுடன் இணங்கி வாழ்ந்தவர்கள் தவிர, இணங்க வைத்து நுகர்ந்த பெண்களின் குமுறல்களை இட்டு இதில் கையெழுத்திட்டவர்களுக்கு ஒரு துளி கூட அக்கறையிருப்பதில்லை. அங்கும் ஒரு மோசடி, கயமத்தனம், ஏமாற்றுதல் இருந்தது என்பதை, இந்த வன்முறை எதிர்ப்பாளருக்கு தெரிவதில்லை. ஆனால் இவை அனைத்தையும் முதுகுக்குப் பின்னால், அரட்டை அடிப்பவர்கள் தான் நீங்கள்.

குறிப்பாக அர்விந் அப்பாத்துரையுடன் இந்தப் பெண் இணங்கிப் போயிருந்தால், அது பெண்ணியம் என்பது இவர்கள் கோட்பாடு. இப்படி சோரம் போதல் கோட்பாட்டிலேயே உள்ளது. இந்த இலக்கிய வாதியான அர்விந் அப்பாத்துரையும் கூட ஒரு வன்முறை எதிர்ப்பாளாராக காட்டியவர். 3.10.1999 அன்று பாரிஸ் இலக்கிய கும்பல் நடத்திய வன்முறை ஒன்றின் போது, இவர் தனியாகவே அதை பற்றி திரித்து கண்டன துண்டுபிரசுரம் வெளியிட்டவர். பாரிசின் பல இலக்கிய முயற்சியில் இவர்தான் போசகர். இவரின் மண்டபம் இலக்கியவாதிகளின் தங்குமிடமாக இருந்தது. அண்மையில் குஷ்புவுக்கு ஆதரவாக இலக்கிய சந்திப்புச் சார்பாக அறிக்கை செய்தவர்களில் இவரும் ஒருவர். கணேசலிங்கத்தின் கற்பழிப்பை கண்டித்தவர்.

இப்படி மற்றைய இலக்கிய ஜம்பவான்களுக்கு குறைந்து நின்று குலைக்கவில்லை. நன்றாகவே குலைத்தவர். அவரின் கடந்தகால பாணியில் மற்றைய இலக்கியவாதிகள், வாலையாட்டியபடி விசுவாசமாக அவரைப் பார்த்து குலைக்கின்றனர். அவர் தம்முடன் இலக்கியத்தில் பெயரில் கூடிக் குலைத்ததையும், கூடிக் குடித்ததையும் மட்டும் மூடிமறைத்தபடி எதைத் தான் கண்டிக்கின்றனர்? தெரிந்தால் சொல்லுங்கள்.

Saturday, January 14, 2006

வாழ்வின் மீதான நம்பிக்கையை இழப்பவன்

வாழ்வின் மீதான நம்பிக்கையை
இழப்பவன் வெறும் சடலம் தான்.


பி.இரயாகரன்
14.1.2006

பொதுவாக இன்றைய பாசிச சூழலிலும், சீரழிந்த மாற்றுக் கருத்து தளத்தையும் எதிர் கொள்ளமுடியாத நிலையில், வாழ்வின் மீதான மனித நம்பிக்கையை இழந்து சிலர் கருத்துக் கூற முனைகின்றனர். நம்பிக்கையாக மக்களின் வாழ்வு சார்ந்து கருத்து கூறுவது, பின் அந்த முயற்சிக்கு எதிராகவே கருத்து கூறுவது என்பது, மக்களின் முதுகில் குத்துவதாகும்.

உதாரணத்துக்கு அண்மையில் தமிழ்மணம் விவாதத் தளம் ஒன்றில் பதிவாகிய கருத்தில் "பெயரிலி, உங்களைப் புரிந்து கொள்கிறேன். உங்கள் நிலைமைதான் எனக்கும்! புலம்பெயர் படைப்பாளிகள் பலருக்கும் இதே நிலைதான். குறிப்பாகப் பார்த்திபன், அம்மா மனோ, தூண்டில் பத்திரிகைக் கடலோடிகள், மனிதம் பத்திரிகைக் குழு, போன்றவர்களிடமும் இதே கேள்வியும் விரக்தியுமே எஞ்சியுள்ளது. இரயா மட்டுமே தன்னளவில் பலதை அம்பலப்படுத்துகிறார். அவர் தனிமனிதன். என்ன செய்ய? என்னால் முடிந்தவரை குறைந்த பட்சம் மக்களின் அமைதிக்காகவாவது (ஜனநாயகச் சூழல்) எழுதுகிறேன். எம்மால் எதுவும் முடியாது! ஆனால் அரச ஆயுதக் குழுக்களின் அராஜகத்துக்கெதிராகவாவது குரல் கொடுப்போமேவென ஏதோ எழுதுகிறேன். இதுவொன்றுமே சரிவராது. பிறகெதற்கு எழுதி?." என்ற கருத்து பல தளத்தில் இன்று காணப்படுகின்றது.

தனிமனித அதிருப்திகள், எத்தனை நாளைக்கு இவை என்ற அங்கலாய்புகள். தனிமனிதர்களாக புளுங்கிப் போகும் அவலம். இந்த தர்க்கம் கூட சொந்த பூர்சுவா வாழ்வியல் நிலையில் இருந்து, தமது சொந்த நிலையை தக்கவைக்கும் ஒரு தர்க்கமாக சிந்தனைச் சிதைவாக ஏற்படுகின்றது. சுதந்திரம் ஜனநாயகத்தின் பெயரில் வாழ்வையே மிக கேவலமாக வாழவைக்கும் இந்த சமூக அமைப்பில், தமது சொந்த வாழ்வையே இதற்குள் வாழ்கின்ற மனிதர்கள் கூட இப்படி புலம்பவது கிடையாது. கையால் மலம் அள்ளும் தொழிலாளி, பலக்காரமாக பாலியல் ரீதியாக அன்றாடம் சுரண்டப்படும் ஒரு பெண், அன்றாடம் வாழவழியின்றி கையேந்தி பிச்சை எடுக்கும் ஒருவன், அடுத்த நேரத்துக்கு உண்பதற்கு வழி தெரியாத மனிதர்கள், தன் குழந்தைக்கு பால் இன்றி விழிக்கும் தாய்மை என்று மனித இனத்தின் சகல அவலத்தை சந்திப்பவர்கள் யாரும், இப்படி அவநம்பிக்கையுடன் சமூகத்தை அணுகுவது கிடையாது. ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு கணமும் போராடுகின்றான். இதில் இருந்து மாறுபட்டு, அவநம்பிக்கையுடன் சமூக தற்கொலையை ஊக்குவிக்கும் விதைகளை ஊன்றுகின்றோமே, அப்படியானல் நாம் யார்? நாம் எங்கே இருக்கின்றோம்? எமது சிந்தனை தான் என்ன? இப்படி வெளிப்படும் மனநிலை, அடிப்படையில் தனிமனித நலனை அடிப்படையாகக் கொண்ட பூர்சுவா குணாம்சத்தின் பிரதிபலிப்பு. இதில் இருந்து எமது சொந்த நிலையை தக்கவைக்க, அதை நியாயப்படுத்தி விடுகின்றோம்.

இப்படிச் சமூகத்தின் முன்னோடிகள் அழுது புலம்பும் போது, மக்கள் என்னதான் செய்வார்கள்! தாம் அழுது புலம்புவதற்கு நியாயம் கற்பிக்க, மக்களின் கையாலாகாத்தனத்தை பற்றி கருத்துரைப்பது அன்றாடம் நிகழ்கின்றது. மக்களினால் தான் தமக்கு இந்தக் கதி என்று கூறிக்கொள்வது நிகழ்கின்றது. இந்த நிலைக்கு நீங்களே காரணம் என்பதை, அவர்கள் கண்டு கொள்வது கிடையாது. மக்களின் இன்றைய அவலமான நிலைக்கு, நாங்கள் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வது கிடையாது. இந்த சமூகத்தின் அவல நிலைக்கான குற்றத்தை, எதிர்நிலைக்கு மாற்றுகின்றனர். இதன் மூலம் தமது சொந்த பூர்சுவா குணாம்சம் சார்ந்த வாழ்க்கைக் கண்ணோட்டத்தை தக்கவைக்கின்றனர்.

இவர்களை நம்பி காலைத் தூக்கி ஒரு அடி எடுத்து வைப்பவர்களுக்கு, பொறிக் கிடங்கை முன்னாள் காட்டுகின்றார்கள். இப்படி செய்யும் நீங்கள் யார்? அதை நீங்கள் ஒரு முறை திரும்பி பாருங்கள்! கண்ணாடி முன் நின்று உங்களைப் பாருங்கள். நீங்கள் என்ன செய்ய முனைகின்றீர்கள் என்பதையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்வதில் திருப்தியில்லை என்றால், என்ன தவறு செய்கின்றீர்கள் என்று பாருங்கள். அதைவிடுத்து சமூகத்தை குற்றம் சாட்டுவது அபத்தம். ஒரு செயல்பற்றிய தெளிவான நோக்கம் இருக்கவேண்டும். அது சமூகத்தில் என்ன விளைவை விளைவிக்கின்றது என்று பார்க்கவேண்டும். குடுகுடுப்பைக்காரன் போல் அவசரமாக உலகம் மாறிவிட வேண்டும் என்று நம்புவதும், கூறுவதும் பூர்சுவா குணவியல்பாகும். இதுவே கடந்தகால மற்றும் நிகழ்கால இயக்க அரசியலாகும்;.

நீங்கள் குறிப்பிட்ட பார்த்திபனை எடுங்கள். எல்லாவிதமான நம்பிக்கையையும் இழந்த பார்த்திபன், எதைத்தான் தான் வாழ்வில் அதற்கு பதிலாக சாதித்தார். மற்றொரு நம்பிக்கையை பெற்றாரா. இல்லையே. என்? என்ன நடந்தது? கடந்த இலக்கிய அரசியல் எல்லாம் எதற்காக இவைகள் என்று புளுங்கிய பார்த்திபன், அதைக் கைவிட்ட பின் எதைச் சாதித்தார்? அப்போதும் ஒன்றுமில்லை? இங்கு என்ன நடந்ததென அவர் கூட அதை தேடியது கிடையாது? இன்றைய தமிழ் மக்களின் அவலமான நிலை, இப்படித் தான் உருவானது. குற்றவாளிகள் நாங்கள்! எதிரிகள் அல்ல! மக்களின் எதிரிகள் எப்படி இருப்பார்களோ, அப்படித் தான் அவர்கள் இருக்கின்றார்கள்;. ஆனால் நாங்கள் எப்படி இருக்கக் கூடாதோ, அப்படி மிக மோசமாக இருக்கின்றோம். இதன் மூலம் எதிரிக்கு அன்றாடம் துணை செய்கின்றோம்;. ஒரு பினாமியைப் போல், எம்மை அறியாமால் எதிரிக்கு கம்பளம் விரிக்கும் வேலையைச் செய்கின்றோம். மக்களின் எதிரி பல தளத்தில் உள்ளான். அது எமக்குள்ளும் கருத்தியல் தளத்தில் ஊடுருவுகின்றது.

மக்களின் விடுதலை என்பது அமைதியும் சமாதானமும் நிறைந்த உணர்வுடன் மக்களின் எதிரிகள் அனைவரும் வழங்கிவிடமாட்டார்கள். மக்கள் போராடும் ஜனநாயகத்தை எதிரி தங்கத்தட்டில் வைத்து வழங்குவதில்லை. இப்படி நினைப்பது பூர்சுவா மனப்பாங்காகும். இதுவே பூர்சுவா உளவியலாகும். நெருக்கடிகள் பலதளத்தில் பலவடிவில் வரும். இதை எதிர் கொள்ள முடியாது அங்கலாய்ப்பதே, பூர்சுவாவின் அற்ப சிந்தனையாகின்றது. இதுவே நிலைமையையிட்டு புலம்பத் தொடங்குகின்றது. அதை எதிர்கொள்ள வக்கற்று பினாற்றத் தொடங்குகின்றனர். இன்றைய நிலைமைக்கு நாங்கள் தான் காரணம் என்பதை, ஒவ்வொருவரும் சுயவிமர்சனம் செய்தேயாகவேண்டும். செய்ய வேண்டிய, செய்யக் கூடிய நீண்டபணி உள்ளது. ஆனால் அதை மட்டும் நாம் செய்வதில்லை. மாறாக நாம் ஒரு கோட்டைக் கீறி வைத்துக் கொண்டு அதற்குள் நின்று ஊளையிடவே முனைகின்றோம்.

இப்படி கருத்தியல் ரீதியாக சிதைந்து சின்னாபின்னமாகிப் போகும் போது என்ன தான் நடக்கின்றது. தன்னுடன் சிலரையும் அழைத்துச் செல்வது நிகழ்கின்றது. தற்கொலை செய்பவன்(ள்) என்ன மனநிலையில் என்ன மாதிரியான முடிவை எடுக்கின்றரோ, அதே முடிவைத்தான் இவர்களும் எடுக்கின்றனர். இங்கு இதற்கு இடையில் வேறுபாடு கிடையாது.

நீங்கள் கூறிய பாhத்திபன் இலக்கிய உலகில் அவர் இயங்க முடிந்த ஒரு தளத்தில், அவர் உயிருடன் இருந்தாரே ஒழிய நடைப்பிணமாகவல்ல. அன்று உயிருள்ள ஒரு மனிதனாக வாழ்ந்தார். பார்த்திபன் இப்படி தன்னையே அழித்து உயிருள்ள சமூகத்தில் இருந்து ஒதுங்கி "தற்கொலை" செய்திருக்காவிட்டால், சமகாலத்தில் மிகச் சிறந்த ஒரு எழுத்தாளனாக இருந்திருப்பார்.

இன்று இலக்கியம் செய்வோரை விட சமூகத்தின் உயிரோட்டத்தை உணர்வதில் மிகவும் துல்லியமாக புரிந்து செயல்பட முனைந்தவர். அவரின் சமூகத் தேடுதல் மூலம் அதை செய்திருக்கக் கூடிய சூழல் இருந்தது. ஆனால் என்ன நடந்தது. சொந்த பூர்சுவா மனநிலையில், அனைத்தையும் மீறி தனிமனித எல்லைக்குள் முடங்கி, தனக்குத்தானே "கயிற்றை" மாட்டிக் கொண்டு தொங்குகின்றார். ஒருபுறம் பாசிசம், மறுபுறம் இலக்கிய சீரழிவும் அது விதைத்த கருத்தும் மெதுவாக ஊடுருவி, இந்த பூர்சுவா மனநிலைக்கு இசைவாகி சமூகத்தின் போக்குக்கு ஏற்ப "தற்கொலைக்கு" இட்டுச் சென்றது. என்னத்தை சொல்லி, என்னத்தை எழுதி, யாருக்கு இவை பிரயோசனப்படுகின்றது என்ற பூர்சுவா குணாம்சமே புலம்பத் தொடங்கும் போது, அதிருப்தி நம்பிக்கையீனங்கள் முதுகைப்பிராண்டி பின்னால் இழுத்து வீழ்த்துகின்றது.

சுற்றி இருந்த இலக்கிய வட்டத்தின் சமூகச் சீரழிவு, அவர்கள் தமது சொந்த சீரழிவுக்கு ஏற்ப விதைத்த கோட்பாடுகள், தனிமனித வக்கிரங்கள், அவர்களை நம்பிய முயற்சிகள் என்று பலவும் இதற்கு துணைபோனது என்பது உண்மைதான்;. புலிபாசிசம் எதை ஒரு தளத்தில் செய்ததோ, அதை மறுதளத்தில் இலக்கிய சீரழிவுக் கோஸ்டியும் அதையே செய்தது. இதற்கு பலியாகிக் கொண்டிருப்பவர்கள் தான், தமது சொந்த அவநம்பிக்கையை ஒரு கருத்தாக கூறமுனைகின்றனர். ஒரு தனிமனிதனாக, ஒரு படைப்பாளியாக, ஒரு சமூக விஞ்ஞானியாக இருப்பதைத் துறப்பதே ஒரு சமூகத் துரோகத்தனமாகும். இன்றும் பார்த்திபனுடன் நேரடியாக உறவை வைத்திருப்பதால், அவர் மீதான விமர்சனத்தை செய்வதன் மூலம், பலரின் இன்றைய நிலையை நான் நேரடியாக விமர்சிக்க முனைகின்றேன்.

ஒரு கலிலியோ இந்த சமூகத்தின் உண்மைக்காக தனிமனிதனாக போராடவில்லையா? ஒரு டார்வின் தனிமனிதனாக போராடவில்லையா? இப்படி பலர் போராடவில்லையா? இந்த போராட்டத்தில் மரணிக்கவில்லையா? எவ்வளவு நெருக்கடிகள். தனிமனிதனான அவர்களைச் சுற்றி நடத்திய வன்மம் மிக்கத் தாக்குதல்கள். இப்படி வரலாற்றில் பதிவான பலரை நாம் காண்கின்றோம். ஆனால் நாம் மட்டும் அப்படி வாழமறுக்கின்றோம். ஏன் அப்படி பார்த்திபனால் போராடி வாழமுடியவில்லை.

எம்மைச் சுற்றியிருக்கும் சூழல் பாசிசமாக, இலக்கிய சீரழிவாக, பண்பாட்டுச் சிதைவாக, பற்பலவாக இருந்தன, இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் இதை எதிர்த்து குறைந்த பட்சம் தனிமனிதனும் போராடமுடியும். எதை நோக்கிப் போராடுவது? என்ற தெளிவை அடைவதில் இருந்து இது தொடங்குகின்றது. மார்க்ஸ் சாப்பிடவே உணவின்றி சொந்தக் குழந்தைகள் மரணித்த போதும் கூட, பட்டினியுடன் எதைப் படைக்க முனைந்தார்? அவரின் முன்னால் இந்த பூர்சுவா வாழ்வியல் முறையே சிறந்த வாழ்வு என்ற ஒன்றை காட்டிய போதும் கூட, அவர் சமூகத்தில் உள்ள துன்பங்களைச் சுமந்தபடி போராடினரே ஏன்? மனித சமூதாயத்தின் விடுதலைக்காக அவர் போராடினார். உண்மையான நேர்மையான மனிதனின் கடமை இப்படி போராடுவது தானே ஒழிய, கோழையைப் போல் ஒடி ஒழிவதல்ல.

நாங்கள் சந்திக்கும் எமது நிலைமைகளை விட மோசமான கொடூரமான நிலைமைகள் ஊடாகவே, உலகில் பல ஆயிரம் மனிதர்கள் போராடினார்கள். நாங்கள் மட்டும் ஏன், இப்படி எமது பூர்சுவா மனநிலையை சமூக நிலையாக மாற்ற முனைகின்றோம்.

உங்கள் கருத்துகளைக் கண்டு யார் பயப்படுகின்றான்? நீங்கள் எப்போதாவது இதைப் பற்றி சிந்தித்ததுண்டா! மக்களின் எதிரியல்லவா பயந்து நடுங்குகின்றான். துப்பாக்கியும் கையுமாக அலையும் அந்த வெறிபிடித்த கும்பல் தான், உங்கள் கருத்தைக் கண்டு நடுங்குகின்றது. உங்கள் கருத்துகள் உண்மையாகும் போது, பொய்யர்கள் இப்படி வெறிபிடித்து அலைவார்கள். எத்தனை திட்டல்கள், எத்தனை தூசணங்கள், எத்தனை முத்திரைகள் முதல் மரணதண்டனை வரை பரிசளிக்கும் இந்த அமைப்பில், நாங்கள் நாங்களாகவே அவனுக்கு பணிந்துவிடுவது ஏன்? ஒரு பினாமியைப் போல், ஒரு கோழையைப் போல் நாங்கள் சிதைந்து போவது ஏன்? மக்கள் எதிரி எதைச் செய்ய விரும்புகின்றானோ, அதை நாங்களாகவே நிறுத்தி தற்கொலை செய்துகொள்வது ஏன்? குறைந்தபட்சம் உன் எல்லைக்குள் மக்களுக்காக போராடு! போராடி மடி. மக்கள் துன்பப்படும் போது, அதைக் கண்டுகொள்ளாது மலசலகூடத்தை நிரப்பும் வாழ்வை வாழ்ந்து என்ன தான் கிழிக்கின்றாய்? நாயைவிட கேவலமான இழிந்த வாழ்க்கை!

இன்று ஒரு கருத்தைச் சொல்லும் போது, அதைக் கண்டு கொதித்து பதிலளிக்கும் எதிரிகள் உண்மையில் யாரைக் கண்டு பயப்படுகின்றனர். கருத்தைச் சொல்பவனைக் கண்டு அல்ல, மக்களைக் கண்டு தான் பயப்படுகின்றார்கள். மக்கள் தெரிந்த உண்மைகளை ஒரு அரசியலாக புரிவதை தடுப்பதற்காக கருத்துச் சொல்பவனை அழிக்கின்றனர். அமெரிக்கா ஜனாதிபதி புஸ் முதல், புலி பிரபாகரன் வரை இதுதான் இவர்களின் நிலை. மக்களுக்காக போராடுவனை அழிப்பது, மக்களுக்கு உண்மை தெரியக் கூடாது என்பதற்காகவே. எதிர்கட்சியில் உள்ளவனை அழிப்பது, தனிப்பட்ட சொந்த அதிகாரத்துக்காகவே .நாங்கள் எம்மை நிறுத்திக் கொள்வது எதற்காக!

இங்கு தான் உனது போராட்டத்தின் சரியான தன்மை உறுதி செய்யப்படுகின்றது. நாம் மக்களுக்காக, அவர்களின் சொந்த விடுதலைக்காக சொல்ல வருவதை தடுத்து நிறுத்த முனையும் போது, நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை எதிரி தெளிவாக்குகின்றான். நாம் முன்னே கால்களை தூக்கி வைத்துள்ளோம் என்ற அரசியல் உண்மையை புரிந்து கொண்டு, செயல்பாட்டை மேலும் ஆழமாக்க வேண்டும்.

நாங்கள் ஒரு விடையத்தை மிகத் தெளிவாக புரிந்து கொண்டேயாக வேண்டும். மக்கள் தங்கள் சொந்த எதிரிகைளை, தமது சொந்த வாழ்க்கை அனுபவத்தின் ஊடாக தெளிவாக புரிந்துள்ளனர் என்பதை நாம் கண்டு கொள்வதில்லை. இது மிக முக்கிய தவறுக்கு எம்மை இட்டுச் செல்லுகின்றது. மக்கள் ஒவ்வொருவரும் யாரைக் கண்டு பீதியடைகின்றனர். யாரைக் கண்டு கதைக்க அஞ்சி நடுங்குகின்றனர். அதன் விளைவு எப்படிப்பட்டது என்பதை சொந்த வாழ்வில் புரிந்து செயலாற்றுகின்றனர். நாம் புரிந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு மக்களும், யாரையெல்லாம் கண்டு அஞ்சுகின்றனர் என்பதையே. அவர்கள் தான் மக்களின் எதிரி. மக்கள் பீதியினால் மனதுக்குள் புளுங்குகின்றனர். மக்களுக்குத் தெரியும் எதிரியின் ஒவ்வொரு கால்களையும். இதைப் பற்றி மக்களுக்கு நாங்கள் புதிதாக ஒன்றும் சொல்லவேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு எதிரிகள் பற்றி புரியவைக்கவேண்டிய அவசியம் கிடையாது.

அப்படியாயின் பிரச்சனை எங்கே உள்ளது. இங்கு மக்கள் அங்கும் இங்குமாக நம்பிக்கையுடன் வாக்களிக்கும் மனநிலையில் ஊசலாடுகின்றனர். தப்பிச் செல்ல வழி தேடுகின்றனர். இதற்கான பாதை தெரியாது தனிமைப்பட்டு நிற்கின்றனர். செய்ய வேண்டிய பணி என்ன? மக்களின் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்துக் காட்டுவதன் மூலம், மக்களை வழிகாட்டும் வகையில் அவர்களின் சொந்த அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தை நடத்தும் வகையில் உதவுவது. அதாவது அவர்களின் ஒரு அங்கமாக நாம் மாறுவதைத் தான் செய்ய வேண்டியுள்ளது. இது தான் எமது வரலாற்றுப் பணி.

மக்களை நாம் புரிந்து கொண்டு, நேசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்;. அவர்களின் உணர்ச்சிகளை, சிந்தனைகளை, விருப்பத்தை உயர்த்தி, அவர்களை ஒன்றுபடுத்தும் வகையில் நாம் நிகழ்ச்சியின் சாரத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும். அந்த மக்களின் தேவை நோக்கம் ஒன்றாக இருக்கும் போது, நாம் அதற்கு வெளியில் நின்று மற்றொன்றை பற்றி வம்பளக்க முடியாது. எமக்கு, மக்கள் முன்னால் வழிகாட்டி நிற்கின்றனர். மக்களை பின்பற்றி முன்னேறிச் செல்லவேண்டும். இன்று சொந்த தேவைக்காக தேசியத்தை பயன்படுத்துவதை, மக்களை பயன்படுத்துவதையும் கண்டிப்பாக இனம் கண்டு, அதை மக்கள் முன் போட்டுடைக்க வேண்டும்.

மக்கள் அடைந்த துன்பமோ, எங்களை விட அதிகமானது. சொந்த இரத்தத்தைக் கொட்டி, சொந்த உயிரைக் கொட்டி, சொந்த தொப்புள் கொடியை பலியிட்டு, சொந்த உழைப்பை இழந்து அவர்கள் பெற்று இருப்பது ஒரு அடிமை விலங்கைத் தான். அவர்கள் கண்ணீர் துளிகள் வெளிவரமுடியாத அளவுக்கு வற்றிவிட்டது. அந்த மக்களை நாயிலும் கீழாக மிதிக்கும் ஒரு பாசிசம், எம் மண்ணில் கொலுவீற்றுள்ளது. பேரினவாதம் ஒருபுறம், மறுபுறம் புலிப் பாசிட்டுகள். மறுபக்கம் மக்களின் மீட்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு மதபீடங்கள் தொடக்கம், கைக்கூலிகள், தன்னார்வக் குழுக்கள் இறுதியாக ஏகாதிபத்தியம் வரை மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்கின்றனர். நாங்கள் வாய்மூடி மௌனவிரதம் இருக்கின்றோம். இதில் சிலவற்றை மட்டும் பேசியே வம்பளக்கின்றோம்.

இவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தரப்போகிறார்கள். அடிமைத்தனத்தையும், ஆறு அடி சவப்பெட்டியில் மரணித்துப் போகும் அஸ்தமத்தையும் விரைவாக்குகின்றனர். மக்கள் தமக்கு நன்கு தெரிந்த எதிரியை எதிர்கொள்ளத் தெரியாது நிற்கும் நிலையில், அதை வழிகாட்டி அழைத்துச் செல்வதுதான் எம்முன்னுள்ள ஒரேயொரு பணியாகும்.